இந்த விசயம் எழுத நிறைய ஆட்களிடம் பேச வேண்டியிருந்தது. எழுதியிருக்கும் விதம்
என்னுடையதாக இருக்கலாம் இது தொடர்ந்து வெளிநாட்டில் காலம் தள்ளும் நமது
மக்களைப்பற்றிய உண்மைகள்.
முதலில் வெளிநாட்டுக்கு செல்ல பல காரணங்கள் இருந்தாலும் முதலாவதான காரணம்
வறுமை. எப்போதும் உண்ண உணவு கிடைக்குமா என மிரட்டலான நிஜம். ஆனால்
முஸ்லீம்களைப் பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லையே என மற்றவர்கள் நினக்கலாம்
"யார் தனது வறுமையை , அல்லது தனது
பொருளாதார சவால்களை இதுவரை மேடை போட்டு சொல்லியிருக்கிறார்கள்?".
வெளிநாட்டில் அதிகம்
வசிப்பது அதிராம்பட்டினம் , முத்துப்பேட்டை , மதுக்கூர், மற்றும் கீழ தஞ்சை
மாவட்டத்து ஆட்கள். ராமநாத புரம்
மாவட்டம் ஆட்களும் அதிகம். இவர்கள் எல்லாம் தான் விளையாண்ட தெருவை , நண்பர்களை , ரத்த உறவுகளை விட்டு வெளிநாட்டுக்கு வரக் காரணமே
தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்ந்த பகுதியில் தொடர்ந்து விவசாயம் பொய்த்ததும். எந்த
விதமான தொழிற்சாலைகளும் கட்டப்படாததும் தான்.
1930- 1940 களில் பர்மா , சிலோனும்..50
களின் தொடக்கத்தில் மலேசியா [பினாங்கு] , சிங்கப்பூரும் முழுக்க முழுக்க ரிமான்ட்
கைதிகள் மாதிரியான வேளைகளுக்கு உத்திரவாதம் அளித்ததால் தன்னை நம்பிய தாய் தந்தை , கூடப்பிறந்தவர்கள் , மனைவி மக்கள் இப்படி உள்ள உறவுகளுக்கு வேலா
வேலைக்கு சாப்பிடத்தர முடியும் என
நம்பிக்கையில் வந்தவர்கள்தான் இவர்கள். பிறகு தனது சிக்கனத்திலும் , கடன் வாங்கும் திறமையிலும் சிலர் மட்டும் வீடு கட்டும் அளவுக்கு வசதியானவர்கள்
[!] ஆனார்கள். ஒரு மனிதன் தான் வாழும் வீட்டை கட்டிக்கொள்ள தனது 35 வயது அல்லது 40
வயதை எட்டிப்பிடிக்க வேண்டியிருக்கிறது என யாரும் சிந்திப்பதில்லை. இதற்கிடையில்
அவனது
Privacy என்ன ஆனது என்பது பற்றி
யாருக்கும் கவலை இல்லை.. தனது மனைவியுடன் பேசுவதற்கே அவனுக்கு தனி இடம்
தேவைப்படுகிறது. இப்படி மொத்த சமுதாயத்தின் ரெகுலர் வாழ்க்கையை
முடக்கிப்போட்டவர்கள்... தொடர்ந்து இப்போது நோன்புக்கஞ்சி நிகழ்ச்சியில் தொப்பி
போட்டு கவுக்கும் அரசியல் வாதிகளும் , அரசியல் சாசனம்
எழுதுகிறேன் என்று முஸ்லீம்களை தொடர்ந்து புறக்கனிக்கும் அன்றைய அரசியல் வாதிகளும்
தான். சுதந்திரம் அடைந்து 64 வருடம் ஆகியும் முஸ்லீம்களின் பெயரை சரியாக
உச்சரிக்கத் தெரியாத அரசு அலுவலர்கள் இருக்கும்போதே தெரியவில்லை நாம் எப்படி
ஒதுக்கப்பட்டு விட்டோம் என்று??
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். குடும்பத்துடன் இருப்பவர்கள்,
அல்லது தனியாக இருப்பவர்கள். யாராக இருந்தாலும் தன குடும்பம் நல்லபடியாக
இருக்கவேண்டும், பிள்ளைகள் படித்து நல்ல நிலை அடைய வேண்டும் என்பதுதான்.
குடும்பமாக போய் வெளிநாட்டில் இருப்பவர்கள் [முக்கியமாக அமெரிக்கா, யு கே,
பிரான்ஸ்] இந்த நாடுகளின் மிகப்பெரிய பிரச்சினை அங்கு இஸ்லாமிய மார்க்கத்தை தனது பிள்ளைகளுக்கு
போதிப்பதில் ஏற்படும் சிரமம்தான். சின்ன பிள்ளைகள் நம் ஊராக இருந்தால் மதரசாவில்,
பள்ளியில் ஓதக் கற்றுக்கொண்டுவிடும். ஆனால் நவீன நாடுகளில் இதுபோல் பிரச்சினைகள்
ஒழிய பல நாள் ஆகும் என்று நினைக்கிறேன். அப்படியே ஓதுவதற்கு இடம் & ஹஜ்ரத்
கிடைத்தாலும் வேலையைப் பார்ப்பதா அல்லது பிள்ளைகளை அழைத்துப்போவது, அழைத்து வருவது
போன்ற ஸ்கூல் பஸ் டிரைவர் வேலை பார்ப்பதா என்பதிலேயே பாதி வாழ்நாள் முடிந்து
விடுகிறது. இதற்கு காரணம் டிரைவிங் தெரியாத பெண்கள் நம்
சமுதாயத்தில் அதிகம். அவர்கள் டிரைவிங் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டாலும் நம் சூழ்நிலைகள்
எப்போதும் ஒத்துழைக்காது. [ சமீபத்தில் சவூதி அரேபியாவில் கார் ஒட்டிய பெண்ணுக்கு
10 கசையடி கொடுத்து நாம் ஒரு நாகரீக [ ! ] சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று அந்நாடு
உலகுக்கு சொல்லியிருக்கிறது.
சரி இப்போது பிள்ளை வளர்ப்புக்கு வருவோம், வெளிநாடுகளில்
வாழும் நம் ஊர் பிள்ளைகள் அறிவில் ஒரளவு சிறந்து விளங்கினாலும் அவர்களுடைய
மிகப்பெரிய சவால் இஸ்லாத்தை [ஒரு பள்ளிவாசல், சமூகம் , மத்ரஸா] என்ற கூட்டான முறையில் கடை பிடிப்பதில் ஏற்படும் சிரமம்...இது ஒரு நீண்ட
நோய் மாதிரி...அடுத்தது..அவர்களின் வாழ்க்கை முறை சமுதாயத்தில் கொஞ்சம் தூரமாக
வாழ்வதால் [கம்ப்யூட்டர்... மற்றும் கேஜட் வாழ்க்கையை மட்டும் வாழ்க்கை என நம்பி
வாழ்வதால்... கயவனை அறியும் கண்களை இழந்து விடுகிறார்கள்...
தொடரும்.......
ZAKIR HUSSAIN
Photography: Afzal Hussein Bin Zakir Hussain
21 Responses So Far:
அசத்தல் காக்கா : மிகச் சரியான சாட்டையை கையில் எடுத்திருக்கிறீர்கள் நீங்கள் சுழற்றும் விதமும் அது தாக்குமிடங்களும் நிச்சயம் படிப்பினைகள் பெறும் !
தொடருங்கள் இன்ஷா அல்லாஹ்..
அஃப்ஷல் ஹுசைன்... ஃபோட்டோகிராபியும் உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்... அருமை ! அதனை காட்சியாக படம் பிடிக்க ஒரு கவித்துமான ரசனையும் வேனும் ! நீங்கள் எடுத்த வியூகம் ரொம்பவே எனக்குப் பிடித்திருக்கிறது... மாஷா அல்லாஹ் !
தொடருங்கள் உங்களின் பக்கபலாமான சப்போர்ட்டையும் அபூஅஃப்ஷல் காக்கா அவர்களுக்கு !
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்றைய சவால்!
முக்கியமான அவசியமான அலசல்!
இன்ஷாஅல்லாஹ் தொடருங்கள்!
// முஸ்லீம்களின் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாத அரசு அலுவலர்கள் இருக்கும்போதே தெரிகிறது நாம் எப்படி ஒதுக்கப்பட்டு விட்டோம் என்று??//
ஒதுக்கமட்டுமில்லை,திட்டமிட்டுசெய்கிறார்கள்.வாக்காளர்பட்டியலிலும் குடும்ப அட்டையிலும் தெரியும் நம் பெயர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகிறதென்று!
தந்தையும் மகனும் இணைந்தாக்கிய படிப்பினைப்பாடமும், 'பளிச்'சென்ற படமும் மிக அருமை.
ஆராய்ச்சியின் விளக்கம் சிறிதளவாக இருந்தாலும்...”நச்” என்று புரியும்படி தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள் காக்கா
//சவூதி அரேபியாவில் கார் ஒட்டிய பெண்ணுக்கு 10 கசையடி கொடுத்து நாம் ஒரு நாகரீக [ ! ] சமுதாயத்தை சார்ந்தவர்கள் // ஒரு கீழ்கோர்ட்டில் கொடுக்கப்பட்ட இந்தண்டனையை அந்த நாட்டு மன்னர் ரத்து செய்துவிட்டார் தண்டனை நிறைவேற்றபடவில்லை...
வெளிநாடே நம் வாழ்க்கை என்று மட்டுறுத்தப்பட்ட நிலையில் முக்கியமான விடயம் பற்றி அலசுவதற்கு கையிலெடுத்திருப்பதுவ் வரவேற்கத்தக்கது.. தொடருங்க இன்ஷா அல்லாஹ்
To Brother Yasir
///ஆராய்ச்சியின் விளக்கம் சிறிதளவாக இருந்தாலும்..//
இன்னும் நிறைய எழுதுவேன் என்று ' தொடரும் ' போட்டு உங்களை மிரட்டியிருப்பது தெரியவில்லை?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
அன்புச் சகோதரரே, நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் நிச்சயம் மாற்றம் நிகழட்டும் உணர்வுகளால் உணர்ந்து செயல்படட்டும்.
ஜாகிர்,
பரிதாபத்திற்குரிய வாழ்க்கைமுறையைப் பற்றி அனுதாபங்களுடன் துவங்கியிருக்கும் நீ எப்படித் தொடரப்போகிறாய் என்று ஆர்வமாக உள்ளது.
யாசிர் சொல்வதில் அர்த்தமுள்ளது. உன் எழுத்து வாசிப்பில் வசீகரிக்கப்பட்ட நாங்கள் சட்டென முடியும் கட்டுரைகளில் ஏமாந்துதான் போகிறோம்.
நீ தொடரும் என்றாலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய எழுது.
உதவிக்குத்தான் அஃப்சலின் மூன்றாவது கண் இருக்கிறதே.
Afsal,
As I wonder if you are good in tamil, let me say a few words about your snaps.
1st one:
Rows...
from top angle
shows...
you are top in angles!
is this what
you
want us to feel...
that
"ignore the sights
watchin' on you,
from
top or bottom
side or back
row and bow
toward you God?"
2nd one:
You
dont have to
walk out
to see
whats out there...
take a deep breath
and
just
click
you can feel
whats out there!
(both photos are poetic)
உங்கப்பன் நல்ல கேமராவை வச்சிக்கிட்டு எங்களுக்கு பம்மாத்து வேலை காட்டிக்கிட்டு இருந்தான். இதான் ஃபோட்டொகிராஃபினு கத்துக்கொடு.
//toward you God//
sorry, it should be your God.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஜாஹிர் காக்கா,
கவலையான ஒரு விடையத்தை எடுத்து அலச ஆரம்பித்துள்ளீர்கள், நிறைய எழுதுங்கள், வித்யாசமான கோணத்தில் எழுதி அனைத்து மக்களுக்கு ரசனையுடன் புரிய வைக்கும் திறன் தங்களுக்கு மட்டுமே.
அன்மையில் துபாயில் உள்ள International Academic Cityயில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களின் மாணவ மாணவிகளின் விளையாட்டுப்போட்டி, பரிசளிப்பு விழா மற்றும் இரவு உணவு இவைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு எங்கள் கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்லாம் 18 முதல் 22 வயதுடையவர்கள். அல்லாஹு அக்பர்..அந்த மாணவ மாணவிகள் செய்த அட்டூழியம், மேற்கத்திய நாடுகள் தோற்றுவிடும் என்று எண்ணத்தோன்றுகிறது. இஸ்லாமிய நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமீரகத்தில் இப்படி என்றால் மற்ற நாடுகள் எம்மாத்திரம்?
அடிப்படை மார்க்க அறிவை நம் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே ஊட்ட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
தொடருங்கள் ஜாஹிர் காக்கா.. மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்..
//You
dont have to
walk out
to see
whats out there...
take a deep breath
and
just
click
you can feel
whats out there!//
கவிக் காக்கா இதுக்கு என்னா தலைப்பு கொடுக்கனும் !?
inside out
அஸ்ஸலாமு அலைக்கும். அடிப்படையில் இஸ்லாம் கல்வி இல்லாமல் அமைவதற்கு நான் நம்மை சமாதானப்படுத்துவதன் காரணத்தால் இந்த சருக்கல்கள்.சிராய்ப்பு அந்த சிறுமி,சிறுவர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும்தான் அந்த வலி ,வடு,வேதனை, மானம் போதல். கேட்டாள் நான் என்ன ஒன்னும் அறியாத பப்பாவா(மரக்கட்டையா???)எனும் எதிர் பேச்சு எதிர்காலத்தில் பேச, அதை நாம கேட்க காரணம் நாமே.
ஒரு பிள்ளையின் முதல் உலகம், முதல் கல்வி கூடம் நம் வீடே. நம் வீடு சரியில்லாத போது போகும் பாதையும்,தவறான பாதையாக நாமே காரணம். அருமையான தொடர் ஆரம்பம் ,இனி போக போக நமக்கு நல்ல பயனுள்ள செய்திகள் கிடைக்கும் என உங்களைப்போல் நானும் ஆவலாய் காத்திருக்கிறேன்.
சகோதரர்கள் யாசிர், தாஜுதீன், அபு இப்ராஹிம் , கிரவுன் , அலாவுதீன், அப்துல்மாலிக் , ஜஹபர் சாதிக் , அனைவருக்கும் என் நன்றி. தொடர்ந்து எழுத நீங்கள் எல்லோரும் காரணம் [ துவான் ஹாஜி சாகுல்[ from Dammam[KSA] கம்ப்யூட்டரிலும் , டெலிபோனிலும் உற்சாகப்படுத்தும் உன்னத மனுஷன்]
இந்த விசயம் தேவைப்படும் என்பதால் என்னை உற்சாகப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். உடன் பகுதி-2 எழுத இது ஒரு மிகப்பெரிய உந்துதல்.
என் மகன் தனது week end holiday யில் வீட்டுக்கு வந்திருந்தான். நீங்கள் எழுதிய உற்சாக வார்த்தைகளை அவனிடம் படித்து காண்பித்ததில் அவன் கண்களில் சில Flash மின்னியது.
சபீர் உன் கவிதையில் அவன் ரொம்பவும் சந்தோசப்பட்டான்.
, சகோதரி Ameena A. உங்கள் பாராட்டுதலுக்கு . நன்றி . ஒரு குடும்பம் உருப்பட பெண்களின் பங்கு அதிகம் என வாதிடுபவன் நான்.
சூப்பர் காக்கா.. தொடருங்கள்..
இன்னும் நிறைய எழுதுவேன் என்று ' தொடரும் ' போட்டு உங்களை மிரட்டியிருப்பது தெரியவில்லை?//
ஹே ஹே... நாங்களும் தொடர்ந்து படிப்போம்'னு மிரட்டுவோம்'ல.. :)
--' தொடரும் '
உங்களின் கட்டுரையை படித்துகொண்டே வரும்போது தொடருமோ என மணதில் பட்டது உண்மையில் தொடரும் போட்டு உள்ளீர்கள் டெலிப்பதி என்பது இதுதானோ!
உற்சாககத்தை உங்களிடம் கற்று உங்களுக்கே திருப்பி அனுப்பினேன்
வரவேண்டும் கோலாலம்புருக்கு போட்டோ கலையை வளர்த்துக்கொள்ள உங்கள் மகனிடம்
வெளிநாடுகளிலிருந்து வரும் நம் சகோதரர்கள் ”இன்ஷா அல்லாஹ் அடுத்தமுறையோடு ஊரில் செட்டிலாகிலாமென்று இருக்கிறேன்” என்று சொல்லும் வார்த்தையிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம் பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று, ஆனால் ஒவ்வொருமுறை வரும்போதும் இங்குள்ள விலைவாசி, பிள்ளைகள் படிப்பு, இன்னபிற பொறுப்பினைக்காரணம் காட்டி திரும்பச் செல்ல வேண்டியுள்ளநிலைக்கு ஆளாகிறார்கள்.
நேற்று செய்திவாசிக்கும் போது படித்த ஒரு செய்தி, “அமெரிக்கர்களெல்லாம் நம்நாட்டில் (இந்தியாவில்) வேலைதேடி வருகிறார்களென்று, இது சென்ற ஆண்டைவிட 20% அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிபரம்.
ஆனால் நம்வீட்டு பிள்ளைகள் இன்னும் அரபுதேசக் கனவுடனேயே கல்விகற்க செல்வதும் /சொல்வதும் வேதனையான உண்மை.
மனது சார் காரணம்...........................................
இன்னும் நீளமாக உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன்
/// மனது சார் காரணம்...................
இன்னும் நீளமாக உங்கள் மின்னஞ்சலுக்கு எழுதுகிறேன் ///
எழுதுங்கள் காத்திருக்கிறோம் !
Post a Comment