Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அறிமுக உரையில் பதிவு மிக குறைவாக இருந்ததாக சகோதரர்கள் வருத்தப்பட்டு அடுத்த அத்தியாயம் நீண்ட..... பகுதியாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்படி இந்த அத்தியாயம் நீண்டதாகவே வருகிறது.

9 மாதங்கள்  முடிந்து 10வது மாதம் நெருங்கியது. . .

மருத்துவமனை:
10வது மாதம் பிரசவ வலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். உறவுகள் அனைவரும் ஆண் குழந்தையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானோ அபுதாபியில் (வளைகுடா வாழ் சகோதரர்களுக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் அருகில் இருக்கும் வாய்ப்பு கனவாகவே போய் விட்டது) சுகப்பிரசவமாகி தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்ற துஆவுடன் காத்திருக்கிறேன்.
  
குழந்தை பிறந்தது:
மாஷா அல்லாஹ்! குழந்தை பிறந்து விட்டது. என் மைத்துனரிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது. குழந்தை பிறந்த செய்தியைச் சொல்லாமல்; மச்சான் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லுங்கள் என்று சொன்னார். நானும் அல்ஹம்துலில்லாஹ்! என்று சொன்னேன். மச்சான் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார் மீண்டும் அல்ஹம்துலில்லாஹ்! சொன்னேன். (நான் வெறுப்படைந்து விடுவேன் என்று நினைத்து முதலில் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லுங்கள் என்று சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்). வல்ல அல்லாஹ்வின் அருளால் எனக்கு மகள் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியே!.

மச்சான்;  குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து கொடுத்தவுடன் பிஸ்மி சொல்லி வாங்கினேனா பிறகு திரும்பிப் பார்க்கிறேன் ஒருத்தியும் வார்டில இல்லை என்று என் மனைவியின் சகோதரி என்னிடம் சொன்னார்கள். என்ன காரணம் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த உறவுகளுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேள்விப்பட்டு மனைவியின் சகோதரியில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் கண் கலங்கி வார்டை விட்டு வெளியேறி விட்டார்களாம். ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த என் மனைவிக்கும் வருத்தம்தான்.

(என்ன காக்கா உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையே இல்லையா? என்று கேட்பது காதில் விழுகிறது). ஆண் குழந்தை அதிகம் உள்ள வீட்டில் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதும், பெண் குழந்தை அதிகம் உள்ள வீட்டில் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதும் இயல்பானதுதான். நானும் விதிவிலக்கில்லை. ஆசை இருந்தாலும், இந்த பிரசவத்தில் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாததால் எனக்கு வருத்தம் ஏற்படவில்லை.

சமுதாயத்தின் பார்வையில்: 
என் மனைவியிடம்:  ஏம்புள்ளே எத்தனை பிள்ளைங்க உனக்கு? மூன்று பிள்ளைங்க; ஆண் எத்தனை? பெண் எத்தனை? மூன்றும் பெண் பிள்ளைகள். அல்லாஹ்வே! மூன்றும் பெண்ணா? பாவம்புள்ளே? நீ!. ஒரு ஆம்பளபிள்ளை இருந்தா  உதவியா இருந்திருக்கும். மக்களின் கேள்விகளால் தாயான (உறுதியான) பெண்ணுக்கும் சில நேரங்களில் மனதில் கலக்கம் ஏற்பட்டு விடுகிறது.

இந்தச் செய்தியை என் மனைவி, என்னிடம் சொன்ன பொழுது உணவு அளிப்பவன் வல்ல அல்லாஹ்! பாவப்படும் மக்கள் அல்ல! அதனால் இப்படி கேட்பவர்களின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம், வல்ல அல்லாஹ்விடமே நம்பிக்கை வை என்று சொன்னேன்.

குழந்தை வழங்குவது பற்றித் திருமறையில்:
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குழந்தைகள் தருவது அவனுடைய விருப்பத்தில் உள்ளது என்பதைப் பற்றித் தெளிவாக விளக்குகிறான் :

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
(அல்குர்ஆன் : 42:49)

அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு  வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன், ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 42:50)

மூன்றாவதாகப் பிறந்த மகளின் செயல்பாடுகள்:
மூன்றாவதும் பெண்ணா? என்று எந்தக்குழந்தை பிறந்தவுடன் வருத்தப்பட்டார்களோ? அந்த மகள் இந்த வருடம் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறார். என்னோடு சில நேரங்களிலும்,  என் மனைவியோடு சில நேரங்களிலும் சேர்ந்து தொழுது தொழுகையை கற்றுக் கொண்டார். தொழுகைக்குரிய சூராக்களை மனனம் செய்து வைத்துள்ளார். ஓதுவது, தொழுவது (எல்லா நேரத்தொழுகையையும் பாங்கு சொன்னவுடன் தொழுது விடுவது), பயான் கேட்பது, நோன்பு வைப்பது, ஹதீஸ்களை சொல்வது என்று உறவுகளின் மனதில் இடம் பிடித்து விட்டார். (மூன்று மகள்களுமே மார்க்கத்தில் ஈடுபாடுடையவர்களாக இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!). 

பயானில் கேட்ட விஷயங்களை மனதில் உள்வாங்கி வீட்டில் சரியாக அதன்படி நடக்கிறார்களா? என்று கண்காணிக்கிறார். உதராணத்திற்கு: நான் அபுதாபி திரும்பி வர ஏற்பாடு செய்துக் கொண்டு இருந்தேன். இந்த நேரத்தில் ஒரு மௌத்திற்குச் செல்ல வேண்டும். நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது (வெளிநாட்டில் இறந்து போனவர் இன்று வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்த மையத், ஒரு வழியாக ஊர் கொண்டு வந்து விட்டார்கள்). ஏர் டிக்கெட் மற்ற பொருள்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டும், எனக்கு நேரமும் இல்லை.

இறந்தவர் வீட்டிற்குச் சென்று விட்டு பள்ளி வரை செல்வதா? அடக்கம் செய்யும் இடம் வரை செல்வதா? (மையத்தை விரைந்து அடக்கம் செய்யும் பழக்கம் நம்மிடம் இல்லை) வீட்டில் நடந்த உரையாடலை கவனித்த என் மகள் என்னோடு வாசல் வரை வந்து டாடி! எதுவரை செல்லப்போகிறீர்கள்? பள்ளி வரை சென்றால் ஒரு நன்மைதானே! கிடைக்கும். மையத் அடக்கும் இடம் வரை சென்று வந்தால்தானே இரண்டு நன்மை உங்களுக்கு கிடைக்கும் என்றார். மையத் அடக்கும் வரை இருந்து விட்டுப் பிறகுதான்  என் வேலைகளைப் பார்க்கச் சென்றேன்.

மாஷா அல்லாஹ்! நாம்  ஒன்றை எதிர்பார்ப்போம் வல்ல அல்லாஹ் ஒன்றைத் தருவான். வல்ல அல்லாஹ் நமக்கு வழங்குவது நிச்சயம் நன்மையைப் பெற்றுத்தரும்.

மையத்தில் கலந்து கொள்வதுப் பற்றிய ஹதீஸ்:
'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி: எண் : 47).

கட்டுரையின் தலைப்பைத் தேர்ந்தெடுத்தின் நோக்கம்:

என் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். என் குடும்பத்தில் எல்லோருக்கும் பெண் மக்கள், என் சகோதரர்கள்: சபீர், ஜலாலுக்கு மூன்று பெண் மக்கள். இப்படி என் குடும்பத்தில் பெண் மக்களே அதிகம். என் நண்பர்களின் வீடுகளிலும் பெண் மக்களையும், சகோதரிகளையும் அதிகமாகப் பார்த்து வருகிறேன்

குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. குடும்பத்தின் முக்கியத்தூணாக ஒரு பெண்தான்  இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையேயும் சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகி அதிகமான விவாகரத்துக்களும் ஏற்படுகிறது. அதனால் நமது சமுதாயத்தில் பெண்கள் படும் சிரமங்களையும், கேள்விப்பட்ட உண்மை நிகழ்வுகள், நிகழ்வுகளின் பாதகங்களையும், மேலும் பிள்ளைகள் வளர்ப்பு முறைகளையும்,  கற்பனைகளை கலக்காமல்,  பொய்கள் இல்லாமல் இஸ்லாத்தின் எல்லைக்குள் நின்று அலசுவதே சகோதரியே! தொடரின் நோக்கம். 

இத்தொடரில் ஓர் ஊரை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஒட்டு மொத்த சமுதாயத்தில், அறியாமையால் ஏற்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு (எங்களுக்குத்தான் தெரியுமே? என்று நினைப்பீர்கள்! தெரிந்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்வதால் தவறுகள் திருத்தப்பட்டு மக்கள் நேர்வழி பெறலாம்) மார்க்கத்தின் அடிப்படையில் நாம் எவ்வாறு நம்மை சீர்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றி என்னால் முடிந்தளவு விளக்க இருக்கிறேன்.

இந்தத் தொடரில் வரப்போகும் விஷயங்கள் தாங்கள் கேள்விப்பட்டதாகவும், படித்ததாகவும் இருக்கலாம். அடுத்தவர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள் மூலம் நாம் படிப்பினை பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், (ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள்) மேலும் எனக்கும் சேர்த்து (கீழ்க்கண்ட குர்ஆன் வசனப்படி) விழிப்புணர்வு தொடராக வருவதற்கு முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்!.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையை தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் : 3:110)

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
குறிப்பு:
வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: அடுத்த அத்தியாயம் வரதட்சணையைப்பற்றி வரப்போகிறது. வரதட்சணை (கைக்கூலி) வாங்குவதில் கடற்கரை அருகில் இருக்கும் ஊர்கள் முன்னணியில் உள்ளதா? மற்ற மாவட்ட ஊர்கள் முன்னணியில் உள்ளதா?.

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

36 Responses So Far:

Shameed said...

//வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குழந்தைகள் தருவது அவனுடைய விருப்பத்தில் உள்ளது என்பதைப் பற்றித் தெளிவாக விளக்குகிறான் ://


3.36(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

பெண் குழந்தை என்றாலே மூஞ்சை சுளிப்போருக்கு.சகோதரி சொல்லும் மென்மையான உபதேசம்.அருமை காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலுவலக பரபரப்போடு வாசிக்காமல் பொறுமையாக படிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே நிதானமாக வாசிக்க வைக்கும் எழுத் ஓடையிது !

ஏங்கிய பந்தங்களை எட்டிப் பிடித்து இழுந்து வந்து எடுத்து வைக்கும் சகோதரி தொடர்... சகோதரிகள் பாசமறியாதவர்களுக்கும் சொட்டு இருக்கும் என்பது தின்னம் !

Ebrahim Ansari said...

அன்பின் நண்பர் அலாவுதீன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரிகளை சீர் கொண்டுபோய்தான் காணமுடியும். நீங்கள் படைக்கும் சகோதரி சீரோடு வருவதால் சிறப்போடு வரவேற்கிறோம்.

//வரதட்சணை (கைக்கூலி) வாங்குவதில் கடற்கரை அருகில் இருக்கும் ஊர்கள் முன்னணியில் உள்ளதா? மற்ற மாவட்ட ஊர்கள் முன்னணியில் உள்ளதா?.//

நான் அறிந்தவரை கடற்கரை அருகில் இருக்கும் ஊர்களான காயல் பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிரை, நாகை, நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்கள்தான் முன்னணியில் உள்ளன. ( முத்துப்பேட்டை இதில் வராது.)காரணம் "வீடு " எனும் காரணி, பெருந்தொகையை முழுங்குகிறது. வீடு இல்லாவிட்டால் மனைக்கட்டாவது கொடுக்க வேண்டும். இது என் கருத்து. கடற்கரை ஓரங்களில் இப்பழக்கம் காலூன்றக் காரணம் என்ன?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காக்கா அமைதியுடன் படித்தால் உங்கள் ஆக்கம் எம் நெஞ்சை சாந்தப்படுத்தும் நிச்சயம்.

"பணம் கறக்கும் எந்திரமாக இன்றைய உலகில் ஆண்மக்கள் சித்தரிக்கப்பட்டாலும் அப்படி இருந்தும் பெற்ற தாய்,தந்தையரை கடைசி காலத்தில் கவனிக்காமல் அலட்சியமாக ஆதரவின்றி அவர்களை விட்டு விடும் ஆண்மக்களுக்கு பதிலாக பாசத்தையும்,பண்பாட்டை பொழியும் பெண்மக்கள் இருப்பதே ஒவ்வொரு வீட்டிற்கும் சிறப்பு".

ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தன் மனைவி, தன் கணவன் சொல் கேட்டு ஒருபக்கம் அப்படியே சாய்ந்து விடாமல் இரு பக்க குச்சிகளின் அழுத்தம் இருந்தாலும் பட்டத்தின் நடுக்குச்சி போல் இருந்து கொண்டால் வாழ்வு சிறக்கும், எல்லா நாட்களும் இனிய நாளாகும். (இதைத்தானைய்யா நம்ம மார்க்கமும் அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை சொல்லிக்கொண்டே இருக்கிறது என்று சொல்ல வைக்கும் அழகான தொடர் இது)

Yasir said...

சகோதரியே சலசலப்பு இல்லாமல் சாந்தமாக சகோதரிகளின் பெருமையை சொல்கிறது,சொந்த உதாரணங்கள் , பெறுவது எந்த குழந்தையாயின் அது அல்லாஹ்வின் நாட்டப்படிதான் பிறக்கும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தும் குர் ஆன் வசனங்கள்,மாஷா அல்லாஹ்..உங்கள் தொடர் சமுதாயத்தில் பல மாற்றங்களை உருவாக்கும் இன்ஷா அல்லாஹ்

Yasir said...

கடற்கரை பகுதிகளில்தான் இந்த கேவலமான வரதட்சணை அதிகம் கேட்கும் பழக்கம் உள்ளது...உப்பு தின்றால் சொரணை வரும்...அந்த உப்பையே காற்றாக சுவாசிப்பதால் என்னவோ சொரணைபோய் ஆணின் முதுகெலும்பும் தேய்ந்துபோய் பெண்வீட்டில் பிச்சை எடுக்க வைக்கும் நிலையே உண்டாக்கி உள்ளது

sabeer.abushahruk said...

மூன்றும் பெண்பிள்ளைகள் என்பதால்தான் இதை நம் கதை எனக் குறிப்பிட்டாய். மூன்றாவது பெண்பிள்ளை பிறந்தபோது நீ விவரிக்கும் சொந்தங்களின் சலசலப்பு எனக்கு ஏற்படாததற்குக் காரணம் என் மூன்றாவது மகளும் சவுதியில் பிறந்ததால்தான்.

ஆயினும் மனைவியின் வருத்தத்தைக் காண முடிந்தது. ஏன், அழக்கூட செய்தாள். மன அழுத்தம் (depression) எனும் வேதனக்குள் தன்னைத்தானே சிக்க வைத்துக்கொண்டாள். (அந்த மன அழுத்தம் நான்காவதாய் மகன் ஷாருக் பிறந்தபின்னும் அவளைவிட்டுப் போகவில்லை)

ஆனால், எனக்கும் உன்னைப்போலவே மூன்றாவதும் பெண்பிள்ளை என்றானதில் துளிகூட வருத்தம் இல்லை என்பதே உண்மை. அல்ஹம்துலில்லாஹ் தான்.

அதே மூன்றாவது பெண்பிள்ளை நம்மோடு இந்நாட்களில் உறவாடும்போதுதான் அல்லாஹ் நமக்கு நன்மையையே நாடினான் என உணர்கிறோம்.

sabeer.abushahruk said...

பெண் என்றாலே தியாகாத்தின் அடையாளம்தான். பெண்ணின் முழு வடிவான தாய்மையோ தியாகத்தின் உச்சகட்டம்.

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்
தாங்க முடியுமா?

அலாவுதீன்,

சகோதரியைத் துவங்கியிருக்கும் நீ பெண்ணைச் சகோதரி எனும் ஸ்தானத்தில் மட்டும் வைத்து இத்தொடரை சட்டென்று முடித்து விடாமல், சகோதரியாகவும், மகளாகவும், மனைவியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக தாயாகவும் சித்தரித்து எல்லா நல்லது கெட்டதுகளையும் அலசி ஆராய்ந்து மார்க்க ரீதியில் மொத்த பெண்ணினத்திற்குமான வழிகாட்டுதலாக இத்தொடரை நீட்டிக்க வேன்டுமென அன்புடன் உரிமையுடன் ஆணையிடுகிறேன்.

உன் எழுத்து நடையின் ஈர்ப்புக்காகவாவது மக்கள் இதை வாசிப்பார்கள் என நம்புகிறேன்.

நல்லாயிரு அலாவுதீன்.

sabeer.abushahruk said...

உன் கேள்விக்கான பதில் கீழே:(உண்மையிலேயே நான் ஈயடிச்சான் காப்பி அடிக்கிற கேரக்ட்டர் இல்லேப்பா. ஆனா. இப்ப இவ்வளவு தெளிவா பதில் சொல்றவங்களை எப்படி ஜெயிக்கிறதாம்?)

நான் அறிந்தவரை கடற்கரை அருகில் இருக்கும் ஊர்களான காயல் பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிரை, நாகை, நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்கள்தான் முன்னணியில் உள்ளன.

sabeer.abushahruk said...

//"பணம் கறக்கும் எந்திரமாக இன்றைய உலகில் ஆண்மக்கள் சித்தரிக்கப்பட்டாலும் அப்படி இருந்தும் பெற்ற தாய்,தந்தையரை கடைசி காலத்தில் கவனிக்காமல் அலட்சியமாக ஆதரவின்றி அவர்களை விட்டு விடும் ஆண்மக்களுக்கு பதிலாக பாசத்தையும்,பண்பாட்டை பொழியும் பெண்மக்கள் இருப்பதே ஒவ்வொரு வீட்டிற்கும் சிறப்பு".//

டியர் அ.நி. எடிட்டர்,

மேற்சொன்ன கான்ஸெப்ட்டை விரிவாக எழுதிக் கேட்டு எம் எஸ் எம்முக்கு ஒரு தனி மடல் இடவும். நன்றி.

Noor Mohamed said...

சகோ அலாவுதீன், மூன்று பெண் குழந்தைகளையும் எவ்வித குறைவின்றி அல்லாஹ் உங்களுக்கு அருளியுள்ளானே, இதை விட பெரும் பாக்கியம் இக்கால சூழ்நிலையில் வேறேதுமில்லை. அல்ஹம்துலில்லாஹ்.

வரதட்சனை என்பது பணம் மட்டுமல்ல. வீடு என்பது பெரும் தொகை. அடுத்து நகை. இதைக் கணக்கீட்டு பார்க்கும் போது, அதை வரிசை படுத்தினால், கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம், அடுத்து மற்றவை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கவிக்காக்காவின் விண்ணப்பத்திற்கு ரொம்ப தேங்க்ஸ்....

என்னுடன் பணிபுரியும் சக ஊழியன் விடுமுறையில் சென்றுள்ளதால் பணிப்பளு மெல்ல, மெல்ல பெண்டை கழட்டி வருகிறது. ஆகையால் இச்சமயம் "வேலையில் சொதப்பாமல் இருப்பது எப்படி?" என்ற தலைப்பில் வேண்டுமானால் பெண்டு கழட்டுவது நிறுத்தப்பட்டதும் எழுத முயற்சிக்கலாம் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்...

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்பிள்ளைப் பெற்றோர் என்றும் சிறப்பாகத்தான் இருப்பார்.
மேலும் பெண்பிள்ளை பெறாமல் வெறும் ஆண்பிள்ளைப் பெற்றவர் வீட்டையும்,பின்னாளில் அந்தப் பெற்றோர் படும்பாட்டையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.மூன்றாவதாக பெண்பிள்ளை எனக்குத் தெரிந்தவரை கிடைப்பது அரிது.அப்படி பிறந்த வீட்டில் ஒருநல்ல முன்னேற்றம் ஏற்ப்படும்
என்றும்,மூணாவது பொண்ணு பொறந்தா முத்தமெல்லாம் தங்கம் என்று
பெண்கள் சொல்வதுண்டு.
மேலும் பெண்பிள்ளை பெற்ற நாம் ஒன்னும் கவலைப்படமாட்டோம்.அடுத்தவர்கள் சொல்லி,சொல்லியே நம்மைக் கவலைப்படவைப்பர்.எனக்கு அல்லாஹ் அளித்தது நான்கு பெண்செல்வங்கள்
மார்க்ககல்வியில் மேன்மையாக சிறந்து விளங்குகிறார்கள்.உலக கல்வியையும் விட்டுவைக்கவில்லை.எல்லாருமே பட்டதாரிகள்.அல்ஹம்துல்லில்லாஹ்....................

Unknown said...

ZAEISA சொன்னது…

மேலும் பெண்பிள்ளை பெற்ற நாம் ஒன்னும் கவலைப்படமாட்டோம்.அடுத்தவர்கள் சொல்லி,சொல்லியே நம்மைக் கவலைப்படவைப்பர்.எனக்கு அல்லாஹ் அளித்தது நான்கு பெண்செல்வங்கள்
மார்க்ககல்வியில் மேன்மையாக சிறந்து விளங்குகிறார்கள்.உலக கல்வியையும் விட்டுவைக்கவில்லை.எல்லாருமே பட்டதாரிகள்.அல்ஹம்துல்லில்லாஹ்....................
---------------------------------------------------------------------

காக்கா உங்கள் பெருமிதம் எங்களை ஆனந்தம் அடைய செய்கிறது ..

இன்ஷா அல்லாஹ் ZAEISA காக்கா வை போல் பெண்பிள்ளைகளை பெற்றவர்களை

இந்த சகோதரி தொடர் நல்ல மன பக்குவத்தை அளிக்கும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். இந்த கட்டுரை நான் வாக்குமூலம் கொடுத்தது போல் உள்ளது. நான் ஒரே சகோதரி ஐந்து சகோதரனுடன் பிறந்தவன் அதிகம் பெண் பிள்ளை எதிர் பார்த்தவன். மூன்று பெண்பிள்ளைகள் . அமெரிக்காவில் ஆறுமாதத்திலேயே என்ன பிள்ளையென்று பெற்றோர்களிடம் சொல்லிவிடுவார்கள் அதுபோலவே மூன்றாவதும் பெண் என்றதும் நானும் என் மனைவியும் ஒரு சேர சொன்னது அல்ஹம்துலில்லாஹ்!மருத்துவர் என்ன என்று கேட்டார் விளக்கம் சொன்னோம் சிறிய புன்னுறுவலுடன் வாழ்துச்கொன்னார்.பிள்ளைகள் விஸயத்தில் நான் அதிகம் ஆசிர்வதிக்கபட்டவன். அல்ஹம்துலிலாஹ்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் அறிந்தவன் மூன்றாவதும் பெண் பிள்ளை என்றதும் என்னை போலவே என் துனைவியும் எந்தவித வருத்தமின்றி எல்லாம் நம் குழந்தை தானே என சொல்லி அல்ஹம்துலில்லாஹ் சொன்னாள். அல்லாஹ் நாடியவையே அமையும் ஏற்பதுதான் பக்குவம். இஸ்லாம் சொன்ன மகத்துவம்.இந்த மகத்துவ பேறிலும் அந்த மகத்துவ பேறு உள்ளது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா, தங்கள் குடும்பத்தின் நிகழ்வு நல்ல படிப்பினை காக்கா, நிச்சயம் இது ஒரு நல்ல ஆறுதல் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும்.

//வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: அடுத்த அத்தியாயம் வரதட்சணையைப்பற்றி வரப்போகிறது. வரதட்சணை (கைக்கூலி) வாங்குவதில் கடற்கரை அருகில் இருக்கும் ஊர்கள் முன்னணியில் உள்ளதா? மற்ற மாவட்ட ஊர்கள் முன்னணியில் உள்ளதா?.//

கடற்கரையோர ஊர்களில் தான் வரதட்சனை கேட்பது அதிகம்... எல்லோரும் கப்பலுக்கு போன மச்சான்களாச்சே..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//ZAEISA சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்பிள்ளைப் பெற்றோர் என்றும் சிறப்பாகத்தான் இருப்பார்.
மேலும் பெண்பிள்ளை பெறாமல் வெறும் ஆண்பிள்ளைப் பெற்றவர் வீட்டையும்,பின்னாளில் அந்தப் பெற்றோர் படும்பாட்டையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.மூன்றாவதாக பெண்பிள்ளை எனக்குத் தெரிந்தவரை கிடைப்பது அரிது.அப்படி பிறந்த வீட்டில் ஒருநல்ல முன்னேற்றம் ஏற்ப்படும்
என்றும்,மூணாவது பொண்ணு பொறந்தா முத்தமெல்லாம் தங்கம் என்று
பெண்கள் சொல்வதுண்டு.
மேலும் பெண்பிள்ளை பெற்ற நாம் ஒன்னும் கவலைப்படமாட்டோம்.அடுத்தவர்கள் சொல்லி,சொல்லியே நம்மைக் கவலைப்படவைப்பர்.எனக்கு அல்லாஹ் அளித்தது நான்கு பெண்செல்வங்கள்
மார்க்ககல்வியில் மேன்மையாக சிறந்து விளங்குகிறார்கள்.உலக கல்வியையும் விட்டுவைக்கவில்லை.எல்லாருமே பட்டதாரிகள்.அல்ஹம்துல்லில்லாஹ்....................///

உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் காக்கா.. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

உள்ளத்தை தொடும் சம்பவங்கள்.பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அது ஒரு அழகுதான்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

உலகில் பெண்கள்/பிள்ளைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்கவில்லை சொல்லுங்கள் பார்ப்போம்?

ஐந்து ஆண் பிள்ளைகளை மட்டும் பெற்று சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவனாகவும், செல்வந்தனாகவும் நினைத்துக்கொண்டு தன் சட்டை காலரை தூக்கி விட்டுக்கொண்டு அலையும் ஆண் வர்க்கம் கூட அந்த ஐந்து ஆண் பிள்ளைகளுக்கும் அடக்கமான, அம்சமான, அழகான பெண் பிள்ளைகள் மருமகள்களாக வர வேண்டும் என்று ஆசை வைக்காமல் ஒரு போதும் இருப்பதில்லை.

என்னுடைய கேள்வி: "உம்மாவும், மனைவியும் பெண்களாக இருக்கும் பொழுது தனக்கு பெண் பிள்ளைகள் வரிசையாக பிறந்து விட்டால் மட்டும் ஏன் தான் இந்த ஊர் பொட்டியும், பாம்புமாக அடங்கி செத்து சுண்ணாம்பாகிப்போகிறதோ தெரியவில்லை?"

ப‌தில் : கேட்க‌ப்ப‌டும் வ‌ர‌த‌ட்சிணையும், ஒவ்வொரு பெண் பிள்ளைக‌ளுக்கும் தலா அரை கோடி செல‌வு செய்து க‌ட்டிக்கொடுக்க‌ப்ப‌டும் வீடுக‌ளுமே கார‌ண‌ம்.

Anonymous said...

பெண்பிள்ளைகள் பிறந்துவிட்டாலே மன அதிர்ச்சியும்,சோர்வும் ஏற்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் தருகிறதுதான் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அவன் தான் ஆணாகவும்,பெண்ணாகவும் தருகிறான் எல்லாம் அவனுக்கு தெறியும் யாருக்கு என்ன குழைந்தை கொடுக்கணும் என்று.

எந்த பிள்ளையாக இருந்தாலும் உணவு,உடை மற்ற எல்லாம் கொடுப்பவன் அல்லாஹ் தான் அவனைத்தவிர வேற யாருமில்லை. பெண்பிள்ளைகள் பெற்றாலும் கவலை என்பதே படக்கூடாது. பெண் பிள்ளைகள் தான் பெற்ற தாய்,தந்தையருக்கு உதவியாக இருப்பார்கள்.

ZAKIR HUSSAIN said...

பெண் பிள்ளைகள் நம் ஊரில் பிறந்தால் யோசிக்க காரணம் "வரதட்சினை" என்னும் வேற்றுமதத்தை பின்பற்றும் பழக்கம்தான். வரதட்சினை வாங்கினால் தண்டனை என்று தெரிந்தும் அது ஒழிந்தபாடில்லை.

இப்போது ஊரில் உள்ள ட்ரண்ட்..."பணமெல்லாம் கிடையாதாம், மோட்டார் சைக்கிள், கம்ப்யூட்டரில் வீடியோவை மட்டும் பயன்படுத்தும் மூடாத்துகளுக்கு கம்ப்யூட்டர்./லேப்டாப் / ஐபேட்.வீடு , வெளிநாட்டு விசாவுக்கு பணம், ....இந்த மாதிரி பிச்சை எடுப்பதற்க்கு நேரடியாக "பணம்" கேட்டுவிடலாம்.


ஆக வரதட்சினை ஒழிந்தால் பெண்களுக்கான கெளரவம் நிலை நிறுத்தப்படும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பெண்பிள்ளையின் பெருமையை பெருந்தன்மையுடன் பக்குவமாய் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.
நிச்சயம் அந்த மூன்றாம் வாரிசு கடைசி வரை உங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//ஐந்து ஆண் பிள்ளைகளை மட்டும் பெற்று சமுதாயத்தில் தன்னை உயர்ந்தவனாகவும், செல்வந்தனாகவும் நினைத்துக்கொண்டு தன் சட்டை காலரை தூக்கி விட்டுக்கொண்டு அலையும் ஆண் வர்க்கம் கூட அந்த ஐந்து ஆண் பிள்ளைகளுக்கும் அடக்கமான, அம்சமான, அழகான பெண் பிள்ளைகள் தான் மருமகள்களாக வர வேண்டும் என்று ஆசை வைக்காமல் ஒரு போதும் இருப்பதில்லை//

"என்னா க‌டைசியிலெ ஊடு வாச,நகை ந‌ட்டு, ப‌ண‌ம் காசு என்று கேட்டுத்தொலைஞ்சிபுடுறானுவோ" அதுலெ தான் பிர‌ச்சினைகள் ஸ்டார்ட் ஆகுது. க‌டைசியிலெ எல்லாத்தையும் அள்ளிவச்சி குத்திப்புட்டு ம‌க‌ன் க‌லியாண‌த்துக்கு அப்புற‌ம் பொண்டாட்டி ஊட்டோடெ போயி சேந்துர்ரான். அப்புறமென்ன‌ குத்துது, கொடையுது...............

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கருத்திட்ட சகோதரர்கள் m.nainathambi. , Ebrahim Ansari, harmys .abdul rahman , M.H. ஜஹபர் சாதிக், Yasir :
/////m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது… ஏங்கிய பந்தங்களை எட்டிப் பிடித்து இழுந்து வந்து எடுத்து வைக்கும் சகோதரி தொடர்... சகோதரிகள் பாசமறியாதவர்களுக்கும் சொட்டு இருக்கும் என்பது திண்ணம் ! ////

சகோதரி உண்மை தியாகி என்பது புரிய வைக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!

****************************************************************************
/////Ebrahim Ansari சொன்னது…
சகோதரிகளை சீர் கொண்டுபோய்தான் காணமுடியும். நீங்கள் படைக்கும் சகோதரி சீரோடு வருவதால் சிறப்போடு வரவேற்கிறோம்.

நான் அறிந்தவரை கடற்கரை அருகில் இருக்கும் ஊர்களான காயல் பட்டினம், கீழக்கரை, தொண்டி, அதிரை, நாகை, நாகூர், காரைக்கால், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்கள்தான் முன்னணியில் உள்ளன. (கடற்கரை ஓரங்களில் இப்பழக்கம் காலூன்றக் காரணம் என்ன? /////

வஅலைக்கும் ஸலாம் வரஹ்!
சகோதரி கடைசி வரை சீரோடும் சிறப்போடும் வருவார் இன்ஷா அல்லாஹ்!

தங்களின் பதிலுக்கு நன்றி! கடற்கரை ஓரங்களில் இப்பழக்கம் காலூன்றக் காரணம் என்ன? மில்லியன் டாலர் கேள்வி யாராவது பதில் சொல்வார்களா?????

*********************************************************************

///harmys .abdul rahman சொன்னது…
காக்கா உங்கள் பெருமிதம் எங்களை ஆனந்தம் அடைய செய்கிறது ..////
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

*********************************************************************


/////M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
பெண்பிள்ளையின் பெருமையை பெருந்தன்மையுடன் பக்குவமாய் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.
நிச்சயம் அந்த மூன்றாம் வாரிசு கடைசி வரை உங்களுக்கு அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். ////

வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும். (மூன்று மகள்களையும் ஸாலிஹான பிள்ளைகளாக்கி வல்ல அல்லாஹ் நல்லருள் புரிந்து, மகிழ்ச்சியைத் தரட்டும்.)
*********************************************************************

////Yasir சொன்னது… ...அந்த உப்பையே காற்றாக சுவாசிப்பதால் என்னவோ சொரணைபோய் ஆணின் முதுகெலும்பும் தேய்ந்துபோய் பெண்வீட்டில் பிச்சை எடுக்க வைக்கும் நிலையே உண்டாக்கி உள்ளது .

சகோதரியே சலசலப்பு இல்லாமல் சாந்தமாக சகோதரிகளின் பெருமையை சொல்கிறது.
.உங்கள் தொடர் சமுதாயத்தில் பல மாற்றங்களை உருவாக்கும் இன்ஷா அல்லாஹ்!////

வரதட்சணை விஷயத்தில் அனைவரும் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். வல்ல அல்லாஹ்தான் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

*********************************************************************
அன்புச்சகோதரர்கள்: அனைவருக்கும் நன்றி!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் Shameed , லெ.மு.செ.அபுபக்கர் ZAKIR HUSSAIN அபூபக்கர் - அமேஜான்

////லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
பெண் குழந்தை என்றாலே மூஞ்சை சுளிப்போருக்கு.சகோதரி சொல்லும் மென்மையான உபதேசம்./////

வஅலைக்கும் ஸலாம் வரஹ்!
முகத்தை சுளிப்பவர்களுக்கும் மகிழ்வைத்தரும் தொடராக இருக்கும். இன்ஷா அல்லாஹ்!
*********************************************************************

///// ZAKIR HUSSAIN சொன்னது…
பெண் பிள்ளைகள் நம் ஊரில் பிறந்தால் யோசிக்க காரணம் "வரதட்சினை" என்னும் வேற்றுமதத்தை பின்பற்றும் பழக்கம்தான்.

இப்போது ஊரில் உள்ள ட்ரண்ட்..."பணமெல்லாம் கிடையாதாம், மோட்டார் சைக்கிள், கம்ப்யூட்டரில் வீடியோவை மட்டும் பயன்படுத்தும் மூடாத்துகளுக்கு கம்ப்யூட்டர்./லேப்டாப் / ஐபேட்.வீடு , வெளிநாட்டு விசாவுக்கு பணம், ....இந்த மாதிரி பிச்சை எடுப்பதற்க்கு நேரடியாக "பணம்" கேட்டுவிடலாம்.
ஆக வரதட்சினை ஒழிந்தால் பெண்களுக்கான கெளரவம் நிலை நிறுத்தப்படும். //////

தாங்கள் சொல்வது உண்மைதான்.
*********************************************************************

////அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) சொன்னது…
பெண்பிள்ளைகள் பிறந்துவிட்டாலே மன அதிர்ச்சியும்,சோர்வும் ஏற்படுகிறது. எல்லாம் வல்ல இறைவன் தருகிறதுதான் நாம் ஏன் கவலைப்பட வேண்டும். அவன் தான் ஆணாகவும்,பெண்ணாகவும் தருகிறான் எல்லாம் அவனுக்கு தெறியும் யாருக்கு என்ன குழைந்தை கொடுக்கணும் என்று.

எந்த பிள்ளையாக இருந்தாலும் உணவு,உடை மற்ற எல்லாம் கொடுப்பவன் அல்லாஹ் தான் அவனைத்தவிர வேற யாருமில்லை. பெண்பிள்ளைகள் பெற்றாலும் கவலை என்பதே படக்கூடாது. பெண் பிள்ளைகள் தான் பெற்ற தாய்,தந்தையருக்கு உதவியாக இருப்பார்கள்//////

*********************************************************************

தங்களின் வார்த்தை உண்மையே! நிச்சயம் வல்ல அல்லாஹ்வுக்குத் தெரியும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது
*********************************************************************அன்புச்சகோதரர்கள்: அனைவருக்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…


///பெற்ற தாய்,தந்தையரை கடைசி காலத்தில் கவனிக்காமல் அலட்சியமாக ஆதரவின்றி அவர்களை விட்டு விடும் ஆண்மக்களுக்கு பதிலாக பாசத்தையும்,பண்பாட்டை பொழியும் பெண்மக்கள் இருப்பதே ஒவ்வொரு வீட்டிற்கும் சிறப்பு".

///ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தன் மனைவி, தன் கணவன் சொல் கேட்டு ஒருபக்கம் அப்படியே சாய்ந்து விடாமல் இரு பக்க குச்சிகளின் அழுத்தம் இருந்தாலும் பட்டத்தின் நடுக்குச்சி போல் இருந்து கொண்டால் வாழ்வு சிறக்கும்,///
ஐந்து ஆண் பிள்ளைகளுக்கும் அடக்கமான, அம்சமான, அழகான பெண் பிள்ளைகள் மருமகள்களாக வர வேண்டும் என்று ஆசை வைக்காமல் ஒரு போதும் இருப்பதில்லை. /////

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நிச்சயம் பெண்மக்கள் இல்லாத வீடு ஒரு சிறப்பையும் தராது என்பது 1000 சதவீதம் உண்மை. இன்ஷா அல்லாஹ்!

தங்களின் கேள்வியும் பதிலும் புரிகிறது. ( புரியாமல் இருப்பவர்களுக்கு???????)
தங்களின் எதிர்பார்ப்புகள், ஆதங்கங்கள் அனைத்தும் அலசப்படும்.
*********************************************************************

"வேலையில் சொதப்பாமல் இருப்பது எப்படி?" என்ற தலைப்பில் வேண்டுமானால் பெண்டு கழட்டுவது நிறுத்தப்பட்டதும் எழுத முயற்சிக்கலாம்
****************************************************************************************

சொதப்பல்தான் அதிகமாக நடைபெறுகிறது. அவசியம் எழுதுங்கள் தங்கள் அனுபவங்களை.

அன்புச்சகோதரருக்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

கருத்திட்ட சகோதரர்கள்::: அர அல, தாஜுதீன், crown: தஸ்தகீர்

//// அர அல சொன்னது…
உள்ளத்தை தொடும் சம்பவங்கள்.பெண் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அது ஒரு அழகுதான். ////

உண்மைதான் பெண் பிள்ளைகள் வீட்டில் இருப்பது அழகுதான்.
ஒரு கோரிக்கை: தங்களின் பெயர் சுருக்கமாக இருக்கிறது. முழுப்பெயர் தெரியப்படுத்தினால் அழைப்பதற்கு அழகாக இருக்கும்.
*********************************************************************

////தாஜுதீன் சொன்னது… அலாவுதீன் காக்கா, தங்கள் குடும்பத்தின் நிகழ்வு நல்ல படிப்பினை காக்கா, நிச்சயம் இது ஒரு நல்ல ஆறுதல் பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கும். ////

வஅலைக்கும் ஸலாம் வரஹ்!

வல்ல அல்லாஹ்வின் அருளால் ஆறுதலாகவும் விழப்புணர்வாகவும் தொடர்ந்து வரும்.

//// கடற்கரையோர ஊர்களில் தான் வரதட்சனை கேட்பது அதிகம்... எல்லோரும் கப்பலுக்கு போன மச்சான்களாச்சே.. ////

ஏன் அதிகம் என்பது சகோ. இபுறாஹிம் அன்சாரி அவர்களின் கேள்வி? என்னுடைய மில்லியன் டாலர் கேள்வியும் அதுதான்.
*********************************************************************
////crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் அறிந்தவன் மூன்றாவதும் பெண் பிள்ளை என்றதும் என்னை போலவே என் துனைவியும் எந்தவித வருத்தமின்றி எல்லாம் நம் குழந்தை தானே என சொல்லி அல்ஹம்துலில்லாஹ் சொன்னாள்.
பிள்ளைகள் விஸயத்தில் நான் அதிகம் ஆசிர்வதிக்கபட்டவன். அல்ஹம்துலிலாஹ். ////

பெண் மக்களை பெற்று பாக்கியம் பெற்றவர்கள். மாஷh அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

சகோ. தஸ்தகீர் தாங்கள் தண்ணீர் கவிதைக்கு கருத்திட்டபொழுது : தங்களின் தனிமெயிலுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

தாங்கள் தொடாந்து வரவேண்டும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். தங்களின் ஆக்கங்களையும் எழுத வேண்டும்.
*********************************************************************

அன்புச்சகோதரர்கள்: அனைவருக்கும் நன்றி!

ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

சகோதரர்கள் ZAEISA , Noor Mohamed : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

//// ZAEISA சொன்னது…
எனக்கு அல்லாஹ் அளித்தது நான்கு பெண்செல்வங்கள்
மார்க்ககல்வியில் மேன்மையாக சிறந்து விளங்குகிறார்கள்.உலக கல்வியையும் விட்டுவைக்கவில்லை.எல்லாருமே பட்டதாரிகள்.அல்ஹம்துல்லில்லாஹ்.................... ////

வஅலைக்கும் ஸலாம் வரஹ்!
தங்களின் உழைப்பு, தியாகத்தாலும், அல்லாஹ்வின் அருளாளலும் உலக கல்வியிலும், மார்க்கக் கல்வியிலும் தங்களின் நான்கு பெண் செல்வங்களையும் சிறந்து விளங்கச் செய்துவிட்டீர்கள். மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
*********************************************************************

////Noor Mohamed சொன்னது…
சகோ அலாவுதீன், மூன்று பெண் குழந்தைகளையும் எவ்வித குறைவின்றி அல்லாஹ் உங்களுக்கு அருளியுள்ளானே, இதை விட பெரும் பாக்கியம் இக்கால சூழ்நிலையில் வேறேதுமில்லை. அல்ஹம்துலில்லாஹ்.///

நிச்சயம் குறையின்றி பிறப்பது பெரும் பாக்கியமே! மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!


//// வரதட்சனை என்பது பணம் மட்டுமல்ல. வீடு என்பது பெரும் தொகை. அடுத்து நகை. இதைக் கணக்கீட்டு பார்க்கும் போது, அதை வரிசை படுத்தினால், கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம், அடுத்து மற்றவை.///
தங்களின் பதிலுக்கு நன்றி!
*********************************************************************

அன்புச்சகோதரர்கள் : கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

////sabeer.abushahruk சொன்னது…

ஆயினும் மனைவியின் வருத்தத்தைக் காண முடிந்தது. ஏன், அழக்கூட செய்தாள். மன அழுத்தம் (depression) எனும் வேதனக்குள் தன்னைத்தானே சிக்க வைத்துக்கொண்டாள். (அந்த மன அழுத்தம் நான்காவதாய் மகன் ஷாருக் பிறந்தபின்னும் அவளைவிட்டுப் போகவில்லை)/////

மகள்களின் சிறந்த குணத்தால் பெறும் மகிழ்வாலும் வல்ல அல்லாஹ்வின் அருளாளலும் மனஅழுத்தத்திலிருந்து விரைவில் குணமடைவார். நானும் துஆச் செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

*********************************************************************

//// ஆனால், எனக்கும் உன்னைப்போலவே மூன்றாவதும் பெண்பிள்ளை என்றானதில் துளிகூட வருத்தம் இல்லை என்பதே உண்மை. அல்ஹம்துலில்லாஹ் தான்.////

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
*********************************************************************

/////அதே மூன்றாவது பெண்பிள்ளை நம்மோடு இந்நாட்களில் உறவாடும்போதுதான் அல்லாஹ் நமக்கு நன்மையையே நாடினான் என உணர்கிறோம். ////

நிச்சயம் உணர்வார்கள். உணர்ந்து கொள்வோம்.
*********************************************************************

/////பெண் என்றாலே தியாகத்தின் அடையாளம்தான். பெண்ணின் முழு வடிவான தாய்மையோ தியாகத்தின் உச்சகட்டம்.

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்
தாங்க முடியுமா? ////

உண்மைதான் தியாகத்தின் உண்மையான அடையாளம்தான் பெண்.

*********************************************************************

///// சகோதரியைத் துவங்கியிருக்கும் நீ பெண்ணைச் சகோதரி எனும் ஸ்தானத்தில் மட்டும் வைத்து இத்தொடரை சட்டென்று முடித்து விடாமல், சகோதரியாகவும், மகளாகவும், மனைவியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக தாயாகவும் சித்தரித்து எல்லா நல்லது கெட்டதுகளையும் அலசி ஆராய்ந்து மார்க்க ரீதியில் மொத்த பெண்ணினத்திற்குமான வழிகாட்டுதலாக இத்தொடரை நீட்டிக்க வேன்டுமென அன்புடன் உரிமையுடன் ஆணையிடுகிறேன்./////

உன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. சகோதரியில் தொடங்கி மனைவி, மகள், தாய்மை அனைத்தையும் ஒன்று விடாமல் தெளிவாக விளக்க இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்!

*********************************************************************

உன் கேள்விக்கான பதில் கீழே:(உண்மையிலேயே நான் ஈயடிச்சான் காப்பி அடிக்கிற கேரக்ட்டர் இல்லேப்பா. ஆனா. இப்ப இவ்வளவு தெளிவா பதில் சொல்றவங்களை எப்படி ஜெயிக்கிறதாம்?)
****************************************************

காப்பி பண்ணியதற்காக ஆறுதல் மார்க் உண்டு.

உன்னுடைய கருத்திற்கும்! வாழ்த்திற்கும் நன்றி!
ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் ஊரில் பெண் பிள்ளைகளை பெற்றிருப்பவர்கள் அவர்களை மணம் முடித்துக்கொடுக்கும் வரை படும் பாடுகளை பார்க்கும் பலர் அதையும் தாண்டி தெரிந்தோ, தெரியாமலோ கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தை உண்டாகி கடைசியில் பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து பிரசவ வலி எடுத்து பிள்ளை பிறக்கும் வரை திக்கு,திக்கு என்று நெஞ்சில் அடிக்க வைத்துவிடுகிறது பாழாய்ப்போன நம் ஊர் பழக்கமும், வழக்கமும்.

பாதிக்கப்படாதவரை எந்த மனசுக்கும் வலிக்கப்போவதில்லை. மெளத்தாப்போவாத வரை சக்கராத் ஹாலின் வேதனைகள் நம் யாருக்கும் விளங்கப்போவதில்லை.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

தமதமாகமிடும் கருத்திருக்கு சகோதரி அவர்கள் மன்னிக்கவும்...

\\தொழுகைக்குரிய சூராக்களை மனனம் செய்து வைத்துள்ளார். ஓதுவது, தொழுவது//

இவ்விடத்தில் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் இரண்டரை ஆண்டுகளேயான என் மகள் சூராக்களை ஓதுவது அதை போன் வழியாக கேட்கும் நிலை அருகில் இருந்தால் செல்ல மகளை அனைத்து கொஞ்ச முடியாததொரு கொடுமை (என்னை போல் தவிக்கும் வாப்பாமார்களுக்கும் இதே நிலைதான்)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

உங்கள் பெண் குழந்தைகளையும், நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், நரக நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதும் நமது கடமையாக இருக்கிறது. நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்: வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது.

பெண் குழந்தைகளை பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையை பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்'' என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலிலி) - முஸ்லிம் (5127)

அலாவுதீன்.S. said...

////அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது… இவ்விடத்தில் ஒன்று சொல்ல விரும்புகின்றேன் இரண்டரை ஆண்டுகளேயான என் மகள் சூராக்களை ஓதுவது அதை போன் வழியாக கேட்கும் நிலை அருகில் இருந்தால் செல்ல மகளை அனைத்து கொஞ்ச முடியாததொரு கொடுமை (என்னை போல் தவிக்கும் வாப்பாமார்களுக்கும் இதே நிலைதான்) ///

மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

******************************************
அன்புச்சகோதரர் இர்ஃபான் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தாங்கள் கருத்தில் குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும்: பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்ற அத்தியாயத்தில் முறையில் தெளிவாக விளக்கப்படும்.

தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அன்புடன் புகாரி said...

>>>>>>>>>கடற்கரை பகுதிகளில்தான் இந்த கேவலமான வரதட்சணை அதிகம் கேட்கும் பழக்கம் உள்ளது...உப்பு தின்றால் சொரணை வரும்...அந்த உப்பையே காற்றாக சுவாசிப்பதால் என்னவோ சொரணைபோய் ஆணின் முதுகெலும்பும் தேய்ந்துபோய் பெண்வீட்டில் பிச்சை எடுக்க வைக்கும் நிலையே உண்டாக்கி உள்ளது <<<<<<<<<<<<<<

சலாம் யாசிர்

அன்புடன் புகாரி

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு