Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெளிச்சம் காண்பீர்... 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2012 | , , , , ,


அதிரை ஈன்றெடுத்த
அருமைப் பெண்டிரே
அன்புச் செல்வங்களின்
அவலம் கண்டீரா ?

பனிரெண்டு வருடங்கள்
புத்தகப் பொதி
பள்ளி இறுதி ஆண்டில்
பரிட்சை நேர சதி ?

எதைப் படிக்க
என்றொரு தடை
எப்படிப் படிக்க
என்றொரு தடை

மட்டைப் பந்தாட்டமென
மதி மயக்கும் தடை
நட்சத்திர இரவுகளின்
நேரலைவழித் தடை

தடையோட்ட முடிவில்
தவிக்கின்ற மாணவனுக்கு
மின்வெட்டு ரூபத்தில்
மீண்டுமொரு தடை

மண்கெட்டுப் போனால்
முளைக்காது தாவரம்
மின்வெட்டு என்றால்
படிக்காதா கண்களும்?

அத்துணையும் விளக்கனைத்து
அரசாங்க நிலை சரியும்
அஸ்தமன நேரம் மட்டும்
அறிமுகம் செய்து வைக்கும்

ஒரேயொரு இறை படைத்த
ஒற்றை விளக்கெரியும்
கற்றைக் கதிர் ஒளியில்
கற்றிடல் சாத்தியமே

பிழைக்க இடம்பெயர்ந்த
பெற்றவரை நினையுங்கள்
படிக்கத் தடுமாறும்
பிள்ளைக்கு உதவுங்கள்

படிக்கும் நேரங்களை
புரட்டிப் போடுங்கள்
விடியலில் துவங்கி - நாள்
முடியும்வரை படிக்கலாம்

மின்கலத்தில் நிரப்பிய
மின்சாரம் சேமித்து
விளக்குகள் மட்டுமே
ஒளிர்வித்து உதவுங்கள்

அறிஞர்களில் பலபேருக்கு
அரிக்கனே மின்சாரம்
முனைவர்களில் பலருக்கு
மெழுகுவர்த்தி ஒளி தந்தது

இணையதளம் தவிருங்கள்
இதயபலம் கூட்டுங்கள்
பாடப்புத்தகம் மட்டுமே
படிப்பதற்குக் கொடுங்கள்

மின்வெட்டு பூதத்தை
மனோதிடத்தால் விரட்டுங்கள்
நம்பிக்கை மின்சாரத்தை
நரம்புகளில் ஏற்றுங்கள்

படித்த சமுதாயம்
பன்மடங் காகட்டும்
பலரும் மெச்சும்படி
பட்டதாரி யாக்குங்கள்

-சபீர்

36 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மின் வெட்டுக்கு ஆதரவு?

மனம் மட்டும் நல்லா இருந்தால் எப்படியும் படிக்கலாம் நல்ல கவிதை மகனுக்கு!

சூப்பர் கவியாக்கா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மண்கெட்டுப் போனால்
முளைக்காது தாவரம்
மின்வெட்டு என்றால்
படிக்காதா கண்களும்?//

அதானே ?

//ஒரேயொரு இறை படைத்த
ஒற்றை விளக்கெரியும்
கற்றைக் கதிர் ஒளியில்
கற்றிடல் சாத்தியமே//

ஆம் சாத்தியமே !

கத்தியைக் காட்டி - மிரட்டாமல்
யுக்த்தியை சுட்டி - வெளிச்சம் போட்டிருக்கிறீர்கள்

காலத்தின் கட்டாயமாகிவிட்டது இருட்டடிப்புகளுக்கு நடுவில் இருட்டோடு போராட கற்றுக் கொள்வது எப்படி என்று !

KALAM SHAICK ABDUL KADER said...

//மனம் மட்டும் நல்லா இருந்தால் எப்படியும் படிக்கலாம்//

ஆம். முன்னாள் குடியரசுத் தலைவர் அபுல்கலாம்
அவர்களை வாழ்த்தி அடியேன் அபுல்கலாம் எழுதிய கவிதை இங்குப் படிக்கலாம்:

‘’சிம்னி விளக்கொளியில் கற்றவரே
சிந்தாமல் உழைத்தே வான்வெளியில்
”அக்னிச் சிறகை”க் கட்டியவரே
அயராமல் வெற்றியை எட்டியவரே
தெருவிளக் கொளியில் படித்தவரே
தேசத்தின் முதற்பதவி பிடித்தவரே
பெருவிளக்கம் அறிவியலில் தருபவரே
பேராசானாய் என்றும்வலம் வருபவரே ‘’

சேக்கனா M. நிஜாம் said...

வாழ்த்துகள் சகோ. சபீர்,

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான “புத்துணர்ச்சிக்” கவிதை !

Shameed said...

தேர்வு நேரத்தில் கவி விளக்கேற்றிய கவிஞருக்கு வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

யாரது? ஒரு சாயலுக்கு நம்ம ஹமீது மாதிரில்ல தெறிது?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//யாரது? ஒரு சாயலுக்கு நம்ம ஹமீது மாதிரில்ல தெறிது?//

ஆமா அவன்தான் இவன் இவன்தான் அவன்

Anonymous said...

அன்புள்ள தம்பி சபீர் !

காலத்தின் தேவை கருதிய கருத்தாழம் மிக்க கவிதை.

//அறிஞர்களில் பலபேருக்கு
அரிக்கனே மின்சாரம்
முனைவர்களில் பலருக்கு
மெழுகுவர்த்தி ஒளி தந்தது// இந்த வரிகள் வெறும் வரிகளல்ல. வரலாறு.

பள்ளிகளை நோக்கி இந்த பதிவுகளின் படிகள் படை எடுக்க வேண்டும்.

வாழ்த்துகளுடன் வஸ்ஸலாம்.

இப்ராகிம் அன்சாரி

ZAKIR HUSSAIN said...

//மண்கெட்டுப் போனால்
முளைக்காது தாவரம்
மின்வெட்டு என்றால்
படிக்காதா கண்களும்?//

கவிஞர்களின் கோபத்தில் நல்லதும் நடக்கும்...

ZAKIR HUSSAIN said...

to sabeer,

//யாரது? ஒரு சாயலுக்கு நம்ம ஹமீது மாதிரில்ல தெறிது? //

நான் அப்பவே சொன்னேன் உனக்கு "சீனன் கண்ணு' நு...உண்மையெ சொன்னா பைத்தியம்பாய்ங்க!!!

அதிரை என்.ஷஃபாத் said...

/*அறிஞர்களில் பலபேருக்கு
அரிக்கனே மின்சாரம்
முனைவர்களில் பலருக்கு
மெழுகுவர்த்தி ஒளி தந்தது*/


அழகு வரிகள்.. உண்மை உண்மை!!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வழக்கம்போல் நல்ல விளக்(கு)கம்.! விடியாத பொழுதுக்கு கிழக்கு உங்கள் கவிதை.!முடியாது என்பது முடியும் என முடித்து முடி சூடிய மன்னர்களாம் மூத்தோரை எடுத்து காட்டி முடியும் முயன்றால் வனங்காமுடியும் தலைபடியும் என்பதை அழகாய், ஆழமாய் விளக்கும் குன்றின் மேல் விளக்கு உங்கள் கவிதை.

sabeer.abushahruk said...

//நான் அப்பவே சொன்னேன் உனக்கு "சீனன் கண்ணு' நு...உண்மையெ சொன்னா பைத்தியம்பாய்ங்க!!! //

பொது மக்களே, இதில் உள்ள என் ஃபோட்டோவைப் பார்த்து சொல்லுங்கய்யா. இவஞ்சொல்றது உண்மையா?

கனம் (கணம்?) கோர்ட்டார் அவர்களே. இருவத்தஞ்சு வருஷமா இந்த வழக்கை வாய்தா வாங்கியே இழுத்துட்டேன். இப்பவாவது தீர்ப்பச் சொல்லுங்க ப்ளீஸ்.

அப்டீன்னா எனக்கு ஒரு சைனாக்காரிதானே கெடச்சிருக்கனும்? நான் உள்ளூர்க்காரியல்ல கண்ணாலம் பண்ணிருக்கேன்?

இதாவது பரவால்ல. சமயத்திலே கருப்புச் சீனன்டு வேற சொல்றான்.:(

ஃபோட்டோவில பார்த்தவங்கள்ட்ட மட்டும் கேட்டுட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிப்போடுங்க. (நேரில் பார்த்தவைங்களை சாட்சியாக விசாரிப்பத நான் வனமையாக கண்டிக்கிறேன்)


அதிரை நிருபரில் தனி நபர் தாக்குதல் இல்லேன்னு கேள்விப்பட்டேன்?

crown said...

அறிஞர்களில் பலபேருக்கு
அரிக்கனே மின்சாரம்
முனைவர்களில் பலருக்கு
மெழுகுவர்த்தி ஒளி தந்தது.
---------------------------------------------------
புயலாய்(ஹரிகேன்) பிரட்சனைகள் வந்தாலும் கர்ஜிக்கும் சிங்கமாய் இருந்து ஏறு நடை போடனும். அறிஞர் பலர் அரிகேன்(அதனால்தானோ அவர்கள் அரிஞன்?) விளக்கில் படித்து தம் வாழ்வின் இருள் துடைத்ததை வெளிச்சம் போட்டு காட்டி வரும் கால சந்ததிக்கு நம்பிக்கை பாதை அளித்துள்ளீர்கள்.அதுபோல மெழுகு இருள் திங்கும் கழுகு என்பதையும். தெருவிளக்கில் படித்த பலர் தெருவில் நின்றோரை கரை ஏற்றிய விளக்கம் என்பதையும் உங்கள் கவிதை வரிகள் மெருகேற்றுகிறது. வாழ்த்துக்கள் உங்களுக்கும் இதை படித்து செயலாற்ற போகும் வருங்கால இளம் சமுதாயத்துக்கும்.

ZAKIR HUSSAIN said...

//அதிரை நிருபரில் தனி நபர் தாக்குதல் இல்லேன்னு கேள்விப்பட்டேன்?//

தலெ...நீங்க ஒரு சமூகம் / சரித்திரம் / புயலென புறப்பட்ட வேங்கை.... [ சாகுல்..."கட் அவுட்' வைக்க கொடுத்த காசெ பிரியாணி போட்டாச்சா? ]

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அழைக்கும்.

சரியான தருணத்தில் நல்லதோர் க(டி)வி கவியரசரே!

அதிரை ஈன்றெடுத்த
அருமைப் பெண்டிரே
அன்புச் செல்வங்களின்
அவலம் கண்டீரா ?

நேற்று இரவு 7 ; 30 மணியளவில் புது ஆலடித்தெருவில் மின் வெட்டை பயன்படுத்தி இரண்டு கயவர்களால் கத்தியை காட்டி பணம் பறிக்கப் பட்டுள்ளது.

கயவர்களுக்கு உடந்தையாக இருப்பது எது,யார்? ௦

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கண்மனி மாணவ - மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை கவிதை!

அதிரையில் மட்டும் படிக்கும் நேரமான மாலை இரவு என்று பாராமல் அடிக்கடி மின்சார நிலையம் விளையாடுகிறது. (அதிரை மக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார்கள். சென்னைக்கு மட்டும் 2மணி நேரமாம்?????? அதிரைக்கு 14மணி நேரத்திற்கு மேலாம் இதற்கு மேலும் இருக்கிறது).

தடை என்று சொல்லும் பிள்ளைகளுக்கு - இதுவெல்லாம் தடையா என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறது உன் வரிகள்.


//// இதாவது பரவால்ல. சமயத்திலே கருப்புச் சீனன்டு வேற சொல்றான்.:( ////

கறுப்பு சீனனனை நான் இதுவரை பார்த்ததில்லையே போட்டோ இருந்தால் காட்டு :)'

அப்துல்மாலிக் said...

மாணவர்களின் பரீட்சை அறிவுக்கண்ணை திறக்குது இப்பதிவு, வாழ்த்துக்கள் சபீர் காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா... ஜஸாக்கல்லாஹ்...

பெத்தவங்களுக்கான அறிவுரை கவிதை மாணவ மாணவியர்களுக்கு தன்னம்பிக்கை தரும் நிச்சயம்.

பரீச்சைக்கு படிப்பதற்கு மின்சாரம் ஒரு தடை என்பதெல்லாம் சும்மா சமாளிப்பதற்காக சொல்லும் காரணம். மின்சார தடை ஒன்றும் இந்த வருடம் மட்டும் ஏற்படுவதல்ல என்பது எல்லோரும் அறிந்தது தானே... மாணவ மணிகளின் பெறுப்பாளிகள் முன்னேற்பாடுகள் செய்வது அவசியம்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சாதரான மின்சாரத்தை இறுகப்பிடித்து மாணவ எதிர்காலத்தை அக்கரைக்கொள்ளாதே இந்த அரசாங்கம் சிந்திக்கிறதா, உண்மையில் அப்படி ஏதாவது வழியிருக்கிறதா என்னவென்று கூட நமக்கு தெரியவில்லை என்பதே நிஜம்.

தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்த தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள்

(இதில் பெரும்பாலான விபரங்கள் நமக்கு பொருந்தாது இருப்பினும் நாமும் தெரிந்து கொள்வோம் மற்ற நாடுகள் தேர்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பற்றி...)

1 .பரிட்சை நாள் அன்று காலை அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள் மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன. முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

2 .பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

3 .பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும்.

4. பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது

5. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.

6. பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன

7. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன

8. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.

9.அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது. ..More

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

10. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது

11. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன

12. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது.

13. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்பட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.

14. தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்களும் தருகிறார்கள்

15. கொரிய மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது

16. பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன. (தொலைக்காட்சிகளை முற்றிலுமாக (பார்க்க) தடை செய்ய வேண்டும்)

17. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.

18. கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவதில்லை.

19. தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளையின் தோல்விக்கு ஒரு போதும் ஆசிரியரை குறை சொல்வதில்லை. மாறாக கூடுதல் கவனம் தந்து எப்ப படிக்க வைப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கொரியா மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் நுழைவு தேர்விற்கு அரசும் மக்களும் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பகுதி கூட நமது சூழலில் இல்லை.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பசங்க படிச்சிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில் அவிங்களுக்கு புத்திமதியோ எப்படி படிப்பது என்று வழிகாட்டுதலோ சொல்லிக்கொடுப்பதை இனி நாம் சற்றே ஓய்த்துக்கொள்ளவேண்டும்.

ஏனெனில், என்னதான் நாம விளக்கமாச் சொன்னாலும் இதிலிருந்து ஓர் ஒரு மார்க் கேள்விகூட பரீட்சையில் வராது. எனவேதான் நான் பெற்றவர்களுக்கு எழுதினேன்.

அவிங்க புத்தகங்களைப் படிக்கட்டும். விட்ருவோம்.:)

தம்பி இர்ஃபானின் பின்னூட்டங்கள் சத்தானவையாக இருப்பதைக் காண்கிறேன். (அ.நி.: சும்மா பார்த்துக்கிட்டு இருக்காதிய. பதிவு எழுதச் சொல்லுங்க.)

தம்பி ஷஃபாத், கிரவுன் போன்ற வி.ஐ,பி.களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. (எப்பவாவது வருவது வி.ஐ.பி.கள்தானே?)

தம்பி யாசிர் ஊர்ல இல்லயோ? காணோமே?

அப்புறம், அதிகமா புழங்கிக்கிட்டு இருக்கிறதால அபு இபுறாகிம், எம் ஏ ஹெச், எல் எம் எஸ், அலாவுதீன்.அப்துல் மாலிக், அன்சாரி காக்கா, தாஜுதீன் கூட ஒரே பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்றமாதிரி ஒரு ஃபீல்.

நூர் காக்காவும், எம் எஸ் எம்மும் முத்துப்பேட்டையிலேயோ திருத்துரைப்பூண்டிலகூடவோ ஏறலயே என்னாச்சு?

அப்பாடா, ஹமீது வந்தாச்சு.

அலாவுதீன், கருப்பு சீனன்னு அவன் என்னதான் சொல்றான். துபாய் வந்தபிறகு நான் ச்செக்க ச்செவப்பேன்னு அவனுக்கு தெரியாது.

ஜாயிரு, என்ன ஏன்டா சரித்திரம்னு சொன்னே. கோவம் கோவமா வருது. பெளதிகம்னு சொன்னா ஹாப்ப்பியாயிருக்கும்ல?

நன்றியும் வாழ்த்துகளும்.

Noor Mohamed said...

//நூர் காக்காவும், எம் எஸ் எம்மும் முத்துப்பேட்டையிலேயோ திருத்துரைப்பூண்டிலகூடவோ ஏறலயே என்னாச்சு?//

தம்பி கவி சபீர் அவர்களுக்கு,

தங்கள் கவிதைகளை வரி வரியாக ஆய்வு செய்து Ph.D. பெற முயற்சித்தேன். ஆனால் அதற்கு PG படித்திருக்க வேண்டும் எனக் கூறி விட்டார்கள். நான் B.Sc தானே படித்துள்ளேன். ஆய்வுக்கு வேறு ஏதும் வழியுண்டோ?

sabeer.abushahruk said...

நூர் காக்கா,
தங்களின் நண்பர், உறவினர் கவியன்பன்தான் மரபில் விற்பன்னர். ஆராய்ச்சி செய்ய தகுதிவாய்ந்தவை அவர் எழுத்துகள்.

நான் மனம் போன போக்குக்கு எழுதறவன். மேலோட்டமாவே வாசிச்சிடலாம்.

கவியன்பன், தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மின்சாரமில்லாமலே எதையும் செய்யலாம் என்ற கவிதைக்காக விருது அம்மா, கவிஞருக்கு அழைப்பு?
அரசு கெஜட்டில் கவிதை வெளியீடு?


// அதிகமா புழங்கிக்கிட்டு இருக்கிறதால அபு இபுறாகிம், எம். ஹெச். ஜெ. , எல் எம் எஸ், அலாவுதீன்.அப்துல் மாலிக், அன்சாரி காக்கா, தாஜுதீன் கூட ஒரே பெட்டியில் சென்னைக்கு பயணம் செய்றமாதிரி ஒரு ஃபீல்.//

ரயில் பயண ஃபீலிங் நல்லாயிருக்கு!
நாங்க வி.ஐ.பி. இல்லெ உங்க தம்பி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி இர்ஃபானின் பின்னூட்டங்கள் சத்தானவையாக இருப்பதைக் காண்கிறேன். (அ.நி.: சும்மா பார்த்துக்கிட்டு இருக்காதிய. பதிவு எழுதச் சொல்லுங்க.)//

கவிக் காக்கா, சிந்திக்க வேண்டிய அழுத்தமான தகவல்களை பதிந்திருக்கிறார் தம்பி இர்ஃபான், யார் சொன்னது சும்மா பார்த்துகிட்டு இருக்கோம்னு ! சீக்கிரமே நல்ல ஒரு பதிவோடு இங்கேயும் வருவார் பாருங்கள் பளிச்சிட (தம்பி இர்ஃபான் ஒன்னுமே சொல்லனைன்னு சொல்லாமல் இருக்கும்வரை)

Yasir said...

முன்றாவது குழந்தைக்கு சீட் வாங்க ஒரு பானிபட் போர் நடத்தி வெற்றியும் பெற்று தங்களின் ”வெளிச்சம் காண்பீர் “ படித்து மனது “பளிச்” என்று ஆகிவிட்டது, “ஜெஸ்ட” சோப் போட்டு குளித்த புத்துணர்வு உங்கள் கவி வரிகளை படித்தவுடன்...மின்சாரத்தை காரணம் காட்டாமல்...கவிக்காக்கவின் கவிவரிகளில் உள்ள வொல்டேஜை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள் மாணவர்களே

//நம்பிக்கை மின்சாரத்தை
நரம்புகளில் ஏற்றுங்கள்/// இதவிட என்ன வேண்டும்

Yasir said...

//தம்பி யாசிர் ஊர்ல இல்லயோ? காணோமே?// காத்தல புகைவண்டியை மிஸ் பண்ணியாச்சு காக்கா....இதோ வந்துட்டேன்..

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இத்தளத்தில் பல மாபெரும் பதிவு மன்னர்களிருக்க என்னை பதி(வு)ய (இன்ஷா அல்லாஹ்) ஊக்கமளித்த கவி நாயகன் சபீர், மற்றும் அபுஇப்ராஹீம் சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி...

Shameed said...

அதிரை தென்றல் அதிரை நிருபரில் வீசப்போவுது ,வாழ்த்துக்கள் சகோ இர்பான்

Shameed said...

எல்லாம் சரி கவிதைக்கு போட்ட போட்டோ பற்றி யாருமே மூச்சு விடலையோ ஏனப்பா

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

கவிக்காக்கா,

உங்களின் தேடலுக்கு நன்றிகள். கொஞ்சம் வேலெவெட்டியாப்போச்சு. அதான் முன்னமாதிரி அடிக்கடி எழுத முடியலெ. படிச்சிட்டு பின்னூட்டம் போட முடியலெ. உங்க கவிதைக்கு என்னாக்கொறச்சி.....சூப்பர்ப்....

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்.

அதிரை தென்றல் நண்பர் இர்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ள பயனுள்ள விபரங்களை படிக்கும்போது அவர்களுடைய தனிப்பதிவுகள் வரவேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன்.

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்க்கலாம். (மா?)

தம்பி அபுஇபுறாஹிம் அவர்களே! இர்பான் அவர்களுக்கு வெளிநாட்டுத்துறையை ஒதுக்குங்களேன்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை தென்றல் நண்பர் இர்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ள பயனுள்ள விபரங்களை படிக்கும்போது அவர்களுடைய தனிப்பதிவுகள் வரவேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன்.

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்க்கலாம். (மா?)//

இன்ஷா அல்லாஹ் எதிர்பார்க்கலாம்...

தம்பி அபுஇபுறாஹிம் அவர்களே! இர்பான் அவர்களுக்கு வெளிநாட்டுத்துறையை ஒதுக்குங்களேன். ///

இலாகா ஒதுக்குவதில் எவ்வித குழுப்பமிருக்காது... இந்த "வயலார் ரவி" கோவிச்சுக்க மாட்டாருல்ல !? இவரு இங்கே அடிக்கடி வர்ராராம் ஆனால் டமில் பீப்பிள் நோபடி நோவிங் !

sabeer.abushahruk said...

//எல்லாம் சரி கவிதைக்கு போட்ட போட்டோ பற்றி யாருமே மூச்சு விடலையோ ஏனப்பா//

ஊர் நிலைமையை ஒரே ஃபோட்டோவில் தெரிவிப்பது நீங்கள்தான் என்று ஓரளவு யூகித்துவிட்டேன்.

என்னதான் மின்சார வெளிச்சம் அவசியம் என்றாலும் மெழுகுவர்த்தி வெளிச்சம் ரம்மியம்தான்.

என்ன அப்பர்ச்சர் எவ்வளவு ஷட்டர்ஸ்பீடென்றெல்லாம் கேட்டு இதை டெக்னிக்கலாக்க விருப்பமில்லை.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

\\அதிரை தென்றல் நண்பர் இர்பான் அவர்கள் குறிப்பிட்டுள்ள பயனுள்ள விபரங்களை படிக்கும்போது அவர்களுடைய தனிப்பதிவுகள் வரவேண்டுமென்று மிகவும் விரும்புகிறேன்.//

இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த அளவு தமிழ் பிழை ஏதுமின்றி பதிகிறேன்...நான் பதிந்து பின்பு தமிழ் பிழைக்கே ஒரு தனி பதிவாக பலர் இடும் கருத்து பரிமாற்றமில்லாத ஒரு பதிவாக அமைய சில நேரம் எடுக்கும்....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு