Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பணியிடத்தில் பாகுபாடு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 12, 2012 | , , ,

அமெரிக்க முஸ்லிம் பெண்மணி வென்றெடுத்த வெகுமதி!

சூசன் பஷீர்!

இதுதான் இந்தப் பேறு பெற்ற பெண்மணியின் பெயர். அண்மையில் அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரை வியப்பில் ஆழ்த்திய முஸ்லிம் பெண் இவர்! இவருக்கு என்ன நிகழ்ந்தது? இஸ்லாத்தைத் தழுவும் அமெரிக்கப் பெண்மணிகள் அனைவருக்கும் நிகழ்ந்துவரும் சோதனைகள்தாம் இவருக்கும் நிகழ்ந்தன.

‘The Kansas City Star’ என்ற பத்திரிக்கை தரும் தகவல்களின்படி, இப்பெண் கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான AT&T யில் முக்கியப் பொறுப்பில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார்.


2005 ஆம் ஆண்டில் இவர் இஸ்லாத்தைத் தழுவியபோது, வடக்குக் கான்சாஸ் சிட்டியில் வசித்துவந்தார். அப்போது முதல் தொடங்கியதுதான், இவருக்கு எதிரான religious discrimination என்னும் மதப் பாகுபாட்டுத் தொல்லைகள்!  இருப்பினும் என்ன? ஈமானின் உறுதியால் எதிர்நீச்சல் போட்டுவந்தார் சூசன்.

உடலை முழுவதுமாக மறைத்து, தலைச்சீலை (headscarf) அணிந்துதான் அலுவலகத்திற்கு வந்து தனது பணியை முறையாகச் செய்துவந்தார்.  இவருக்கு எதிரான தொல்லைகள், இவர் இஸ்லாத்தைத் தழுவச் சில மாதங்கள் முன்பிருந்தே தொடங்கிவிட்டனவாம்.  அதற்கு முன், இவருடைய சிறப்பான சேவைகளுக்காக AT&T நிறுவனம் இவருக்குப் பல பாராட்டுச் சான்றுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளதாக அறிகின்றோம்.

ஆனால், எப்பொழுது இவர் முஸ்லிமாக மாறி, ‘ஹிஜாப்’ அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கினாரோ, அன்று முதல் இவருடன் பணியாற்றியவர்கள் இவரைப் பார்த்துக் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினராம்.  கண் சாடையால் ‘that thing on her head’ என்று கூறிச் சிரித்து மகிழ்ந்தனராம்.

“என்னைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது! அதிர்ச்சியுற்றேன்! இதற்கு முன் நான் எப்படியெல்லாம் உடலின் பெரும் பகுதிகள் தெரிய உடை அணிந்து வந்தபோதெல்லாம் இது போன்ற கிண்டல்கள் இல்லை!  கண் சிமிட்டல்கள் இல்லை! குத்தலான பேச்சுகள் இல்லை! யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை, என் உடையைப் பார்த்து! இப்போது இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் முழு உடலையும் மறைத்து உடையணிந்தபோது.....?” என்று வியக்கிறார்; வேதனைப் படுகிறார்.

சகோதரி சூசனின் அலுவலக மேஜை மீது, தலையை மறைத்த தோற்றத்தில் கன்னி மேரியின் படமும், அதனுடன் பைபிளின் வசனம் ஒன்றும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது! அந்த வசனத்தையும் தோற்றத்தையும் பார்க்கும்போதெல்லாம், சூசனுடன் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் கேட்கும் கேள்வி, அவரை வேதனைப் பட வைக்கிறது!  “ஏண்டி!  நீ தீவிரவாதியா? இந்தக் கட்டடத்தை வெடி வைத்துத் தகர்க்கப் போகிறாயா?  Towel-headed Terrorist!”  திட்டித் தீர்த்தார்கள்.

மார்ச் 2008 வரை பொறுத்துப் பார்த்தார் சகோதரி சூசன். அதன் பின்னர், Equal Employment Opportunity Commission என்ற சட்டப் பாதுகாப்புத் துறையிடம் தன்  முறையீட்டை வைத்தார். அந்தத் துறையும் தனது புலனாய்வைத் தொடங்கிற்று. இதன் பிறகே, எதிரி ஏவுகணைத் தாக்குதல்கள் கடுமையாயின!  இதையொட்டி நிகழ்ந்ததுதான் climax எனும் உச்ச கட்டச் சோதனை! அதுவே சூசனை வன்மையாக இயக்கிற்று!

சூசனின் மேலதிகாரி ஒரு நாள் அவரருகில் வந்து நின்று, ஆத்திரத்துடன் அவருடைய ஹிஜாபைப் பிடித்திழுத்தார்! அவ்வளவுதான்! பெண் சிங்கம் கர்ஜிக்கத் தொடங்கிற்று!  AT&T நிறுவனத்தை எதிர்த்துக் குரலெழுப்பினார் சகோதரி சூசன் பஷீர்! 

“இந்த மேலதிகாரியைப் பணி நீக்கம் செய்யவேண்டும். அல்லது என்னை இந்த அலுவலகத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றவேண்டும்.”  நியாயமான கோரிக்கை. இவற்றுள் ஒன்றும் நிகழவில்லை. ஆண்டுச் சம்பளம் 70,000 டாலர் கிடைத்துவந்த தனது பணியைத் தொடர மனமின்றி, ஒன்பது மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டார் சூசன். அதன் பின் ஒரு நாள் அலுவலகம் வந்தவருக்கு, தன்னையே பணி நீக்கம் செய்த எழுத்தாணை ஆயத்தமாக இருந்தது!

அடுத்து சூசன் செய்தது, நீதிமன்ற முறையீடு! இதைச் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடைக்கோடிக்குப் போய், ‘ஆன்கரேஜ்’ என்ற ஊரில் ஒரு சிறு பணியில் அமர்ந்து, தனது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

“என்னைப் பணி நீக்கம் செய்ததுகொண்டு, தான் விரும்பிப் பணி செய்துவந்த ஊழியர் ஒருத்தியை இழந்துவிட்டது, AT&T நிறுவனம். நான் எனது வேலையை விட விரும்பவில்லை. ஏனெனில், அவ்வளவுக்கு என் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தேன். எனக்கே ஓர் ஆத்ம திருப்தி, நான் எனது நாட்டு முன்னேற்றத்தில் என் பங்களிப்பை முறையாகச் செய்கிறேன் என்று.  இப்போது அந்த மோசமான நிர்வாகத்தின்கீழ் வேலை செய்யவில்லை என்பதுகொண்டு, நான் மகிழ்கின்றேன்.  

ஆனால், எனது நாட்டின் பொருளாதாரச் செலவினங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், எனது வாழ்க்கையை எத்துணைப் போராட்டத்துடன் மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று நினைக்கும்போது, என் இதயம் கணக்கிறது.”  வேதனைப்படுகிறார் சகோதரி சூசன் பஷீர்.  

வெந்த புண்ணில் வேல் பாய்வது போன்று, அவருடைய இல்லற வாழ்விலும் விரிசல் கண்டுள்ளது! ஆம், கணவர் பஷீரிடமிருந்து விவாக ரத்துக் கோரி இப்போது விண்ணப்பமும் செய்துள்ளார் சூசன்!

வந்தது ‘ஜாக்சன் கவுன்டி’ நீதித் துறையின் சட்டத் தீர்ப்பு!  AT&T நிறுவனம் சகோதரி சூசனுக்கு ஐந்து மில்லியன் டாலர் இழப்புத் தொகை கொடுக்கவேண்டும்! அது மட்டுமன்று.  சூசன் இழந்த வேலைக்குப் பகரமாக அந்த நிறுவனம் 1,20,000 டாலர் சூசனுக்குக் கொடுக்க வேண்டும்; இது தவிர, வழக்கறிஞருக்குக் கொடுக்கவேண்டிய தொகை பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்!

AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது.  அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!

-அதிரை அஹ்மத்
நன்றி : இத்தகவலை அமெரிக்காவிலிருந்து அனுப்பித் தந்த என் மருமகன் அப்துல் கபூருக்கு.

15 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

// அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!//ஆமீன்

Abdul Razik said...

Her salary has increased in akhira as numerous. Hope she will wrap her full face with face cover to boost her salary too more in akhira. Let’s pray Allah for forgive her previous transgression and to offer a bright future insha allah

Abdul Razik
Dubai

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரி பசீருக்கும் இஸ்லாத்திற்கும் இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.
ஆமீன்.

சேக்கனா M. நிஜாம் said...

மறு முறையீடு கண்டிப்பாகத் தோல்வியில் முடியும் இன்ஷா அல்லாஹ் !

இத்தகவலை அமெரிக்காவிலிருந்து அனுப்பித் தந்த நண்பர் அப்துல் கபூர் மற்றும் இதனை மொழியாக்கம் செய்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும் என் வாழ்த்துகள் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வை நம்பி வந்தவர்களை அவன் ஒரு போதும் கைவிட்டதில்லை.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் எதிரிகள் விரைவில் மண்ணை கவ்வி நிலை குலைந்து போவார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அடிபட்ட ஒரு பூனைக்காக பரிதவித்துப்போகும் அமெரிக்கர்கள்
இஸ்லாம் என்று வந்து விட்டால் அதன் அப்பாவி பொது ஜனங்களை அழித்தொழிப்பதில் குறைந்தளவு ஈவிரக்கமேனும் காட்டாமல் போவது ஏனோ?

க‌ள்ள‌க்குழ‌ந்தை இஸ்ரேல் பிற‌ந்த‌ பின் ஒட்டு மொத்த‌ உல‌க‌ அமைதியும் இற‌ந்து விட்ட‌து.

புதிய‌தாய் ம‌ல‌ரும் ம‌ல‌ருக்கு உள்ள‌ உறுதி விழுதுக‌ள் ப‌ல‌ விட்டு வீராப்பாய் நிற்கும் பெரும் ம‌ர‌ங்களிடம் காண இயலவில்லை. (புதியதாய் இஸ்லாத்தை தழுவும் மக்களுக்குள்ள இறையச்சமும், உறுதியும் பரம்பரை முஸ்லீம்களிடம் எளிதில் கண்டு விட இயலவில்லை.)

ந‌ல்ல‌ ஆக்க‌மும், த‌ர‌மான‌ மொழி பெய‌ர்ப்பும்.....

ZAKIR HUSSAIN said...

அமெரிக்கர்கள் தீர்ப்பு விசயத்தில் ஞாயமாக நடந்திருக்கிறார்கள். இவ்வளவு பிரச்சினையும் அந்த சகோதரியை எதிரியாய் நடத்தியவர்களால் ஏற்பட்டது. இன்னொரு தீர்ப்பாக இந்த பிரச்சினைக்கு காரணமானவர்களின் சம்பளத்தில் அந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ஒரு தொகை கழித்துக்கொண்டே வர வேண்டும் என்று இருந்தால் இனிமேல் எவனும் வாய் திறக்க மாட்டான்.

Anonymous said...

அல்லாஹ்வை நம்பியவர்களுக்கு எந்த வித பாதிப்பும்,இழப்பும் வருவதில்லை. எத்தனை மேல் முறையீடு செய்தாலும் நிச்சயம் வெற்றி கிடைக்கப்போவதில்லை.

இஸ்லாத்தை தழுவிய சகோதரி பஷீருக்கு இன்ஷா அல்லாஹ் எல்லா காரியங்களில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

தூய்மையான இஸ்லாமும் வாய்மையான ஈமானும் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்தும் என்பதும்; விடாமுயற்சியும் தொடரும் போது இறுதி வெற்றிக் கிட்டும் என்பதும் சகோதரி சூசன் அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் நமக்கு ஒரு பாடம்.

sabeer.abushahruk said...

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி.

அதிரை சித்திக் said...

அமெரிக்காவை பொறுத்தவரை உல் நாட்டு சட்டங்களில்

தீர்ப்பு ..மதம் நிறம் மொழி நாடு எதையும் பார்ப்பதில்லை

நீங்கள் வாடகைக்கு குடியிருக்க வீடு கேட்டு கம்பெனியை

அணுகினால் உங்களின் வருமானம் இதற்கு முன் குடியிருந்த போது

நாணயமாக வாடகை செலுத்திய விவரம் சரியாக இருக்குமானால்

வேளையில் தொடர்ந்து இருப்பவராக இருந்தால் வீடு கிடைக்கும்

இதில் எதுவும் சரி இல்லை என்றால் வீடு தர மறுக்கப்படும் ..

அப்படி மறுக்கப்படும் விளக்கத்தில் ..மத நிற மொழி நாடு பேதம்

பார்த்து மறுக்கவில்லை உங்களின் வருமானம் ..வாடகை

செலுத்தும் அளவிற்கு இல்லை ..அல்லாத முன்பு இருந்த வாடகை வீட்டிற்கு நீங்கள்

சரிவர வாடகை செலுத்த வில்லை உங்கள் கிரடிட் சரி இல்லை எனவே வீடு தா

முடியவில்லை .மத பேதம் மொழி பேதம் இன பேதம் நிற பேதம் உள்நாட்டை பொறுத்தவரை

இல்லை ..அப்படி நிரூபிக்க பட்டால் பெரிய அபராதத்திற்கு ஆளாக நேரும்

.சூசன் பசீர் அவர்கள் மீண்டும் வெல்வார் ..,

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//AT&T இத்தீர்ப்பை எதிர்த்து மறு முறையீடு செய்யும் என்று அறிவித்துள்ளது. அது தோல்வியடைந்து, இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே என்று ஆக, நாமனைவரும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் இறைஞ்சுவோமாக!///

இன்ஷா அல்லாஹ் !

ALAVUDEEN said...

தூய்மையான இஸ்லாமும் வாய்மையான ஈமானும் உள்ளத்தில் துணிவை ஏற்படுத்தும் என்பதும் விடாமுயற்சியும் தொடரும் போது இறுதி வெற்றிக் கிட்டும் என்பதும் சகோதரி சூசன் அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் நமக்கு ஒரு பாடம்.இஸ்லாத்தை தழுவிய சகோதரி பஷீருக்கு இன்ஷா அல்லாஹ் எல்லா காரியங்களில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

habeb hb said...

அல்லாஹ்வை நம்பி வந்தவர்களை அவன் ஒரு போதும் கைவிட்டதில்லை.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் எதிரிகள் விரைவில் மண்ணை கவ்வி நிலை குலைந்து போவார்கள்.இத்தகவலை அமெரிக்காவிலிருந்து அனுப்பித் தந்த நண்பர் அப்துல் கபூர் மற்றும் இதனை மொழியாக்கம் செய்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும் என் வாழ்த்துகள் !

Asalamsmt said...

அல்லாஹ்வை நம்பி வந்தவர்களை அவன் ஒரு போதும் கைவிட்டதில்லை.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் எதிரிகள் விரைவில் மண்ணை கவ்வி நிலை குலைந்து போவார்கள். சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும் என் வாழ்த்துகள் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு