Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

விலாசம்.. ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2012 | , , , , ,

ஊருன்னு இருந்தால் அதில்
ஆறிருக்கனும்
உறவுன்னு சொல்லிக் கொள்ள
ஆளிருக்கனும்

ஊருணியில் சுத்தமான
நீரிருக்கனும்
ஊருக்கார சனங்க நெஞ்சில்
நீரிருக்கனும்

பேருன்னா பெருமையாக
பிறர் மதிக்கனும்
யாருன்னா இன்னாரென
ஊர் மெச்சனும்

சோறுன்னா சுயமாக
உழைத்து உண்ணனும்
மோரு மட்டுமானால்கூட
நீராடி யருந்தனும்

சேருன்னா சொந்தபந்தம்
சார்ந்து நிற்கனும்
சேறு மிதி உழவனையும்
யாரும் மதிக்கனும்

பாருன்னா பரந்தவொரு
பார்வை பார்க்கனும்
நேருக்கு நேரா நின்னு
தீர்வு காணனும்

பாருக்குள்ளே பெரிய ஆளா
தேர்ந் திருக்கனும்
நாருபோல நாலுபூவைக்
கோர்க்க உதவனும்

போருன்னா தீயவற்றை
வேரறுக்கனும்
வீரமுன்னா தோள்புடைத்து
மார் நிமிர்த்தனும்

ஏறுன்னா இமயத்தையும்
மீறி ஏறனும்
ஊறிப்போய் உறுதியான
நாராய் இருக்கனும்

'ஓர்’ன்னா ஓரிறையைக்
கூர்ந்து ஓர்க்கனும்
நூறுமுறை கேட்டாலும்
மா றாதிருக்கனும்!

-சபீர்

22 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அழகான கவிதை அம்புலிமாவைப்பார்த்து சோறூட்டுவது போல் உள்ளது காக்கா உங்களின் விலாசம்.

//கடைசியில் உள்ளாங்குருவி ஜோடி
எவ்ளோவ்வுண்டு கேக்கனும்......//

வேலெவெட்டி கூடிப்போயிட்டதுனாலெ சட்டுபுட்டுண்டு கருத்து சொல்ல முடியலெ.....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

விலாசம்னா "கல்யாணப் பத்திரிக்கையில, நில மற்றும் வீட்டுப் பத்திரத்தில போடுவாங்களே அதுன்னுலா நினைச்சேன்..."

அப்போ "லெ.மு.செ." இன்ஷியலா ?

//பாருன்னா பரந்தவொரு
பார்வை பார்க்கனும்
நேருக்கு நேரா நின்னு
தீர்வு காணனும்///

எனக்குள்ள சொல்லிக்கிறேன்னு இல்லாம, இயக்க மயக்கம் இருப்பவங்குக்கு இதனை அர்ப்பணிக்கிறேன் மேறொன்ன கவிக் கூர்மை வரிகளை..

//போருன்னா தீயவற்றை
வேரறுக்கனும்
வீரமுன்னா தோள்புடைத்து
மார் நிமிர்த்தனும்//

இதையும் சேர்த்துக்குங்க இயக்க மயக்க சகோதரர்களே...

தெளிந்திடும் மயக்கம்தானே ஆக, சீக்கிரம் தெளிச்சுட்டு வாங்க(ப்பா)

Shameed said...

//ஏறுன்னா இமயத்தையும்
மீறி ஏறனும்
ஊறிப்போய் உறுதியான
நாராய் இருக்கனும் //

இமயமா மலையா இருந்தாலும் சரி அட்டை பூச்சிகள் நிறைந்த அப்பர் கோதையார இருந்தாலும் சரி நீங்க சொன்னா நாங்க ஏற ரெடி

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரே கேள்வி - இந்த தில்லானாவைப்பற்றி:-

"நாணயக்காரவகளே!

உங்க நாயணத்திலிருந்து மட்டும்தான் இப்படிப்பட்ட சத்தமெல்லாம் வருமா?"

பாராட்டுக்கள். சிறந்த வெள்ளிப்பரிசு.

வஸ்ஸலாம்.

Anonymous said...

அருமையான கவிதை காக்கா எல்லா புட்டும் நெய்னாவுக்குதான் தெரியும்.

அதிரைக்காரன் said...

//மோரு மட்டுமானால்கூட
நீராடி யருந்தனும் //

ஜலதோஷம் புடிச்சா யாரு குலுசை (மாத்திரை) கொடுப்பாங்க? ;)

Yasir said...

”விலாசம்” அனைவரும் தங்கள் முகவரியாக பயன்படுத்திகொள்ள ஆசைப்படும் கவிதை...எடுப்பான சொற்க்களைகொண்ட ஒரு துடிப்பான கவிதை...அசத்தீட்டீங்க கவிக்காக்கா

sabeer.abushahruk said...

அதிரைவாலா,
குளித்துக் குடி என்பது முதுமொழி. ஜல்ப்பு புடிக்குமே என்று பார்த்தால் மோரைச் சூடுபண்ணித்தான் அடிக்க...குடிக்க வேண்டும்.

ஜல்ப்பு பிடித்தால் என்ன, மருந்து சாப்பிட்டா ஒரு வாரத்திலே குணமாயிடும். மருந்து சாப்பிடலேன்னாத்தான் குணமாக ஏழு நாளாகும்.

அங்கால, ஓமப்பா... நீங்க கதைக்கிறாப்போல ஆரும் பாட்டுஞ்சொல்லீப்போட்டு குலிசையும் வாங்கியாரமாட்டாங்க.

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
சமூகத்தின் அழுத்தமான விசாலமான பார்வை இந்த விலாசம்.
இது மேதையின் போதனை போன்ற அனுபவக்கடிதம்!
ஆனால் மேதாவிலாசமல்ல!
இது முகவரி மட்டுமே முகஸ்துதி அல்ல!
வார்தையின் சித்து வேலை இருக்கலாம்
ஆனால் மூளைச்சலவை அல்ல!
நம்சமூகத்தின் மேல் கரைபடியாமல்
இருக்க அக்கறையாய் வந்த விலாசமிது!
நம் குசலம் விசாரிக்கும் குதூகுலத்தென்றல் இந்த விலாசம்.
நேசம் சிறக்க வந்த வாசம் இந்த விலாசம்.
நாம் காணாமல் போகதிருக்க சமூக கூடமிது இந்த விலாசம்.
பல சவுகரியங்களை நமக்கு வந்து சேற்க்கும்
பாசத்தூது இந்த விலாசம்.
சமூக ஒற்றுமைக்கு தாது இந்த விலாசம்.
அன்பை முத்திரையாய் தாங்கிவந்த கடிதமாய் இங்கே விலாசம்.
இதன் முகவரி அன்பு மட்டுமே!
பின் கோடு எண்ணில் அடங்காத சகோதர , சகோதரிகளே!
இது நமக்காக , நம்மவரால் அமைக்கப்பட்ட விலாசம்.
இந்த விலாசத்தில் தங்கி சுவாசம் பகிர்ந்து கொள்வோம்
தீயதை சேர்ந்தே வெல்வோம்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். ஒரே விலாசத்தில் ஒரே கருத்து பலமுறை வந்துவிட்டது.(பலமுறை பதிந்து விட்டது).

இப்னு அப்துல் ரஜாக் said...

//'ஓர்’ன்னா ஓரிறையைக்
கூர்ந்து ஓர்க்கனும்
நூறுமுறை கேட்டாலும்
மா றாதிருக்கனும்!//

உண்மை வரிகள்,
தெவிட்டாத நெறிகள்
ஏகத்துவம்

thanks sabeer kakka

Unknown said...

பாருக்குள்ளே பெரிய ஆளா
தேர்ந் திருக்கனும்
நாருபோல நாலுபூவைக்
கோர்க்க உதவனும்
-------------------------------------------
இப்படி விலாசம் இருந்தால் போதுமானது

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நாற்பது வரி விலாசம்.......அருமையான விலாசம். உள்ளான்குருவி வேறயா..............................ஆஹா......!

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

விலாசம் அழகாக இருக்கிறது. ஒரு விளக்கம் தேவை

/// 'ஓர்’ன்னா ஓரிறையைக்
கூர்ந்து ஓர்க்கனும் ///

ஒரே இறைவன் என்பது மட்டும் புரிகிறது. இந்த இரண்டு வரிகளையும் சரியாக விளக்கினால் நல்லது. (நான் இலக்கணத்தில் வீக்)

Kavianban KALAM, Adirampattinam said...

கவிதையென்றா லிப்படிக் கற்றுக் கொடுக்கப்
புவியில்நீர் நீடூழி வாழு

sabeer.abushahruk said...

வாசித்துக் கருத்திட்ட சகோதரர்களுக்கு மிக்க நன்றி.

கிரவுனின் கருத்து மனத்தை, வழக்கம்போல, அள்ளிச் செல்கிறது.

ஓர்த்தல் என்பதன் பொருள் நினைத்தல் ஆகும். எனவே அலாவுதீன்,

தஸ்ஃபீஹ் செய்யச் சொல்கிறேன்.

இந்த வார ஏக்கம்: எம் ஹெச் ஜே எங்கே?

நெடுநாள் ஏக்கம்: என். ஷஃபாத் எங்கே?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உள்ளாங்குருவி கவிதை சூப்பரு காக்கா!
நீங்க கவிதையில் சொன்னமாதிரி எல்லாமே அவசியம் ...........னும்!

இதயம் தேடியமைக்கு தேன்க்யூ காக்கா!
இல்லமாற்றம்,
இணைய
இணைப்பில்
இடைவெளி,
இதனால்
இந்தப்பக்கம்
இணைய முடியலை
இதயத்தில் நிறைந்த காக்கா! இனி
இன்சா அல்லாஹ்!

அப்துல்மாலிக் said...

படிக்கவும் சிந்தக்கவும் தூண்டிய அருமையான வரிகள் காக்கா

ZAEISA said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தம்பி சபீர்.,,,,,,,,,,,
சகோ.,அலாவுதீன் அவர்களுக்கு நீங்கள் விளக்கம் சொன்னதோடு விட்டிருக்கலாம்.அவரை தஸ்பிஹ் செய்யச் சொன்னாலும் சொன்னிய.....
எல்லோருமே சொல்லும்படியாகி விட்டது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு