Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-10 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 13, 2012 | , ,

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது மிகச் சரியான நபிமொழித் தொகுப்பான ‘ஸஹீஹ் அல் புகாரீ’ எனும் நூலின் 78 வது பிரிவை كتاب الأدب (நற்குணங்கள்) என்ற தலைப்பில் அமைத்து, அதன் உட்பிரிவாக,  و ما يكره منه باب ما يجوز من الشعر و الرجز و (கவிதை,யாப்புப் பாடல்,ஒட்டகப் பாட்டு ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்) என்றமைத்துள்ளது ஏன் தெரியுமா? அனுமதிக்கப்பட்ட கவிதை – நற்கவிதை நற்பண்பின்பால் பட்டதே என்ற உண்மையை உணர்த்துவதற்காகத்தான்.

அது ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு. மக்கத்துக் குறைஷிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிகழ்வுற்ற ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’யின்படி, நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் மக்காவிற்குள் عمرة القضاء எனும் வணக்கத்தை நிறைவேற்ற நுழைந்தபோது, நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் பாடிய,

فينا رسول الله يتلو كتابه
إذا انشق معروف من الفجر ساطع
أرانا الهداى بعد العمى فقلوبنا
به موقنآت أن ما قال واقع
يبيت يحافي  جنبه عن فراشه
إذا إستثقلت  بالمشركين المضاجع

இதன் தமிழ்க் கவியாக்கம்:

எம்மிடையே இறைத்தூதர் இருக்கின் றார்கள்!
இளங்காலை இறைவேதம் ஒது கின்றார்.
நிம்மதியாய்ப் படுக்கையிலே இணைவைப் பாளர்
நீளுறக்கம் கொளும்போதே எங்கள் தூதர்
தம்மிறையைத் தொழுகின்றார்! உண்மை சொல்லும்
தகையாளர் எனநாங்கள் நம்பு கின்றோம்!
கும்மிருளாம் வழிகேட்டில் இருந்த எம்மைக்
கூட்டிவந்து நேர்வழியைக் காட்டித் தந்தார்!

எனும் எழுச்சிப் பாடலைக் கேட்ட நபியவர்களின் நற்றவத் தோழரான உமர் (ரலி) அவர்கள், கவிஞர் இப்னு ரவாஹாவைக் கடிந்துகொண்டார்கள்! அப்போது நபியவர்கள் உமரைத் தடுத்து, “உமரே, அவர் பாடட்டும்; விட்டுவிடுங்கள்!  அம்பெய்வதைவிட இதுவே எதிரிகளுக்குக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள்.                                                                                                            
(சஹீஹுல் புகாரீ – 1155, 6151)            

மேற்கண்ட அறிவிப்பு, நபிமொழி அறிவிப்பாளர்களுள் முன்னணி வகிக்கும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி)அவர்களால்,அன்னாரின் சொற்பொழிவுகளுக்கிடையே மேற்கோள் காட்டப்பட்ட ஒன்றாகும்.  அண்ணலாரை விட்டு என்றுமே அகலாமல் இருந்து,அவர்களின் அருள்மொழிகளைத் தம் அகத்துள் பதிவு செய்துவந்தவர் அருமைத் தோழர் அபூஹுரைரா (ரலி) ஆவார்கள்.   அன்றிலிருந்தே கவிதைகளை மேற்கோள் காட்டும் மரபு, அரபி இஸ்லாமிய இலக்கியத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.  அரபி மட்டுமன்றி, உர்து போன்ற இலக்கியங்களிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகும்.  ஆனால், நம் தமிழுக்கு மட்டும் – கவிதைகள் ‘ஹராம்’ என்று முஸ்லிம்கள் சிலரால் பரப்பி விடப்பட்ட – இழுக்கான ஒன்றாகிவிட்டது!  அந்தோ பரிதாபம்!

கவிஞரும் நபியின் நற்றவத் தோழருமான அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் எழுச்சிக் கவிதை மக்கத்து நுழைவின்போது இன்னும் தொடர்ந்தது:

خلوا بني الكفار عن سبيله
اليوم نضربكم على تنزيله
ضربا يزيل ألهام عن مقيله
فيذهل الخليل عن خليله

இதன் தமிழ்க் கவியாக்கம்:

இறைமறுப்புக் குலத்தவரே!  விலகிச் செல்வீர்!
இன்றும்மோ டிறைவாக்கால் பொருத வந்தோம்!
உறைவாளின் வீச்சால்உம் தலைகள் வீழும்!
உறுநண்பர் நண்பர்க்கே உதவ மாட்டார்!

(சுனனுத் திர்மிதீ, சுனனுன் நஸாயி (2873), ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)


(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

16 Responses So Far:

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!!!
எத்தனை வலுவான, ஆதரங்கள் நல்ல கவிதைக்கு ஆதரவாக!

ஆய்வாளர் அதிரை அறிஞர் அஹ்மது காக்கா அவர்களின் தேடலின் நீட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது.

வாய்ப்பு கிடைத்தால் நமக்கு அல்லாஹ் கொடுத்த இந்த அறிஞரின் அடுத்திருந்து அனைத்தையும் கற்போமாக!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

Shameed said...

அஹ்மத் காகாவின் "கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை" என்ற கட்டுரை வராமல் இருந்து இருந்தால் நாங்களும் கவிதை ஹாராம் என்று தான் நினைத்திருப்போம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்லதை எடுத்துரைக்க, மனதை வென்றிட கதைபோல கவிதையும் ஒரு வித்தை, அதை பின்பற்ற நமக்கு ஒன்றும் தடையில்லை என்பதை ஆய்வறிஞர் தரும் ஆதாரங்கள் தொடர்ந்து உறுதிபடுத்துகின்றன.

ZAKIR HUSSAIN said...

இவ்வளவு ஆதாரங்களை ஆய்வு செய்து வெளியிடுவது உண்மையிலேயே பெரிய வேலைதான். இது போல் எல்லோராலும் செய்ய / எழுத முடியுமா என்பது சந்தேகமே.

Anonymous said...

அதிரை அஹ்மது காக்காவுடைய கவிதைகளும்,ஹதிஸ்களும் என் மனதை நிறைவடைய செய்தது. இதைபோல் எல்லோராலும் செய்ய முடியாத காரியம் இன்னும் இவர்களுடைய பணிகள் தொடரட்டும்.

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//ஆனால், நம் தமிழுக்கு மட்டும் – கவிதைகள் ‘ஹராம்’ என்று முஸ்லிம்கள் சிலரால் பரப்பி விடப்பட்ட – இழுக்கான ஒன்றாகிவிட்டது! அந்தோ பரிதாபம்!//
அவர்களுக்குக் கவிதை வராது என்பதனால் அதை ஹராம் ஆக்கிவிட்டார்களோ?
இதுபோல், தாங்கள் அறியாத, தெரியாத, புரியாத, மனதிற்கெட்டாத பல விஷயங்களை அவை ஹலாலாக இருந்தும் ஹராமாக்கிக் கொள்வதும், இன்னும் ஹராமானாவற்றை ஹலாலாக்கிக் கொள்வதும் மக்களின் அறியாமையாகும். அதனாலேயே, நீங்கள் (ஒன்றை) அறியாதவர்களாக இருப்பின் (அதுபற்றிய) அறிவை உடையவர்களிடன் கேளுங்கள் - فاسئلوا اهل الذكر ان كنتم لا تعلمون - அல்குர்ஆன்(16:43,21:7) என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே, எந்த ஒரு விஷயத்தையும், அதுபற்றிய தெளிவு இன்றி நாமே ஹராம் என்றும் ஹலால் கேள்விப்படுவதன் அடிப்படையில் என்றும் முடிவு செய்துவிடல் ஆகாது.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// உறைவாளின் வீச்சால்உம் தலைகள் வீழும்!
உறுநண்பர் நண்பர்க்கே உதவ மாட்டார்! //

வாளின் கூர்மை போல் தெளிவான விளக்கம்.
கூர்ந்து படிப்போர் விளங்காமல் இருக்க மாட்டார் !

அருமையான ஆய்வு நல்லாவே அசத்துறியே !

Ahamed Arif (Arabic Institute of Commerce) said...

//ஆனால், நம் தமிழுக்கு மட்டும் – கவிதைகள் ‘ஹராம்’ என்று முஸ்லிம்கள் சிலரால் பரப்பி விடப்பட்ட – இழுக்கான ஒன்றாகிவிட்டது! அந்தோ பரிதாபம்!//
அவர்களுக்குக் கவிதை வராது என்பதனால் அதை ஹராம் ஆக்கிவிட்டார்களோ?
இதுபோல், தாங்கள் அறியாத, தெரியாத, புரியாத, மனதிற்கெட்டாத பல விஷயங்களை அவை ஹலாலாக இருந்தும் ஹராமாக்கிக் கொள்வதும், இன்னும் ஹராமானாவற்றை ஹலாலாக்கிக் கொள்வதும் மக்களின் அறியாமையாகும். அதனாலேயே, நீங்கள் (ஒன்றை) அறியாதவர்களாக இருப்பின் (அதுபற்றிய) அறிவை உடையவர்களிடன் கேளுங்கள் - فاسئلوا اهل الذكر ان كنتم لا تعلمون - அல்குர்ஆன்(16:43,21:7) என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே, எந்த ஒரு விஷயத்தையும், அதுபற்றிய தெளிவு இன்றி நாமே ஹராம் என்றும் ஹலால் என்றும் கேள்விப்படுவதன் அடிப்படையில் முடிவு செய்துவிடல் ஆகாது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஒரு உண்மையைச் சொல்லட்டுமா !?

மரபுக் கவிதை என்றாலே மனதுக்குள் மர(ப்)பு போட்டு வைத்திருந்தவன் நான், ஆனால் அதிரை அறிஞர் அஹ்மது மாமா அவர்களின் விழி திறக்கும் ஆதாரங்களை முன்னிருந்த அவர்களின் மொழிபெயர்ப்பில் நபி கவிதைகளை வாசிக்கும்போது நிறைய மிஸ் பன்னிட்டோமேன்னு தோனுது.

Anonymous said...

அன்புடை நண்பர்களே!

தலைப்பிட்ட பதிவு அல்லாஹ் உதவியால் பத்து பகுதிகள் பதிவாகிவிட்டன.

ஒன்றாம் , இரண்டாம் பகுதிகள் வெளியிடப்படும்போது எதிர்ப்புக்குரல் எழுப்பிய நண்பர்கள் இப்போது புரிந்திருப்பார்கள் என நம்புகிறோம்.

அவ்வாறே ஆகட்டும். அடுத்த பகுதிகளும் வெளிவரட்டும் .இன்ஷா அல்லாஹ்.

எங்கோ படித்தது
கவிதை!

துயர் நீக்கிடும் தூய மருந்து.
புரிந்து கொண்டால் இதம்.
பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
நாமும் பகிர்ந்து கொள்வோம்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட இன்பம் இரட்டிப்பாகும் – பகிர்ந்துகொள்ளப்பட்ட துன்பம் பாதியாகும்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

அதிரை தாருத் தவ்ஹீத் said...

பதிவுக்குத் தொடர்புடைய பழைய ஆக்கமொன்று:

இங்குச் சொடுக்கிப் படிக்கலாம்-> இஸ்லாம் கவிதையை நிராகரிக்கின்றதா?

KALAM SHAICK ABDUL KADER said...

காய், காய், மா, மாச் சீர்களில் காய் நகர்த்தியதால் மரபுப்பாக்களை மடியில் கட்டி வைக்க வேண்டாமென்று விலகிச் சென்றோரையும் தங்களின் அருகில் ஈர்த்திட்டது “கவிதையின் தாக்கம்”; படிப்போர் எல்லாரையும் மரபுப்பா இலக்கணம் படிக்க வைக்கும் ஊக்கம்;ஆழ்கடலில் முத்தெடுப்பது போல் ஆய்வுக்கடலில் ஆதார முத்துக்களைக் கொணரும் ஆக்கம்.


எதிர்பார்த்தேன் இத்தருணம் வாய்க்கு மென்று
****இப்பொழுது வந்துவிட்ட நல்ல காலம்
புதிர்போட்ட புதுக்கவிதை வனையும் பலரும்
****புரிந்துகொண்ட பின்னூட்டம் கூறும் சான்று
அதிரையஹ்மத் காக்காவும் சொன்னா லதற்கு
****அழகான வரவேற்பு உண்டா மென்று
பதிவுகளாய்த் தொடர்ந்துள்ள வாழ்த்து களேகாண்
****பயிற்றுவிப்பீர் இலக்கணமும் அடுத்து ஈண்டு

ZAKIR HUSSAIN said...

இத்தனை பேர் எழுதும் பின்னூட்டங்களை சகோதரர் அஹமது அவர்கள் படிக்கிறார்களா?

Unknown said...

படிக்கிறேன்; படித்து மகிழ்கின்றேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Attractive wordings :

I am responsible for what I say. I am not responsible for what you understand.

KALAM SHAICK ABDUL KADER said...

எதிர்பார்த்தேன் இத்தருணம் வாய்க்கு மென்றிப் பொழுதுதானே வந்துவிட்ட நல்ல காலம்
புதிர்போட்ட புதுக்கவிதை வனையும் பலரும் புரிந்துகொண்ட பின்னூட்டம் கூறும் நேரம்
அதிரையஹ்மத் காக்காவும் சொன்னா லுடனே அன்பாக வரவேற்புக் கிட்டு மென்று
பதிவுகளாய்த் தொடர்ந்துள்ள வாழ்த்து களேகாண் பயிற்றுவிப்பீர் இலக்கணமும் தொடரா யீண்டு

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு