Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பழகு மொழி - 03 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , ,

தொடர் - 3 

(1):1:2 மெய்யெழுத்துகள்


'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:

(1):1:2:1 வல்லினம்

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 
மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 
இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு.

எனவே, ''வுக்கு மேல் புள்ளியிட்டு, ர் என்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.

வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்" என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

கடந்த வார வினாவுக்கான விடை:

'நீரை' எனும் சொல், 'நீர்' எனும் சொல்லோடு '' எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, "நீரை சேமிப்போம்" என்று பிழையாக எழுதாமல் நீரை
ச்சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:


"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

13 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பழகு மொழி இலகு வழியாக உள்ளது!

//மாநகராட்சி அறிவிப்பு//

"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது"

ஜாகிர் ஹீசைன் said...

//"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"//

எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது"

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தமிழ் இலக்கணம் என்றாலே.. கிளாஸ் பெஞ்ச்ல உட்காராம வெளியில நிக்கிறவங்க ,அப்புறமா நல்லா கவனிக்கிறவங்க (ஸ்டூடண்ட்ஸ்) கிட்டே வந்து அட அட கொஞ்சம் திருத்தி தாங்கப்பான்னு வரட்டும் அப்போ வச்சுக்கிறேன்... !

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பழகு மொழி! பயன் தரும் மொழி!

************************************

"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது"

************************************

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

பயனுள்ள த(மிழ்)கவல்....இவ்வுலகில் (தொடரு)(சுற்று)(பரப்பு)ங்கள் பிழையில்லா தமிழை!

"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

எதிரே உள்ள ஹோட்டலின் கழிவு நீரை சுத்தம் செய்து இந்த பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"//

"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவிற்குப் பயன்படுத்தப் படுகிறது"

அலாவுதீன்.S. said...

இதோடு மூன்று பதில்கள் எழுதிவிட்டேன். ஒரு விடைக்காவது பாஸ் மார்க் கிடைக்குமா? எனக்கு!

2) எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீரை சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது.


3) எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீரை சுத்தம் செய்து இந்தப்பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது.

Kuthub bin Jaleel said...

இந்தப் பூங்கா என்றிருக்க வேண்டும்.

தம்பி நெய்னாவின் மிரட்டலினால் நானும் (இந்த) கிளாஸ் பெஞ்ச்சில் (மட்டும்) ஆஜர்.

sabeer.abushahruk said...

இன்னும் வாத்தியார் வரலேல்ல, நல்லதாப் போச்சு.

எனக்காக யாரும் அட்டென்டென்ஸ் கொடுக்காதது வருந்தத் தக்கது.

இன்றையக் கேள்விக்குப் பதில் :

இந்தவுக்கும் பூங்காவுக்கும் இடைய பகர ஒற்று தோன்றி வலி மிகுதல்?

(ஆறுதல் மார்க்காவது கிடைக்குமா?)

போன ட்டெஸ்ட்ல பாஸான அர.அல எங்கே?

sabeer.abushahruk said...

//தமிழ் இலக்கணம் என்றாலே.. கிளாஸ் பெஞ்ச்ல உட்காராம வெளியில நிக்கிறவங்க ,அப்புறமா நல்லா கவனிக்கிறவங்க (ஸ்டூடண்ட்ஸ்) கிட்டே வந்து அட அட கொஞ்சம் திருத்தி தாங்கப்பான்னு வரட்டும் அப்போ வச்சுக்கிறேன்... ! //

இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கு மருவாதியா பதிலைச் சொல்லி்ட்டுப் போங்க.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்த அஜால் குஜால் வேலையெல்லாம் வேண்டாம். ஒழுங்கு மருவாதியா பதிலைச் சொல்லி்ட்டுப் போங்க.//

ஆறுதல் மார்க்காவது உங்களுக்கு கிடைக்கட்டுமே என்றுதான் காக்கா...

இந்த கேள்வியை அதி அழகு காக்கா வந்துதான் திருத்த வேண்டும்... ஏன்னா பேப்பர் திருத்துகிற இடத்தில பெஞ்சை துடைக்கப் போனேன் அங்கே பதில் எழுதிய பேப்பர் மட்டும் இல்லை ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது"//

அல்லது இப்படி சுத்த தமிழாய் இருக்குமோ!

"எதிரிலுள்ள உணவு விடுதியின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது"

இப்னு அப்துல் ரஜாக் said...

போன ட்டெஸ்ட்ல பாஸான அர.அல எங்கே?
வந்தாச்சு இஞ்சினியர் சார்,இந்த தடவையும் ஜமீல் காக்காகிட்ட சொல்லி பாஸ் மார்க் போடசொல்லுங்க ,பாஸ்


எதிரேயுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப்பட்டு இந்தப் பூங்காவில் பயன்படுத்தப்படுகிறது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு