Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - நிறைவு! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , , ,

குறுந்தொடர் - நிறைவு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை.  ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும்,கட்சிகளும்,இயக்கங்களும் அதிகமாகிவிட்டன. தலித் இனங்களின் மக்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும். 

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம், பாட்டாளி இயக்கம், பூவை செங்குட்டுவன், பொன் குமார் தலைமயில் உள்ள சிறு சிறு இயக்கங்கள் என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டோருடைய அமைப்புகளும், விவசாய அணிகளும், மீனவர் அமைப்புகளும், முஸ்லிம் லீக், தேசியலீக், தமிழ்நாட்டு லீக், த.த.ஜ. , இ.த.ஜ. , த. மு.க. , ம.நே.ம.க , பாபுலர், எஸ். டி. பி. ஐ. என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், தலித் கிருத்துவ அமைப்பு, நாடார் கிருஸ்துவ அமைப்பு என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இதர சிறுபான்மை அமைப்புகளும் ஓர் அணியில் நின்றால் ஆண்டாண்டுகாலமாக ஆட்டிப்படைத்து வரும் ஆரிய விஷத்தை முறிக்கும் மருந்தாக அமையும்.  இந்த மாற்று அரசியல் புரட்சிதான் இதற்கு விடிவாக இருக்க முடியுமே தவிர நாலு அரசுப்பதவிகள் கிடைத்துவிட வழிவகுக்கும் இட ஒதுக்கீடு மட்டும் போதும் என்பது அழுகிற பிள்ளைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பதற்கு சமமானது. ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும். 

தலித்துகள் அவர்களுக்கு சரிநிகர் சமூக அந்தஸ்தை தருகிற இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பக்கம் திரண்டு வரவேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விட விரும்புகிறேன். 

அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பிறப்பிலேயே பேதம் கற்பித்த முந்தைய ஆரிய மனுதர்மம் சார்ந்த சமூக அமைப்புக்கும்,  இஸ்லாமிய இறைவேதம் வரையறுத்துச் சொல்கிற....
  • அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான் (4:1).
  • உங்களை அன்னையரின் வயிற்றிலிருந்து படைத்தான்.காதும், கண்ணும், இதயமும் வழங்கினான் (16:78-83).

என்கிற திருகுர்-ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்ந்து ஆராயவேண்டும். இஸ்லாம் கூறுகிற ஐந்து கடமைகளின் அடிப்படையே சமத்துவமும், சகோதரத்துவமும் என்பதை தலித் சமுதாயத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தலித்துகள் தானாக விளங்கிக்கொள்வார்களா?

இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாமோ மாறுபட்ட  இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை மறந்தே போனோம்.  

இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும்,  துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்! மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும். 

அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் மற்றும் கட்சிகளைச் சார்ந்த தலித் இன உண்மை தமிழ் சகோதரர்களே!

ஆண்டாண்டு காலமாக ஆரிய நச்சுப்பாம்புகளின் வர்ணாசிரம- வர்ணபேத- பிரித்தாள்கின்ற சூழ்ச்சிகளில் சிக்கி அடக்கப்பட்டு- ஒடுக்கப்ப்பட்டு- இடுப்பில் துண்டுகட்டி- பல்லக்குத்தூக்கிகளாக பழக்கப்பட்டுப்போன பழந்தமிழ் இனமே! 

ஆலயம் கட்டினாலும் அதில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அடக்குமுறைக்கு ஆளான இனமே!

தனி வீதி, தனித்தெரு, தனிக்குவளை, தனிக்குளம் என்று தடுத்துவைக்கப்பட்ட தமிழினமே!

தொட்டால் பாவம்! எதிரில் வந்தால் தீட்டு ! காலிலே பிறந்தவன் என்றெல்லாம் பிரித்துவைக்கப்பட்ட இனமே!

உங்களை இஸ்லாம் அழைத்துக் கொண்டே இருந்தது. எங்களுடன் அரசியலில் கைகோர்க்க மட்டுமல்ல... 

ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!  

ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
உரசல் உறவுக்குள் அழைக்கிறது...
-இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

Yasir said...

இன ஒதுக்கீட்டால் பாதிக்கபட்டோருக்கு சரியான பாதை இஸ்லாம்தான் என்று அருமையாக உரசி உரசி இத்தொடரை பளிச்சிட வைத்து இருக்கின்றீகள்...மனதையும் அறிவையும் நிறைத்த இத்தொடரின் நிறைவு மற்றொரு தரம்மிக்க தொடரின் ஆரம்பம்தான்...அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல்நலத்தை தரட்டும்

Abdul Razik said...

மாஷா அல்லாஹ் இந்த கட்டுரை தலித் மக்களிடம் கட்டாயம் போய்ச்சேர வேண்டும். தலித்துகள் மட்டும் அல்ல அனைத்து தரப்பு மக்களும் பொருளுணர்ந்து, விரிவாக திருக்குரானையும் ஹதீஸ்களையும் கூர்ந்த்து படித்தால் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். அழகான விளக்கத்துடன் கூடிய கட்டுறை.

Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
(இந்த உண்மையின்) உரசல் உறவுக்குள் அழைக்கிறது.. !

இது இன்று நேற்றல்ல எங்களின் அழைப்பு ! சிந்தியுங்கள்...!

என்னோடு தனி மின்னாடலில் உரையாடும் நண்பர்களே ! இங்கே கருத்தாடல் இல்லாவிடினும் உங்களின் உள்ளங்களை தொட்டது இந்த குறுந்தொடர் என்று எடுத்துச் சொன்னீர்கள் அந்த உரிமையில் கட்டுரையாளரோடு நானும் சேர்ந்து அழைக்கிறேன்...

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

//// ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!

ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.! ////
******************************************************

மாஷாஅல்லாஹ்!
தெளிவான விளக்கம்!
அழகான அழைப்பு!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லதோர் அழைப்புபனி நிந்தனையாளர்கள் படித்து பக்குவப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் விரைந்து வாருங்கள் வாருங்கள் என அன்சாரி இபுராஹீம் காக்கா அவர்களின் ஆக்கத்தின் மூலம் அழைப்பு விடுக்கின்றோம்.


காக்கா உங்களின் குறுந்தொடர் - நிறைவு என்றதும். வருத்தமாக இருந்தது

ஆனால் கணினியில் மை நிறைவு பெறாது என்று நினைத்ததும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

தாங்களின் அடுத்த தொடரை எதிர் பார்த்தவனாக.

Ebrahim Ansari said...

Janab. L.M.S. Aboobucker! Alaikkumussalam.


//காக்கா உங்களின் குறுந்தொடர் - நிறைவு என்றதும். வருத்தமாக இருந்தது//

ஜசக்கல்லாஹ் ஹைரன். குறுந்தொடர்தான் நிறைவு. உங்களை நாங்கள் தொடர்வது நிறைவு இல்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ். விரைவில் சந்திக்கலாம்.

வஸ்ஸலாம்.

Shameed said...

உரசலில் ஆரம்பித்து உறவில் முடித்தவிதம் அருமை

sabeer.abushahruk said...

காக்கா,

நிறையபேர்களின் கட்டுரைகள் பிரச்னையைப் பேசிவிட்டுப் போய்விடும்.

ஆனால், உங்களின் கட்டுரைகள் பிரச்னையை அவதானித்து, தீவிரமாக அலசி ஆராய்ந்து, நல்லது கெட்டதுகளைச் சுட்டிக்காட்டி இறுதியில் தீர்வுகளையும் தெள்ளத்தெளிவாக சொல்லி முடிக்கையில் வாசிப்பவரின் உள்ளத்தில் ஒரு ஆக்கபூர்வமான உணர்வை விட்டு்ச் செல்கிறது.

இந்தத் தாக்கத்தை உருவாக்குவதே எழுத்தாளரின் வெற்றி.


தங்களின் தயவால் எனக்கு நிறைய விடயங்களில் அறிவு கூடுவது உண்மை. அதற்காக நன்றியும் தங்களின் நலன் சிறக்க து ஆக்குளும்

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

ஜசக்கல்லாஹ் ஹைர். உங்கள் எல்லோரின் அன்புக்கும் என்றும் அருகைதயாக்கி வைப்பாயாக என்று வல்லோனை இறைஞ்சுகிறேன்.

மற்றவை விரிவாக பின்னர் ஏற்புரையில்- இன்ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்.

sabeer.abushahruk said...

//ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும்//

நச்!

Anonymous said...

காக்கா, உங்களின் குறுந்தொடர் நிறைவுபெற்றது. ஆனால் தாகம் தீரவில்லை.
முன்பெல்லாம் இஸ்லாமியர்களின் சேவைகளையும் செயல்பாடுகளையும், அவர்களின் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கண்ட மாற்றார்கள் இஸ்லாத்தில் நுழைந்து கொண்டே இருந்தார்கள். அன்றைய காலக்கட்டத்தில் இதுபோன்ற செய்தி தொலைத்தொடர்புகள் இல்லாததால் அரிதாகவே அறியமுடிந்தது.

உதாரணத்திற்கு நீங்களும் நன்கு அறிந்த ஒன்றை இங்கே கூற விரும்புகிறேன். 1980 ஆம் ஆண்டு திருநெல்வேலிக்கும் தென்காசிக்கும் இடைப்பட்ட தலித்துகள் வாழ்ந்த கிராமம், இதில் சிலர் வசதி படைத்தவர்களும் சேர்ந்து ஆயிரக் கணக்கில் வாழ்ந்தார்கள். அதுதான் அன்றைய மீனாட்சிபுரம் ஒட்டுமொத்தமாக ரஹ்மத் நகர் என்ற பெயரில் மாறியது. இந்நிகழ்வை இத்தளத்தில் வரும் இளைஞர்கள் அறியாதிருக்கலாம். அதனாலேயே நான் இதனை நினைவு படுத்துகின்றேன். இந்த மாற்றத்திற்கு தப்லீக் ஜமாஅத் செய்து வரும் மார்க்கப் பணி ஒரு முக்கிய காரணியாக இருந்தன என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

பிற்காலத்தில் நமக்குள் பல இயக்கங்கள் தோன்றி, நமக்குள்ளே இழித்தும் பழித்தும் வசைபாடும் செயல்பாடுகளை கண்ட மாற்றார்கள், இஸ்லாத்திலும் இவ்வளவு குறைபாடுகளா என்பது அவர்கள் உள்ளத்தில் பதிந்தன.

இன்று, இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், எளிய மார்க்கம், இறுதி மார்க்கம் என்றெல்லாம் ஆங்காங்கே கூட்டங்கள் போட்டு, கட்டுரைகள் எழுதி அதை பல மீடியாக்களின் மூலம் பரப்பியும், ரஹ்மத் நகர் போன்ற மாற்றத்தை நம்மால் காண முடிகிறதா?!

இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!!

நூர் முஹம்மது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சும்மாதான் கேட்டு வைக்கிறேன் அதுக்காக கூட்டம் போட்டு என்னை வையாதீங்க !

"ஒவ்வொரு இயக்கத்திற்கும் 0.5% இட ஒதுக்கீடு என்று விகிதாச்சாரத்தில் கிடைத்தால்.. (போராட்ட வெற்றியாக !!??) ஒட்டு மொத்த சமுதயாயத்திற்கு கூட்டுத் தொகையாக 20% வந்திடுமோ !?"

சரியா கணக்கு பன்னுறேனா ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இன ஒதுக்கீடு இழிவுக்கு இஸ்லாமே தீர்வு என்பதை பக்குவத்துடன் எடுத்து அழைத்தது மிகவும் தரமிக்க வேண்டுகோள்!உங்கள் குரல் அவர்களை அடையட்டுமாக!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த மேதையின் எழுதிற்கு எம் கருத்தெல்லாம் கடலில் கரைத்த பெரும்காயம் போலவே! ஆனாலும் சமுதாயம் பெரும் காயம் படாமல் இருக்கவும். தாழ்தபட்ட, என ஒதுக்கபட்ட சமூகம் எழுச்சி பெறவும். மகிழ்சிபெறவும், உரிமை பெறவும் இஸ்லாம்தான் என அழகாய் எடுத்து இயம்பிய விதம்.! அதிரை நிருபர் கொடுத்து வைத்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?""ஆதிக்க வர்க்கங்கள் "பால்" என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும்"". என்னே சிந்தனை தூண்டல்? பால் அல்ல பாலிடால்(பலியிட ) வெளுத்ததெல்லாம் "பால்" அல்ல அது "பாழ்" படுத்தும் செயல்!. எச்சரிக்கை வேண்டும் எனும் ஆதாங்கம் . நல்ல தொரு ஆக்கம் இன்னும் சமுதாய இமைகளில் ஏன் தூக்கம்????

ZAKIR HUSSAIN said...

சமுதாயக்கொடுமைகளை அழகாக எழுத்தில் படம்பிடித்திருக்கிறீர்கள். நம் இஸ்லாமிய சமுதாயம் இயக்கங்களால் பிரிவு பட்டது ஒரு நிகழ்வில் நடந்ததல்ல....ஆனால் இப்போது ஒற்றுமையானால் அந்த நெருக்கத்தை யாராலும் பிரிக்க முடியாது.

ஒற்றுமையாகி விடுவார்களா?

இப்னு அப்துல் ரஜாக் said...

காக்கா,உங்கள் கருத்தும்,எழுத்தும் சகோதரர் பழனி பாபாவின் எண்ணத்தை,சிந்தனையை ஒத்திருக்கிறது.தலித் இன மக்கள்,இஸ்லாத்தை ஏற்றால்,இங்கும் விடுதலை,அங்கும்(மறுமை)விடுதலை.சிந்திப்பார்களா?இக் கட்டுரையை மற்ற தளங்களும் பப்ளிஷ் செய்து,இச்செய்தி பரவ வழி காண வேண்டும்.
நெறியாளர் அவர்களுக்கு,காக்காவ்,இந்த தொடருக்கு முற்றும் போட்டாலும்,இன்னும் இன்னும் தொடர வேண்டுமாய் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு வேண்டுகோள் விடுங்கள்.பயனுள்ள பல கட்டுரைகளை அவர்கள் எழுதவேண்டும்,இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாகிம் அன்சாரி காக்கா, உங்களின் இவ்வாக்கம் படிக்கும் அனைவரையும் ஆஹா, ஓஹோ, அருமை, அற்புதம் என்று வாயால் மொழிந்து விட்டு பின் கலைந்து செல்வதற்காக எழுதப்பட்டதாக தெரியவில்லை. ஓர் உண்மையான அரவணைப்பிற்கும், ஆதரவிற்கும் விடுக்கப்பட்ட அன்பான வேண்டுகோள் இது.

இதனை நேர்த்தியான பிரதிகள் எடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிறுவனர் சகோ. திருமாவளவனுக்கும், யாதவ மகாசபையின் தலைவர் தேவநாதனுக்கும், இன்னும் யார், யாரெல்லாம் இந்த சாதீய கொடுமைகளில் சிக்குண்டு அவதியுற்று அவற்றை எதிர்த்து தனிப்பிரிவுகளாகவும், கட்சிகளாகவும் அதன் தலைவர்களாகவும் இருக்கின்றனரோ அவர்களுக்கெல்லாம் தவறாமல் முறையே அனுப்பி வைக்கப்பட வேண்டிய நல்லதோர் அன்பு மடல்.

உங்க‌ளை வாழ்த்துவ‌தோடு நின்று விட‌ப்போவ‌தில்லை. எம் ஹாஜ‌த்துக்க‌ள் நிறைவேறிட‌வும் நாமெல்லாம் இறைவனிடம் து'ஆச்செய்வோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

தீரா மறுமை ஆதாயத்திற்காகவும் உலக வாழ்வின் சொற்ப சந்தோசத்திற்காகவும் (தன்னலமும், பொதுநலமும் ஒரு சேர கலந்த கலவை) விடுக்கப்பட்ட அரைகூவலாகவே இவ்வாக்கத்தை கருதுகின்றேன்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நூர் முஹம்மது காக்கா சொன்னது .

// பிற்காலத்தில் நமக்குள் பல இயக்கங்கள் தோன்றி, நமக்குள்ளே இழித்தும் பழித்தும் வசைபாடும் செயல்பாடுகளை கண்ட மாற்றார்கள், இஸ்லாத்திலும் இவ்வளவு குறைபாடுகளா என்பது அவர்கள் உள்ளத்தில் பதிந்தன. //

100 % உண்மை காக்கா நமக்குள் உள்ள வசைபாடு என்னும் ஆற்றில் எதிர் நீச்சல் போட்டு இயக்கம் என்ற கரையை கடந்து இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து.வெற்றி படியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் சில மாற்று மத சகோதரர்கள்.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இபுராஹிம் அன்சாரி காக்கா சொன்னது.

// உங்களை நாங்கள் தொடர்வது நிறைவு இல்லை. அது தொடர்ந்து கொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ். //

மாஷா அல்லாஹ். குறைந்த காலத்தில் மனம் குளிர நிறைந்த தொடர்புகள்.

Yasir said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது
//மாஷா அல்லாஹ். குறைந்த காலத்தில் மனம் குளிர நிறைந்த தொடர்புகள்//. தொடர்பில் நாங்களும் உள்ளோமா ??

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// தொடர்பில் நாங்களும் உள்ளோமா ?? //

சகோ. யாசிர் நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறதுவும் இல்லை அ.நி தளத்தில் மனதை பதிக்கும் அனைவரும் உள்ளீர்கள்.

Anonymous said...

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாகிர் காக்கா சொன்னது .

// ஒற்றுமையாகி விடுவார்களா? //

விண்வெளிக்கு சென்று கனவு காண வேண்டிய விஷயம்.
அல்லாஹ் நாடினால் தவிற.

ஒற்றுமைக்காக ஐந்து நேரத் தொழுகைக்கு பிறகு இறைவனிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டே இருப்போம்.

Ebrahim Ansari said...

அன்பின் நண்பர்கள் சகோதரர்கள் அனைவருக்கும் ஸலாமும் சலம் உரைத்தவர்களுக்கு பதிலும் கூறியவனாக.

இந்த பதிவின் மூன்று பகுதிகளையும் படித்து கருத்துரைத்த அனைவர்க்கும் ஜசகல்லாஹ் ஹைரண்.

தம்பி நூர் முகமது அவர்கள் குறிப்பிட்டுள்ள மீனாட்சிபுரங்கள் - ரஹ்மத் நகர்களாக மாறவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டதே இந்த குறுந்தொடர்.

எல். எம்.எஸ். அவர்களும், மு. செ.மு. நெ. அவர்களும் குறிப்பிட்டதைப்போல் இந்த தொடர் முடிந்து இருக்கலாம். இதன் நோக்கம் முடியவில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் இதன் கருப்பொருள் இன்னும் ஆதாரங்களுடன், ஆக்கபூர்வமான விவாதங்களுடன் ப்திவுற வேண்டுமென்றே நினைத்து இருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

இந்த துயர்கள் நீடிக்கும்வரை இத்தகைய தொடர்கள் என்னிலிருந்து அதிரை நிருபரில் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

நான் இந்த தொடரை தொடங்கும்போதே இந்த தொடர் அதிரை நிருபரின் வெளியீட்டில் முழுமையடைந்ததும் மற்ற சகோதர தளங்களிலும் வெளியிடப்படவேண்டும் என்று எனது ஆசையை நெறியாளருக்குத் தெரிவித்து இருந்தேன். அதன்படி எனக்குத்தெரிந்த தளங்களில் நான் மீள்பதிவாக வெளியிட இருக்கிறேன். தம்பி அர. அல அவர்களின் கருத்துப்படியும், மு.செ.மு.நெ. அவர்களின் எண்ணப்படியும் தலித்துகளின் தளத்திலும் இது வரும் ; அதன் மூலம் அதன் தலைவர்களின் பார்வைக்கும் வரும் - அதற்கான ஏற்பாடுகளும் செய்து இருக்கிறோம் என்பதை நல்ல உள்ளங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் தங்களால் முடிந்தவரை பரப்பிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எனது கவலை எல்லாம் இப்படி படித்துவிட்டுப் பாராட்டுவதுடன் நின்றுவிடாமல் எல்லா சகோதேரர்களும், இயக்கங்களின் ஒற்றுமைக்கு இருகரம் ஏந்தி இறைவனிடம் து ஆச்செய்யவேண்டுமென்றுதான்.

அத்துடன் ஒவ்வொருவரும் அந்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.
இயன்றவரை மாற்றார்க்கு இஸ்லாத்தை எத்திவைக்க வேண்டும். இறைவன் துணை இருப்பதால் எதிர்ப்புகள் வந்தாலும் தாங்கும் சக்தியும் கூடவே துணை இருக்கும்.

தம்பி கிரவுன், நண்பர் அலாவுதீன், சா. ஹமீது, ஜாகிர், என்றும்போல் யாசிர் ஆகியோருக்கும், கவிக்காக சபீர் ( எனக்கு காக்கா அல்ல என்பதால் கவிக்காக்கா என்று அழைக்கவில்லை.) மற்றும் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி.

LAST BUT NOT LEAST, தம்பி அபூ இப்ராகிம் நீங்கள் தரும் ஒத்துழைப்புக்கு நிகரில்லை. ( தூண்டில் போடுவது வேறு விஷயம்).

வஸ்ஸலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இப்றாஹிம் அன்சாரி காக்கா ...

இறுதி வரிகளில் இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்து இந்த குறுந்தொடரை முடித்தவிதம் மிக அருமை.

தங்களை போன்ற அறிவாற்றல்மிக்க மூத்தவர்களின் நட்பு எங்கள் அறிவை வளர்க்க உதவும் என்பதில் சந்தேகமில்லை காக்கா..

அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு