வெளிநாட்டு வாழ்க்கை நிறைய கலர்கலராய் கனவுகளைத்தரும். அதே சமயம் அதன் எதிர்பார்ப்புகளும் அதிகம். நாம் நாம் இருக்கும் நாட்டுக்கு தகுந்தாற்போல் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டியிருக்கும். பெரியவர்கள் அங்கு இருக்க நிகழ்காலத்துக்கு மட்டும் உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் நிலை அப்படி இல்லை. அவர்கள் தன் எதிர்காலத்துக்கும் தன்னை தயார் படுத்திக்கொள்ள அந்த அரசாங்கம் சொல்லும் துறைகளில் தான் என்ன படித்தால் முன்னேர முடியும் என்பதிலும் கவனம் தேவை. இப்போதைய உலகம் ஜெயிக்கும் குதிரைக்குத்தான் பணம் கட்டும். எப்படி என கேட்கிறீர்களா.... போய் ஆஸ்பத்திரியின் பணம் செலுத்தும் கவுண்டர் பக்கத்தில் ஒரு 5 நிமிடம் நின்று பாருங்கள். பணம் கட்டப்படும் நோயாளிகள் பெரும்பாலும் இனிமேல் அவர்களால் ஏதாவது முடியும் / தேவைப்படும் என இருக்கும். அப்படி இல்லாவிடில் இருக்கவே இருக்கிறது ஸ்டேன்டர்ட் டயலாக் ' குடுப்பினை இல்லை / வயசாயிடுச்சில்ல / இனிமேல் நம்ம கையிலே என்ன இருக்கு / நீங்கள் சொல்லுற டெஸ்ட் எல்லாம் இந்த பேசன்ட்டுக்கு எடுக்க முடியாது ' இந்த மாதிரி டயலாக் எல்லாம் எப்போது ஒரு மனிதனின் தேவை அந்த குடும்பத்துக்கு தேவை இல்லை என்றால்... சும்மா... பப்ல்ஜெட் பிரின்டரில் வரும் பிரின்ட் மாதிரி ரொம்ப சீக்கிரம் குடும்பத்தாரின் வாயிலிருந்து வரும்.
வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய போராட்டம் என்னவெணில் சில நாடுகள் படிக்க மட்டும் அனுமதி தருகிறது. ஆனால் வேலை பார்ப்பதற்கு பிரச்சினை இருக்கலாம் எனும் பட்சத்தில் அங்கு படிக்கும் படிப்பு இந்தியாவிலும் செல்லுபடியாக கூடிய படிப்பை படிப்பது நல்லது. பொதுவாக Regulated Discipline இருக்கிறது. இவைகளில் எனக்குத்தெரிந்து மருத்துவத்துறை, [Medical studies..particularly on Diagnosting , teaching, ] கணக்காய்வு [Accountant / Practicing and teaching] இவைகளுக்கு எல்லா நாடுகளிலும் தனது துறை சார்ந்த அமைப்புகளுக்கு ஒரே regulatory rules இருக்கும். இது பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். எனவே எங்கு படித்தாலும் இவர்களால் எங்கும் வேலை பார்க்க முடியும்.
இது எனக்கு தெரிந்த துறைகள் மட்டும்தான் எந்த நாட்டில் நீங்கள் இருக்கிறீர்க்ளோ எந்த யுனிவர்சிட்டியில் உங்கள் பிள்ளைகள் படிக்க விரும்புகிறதோ அந்த யுனிவர்சிட்டியின் வெப் சைட் பார்த்து அந்த யுனிவர்சிட்டியின் ரெஜிஸ்ட்ராரிடம் நீங்கள் பேச எல்லா உரிமையும் உண்டு.
இதைப்பற்றி பேச எனக்கு நேரமில்லை என்று எந்த பெற்றோர்கள் சொன்னால் பிறகு பிள்ளைகள் Folk Songs / Ethnic Historyல் டிப்லோமா படித்து 'எனக்கு Microsoft / NASA / ISRO ல் வேலை வாங்கிக்கொடு என்று காய்ச்சி எடுப்பார்கள்' படிக்க போகுமுன் மாணவர்கள் இப்போது எந்த படிப்புக்கு சம்பளம் அதிகம் அதை நம்மால் படிக்க முடியுமா என ஒரு ரிசேர்ச் செய்வது நல்லது. அதை படிக்க தன்னால் முடியும் என்றால் அதன் திசை நோக்கி உங்கள் எதிர்கால இலக்கை தேர்ந்தெடுப்பது உங்கள் குடும்பத்துக்கும் உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லதாக அமையும். "மச்சான் அந்த கோர்ஸ் படிக்கிறாப்ல... என் நண்பன் அதான் நல்லதுன்னு சொல்றான், அவனும் அதான் படிக்கப்போறான்னு சொல்ற எந்த கோர்ஸுக்கும் ஜாப் மார்க்கட்டில் எந்த கியாரன்டியும் கிடையாது'.
யாரும் தோல்வியடைய திட்டமிடுவதில்லை. திட்டமிடாமல் தோல்வியடைந்தவர்கள் அதிகம்.
அடுத்து வெளிநாட்டில் வேலை பார்க்க வரும் சகோதரர்கள், [குடும்பம் ஊரில் இருக்கும் சூழ்நிலை] அவர்களின் வாழ்க்கையில் திணிக்கப்பட்டிருக்கும் சவால்களைப் பார்ப்போம்.
நான் என்ன எழுதினாலும் இவர்களின் தியாகம் மதிக்கப்பட்டால் [எதிர்காலத்தில்] "மனிதம்" இன்னும் உயிருடன் இருப்பதாக கருதுவேன். இந்திய விடுதலைக்காக பலர் சிறை சென்றதாக படிக்கிறோம்..கவலைப்படுகிறோம்... தனது குடும்பத்தின் வறுமையை போக்க வெளிநாடு வந்தவர்கள் இன்னும் "சுதந்திரம்' அடையாமல் ஒரு விடியலை நோக்கி நெடுந்தூரம் நடக்க.. இன்னும் எதிர்காலப் பொருளாதார சவால்கள் தொடர்ந்து இவர்களை அடிமையாக்கியே வைத்திருக்கிரது.
நான் இப்படி எழுதக் காரணம் வெளிநாடு சென்ற “எல்லோரும்” தனது வயதான காலத்துக்குள்ள வருமானத்தை இன்னும் தேடிக் கொள்ளவில்லை எனும் சத்தியமான உண்மைதான்.
ஒரு குடும்பத்தலைவன் தனது பிள்ளையை படிக்க வைத்தாலோ அல்லது கல்யாணம் கட்டிக் கொடுத்தாலோ..அல்லது வயதானவர்களுக்கு ஆஸ்பத்திரி செலவு செய்தாலோ மறுபடியும் ஆரம்பத்திலிருந்து உழைக்க வேண்டியிருக்கிரது. ஆனால் இப்போது அந்த இளமை மட்டும் மிஸ்ஸிங். ஒவ்வொரு முறையும் இவர்கள் ஊருக்கு போகும்போது நினைப்பது "இதோடு ஊரில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்' அது ஏனொ ஒவ்வொரு முறையும் முடியாமல் போகும்போது நொருங்குவது பல இதயங்கள்.
முதலில் ஊரில் இருக்கும் நம் பெண்கள் [கணவன் வெளிநாட்டில் இருப்பவர்கள்] தான் செலவு செய்யும்போது கணவனின் கஷ்டம் அறிந்து செலவு செயதாலே ஒரு பாதி வெற்றி. சிலர் அநியாயத்துக்கு கஞ்ஜூஸ் ஆக செலவு செய்கிறார்கள்...சிலர் அநியாயத்துக்கு ஜமீன் ரேஞ்சுக்கு அலப்பரை செய்கிறார்கள்....
ஆனாலும் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஆட்கள் ஊரில் போய் கொஞ்சம் அதிகம் பில்ட் அப் கொடுப்பதால் அதிராம்பட்டினத்தில் அதிகம் அல்லக்கைகள் உருவாக காரணம் ஆகிவிட்டார்கள். நான் எழுதுவதில் தவறு இருக்கலாம் என நினைப்பவர்கள் அல்லது பின்னூட்டம் இட மவுசை நகர்த்துபவர்கள் 'அதிராம்பட்டினத்தில் இருக்கும் வேலை பார்க்க தகுதியானவர்களின் ஸ்டேடிஸ்டிக்கும், அவர்களில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் ஸ்டேடிஸ்டிக்கும் பார்த்துவிட்டு எழுதுவது நல்லது.
I seek the help of Adirai-Nirubar to release any comments freely in this posts [I welcome everybody even if they protest my view]
I seek the help of Adirai-Nirubar to release any comments freely in this posts [I welcome everybody even if they protest my view]
வெளிநாட்டில் வேலை செய்து ஊர் செல்லும் சிலர் அங்கு தன் மனைவி அல்லது நெருங்கிய உறவினர்களின் சொல் கேட்டு பலரிடம் பேசாமலும் சண்டை இல்லாமல் உறவை முறித்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். வெளிநாட்டில் இருக்கும்போது சத்திய நெறி பேசும் இவர்கள் ட்ரோஜன் தாக்கிய கம்ப்யூட்டர் மாதிரி ரொம்ப ஊரில் ஸ்லோவாகி 'அவனிடம் பேசுவதில்லை / அவன் வீட்டுக்கு போவதில்லை / வீட்டுக்கு போவேன் ஆனால் அவன் வீட்டில் பச்சத்தண்ணி குடிக்க மாட்டேன்" என்று மந்திரிச்சி விட்ட மாதிரி பினாத்துவார்கள்... இவர்கள் திரும்பவும் வெளிநாடு வந்ததும் எப்படி அப்டேட் ஆகி மறுபடியும் சத்திய நெறி பேசுகிறார்கள் என்பது இதுவரை எனக்கு விளங்கவில்லை....
சில சமயங்களில் வெளிநாட்டில் தொடர்ந்து இருப்பதால் ஊரில் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தகப்பனின் மேற்பார்வை குறைவது சகஜம்.
வெளிநாட்டில் வேலை செய்யும் தகப்பன் ஊருக்கு வந்ததும் சொல்லக்கூடாத வார்த்தை தன் பிள்ளையிடம் " அப்போவெல்லாம் நான் எப்படி கஸ்டப்ப்படு படிச்சேன் தெரியுமா...நீயும் இருக்கியே தெண்டம்.. அவனைப்பார்.. இவனைப்பார்" என்று ஆரம்பித்தால் உங்கள் வார்த்தைக்கு அவன் கொடுக்கும் மரியாதை ஒரு ஸ்பாம் இ-மெயிலுக்கு கொடுக்கும் மரியாதைதான். உடனே உங்களை டெலிட் செய்து விடுவான்.
அதை விட்டு 'உன்னை வளர்ப்பதில் / படிக்க வைப்பதில் எங்கு தவறு செய்தேன் என்று சொல் என்னை நான் திருத்திக்கொள்கிறேன் ' என்று கேட்டுப்பாருங்கள்... நிச்சயம் அவன் மனதில் உங்கள் மீது மரியாதை வளரும்.
நாம் பட்ட கஸ்டம் பிள்ளைகள் படக்கூடாது என நினைப்பது தவறில்லை. ஆனால் அதை அவனிடம் சொல்லாமல் செல்லமாக வளர்க்கிறேன் என்று நம் அருமை தெரியாமல் வளர்ப்பதும் தவறு....ஆனால் இதில் அப்ரோச்தான் இன்றைய தலைமுறைக்கு புரியும்படி இருக்கவேண்டும்.
தொடரும்,.......
-ZAKIR HUSSAIN
20 Responses So Far:
வெளிநாட்டு சம்பாத்திய வாழ்க்கையின் பட்டவர்த்தம் அப்படியே பகிர்ந்தளித்திருக்கிறீர்கள் !
நிறைய அர்த்தங்கள் நிறைந்த சவால்(கள்) !
சவால் நிறைந்த வாழ்க்கையை....அழகாக லைவ் உதாரணங்களுடன் கட்டுரையை கட்டுகோப்பாக கொண்டு செல்கிறீர்கள்...வாழ்வியல் விசயத்தை வகைப்படுத்தி சொல்வதற்க்கு நிறைய திறமை வேண்டும்..மாஷா அல்லாஹ் அது உங்களிடம் நிறைய இருக்கிறது..தொடருங்கள் ஆவலுடன் காத்திருப்போம்....
//ட்ரோஜன் தாக்கிய கம்ப்யூட்டர் மாதிரி ரொம்ப ஊரில் ஸ்லோவாகி 'அவனிடம் பேசுவதில்லை / அவன் வீட்டுக்கு போவதில்லை / வீட்டுக்கு போவேன் ஆனால் அவன் வீட்டில் பச்சத்தண்ணி குடிக்க மாட்டேன்"// very nice...
நாடு கடந்த வாழ்க்கையில் தொடரும் சவால்களை மிகத்தெளிவாக்கி இருக்கிறீர்கள்.
படித்துப் பிடித்த பொன்மொழி
// பிள்ளையிடம்,உன்னை வளர்ப்பதில் / படிக்க வைப்பதில் எங்கு தவறு செய்தேன் என்று சொல், என்னை நான் திருத்திக்கொள்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள்... நிச்சயம் அவன் மனதில் உங்கள் மீது மரியாதை வளரும்.//
எல்லாக் கோணங்களிலிருந்தும் அனுகுவதால் எடுத்துக்கொண்ட பருள் இலகுவாக விளங்குகிறது. தலைமுறை இடைவெளியால் ஏற்படும் தவறான புரிதல்களைத் தவிர்க்க உட்கார்ந்து பேசிவிடுவதே நல்லது என்பது எளிமையான தீர்வுதான்.
உட்கார்ந்து பேசலாம்னு கூப்பிட்டா வரமாட்டேய்ங் கிறாய்ங் களாம் லடா?
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் அலைபாயுமே மனோயிச்சை
சக்கரைக்கு எறும்பு எதிரிபோல
சந்தோசத்துக்கு எதிரி கவலை
சுதந்திர தாய்நாட்டில் சுகமுண்டு; செலவமில்லை
இயந்திர வாழ்வுதான் இங்கே
எல்லாம் உண்டு; நிம்மதி எங்கே?
எல்லார்க்கும் எல்லாமே
கிடைத்து விட்டால்......
இறைவனே இல்லை என்றே
சொல்லிவிடுவான் மனிதன்
சொற்ப வாழ்வே இப்படித்தான்
இல்லாரும் உள்ளாரும்
இணைந்து தானே
நில்லா உலகை
நிர்மாணிக்க வேண்டிய
நியதி...
நேற்று என்பது நினைவு;
நாளை என்பது கனவு;
இன்று மட்டுமே உண்மை
இதனையடைந்தால் நன்மை
பாலையான வாழ்க்கையைப்
பசுஞ்சோலையாய் ஆக்கவே
பாலைவன நாட்டுக்கே
பறந்து வந்த பறவைகள் நாங்கள்...
இச்சையை மறந்தோம்;
இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;
பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;
பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...
இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;
இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;
"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"
பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;
"இல்லானை இல்லாலும் வேண்டாள்;
ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்
சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்
ஔவ்வையார் அன்றே......
மூதாட்டியின் மூதுரைக்கும்
முழுமையான விரிவுரை நாங்களே...
பாதாளம் வரை பாயும் பணமே
பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே
உண்மை இப்படியா கசக்கும் !?
அஸ்ஸலாமு அழைக்கும் மிகவும் அற்புதமா தொடர் ஜாகிர் காகா ,
// சில சமயங்களில் வெளிநாட்டில் தொடர்ந்து இருப்பதால் ஊரில் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் தகப்பனின் மேற்பார்வை குறைவது சகஜம்.//
ஊருக்கு விடுமுறையில் வந்து எத்தனை பேர் தன் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டோம் என்று மனச தொட்டு சொல்லுங்க பார்போம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் மந்தி, பிரியாணி, சாப்பிடவும் தான் நேரத்தை வீணாக்குகிறார்கள், தன் பிள்ளை எப்படி படிக்கிறான் என்று மனைவிடம் வெளிநாட்டில் இருக்கும் போது கேட்கும் நண்பர்கள் ஊருக்கு வந்தவுடன் தன் பிள்ளைகளிடம் கேட்பதோ மனம் விட்டு பேசுவது ஏன்ஒன்றாக இருந்து சாப்பிடுவது கூட கிடையாது.
//[கணவன் வெளிநாட்டில் இருப்பவர்கள்] தான் செலவு செய்யும்போது கணவனின் கஷ்டம் அறிந்து செலவு செயதாலே ஒரு பாதி வெற்றி. //
நிதர்சனமான உண்மை இதில் தவறு நமது (ஆண்கள் ) பக்கமும் உள்ளது நாம என்ன வேலை செய்றோம் எப்படி கஷ்டப்படுகிறோம் எவ்வளவு சம்பளம்/வருமானம் என்று சொல்வது கிடையாது அதுமட்டுமில்லை ஊருக்கு லீவுல போனா புருனை சுல்தான் ரேஞ்சுக்கு செலவு செய்ரோம்ல.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜாஹிர் காக்கா,
மனசாட்சியை பேச வைத்துள்ளீர்கள். நல்ல சிந்தனை ஆக்கம்.
//யாரும் தோல்வியடைய திட்டமிடுவதில்லை. திட்டமிடாமல் தோல்வியடைந்தவர்கள் அதிகம்.//
இதை மைக் போட்டு தேர்தல் பிரச்சாரம் செய்வது போல் செய்ய வேண்டும்.
//னது குடும்பத்தின் வறுமையை போக்க வெளிநாடு வந்தவர்கள் இன்னும் "சுதந்திரம்' அடையாமல் ஒரு விடியலை நோக்கி நெடுந்தூரம் நடக்க.. இன்னும் எதிர்காலப் பொருளாதார சவால்கள் தொடர்ந்து இவர்களை அடிமையாக்கியே வைத்திருக்கிரது.//
நிதர்சனமான உண்மை..
இருந்தாலும் எதிர்கால வாழ்வாதாரத்தையும் தாண்டி தகுதிக்கு மேல் ஆசைப்பட்டும் பொருளாதார ரீதியாக உயரவும் வரக்கூடியவங்க இருக்காங்க. ஒரு காலத்தில் எல்லாம் சேர்த்து திரும்பும்போது அந்த பொருளாதாரத்தை அனுபவிக்க கொடுத்துவைத்தவர்கள் எத்துன பேர்?
//ஊருக்கு வந்தவுடன் தன் பிள்ளைகளிடம் கேட்பதோ மனம் விட்டு பேசுவது ஏன்ஒன்றாக இருந்து சாப்பிடுவது கூட கிடையாது.
நாம என்ன வேலை செய்றோம் எப்படி கஷ்டப்படுகிறோம் எவ்வளவு சம்பளம்/வருமானம் என்று சொல்வது கிடையாது //
மிக முக்கியமா இந்த விடயங்களில் நாம கவனம் செலுத்தவேனும்...
//இருந்தாலும் எதிர்கால வாழ்வாதாரத்தையும் தாண்டி தகுதிக்கு மேல் ஆசைப்பட்டும் பொருளாதார ரீதியாக உயரவும் வரக்கூடியவங்க இருக்காங்க. ஒரு காலத்தில் எல்லாம் சேர்த்து திரும்பும்போது அந்த பொருளாதாரத்தை அனுபவிக்க கொடுத்துவைத்தவர்கள் எத்துன பேர்? //
To Brother Abdul Malick.......
நீங்கள் எழுதியிருக்கும் விசயம் சாதாரணமாக என்னால் படித்துப்போக மனமில்லை. இதை எழுத வாழ்க்கையில் அனுபவப்பட்டிருக்கவேண்டும். எதையும் நிதானித்து செயல்படும் பழக்கம் இருக்க வேண்டும். சின்ன வயதில் பெரிய பொறுப்பு உங்களுக்கு சுமக்க கூடிய சூழ்நிலையில் இருந்திருக்கவேண்டும். உங்களை நான் பார்த்திருப்பேனா என தெரியாது..ஆனால் என் அனுமானம் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.
//பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்//
அருமை கவியன்பன். உண்மை வலிக்கிறது.
//ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்//
ஓளவையென்ன, பெரும் அவையோரே சொன்னாலும் இதில் எனக்கு உடன்பாடில்லை. ஓளவை அம்மாவாக இருந்திருக்கிறாரா இதைச் சொல்ல?
அம்மா என்பது அப்பழுக்கற்ற, எதையுமே எதிர்பார்க்காத ஒரு உறவு. ஓளவை சொன்னாலும் துட்டு இல்லேனா தாயே வேண்டாள் என்பதை ஏற்பதாயில்லை.
//அவன் வீட்டுக்கு போவதில்லை / வீட்டுக்கு போவேன் ஆனால் அவன் வீட்டில் பச்சத்தண்ணி குடிக்க மாட்டேன்" என்று மந்திரிச்சி விட்ட மாதிரி பினாத்துவார்கள்... இவர்கள் திரும்பவும் வெளிநாடு வந்ததும் எப்படி அப்டேட் ஆகி மறுபடியும் சத்திய நெறி பேசுகிறார்கள் என்பது இதுவரை எனக்கு விளங்கவில்லை//
இவர்களை பற்றி விளங்கிக்கொள்ள முயற்சித்தால் நாம் விளங்கியதும் விளங்காமல் போய்விடும்.
கடைசியாக வந்ததால் என்னையும் ரியாஸ் காகா லிஸ்ட்டில் சேர்த்துவிட வேண்டாம் ( கொஞ்சம் வேலை பளு)
ஹமீது,
எழுத்து நடை நல்லா இருந்தா மட்டும் போதாது. சீக்கிரம் எழுந்து நடக்கவும் வேண்டும் பின்னூட்டங்களை நோக்கி
ஹமீது,
//எழுத்து நடை நல்லா இருந்தா மட்டும் போதாது. சீக்கிரம் எழுந்து நடக்கவும் வேண்டும் பின்னூட்டங்களை நோக்கி //
ஓ அங்கே கேட்டது இங்கே எதுரோளிக்குதா ?
நன்றி ...இதை வாசித்த / கருத்திட்ட சகோதரர்கள் அப்துல் மாலிக் , அபுஇப்ராஹிம் [ எப்படி படங்களை பெரிய அப்பளம் மாதிரி பெருசாக்கிறீங்க??] தாஜுதீன் , அபு இஸ்மாயில் ,[ நீங்கள் சொன்ன விசயங்களும் இதில் சேர்திருக்களாம் ] ஜஹபர் சாதிக் [ அது ரிவர்ஸ் ஸைகாலஜி ] அனைவருக்கும்.
சாகுல் உங்களுக்கு அங்கு வேலைப்பளு..எனக்கு இங்கே தலைப்பளு [ சல்லமெ...எல்லா கிளினிக்கும் நல்லா கல்லா கட்ராய்ங்க..தாய்லாந்து /மலேசியாவில் வெள்ளம் அல்லது கடும் மழை...சாயந்திரம் 4 மணிக்கு அலாரம் வச்ச மாதிரி வெளுத்துக்கட்டுகிறது]
சபீர் & சகோதரர் கலாம்....எப்படி இருவரும் மடைதிறந்தாற்போல் தமிழில் எழுதுகிறீர்கள். கவிதை எழுதத்தெரிந்தவர்களுக்கு மட்டும் உள்ள தகுதி என நினைக்கிறேன்.
ஜஸாக்கல்லாஹ் கைரன், சகோதரர் ஜாஹிர் ஹுஸைன்.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
உங்கள் யாவரின் ஊக்கம்
எங்கள் இருவரின் ஆக்கம்
தங்க விளக்கானாலும்
தூண்டுகோல் வேண்டும் அல்லவா?
Post a Comment