Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் அகல ரயில்பாதை - ஐந்தே வினாடிகளில் ! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 16, 2012 | , , ,


அப்ப ப்பா எத்தனை போராட்டங்கள், எத்தனை இழப்புகள், மன உளைச்சல்கள் இதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது....

இந்த கேடு கெட்ட அரசியல் மற்றும் அதிகார வர்க்கமும் ஏதோ ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு கபட நாடகமாடி நீண்ட நாட்களாக கிடைக்க வேண்டியதை கிடைக்க விடாமல் செய்து வருகின்றனர் சுயநல அரசியல் அதிகார வர்க்க கிருமிகள்.

இந்த தூரோகத்திற்கு சட்டரீதியான பாதிப்புகள் கண்டிப்பாக அவர்ளுக்கு கிடைக்கும் அதனை அனுபவித்தே தீருவார்கள்.

சின்னஞ்சிறுசுகள் பேச்சுவாக்கில் சொன்னது "இருக்கிற இருப்பு பாதையை அங்கிட்டாலேயும் இங்கிட்டாலேயும் இழுத்துப் போட்டுட்டு ரயில ஓட்டுங்கப்பான்னு".

அட! அப்படியே செய்தால் என்ன !?

கண்ணை மூடாம ஐந்தே வினாடிகள் பாருங்க...! இவ்வளவு ஈசியான வேலையை எவ்வளவு கஷ்டமா காட்டுறாய்ங்க !

சமீபத்திய புகைப்படம் : Sஹமீத்
-அதிரைநிருபர்-குழு


25 Responses So Far:

sabeer.abushahruk said...

எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்க அபு இபுறாகிம்? ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

இருந்தாலும் கம்பன் கைவிடப்பட்ட சோகம் ஆட்டிப்படைப்பது உண்மைதான்.

sabeer.abushahruk said...

அரசின் குறுகிய பார்வையால் அதிரையின் அகலப் பாதைக்கு பட்ஜட் ஒதுக்கமுடியவில்லை.

எழுதிக்கேட்டும் வரவில்லை; கேட்டுப்பார்த்தோம் தரவில்லை; முட்டிமோதியும் தட்டிக்கழிப்பவர்களிடம் இனி போரடித்தான் பெற வேண்டும்.

Adirai pasanga😎 said...

super ! . ஆனா ஏட்டு சுரைக்கவெல்லாம் கறிக்கு ஆகுமா ?
நீங்க வேற இத போட்டு காமிச்சு அவங்க மனச மாத்திடாதிங்க- அதான் நீங்களே அகலபாதை போட்டுடீங்களே என்று சொல்லிட போறாங்க

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"அகல ரயில் பாதெ போட்டுத்தர்ரோம்ண்டு சொல்லி கலிச்சல்ல ஓயிருவானுவொ இப்புடி நம்ம எல்லாரையும் ஏமாத்திப்புட்டு அவ்வொ அவ்வொ வயித்தெரிஞ்சி போயி கெடக்குறாஹெ....உங்களுக்கெல்லாம் பெளமானமா ஈக்கிதாண்டு யாரும் கேட்டுப்புடப்போறாஹ....பாத்துக்கிடுங்க......"

Shameed said...

உலகில் உள்ள வல்லரசு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாம் !
உலக பணக்காரர்களின் அதிகமானவர்கள் இந்தியாவாம் !
உலகில் அதிக வேலை ஆட்களை கொண்ட துறை நம் ரயில்வே துறையாம் !

இத்தனை இருந்தும் காரைக்குடி டு திருவாரூர் ரோட்டை அகலப்படுத்த ஏன் இத்தனை தாமதமும் பிச்சக்காரத்தனமும்

Shameed said...

ஆகா ரோட்டை இப்படியோ அகட்டிக்கிட்டு போனா ஒரு ட்ராக் கொழும்புக்கு போய்ட போகுது !

ZAKIR HUSSAIN said...

இந்த கிராஃபிக்கில் ரயில் வந்தால் அதிராம்பட்டினம் எல்லா நியூஸ் பேப்பருக்கும் தலைப்பு செய்தியாகும். அப்போது கூட யாரும் "தார்மீக" பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்கள்.

திருவாரூர் - காரைக்குடி வழித்தடங்களின் ஊரில் வாழும் அனைவரும் ஏதாவது "பொட்டுல அடிச்ச மாதிரி" ஏதாவது செய்தால்தான் இதற்கு விடிவுகாலம் பிறக்கும். இல்லாவிட்டால் இப்படி ஏதாவது கிராஃபிக்கில் சந்தோசப்படவைத்து விடுவார்கள். சினிமாவில் வரும் கதாநாயகியை விட அதிகம் ரயிலுக்கு காத்து கிடந்தது நம் ஊர் மக்கள்தான் என நினைக்கிறேன்.

Saleem said...

பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் ரயில் பாதை புதிதாக அமைக்க அனைத்து சமுதாய மற்றும் இயக்கங்கள் சார்பாக 19 - ம் தேதி அன்று பட்டுக்கோட்டையில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறுகிறது. அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி இன்று பட்டுக்கோட்டை மணிகூண்டு பள்ளியில் ஜும் ஆ தொழுகைக்குப்பின் அறிவிப்பு செய்தார்கள்.அதே போன்று நம் ஊரிலும் திருவாரூர் வரை அகல ரயில் பாதைக்கு அணைத்து இயக்கங்கள்,கட்சிகள் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்தலாமே?!!

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரையில் அகல ரயில் பாதைக்கு தொடர்ந்த மறுப்பு இந்த இனத்தின்மீது தொடர்ந்துவிடப்படும் சவால்.

திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைவரை நிறைய இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பது இந்த அரசுகளுக்கு தெரியும்.

இதனால்தான் இந்த அலட்சியம்.

இருப்பவன் தராவிட்டால் இல்லாதவன் விடக்கூடாது.

இவ்வளவும் எழுதிவிட்டு தம்பி அபூ இப்ராஹீமை பாராட்டாவிட்டால் எப்படி.? பிடியுங்கள் இரு கைகள் நிறைய. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

இப்ராஹீம் அன்சாரி

Noor Mohamed said...

நமதூர் அதிராம்பட்டினத்தில் 01/04/1938 ல் இரயில்வே ஸ்டேஷன் ஆரம்பிக்கப்பட்டது. அதவாது வெள்ளையர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு, கொள்ளையர் ஆட்சியில் மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கம்பனை கடத்திகிட்டு போயிட்டானுங்களேன்னு வருத்தமிருக்கும் நம்மவர்களுக்கு ஏதோ அனுப்பியிருக்காங்கன்னு நினைத்துதான் Sஹமீத் காக்கா அவர்களின் மின்னஞ்சலை திறந்தேன்... ஆனால், அங்கே நேர் கண்ட இரும்பு பாதையோ சரி புதுசாதான் விறிச்சி போட்டுட்டாங்கன்னு நினைத்து சந்தோஷமா வேற எங்கேனும் தகவல் இருக்கான்னு வலை மேய்ச்சலில் இருக்கும்போது.

சட்டென்று இப்படியும் தோனிச்சு "என்னடா, Sஹமீத் காக்கா நம்மல ரயில் வாங்கி விடச் சொல்லி ரோடு அனுப்பிருப்பதுபோல் தெரியுதே" என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் சாட்டிங் அழைப்பில் வந்து "என்ன ஆச்சு ஒரு ரூட்டு அனுப்பினேனே" என்றார்கள்

நானும் "சரிதான் என்ன காக்கா இந்த நேரத்துல அனுப்பியிருக்கீங்க இப்போ கையில காசு இல்லையே, நம்மால இப்போ ரயிலெல்லாம் வாங்கி விட முடியாது அப்படி முடிந்திருந்தால் நாம் ஏன் இங்கே வந்து இருக்கோம்"னு ஏதோ நெனப்புல சொல்லிட்டேனா...

அதுக்கு அவங்களும் "ஏதோ கடன ஒடன வாங்கி உடுங்க... அப்பதான் நம்ம ஆளுங்க அடுத்தடுத்து நிறைய ரயில் வாங்கி உடுவாங்க அதுதானே வழக்கம் நம்மவங்க கிட்டேன்னு" சொன்னதும்...

நானும் சரி காக்கா நான் வேனும்னா இந்த இரும்பு பாதைய அகலப்படுத்தி வைக்கிறேன் நீங்களோ இல்லா மலேஷியாவுலேருந்து (தொழில் அதிரபர்) கூட வந்து இரயில் விடலாம் என்று சொல்லிட்டு வேலைய மும்முர ஆரம்பித்தேன்

என்ன 7 நிமிடத்தில் முடிந்த வேலைங்க இது ! :)

கருத்திட்டவங்க அனைவரும்.... நல்லாவே சொல்லிட்டீங்க, ஆனால் எப்போ ரயில் வாங்கி விடப் போறிங்கன்னு ஒருத்தர் கூட சொல்லவேயில்லையே....

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்
குறைந்த பட்சம் திருவாரூர் to பட்டுக்கோட்டை வரையிலாவது முதலில் அகல ரயில் பாதை பணி துவங்க கோரி நம் பகுதி அனைவரும் கட்சி, இயக்கம் மற்றும் அமைப்பு வேறுபாடின்றி ஒருங்கிணைந்து ஒரு சரியான முடிவு காண வேண்டும்.இதற்கு நமது aamf தலைமையில் இதுவரை இதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் MST காக்கா, அப்துல் ரசாக் காக்கா, jafar காக்கா போன்றோர் துணையுடன் ஆலோசனை கலந்து தக்க முடிவெடுத்து ஒரு சரியான முயற்சி காண வேண்டும் - இதற்கு அனைவரும் ஒத்துழைப்பது அவசியமாகும்.

Unknown said...

இந்த படத்தையும் ,பின்னூட்டத்தையும் MLA ,MP ,RailwayMinister ஆகியோருக்கு

ஈமெயில் அனுப்பிவிடனும் .அப்பவாவது (தல ) மண்டைகளுக்கு எதாவது தோணும் .

goodwork :)

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இந்த திட்டத்தை!!!! யாராவது ரயில்வே துறைக்கு அனுப்பி வைத்தால் நல்லது.

KALAM SHAICK ABDUL KADER said...

//அரசின் குறுகிய பார்வையால் அதிரையின் அகலப் பாதைக்கு பட்ஜட் ஒதுக்கமுடியவில்லை.//

கவிவேந்தர் சபீர் அவர்களின் இவ்வரிகளும்,

//திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைவரை நிறைய இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பது இந்த அரசுகளுக்கு தெரியும்.

இதனால்தான் இந்த அலட்சியம்.//

பொருளாதார வல்லுநர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் இவ்வரிகளும் உண்மையிலும் உண்மை!!

தமிழகத்தைச் சார்ந்த அமைச்சர்கள் நடுவண் அரசில் “இரயில்வே துறையில்” இல்லாமற் ஆகி விட்ட போதே நாம் புறக்கணிக்கப்படுவோம் என்று உறுதியாகி விட்டது! சென்ற மாதம் செய்திகளில் அடிபட்டது, “கம்பன் எக்ஸ்ப்ரஸ் அகல பாதைக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது”என்று; இம்மாதம் பட்ஜெட்டில் கம்பனைக் கைவிட்டு விட்டதாகச் செய்தியினை எட்டியதும் எவ்வளவு ஏமாற்றம்; மன உளைச்சல்கள்; சகோதரர் MSM அவர்கள் பாணியில் எழுதப்பட்டுள்ள சாபம் தான் கிடைக்கும் இவ்வாறு “வரும் ஆனால் வராது” என்று ஏமாற்றியவர்கட்கு.

ஆறுதலாக, இந்த கிராஃபிக்ஸ் பார்த்துக் கொண்டே கால கடத்துவோமா?
அல்லது தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவோமா?

நெறியாளர் அவர்களைக் கண்டும், பேசியும், கருத்துக்களைப் படித்தும் அடியேன் கணித்து வைத்துள்ளக் கணிப்பு உண்மையென இந்த கிராஃபிக்ஸ் கண்டதும் மேலும் உறுதியாகி விட்டது.

அபூஇப்றாஹிம் அவர்களைப் பற்றிய என் கணிப்பு” “நகைச்சுவை மன்னன்”

Kavianban KALAM, Adirampattinam said...

//அகல ரயில் பாதையும், அயராத முயற்சியும் !
எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே ! சென்னையிலிருந்து அதிரை செல்ல அகல ரயில் பாதை சம்பந்தமாக தொடர்ந்தாற்போல் முயற்சிகள் பல செய்து வருகின்றோம். லாலு,வேலு , அஹமத் , ப சிதம்பரம் , முனியப்பா போன்ற மந்திரிகளை சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்து வந்தோம். குறிப்பிட்டு சொல்லும்படி எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழ் நிலையில் , கடந்த ஒரு மாதத்திற்கு முன் மாண்புமிகு உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்தை காரைக்குடி சென்று சந்தித்தோம். அவர் எங்களுக்கு கொடுத்த அவகாசம் 1 .1 / 2 நிமிடம் மட்டுமே !
அவரை சந்திக்க ஹாஜி M .S தாஜுதீன் , S . M அஸ்லம் ( காதர் மொஹிதீன் கல்லூரி தாளாளர் ),S .H . அஸ்லம் அதிரை பேரூராட்சி தலைவர்,மற்றும் A அப்துல் ரஜாக் ஆகியோர் சென்று வந்தோம். அவர் கொடுத்த கால அவாகசத்தை கணக்கில் எடுத்து கொண்டால் , அந்த சந்திப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக தோன்றியது. என்ன ஆச்சரியம் ! அல்லாஹ்வின் உதவி கொண்டு , சந்தித்த அடுத்த வாரமே , ரயில் துறை அமைச்சருக்கு , திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக உடனடியாக வேலைகளை தொடரும்படி பரிந்துரை செய்து ஒரு மடல் அனுப்பியதோடு , அதன் நகலையும் ARUDA அமைப்பிற்கு அனுப்பிருந்தார். ரூ 505 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாய்ன. THE HINDU நாளிதழில் திருவாரூர் காரைக்குடி சம்பந்தமாக செய்திகள் வர ஆவணம் செய்தோம். இதற்கும் காரணம் உண்டு , இது சம்பந்த செய்திகளை அத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்ட செல்லவும் ஒரு வழி வகுத்தது.
கடந்த வாரம் ஹாஜி M S தாஜுதீன் அவர்கள் டெல்லி சென்று முயற்சி செய்தால் நன்மையாக அமைய வாய்ப்புள்ளது என்ற கருத்தை சொன்னார்கள். அதன்படி , நாங்கள் டெல்லி புறப்பட்டு சென்றோம். ஹாஜி அப்துல் ரஹ்மான் M P
அவர்கள் சற்றும் சளைக்காமல் எங்களுடன் உடன் வந்து , மாண்பு மிகு இணை அமைச்சர் முனியப்பா அவர்களிடம் , காரைக்குடி பட்டுகோட்டை வரையிலான வேலைகளை தொடர்வர்திற்கு பதிலாக , திருவாரூர் பட்டுக்கோட்டை வேலைகளை ஆரம்பிக்கும்படி தீர்க்கமாக கோரிக்கை வைத்தார். அமைச்சர் அவர்களும் கவனத்துடன் கோரிக்கைய கேட்டதோடு , வரும் வாரங்களில் அதிகாரிகளுடன் பேசி , திருவாரூர் பட்டுகோட்டை அகல பாதை சம்பந்தமாக வேலைகளை ஆரம்பிக்க ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார். மேலும் ரயில்வே துறை மூத்த அதிகாரிகளையும் சந்தித்து நமது கோரிக்கையை முன் வைத்தோம். அந்த அதிகாரியும் நிச்சயமாக அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தது , மன நிறைவை கொடுத்தது. இன்ஷா அல்லாஹ் ! நமது நீண்ட கால தேவையான சென்னை காரைக்குடி கம்பன் எக்ஸ்பிரஸ் இன்னும் 2 வருடத்தில் தொடங்கும் என்ற நம்பிக்கை துளிர்விட்டருக்கிறது . கம்பன் ஏமாந்தான் என்ற சொல் நீங்கி , கம்பன் வந்தான் , என்ற சொல்லும் செயலும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அகல ரயில் பாதை சம்பந்தமாக அயராரது முயற்சி செய்து வரும் ஜனாப் ஜாபர் காக்கா அவர்களுக்கு துவா செய்யவும். மேலும் ஜனாப் அப்துல் ரஹ்மான் M P அவர்களை தொடபுகொண்டு நம் நன்றியினை தெரிய படுத்தவும். இச்செயல் அவரை மேலும் ஆர்வ படுத்தும் .
உங்கள்
அப்துல் ரஜாக் //

நன்றி:
1)அதிரை எக்ஸ்பிரஸ்
2)அதிரை பிபிசி

கம்பன் அதிரைக்குக் கட்டாயம் ஓடிவர
நம்புவோம் நன்றி நினைத்து

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பூகம்பம் மாதிரி பயமாயிருக்கு!

இது மாதிரி இறைவனின் கோபப் பார்வை நம்மை சதி செய்பவர்களை அடையட்டும்.

அதிரையில் கம்பன் நுழையும் வரை, வாக்களித்து விட்டு வாக்குகளைப் பெற்று வென்ற நம்பகுதி MLA & MP இவர்களை அதிரையில் நுழைய தடை விதிக்க வேண்டும்.

அதுவரை அதிரையர்கள் ஒன்றிணைந்து அமைதி வழியில் போராட்டங்களைத் தொடர்ந்திட வேண்டும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

முடிந்தால் மம்தாவை பார்த்தும்,இத் தருணத்தில் நாம் கோரிக்கை வைத்தால்?சான்ஸ் உண்டுதானே???

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

வக்கட்ற்ற ஆட்ச்சியாளர்களால் வஞ்சிக்கப் படும்.திருவாரூர் டு காரைக்குடி வழி தடத்தை தக்கவைக்க போராட்டம் என்னும் சம்மட்டியால் அரசின் செவுள்களை தட்டிக் கொண்டே இருப்போம்.

குறுகிய மனம் படைத்த குள்ள நரிகளுக்கு. அகண்டு போகும் தண்டவாளத்தைஅனுப்பிவையுங்க.மனங்கள் அகளுதாண்டு பாப்போம்!

அப்துல்மாலிக் said...

இந்த விசயத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக முயற்சி செய்வது நினைத்து சந்தோஷம், அல்லாஹ் இந்த கூட்டு முயற்சிக்கு நல்ல பலன் தருவான், இன்ஷா அல்லாஹ்

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

ஐந்தே நிமிடத்தில் ஐந்து வரியில் ஐந்தே நொடியில் (நம்மூருக்கு தடம் அமைக்க) சிந்திக்க தவறிய ஐந்தறிவு (அரசியல்) ம(மாங்கா)டையர்களை சொன்ன விதம் நலமே சகோ. அபுஇப்ராகிம்

ரயில்கள் வர போகிறது நமக்கெல்லாம் சந்தோஷம் என்று பேசிக்கொண்டது தண்டவளங்கள்
சந்தோஷத்தில் தாமும் பங்கு கேட்டது ரயில் நிலையம்,
என்னை தனியே விட்டு தாங்கள் மட்டும் சந்தோஷப்படுவதா? என்றது ரயில் நிலையத்திற்கு செல்லும் வழிகள்...

புன்னகையுடன் சிரித்து கனவுகானதிர்கள் என்றது அதிரை தென்றல்

தலைத்தனையன் said...

Assalamu alaikkum. (Abul Kalam) Machaan, what is the contact address or e-mail or phone # of Janab ABDUL RAHMAN MP?

MOHAMED THAMEEM

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Thameem,
Wa alaikkum salaam,

I got only the following link from face book information about brother Abdurrahman M.P. Insha Allaah, I will collect more information such as mobile number and email id thru his brother-in-law who is in Dubai and let you know later.


தொடர்பு விபரம்
இணையத்தளம்

http://www.abdulrahman.in

Yasir said...

குசும்புக்கு பெயர் நீங்கதானா காக்கா...நல்லதா போச்சு இரயில் ஒடிக்கிட்டு இருக்கும்போது தண்டவாளத்தை அகற்றாமல் இருந்தீங்களே....எல்லாம் வண்டவாளம் ஏறி இருக்கும்

KALAM SHAICK ABDUL KADER said...

Dear Thameem

Mobile number to contact Janab Abdurrahman M.P

0091-9442178655

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு