ஒரு தேன்கூடு
அதில் ராணித் தேனீக்கு ஒரு கவலை
தேன் கொள்ளச் செல்லும் தேனீக்களில் சில
திரும்பி வருவதில்லை என்று....
காரணமும் அறிந்தது ராணி !
நடு வானில் கூட்டம் என கட்டளையிட்டது ராணி.
தேனீக் கள் கூடின ராணிக்கு முன்னே...
அனைத்தும் காற்றில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டன.
ராணி ஆரம்பித்தது,
ஈக்களே!
தேன் கொள்ளச் செல்லும் நம்மவர்களில் சிலர்
திரும்பாததால் கூட்டை முழுதாக்குவது கடினம் என்றுரை த்தது
திரும்பாதல் காரணம் அறிவீர்களா என வினவியது
தேன்கொள்ள தூர தேசம் செல்லுவது என்றது ஒரு தேனீ
இல்லையென்றது ராணி
வேறு கூட்டிற்கு மாறுவது என்றது இன்னொரு தேனீ
மறுத்தது ராணி
பிறரிடம் போரிட்டு மடிவது என்றது மற்றொரு தேனீ
மீண்டும் மறுத்து ராணி சொன்னது
என் பின்னே பறந்து வாருங்கள் உங்களுக்கு
விடை கிடைக்கும் என்று ராணி பறந்தது
தேனீக் கள் பின் தொடர்ந்தன....
ராணி வந்தடைந்த இடம்
தேன் கொள்ளும் பூவயல்
ராணி முன்னேயும் தேனீக்கள் பின்னேயும்
பூவயலின் மேல் பறந்தன....
மறுபடியும் ராணி ஆரம்பித்தது
ஈக்களே ! நமக்கென்று தேன் கொள்ள இந்த
பூவயலில் நிறைய செடிகளின் பூக்கள் உள்ளன
அதில் மட்டும் தேன் கொள்ளல்
நம் எல்லையாகும்
அதோ தனியாக தெரியும் அந்த செடியின் பூக்கள்
மிகவும் கவர்பவை
ஆனால் அதன் தேன் கொண்டு
திரும்புதல் கடினம்
அது நம்மை அழித்துவிடும்
அதில் தேன் கொள்ள முயலுவது
வரம்பு மீறலாகும்
அதுவே நம்மில் சிலர்
திரும்பாத காரணமாகும் .
வரம்பு மீறல் : அழிவின் வாசல்
என உணர்த்தியது ராணி
-Harmys
படங்கள் : A.R.Mohamed Yousuf
அதில் ராணித் தேனீக்கு ஒரு கவலை
தேன் கொள்ளச் செல்லும் தேனீக்களில் சில
திரும்பி வருவதில்லை என்று....
காரணமும் அறிந்தது ராணி !
நடு வானில் கூட்டம் என கட்டளையிட்டது ராணி.
தேனீக் கள் கூடின ராணிக்கு முன்னே...
அனைத்தும் காற்றில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டன.
ராணி ஆரம்பித்தது,
ஈக்களே!
தேன் கொள்ளச் செல்லும் நம்மவர்களில் சிலர்
திரும்பாததால் கூட்டை முழுதாக்குவது கடினம் என்றுரை த்தது
திரும்பாதல் காரணம் அறிவீர்களா என வினவியது
தேன்கொள்ள தூர தேசம் செல்லுவது என்றது ஒரு தேனீ
இல்லையென்றது ராணி
வேறு கூட்டிற்கு மாறுவது என்றது இன்னொரு தேனீ
மறுத்தது ராணி
பிறரிடம் போரிட்டு மடிவது என்றது மற்றொரு தேனீ
மீண்டும் மறுத்து ராணி சொன்னது
என் பின்னே பறந்து வாருங்கள் உங்களுக்கு
விடை கிடைக்கும் என்று ராணி பறந்தது
தேனீக் கள் பின் தொடர்ந்தன....
ராணி வந்தடைந்த இடம்
தேன் கொள்ளும் பூவயல்
ராணி முன்னேயும் தேனீக்கள் பின்னேயும்
பூவயலின் மேல் பறந்தன....
மறுபடியும் ராணி ஆரம்பித்தது
ஈக்களே ! நமக்கென்று தேன் கொள்ள இந்த
பூவயலில் நிறைய செடிகளின் பூக்கள் உள்ளன
அதில் மட்டும் தேன் கொள்ளல்
நம் எல்லையாகும்
அதோ தனியாக தெரியும் அந்த செடியின் பூக்கள்
மிகவும் கவர்பவை
ஆனால் அதன் தேன் கொண்டு
திரும்புதல் கடினம்
அது நம்மை அழித்துவிடும்
அதில் தேன் கொள்ள முயலுவது
வரம்பு மீறலாகும்
அதுவே நம்மில் சிலர்
திரும்பாத காரணமாகும் .
வரம்பு மீறல் : அழிவின் வாசல்
என உணர்த்தியது ராணி
-Harmys
படங்கள் : A.R.Mohamed Yousuf
24 Responses So Far:
அழகியலையும், வருடலையும் ஒருங்கே மென் 'பொருள்' கொண்டு தருவதில் இந்தக் கவிக்கு கற்பனை வளம் நிறைந்திருக்கிறது !
வாழ்த்துக்கள்
அழகில் ஆபத்துள்ளதென்பதை
அருமையாய் உரைக்கிறதுங்கள் கவிதை!
அஸ்ஸலாமு அலைக்கும்.
சொன்னால் புரியாது.செயலால் காட்டிய ராணி தேனீக்களின் பட்டாளத்தை வைத்து.அப்துர் ரஹ்மான் கட்டிய கூடு அருமை.
நம்ம கண்ணையே கவருதே இந்த பூக்கள்.பவம் தேனீ கொள்ளும் அந்த ஜீவனுக்கு எப்படி இருக்கும்?
மனதில் இதமாக ஊன்றபடும் விதை
அது ஹார்மியின் கவிதை
படிக்கும் போதே மனதில் ஒரு வித சந்தோச அலைகளை தருவது சகோ.ஹார்மியின் கலை
படங்களும் / சொல்லவந்த கருப்பொருளும் அதற்க்காக செதுக்கப்பட்ட வரிகளும் அருமை...வாழ்த்துக்கள் சகோ.
"அழகிய கவிதை அழகிய படங்கள்"
எந்த விசயமாக இருந்தாலும் வரம்பு மீறக்கூடாது என்பதனை. கவிதை உணர்த்துகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்.
'உன் மகன் முஹம்மது யூசுஃபால் கணினியில் வடிக்கப்பட்ட அழகிய இயற்கை சூழ்ந்த பூங்காவன புகைப்படமும், அதற்கு மெருகூட்டி வழக்கம் போல் எம்மை எங்கோ அழைத்துச்செல்லும் உன் கவிவரிகளும் நூலைப்போல சேலை; தகப்பனைப்போல பிள்ளை என்பதை அழகாக இங்கு எடுத்தியம்பியுள்ளது'
தாயைப்போல பிள்ளை என்ற பழமொழியை இங்கு தகப்பனைப்போல பிள்ளை என்று மாற்றி எழுதியுள்ளேன். யாரும் சினம் கொள்ள வேண்டா....
அப்துல் ரஹ்மான், நீ உன் மகனுக்கு ஃபிரியாக இருக்கும் சமயம் உன்னைப்போல் கி.மு. (தொலைநோக்கு) கவிதைகள் வரைய மெல்ல மெல்ல கற்றுக்கொடு. புள்ளெ நல்லா வருவான் இன்ஷா அல்லாஹ்....
ஊட்லெ எல்லாருக்கும் என் சலாம் சொல்.
வரம்பு மீறினால் வம்பு
Busy as Bee என்று ஆங்கிலத்தில் சொல்வாரகள், Boundary as Bee என்று புதிய பழமொழி சொன்னாலும் பொருந்தும் போன்று அழகான வரிகள். வாழ்த்துக்கள்
இங்கு ஒரு விசயத்தை எழுதுவது பொருந்தும் தேனீக்களை பற்றி வான்மறை கூறும் கூற்றிற்க்கு ஏற்ப...தேனீக்களை பற்றி ஆராய்ச்சி முடிவு இவ்வாறு கூறுகிறது....ஒரு இடத்திற்க்கு ஈசியாகவும்,பல குறுக்குவழியிலும் சென்று எவ்வளவு விரைவாக அவ்விடத்தை அடைய முடியும் என்ற ஆராய்ச்சி செய்யப்பட்டதில் தேனீ ஒரு நவீன சூப்பர் கம்யூட்டர் சொல்லிய வழிகளில் செல்லும் நேரத்தைவிடவும் வேகமாக வந்தடையகுடிய பாதைகளை தெரிந்து வைத்து இருக்கின்றது
please visit
http://www.popsci.com/science/article/2010-10/bees-beat-computers-ability-solve-complex-math-problem
அஸ்ஸலாமு அலைக்கும். வரம்பு மீறலுக்கு பிரம்பு அடி இந்த கவிதை(கலை).ரானி தேனீ கொட்டித்தீர்தது தன் இனத்தின் மேல். கொட்டினால் வலிக்கும் ஆனால், இங்கோ நமக்கு இனிக்கும் கொட்டியும் ,திட்டியும் திகட்டாத பாடம் நடத்திய அழகியல் உம் கவிதை ஆனாலும் அளவிற்கு மீறிய அழகியல் என்பது தேன் என்றாலும் அளவிற்குமேல் உண்டால் விசமாகலாம்.தேனீக்களின் கூட்டம் கூட்டி ஆயிரம் தேசம் சென்றாலும் நாம் ஒற்றுமையாக ஒன்று கூடி நம் கூடாம் தாயகம் காப்பதும் , ஒற்றுமை பேனுவதும் கடமை என்பதை தித்திக்கும் தேனாய் வடித்திருக்கும் இக்கவிதை சமுதாயதுக்கு நல் மருந்தும் , இனிக்கும் விருந்தும்.
”crown”ஐ கண்டது உயரிய ஏமன் தேனை உண்டது போன்று உள்ளது
நேரம் கிடைத்தால் அலையுங்கள் சகோதரரே
தேனீக்களின் கதையை தேனாய் சொல்லிருக்கீங்க...
அசலாமு அலைக்கும் அனைவருக்கும் ,
எடிடராக்கா என்ன அந்த highlightல வர்ற drocera எனும் ஈக்கள்
உண்ணும் செடிவகையை காண்பிக்கும் விண்டோ வை வைக்காதது ஏன் ?
வைத்தால் நல்லது
படங்களின் தொகுப்பு கவிதையை மிஞ்சி விட்டது.
அப்துர்ரஹ்மான்,
கவிதை சொல்லிச் செல்லுகையில் அந்த தேனீக்கள் கூட்டத்தோடு ராணியை நானும் தொடர்ந்ததுபோன்றதொரு உணர்வை என்னில் உண்டாக்கியது உங்கள் தமிழின் வெற்றி.
அபு இபுறாஹிமும் நானும் பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் இருவரும் ஒத்துக்கொண்ட ஒன்றைத்தான் எல்லோரும் கருத்தாகப் பதிந்துள்ளனர்.
அது, உங்கள் கவிதைகளில் எது இருக்கிறதோ இல்லையோ அழகு இருக்கும், இதில் அது கூடுதலாகவே இருக்கிறது.
ஏனோ, அந்த அழகில் வரம்பு இல்லை. ரொம்பி வழிகிறது.
வாழ்த்துகள்.
ரெண்டு விசயம் மறந்துட்டேன். ஒன்று: குட்டி 16 அடி பாயுது. அழகான புகைப்படங்கள். மாஷா அல்லாஹ்.
இரண்டு: இப்படி எழுதுபவர்களுக்கு வயசாகாதாமே உண்மையா?
e படம் ! கண்ணில் படவில்லை, ஒருவேளை ஜன்னல் சாத்தியிருந்திருக்கலாம்... இப்போது பதிவில் !
தேனீ - பார்நீ
தொலைநோக்குப் பார்வை கொள்க
***** தொடராய் முன்னே செல்க
பலபட்ட தாக வேலைப்
***** பழுவினைசச் சமமாய்க் கொள்க
அலைபோலக் குழப்பம் வந்தால்
***** அலசியே யாய்ந்து கொள்க
வலைபோலப் பின்னும் பேச்சால்
***** வம்புகள் வளர வேண்டா
இவை நம்மால் முடியுமா? என்று ஐயமாக உள்ளதா? தேனீக் கூட்டத்தைப் பாருங்கள்; அவற்றிற்குக் கற்றுக் கொடுத்தவன் யாருங்க? (அவன் தான் படைத்தவன் !) (”உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான் “நீ மலைகளிலும் மரங்களிலும் உயர்ந்த கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்”(என்றும்)”பின் எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்” (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது; அதில் மனிதர்கட்கு(பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு; நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்கட்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது.( அல்-குர் ஆன் அத்யாயம் 16 (அல் நஹ்ல்); வசனம் 68-69)
1) தொலைநோக்குப் பார்வை அவசியம்:
ஒரு தேனீக் கூட்டம் பறந்துச் செல்லும் பாதையில் ஒரு பூந்தோட்டத்தைப் பார்த்தால் விரைவாக அபுபூந்தோட்டத்திற்குள் புகுந்து விடாது. அத்தோட்டம் பாதுகாப்பானது தானா அல்லது ஆபத்துகள் உள்ளனவா என்று தெரிந்து கொள்வதற்காகச் சிலரை மட்டும் உள்ளே அனுப்பி வைக்கும். எல்லாம் சரியென்று தெரிந்த பிறகு தான் மொத்தமாக உட்புகும்.
2) தொடர்ந்த முன்னேற்றம் அவசியம்:
ஒவ்வொரு தேனீயும் எப்பொழுதும் ஒரு மாணவனாகவே இருக்கின்றது. தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டு முன்னேறுகின்றது.
3) வேலைகளையும் அதிகாரங்களையும் பகிர்ந்து கொடுங்கள்:
ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணித்தேனீ தான் இருக்கின்றது. மற்ற எல்லா வகைத் தேனீக்கட்கும் அதுதான் தலைவி. ஆனாலும், ராணிதேனீ தனது அதிகாரங்களை அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கட்குப் பகிர்ந்து கொடுக்கின்றது.
4) எதிலும் சமநிலை இருக்கட்டும்:
ஒரு விடயத்திற்காக மற்றொன்றை இழக்காதீர்கள். ஒவ்வொரு தேன் கூட்டிலும் எந்த வகைத் தேனீ எத்துணை எண்ணிக்கையில் எவ்வளவு விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும் என்கின்ற கச்சிதமான கணக்குக் கூட உண்டு. இந்த எண்ணிக்கைகள் எப்பொழுதும் பிசகிவிடாதபடி தேனீக்கள் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.
5) எதையும் அலசி ஆராய்ந்து முடிவெடுங்கள்:
ஒரு குழப்பம் என்றால் அதை ஏழெட்டுத் தேனீக்கள் நுணுக்கமாக அலசி ஆராயும். அப்புறம் அவைகள் எல்லாம் தங்களுக்குள் கலந்து பேசி அதன் பிறகுதான் ஒரு முடிவுக்கு வருகின்றன.
6) தேவையானதை மட்டும் பேசுங்கள்::
சுற்றி வளைத்துப் பேச வேண்டா.”நான் இந்தப் பக்கம்; நீ அந்தப் பக்கம்; இதுதான் வேலை” என்று வம்பு பேசாமல் தகவற் பறிமாறிக் கொள்ளும் தேனீக்களின் மொழிப் புலமை வியப்பிற்குரியது!!!
நாமும் இவ்வண்ணம் நடந்தால் பேச்சு குறையும்; செயற்திறன் நிறையும்
Thanks kalam kaakka !
wonderful and much more info about honey bees.....!
//***** பழுவினைசச்// தட்டச்சுப் பிழை
”பளுவினை” சில நேரங்களில் கூகுள் இப்படிப் பழி வாங்கி ஜெமீல் காக்கா ஆசிரியரிடம் அடி வாங்க வைத்து விடுகின்றது. அறையில் நண்பர்கள் உறங்குவதால் விளக்கை அணைத்த பின்னர் தட்டச்சு செய்வதும்; மீள்பார்வை செய்யாமல் பதிவை வெளியிடுவதும் தவறென உணர்ந்து விட்டேன்
தம்பி ஹாரிஸ். இக்கவிதையும் கருத்தும் அதிரை அனைத்து முஹல்லாக் கூட்டம் அபுதபியில் நடந்த போழ்து வாசித்துக் காட்டினேன். இக்கருத்து AAMF பங்களிப்பாளர்கட்குப் பொருத்தமான யோசனையாகப்பட்டது. உங்கள் கவிதைகள் அதிகம் மென்மையும் அழகும் கூடியிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கருப்பொருள் வண்ணத்துப்பூச்சி, தேனீ போன்றவைகளா அல்லது உங்களின் உள்ளம் மென்மையானதா?
வரம்பு மீறலுக்கு சரியான விளக்க கவிதை.
தாயைப்போல் பிள்ளை ரஹ்மானைபோல் ரசனை
அப்துல் ரஹ்மான், நீ உன் மகனுக்கு ஃபிரியாக இருக்கும் சமயம் உன்னைப்போல் தொலைநோக்கு கவிதைகள் வரைய மெல்ல மெல்ல கற்றுக்கொடு. புள்ளெ நல்லா வருவான் இன்ஷா அல்லாஹ்....ஊட்லெ எல்லாருக்கும் என் சலாம் சொல்.
பார்த்தும் ,படித்தும் கருத்திட்ட அனைவர்க்கும் நன்றியும் சலாமும்
கவிதை அற்புதம்
ஆள் பாதி ஆடை பாதி போல
கவிதை பாதி
படங்கள் மீதி
ஆசிரியர்
---தமிழூற்று
இத்தேனீக்களின் குறுங்கதை பல விளக்கங்களை நமக்கு தெளிவு பெறச் செய்கிறது
அருமையான பதிவு அதற்கேற்ற புகைப்படம் வாழ்த்துக்கள் சகோ. HARMYS
Post a Comment