உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (1)
“ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா?
மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். காரணம், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி இருந்திருப்பின், அல்லது ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்பது முக்கியமான ஒரு செய்தியாக இருந்திருப்பின், அதனை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே அறிவித்திருப்பான். எனவே, இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது அந்த அறிஞர்களது கூற்று.
அவர்களின் கூற்றுப்படி இக்கேள்வி தேவையற்றதாக இருந்தாலும், இறைவனின் பிரதிநிதியாகத் திகழும் மனித குலத்தின் வரலாற்றை ஆராயும் வகையில் இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.
ஏனெனில், மனிதன் ‘குரங்கில் இருந்து தோன்றினான் என்று டார்வின் போன்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனையே, எல்லாப் பாடப் புத்தகங்களிலும் போதிக்கின்றனர். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நம் குழந்தைகளும் அதனையே கற்கின்றனர். குரங்கிலிருந்து தோன்றிய கதை ஒரு புறமிருக்க, இப்போது, ‘மனிதன் எலியில் இருந்து தோன்றினான்’ என்றுகூடக் கூற ஆரம்பித்துள்ளனர். பார்க்க: http://nikalvu.com/postid272/
அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனோ, மனிதனைப் படைக்கும் முன்னர், அந்த வல்லமை மிக்க படைப்பாளன், மனிதப் படைப்பை வானவர்களிடம் அறிவித்தது பற்றி இவ்வாறு விவரிக்கின்றது:
وَإِذْ قَالَ
رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا
أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ
بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ [البقرة: 30].
“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் ஓரு பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால் துதிக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.” (அல்குர்ஆன், 2-30)
وَعَلَّمَ آدَمَُ الأَسْمَاءَ
كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ
أَنْبِئُوْنِيْ بِأَسْمَاءِ هؤُلاَءِ إِنْ كُنْتُمْ صَادِقِيْنَ ( 31 ) قَالُوْا سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ
الْحَكِيْمُ
(
32 ) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ
قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّيْ أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضَ
وَأَعْلَمُ مَا
تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ
تَكْتُمُوْنَ ( 33 ) (البقرة:31-33)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.”
(அல்குர்ஆன், 2-31,32,33)
அல்லாஹ் முதல் மனிதராகிய ஆதமுக்கு அனைத்துப் படைப்பினங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தைப் படைப்பினங்கள் பற்றிய அறிவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும் என்று அருள்மறை ஆய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.
வல்ல இறைவன் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் படைப்புகள் பற்றிய அறிவை அளித்ததுடன், அவர்களின் இனமாகிய மனித இனத்தின் உருவத்தையும் உடல் அமைப்பையும் மற்ற அனைத்துப் படைப்புகளை விட மிக அழகானவையாக ஆக்கி வைத்தான். அல்லாஹ்வின் அருள்மறை,
وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ
“உங்களுக்கு உருவம் அளித்தான். இன்னும், அந்த உருவத்தை மிக அழகானதாக ஆக்கினான்” (அல்குர்ஆன்-64:4) என்றும்,
لَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْمٍ
“இன்னும் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் நாம் படைத்தோம்” (அல்குர்ஆன்-95:4) என்றும் மனிதனின் தோற்றத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது.
இப்படியெல்லாம், அல்குர்ஆன் மனிதனின் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்க, டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல், மனிதன் குரங்கிலிருந்தும் எலியில் இருந்தும் தோன்றியிருப்பின், முதல் மனிதனின் ஆரம்ப மொழி கீச், கீச்சென்று கத்தும் குரங்கின் மொழியா? அல்லது சிக் சிக்கென்று கத்தும் எலியின் மொழியா? என்ற கேள்வியும் எழுகின்றது.
நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்தக் கருத்து, மனிதனின் தோற்றத்தைப் பற்றி அல்குர்ஆன் கூறும் கருத்துகளுக்கு மாற்றமாக உள்ளது. குர்ஆனுடைய அறிவைக் கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: طلب العلم فريضة على كل مسلم – “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.” (பைஹகீ)
கடமையான ஒன்றை நிறைவேற்ற உதவும் மற்றொன்றும் கடமைதான். அதன்படி, கடமையான அறிவைப் புரிந்து கொள்ளவும் நிலை நாட்டவும் உதவும் பிற அறிவுகளை அறிந்துகொள்வதும் கடமையாகும்.
எனவே, இந்த அடிப்படையில், முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்று ஆராய்வதும் தேவையான ஒரு கேள்வியாகத்தான் உள்ளது.
இக்கேள்வியை, மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் துவக்கத்தை அல்குர்ஆனின் அடிப்படையில் விளங்கும் நோக்கத்திலும், மனிதன் குரங்கு அல்லது எலியிலிருந்து தோன்றி இருப்பான் எனும் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துகள் தவறானவை என்று விளங்கிக் கொள்ளும் நோக்கத்திலும் நாம் ஆராய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருத்து. பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
اِنَّمَا الاَعْمَالُ بِالنِّيَّاتِ
“செயல்கள் அனைத்தும் அவற்றின் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.”
– புகாரி, முஸ்லிம்
- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-60092.
38 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பான ஆரிப் காக்கா, ஜஸாக்கல்லாஹ் ஹைரன்...
ஆதம் அலை அவர்கள் பேசிய மொழி என்னவென்று அறிய ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.
நபி (ஸல்)அவர்கள் கூறியது போல் “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.” (பைஹகீ), அல்லாஹ்வின் படைப்புகளை பற்றிய அறிவை தேடுவது நாம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர முடிகிறது.
மேலும் அறிய பல தகவல்களை அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ்..
வருக சகோதரர் ஆரிஃப் அவர்களே,
தங்களின் இந்த ஆராய்ச்சித் தொடருக்கு வாழ்த்துகளும் துஆவும்.
அறிவிப்பு: "இன்று முதல் 'அதிரை நிருபர்' தளம் 'அதிரை நிருபர் PhD' என அழைக்கப்படவேண்டுமாய் முன்மொழிகிறேன்.
காரணங்கள்: அஹ்மது காக்காவின் / அலாவுதீனின் ஆராய்ச்சித் தொடர்கள், ஜமீல் காக்காவின் மொழியறிவு போதனைகள், இ.அன்சாரி காக்காவின் பொருளாதார எம் ஃபில் தரத்திலான கட்டுரைகள், ஜாகிரின் மனவள படிக்கட்டுகள், போதுமா?
இன்று யுனிகோடில் எழுதப்படும், எழுதி வாசிக்கப்படும் இதே தமிழ்தான் 'ஆதி'யின் மொழியா என்ற கேள்வி யோடு பயணிக்க இருக்கும் இந்த தொடர் நிறை விடயங்களை வெளிக் கொண்டுவரும் என்ற ஆவலில் காத்திருக்கிறோம்...
MSM(n): கேள்வியை கேட்டு வச்சுடுறோம்... ஆனால் இந்த வேலைப் பளு இருக்கே அது அழுத்துற அழுத்தத்தால் இந்தப் பக்கம் வரவே விட மாட்டேங்குது... அங்கே எப்படி !? உங்களின் வேண்டுகோளுக்கு முத்தாய்ப்பாக துவங்கியிருக்கும் ஆராய்சித் தொடர் வாருங்கள் சீக்கிரம் இந்தப் பக்கம் !
//'அதிரை நிருபர் PhD'// நூ.மு. காக்காவின் அறிவுத்தலின் படி இஸ்லாமிய நெறிக்குட்பட்டு எழுதப்பட்டதை எடுத்தாய்வு செய்து பெறும் பட்டம் நிலைத்து பேசப்படும் அதுவே அடுத்த வரலாறாக போற்றப்படும் என்பதே... யார் கட்டுவதை மணியை !?
அறிவியலும் வரலாறும் இணைந்த அவசியமான கட்டுரைதொடர்!
இந்த ஆராய்ச்சித் தொடருக்கு வாழ்த்துகளும் துஆவும்.
ரிசல்ட் தமிழாக இருக்க சின்ன ஆசை!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோ. ஆரிஃப்,
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً எனும் இறைவசனத்திற்கு
‘நான் இப்பூமியில் என் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை. மேலும் இறைவசன மூலத்தில் "என்" இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அல்லாஹ் கூறாத ஒன்றை அவன் கூறுவதாகக் கூறுதல் சரியா?
என் கருத்தில் தவறிருப்பின் உரிய வகையில் திருத்துக!
இதை ஆய்வுக்காகவும் நாம் தமிழ் பேசும் மனிதர்களாக இருப்பதால் ஒரு ஒற்றுமையான விசயங்களுல் ஒன்றாக எடுத்துக்கொண்டாலும், இறை சார்ந்த விசயங்களுல் இவை எல்லாம் அடையாளமே தவிர இணைப்பின் அஸ்திவாரமோ ஆதோரமோ அல்ல.
மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. இதை உணர்வது எல்லோருடைய கடமையாக நான் கருதுகிறேன். நான் எழுதுவது சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.."உணர்ந்தால்"...நிச்சயம் மனதுக்குள் ஆனந்தமே மிஞ்சும்
முன்பு ஒரு கட்டுரையில் விளங்கியவர்கள் விளக்கமளிக்க வேண்டிக்கொண்ட என்னுடைய ஒரு கேள்விக்கு பதிலை ஒரு சிறப்பான ஆய்வுக்கட்டுரையின் மூலம் ஹதீஸ்களை மேற்கோள்காட்டி சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்கள் இங்கு தந்திருப்பது அழகுடன் கூடிய அருமை.
இக்கட்டுரையின் ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைக்கிறது. "ஆதம் அலைஹி...அவர்கள் பேசிய மொழியைப்பற்றியும் அதன் சிறப்புகள் மற்றும் கற்றுக்கொடுத்த விதம் பற்றியும் அவசியம் இருந்திருந்தால் அல்லாஹ்வே அல்குர்'ஆனில் அழகுர விளக்கியிருப்பானே?" என்பதனால் இது பற்றிய ஆராய்ச்சியும், அதனால் வரும் கால விரயமும் தேவையில்லா விடயத்தில் அவசியம் செய்து தான் ஆக வேண்டுமா? என எனக்குள் கேட்டுக்கொண்டேன்.
சாதாரன மனிதனாய் உள்ளத்திற்குள் எழும் இன்னும் சில கேள்விகள். அவர்கள் வானிலிருந்து இப்பூமிக்கு இறக்கப்பட்ட இடம் இன்றைய அரபு நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியிலா? அல்லது வேறு ஏதேனும் பகுதியிலா? அவர்களுக்கும், ஹவ்வா அலைஹி...அவர்களுக்கும் பிறந்த உலகின் முதல் பிள்ளை யார்? அவர்களின் பெயர் என்ன? இவைகள் பற்றி நம் திருக்குர்'ஆனில் என்ன சொல்லப்பட்டுள்ளது? விளக்கமுடன் அறியத்தந்தால் விளங்கிக்கொள்ள விருப்பம்.
அப்துர் ரஹீம் அவர்கள் தங்கள் "இஸ்லாமிய தமிழ் கலைக் களஞ்சியம்"என்ற நூலில் ஆதம் நபி அவர்கள் தமிழ் பேசியிருக்க வாய்ப்புண்டு என்றும்,ஆதம் என்ற சொல் மூலம் ஆதி என்ற வார்த்தை வந்தது என்றும்,அவர்கள் இலங்கையின் ஒரு இடத்தில்தான் வானத்திலிருந்து இறங்கினார்கள் என்றும்,அவர்கள் தங்கள் மறை உறுப்பை மறைக்க செடி கொடிகளை வைத்து மறைத்து இருந்தார்கள் என்றும்,அந்த செடியே மல்லிகைப் பூ செடி என்றும்,மேலும் அவர்கள் மூத்த புதல்வர்கள் ஹாபில்-காபில் ராமேஸ்வரத்தில் அடங்கியுள்ளதாகவும்,அவர்கள் கபுர் அளவு அறுபது அடிக்கும் நீளமுள்ளது என்றும் இன்னும் நிறைய .....................எழுதியுள்ளார்கள்.இது அனைத்தும் கற்பனையும்,செவி வழி செய்தியும்,ஆதாரம் இல்லாததும் ஆகும்.இந்த செய்திகள் குறித்து நம் உயிரினும் மேலான அல் குரானும்,ஹதீசும் ஒன்றும் சொல்லாதிருக்க - செவி வழி செய்தி வைத்துக்கொண்டு இவ்வாறு நம்புவது,அல்லாஹ் நம்மைக் காப்பானாக,மிக மிக எச்சரிக்கை.
//மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. //
வைர வரிகள்
//மொழி , இனம், பிறந்த பூமி, மண்...சேர், என்றெல்லாம் உரிமை கொண்டாட இஸ்லாத்தில் இடமிருப்பதாக தெரியவில்லை. இறைவனுக்கும் அவன் படைத்த உயிரனங்களான நமக்கும் இருக்கும் உறவு எல்லாவற்றையும் கடந்தது. இதை உணர்வது எல்லோருடைய கடமையாக நான் கருதுகிறேன்// VERY GOOD ZAKIR. I SECOND YOUR VIEWS.
பதிவுகள் ஒவ்வொன்றும் புதியதை கற்றுத்தருகின்றன.. கற்பித்தலும் கற்பதுவே, நிறைய கற்க ஆசை, இன்ஷா அல்லாஹ்
சகோ.ஆரிஃப் அவர்களே முதலில் உங்கள் தொடருக்கு வாழ்த்துக்கள்.... ஒரு கடினமான வேலையை கையில் எடுத்து இருக்கின்றீர்கள்..அல்லாஹ் உங்களுக்கு விசாலமான அறிவைக்கொடுத்து இத்தொடரை வெற்றியாக முடிக்க துவாச்செய்கிறேன்..தொடர்ந்து எழுதுங்கள்...இது ஒரு சிறந்த தொடராக வரும் என்பதில் ஐயமில்லை...
அறிவை அறிந்து கொள்வதற்க்கும்,தெரிந்து வைத்துக்கொள்வதற்க்கும் அளவீடு என்று ஒன்றும் இல்லை...வரலாற்றை தெரிந்து கொள்வது மனிதாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை
இறைவன் குர்ஆனில் சொல்லாத எத்தனையோ விசயங்களை நாம் ஆராய்ந்துகொண்டும் பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.....அவையாவும் இஸ்லாமிய அடிப்படை வரையறை என்ற வட்டத்திற்க்குள் வந்துவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்கமாட்டான்......சிந்திக்கக்கூடிய மக்களுக்குதான் அல்லாஹ் பல அத்தாட்சிக்களையும்,ஆதாரங்களையும் உண்டாக்கி வைத்துஇருக்கின்றான் அதனை நம் மூளையை பயன்படுத்தி.. ஆய்வு செய்து கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியதுதான்
அவ்வப்போது பலருக்கு எழும் கேள்விகளுக்கு சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில் அவர்களின் இந்த ஆக்கம் வழி கிடைக்கும் பதில்களை கொண்டு மனம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
//இறைவன் குர்ஆனில் சொல்லாத எத்தனையோ விசயங்களை நாம் ஆராய்ந்துகொண்டும் பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.....அவையாவும் இஸ்லாமிய அடிப்படை வரையறை என்ற வட்டத்திற்க்குள் வந்துவிட்டால் அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்கமாட்டான்......சிந்திக்கக்கூடிய மக்களுக்குதான் அல்லாஹ் பல அத்தாட்சிக்களையும்,ஆதாரங்களையும் உண்டாக்கி வைத்துஇருக்கின்றான் அதனை நம் மூளையை பயன்படுத்தி.. ஆய்வு செய்து கண்டுபிடித்துக்கொள்ளவேண்டியதுதான்//
இன்றைய கல்வி வழி முறையை அழகாக சொல்கிறார் தம்பி யாசிர்.
ஆங்கிலேயர் வகுத்துத் தந்த இன்றைய கல்வியைக் கற்றுக் கொள்ள, ஊர் கடந்து, நாடு கடந்து கற்கின்றோம். ஆய்வு செய்கின்றோம். இக்காலத்தில் நாம் தேடித் திரிந்து கற்கும் கல்வியிலும் ஆய்விலும் இஸ்லாத்திற்கு வேறுபட்ட மாறுபட்ட பல உள. நாம் இவைகளை சிந்திப்பதே இல்லை. பட்டம் பெறுவதையும் பணம் ஈட்டுவதையுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். அமரிக்கா சென்று பட்டம் பெற்றால் அதற்கென்று ஒரு தனித் தகுதி. இங்கிலாந்து சென்று பட்டம் பெற்றால், இந்தியாவில் படித்ததை விட உயர்வான பட்டம். அதுமட்டுமா? ஊரில் இமாம் ஷாஃபி பள்ளியில் படிப்பதைவிட, சென்னை ட்டான்பாஸ் ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளே சிறந்தவர்கள் என்பது அதிரை மக்களின் அளவுகோல். இதற்கெல்லாம் குரான் ஹதீஸ் வழியில் ஆய்வு செய்தால் விடை கிடைக்குமா?
இந்நிலையில் இதுபோன்ற கட்டுரைகள் வெளிவருவது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.
காக்கா நூர் முகமது அவர்களே
//கட்டுரைகள் வெளிவருவது தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து.// நீங்கள் சொல்லியிருப்பது மிக உயர்வான கருத்து...
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
குர்ஆன் வசனம் 2:30 மொழி பெயர்ப்பு தவறாக உள்ளது.
////ஜமீல் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோ. ஆரிஃப்,
إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً எனும் இறைவசனத்திற்கு
‘நான் இப்பூமியில் என் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை. மேலும் இறைவசன மூலத்தில் "என்" இல்லை என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அல்லாஹ் கூறாத ஒன்றை அவன் கூறுவதாகக் கூறுதல் சரியா?
என் கருத்தில் தவறிருப்பின் உரிய வகையில் திருத்துக! //////
************************************************************************
ஜமீல் காக்கா அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.
வல்ல அல்லாஹ் மறைய மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான் என்பதால் அவனுக்குப் பிரதிநிதியாக யாரும் இருக்க முடியாது.
தம்பி சபீர் சொன்னது:
//இன்று முதல் 'அதிரை நிருபர்' தளம் 'அதிரை நிருபர் PhD' என அழைக்கப்படவேண்டுமாய் முன்மொழிகிறேன்.
காரணங்கள்: அஹ்மது காக்காவின் / அலாவுதீனின் ஆராய்ச்சித் தொடர்கள், ஜமீல் காக்காவின் மொழியறிவு போதனைகள், இ.அன்சாரி காக்காவின் பொருளாதார எம் ஃபில் தரத்திலான கட்டுரைகள், ஜாகிரின் மனவள படிக்கட்டுகள், போதுமா?//
போதுமா? போதாது. உலகத்தரம் வாய்ந்த உங்களின் கவிதைகள் எங்களின் ஊனை உருக்குவது உங்களுக்குத்தெரியாமல் இருக்கலாம். அல்லது உங்களின் தன்னடக்கம் தடுத்திருக்கலாம். கவியன்பனோடு சேர்த்து இரு மகாகவிகளை பெற்றிருக்கும் நாங்களும் அதை எடுத்துக்கூறாவிட்டால் செஞ்சோற்றுக்கடன் தீர்க்காத குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.
//செஞ்சோற்றுக்கடன் /// இது என்ன மாமா புதிய வார்த்தையா இருக்கு...”மந்தி”போல எதாவது ஒரு ரைசா ? :)
// //செஞ்சோற்றுக்கடன் /// இது என்ன மாமா புதிய வார்த்தையா இருக்கு//
அதுதான்,
"செஞ்சோற்றுக்கடன் தீர்த்தவ்ர்களில் சிறந்தவன் கர்ணனா? கும்ப கர்ணனா?"
புரிகிறதா தம்பி யாசிர். இது புரியவில்லையானால், உங்கள் மாமா அவர்களிடமே மேல் விவரங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் அஹ்மது ஆரிஃப் காக்கா...
நான் இங்கே சொன்னது //இன்று யுனிகோடில் எழுதப்படும், எழுதி வாசிக்கப்படும் இதே தமிழ்தான் 'ஆதி'யின் மொழியா என்ற கேள்வி யோடு பயணிக்க இருக்கும் இந்த தொடர் நிறை விடயங்களை வெளிக் கொண்டுவரும் என்ற ஆவலில் காத்திருக்கிறோம்...//
ஏற்கனவே என் நான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்ததை எதிர்பார்த்ததை அப்படியே விளக்கமாக சொல்லி இருக்கிறீர்கள்....
உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? -1
கருத்துரைகளுக்குப் பதில்
==============
கட்டுரை தேவையா, இல்லையா என்று கருதும் சகோதரர்களுக்கு...
==============
கட்டுரையின் தலைப்பு, முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய மொழி தமிழா?
என்று தான் இருக்கின்றது. முதல் மனிதர் ஆதம் (அலை) பேசிய மொழி தமிழே! என்று இல்லை.
எனவே, இக்கட்டுரை எந்த மொழியையும், இனத்தையும், காலத்தையும், இடத்தையும் உரிமை கொண்டாடுவதோ, அல்லது இஸ்லாத்தை இவை எதற்குள்ளும் அடக்கவோ அன்று.
எனினும், அதனை ஆராயும் அடிப்படை நோக்கம், ஏற்கனவே கட்டுரையில் கூறப்பட்டுள்ள படி, குர்ஆனின் கருத்துகளுக்கு மாற்றமாகக் கூறப்படும், கற்பிக்கப்படும் மனிதப் படைப்பின் வரலாற்றை நாமும் ஆராய்ந்து, அறிந்து கொள்வதுடன், நவீனக் கல்விக் கூடங்களில் பயிலும் நமது குழந்தைகளுக்குக் குர்ஆனின் போதனைகளைக் கற்பிப்பது; இன்னும், இக்கருத்துகளைப் பிற சகோதரர்களுக்கு எடுத்துரைப்பது என்பதுதான்.
மனிதனின் மொழி பற்றி ஆராய்வது தேவையில்லை என்பது அறிஞர்கள் சிலரின் கூற்றே அன்றி, எல்லா அறிஞர்களின் ஒட்டுமொத்தக் கூற்று அன்று. மேலும், அவ்வாறு கூறிய அந்த அறிஞர்களின் காலத்தில் மனிதன் குரங்கிலிருந்தும் எலியிலிருந்தும் தோன்றியிருப்பான் என்று கூறப்படும் தற்காலக் கருத்துகள் தோன்றியிருக்கவில்லை. எனவே, இத்தகைய ஆராய்ச்சிகளுக்குத் தேவை இருந்திருக்கவில்லை.
أَفَلاَ يَتَدَبَّرُوْنَ الْقُرْآنَ أَمْ عَلى قُلُوْبٍ أَقْفَالُهَا ( 47:24 )
“அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ச்சி செய்ய வேண்டாமா? அல்லது உள்ளங்களின் மீது அவற்றின் பூட்டுகள் இருக்கின்றனவா?” (அல்குர்ஆன்-47:24)
وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ - صحيح مسلم
“அல்லாஹ்வின் வீடுகளில் எந்த ஒரு வீட்டிலாவது ஒரு கூட்டத்தினர் கூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதி, அவர்களுக்கிடையே அதனைப் ஆராய்ந்து படிப்பதில்லை, அவர்களின் மீது ‘ஸகீனத்’ எனும் அமைதி இறங்கியே அன்றி. இன்னும் அவர்களை ‘ரஹ்மத்’ எனும் அருள் மூடிக் கொள்ளமல் அன்றி, இன்னும் மலக்குமார்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளாமல் அன்றி. இன்னும் அவர்களைப் பற்றி அல்லாஹ் தன்னிடம் உள்ளவர்களிடம் கூறியே அன்றி.” (நபி மொழி) அறிவிப்பவர் – அபூஹுரைரா (ரலி) நூல் - முஸ்லிம்.
தொடரும் 1/3
தொடர்கிறது...
====
ஜமீல் காக்கா அவர்களுக்கு..
====
என் என்று குர்ஆனில் வரவில்லை. கலீஃபா - என்று மட்டுமே வந்துள்ளது. தவறைச் சுட்டிக் காட்டிய ஜமீல் காக்கா அவர்களுக்கு நன்றி.
நெறியாளர் கீழ் வருமாறு திருத்தி அமைக்க வேண்டுகிறேன்.
“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் பிரதிநிதியை உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால் துதித்துக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.” (அல்குர்ஆன், 2-30)
கலீஃபா என்ற வார்த்தைக்குப் பொருள்
கலீஃபா என்ற வார்த்தைக்குப் பொருளாகப் பல கருத்துகள் குர்ஆன் விரிவுரை நூல்களில் கூறப் பெறுகின்றன. அவற்றின் சாரம்,
1. வழிவழியாகப் பின்தொடர்ந்து வரும் சமுதாயம்
2. ஏற்கனவே இருந்த ஒருவரது இடத்தில் அவருக்குப் பதிலாக வரக்கூடியவர். (ஏற்கனவே இருந்த ஜான் என்ற ஜின் இனத்தவருக்கு பதிலாக உலகில் ஆக்கப்பட்டவர்)
3. மக்களுக்கிடையே நடைபெறும் அநியாயமான காரியங்களில் தீர்ப்புச் செய்து, தடுக்கப்பட்ட, பாவமான காரியங்களை விட்டுத் தடுக்கக்கூடியவர்.
4. இமாம் குர்துபீ (ரஹ்) போன்ற அறிஞர்கள், மக்களுக்கிடையே உண்டாகும் கருத்து வேறுபாடுகளில் தீர்ப்பளிக்கவும், அவர்களின் பிணக்குகளை நீக்கவும், அவர்களில் அநியாயம் செய்யப்பட்டவருக்கு அநியாயம் இழைத்தவருக்கு எதிராக உதவி செய்யவும், மானக் கேடான செயல்களை விட்டு எச்சரிக்கவும், இன்னும் இதுபோன்ற ஒரு தலைவரைக் கொண்டு அல்லாது வேறு எவராலும் நிறைவேற்ற இயலாத செயல்களைச் செய்யக் கூடிய கலீஃபா ஒருவர் இருப்பது கட்டாயம் என்ற கருத்திற்கு ஆதராமாக இந்த வசனத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
இவை அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய வார்த்தையாகப் ‘பிரதிநிதி’ என்ற வார்த்தை இருக்கிறது. இன்னும் பிரதிநிதி என்ற வார்த்தைக்கு அல்லாஹ்வுக்கு பதிலாக என்று பொருள் கொள்வதில்தான் இங்குக் குழப்பம் உண்டாகின்றது. அவ்வார்த்தையை ஏற்கனவே இவ்வுலகில் அல்லாஹ் படைத்திருந்த ஜின் இனத்திற்கு பதிலாக என்று பொருள் கொண்டால், குழப்பம் ஏதும் வராது.
முன்ஜித் அகராதியில் கலீஃபா என்ற வார்த்தைக்கு அல்இமாம் அல்லதீ லைஸ ஃபவ்கஹு இமாமுன் – ஒருவருக்கு மேல் இன்னொரு தலைவர் இல்லாத தலைவர் என்று பொருள் தருகிறார்கள்.
மனித இனத்தைக் கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்லவும், இன்னும் உலகில் காணப்படும் மற்றப் படைப்புகளையும் கட்டுப்படுத்தும் அளவு சக்தியை அல்லாஹ் மனித இனத்திற்குத் தானே கொடுத்திருக்கின்றான்?
தொடரும் 2/3
தொடர்கிறது...
//இயலாமலாவது / இல்லாமலாவது போன்ற நிலைகளை உடையோர்க்கு மட்டுமே பிரதிநிதி/கள் தேவை.//
இந்த இரண்டு நிலைகளுக்கும் கட்டுப்படாதவரை, அல்லது பிரதிநிதியை உண்டாக்குவதன் பால் தேவையற்றிருக்கும் வல்லவனாகிய அல்லாஹ் பிரதிநிதியை உண்டாக்குவது என்பது, அவனது வல்லமையையும், ஆட்சி, அதிகாரத்தையும் காட்டுவதைக் குறிக்கும்.
மனிதனை மட்டுமல்ல, வானம், பூமி இன்னும் நம் அறிவுக்குத் தெரிந்த, தெரியாத எந்தப் படைப்பையும் உண்டாக்க வேண்டுமென்ற தேவை அல்லாஹ்வுக்கு இல்லை. எனினும், அவன் படைப்புகளைப் படைப்பதன் நோக்கம், அவனது வல்லமையைப் படைப்புகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
وما خلقت الجن والإنس الا ليعبدون
“ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம், அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 51:56)
மேற்கண்ட ஆயத்தில் ‘லியஃபுதூன்’ என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற்கு, என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள். (தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும்,
كنت كنزاً مخفياً فأحببت أن أعرف فخلقت الخلق لأعرف
“நான் மறைக்கப்பட்ட புதையலாக இருந்தேன். நான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினேன். எனவே, நான் அறியப்படவேண்டும் என்பதற்காகப் படைப்புகளைப் படைத்தேன்” என்று அல்லாஹ் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ‘ஹதீஸ் குத்ஸீ’ ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஹதீதின் கருத்து, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கத்திற்கு ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் பலர் கூறுகின்றனர். (தஃப்ஸீர் கபீர், தஃப்ஸீர் ஆலூஸி.)
والله الغني وانتم الفقراء
“இன்னும் அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். நீங்களே அவனிடத்தில் தேவையுள்ளவர்கள்.” (அல்குர்ஆன் 47:38)
எனவே, மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் ‘கலீஃபா’ என்ற வார்த்தைக்குப் பிரதிநிதி என்ற பொருளைப் பயன்படுத்தலாம் என்று கருதுகிறேன். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
புலவர வர்களின் புத்திரர்ப் பெற்றப்
புலமை மிகவும் சிறப்பு
>>>>>>>>>>“ஜின்களையும், மனிதர்களையும் படைத்தன் நோக்கம், அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் 51:56)
மேற்கண்ட ஆயத்தில் ‘லியஃபுதூன்’ என்னை வணங்குவதற்காக அன்றி என்பதற்கு, என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன. இன்னும், <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
நான் வெகு நாட்களாகத் தேடித்திருந்ததற்கான விளக்கம் கேட்டு மிகவும் மகிழ்ந்தேன்.
அன்பும் அறிவும் அழகுடன் வாழ்க.
அன்புடன் புகாரி
அன்பின் புகாரீ,
சகோ. அஹ்மது ஆரிஃப் அவர்களின் ஆய்வை இங்கு நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.
//மேற்கண்ட ஆயத்தில் லியஃபுதூன் என்னை வணங்குவதற்காக அன்றி என்பதை என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி என்றும் பொருள் உள்ளது என முஜாஹிது, இப்னு ஜுரைஜ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றார்கள்.(தஃப்ஸீர் இப்னு கஃதீர், தஃப்ஸீருல் பஃகவீ)// அப்படி ஒரு பொருள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்திருந்தால் மட்டுமே அது அனைத்து முஸ்லிம்களாளும் ஏற்கப்படும். இல்லையேல் அது இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் மாணவர்களுள் ஒருவரான முஜாஹிதுடைய சொந்தக் கருத்து; இப்னு ஜுரைஜ் என்பாரின் சொந்தக் கருத்து என்றே கருதப்படும்; .
//இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் லியஃரிஃபூனி – (என்னை அறிந்து கொள்வதற்காகவே அன்றி) என்று ஓதிக்காட்டினார்கள் என்றும் பல விரிவுரை நூல்களில் வந்துள்ளன// இபுனு அப்பாஸ் அவர்களின் பெயரால் இவ்வாறு நிறைய 'அடித்து' விடப்பட்டுள்ளன. அவரவர் இஷ்டத்துக்கு ஓதிக் காட்டுவதற்கு இதென்ன மனிதன் இயற்றிய மந்திரமா? இறைவசனத்தை இஷ்டத்துக்கு மாற்றி ஓதுவதற்கு அல்லாஹ்வின் தூதருக்கு இல்லாத சிறப்புத் தகுதி இபுனு அப்பாஸுக்கு எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது? சிந்திக்க வேண்டாமா?
தஃப்ஸீர் இபுனு கதீரின் மூலவரிகள்:
{56} وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
أَيْ إِنَّمَا خَلَقْتُهُمْ لِآمُرهُمْ بِعِبَادَتِي لَا لِاحْتِيَاجِي إِلَيْهِمْ وَقَالَ عَلِيّ بْن أَبِي طَلْحَة عَنْ اِبْن عَبَّاس " إِلَّا لِيَعْبُدُونِ" أَيْ إِلَّا لِيُقِرُّوا بِعِبَادَتِي طَوْعًا أَوْ كَرْهًا وَهَذَا اِخْتِيَار اِبْن جَرِير . وَقَالَ اِبْن جُرَيْج إِلَّا لِيَعْرِفُونِ وَقَالَ الرَّبِيع بْن أَنَس " إِلَّا لِيَعْبُدُونِ " أَيْ إِلَّا لِلْعِبَادَةِ وَقَالَ السُّدِّيّ مِنْ الْعِبَادَة مَا يَنْفَع وَمِنْهَا مَا لَا يَنْفَع " وَلَئِنْ سَأَلْتهمْ مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّه " هَذَا مِنْهُمْ عِبَادَة وَلَيْسَ يَنْفَعهُمْ مَعَ الشِّرْك . وَقَالَ الضَّحَّاك : الْمُرَاد بِذَلِكَ الْمُؤْمِنُونَ.
http://quran.al-islam.com/Page.aspx?pageid=221&BookID=11&Page=1
இதில் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து என்ன? ஆய்வாளர் பதில் தரவேண்டும்.
***
புகாரீ,
உங்களுக்காக
ஆங்கிலத்தில்:
Allah the Exalted and Most Honored said,
(And I created not the Jinn and mankind except that they should worship Me.) meaning, `I, Allah, only created them so that I order them to worship Me, not that I need them.' `Ali bin Abi Talhah reported that Ibn `Abbas commented on the Ayah,
(...except that they should worship Me.) meaning, "So that they worship Me, willingly or unwillingly.
http://www.abdurrahman.org/qurantafseer/ibnkathir/ibnkathir_web/51.50575.html
***
இறைமறையின் தெளிவான சொற்களையுடைய வசனங்களுக்குத் தஃப்ஸீர் தேவையில்லை என்பதும் இறைமறையில் முதல் முஃபஸ்ஸிர் (விரிவுரையாளர்) முஹம்மது (ஸல்) அவர்களே என்பதும் நமது நிலைப்பாடாக இருக்கவேண்டும்.
وما خلقت الجن والانس الا ليعبدون (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (தாரிய்யாத்-56)
மேற்கண்ட வசனத்தின் படி அல்லாஹ்வையே வணங்குவது மனிதர்களின் மீதும், ஜின்களின் மீதும் கடமை. ஆனால், எப்படி வணங்குவது? என்ற கேள்விக்கான பதிலை அறியாத வரையும், இன்னும், வணக்க்த்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதைப் புரிந்து அறிந்து கொள்ளாத வரையும் அவனை முறையாக வணங்குதல் இயலாது.
இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...
அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?
இவ்விளக்கத்தினை, இறைமறையின் வேறு பல வசனங்களை ஆராய்வதன் மூலம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் மனித இனத்தை இப்பூமியில் படைக்க நாடியபோது நடந்த நிகழ்வுகளை அவனது இறைமறையில் இவ்வாறு கூறுகின்றான்...
وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ ۖ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ )البقرة:30)
“பூமியில் ஓர் பிரதிநிதியை ஆக்கப் போகிறேன்” என்று உமது இரட்சகன் வானவர்களிடம் கூறிய போது, அவர்கள், “அதில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக் கூடியவரையா நீ உண்டாக்கப் போகிறாய்? நாங்கள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், தூய்மைப் படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே?” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ் “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் 2:30)
மேற்கண்ட வசனத்தில் மலக்குகள் உனது புகழைக் கொண்டு உன்னைத் துதித்துக் கொண்டும், உன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றோமே என்று கூறியதில் இருந்து, அவர்கள் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் என்று விளங்குகின்றது. இருப்பினும், அல்லாஹ், அவர்களின் வணக்கத்தை விட உயர்வான ஓர் வணக்கத்தைப் புரியக் கூடிய மனித இனத்தைப் படைக்க நாடினான் என்றும் விளங்குகின்றது. மலக்குகளின் வணக்கத்தை விட உயர்வான ஓரு வணக்கத்தை நாடியே ஜின்களையும் அல்லாஹ் படைத்தான். அவர்கள், அத்தகைய வணக்கத்தைப் புரியாததால், அவர்களுக்குப் பதிலாக மனித இனத்தைப் படைக்க நாடினான் என்பதும் விளங்குகின்றது.
وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَٰؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ )البقرة:31)
“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். (அல்குர்ஆன் 2:31)
அதாவது, அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “நாங்கள் உன்னை வணங்கிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்று நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவற்றின் பெயர்களையும் கூறுங்கள்”, என்று கூறுகின்றான்.
قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا ۖ إِنَّكَ أَنتَ الْعَلِيمُ الْحَكِيمُ (البقرة:32)
قَالَ يَا آدَمُ أَنبِئْهُم بِأَسْمَائِهِمْ ۖ فَلَمَّا أَنبَأَهُم بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُل لَّكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنتُمْ تَكْتُمُونَ (البقرة:33)
அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” (அல்குர்ஆன் 2:32,33)
மேற்கண்ட வசனத்தில், அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவுகளை மலக்குமார்களின் முன்னர் எடுத்துரைக்குமாறு கூறுகின்றான். ஆதம் (அலை) அவர்கள் அவற்றைக் கூறியதும், மலக்குகளது வணக்கத்தை விட, அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்குக் கொடுத்த அறிவின் மேன்மையை அவர்களுக்கு விளக்குகின்றான்.
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (البقرة:34)
மேலும், மலக்குகளை நோக்கி, ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் என்று கூறியபோது, அவர்கள் அனைவரும் சிரம் தாழ்த்தினார்கள், இப்லீஸைத் தவிர. அவன் மறுத்தான், இன்னும் பெருமை கொண்டான். எனவே, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:34)
ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ் கூறியபோது, மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யாத தன்மையில் படைக்கப்பட்டவர்கள் ஆதலால், உடனே, சிரம் பணிந்து விட்டனர். ஆனால், தனது வணக்கங்களினால் மலக்குகளுக்கே தலைவனாக ஆக்கப்பட்டிருந்த இப்லீஸ், இவ்வளவு காலமும் அல்லாஹ்வுக்கே சிரம் பணிந்து வணங்கிக் கொண்டிருந்த மலக்குகளை நோக்கி, ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுங்கள் என்று அல்லாஹ்வே கூறிய அக்கட்டளையின் மறைந்து இருந்த உண்மைத் தத்துவத்தை இப்லீஸ் அறிந்திருக்கவில்லை. அதை அறிய முயற்சிக்கவும் இல்லை. பெருமை பாராட்டினான். எனவே, அவன் இவ்வளவு காலமும் புரிந்திருந்த வணக்கங்களின் மூலம் அவன் பெற்றிருந்த பதவியை விட்டும் நீக்கப்பட்டு, இறைவனது அருளை விட்டும் தூரமாக்கப்பட்டு, நிராகரிப்போரில் ஒருவனாக ஆகி விட்டான், என்று அல்லாஹ் விளக்குகின்றான்.
மேற்கண்ட இறைவசனங்களில் இருந்து தெளிவாகும் கருத்து என்னவெனில், மலக்குகளின் வணக்கத்திற்கும், ஷைத்தானுடைய வணக்கத்திற்கும், ஆதம் (அலை) அவர்களும், அவர்களது சந்ததியினரும், அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த அறிவின் அடிப்படையில் புரியும் வணக்கத்திற்கும் வானிற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி உண்டு என்பது தான்.
இல்லையெனில்,
قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ [ الزمر: 9 ].
அறிந்தவர்களும், அறியாதவர்களும் சமமாவார்களா? (அல்குர்ஆன் 39:9)
يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ [ المجادلة: 11 ]
நம்பிக்கை கொண்டோருக்கும், அறிவைக் கொடுக்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். (அல்குர்ஆன் - 58:11)
|وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا َقَالا الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ (النمل:15)
நாம் தாவூதுக்கும், சுலைமானுக்கும் அறிவைக் கொடுத்தோம். அவர்கள் இருவரும், தனது இறைநம்பிக்கை கொண்ட அடியார்களில் அநேகரை விட எங்களை மேன்மையாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், என்று கூறினர். (அல்குர்ஆன் 27:15)
اِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ [الفاطر:28].
நிச்சயமாக, அவனை வணங்குவோரில், அறிந்தோர் தாம்,
அல்லாஹ்வை மிகவும் அஞ்சுகின்றனர். (அல்குர்ஆன் 35:28)
போன்ற இறைவசனங்கள் எதனை உணர்த்துகின்றன?
அதுமட்டுமின்றி,
كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ (البقرة:151)
அவ்வாறே, உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதத்தையும், (அவற்றிலுள்ள) ஞானங்களையும் கற்பித்து, நீங்களறியாத மற்றவற்றையும் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பிவைத்தோம். (அல்பகரா-151)
என்ற இறைவசனம் இறைவனை முறையாக வணங்கி வழிபடுவது எப்படி என்பது பற்றிய அறிவைக் கற்றுக்கொடுப்பதற்காகவே அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களை நம்மிடம் அனுப்பி வைத்தான் என்று விளக்குகின்றது.
இன்னும், அல்லாஹ்வைப் பற்றிய அறிவுடன் அவனை வணங்குவது, அவனை வெறுமனே தானியங்கி இயந்திரம் போன்று வணங்குவதை விட உயர்ந்தது என்பதை அண்ணல் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் கூறிய பொன்மொழிகளும் உணர்த்துகின்றன.
وفى " الصحيحين " من حديث معاوية بن أبى سفيان رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول: " من يرد الله به خيرا يفقهه في الدين ".
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ, அவருக்கு அல்லாஹ் மார்க்கத்தில் தேர்ச்சியாக்குகின்றான், என்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் முஆவியா இப்னு அபீ சுஃப்யான் (ரலி), நூல்-புகாரி, முஸ்லிம்.
وعن أبى أمامة رضي الله عنه قال: ذكر لرسول الله صلى الله عليه وآله وسلم رجلان: أحدهما: عابد، والآخر: عالم، فقال رسول الله صلى الله عليه وآله وسلم: " فضل العالم على العابد كفضلى على أدناكم "، ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم: " إن الله وملائكته، وأهل السموات والأرض، حتى النملة في جحرها، وحتى الحوت ليصلون على معلمي الناس الخير " رواه الترمذي وقال: حديث حسن صحيح.
நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அவர்களில் ஒருவர், வணக்கவாளி இன்னொருவர், அறிஞர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அறிஞருக்கு வணக்கவாளியை விட இருக்கும் சிறப்பு உங்களில் மிகவும் கடைநிலைப் படித்தரத்தில் இருப்பவரை விட எனக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்” என்று கூறிவிட்டு, “நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது மலக்குமார்களும், வானத்திலும், பூமியிலும் உள்ளோரும், இன்னும் புற்றில் இருக்கும் எறும்பும் கூட, மீனும் கூட, மக்களுக்கு நன்மையைக் கற்றுத்தருவோரின் ஸலவாத் கூறுகின்றனர்”, என்று கூறினார்கள். அறிவிப்பவர்-அபூஉமாமா (ரலி) நூல்-திர்மிதீ எண்-2685
إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب، وإن العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، وإنما ورثوا العلم، فمن أخذ به أخذ بحظ وافر. رواه ابن ماجه عن ابي الدرداء.
“ஒரு வணக்கவாளியை விட அறிஞருக்கு உரிய சிறப்பு, நட்சத்திரங்கள் அனைத்தையும் விட பௌர்ணமி நிலவுக்குரிய சிறப்பைப் போன்றதாகும். நிச்சயமாக, அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ, திர்ஹமையோ வாரிசுப் பொருளாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள், அறிவையே வாரிசாக விட்டுச் சென்றுள்ளனர். எவர், அதனை எடுத்துக் கொண்டாரோ, அவர் மிகப் பெரும் அதிஷ்டத்தையே எடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறியதாக அபுத் தர்தா (ரலி) அறிக்கிறார்கள். (நூல் இப்னு மாஜா எண்-3160)
மேற்கண்ட இறைவசனங்களும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும், இறைவனை வெறுமனே வணங்குவதை விட அவனைப் பற்றிய, அவனது வணக்கம் பற்றிய அறிவுகளைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் உணர்த்துகின்றன.
இன்னும், இறைமறை அல்குர்ஆனை ஓதும் கிராஅத் முறைகள் பல உள்ளன. இவற்றை, 1.அல் கிராஅத்துல் முதவாத்திரஹ் மக்களிடையே புழக்கத்தில் ஓதப்படும் கிராஅத் 2. அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் – அரிதாக ஓதப்படும் கிராஅத். இந்த அனைத்து வகைக் கிராஅத்துகளுமே நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஓதிக்காட்டியது தான்.
قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَاسْتَمَعْتُ لِقِرَاءتِهِ، فَإِذَا هُوَ يَقْرَأُ عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاةِ، فَتَصَبَّرْتُ حَتَّى سَلَّمَ، فَلَبَّبْتُهُ بِرِدَائِهِ، فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: كَذَبْتَ، فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَدْ أَقْرَأَنِيهَا عَلَى غَيْرِ مَا قَرَأْتَ. فَانْطَلَقْتُ بِهِ أَقُودُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، فَقُلْتُ: إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: أَرْسِلْهُ. اقْرَأْ يَا هِشَامُ. فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ، ثُمَّ قَالَ: اقْرَأْ يَا عُمَرُ، فَقَرَأْتُ الْقِرَاءةَ الَّتِي أَقْرَأَنِي، فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: كَذَلِكَ أُنْزِلَتْ. إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ.
ஹிஷாம் இப்னு ஹிஸாம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஸூரத்துல் ஃபுர்கானை ஓதுவதை நான் கேட்டேன். ஆனால், அவர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக்காட்டியிராத பல வார்த்தைகளை ஓதினார். அவரைத் தொழுகையிலேயே தாவிப் பிடித்து நிறுத்த வேண்டும் என்று எண்ணினேன். இருப்பினும் அவர் ஸலாம் கொடுக்கும் வரை நான் பொறுமையுடன் இருந்து, அவர் தொழுகையை முடித்ததும் அவரது உடையைப் பிடித்துக் கொண்டு, இப்போது நீர் ஓதக் கேட்டேனே, இந்த ஸூராவை உமக்கு இவ்வாறு ஓதிக் கொடுத்தது யார்? என்று கேட்டேன். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தான் எனக்கு ஓதிக் கொடுத்தார்கள், என்றார். நான், நீர் பொய்யுரைக்கிறீர், ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்த ஸூராவை வேறு முறையில் அல்லவா ஓதிக் கொடுத்தார்கள், என்று கூறினேன். அதன்பின் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு சென்று, இவர் நீங்கள் ஃபுர்கான் ஸூராவை எனக்கு நீங்கள் கற்றுத் தராத முறையில் ஓதுகின்றார், என்றேன். நபி (ஸல்), அவரை விடுங்கள், ஹிஷாமே, நீர் ஓதும், என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் நான் அவர் எவ்வாறு ஓதக் கேட்டேனோ, அவ்வாறு ஓதிக் காட்டினார். அதனைக் கேட்ட ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள், இப்படித்தான் இறங்கப் பெற்றது, என்றார்கள். பின்னர், என்னிடம், உமர், நீர் ஓதும் என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஓதிக் கொடுத்தவாறு ஓதிக் காட்டினேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், இப்படியும் இறக்கப்பட்டது, நிச்சயமாக இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் இறக்கப்பெற்றுள்ளது. நீங்கள் எதனை எளிதாகக் காணுகின்றீர்களோ, அதனை ஓதுங்கள், என்றார்கள். (அறிவிப்பவர் – உமர் (ரலி) நூல்-புகாரி எண்.. 4635. இதே ஹதீது சில வார்த்தைகள் மாற்றங்களுடன் ஸஹீஹ் முஸ்லிம் நூலிலும் வருகின்றது எண் 1717)
حدثنا محمد بن عبيد الله أبو ثابت حدثنا إبراهيم بن سعد عن ابن شهاب عن عبيد بن السباق عن زيد بن ثابت قال بعث إلي أبو بكر لمقتل أهل اليمامة وعنده عمر فقال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى أن يستحر القتل بقراء القرآن في المواطن كلها فيذهب قرآن كثير وإني أرى أن تأمر بجمع القرآن قلت كيف أفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم فقال عمر هو والله خير فلم يزل عمر يراجعني في ذلك حتى شرح الله صدري للذي شرح له صدر عمر ورأيت في ذلك الذي رأى عمر قال زيد قال أبو بكر وإنك رجل شاب عاقل لا نتهمك قد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه قال زيد فوالله لو كلفني نقل جبل من الجبال ما كان بأثقل علي مما كلفني من جمع القرآن قلت كيف تفعلان شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم قال أبو بكر هو والله خير فلم يزل يحث مراجعتي حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر ورأيت في ذلك الذي رأيا فتتبعت القرآن أجمعه من العسب والرقاع واللخاف وصدور الرجال فوجدت في آخر سورة التوبة لقد جاءكم رسول من أنفسكم إلى آخرها مع خزيمة أو أبي خزيمة فألحقتها في سورتها وكانت الصحف عند أبي بكر حياته حتى توفاه الله عز وجل ثم عند عمر حياته حتى توفاه الله ثم عند حفصة بنت عمر
அபூபக்கர் (ரலி) அவர்கள் யமாமா போரில் அதிகமான ஸஹாபிகள் கொல்லப்பட்டது பற்றி எனக்குச் செய்தி அனுப்பினர். அப்போது அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் இருந்தனர். அச்செய்தியில், அபூபக்ர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக, யமாமாப் போர் தினத்தன்று அதிகமான குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிள்கள் பலர் ஷஹீதாகி விட்டனர். இன்னும், பல இடங்களில் இருக்கும் ஹாஃபிள்கள் போரினால் கொல்லப்பட்டு விடுவார்களோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. அப்படி நடந்தால், அதிகமான குர்ஆன்கள் நம்மிடம் இருந்து போய் விடும். எனவே, நீங்கள் குர்ஆனை ஒன்று சேர்ப்பது பற்றிக் கட்டளை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வது” என்றேன். அதற்கு, உமர் (ரலி) அவர்கள் . அதற்கு “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அது நன்மையான விஷயம் ஆகும்” என்றார்கள். இவ்விஷயத்தை உமர் (ரலி) அவர்கள் என்னுடன் அடிக்கடி கூறிக் கொண்டு வந்தார்கள். உமர் (ரலி) அவர்களது உள்ளத்தில் எவ்விஷயத்தைத் தெளிவு படுத்தினானோ, அவ்விஷயத்தை எனது உள்ளத்திலும் விளக்கி விட்டான். எனவே, உமர் (ரலி) அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன். நிச்சயமாக, நீர் அறிவு மிக்க இளைஞனாக இருக்கின்றீர். உம்மை நாங்கள் சந்தேகப் படவில்லை. இன்னும், நபி (ஸல்) அவர்களது வஹ்யை எழுதிக் கொண்டும் இருந்தீர். எனவே, நீர் குர்ஆனைச் சேகரிப்பீராக”, என்று கூறினர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு மலையை நகர்த்துமாறு கூறியிருந்தாலும், அது குர்ஆனைச் சேகரிக்குமாறு என்னிடம் கூறியதை விடக் கடினமான ஒன்றாக இருந்திருக்காது. நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் ஏன் செய்கிறீர்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது நன்மையான ஒன்றாகும்”, என்றார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள், இவ்விஷயத்தைப் பற்றி என்னிடம் அடிக்கடிப் பேசி வந்தார்கள். அபூபக்ரு, உமர் (ரலி) ஆகியோரது உள்ளத்தில் அல்லாஹ் கொடுத்த விளக்கத்தை என்னுடைய உள்ளத்திலும் கொடுத்தான். அதன்பின் நான் ஸஹாபாக்கள் தோல்கள், எலும்புகள், உடைந்த களிமண் துண்டுகள், பேரீச்ச மரப்பட்டைகள் போன்றவற்றில் எழுதி வைத்திருந்த, இன்னும் தங்களின் உள்ளங்களில் மனனம் செய்து வைத்திருந்தவற்றில் இருந்து குர்ஆனை சேகரிக்கும் பணியினைத் தொடர ஆரம்பித்தேன். அப்போது, ஸூரத்துத் தவ்பாவின் இறுதி ஆயத்தான லகத் ஜாஅகும் ரசூலுன் மின் அன்ஃபுஸிகும் என்ற வசனத்தை குஸைமா அல்லது அபூ குஸைமா என்ற நபித்தோழரிடம் நான் கண்டு, அதனை அந்த வசனத்தை அதற்குரிய சூராவில் சேர்த்தேன். இவ்வாறு நான் தொகுத்துக் கொடுத்த குர்ஆனின் பிரதி அபூபக்ரு (ரலி) அவர்களிடம் இருந்தது. அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்ததன் பின்னர், அது உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த பின் அது உமர் (ரலி) அவர்களின் மகளார் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் இருந்தது. அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் (ரலி) நூல் புகாரி-6768.
இவ்வாறு அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்கள் மூவரும் ஆலோசனை செய்து குர்ஆனின் பிரதியைத் தொகுத்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஸஹாபாக்களுக்கு ஓதிக் கொடுத்த கிராஅத் முறைகளின் படி அந்தந்த ஸஹாபிகள் ஓதி வந்தார்கள்.
இதன்பின் உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் இன்னும் இஸ்லாமியப் பேரரசு விரிவடைந்த காலத்தில் அர்மீனிய்யா, அதர்பைஜான் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டன. அப்போது மீண்டும் ஒரு முறை புதிதாகக் குர்ஆனைத் தொகுக்கும் ஓரு அத்தியாவசியம் உண்டாயிற்று. அது என்னவெனில்...
وعن زيد بن ثابت أنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ مِنْ غَزْوَةٍ غَزَاهَا، فَلَمْ يَدْخُلْ بَيْتَهُ حَتَّى أَتَى عُثْمَانَ، فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، أَدْرِكْ النَّاسَ! فَقَالَ عُثْمَانُ: وَمَا ذَاكَ؟ قَالَ : غَزَوْت فَرْجَ أَرْمِينِيَةَ، فَحَضَرَهَا أَهْلُ الْعِرَاقِ وَأَهْلُ الشَّامِ، فَإِذَا أَهْلُ الشَّامِ يقرؤون بِقِرَاءةِ أُبَيٍّ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الْعِرَاقِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الْعِرَاقِ، وَإِذَا أَهْلُ الْعِرَاقِ يقرؤون بِقِرَاءةِ ابْنِ مَسْعُودٍ، فَيَأْتُونَ بِمَا لَمْ يَسْمَعْ أَهْلُ الشَّامِ، فَيُكَفِّرُهُمْ أَهْلُ الشَّامِ. قَالَ زَيْدٌ: فَأَمَرَنِي عُثْمَانُ أَنْ أَكْتُبَ لَهُ مُصْحَفًا.
ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்கள் ஒரு யுத்தகளத்தில் இருந்து திரும்பி வந்தார்கள். தமது வீட்டிற்குச் செல்லாமல் நேராக உதுமான் (ரலி) அவர்களிடம் வந்து, அமீருல் முஃமினீன் அவர்களே, மக்களைப் புரிந்துகொள்ளுங்கள், என்றார்கள். உதுமான் (ரலி) அவர்கள், என்ன செய்தி? என்று கேட்டார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், நான் அர்மீனியப் பிரதேசத்தில் நடந்த போரில் கலந்து கொண்டு வந்துள்ளேன். அதில் ஈராக் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும், ஷாம் நாட்டைச் சார்ந்த முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். ஷாம் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களோ, உபை இப்னு கஅப் (ரலி) அவர்களது கிராஅத்தைப் பின்பற்றிக் குர்ஆன் ஓதுகிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்கள் கேட்காத முறைப்படி அவர்கள் ஓதுகின்றார்கள். எனவே, ஈராக் நாட்டுக் காரர்கள் ஷாம் நாட்டினர் ஓதும் முறையை மறுத்துரைக்கிறார்கள். ஈராக் நாட்டைச் சார்ந்தவர்களோ இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களது கிராஅத் முறைப்படி ஓதுகின்றார்கள். ஷாம் நாட்டினர் கேட்டிராத முறையில் அவர்கள் குர்ஆன் ஓதுகின்றார்கள். எனவே, ஷாம் நாட்டினர் ஈராக் நாட்டினர் குர்ஆன் ஓதும் முறையை மறுக்கிறாக்ள், என்று கூறினார்கள். அப்போது, உதுமான் (ரலி) அவர்கள் என்னிட்ம் அவர்களுக்காகக் குர்ஆனை எழுதித்தருமாறு கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர் ஜைது இப்னு ஃதாபித் ரலி நூல் ஜாமிஉல் குர்ஆன் லி தஃவீலி ஆயில் குர்ஆன், இமாம் தபரீ)
உதுமான் (ரலி) அவர்கள் ஹுதைஃபத்துல் யமானீ (ரலி) அவர்களின் முறையீட்டின் பின்னர் தொகுக்குமாறு ஜைது இப்னு ஃதாபித் (ரலி) அவர்களிடம் பணித்தது அப்போது ஸஹாபாக்கள் ஓதி வந்த பல்வேறு கிராஅத் முறைகளை. முன்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களது கருத்தின் படித் தொகுக்கச் சொன்னது குர்ஆனின் வசனங்களை.
உதுமான் (ரலி) அவர்கள் காலத்தில் குர்ஆன் தொகுக்கப்பட்ட பொழுது பல விதமான கிராஅத் முறைகளால் மக்கள் குழப்பமடைந்து விடாமல் இருப்பதற்காக அவற்றில் புழக்கமாக மக்கள் ஓதும் வகையின் படி அமைந்த கிராஅத்துகளின் படி குர்ஆன் தொகுக்கப்பட்டது. அனைத்து வகைக் கிராஅத்துகளிலிருந்தும் பத்து வகைக் கிராஅத்துகள் தொகுக்கப்பட்டன. இவை ‘அல்கிராஅத்துல் முத்தவாத்திரஹ்’ என்று கூறப்படும்.
இந்தப் பத்து வகை கிராஅத்து முறைகளும் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கீழ்க்கண்ட எட்டு ஸஹாபிகளும் கற்றுக் கொண்ட கிராஅத் முறைப்படி தொகுக்கப்பட்டன.
1. உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)
2. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
3. உபை இப்னு கஅபு (ரலி)
4. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)
5. ஜைது இப்னு ஃதாபித் (ரலி)
6. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
7. அபுத் தர்தாஉ (ரலி)
8. உமர் இப்னுல் கத்தாபு (ரலி)
இவர்கள் அல்லாத மற்ற ஸஹாபாக்கள் ஓதிவந்த கிராஅத் முறைகள் அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ் என்று கூறப்படும். இந்த இரண்டாம் வகைக் கிராஅத்துகளில் சில அரபு மக்களின் மொழிஉச்சரிப்புக் கேற்ற படி ஓதப்பட்டு வந்தன. இன்னும், சில குர்ஆனின் வார்த்தைகளின் பொருளை விளங்குவதற்காகக் குறிப்பிடப்பட்டு வந்தன. இவ்வகையைச் சார்ந்தது தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘லியஃரிஃபூனி’ என்று ஓதிக் காட்டியது.
இந்த இரண்டாம் வகைக் கிராஅத்தான ‘அல்கிராஅத்துஷ் ஷாஃத்ஃதஹ்’வின் படி ஓதப்படும் குர்ஆன் வசனங்களைத் தொழுகையில் ஓதுவதும், இன்னும் திலாவத் எனும் குர்ஆனை ஓதும் பொழுதோ ஓதக் கூடாது. ஆயினும், அவ்வகைக் கிராஅத்துகளைக் குர்ஆனின் பொருளைக் கூறுவதற்காகவும், குர்ஆனின் மொழி, இலக்கண முறைகள் ஆகியவற்றைக் கற்கவும், கற்பிக்கவும், சட்டங்கள் தொடர்பான கருத்துக்களைப் பெறவும் இந்தக் கிராஅத்துகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது மார்க்க வல்லுநர்களின் ஒருமித்த கருத்தாகும்.
எனவே,
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات:56)
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56) என்ற வசனத்தில், இப்னு அப்பாஸ் (ரலி) லியஃபுதுனி என்பதற்கு “லியஃரிஃபூனி” என்று ஓதிக்காட்டினார்கள் என்ற வார்த்தைக்கு அதன் வசனத்தின் பொருளை விளக்கிக் கூறுவதற்காக ஓதிக்காட்டினார்கள் என்று புரிய வேண்டும்.
தாங்கள் கூறுவதுபோல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பெயரால், அடித்து விடப்பட்டுள்ளது என்பது ஒரு வேளை உண்மையாக இருப்பினும், முஜாஹிது, இப்னு ஜுரைஜ் ஆகியோர் கூறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது தங்களது சொந்தக் கருத்து என நான் நினைக்கினேறேன்.
قال محمد بن إسحاق حدثنا أبان بن صالح عن مجاهد ، قال عرضت المصحف على ابن عباس ثلاث عرضات من فاتحته إلى خاتمته أوقفه عند كل آية منه وأسأله عنها .
وقال ابن جرير حدثنا أبو كريب ، حدثنا طلق بن غنام عن عثمان المكي ، عن ابن أبي مليكة قال رأيت مجاهدا سأل ابن عباس عن تفسير القرآن ومعه ألواحه قال فيقول له ابن عباس اكتب حتى سأله عن التفسير كله . ولهذا كان سفيان الثوري يقول إذا جاءك التفسير عن مجاهد فحسبك به .
“நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனை சூரா ஃபாத்திஹா முதல் அதன் இறுதி வரை மூன்று முறை ஓதிக்காட்டியுள்ளேன். அப்படி ஓதும்பொழுது, ஒவ்வொரு வசனத்திலும் நிறுத்தி நிறுத்தி அவர்களிடம் அந்த வசனத்தைப் பற்றிக் கேட்டுள்ளேன்”, என்று முஜாஹிது (ரஹ்) அவர்கள், கூறியதாக அபான் இப்னு ஸாலிஹு அவர்கள் கூறியதாக முஹம்மது இப்னு இஸ்ஹாக் அவர்கள் கூறுகின்றார்கள்.
“இன்னும், நான் முஜாஹிது அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்களைக் கேட்கக் கண்டேன். அவற்றை எழுதுவதற்கான பலகைகள் அவர்களுடன் இருந்தது. அப்போது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறே அவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கங்கள் முழுவதையும் கேட்டு எழுதிக் கொண்டார்கள்”. அறிவிப்பவர்-இப்னு அபீ முலைக்கா நூல் இப்னு ஜரீர்.
இதனால் தான் சுஃப்யானுஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹிது அவர்களிடம் இருந்து குர்ஆனின் விளக்கங்க்ள் கிடைத்தால், உனக்கு அது போதும்”, என்று கூறுபவர்களாக இருந்தார்கள். இந்த அறிவிப்புகளும் இப்னு கஃதீர் விரிவுரையின் முன்னுரையில் குர்ஆனின் பொருளை விளங்குவதன் அடிப்படை விதிகள் பற்றிய இடத்தில் வருகின்றன.
இறைவனை வணங்குவது என்பது இறைவனைப் பற்றி அறியாமல் முழுமை பெறாது. ஆதலினால், “ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காக அன்றியே நான் படைக்கவில்லை” என்ற வசனத்தில் வரும் “என்னை வணங்குவதற்கு” என்ற வார்தைக்கு “என்னை அறிவதற்கு” என்று பொருள் கூறுவதில் தவறு காண இயலாது என்பது எனது கருத்து.
அல்லாஹ்வும், அவன் தூதரும் மிகவும் அறிந்தவர்கள்.
//இறைவனை வணங்குவது கடமை எனில் இறைவனை முறையாக வணங்குவது எப்படி என்று அறிதலும் கடமை தான். இறைவனை முறையாக வணங்க வேண்டும் எனில்...
அல்லாஹ் யார்?
அல்லாஹ் எப்படிப் பட்டவன்?
நமக்கும் அல்லாஹ்வுக்கும் என்ன தொடர்பு?
அல்லாஹ்வை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்?
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும்?
அல்லாஹ்வை வணங்கினால் என்ன நன்மை?
அல்லாஹ்வை வணங்காவிட்டால் என்ன தீமை?
உண்மையான வணக்கம் எது?
அவ்வணக்கத்தின் தத்துவம் என்ன?
அல்லாஹ் படைத்தன் நோக்கம் வணக்கத்திற்காக எனில்,
வணக்கத்தின் மூலம் மனிதர்களும், ஜின்களும்
அடைந்து கொள்ளும் இறுதி நோக்கம் என்ன?
சுவர்க்கத்தை அடையப் பெறுவதா?
நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதா?
அவனைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதா?
அவனது காட்சியைப் பெற்றுக் கொள்வதா?
சுவர்க்கத்தின் மீது ஆசைப்பட்டும்,
நரகத்திலிருந்து காவல் பெறவும் மட்டும்
புரியப்படும் வணக்கம் தூய்மையான வணக்கமா?
அல்லது அல்லாஹ்வை மட்டுமே நாடி,
அதன் மூலம் அவனது பொருத்தத்தையும்,
அவனைப் பற்றிய அறிவையும், காட்சியையும்
பெறுவதற்காகவும் புரியப்படும் வணக்கம்
அதனை விடத் தூய்மையான வணக்கமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ளா விட்டால் அவனை எப்படி முறையாக உணர்ந்து வணங்க முடியும்? அவனது வணக்கத்தில் கிடைக்கும் இன்பங்களையும், சுவைகளை எப்படி உணர முடியும்?//
உங்களிடம் அடியேன் நிரம்ப விடயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது இவ்வாய்வும் இப்படிப்பட்ட ஆழமான கேள்விக் கணைகளும். அறிவைத் தேடும் என் போன்ற ஆர்வலர்கட்கு மருமகனார் ஆரிஃப் ஓர் அரிய புதையல்! அல்லாஹ்வை அறிந்து வணங்குவதே அறிவுடைமை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை; வெறுமனே பெற்றோர் காட்டிய வழி என்று மட்டும் வழிபாடுகள் புரிதல் ஆழ்ந்த அறிவின்றி - அல்லாஹ் யார் என்று அறியாமல் தொழுவதும் “கிளிப்பிள்ளை பாடம் ஒப்பிப்பதும் ஒன்றே”!
அன்பிற்கினிய சகோ அகமது ஆரிப் அவர்களுக்கு,
ஒவ்வொரு முறையும் உங்களின் தெளிவான ஆய்வு வரிகளாலும், ஒன்றையும் விட்டுவிடாமல் கொண்டுவந்து கொட்டிவிடும் அக்கறையினாலும், ஞாபகம் மற்றும் அறிவாற்றலாலும் என்னை ஆச்சரியப்பட வைத்துவிடுகிறீர்கள்.
நிறைய எழுதுங்கள். நான் அனைத்தையும் வாசிக்கக் காத்திருக்கிறேன்.
தன்னை அறிவதற்கேயல்லாம வேறெதற்காகவும் இறைவன் மனிதர்களைப் படைக்கவில்லை.
எவன் ஒருவன் இறைவனை முழுமையாக அறிந்துகொண்டுவிட்டானோ அவன் எப்படி வணங்காமல் இருப்பான்.
ஆகவே வணங்குவது என்பது ஒரு குவளை நீர் என்றால், அறிவது என்பதே கடலென விரிந்த கனடா ஏரி நீர்.
இதை அப்படியே ஓர் கட்டுரையாய் வைத்திருந்தால், எனக்கு ஒரு பிரதியை அனுப்பித் தாருங்கள். அவசியமான பொழுதெல்லாம் நான் உங்கள் பெயரிட்டு பயன்படுத்திக் கொள்வேன்.
அன்புடன் புகாரி
அன்பு சகோ. அஃப்ளலுல் உலமா அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில். அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் தனி கட்டுரைகளாக வெளி வரவேண்டிய பொக்கிஷங்கள். இதன் அருமை இப்போது யாருக்கும் புரியாது. இன்ஷா அல்லாஹ், பல ஆண்டுகள் கழித்து படிப்போர் பயன் பல பெறுவார்கள்.
Post a Comment