நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்திருந்தால் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விசயம், நீங்கள் இப்போது பார்க்கும் வேலையை எப்படி செய்கிறீர்கள் என்று. 'மாசம் 30 -- சட்டி 60' என்ற கணக்கில் வேலை பார்ப்பவர்கள், தொழில் தொடங்கி ஒரு வாரத்துக்குள் "பாரம்' முதுகில் இருப்பதாகவே உணர்வார்கள். ஏனெனில் வேலை பார்க்கும் இடத்தில் அவர்களின் கடமையைச் சரிவர செய்யாததே. "என் முதலாளி ஒரு மொல்லமாரி... அவனுக்கு நான் பார்த்த வேலை அதிகம்தான்" என்று நினைத்தால், நீங்கள் இன்னும் வாழ்க்கையைச் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பேன்.
உங்களின் முதலாளியின் அட்டகாசம் பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்துகொண்டே அவரை திட்டுவது, சாபம் இடுவது எல்லாம் உங்களின் தூய்மையான நிலைப்பாட்டுக்கு வைரஸ் அட்டாக் வந்து விடும்.
எனவே பிரச்சினைகளை நேர்கொண்டு சமாளிப்பதே அழகு, அதை விடுத்து முன்னுக்கு விட்டு பின்னே திட்டுவது வாழ்ந்து ஜெயிக்கப்போகும் ஒரு வீரனுக்கு அழகல்ல. பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது?... தாராளமாக அவரிடம் சொல்லிவிட்டு வேறு வேலையைப் பார்த்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அது அவ்வளவு ஈசியல்ல என்பது எனக்கும் தெரியும்....யாரையும் நம்பி இறைவன் உங்களைப் படைக்கவில்லை என்பதே உண்மை.
சம்பாதித்தைக் காப்பாற்ற.. செய்யும் முட்டாள்தனங்கள்.
இது ஓரளவு வாழ்க்கையில் செட்டில் ஆனவர்கள் செய்யும் கூத்து. தனது வசதிக்கு காரணம் தனது உழைப்பும், இறைவனின் கருணையும் என்பதை சில சமயம் மறந்து விட்டு சிலர் செய்யும் தகிடு தித்தங்கள் படைத்தவனுக்கே அடுக்காது. முதலில் இது ஏன் ஏற்படுகிறது என்றால் "ஏகத்துவத்தின் தத்துவங்களைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுப்பதில்லை." மற்றும் தொழிலில் ஏற்படும் தாழ்வு நிலை சூழ்நிலை எல்லோருக்கும் பொதுதான் எனும் சமாதான நிலையிலிருந்து வேறுபட்டு மனதுடன் போராடி பிறகு தோற்றுப்போவது.
இது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஒரு தாழ்வு நிலை வரும்போது வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களும் , முன்னேறியவர்களும் [சிலர்] செய்யும் தவறு.
என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது நமது அடிப்படையை அடகு வைத்தோம்?.
சிலர் தொழில் சிறக்க!!! செய்யும் அட்டூழியம்.
எதை நம்புவது என்று வழிதெரியாமல் நிற்கும்போது வரும் மகான் / அல்லது ஏதாவது, தட்டு, தகடுகளுக்கு இவர்கள் அடிமையாவது. சிலர் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இது மாதிரி விசயங்களும் இருந்து விட்டு போகட்டுமே என்றே சொல்வார்கள்....10 ரூபாய் திருடினாலும் திருட்டுதான் 10,000 ரூபாய் திருடினாலும் திருட்டுதான்.
கண்ட அன்னக்காவடிகளை வீட்டுக்குள் விடும் இவர்கள் தனது பொக்கிஷங்களான தன் வீட்டுப்பெண்களை காப்பாற்றத்தவறும் ஏமாளிகள் ஆகி விடுவது....இவர்களாகவே தன் தலையில் எழுதிக்கொண்டது.
இதுபோன்ற விசயங்களை நான் ஏன் இந்த படிக்கட்டில் எழுத வேண்டும் என நானே நினைத்ததுண்டு. இதற்கென்று மார்க்கம் அறிந்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பல ஆதாரங்களுடன் எழுத முடியும்...இருப்பினும் இதை நான் எழுதா விட்டால் யார்தான் எழுதுவது. இப்போது முன்னேறுகிறேன் / முன்னேற்றத்தைக் காப்பாற்றுகிறேன் எனும் சிலரிடம் இது போன்ற மூடத்தனங்கள் இருப்பதை நான் எழுதாவிட்டால் சிலரின் "வேர்களில் உள்ள நோயைப்போக்காமல் மரத்தின் கிளைகளை அலங்கரித்து என்ன பயன்?" என்ற எண்ணம் நமக்கு வருவது சரிதானே?
இன்றே விதைத்து இன்றே அறுவடை செய்ய நினைக்கும் புத்தி.
நாம் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேற நினைப்பது சகஜம்தான். ஆனால் சீக்கிரம் முன்னேற பெரும்பாலும் சட்டத்துக்கு பறம்பான தொழில்களில் மட்டுமே முடியும். "ஜெயில்களி' உங்கள் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளும் என்றால் முயற்சிக்கலாம்!.
இல்லாவிட்டால் எல்லா தத்துவ ஞானிகளும் , கோட்பாடுகளும் சொல்லும் நேர் வழி மட்டும்தான். நிம்மதியான வாழ்க்கையைத் தரும்.
There is no shortcut for SUCCESS !
இப்போது இந்தியா எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால் “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான், ஒரு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து மெம்பெர் ஆகிவிடுங்கள், உடனே இந்த வாட்ச் அல்லது ஏதாவது பரிசுப்பொருள் தரப்படும், உடனே நீங்கள் செய்ய வேண்டியது 2 பேரை மட்டும் நீங்கள் மெம்பெராக உங்களுக்கு கீழ் சேர்க்க வேண்டும் அவர்களும் இதே மாதிரிதான், அவர்களும் உங்களைப்போல் ஆள் சேர்க்க சேர்க்க உங்களுக்கு கீழ் 300 பேர் வந்து விடுவார்கள்..பிறகென்ன அவர்கள் செய்யும் சேல் கமிசனில் வரும் உங்களுடைய பங்கு எத்தனை ஆயிரம் தெரியுமா? ஒரு வருடத்துக்குள் நீங்கள் புதிய கார் வாங்கி விடலாம், புதிய வீடு இப்படி செட்டிலாகி விடலாம். மாத வருமானம் ரூபாய் 30,000 தாண்டும்...எந்த வித கஸ்டமும் இல்லாமல் வீடு தேடி வரும் இந்த பொன்னான வாய்ப்புக்கு உங்கள் முதலீடு வெறும் ரூபாய் 2000 தான் என்று சொல்லும் மல்டி லெவெல் கம்பெனிகள். பொருளாதார கஸ்டத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்களை இது மாதிரி எனக்கு தெரிந்து 25 வருடத்துக்கு மேலாக பல டுபாக்கூர் கம்பெனிகள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
இதில் இன்னும் சில ஏமாற்று வேலைகளும் இருக்கிறது. பரிசுச்சீட்டை சுரண்டினால் அதில் கார் படத்தை பிரின்ட் செய்து கார் படம் தெரிந்தவுடன் " ஹய்யா.. சார் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் உள்ளவர் சார்... ஒரே பரிசுச்சீட்டில் உங்களுக்கு கார்..அது உங்களுக்கு கிடைக்க ரெஜிஸ்டெரேசன், இன்சூரன்ஸ், ரோட் டேக்ஸ் எல்லாவற்றிற்கும் ஒரு 4000 தான் தேவைப்படும் அதை கொடுத்தால் அடுத்த வாரமே உங்கள் வீட்டில் கார்..இதோ பாருங்க சார் தர்மபுரிலெ கார் கிடைத்தவர்” நீங்கள் இருக்குமிடம் தஞ்சாவூர் மாவட்டமாக இருக்கும் ..அப்போதுதான் நீங்களும் தர்மபுரிக்கெல்லாம் போய் செக் பன்ன மாட்டீர்கள். எவனாவது சட்டையை இன் செய்து கார் பக்கத்தில் போட்டோவில் நின்றால் அது அவனுடைய கார்தான் என்று சத்தியம் செய்யும் பல அப்பாவிகள் இருக்கும் வரை ஏமாற்றும் ஆட்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை என்பது தெரிந்ததுதானே.
இதை ஏன்யா இந்த தன்னம்பிக்கை தொடர்னு போட்டுட்டு இதுலெ போய் எழுதிக்கிட்டுருக்கான் என சிலர் கேட்கலாம். காரணம் கண்களின் இமைகளுக்கிடையே கனவை சுமந்து செல்லும் இளைஞர் கூட்டம் கடமைகள் முதுகெலும்பை உடைப்பதை தவிர்க்க "எப்படியாவது சம்பாதிக்கனும்' எனும் தவறான தொழில்களில் தன் தலையை கொடுக்கலாம்.
எப்போதும் பாலிஷான விசயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் சாக்கடைகளை எப்படி அடையாளம் காட்டுவது?...
இதை நான் எழுதாமல் வேறு யார்தான் எழுதுவது?
See you in next episode...
ஏற்றம் தொடரும்...
-ZAKIR HUSSAIN
24 Responses So Far:
//என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது நமது அடிப்படையை அடகு வைத்தோம்?.//
இந்த அத்தியாம் படிக்கட்டு மட்டும் அல்ல - திரை கிழித்து முத்திரை பதிக்கும் பதிவு !
மனத்தளவில் சிறைபட்டிருக்கும் பெரும்பாலோருக்கு சுல்லென்ற ஒளி காட்டும் வழிகாட்டியாகவே இருக்கிறது !
நல்ல பல அறிவுரைகள்!
இதையெல்லாம் நீங்கள் தான் எழுத வேண்டும்,உங்களால் மட்டுமே முடிகிறது.
//இந்த அத்தியாம்//
இந்த அத்தியாயம் வாசிச்சுடுவீங்களாம்...
முறையாக மெயின் ரோட்டில் AJ ரைஸ் மில்லுக்கு அருகில் இருந்த ஸ்ரீகணபதி டைப்பிங் இன்ஸ்டியூட்டில் டைப் (ஆங்கிலம்தாங்க) அடிக்க கற்று இங்கே வேலைக்கு வந்தா இரண்டு மூன்று விரலுக்கு மட்டுமல்லாமல் கைப்பிடி எலியை கையில் கொடுத்து தடவித் தடவி வேலை செய்யச் சொல்லி அதன் பின்னர் ஒன்று அல்லது இரண்டு விரலில் மட்டுமே அடிக்கிற ஐபேடும் பக்கத்தில் இருந்தா இப்படி கொஞ்சம் விட்டுப் போயிடுது...
சிம்பிளா Sorryன்னு சொல்லிக்கலாம்னு... முணுமுணுக்கிறவங்க இருந்தா நேரடியா சொல்லிடுங்க..
//இதை ஏன்யா இந்த தன்னம்பிக்கை தொடர்னு போட்டுட்டு இதுலெ போய் எழுதிக்கிட்டுருக்கான் என சிலர் கேட்கலாம்.//
இத்தளத்தை பார்வையிடும் அறிவுடையோர் யாரும் கேட்க மாட்டார்கள்.
//இதை நான் எழுதாமல் வேறு யார்தான் எழுதுவது?//
கண்டிப்பாக நீங்கள்தான் தொடர்ந்து எழுத வேண்டும் சகோதரரே.
படிக்கட்டுகள் பத்து வரை படித்து பரவசமடையும் நான், பெயரளவில் பின்னூட்டங்கள் எழுத விரம்பவில்லை. சைலன்ஸ் ரீடராகவே படித்து பயனடைகின்றேன்-அதவாது அடுத்தவருக்கும் அறிவுரை கூறுகின்றேன்.
தம்பி ஜாகிர்!
//"வேர்களில் உள்ள நோயைப்போக்காமல் மரத்தின் கிளைகளை அலங்கரித்து என்ன பயன்?" என்ற எண்ணம் நமக்கு வருவது சரிதானே?//
நெத்தியடி!!!
//எப்போதும் பாலிஷான விசயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் சாக்கடைகளை எப்படி அடையாளம் காட்டுவது?...//
சாட்டையடி!!!
இபுராஹீம் அன்சாரி
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா??? எனும் செளந்தரராஜன் பாடல் வரிகளை சொல்லாமல் சொல்லியுள்ளீர்கள். சொந்த தொழில், வேலை வாய்ப்புகளை செய்பவர்களுக்கு மிக அருமையானா கட்டுரை. வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
பத்தாவது படியில் ஏறியதும் பொத்து பொத்துன்டு விழுற மாதிரி இருக்குது. ஜாஹிர் காக்கா .
// //என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது நமது அடிப்படையை அடகு வைத்தோம்?.//
எப்போ காசு பணத்தின் மீது அளவுக்கு அதிகமா மோகம் கொண்டோமோ அப்பவே அடகு வைக்கப் பட்டு விட்டது.
// சிலர் தொழில் சிறக்க!!! செய்யும் அட்டூழியம்.//
காக்கா நாங்கள் கடை திறக்கும் போது ஃபாத்திஹா ஓத நல்ல ஹஜரத்த கூட கூப்பிடவில்லை.வெள்ளிக் கிழமை அசர் தொழுகைக்கு பிறகு ஏக வல்ல இறைவனிடம் இரு கையையும் ஏந்தி விட்டு வந்தோம்.அலை மோதிய கூட்டம் எங்கே இருந்துதான் வந்தார்களென்று தெரியவில்லை.
அல்லாஹ் நாடியவர்களுக்கு அளவில்லாமல் கொடுக்கிறான்.
தான் நாடியவர்களுக்கு சுருக்கி கொள்கின்றான். என்பதை நினைவில் இருத்திக்கொள்வோம்.
// எப்போதும் பாலிஷான விசயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் சாக்கடைகளை எப்படி அடையாளம் காட்டுவது?...//
கண்டிப்பாக சாக்கடையில் உள்ள கிருமிகளையும் அடையாளம் காட்டனும் காக்கா.
”நச்,நச்” என்ற குட்டுகள்...பல நல்ல விசயங்கள்,தவிர்க்க வேண்டிய செயல்கள்,எண்ணங்கள் என மெருகு கூட்டி தலை நிமிர்ந்து நிற்க்கின்றது உங்களின் படிக்கட்டுகள்....இவ்வளவு அவசியமான விசயங்களை எழுதும் நீங்கள் எங்கள் துவாவில் என்றும்
படிக்கட்டில் ஏற்றம் இருப்பது போல் நம்மில் ஏற்றம் இல்லை. ஏன் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கிறது என்று நம்மவர்கள் சிந்திப்பதில்லை.
ஒரு கம்பெனியில் இருந்து எவ்வளவு சம்பளம் வாங்கலாம் என்று நாம் கணக்கு போட்டுக்கொண்டு இருக்கிறோமே தவிர. வாழ்க்கையில் எப்படி உயர்வது,எப்படி தொழில் பண்ணுவது என்றல்லாம் சிந்திப்பதில்லை.
ஒரு கம்பெனியில் சேர்ந்து வேலை பார்த்து விட்டால் கடைசிவரைக்கும் அதற்கு நாம் அடிமையாக இருந்து வருகிறோம். குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டு சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்று யாருக்கும் ஆர்வம் வருவதில்லை.
ஒரே மூச்சாக வெளிநாட்டில் போய் சம்பாதித்து விட்டு வயதான காலத்தில் சொந்த நாட்டிற்கு செல்கின்றனர். வீட்டை தான் படிக்கட்டுகள் போல் கட்டிக்கொண்டு போகிறார்களே தவிர இவருடைய வாழ்க்கையில் படிக்கட்டுகள் போல் ஏற்றம் இல்லை.
ஜாகிர் காக்காவுடைய படிக்கட்டு ஏற்றம் ஏறிக்கொண்டே போகுது இன்னும் உங்கள் படிக்கட்டுகள் ஏற்றம் உயர்ந்துக்கொண்டே போகட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/// உங்களின் முதலாளியின் அட்டகாசம் பிடிக்கவில்லை என்றால் அவரிடம் இருந்துகொண்டே அவரை திட்டுவது, சாபம் இடுவது எல்லாம் உங்களின் தூய்மையான நிலைப்பாட்டுக்கு வைரஸ் அட்டாக் வந்து விடும். ///
கடமைக்கு வேலைப்பார்ப்பதை விட விலகிக் கொள்வது நல்லது. நல்லதொரு தெளிவான அறிவுரை.
**********************************************
/////வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அது அவ்வளவு ஈசியல்ல என்பது எனக்கும் தெரியும்....யாரையும் நம்பி இறைவன் உங்களைப் படைக்கவில்லை என்பதே உண்மை. ////
யாரையும் நம்பி இறைவன் உங்களைப் படைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் இதை செயலில் கொண்டு வந்து உறுதியான நம்பிக்கையுடன் செயல்படுவதற்கு யாரும் தயாராயில்லை. உண்மையான நம்பிக்கை இறைவன் மீது இல்லை. சிலபேருக்கு நம்பிக்கை இருந்தாலும் முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டியே வருகிறார்கள்.
**********************************************
///// என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது நமது அடிப்படையை அடகு வைத்தோம்?. ////
சிந்திக்கும் திறனை அடகு வைத்து விட்டதால், அடிப்படையும் அடகுக்கு சென்று விட்டது.
**********************************************
/// "வேர்களில் உள்ள நோயைப்போக்காமல் மரத்தின் கிளைகளை அலங்கரித்து என்ன பயன்?" என்ற எண்ணம் நமக்கு வருவது சரிதானே? ///
சரிதான்! நிச்சயம் நோயை அகற்ற அனைவரும் பாடுபட வேண்டும். மூடநம்பிக்கையை களையும் முயற்சியிலும் அனைவரும் இறங்கத்தான் வேண்டும்.
**********************************************
///பொருளாதார கஸ்டத்தில் இருக்கும் மிடில் கிளாஸ் மக்களை இது மாதிரி எனக்கு தெரிந்து 25 வருடத்துக்கு மேலாக பல டுபாக்கூர் கம்பெனிகள் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.///
இன்று கடை தொடங்கி நாளை பணக்காரன் ஆகிவிட வேண்டும். குறுக்கு வழியில் பணம் வந்தாலும் பராவயில்லை என்ற பேராசையும். நீண்ட காலம் வாழ்ந்து விடுவோம் என்ற ஆசையும், எந்நேரமும் மரணம் வரலாம் என்பதை மறந்ததும்தான் ஏமாறுவதற்கு காரணமாகி விடுகிறது.
**********************************************
///எப்போதும் பாலிஷான விசயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் சாக்கடைகளை எப்படி அடையாளம் காட்டுவது?... இதை நான் எழுதாமல் வேறு யார்தான் எழுதுவது?////
நிச்சயம் அடையாளம் காட்ட வேண்டும். அவரவர் சக்திக்கு உட்பட்டு சமுதாயத்தில் நடக்கும் தீமைகளை வெளிப்படுத்தி அதில் ஈடுபடும் மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வருவது இறைநம்பிக்கையாளனின் அவசிய கடமையாக இருக்கிறது.
தீமைகளை தடுக்க முயற்சி செய்யும்படி மனிதர்களுக்கு வல்ல அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
படிக்கட்டுகள் -10 ல் தங்களின் ஆதங்கம் நியாயமானதே! சமுதாயத்தில் நடக்கும் தீங்குகளை கண்டு வேதனை வரும்பொழுது நம்மால் முடிந்த சீர்திருத்தங்களை செய்ய நம்முடைய உள்ளம் தூண்டுவதும் உண்மையே!
நல்லதை போதிக்கும்போது ஸ்பெஷலாக முன்னேறத்துடிப்பவனுக்கு தொற்று நோய் போல் வரும் ஒரு சில கழிசடைகளையும் சொல்லித்தருவதில்தான் அந்த அட்வைஸ்/ஆலோசனை முழுமையடைகிறது. தொழிலில், வேலை தேடுவதில், படிப்பில் எதிலும் எப்பேற்பட்ட இடைஞ்சலும் வரலாம் அதை சமாளிக்கவே அவனோட பாதி ஆயுள் கழிந்திடும்
//தட்டு, தகடுகளுக்கு இவர்கள் அடிமையாவது.//
நிறைய பேர் தட்டு தகடுகளுக்கு அடிமையாகி தட்டு தடுமாறி நிற்கின்றார்கள்.
---------------------------------------------------------------------
சொல்லவந்த செய்தியை நெத்தி அடியாய் சொன்னது அருமை
இவைப் படிக்கட்டுகளா லிஃப்ட்டா?
ஜிவ்வுன்னு வேகமெடுத்து மனிதனை மேலே மேலே மேம்படுத்தும் மின் தூக்கி?
ஜமாய்டா ஜாகிர், நமக்கு நாம்தானே எடுத்துச் சொல்லனும்?
உன் பாதை வெற்றிப்பாதை. எனவே வழிகாட்டும் தகுதியும் உனக்குண்டு.
//'மாசம் 30 -- சட்டி 60//
ஜாயிரோ வேறு யாராவதோ மேலே உள்ள அருஞ்சொல்லுக்குப் பொருள் விளக்கம் தரவும்.
-இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
சபீர்
VI "A"
//-இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
சபீர்
VI "A" //
எப்போயிலேருந்து "A" செக்ஷன் ?.. "C" செக்ஷனுண்டுல நினைச்சேன்... சரி சரி, வலப்பக்கம் இருக்கிற கேர்ள்ஸ் யாராவது ஒருத்திகிட்டே கேட்டுகிடுங்க காக்கா.... :)
எப்பவுமே ஏ செக்ஷன்தான். நல்லாப் படிக்கிற பசங்கள ஏ செக்ஷ்னிலும் படிக்கட்டுறவங்களே பி செக்ஷனிலும் போட்ற சிஸ்ட்டம் அந்தக் காலத்தில் இருந்தது தெரியாதா உங்களுக்கு?
//வலப்பக்கம் இருக்கிற கேர்ள்ஸ் யாராவது ஒருத்திகிட்டே கேட்டுகிடுங்க காக்கா.... :)//
கேட்டதற்கு, "நோ டாட், இட்ஸ் பிட் கன்ஃபியுஸிங்" என்று பதில் வருகிறதே.
எழுதினவனக் கூப்பிடுங்களய்யா.
கவிக் காக்கா: ஒரு(த்)"தி" போட்டது முதியோர் கல்வி ஞாபகத்தில் காக்கா :)
படிகள் கட்டும் காக்கா, ஏதோ அ.நி.ரீடர்ஸ் கான்ப்ரன்ஸ் இருப்பதாக சொன்ன ஞாபகம் அதிகாலையில் வருவார்கள் ! :)
மாசம் 30 - சட்டி 60......இதை ஒரு சொலவடைக்காக சொல்வார்கள்: அதாவது வேலையை திறம்பட செய்வதில் கவனம் இல்லாமலும், முயற்சி இல்லாமலும் ஒரு மாதத்தில் 60 சட்டி / ஒரு நாளைக்கு 2 சட்டி என "நிறந்தர கணக்கு" ...சட்டியை கழுவுவது கணக்கா...இல்லை சட்டியில் உணவு கணக்கா என எனக்கு தெரியவில்லை. இதை அடிக்கடி மர்ஹூம் பாரூக் ஹாஜியார் [ சாரா மண்டபம்] தன்னிடம் வேலை பார்க்கும் அசமந்தங்களுக்கு சொல்வார்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
படிக்கட்டுகளில் எந்த வரியை குறிப்பிட்டு எழுதலாமென்று பார்த்தால் ஒரு
வரியை அடுத்த வரி விட்டுக்கொடுக்கவில்லையே.......அருமை ..படியை
கொஞ்சம் பெருசு பெருசா கட்டினால் நல்லது.படிக்க படிக்க ஆசையா இருக்குது.
//என்னுடைய கேள்வி ரொம்ப சிம்பிள்....நீங்களும் நானும் எம்பெருமானார் நபி முஹம்மத் [ஸல்] அவர்களை விட எந்த வகையில் உசத்தி... நபி அவர்களுக்கே இறைவன் வறுமையைக் கொடுத்து சோதித்தபோது இப்படி தனது ஏகத்துவத்திலிருந்து ஒரு இம்மி அளவும் பிரளாதவரின் வழியை பின்பற்றுபவர்கள் என்று மார்தட்டும் நாம் எப்போது நமது அடிப்படையை அடகு வைத்தோம்?.//
எனக்கு பிடித்த வரிகள்.
//எதை நம்புவது என்று வழிதெரியாமல் நிற்கும்போது வரும் மகான் / அல்லது ஏதாவது, தட்டு, தகடுகளுக்கு இவர்கள் அடிமையாவது. சிலர் நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இது மாதிரி விசயங்களும் இருந்து விட்டு போகட்டுமே என்றே சொல்வார்கள்....10 ரூபாய் திருடினாலும் திருட்டுதான் 10,000 ரூபாய் திருடினாலும் திருட்டுதான்.//
இது போன்ற மகான்களை - தர்ஹாக்களை சுட்டுத் தள்ளவேண்டும்,இடிக்க வேண்டும்.மூடநம்பிக்கைகளை வளர்ப்பது தர்காக்களே என்பதனால்.
//இதை ஏன்யா இந்த தன்னம்பிக்கை தொடர்னு போட்டுட்டு இதுலெ போய் எழுதிக்கிட்டுருக்கான் என சிலர் கேட்கலாம். காரணம் கண்களின் இமைகளுக்கிடையே கனவை சுமந்து செல்லும் இளைஞர் கூட்டம் கடமைகள் முதுகெலும்பை உடைப்பதை தவிர்க்க "எப்படியாவது சம்பாதிக்கனும்' எனும் தவறான தொழில்களில் தன் தலையை கொடுக்கலாம்.//
இல்ல காக்கா,நீங்க சரியாத்தான் போறீங்க.இறைநம்பிக்கை,பிறகு நம் மேல் உள்ள நம்பிக்கை(இறைவன் நாடினால் நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை)பற்றி அலசுவதற்கு முன்,இந்த விளக்கங்கள்,தேவையே.
அஸ்ஸலாமு அலைக்கும். சிலர் எழுதுவர் படிப்பவர் படித்தால் படிக்கட்டும் இல்லாவிட்டால் நாம் எழுதுவதை எழுதுவோம் என தம் கடமை முடிந்து விட்டது எனும் தொனியில் அது அமைந்திருக்கும். ஆனால் சகோ.ஜாஹிர் அவர்களின் படிக்கட்டு ,எல்லாரும் படிக்கட்டும் அதன் படி நடக்கட்டும் ,பின் வாழ்வில் சிறக்கட்டும் எனும் ரீதியில் மெனகெட்டு அதே வேளை ஆர்வமாய் எழுதுகிறார்கள்.ஓவ்வொரு படிகளும் படித்தபடி நட என்பதை சொல்வதுடன் ஒவ்வொரு படியாகி கைபிடித்து நம்மை ஏற்றி விடுவது போல் அமைந்திருப்பது அன்னாரின் வாழ்வில் திட்டமிடல் மிகுந்திருப்பதேயே காட்டுகிறது.அதினினும் மார்க்கம் சொன்ன படி நடப்பது அவசியம் என்பதையும் அழகாய் ஆனித்தரமாய் சொல்லிருக்கும் விதம் உள்ளங்கையில் நெல்லிக்கனி!!!!
Thanx to everybody for your valuable comments. Insha Allah we will meet in next episode. apologies for not thanking individualy. This week is really a 'work loaded" week.
Post a Comment