அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.
'உங்களில் ஒருவர் மீது ஒவ்வொரு உடல் மூட்டுக்களுக்காக காலையில் தர்மம் செய்வது அவசியமாகும். (சுப்ஹானல்லாஹ் என்ற) ஒவ்வொரு தஸ்பீஹூம் தர்மமாகும். (அல்ஹம்துலில்லாஹ் என்ற) ஒவ்வொரு தஹ்மீதும் தர்மமாகும். (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) ஒவ்வொரு தஹ்லீலும் தர்மமாகும். (அல்லாஹூஅக்பர் என்ற) ஒவ்வொரு தக்பீரும் தர்மமாகும். நல்லதை ஏவுவதும் தர்மமே. தீமையிலிருந்து தடுப்பதும் தர்மமே ஆகும். ளுஹா(பகல்) நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது, இதற்கு பகரமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 118)
'நல்லவற்றில் எதையும் நீங்கள் மதிப்புக் குறைவாக கருதி விட வேண்டாம். உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் நீ சந்திப்பதாயினும் சரியே'' என்று நபி(ஸல்)கூறினார்கள். '' (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 121)
'மனிதர்களின் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் அதற்கு தர்மம் செய்தல் வேண்டும். இரண்டு பேர்களுக்கிடையே நீதமாக நடப்பது தர்மம் ஆகும். ஒருவருக்கு ஒரு வாகனத்தை வாங்கித் தந்து, அதில் அவரை ஏற்றி அனுப்புவதும் தர்மம் ஆகும். அல்லது அவருக்கு அவரது பொருட்களை ஏற்றி விடுவதும் தர்மம் ஆகும். நல்ல வார்த்தை (பேசுதலும்) தர்மம் ஆகும். தொழுகைக்காக அவன் நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மம் ஆகும். பாதையில் இடையூறாக இருப்பதை அகற்றுவதும் தர்மம் ஆகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 122 )
'முஸ்லிம் பெண்களே! ஆட்டுக்கால் குழம்பாயினும் தன் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்குக் கொடுப்பதை மற்றொரு பெண் இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)அவர்கள் (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 123 )
‘'இறை நம்பிக்கை, எழுபது அல்லது அறுபது கிளைகளாகும். அதில் மிகச் சிறந்தது, 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதாகும். அவற்றில் மிகச் சாதாரணமானது பாதையில் இடையூறு தருபவற்றை நீக்குவதாகும். வெட்கப்படுதல், இறை நம்பிக்கையின் கிளையாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:125 )
‘'பாதையின் நடுவில் முஸ்லிம்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய ஒருவர் சொர்க்கத்தில் உலாவுவதை நான் பார்த்தேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது:-
''பாதையின் நடுவில் கிடந்த ஒரு மரத்தின் அருகே ஒருவர் நடந்து சென்றார். முஸ்லிம்களுக்கு இடையூறு தராதவாறு இதை அகற்றுவேன் என்று கூறி அதைச் செய்தார். எனவே (இறந்த பின்) சொர்க்கத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டார். (அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 127 )
நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:215)
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.(அல்குர்ஆன்: 99:7)
யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது. (அல்குர்ஆன் : 45:15)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
-S.அலாவுதீன்
10 Responses So Far:
ஜும் ஆ தொழுதுவிட்டு வந்தவுடன் அ.நி..யின் அருமருந்து!
நன்றி அலாவுதீன்.
(புலி பதுங்குதே..."சகோதரியே" வைத் தயார் செய்கிறதோ?)
//(புலி பதுங்குதே..."சகோதரியே" வைத் தயார் செய்கிறதோ?)//
ஆமா! ஆமா! அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது, கவிக் காக்கா...
விரைவில் இன்ஷா அல்லாஹ் ! காத்திருப்போம் !
இது !
அமைதியின் ஆளுமையினூடே அருமருந்து !
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காக்கா !
அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லா தூதருக்கும் அருளப்பட்ட அருப்புதங்களை உள்ளடக்கி கியாமத்து நாள் வரையிலும் பாதுகாக்கப்படும்.மிக உயர்வான அருப்புதம் திரு குர்ஆன் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது .
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள நண்பர் ஜனாப். அலாவுதீன்,
தம்பி சபீர் அவர்கள் சொல்வதுபோல் வெள்ளிக்கிழமை ஓய்வாக, சிந்திக்க கிடைத்த, மனதுக்கிசைந்த,மா மருந்தே.
வஸ்ஸலாம்.
இப்ராஹீம் அன்சாரி.
'சகோதரியே' ஆசிரியர் வழங்கிய நல்லுபதேசங்களின் நினைவூட்டலுக்கு நன்றி!
உள்ள அமைதிக்கும்,உலக அமைதிக்கும் அழகான மாமருந்து குரான்,ஹதீஸ்,அதை ஞாகப்படுத்தும் அலாவுதீன் காக்காவுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்.இந்த தளத்தில் என்னை வெகுவாக கவர்ந்தது உங்கள் குரான்,ஹதீஸ் ஞாகபகமூட்டலும், சகோ ஜாகிர் காக்காவின் முன்னேற்ற கட்டுரைகளும்.
அமைதியை தரும் அலாவுதீன் காகாவின் ஆக்கங்கள் தொடரட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
சகோதரர்கள் சபீர், அபுஇபுறாஹிம், ஜஹபர் சாதிக் : சகோதரியே கட்டுரையைப் பற்றி ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
கட்டுரையை எழுத தொடங்கவில்லை ஆசிரியராக்கி விட்டீர்கள்.
நானும் பதில் கூறி காலங்கள் சென்று கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ்! விரைவில் தொடங்குகிறேன். வல்ல அல்லாஹ் உதவி புரியட்டும்.!
நீங்கள் தரும் மருந்து சிறிதாக இருந்தாலும் நிறைய நிம்மதி தரும் அருமருந்து..தொடர்ந்து எழுதுங்கள் காக்கா
Post a Comment