Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நானும் என் கணினிகளும் 30

அதிரைநிருபர் பதிப்பகம் | March 10, 2012 | , , , , ,


கணிக்கவியலாத காலகட்டங்களுக்கு முன் கைகளில் வாய்த்த முதற் கணினிக்குத் தெரியாது, எனக்கு கணினியை இயக்குதல் தெரியாது என்று. அதற்காக,பத்தாம்பசலியைப் பார்ப்பதைப்போன்றதொரு,இயல்புக்கு மாற்றமான பார்வையோடு இதை வாசித்தால் அது எனக்கெதிரான போர்குற்றமாகும், அநீதியாகும்.  அஞ்சிக்கொள்ளுங்கள்.

நாங்களும் காலாகாலத்தில் கல்லூரியும் சாயங்காலத்தில் பகுதி நேரமாக சென்னை அண்ணா சாலையில் BDPS எனும் instituteல கணினி குறியீட்டு மொழிகளும் (computer programming) கற்றவர்கள்தாம்.  நாங்களும்?  வேறு யார், நான் என்றால் எப்போதும் ‘அவன்’ நான் மட்டும்தான் (‘அது’ நான் மட்டும்தான் என்றுதான் முதலில் எழுதினேன். அஹ்மது காக்கா கையில் குச்சியோடு அஃறிணையைப் பார்த்து முறைப்பதைப்போல மனக்கண்ணில் கண்டு ‘அவன்’ என்றாக்கினேன்); ‘நாங்கள்’ என்றாலோ ‘அவர்கள்’ எப்போதும் நானும் அவனும்தான்.  அவ்வவன் வேறு யாருமல்லன், நம்ம அசத்தல் மன்னன் ஜாகிர்தான்.  இவன் யார்கூட இருந்தாலும் இவனைப்பற்றி எழுதி வைக்குமளவுக்கு நிறைய பாதிப்புகளை உண்டு பண்ணிவிடுவான். இப்படித்தான் நண்பன் இக்பாலுக்கு இவன் என்னவோ பண்ணிவிட அவனும் “ஜாயிர்ஸேன்” என்று ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சான்.  அந்தத் தொடர்ல…வெயிட் எ மினிட்.. நம்ம ட்ராக் மாறி போறோம்னு நினைக்கிறேன். ஒரு யு ட்ட(ர்)ன் அடிச்சு வாங்க பழைய மேட்டருக்கேப் போயிடுவோம்.

அப்படித்தான் நாங்களும், (இப்ப ‘நானை’த்தான் கெத்தா இருக்கட்டுமேன்னு ‘நாங்களும்’ என்கிறேன்), அந்தக் காலத்தில் “ட்டாக் ஆஃ தி ட்டவுன்”(talk of the town) ஆக இருந்த கோபால் (COBOL) ப்ரொக்ராமிஙைக் கற்றுக்கொண்டு முதல் வகுப்பில் பாஸாகினோம்.  என் போறாத காலம், மற்ற விஞ்ஞானங்களைப் போலவோ வரலாறு-புவியியல் போலவோ மெதுவாக மாற்றம் காணாத கணினி உலகம் சட்டு புட்டுனு ஃபோர்ட்ரான் (FORTRAN), ஜாவா (JAVA), அது இதுன்னு மாறி நாளொரு மொழியும் பொழுதொரு குறியீடுகளுமாக அசுர வளர்ச்சி அடைந்துபோய் விட்டது.

நான் படித்த கோபால் ப்ரொக்ராமை பழைய பேப்பர் கடையில் கூட போட முடியவில்லை.  ஹார்ட் காப்பிக்குத்தான் (hard copy) எடைக்கு எடையாம். பிறகென்ன? காசு கொடுத்துதான் நிலக்கடலை வாங்கினேன்.  இவ்வாறாக என் கணினி அறிவு கால ஓட்டத்தோடு ஒன்றாமல் போனதற்கு என் தொழிலும் ஒரு காரணம்.

நீங்கள் எந்தக் காரைக் கொடுத்தாலும் கொஞ்ச நேரம் அதோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு என்ன பிரச்னைனு சொல்லிடுவேன்.  நாடிகூட பிடித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், எல்லாம் வாய்ச்சவடால்தானே தவிர ஒரு போல்ட்டைக்கூட கழட்ட தெரியாது.  என் மவ கூட வேக்யூம் மெஷினிலிருந்து ட்டிவி ரிமோட் வரை எல்லாத்தையும் பிரிச்சு சரி பார்த்துடுவா.  எனக்கோ எந்த உபகரணத்தைப் பிரித்து மாட்டினாலும் நாலைந்து ஸ்க்ரூவோ போல்ட்டோ (ஸ்க்ரூகளோ போல்ட்களோ என்று திருத்தி வாசிக்கவும்) மிஞ்சிவிடுகின்றன.  ஆனால், பார்ப்பதற்கு எல்லா இடத்திலும் ஸ்க்ரூ & போல்ட் சரியாக இருக்கும்; மிஞ்சியவை எங்கே இருந்தன என்பது 10 மார்க் கேள்விபோல குழப்பமாகவே இருக்கும்.  (யாராவது என்னை அதட்டுங்களேன்.  அப்பதான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி முடிப்பேன்.  இல்லேன்னா இப்படித்தான் எதாவது ஓரு சம்பவ அலை வந்து அப்படியே அடிச்சிக்கிட்டுப் போய்விடும். செய்தி மறந்து போய்விடும்)

ஆச்சா? எங்கே விட்டேன். ஆங்! இப்பவும் புல்டோஸரிலிருந்து அத்தனை கனரக எந்திரங்களையும் பழுது பார்க்கும் எனக்கு கோபாலை வைத்து, ஐ மீன், கோபால் ப்ரொக்ராமிஙை வைத்துத் தற்கால கணினி காரியங்களில் குப்பை கொட்ட முடியாததால் நேரம் வாய்க்கும்போதெல்லாம் ஒன்றிரண்டு பொத்தான்களை அழுத்தி என்ன நடக்கிறது என்று அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக (சீரியஸான கொஞ்சமாக) கற்றுக்கொண்டு வந்தேன்.  இடைக்கிடையே இவன் வேறு பய்முறுத்துவான். இவன்னா? அவன்தான்!

“ஏன்டா, மெயில் அனுப்பினேனே பதிலையேக் காணோம்?” என்று கேட்டால்
“மறக்காம ஸ்டாம்ப் ஒட்டினியா?” என்று சீரியஸா கலாய்ப்பான்

“என்னடா, ஈ மெயிலுக்கு ஸ்டாம்ப் ஏன் ஒட்டனும்?” என்று ‘அப்பாவி’னால்

“சரி சரி விடு. நான் இங்கு கோலாலம்ப்பூர் ப்போஸ்ட் ஆஃபிஸில் விசாரிச்சுக்கிறேன். வந்திருந்தா வாங்கிக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு,

“அதிருக்கட்டும், நான் அனுப்பின ஃபோட்டோ வந்ததா?” என்று கேள்வி எழுப்புவான்.

“போஸ்ட்லயா?” என்ற வினாவுக்கு

“ஈ மெயில்லதான்டா!” என்று விடையளிப்பான்

“வரலயடா” என்றால்

“சரியாப் பாருடா. நீ கவனிக்காத நேரத்தில வந்து ட்டேபிள் கீழே விழுந்து கிழுந்து கிடக்கப் போவுது” என்று பீதியைக் கிளப்பினால் நான் என்ன செய்வது

“ஙே” என்று விழிப்பதைத் தவிர?

கம்ப்யூட்டர் அறிவு குறைவா இருக்கிறத வச்சி சின்ன கோளாறுக்கு நிவர்த்தி கேட்டாலும் “வைரஸ் அட்டாக் ஆகியிருக்கும். எதுக்கும் கம்பளியைபோட்டு போர்த்தி ஆவி பிடிச்சிப் பாரு”ன்னு வழிசொல்ற நண்பர்களை வைத்துக்கொண்டு நானும் 25 வருஷங்களைக் கடந்து வந்துட்டேன்.  இப்பத்தான் நீங்கள்லாம் கணினி பிரயோகிக்கிறீர்கள், அப்பல்லாம் நாங்கள் கம்ப்யூட்டர்தன் யூஸ் பண்ணுவோம், கணினியெல்லாம் கிடையாது. எல்லாம் செம்மொழியான பிறகுதான் தீவிரமா கணினியாகிப்போனது. சர்தான்.

இப்படி கொஞ்சநஞ்சம் கணினித் தெரிஞ்சவன்லாம் ‘ஓட்டுற’ அளவுக்குத்தான் என் கணினி அறிவு.  இப்ப சமீத்திலே அபு இபுறாகிம் என்னிடம் மாட்டிக்கிட்டாரு.  அவர் மகனுக்கு ஆன் லைன்ல சொல்லிக்கொடுக்கிறதுகூட ஈஸியாம் எனக்கு, “முடியல..வாணாம்... வாணாம். இதோடு நிறுத்திக்குவோம்” நு கதறுகிற அளவில்தான் இருக்கு என் கணினி அறிவு.

இதையெல்லாம் ஏஞ்சொல்றேன்னா. இப்ப சமீப காலமா எந்தப் பொத்தானை அழுத்தினாலும் எலியை அசைத்தாலும் புதுசா கல்யாணம் பண்ணின காலத்திலே தம்பதிகளின் அறைக்கதவுக்கு மாட்டுவாங்களே மெல்லிசா ஒரு மறப்பு, அதைப்போல கணினித் திரையில் தோன்றி, “மீண்டும் துவக்கு” என்று ஆங்கிலத்தில் வட்டம் வட்டமாகச் சுற்றுவது வழக்கமாகிப் போனது. நானும் மறு பேச்சு பேசாமல் சொன்னபடி செய்து வந்தேன் என்றாலும் இப்பவெல்லாம் அடிக்கடி இப்படி ‘படுத்த’ ஆரம்பித்துவிட்டது.  சம்பவம் நடந்த அன்னிக்கு, சரியாக இரவு 12 மணிபோல, தூக்கக்கலக்கத்தில இருக்கும்போது திடீர்னு ஒரு பொத்தான் மாதிரி தோன்றி “உன் பிரச்னைக்கெல்லாம் ஒரே தீர்வு வேண்டுமா?. இதை அழுத்து” என்றது. தட்சனை ஏதும் கேட்காததால் அது கம்ப்யூட்டர் ஜோஸியம் அல்ல என்று உறுதி செய்து கொண்டேன். ரெக்கவ்ரி என்ற சொல்லுக்கு அகராதிப்படி அர்த்தம் கொண்ட நான் அதை அழுத்த... ரொம்ப நேரம் பைப்புக்குள்ளே தண்ணி ஓடுவதும் முடிந்து மீண்டும் ஓடுவதும், 100% முடிந்துவிட்டதாகச் சொல்லி வேறு ஏதாவாது காரணம் சொல்லி மீண்டும் மீண்டும் ஓடுவதுமாக ஏதோ செய்துகொண்டிருந்ததால் காத்திருக்கும்போதே நான் அசதியில் தூங்கிப்போய் விட்டேன்..

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இன்னும் ஈரமாக இருப்பதுபோல ஒரு பிரம்மையைத் தந்த என் கணினி, என்னோட பழைய பாடல்கள் சேமிப்பைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு அன்றலர்ந்த மலர்போல, இப்பதான் பிறந்த குழந்தைபோல ரொம்ப ஃப்ரெஷ்ஷாக என்னையப் பார்த்து ‘பெப்பே’ என்றது.  அபு இபுறாஹிமிடம் பரிகாரம் கேட்டதற்கு அவர், “*&^%$)(*&@#” என்றார். இவ்வளவு விஷயம் புரிந்திருந்தால் இவரிடம் நான் கேட்பேனாக்கும்?

வந்து சரி செய்து தருவதாகச் சொல்லி யிருக்காரு. யாராவது அவருக்கு அஜ்மானுக்கு வழி சொன்னால் ஷேமமாயிருப்பிய.

-Sabeer abuShahruk

30 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கோலாலம்பூருக்கு 'டச்' இருந்தும் கணினி கலை இப்படியா! கவிக்கலை அருமையாக இருக்கே அது போதும்.

நாளை, சாருக் உங்க கணினிக் குறைக்கு மாற்றாக கலைநயம் படைக்க வாழ்த்துக்கள்.

ஏழோடு இரண்டு பூஜ்ஜியம் சேர்த்து காசோலையாக எடிட்டருக்கு அனுப்பி இத்திஹாத் அல்லது யூனியன் சதுக்கத்திலிருந்து E400 நம்பர் பஸ்ஸில் வர அழைப்பு கொடுங்கள்.அதிரை To ஒரத்தநாடு தூரம் தான் என்பதையும் சொல்லிவிடுங்கள்.ஒருவாரம் பொறுத்தால் எடிட்டரின் கைப்பக்குவத்தில் கணினிக்கு சேமம் கிடைக்கும்.அதற்கு என் துஆ.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

காலையிலேயே புன்முறுவலுடன் படிக்கவைத்த சுவராஸ்யமான உண்மைக்கதை.

ஆன்லைன் அப்பாக்களான எங்களிடம் கோபால் என்று சொன்னால் அந்தக்காலத்தில் மிலாரிக்காட்டிளிருந்து வீட்டுக்கு வேலியடைக்க ஒருவர் வருவார் அவர் பெயர் கோபால்.

ஜாவா என்றால் அந்த பெயரில் ஒரு மோட்டார் பைக் பிராண்டு இருந்ததுதான் தெரியும்.

எங்கள் காலத்தவர் ஒருவரிடம் வேலைக்கான இன்டர்வியூ வில் கம்ப்யூடர் தெரியுமா என்று கேட்கப்பட்டபோது தெரியும் பார்த்து இருக்கிறேன் என்று பதில் அளித்தாராம்.

ஆனாலும், காலச்சூழலில் பயிற்சி நிலையங்களில் போய் கற்றுக்கொள்ளாமல் தாங்கள் ஆற்றும் பணிக்குத்தேவையானவற்றை கற்றுக்கொண்டபவர்களும் அதிகமே.

அப்படிப்பட்டவர்களின் பிரச்னை என்னவென்றால் அடிக்கடி ஆலோசனைக்கு அபூ இப்ராஹிம்களை தேடவேண்டி வருகிறது; அஜ்மானுக்கு வழிசொல்வதுபோல் ரஷிதியாவுக்கு வழிசொல்லவேண்டி இருக்கிறது.

எதையும் ரசிக்கும் வண்ணம் எழுத்தில் கொண்டுவரும் தம்பி சபீருக்கு பாராட்டுக்கள்.

இப்ராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இப்புடி சிரிக்க வச்சா எப்புடி சீரியஸா வேலையா பார்க்கிறது !?

இருந்தாலும் அசத்தல் காக்கா சொன்ன அந்த கோபால் மேட்டரு சாப்பிடும்போது பொறை ஏறிடுச்சு காக்கா !

அப்போ கம்புயூட்டர் தானே காக்கா இருந்திச்சு இப்போ மாதிரி கணினி இல்லையே !! :)

அந்த கீபோர்டு செக்கடிப் பள்ளி படிமாதிரி ஒவ்வொரு கீயும் இருக்கும்! அதோட லுக்கும் அப்படித்தான்

Anonymous said...

இந்த காலத்தில் கணினி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு வேலைக்கு சென்றால் கணினி தெரியுமா என்று கேட்கிரார்கள். இப்பொழுது கணினி மையமாக ஆகிவிட்டது இந்த காலம்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

படித்தேன்.

ரசித்தேன் .

சிரித்தேன்.

U.A.E.பற்றி எனக்கு தெரியாததால் அஜ்மானுக்கு வழி சொல்லத் தெரியாமல் முழித்தேன்.

சபீர் காக்கா கவிதைகளில் மட்டுமில்லை.வார்த்தை விளையாட்டிலும் வெண்டவர் என்பதை புரிந்துக் கொண்டேன்.

“சரியாப் பாருடா. நீ கவனிக்காத நேரத்தில வந்து ட்டேபிள் கீழே விழுந்து கிழுந்து கிடக்கப் போவுது” என்று பீதியைக் கிளப்பினால் நான் என்ன செய்வது

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல ரசனையுள்ள எழுத்து.படிக்க சுவராசியமாகவுள்ளது.நன்றி காக்கா

அப்துல்மாலிக் said...

தெரியாத்தனமா எதையோ செஞ்சி அதனால் கணிணியில் அனைத்து ஃபைலையும் இழந்து அதையும் அதிரைக்கேயுரிய குசும்போடு (நாங்களும் ரவுடிதான்)சொன்னவிதம் அருமை, இதுக்குப்பேருதான் சமாளிஃபிகேஷன் என்பதோ? :)

ZAEISA said...

bro ,sabeer ...அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க ஒன்னு செய்ங்க.....பேசாம எங்கேயாச்சும் ஒரு கோபாலை தேடிப்புடிச்சு
கூட வச்சுக்கிட்டு,கணினியை புல்டோசரின் மேலேயோ,கீழேயோ வச்சு
பொத்தானை அழுத்திப் பாருங்களேன்.சரியாவுமென்று நினைக்கிறேன்.(ETA ASCON கேம்ப்ல போனா எப்படியும் ஒரு கோபால் கிடைக்க வாய்ப்புண்டு)

Shameed said...

கோபால் படிச்சிங்களா ! நாங்கள்ளாம் கோபால் பல் பொடிலே பல்லுதான் வெளக்குனோம்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// கோபால் படிச்சிங்களா ! நாங்கள்ளாம் கோபால் பல் பொடிலே பல்லுதான் வெளக்குனோம் //

ஹா ஹா ஹா .......

கோபால் பல் பொடியை ருசித்தவர்கள் ஏராளம்.அதில் நானும் ஒருவன்.
நல்லதுக்கு காலமில்லை என்பதினால்.நல்ல பல் பொடியெல்லாம் காணாமல் போய்கொண்டே வருது ஹமீது காக்கா.

ZAKIR HUSSAIN said...

இங்கு உள்ள சில ரெஸ்டாரன்ட்களில் பழக்கப்பட்ட சில பேருக்கு மட்டும் " சொந்தக்கறி இருக்கு வேணுமா?' என கேட்பார்கள். அது அங்கு வேலை பார்க்கும் ஆட்களுக்கு சமைத்தது. சமயங்களில் நாம் மறந்து விட்ட "கருவாடு&மொச்சைக்கொட்டை" சமாச்சாரம் எல்லாம் இதில் தான் கிடைக்கும். அதுபோல் இந்த பதிவுக்கு நான் எழுதிய பதில் இணைத்திருக்கிறேன்,. சமயங்களில் பொதுவில் வராமல் நான்,சபீர்,சாகுல், யாசிர்,அபுஇப்ராஹிம் எழுதிக்கொள்ளும் இ-மெயில் இப்படியும் சுவாரஸ்யமாக "சொந்தக்கறி" மாதிரி இருக்கும்.

e-mail:


பாஸ்...கால ஒட்டத்தில் மாட்டுக்கு லாடம் அடிக்கிற கோபால் பிரசித்தி பெற்ற அளவுகூட நாம படிச்ச "கோபோல் ப்ரோக்ராம்" பிரசித்தி பெறவில்லை என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//e-mail:
பாஸ்...கால ஒட்டத்தில் மாட்டுக்கு லாடம் அடிக்கிற கோபால் பிரசித்தி பெற்ற அளவுகூட நாம படிச்ச "கோபோல் ப்ரோக்ராம்" பிரசித்தி பெறவில்லை என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது.///

ஒன்ஸ்மோர் ப்ளீஸ் ஸாரி ஒன் மோர் ப்ளீஸ் ! :)

Yasir said...

காலையில் எழுந்தவுடன்..கன்னாபின்னாவென்று சிரிப்பை வரவழைத்த பதிவு....நீங்க கமெடி கூட நல்லா பண்ணுறீங்க காக்கா

Yasir said...

ஜாஹிர் காக்கா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...”கோபாலை பற்றி நீங்க அடிச்ச ஜோக்கு மட்டும் பத்தாது ஜோக்குகள் வேண்டும் “ :)

KALAM SHAICK ABDUL KADER said...

மடிக்கணினியின் மடலாய்
மடித்து வைப்பதலோ
மடியின் மீது வைப்பதாலோ
”மடிக்கணினி” என்றானேன்

குடிசைக்குள்ளும்
குடிபுகுந்தேன்
படிக்கும் மாணாக்கர்
பள்ளி”நோட்புக்” ஆனதால்

விலையில்லா பண்டமான
நிலையில் என்னை
அறிமுகம் ஆனதால்
பறிபோனது முந்தைய ஆட்சி!

இனிவரும் காலங்களில்
இன்னமும் “இலவசம்”;
கனியாய் வெற்றியைக்
கணிப்பவன் மடிக்கணினி

முன்னே பிறந்த
என்னுடைய அண்ணன்
கைப்பேசி உலகைக்
கைக்குள் அடக்கினான்
கைக்கெடிகாரம், கணிதப்பொறி
வணிகத்தை முடக்கினான்;நானோ
அவனையும் என்னுள் அடக்கினேன்;
அவன் வழியில் அனைத்தையும்
மடக்கினேன்;முடக்கினேன்!!!

என்னைத் திறந்தவர்
எல்லாம் மறந்திடுவர்
மூளையால் உலகின்
மூலையெலாம் பறந்திடுவர்

எண்ணிலாத் தளங்கள்
என்னிடம் உள;
விண்ணின் வழியே
விண்மீன்களாய் வலைப்பூக்கள்;
இதயதளங்களை இணைக்கும்
இணையதளங்கள்; இதனால்
வணிகவளங்கள்

அறிமுகம் ஆகியே
நட்புமுகம் கூட்டும்
முகநூல் பக்கம்;
முழுநேரம் மக்கள்
விழுகின்றனர் அதன் பக்கம்!!

தன்மக்களை
தன் தோளில் சுமந்திடாத்
தந்தையர் பலர்
என்னை மட்டும்
தன்னோடு சுமக்கின்றனரே?!

ஆலோசனைக் கூட்டம்
ஆரம்பமே என்னை
“ஆன்” செய்வது கொண்டே

”நோட்புக்” ஆகிய நான் ஈன்ற
”மாத்திரை”க் குழந்தைகள் (டேப்லெட்ஸ்)
சிலேட்டுகளாய் வலம்

நோட்புக் என்றால் நான் தான்;
சிலேட் என்றால் டேப்லெட்
கல்லுக்குச்சி என்றால் பென்ஸ்டிக்

ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகளாய்
ஒழுங்காய்ப் போய்க் கடைகளில்
நோட்புக், சிலேட்,கல்லுக்குச்சி
வாங்கினாத்தான் வளம்பெறலாம்

“கவியன்பன்” கலாம்

sabeer.abushahruk said...

ஆக்ச்சுவலா ஜாகிர் இன்னொரு ஜோக்கும் எழுதினான்:

கோபால் ப்ரொக்ராமிங் படிச்சவங்களைவிட கூத்து கட்டுறவங்களுக்கு கூட ப்ரொக்ராம் அதிகமா கிடைக்குதாம்

sabeer.abushahruk said...

கோபால் ப்ரொக்ராம்மிங் படிக்கையிலே வகுப்பிலேயே அதிகம் டவுட் கேட்டது ஜாகிர்தான். இவன் கேட்கிற டவுட்களுக்கு பயந்து வாத்தியாருக்கு ஒரு முறை வாந்தி பேதியெல்லாம் ஆயிடிச்சின்னா பார்த்துக்குங்களேன்.

இவன் கேட்ட டவுட்டை வாத்தியார் க்ளியர் பண்ணும்போது ஒரு தடவைகூட கவனிக்கமாட்டான்.

ஆனா, ஒவ்வொரு முறையும் டவுட் கேட்டுட்டு மெதப்பா வலது புறம் ஏன் திரும்பினான் என்பது எனக்கு புரியாத புதிர்.

ரஜாக் பாய், கம்பெனி ரகசியங்களைச் சொல்றேனு நெனைக்காதிய. நீங்க எனக்கு சொன்ன ரோசனையைப் பார்த்துட்டு பித்துப்பிடிச்சுப்போச்சி. அந்த அதிர்ச்சியிலிருந்தூ மீளவே இல்லை. அப்பா பேரான்டிக்குச் சொல்றமாதிரி என்ன ஒரு ஐடியா.

எம் ஹெச் ஜேவிலேர்ந்து கவியன்பன் வரை ரசிச்சிதான் படிச்சிருக்கியன்னு தெரியுது.

நாங்க படிக்கையிலே கோ எஜுகேஷன் என்னும் அசெள்கரியம் இருந்துச்சி. நாங்க இடது பக்கம் அதுங்க வலது பக்கம். மீசை ஒட்டடைமாதிரி வளர்ந்திருந்த காலம். படிச்சி முடிப்பதற்குள் கோபால் கொட சந்ஜ்சிபோச்சி.

Unknown said...

கோபால் ப்ரொக்ராமிங் படிச்சவங்களைவிட கூத்து கட்டுறவங்களுக்கு கூட ப்ரொக்ராம் அதிகமா கிடைக்குதாம் ....
---------
பாஸ்...கால ஒட்டத்தில் மாட்டுக்கு லாடம் அடிக்கிற கோபால் பிரசித்தி பெற்ற அளவுகூட நாம படிச்ச "கோபோல் ப்ரோக்ராம்" பிரசித்தி பெறவில்லை என்பது உங்கள் எழுத்தில் தெரிகிறது. .......
--------------------------------
நான் படித்த கோபால் ப்ரொக்ராமை பழைய பேப்பர் கடையில் கூட போட முடியவில்லை. ஹார்ட் காப்பிக்குத்தான் (hard copy) எடைக்கு எடையாம். பிறகென்ன? காசு கொடுத்துதான் நிலக்கடலை வாங்கினேன்.
------------------------------------------
ஒரே கோவாலு காமெடி தான் போங்க :)

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே, உங்ககிட்ட ஐடியா கேட்டா காசை அப்பி குடுக்கிறியலா? சும்மா ஏழுன்னாலும் பரவால்லே ரெண்டு சைபர் வேறயா? "வரேன் வரேன்"ன்னு சொல்லிக்கிட்டு இருந்த அபு இபுறாஹீம் இப்ப "ஏழாந்தேதி வரேனே, ஏழு மணிக்கு வரேனே, ஏழு நாளாகட்டுமே" என்று அந்த ஏழுலேயே குறியாயிருக்கார். 

அன்சாரி காக்கா, 
புன்முறுவலோடு படிச்சத சொன்னதை சாப்பிடும்போது படிச்சதால் பொன் முறுவல்னு படிச்சு தொலைச்சிட்டேன். அப்புறமென்ன? கட்ட தோசையிலேது பொன் முறுவல்?

உங்க/நம்ம காலம் எவ்ளோவ் தேவலாம் காக்கா. ஏம்புள்ளைலுவோ எங்கும்மா ரொம்ப கண்டிச்சி சத்தம் போடுதுன்னு "புல்லட்"னு பேர் வச்சிடுச்சிவோ. புல்லட் பைக்தான் டப டபன்னு ரொம்ப சத்தம் போடுமாம். ஜாவா எப்படின்னு தெரியாது.  எனக்கு மினி புல்லட்னு பேர் வச்சிடுங்களோ என்று பயந்து கண்டிக்கும்போதுகூட பேப்பர் எக்ஷுதிக்காட்டிதான் கண்டிக்கிறேன். கெரகம் புடிச்சதுவோ இந்த கால புள்ளைலுவோ.

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம், 
கூகிள்ல கொடுத்து நம்மாட்கள் ஜோக்கையெல்லாம் எமனில மொழிபெயர்த்து உங்காளை வாசிக்க வைத்தால் கணினிமேல் பலன்... சாரி கைமேல் பலன் கிடைக்குமே? கிவ் எ ட்ரை யார்!

எல் எம் எஸ், சிரிச்சேன்னீங்கள்ல? தான்க்ஸ்பா. சிரிக்க வைப்பது மட்டும்தான் இந்தப் பதிவின் நோக்கம். 

அர அல, ஷுக்ரன் ஜஸீரன். ஜஸாக்கல்லா க்ஹைர்! 

அப்துல் மாலிக்,
நெஜமாவே நானு "நானும் ரவுடிதான்"

அபுபக்கர் அமேஜான், வந்தாச்சா? இவ்ளோவ் சிரிப்பு காட்டியும் சிரிக்காம சீரியஸா சொல்றதப்பார்த்தா... வெல்கம் ட்டு எமரைட்ஸ்!

ஹமீது,
கோபால் பல்பொடியாவது இந்தியா இலங்கைல எல்லாம் ஃபேமஸ். நாம்படிச்சதோ? 

யாசிர்,
ஃபோனிலும் சிரித்ததற்கு நன்றி. எனக்குத் தெரியும் உங்களுக்குப் பிடிக்கும்னு.

sabeer.abushahruk said...

இந்தப் பதிவுக்கான கருத்துக்களில் படித்தவுடன் சிரியோசிரியென்று சிரித்தது:

.(ETA ASCON கேம்ப்ல போனா எப்படியும் ஒரு கோபால் கிடைக்க வாய்ப்புண்டு)

கவியன்பன்,

//தன்மக்களை
தன் தோளில் சுமந்திடாத்
தந்தையர் பலர்
என்னை மட்டும்
தன்னோடு சுமக்கின்றனரே?!//

வொன்டர்ஃபுல்!

ஹார்மீஸ்,

சந்தோஷமாயிருக்கு எல்லோரையும் கொஞ்சநேரம் சிரிக்க வைத்தோமே என்று. 

ஜாயிரு, மேற்கொண்டு ப்பேசவிடாதே என்னைய. அப்புறம் நீ ர்க்ஷா ஓட்ன மேட்டரையெல்லாம் எடுத்து விட்ருவேன்.

அ.நி.: ஏற்புரை முடிஞ்சுது. அடுத்த ஆட்டம் ப்ளீஸ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்றே வந்திருக்கலாம்... 'ஏழு நாட்களை' கையிலெடுத்துக் கொண்டு இப்புடியா !!

நானும் கோபால் புரோகிரோம் நீங்க தேய்ச்ச பெஞ்சில இருந்துதான் கற்றேன்... காலையில் தியரி இரவில் பிராக்டிகல் (மெய்யாலுமே கம்ப்யூட்டரில் தான்)... அப்போ அங்கே சேர்ந்த செட்டில் ஐவரைத் தவிர மற்றவர்கள் வெவ்வேறு வழிகளை தேடிக் கொண்டனர்...

பி.டி.பி.எஸ்.ஐ விட்டு வெளியில் வந்து ஒருநாள் கூட கோபாலை திரும்பி/திருப்பி பார்க்கவேயில்லை அந்த நேரத்திலதான் டிபேஸ்,கிலிப்பர் அப்படின்னு அடுத்தடுத்த மொழி செழிக்க ஆரம்பித்தது...

இதையெல்லாம், மவுனமாக ஒருத்தங்க வாசிச்சு கிட்டுதான் இருப்பாங்க... எல்லோரையும் ஃபோட்டோவோட வாங்கன்னு சொன்னவொதான்.... அவ்வொளுக்கும் தெரியும் இந்த கோவாலு என்ன பாடு படுத்தியது அப்போ !

Anonymous said...

நான் வந்து மூன்று வாரம் ஆச்சு துபாய்க்கு.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நானும் என் கணிணிகளும்

கலகலப்பான அனுபவம்!

நல்லவேளை நான் அந்த கோபால் பக்கம் போகவேயில்லை!

நேராக கணிணி பக்கம் சென்று விட்டதால் ....

//// நான் படித்த கோபால் ப்ரொக்ராமை பழைய பேப்பர் கடையில் கூட போட முடியவில்லை. ஹார்ட் காப்பிக்குத்தான் (hard copy) எடைக்கு எடையாம். பிறகென்ன? காசு கொடுத்துதான் நிலக்கடலை வாங்கினேன். ////

எடைக்கு எடை போட வாய்ப்பு இல்லாமல் ...

Shameed said...

மலை ஏறின கோபாலை இழுத்து வச்சி கும்மி அடிகிறீங்களே இது நியாயமா?

Anonymous said...

'ஹூமர், சூப்பர் ரசனை, கில்லி விடும் கிண்டல்' இவைகள் அனைத்தையும் ஒருங்கே வைத்திருக்கும் ஒருவர் ஒளிந்திருந்து கொண்டு சொன்னார்....

இதெல்லாம் மின்னஞ்சல் வழின்னு போட்றாதீங்கன்னு சொல்லனும்னு தோனிச்சு சொல்லியாச்ச்

சரியா ! அதை மட்டும் போடலை !

நெறியாளர்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அட ! இந்த கோவாலு (கோபாலு) கத நல்லாதான் ஈக்குது! நோபால்ல சிக்ஸர் அடிச்சமாதிரி சும்மா கும்முன்னு...... என் சகோ. அர.அல 8ம் வகுப்பில் எழுதிய ஒரு சிரிப்பு நாடகத்தின் வசனம் ஏன்டா கோவாலு இப்படி எலச்சிட்ட( அந்த கோவாலா நடிச்சது நல்லமுகமது வாத்தியாரின் மகனார் பாரூக் அவர் தடித்த மேனி உடையவர்)டைம்மிங்கா கின்டலா காமடி இருந்ததால ஒரே வெடி சிரிப்பு இத படிச்சதும் இப்ப அந்த நியாபகம் வந்துடுச்சி.

Yasir said...

//நான் வந்து மூன்று வாரம் ஆச்சு துபாய்க்கு.// pls send your contact no to mdyasir@msn.com or call me 050-5498710

Kuthub bin Jaleel said...

//இதையெல்லாம், மவுனமாக ஒருத்தங்க வாசிச்சு கிட்டுதான் இருப்பாங்க... .......... அவ்வொளுக்கும் தெரியும் இந்த கோவாலு என்ன பாடு படுத்தியது அப்போ !//.

இன்றுதான் இதைப் படிக்க நேர்ந்தது. தம்பி நெய்னா தம்பி (தம்பிகளுக்கு நடுவில் நெய்னா - ஆம், நிறைய அதிரைத் தம்பிகளுக்கு நடுவில்) காக்கா கோபாலு விஷயத்தில் நன்றாகத்தான் இழுத்து விடுகிறார். என்னைவிட கோவாலுக்கு ஏக போக ஏஜென்ட் ஒருத்தர் இருக்கிறார். அனுகவும் - நண்பர் மௌஜூன், நண்பர் of நண்பர்கள் சபீர் and சபீருடைய நண்பர் ஜாயிர். (எல்லாம் கோவாலுடைய பாதிப்புத்தான்)

sabeer.abushahruk said...

குதுப்,

என்ன இங்கே நிக்கிறிய? எல்லாரும் போய்ட்டாங்க. நீங்க மட்டும் தனியா நிக்கிறிய? பயமா இல்லையா?

(அட கோவாலு, குதுபை வீட்டுக்குக் கூட்டிட்டு போடா)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு