Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

லைஃப் டைம் ஜிம்(மென்ற) - Talk ! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2012 | , ,


பயணத் தொடர் – பயண அனுபவம் என்றெல்லாம் ஏராளமாக வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து ஆங்காங்கே வாசித்தும் வருகிறேன். ஆனால், ஒருநாள் கூட இப்படி ஒரு விபரீதமான எண்ணம் வந்ததே இல்லை இந்த அதிரைநிருபர் தளத்தில் தொட்டதெல்லாம் ஸாரி தட்டியதெல்லாம் துலங்கும் தூண்டில்கள் ஏராளம் போடப்பட்டிருப்பது அதில் சிக்கியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அற்புதமான சூழல்களை ஆனந்தமாக அனுபவித்து வருவார்கள்.

என்னைப் பொறுத்த மட்டில் ஊர்களைச் சுற்றும் ஒருவனாக(!!?) நான் இல்லாவிட்டாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த சுவடுகளை அப்படியே மனத்தளவிலும் எனது மூன்றாம் கண்கள் ஊடேயும் சேமிப்பதில் தவறுவதில்லை. அவ்வாறு நாம் மட்டுமே சேமித்து அதனை பாதுகாப்பதில் என்ன பயன் !? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிரைநிருபர் போன்ற சிறப்பான மேடையுடன் கணினித் திரையில் கண்கொள்ளாக் காட்சிகள் படைக்கும் தளம் இருக்கவே இருக்கிறது நாம் கடைபோட என்று இங்கேயும் கடைவிரித்து விட்டேன்… வியாபர நோக்கில் அல்ல !

சென்ற முறை நான் ஊர் சென்ற போது ஒரு சிம் கார்டு (ஜிம் கார்டு என்போரும் ஜெல் போனில் பேசுகிறார்கள்) வாங்கினேன்.


அது லைஃ ப் கார்டு என்று சொல்லித் தலையில் கட்டியிருந்தார்கள், இந்த முறை (நான்கு மாதம் கழித்து) ஊர் சென்றதும் திருச்சி ஏர்போர்டில் ஜிம்மை அதாங்க, சாரி சிம்மை மாட்டினால் சிம்(முன்னு) பல் இளித்து விட்டது (கோபால் பல்பொடி எங்கே என்று). சிம்முக்கு லைஃப் என்றாலே நான்கே மாதம்தான் என்று அவர் கையில் அடித்துச் சொல்லாத அர்த்தமும் புரிந்தது. நான் நம்முடைய லைஃப் (வரைக்கும் உள்ள) கார்டு என்று நினைத்தது தவறு என்றும் புரிந்து கொண்டேன். வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்நாள் 21 நாள்தான் என்று படித்தது நினைவு வந்தது (harmys please confirm).  அதே போல் சிம்முக்கு நாலுமாதம்தான் லைஃப் போலிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அதிரைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக  சிம்(முஞ்சி) கார்டு வாங்கிய கடைக்கு சென்று கேட்டால், அவரும் கூலாக “வேற ஒன்னு வாங்கிப் போடுங்க காக்கா” என்று கடைக்காரர் சொன்னார். (அடிக்கடி சிம் மாற்றுவதற்கு அசத்தல் காக்காவிற்கு யார் பதில் சொல்வதாம்) சரி பயணங்கள் எல்லாமே இனிப்பதில்லையே இளிக்கவும் செய்யுமே (அனுபவம்தான்) என்று வேறொரு சிம்(மு) கார்டு வாங்கிக் கொண்டுதான்  வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். நம் நாட்டில் (அட! நம்ம இந்தியாவில்) பத்து பைசா இருபது பைசா முப்பது பைசாக்களெல்லாம் பயன்படுவது மொபைல் ஃபோனில் மட்டும்தான். வேறு எங்கும் இந்த பைசாகளுக்கு மதிப்பு  கிடையாது. 

ஊரில் பொறடியை சொறிந்துகொண்டு சுகம் விசாரிக்க வருபவர்கள் கூட ஒரு மினிமம் கலெக்ஷன் காஸ்ட் என்று வைத்து இருக்கிறார்கள் (ஆளை பொறுத்து அவர்கள் டார்கெட் மாறும்). ஒரு ரூபாய் கொடுத்தால் அதை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு நம்மிடமே தந்து விடுகிறார்கள்.(தூக்கி வீசாத குறைதான்).  ஆனால், ஃபோன் ரொம்ப சீப்பாக இருப்பதால் யாரும் போனில் பேசும்போது விசயத்தை சுருங்க சொல்வதில்லை கம்பனுக்காக அகல இரயில் பாதைக்கு போட்ட பட்ஜெட் ஒதுக்கீடு போல் நீட்டி, அளந்து, முழக்கியோ நம் நேரத்தையும் வீணாக்கி விடுகின்றனர். 

இந்தியாவில் மொபைல் போனுக்கு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், யாரை பார்த்தாலும் ஃபோன் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பேசுவது எல்லாம் வெட்டி பேச்சுக்கள், குறிப்பாக பகல் நேரங்களில் நெட் ஒர்க் பிசிபிசி என்று வரும். காரணம் பலவீடுகளில் சமையல் ரெசிபியை செல்போன்கள்தான் ஒலிபரப்புகின்றன. வெந்தயம் போட்டியா? கறிவேப்பிலையை கிள்ளிப்போடு – புளியை கடைசியில் ஊத்து தேங்காய் பால் தலைப்பால் ஊத்தணும் என்பதுதான் அந்த நேரங்களின் பிசிக்கு காரணம். நல்லவேளை சுவையும் மனமும் மொபைலில் அறிய முடியாமல் போனது.


இதை ஏன் கேட்கிறீங்க இங்கே மேலே பாருங்க பைக்கில் போகும் போதும் தலை சோல்டரில் கவிழ்ந்து கிடக்குது. இரச்சிகடையில இருக்கிற தலை மாதிரி !? தோள்பட்டைக்கும் தலைக்கும் இடையே ஃபோன் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி அவஸ்த்தைப்படுகிறது. மொபைல் ஃபோனை கண்டு பிடித்தவன் கூட இப்படி எல்லாம் வைத்துக்கொண்டு பேசுவார்கள் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.  சலூனில் ஷேவிங்க் பண்ணும்போது ஒருகையில் பிளேடு மாட்டிய கத்தி, மறு கையில் செல்போன் – அதுவும் ஃபோனில் யாரோடும் அவர் கோபமாக கையை அசைத்து அசைத்து பேசும்போது கத்தி கத்தி (என்று) சொன்னாலும் ஃபோனில் போடும் சண்டை எல்லாம் நினைவில் வந்து போகின்றது.

அத்துடன் மொபைல் ஃபோனைவைத்து ஃபோட்டோ எடுக்கும் பழக்கமும்(!!?) அதிகரித்துவிட்டது (எனக்கு போட்டியாக !!). முன்பெல்லாம் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல நேரிட்டால்தான் அந்த இடங்களை அங்கே செய்யும் சேட்டைகள் அல்லது மறக்கவியலாத சூழலை ஃபோட்டோ எடுப்பார்கள். ஆனால் இப்போ எந்தந்த வலைத்தளங்களில் பதியலாம் என்று அயர்ந்து உரங்கும் பூனையிலிருந்து அடுப்பங்கரையில் ரெடியாகும் வட்டிலப்பம் வரையில் படமெடுக்க மொபைல் ஃபோன். என்ன்ங்க இப்போது வீட்டில் கொல்லையில் வாழைமரம் குலைபோட்டால் போட்டோ, முருங்கை மரம் காய் காய்த்தால் போட்டோ. மசுக்குட்டியைக்கூட மொபைலில் போட்டோ எடுக்கிறார்கள். இதல்லாமல் மொபைல் படக் கலை என்று யாரும் பேரு வச்சுடாதீங்க ! இதுல வாய்ஸ் ரெகார்ட் வேறு அல்லோலப்படுகின்றது.

அடுத்துதாக யாரை பார்த்தாலும் மொபைல் போனுக்கு அடுத்ததாக கையில் இருப்பது லேஅவுட். கண்ணில் பட்டவரை முதலில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தப்பித்தவறி கேட்டுவிடக் கூடாது அப்படி கேட்டு விட்டால் அதன் பிறகு கையில் உள்ள லே அவுட் தான் பேசும். “நான்” என்று ஆரம்பிக்கும் அவர் என்ன பொம்புளை புள்ளையை பெத்துகிட்டு இன்னும் மனை வாங்காமல் இருக்கிறீர்கள் என்ற அதிரையின் அக்கறைகள் வார்த்தைகளில் தெறித்து வரும். இவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் நாம்தான் அடுத்த மைசூர் மகாராஜா என்பதுபோல் ஒரு மாயபிம்பம் மனதில் ஓடும். அடுத்த இலக்கு கொட நாடுதான் என்ற பின்னி திரை விரியும். கழுகுக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் இவர்களுக்கு வியர்த்துவிடும். இன்னும் சொல்லப் போனால் நாம் இங்கு டிக்கெட் எடுப்பதற்கு முன் அவர்களுக்கு நம் வருகை தெரிந்து விடுகின்றது . உப்பளத்தில் விளைவது உப்பு என்று மட்டும் உள்ளூரில் பிறந்த நமக்கு தெரியாவிட்டால் அதை எல்லாம் கூட வளம் கொழிக்கும் பூமி என்று  நம் உச்சந்தலையில் வைத்துக் கட்டிவிடுவார்கள். 

இப்போது இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் ஆண்களை விட கூடுதலாகி விட்டது  இவர்களும் களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்.  உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் வாங்க “தம்பி டீ குடிக்கலாம்” என்று வலிய உபசரித்து அழைப்பார்கள். கடைசியில் காசு நாம்தான் அழுதாக வேண்டும். சில சமயம் ஒரு டீலிங்குக்குப் பின்னால் ஓன்பது பேர் இருக்கிறார்கள். பத்திரம் முடிந்ததும் பழைய நாகரத்தினம் சார் வீட்டு வாசலில் நின்று எல்லோருக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்று பிரித்துக்கொண்டு “கொடுவாப்பிசுக்கு” வாங்கப் போய்விடுவார்கள். சொத்து விற்பவரும் வாங்குபவரும் கொடுவாபிசுக்கு வாங்கும் முன்னும் பின்னும் யோசிக்கின்றார்கள் ஆனால் இந்த ப்ரோகேர்கள் வீட்டில் தினமும் கொடுவா பிசுக்குதான். கொஞ்சம் கூடுதல் நேரம் இது போன்ற புரோக்கரிடம் பேசினால் நம் மூளை கொதித்து காது வழியாக வழிந்து வந்து விடும். 

ஊருக்கு சென்று வருபவர்கள் உங்களின் ஆறாவது அல்லது இப்போது புதிதாக சொல்கிறார்களே ஏழாவது அறிவை பயன்படுத்தி, மாலை வேளைகளில் இப்படிக் கூட்டம் கூட்டமாக மெயின் ரோட்டில் நின்று அதுவும் ஒரு பைக் போகக்கூட இடம் இல்லாமல்- பேட்டரி தீரும்வரை ஹாரன் அடித்தாலும் நகராமல் ஆணி அடித்தது போல் நின்று என்னதான் பேசுகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள். குறிப்பாக பழைய அண்ணாசிலை, தைக்கால் ரோடு முக்கத்தில் இருந்து, பழைய போஸ்டாபீஸ்களும் ரோடுவரை இந்தக் கூட்டம் நின்று பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த சாயங்கால சட்டசபை கலைக்கப்பட்டால்தான் அந்த இடங்களில் நடக்கும் பைக் சறுக்கல்களும் விபத்துக்க தவிர்க்கப்படும்.

ஒருநாள் பட்டுக்கோட்டை போய் இருக்கும்போது பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. ஸ்பேர் கிடைக்கவில்லை. தஞ்சையில் இருந்து வாங்கி மாட்டி அடுத்தநாள் தருவதாக மெக்கானிக் கூறிவிட்டார். சரி என்று ஒண்ணாம் நம்பர் பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இரு நடுத்தர வயது நண்பர்கள் பேசிக்கொண்டு வந்ததை கேட்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசியதில் சில வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை. இதைப்படிக்கும் யாராவது “தலைக்குமேல் தொட்டிருக்கும் அடைப்புக்குள்” இருக்கும் வார்த்தைகளை விளங்கினால் சொல்லுங்கள்.

  • என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!  
  • இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?”
  • ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான். 
  • நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும் 
  • என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?

அடுத்து ஒருநாள் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரும் வழியில் தாலுக்கா அலுவலகம் அருகே வரும்போது ஒரு வாலிபர்  லிஃப்ட் கேட்டார்.

நானும் பைக்கை நிறுத்தி “எங்கு போகணும் என்று கேட்டேன்”.

“ராஜாமடம் போகணும்” என்றார். நான் அதிரை போகின்றேன் அங்கே இறக்கி விடாவா?” என்றேன்.

“சரி” என்று சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தவரிடம்…

“எங்கு வேலை செய்கின்றிர்கள்?”  என்றேன்.

“வேலைக்குத் தான் இண்டர்வியூ வந்து விட்டு போகிறேன்” என்றார்.

நானும் விடாமல் “என்ன வேலை?” என்றேன்.

அவரும் இறுக்கமாகச் சொன்னார் “தலையாரி வேலைக்கு 30 ஆட்கள் தேவையாம், மொத்தம் 230  பேர்கள் இண்டர்வியூ வந்தார்கள்” என்றார் .

நனோ “படிப்பு தகுதி என்னவாம்?” என்றேன்.

“பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும்” என்றவர் தொடர்ந்து “நான் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன் அங்கிருந்துதான் எனக்கு கடிதம் அனுப்பி இங்கு வரச்சொல்லி இருந்தார்கள்” என்றார். 

நம் ஊரில் மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே கிடையாது. ஆனால், படித்த யாரும் இதுபோல் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் எண்ணிக்கை எடுக்கும் அளாவுக்கு கூட பதிவு செய்து இருப்பதாக தெரியவில்லை.

தலையாரி என்றதும் என் நினைவுக்கு வந்தது இந்தியாவில் அடிமைத்தனம் தொடங்கும் இடம் இந்த V.A.O அலுவலகம்தான். இங்கு பார்த்தால் ஒரு பாழடைந்த டேபிள் (வெள்ளைக்காரன் விட்டு விட்டுப் போனதா?) ஒரு ஓட்டை நாற்காலி அதுவும் காலுக்கு பல சப்போர்ட் கொடுத்து ரீ-ப்பேர் பலகை அடித்து இருக்கும். இதில் தான் V .A .O . அமர்ந்து இருப்பார் அவருக்கு உதவியாக இரண்டு தலையாரிகள் தரையில்தான் அமர்ந்து இருக்க வேண்டும்.  இவர்கள் தரையில் உட்கார்ந்த இடத்தை பார்த்தால் தலைக்கு  தேய்த்த எண்ணை சுவற்றில் ஒட்டி, ஒட்டி தலை சைசுக்கு பலவித அஜந்தா ஓவியங்களை காணலாம் . V .A .O இல்லாத நேரத்தில் இந்த தலையாரிகளின் அல்லபறை பேச்சு இருக்கே அது I A S . I  P  S .  ரேஞ்சுக்கு இருக்கும் என்பது வேறு விசயம்.  சரி விசயத்திற்கு போவோம் .

நானும் தொடர்ந்து விடாமல் “இண்டர்வியூவில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றேன்.”

அவரோ “கல்லணையை கட்டியது யார்?  தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார்? (ஆகா சூப்பர் கேள்வி)” என்றார்

அட! நானோ “என்னது ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் கேட்கும் கேள்வியல்லவா என்றேன்.” 

அதற்கு அவர் “ஆமாம் ஆனால் கடைசி கேள்விக்கு மட்டும் என்னால் மட்டும் அல்ல அங்கு வந்த அனைவராலும் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். 

விழி தூக்கி ஸாரி புருவம் உயர்த்தி “அப்படி என்ன கேள்வி என்றேன்.” 

இறுக்கம் தளர்ந்து சற்றே கோபமான முகத்தோடு “இந்த வேலை உனக்கு வேண்டும் என்றால் ஒன்னரை இலட்சம் தரனும் என்றார்கள்!!!. ஏழு ஆயிரம் மாதச் சம்பள வேலைக்கு ஒன்னரை லட்சம் கொடுத்து சேர்ந்தால் நாங்கள் அந்த ஒன்னரை லட்சம் பணத்தை எப்படி நேர்மையாக சம்பாதிப்பது?” என்று கேட்டார்.  

இவரின் இந்த கேள்விக் கனையும் நியாம்தானே ! இதற்கு பதில் சொல்லத்தான் என்னாலும் முடியவில்லை (!!). தெள்ளத் தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது வேலையில் சேர இதுபோன்ற லஞ்சத்திற்கு விதை விதைக்கப்படும் இடம் இம்மாதிரியான வேலைக்கு சேருமிடமாக இருப்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை !

-Sஹமீத்

35 Responses So Far:

Yasir said...

சாவன்னா காக்கா...அழகிய, முதிர்ந்த எழுத்துநடை..உங்களுடன் நானும் கைப்பிடித்துக்கொண்டு சென்று இந்த அனைத்து சம்பவங்களை கண்டதுபோன்ற உணர்வு..மாஷா அல்லாஹ் எழுத்தாளனு(ரு)க்கு தேவையான எல்லா உடைகளையும் உடுத்தி அழகாக தெரிகிறீர்கள் இவ்வாக்கத்தில்..கிரேட்

VAO ஆபிஸை நீங்க விவரித்தவிதம்...லொள்ளுசபா கூட தோத்திடும்...சூப்பர்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்பா தம்பிகளா! அதிரை நிருபர் கூட்டங்களே! இப்படி ஒவ்வொரு வாரக்கடைசியிலும் எங்களை குறிவைத்துத்தாக்கவேண்டுமென்று திட்டம் தீட்டி இருக்கிறீர்களா? நீங்கள் சென்ற வாரம் அடித்த லூட்டியில் சிரித்து,சிரித்து திக்குமுக்காடி ஆசுவாசப்படுத்துவதற்குள் உங்களில் ஒரு சாகுல் ஹமீதுக்கு இப்படியும் ஒரு வேஷம் கட்டி வர விட்டு இருக்கிறீர்களே!

ஆனாலும் வாழ்த்துக்கள்.

//என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!//
//இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?” //
//ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான். //
//நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும்
என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?//

இவைகளுக்கு யாரும் பதில் சொல்லவில்லை என்றால் நான் சொல்கிறேன். ஆனால் பரிசு என்ன என்று அறிவியுங்கள். அதை வாங்கிக்கொள்ள பாகுபாடு இல்லை என்றும் அறிவியுங்கள். கடைசியில் நான் சொன்ன பிறகு குடும்பத்துக்காரருக்கு பரிசு பெரும் தகுதி இல்லை என்று சொன்னாலும் சொல்லிவிடுவீர்கள்.

சாகுல்ஹமீது உன் தந்தையும் ஒரு கவிஞர் ! எழுத்தாளர்!

புலிக்குப்பிறந்தது பூனையாகவில்லை. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். வாழ்க! வளர்க!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

லைஃப்டைம் சிம்மை வைத்து. ஜொள்ளுலெ கிள்ளு விட்ட விதம் அருமை ஹமீது காக்கா .

Yasir said...

ஜெல்போனில் கதைத்து கொண்டு இருந்த என் கூட வேலைபார்க்கும் சிரிய ஸான நாட்டுக்கு சொந்தகாரர் யாரிடமோ கோபமாக இப்படி சொல்கிறார் “ இட்ஸ் நாட் மை முனிசிபாலிட்டி “

அவர் சொல்ல வருவது என்னவா இருக்கும் அன்சாரி மாமா இதையும் உங்கள் பதிலில் சொல்லிடுங்க...பரிசை அள்ளிச்செல்லுங்க

Yasir said...

//ஒரு சாகுல் ஹமீதுக்கு இப்படியும் ஒரு வேஷம் கட்டி வர விட்டு இருக்கிறீர்களே/// ஹாஹாஹா இது வேஷம் இல்லா ..... நம்மீது கொண்ட பாசம் அதனால்தான் நம்மையெல்லாம் சிரிக்க வைத்து அழகு பார்க்கிறார்கள் சாவன்னா இக்கா

Yasir said...

நேற்று எமிரேட்ஸ் ரோட்டின் நீளத்தை வண்டியால் அளந்து கொண்டு வீட்டுக்குபோய்க்கொண்டிருக்கும்போது...வானொலியில் கேட்டு ரசித்த கடி...

ஒருவர் : அவன் சரியான கிரிகெட் பைத்தியம்
மற்றொருவர் : ஏன் இப்படி சொல்ற
ஒருவர் : என் வாழ்க்கையில் விதி விளையாடிடுச்சு-ன்னு சொன்னதற்கு “ஸ்கோர்” எத்தனைண்டு கேட்கின்றான்

Ebrahim Ansari said...

மருமகன் யாசிர்!

சொல்லிவிடுவேன். சொல்லட்டுமா? சேர்த்து சொல்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

ரூபாய் ஒன்றரை லட்சம் லஞ்சமாக கொடுத்து ஏழாயிரம் மாத சம்பளம் வாங்கினால் அவர் கொடுத்த லஞ்சம் திருப்பி கிடைக்க 21மாதம் ஆகும்....

கண் மூடி கண் தொறக்குறதுக்குள்ளே 21 மாசம் ஒடிடும்பா..லஞ்சம் கொடு...சீக்கிரம் காசு பாக்க லஞ்சம் வாங்குனு சொல்ல எத்தனையோ ஆட்கல் ஊரில் இருக்கிறார்கள்.

அப்துல்மாலிக் said...

ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர்போல தொடாத இடமே இல்லேனு சொல்லலாம், அன்றாடம் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகள்ை நம்மூர் குசும்புனாலே சொல்லி சிலாகித்து கடைசிலே ஒரு குட்டும் (லஞ்சம்) வெச்சவிதம் அருமை காகாக்க்

அப்துல்மாலிக் said...

//களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள். உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது.//

இதுக்கு ஒரு முடிவு இல்லியா?, வருகின்ற கமிஷன் அளவுக்கு மீறி வருவதால் ISD ஃபோன் மூலமும் இந்த வியாபாரம் நடக்குது

அப்துல்மாலிக் said...

//சிம்முக்கு நாலுமாதம்தான் லைஃப் போலிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.//

வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் சிம்மை பாதுகாக்க இரண்டு விசயம் செயல்படுத்தவேண்டும்

1. ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு வாரமாவது சிம் கார்டை ஏதாவது பழைய மொபைலில் போட்டு ஆன் பண்ணி வைக்கவேண்டும், நெட்வொர்க் இல்லாட்டியும் ஆன்லைன்லே இருக்கனும், எல்லா குறுஞ்செய்தியும் இலவசமாக வரும்
2. 2 மாதத்திற்கு ஒரு முறையாவது குறைந்தது 10 ரூபாய்க்காவது ஊரில் யாரிடமாவது சொல்லி “அந்த” நம்பருக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும்

என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், முதலாவது சரியாக செய்தும் இரண்டாவது செய்யாமல் போனதால் என் பழைய நம்பரை இழந்தேன்..

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…
//சொல்லிவிடுவேன். சொல்லட்டுமா? சேர்த்து சொல்கிறேன்//

மாமா சும்மா சொன்னாலே நல்ல இருக்கும் அதிலும் சேர்த்து சொன்னால் இன்னும் சூப்பர இருக்கும் .சொல்லுங்க மாமா

sabeer.abushahruk said...

எச்சூஸ்மீ,
ஐ ஹேவ் எ ஜஜஜன் (suggestion):

லைஃப் டைம் ஜிம் கார்டுன்னு லை சொல்றாய்ங்களே, இவிங்கள சார்ஸ் (charge)பண்ண முடியாதா?

ஹமீது, நல்ல எழுத்து ஓட்டம் (நடைன்னு சொல்லி ட்டயர்ட் ஆயிடுச்சி)

இனி இத்தனை வயசு உள்ள ஜிம் கார்டுன்னு சொன்னாத்தான் வாங்கனும்.

உ.:3 வயசு ஜிம் கார்ட்; 10 வயசு ஜிம் கார்ட்...இப்படி. லைஃப் ட்டைம்லாம் வாங்கக்கூடாது.

Shameed said...

அண்ணன் N.A.S.அவர்கள் ஏதோ "ஃரோகிராம்"லே இருகாங்கபோல அதான் இன்னும் வரலே

Unknown said...

சரி காக்கா முதல் படம் நம்மூர் to pkt ..2 வது படம் ?
விக்கிபீடியானந்த சொல்றார் வண்ணத்து பூச்சி ரெண்டு வகை
lifetime கொண்டது ..
ஒன்று சில வாரங்கள்
மற்றது 1 அல்லது 2 வருடங்கள்

Shameed said...

harmys .abdul rahman சொன்னது…
//சரி காக்கா முதல் படம் நம்மூர் to pkt ..2 வது படம் ?//

இரண்டாவது படம் பற்றி நம்ம அடுத்த ஆக்கத்துலே விவரமா பார்ப்போம் !!

வண்ணத்து பூச்சி தகவலுக்கு நன்றி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

லேத் பட்டறைப் பக்கம் போன ஞாபகத்தில் இருப்பதாக எங்கோ சொன்னது இங்கே பொருந்தாதோ ?

ஜிம்மென்ற காற்றே...
நில் !
கம்மென்று இதனை...
வாசி !

//
** என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!
** இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?”
** ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான்.
** நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும்
என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?
//

இதுதான் ஜிம்மென்ற டாக் !

Ebrahim Ansari said...

Assalamu alaikkum Warah.

//அப்பா தம்பிகளா! அதிரை நிருபர் கூட்டங்களே! //

அதிரை நிருபர் கூட்டங்களே என்பதை அதிரை நிருபர் செல்லங்களே! தங்கங்களே! என்று திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சாகுல்! சொல்லட்டா? நாளை சொல்லட்டா? பரிசு பற்றி அறிவிப்பைக் காணோமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

இ.அ. காக்கா மெய்யாலுமே... சரியான பிஸி ! அதான் அதிகம் கைவிரல்களை பதிக்க முடியவில்லை !

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
அன்பான சாவன்னா, உண்மையிலேயே உன்னுடைய ஆக்கம் என்னை மெய் சிலிற்க்க வைக்கிறது. ஏடுத்த தலைப்பு ஜிம் கார்டு என்றாலும் முடிக்கும் போது முத்திரையுடன் முடித்து இருக்க்றாய்.
படிக்க சந்தோஷமாக இருந்தது. ஜிம் கார்டு, ஜேக் ஸலாலுதீன் (Shaik Jalaludeen), நசாத்து (Najjath), பைடாண்டு (Bus Stand), rubees (Rupees) இது எல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம்.
Can I tell you the meaning of what you heard in the bus? I worry Ibrahim Ansari Kakka will come to fight with me. Hahahahahaha

வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed

N.A.Shahul Hameed said...

Dear Brothers,
Assalamu Alaikkum!!
The second picture appears to be the Maaliyakkadu Lake. That is one road leading to Adirampattinam from Pattukkottai and the second road branching to Rajamadam.
Is it correct Savana?
Wassalam
N.A.Shahul Hameed

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

வலைக்கும் முஸ்ஸலாம்

சரியா சொன்னிங்க சார்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

ஏதார்த்தத்தை நக்கலாக சொல்லுவதே உங்கள் ஸ்டைல் தான் காக்கா...

//இப்போது இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் ஆண்களை விட கூடுதலாகி விட்டது இவர்களும் களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள். உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது.//

இப்புடி ஈசியா போட்டு உடைச்சிட்டியலே... இன்னும் ஆராய்ச்சி செய்து இது தொடர்பாக யாராச்சும் எழுதனும் காக்கா...

Ebrahim Ansari said...

Dear Prof. Janab. NAS

Assalamu Alaikkum.

//I worry Ibrahim Ansari Kakka will come to fight with me. Hahahahahaha// My reply also Hahahahahahaha. We all like this.

எம்சியார், செயலலிதா, அஜோகன், காசா ( HAJA)இவையும் நமக்கு பழக்கப்பட்டதே.

My Answer:

1.பாளிஸ்டரா ஒதுங்குவது =பாலிஷா ஒதுங்குவது( POLISH)
2.மல்லிபட்டினம் எத்தனை கிலோ மீட்டு?= எத்தனை கிலோ மீட்டர்?
3.கிப்ஸ் கிடைக்கும் = டிப்ஸ் கிடைக்கும்( TIPS)
4. பெட்ரோல் பேங்க்ல= பெட்ரோல் பங்க் ( PETROL BUNK)
5. சிக்கன் ஸ்ப்ரே -= சிக்கன் ப்ரை ( CHICKEN FRY)
6.காம்போசிஷன்= காம்ப்ரமைஸ் ( COMPROMISE)

சரியாகவே இருக்குமென நினைக்கிறேன். பேராசிரியர் அவர்கள்தான் திருத்தி மார்க் தரவேண்டும்.

இதேபோல் புதிதாக ஒரு நிறுவனத்தில் ஒரு அலுவலக ஊழியரை ஒருவர் வேலைக்கு சேர்த்துவிட்டார். பையன் எப்படி என்று நிர்வாகி கேட்டார். சேர்த்துவிட்டவர் சொன்னார் " நல்ல காமமான பையன்" ஏதாவது விளங்குதா?

வஸ்ஸலாம்.

Shameed said...

//ஹாப் பாய்ளும் //
பொறித்த முட்டையை ஹாப் பாயில் என்றும் பொறித்த முட்டையை புரட்டி போடுவதற்கு ரிபாயில் என்றும் சொல்கின்றனர்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. ஹமீது:

சிம்கார்டில் ஆரம்பித்து பஸ் நகைச்சுவையுடன் லஞ்சத்தில் முடித்திருக்கறீர்கள்.

இரண்டு புகைப்படங்களும் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!.

அலாவுதீன்.S. said...

/////Ebrahim Ansari சொன்னது… இதேபோல் புதிதாக ஒரு நிறுவனத்தில் ஒரு அலுவலக ஊழியரை ஒருவர் வேலைக்கு சேர்த்துவிட்டார். பையன் எப்படி என்று நிர்வாகி கேட்டார். சேர்த்துவிட்டவர் சொன்னார் " நல்ல காமமான பையன்" ஏதாவது விளங்குதா?/////

சகோதரர் இபுறாஹிம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

புரிகிறது. நல்ல (calm) அமைதியான பையன்

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாலிக்,

தம்பி தாஜுத்தீன், ஹமீதை காக்கா என விளித்தால் நீங்களும் காக்கா போடனுமா?

ஹமீது என்னை "சாச்சா"ன்னு கூப்பிடுவான். உங்களைத் தம்பின்னு அவனைக் கூப்பிடச் சொல்றீங்களா?

என்னா கொடும சபீரு?

sabeer.abushahruk said...

//என்னா கொடும சபீரு?//

இப்பவே கண்ண கட்டுதே...கேன் ஐ ஹேவ் ஏன் ஆஸ்ப்ரின் ப்ளீஸ்!

Shameed said...
This comment has been removed by the author.
Shameed said...

ஜமீல் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.

மாலிக்,

//தம்பி தாஜுத்தீன், ஹமீதை காக்கா என விளித்தால் நீங்களும் காக்கா போடனுமா?

ஹமீது என்னை "சாச்சா"ன்னு கூப்பிடுவான். உங்களைத் தம்பின்னு அவனைக் கூப்பிடச் சொல்றீங்களா?

என்னா கொடும சபீரு? //

வலைக்கும் முஸ்ஸலாம்
துளுகனுக்கு தொண்ணுறு முறை என்பார்கள் அது போல் அதுபோல் அதிரை நிருபரில் அன்பான முறைகள் சாச்சா

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//என்னா கொடும சபீரு?//

//இப்பவே கண்ண கட்டுதே...கேன் ஐ ஹேவ் ஏன் ஆஸ்ப்ரின் ப்ளீஸ்! //

"ஏன் ஆஸ்ப்ரின்" A.E.I.O.U .உங்களிடம் கற்றதில் இதுவும் ஒன்று

அதிரை தாருத் தவ்ஹீத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மவனே!

நான் மாலிக் காக்கா(!)வின் வயசக் கணக்குப் பண்ணி எழுதுனத, நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்டே!

Shameed said...

ஜமீல் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.

மவனே!

//நான் மாலிக் காக்கா(!)வின் வயசக் கணக்குப் பண்ணி எழுதுனத, நீ தப்பாப் புரிஞ்சிக்கிட்டே! //

சரி சரி சாச்சா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு