Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் "ஆயிஷா பல் மருத்துவமனை" ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | June 16, 2012 | , , ,


"பல் போனால் சொல் போச்சு", "ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி..." என்பது அனைவருக்கும் தெரிந்ததே.. ! சிலருக்கு கோபம் வந்தாலும் "பல்லை" உடைப்பேன் என்று எச்சரிப்பதும் நம்மிடையே அன்றாட நிகழ்வுகளில் நடப்பதே.

அகத்தின் அழகு முகத்திலே தெரியும், அதற்கும் அழகு சேர்ப்பதும் பற்களே, அழகான உச்சரிப்பு, இனிக்கும் சிரிப்பு அதுமட்டுமா உண்ணும் உணவை மென்று அறைத்து குடலுக்குள் அனுப்பும் அற்புத பணிகள்.

பற்களின் எண்ணிக்கை 32, அதில் இன்றைக்கு எத்தனை நம் வசம் இன்னும் இருக்குன்னு எண்ணி(!!)ப் பார்த்திருக்கிறீர்களா ?

என்ன இது கேள்வி என்று புருவம் உயர்த்த வேண்டாம், ஆம் நம் பற்களை பராமரிப்பதில் எந்த அளவுக்கு கவனமாக இருக்கிறோம் என்பதே என்னுள் எழும் வினாவும்.

காலம் காலமாக நாமதூர்காரர்கள் மருத்துவம் என்றால் தாண்டிச் செல்வது குறைந்தது 12 கிலோமீட்டர் தூரம் அங்கே சென்று வந்தால்தான் அதற்கான பலன் இருப்பதாக உளவியல்ரீதியாகவே தயாரகிவிட்டார்கள்.

இப்படியிருக்க, நமதூர் மண்ணின் மைந்தர்கள் மருத்துவர்களாக சேவைக்கு வருவதும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது அவ்வகையில், சத்தமே இல்லாமல் கடந்த இரண்டரை வருடங்களாக பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் "ஆயிஷா பல் மருத்துவமனை" என்று இயங்கி வருவது அதிரைவாசிகள் பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.

அதிரையைச் சார்ந்த பல்மருத்துவர் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S.M.C.I.P., தனது சேவைக்கே உரிய புன்னகையும், இனிமையான பேச்சும், அதிரையர்கள் மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் புன்னகையை சூட்டுவதில் திறமையானவர். 

பல்மருத்துவர் பஜ்லுர் ரஹ்மான் அவர்களைப் பற்றி சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பெருமையாக சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது, நேர்மையான மருத்துவம், கச்சிதமான சிகிச்சை, தெளிவான ஆலோசனைகள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இத்தகைய நற்குணங்கள் கொண்ட மருத்துவர் நமதூரிலும் "ஆயிஷா பல் மருத்துவமனை"யை கடந்த 13-மே-2012 அன்று 28-G, ஆஸ்பத்திரி தெரு ரோடு, ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில் என்ற முகவரியில் துவங்கி வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நல்ல சுகாதரமான மருத்துவம், கனிவான பேச்சு, பல்லுக்கு உறுதி(யளிப்பது) ஆக அவரிடம் மருத்துவம் பார்க்க செல்பவர்களின் சொல்லுக்கும் நிலையான உறுதி !


அனைத்து வகையான பல்மருத்துவ சிகிச்சைகளை, உயர்தரமாக வழங்கி வரும் 'ஆயிஷா பல் மருத்துவமனை' தற்போது அதிரையிலும் இருப்பதனால், அதிரை மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களும் சிகிச்சைக்கு என்று அதிக செலவுகள் செய்து வெளியூர் செல்ல வேண்டியதில்லை. ஊரில் அமையப் பெற்றிருக்கும் மருத்துவமனையை பொதுமக்களின் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பல் சுத்தம் செய்தல்
*பல் கறை நீக்குதல்
*பல் சொத்தை அடைத்தல்
*பல் கட்டுதல் (பல்செட், செராமிக் பல்)
*பல்வேர் சிகிச்சை (root canal treatment)
*பல் அறுவை சிகிச்சை
*பல் கிளிப் போடுதல்
*ஈறு நோய் சிகிச்சை

என்று 'பல்'வேறான சிகிச்சை வசதிகள் சகலமும் இங்கே கிடைக்கிறது. மருத்துவரின் அலைபேசி எண்: +91 96007 14614

'பல்'வேறு வேலைகளுக்கிடையே 'பல்' வேர்கள் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது நமதூரில் இல்லையே என்று ஏங்கிய தருணமும் எனக்கு உண்டு.

ஆயிஷா பல் மருத்துமனையின் சேவை அதிரை பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள மருத்துவ சேவையாக இருக்கும் என்று நம்பிக்கை வைப்போம் இன்ஷா அல்லாஹ்.

-அபுஇபுறாஹிம்

19 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

To Dr.M.H. Fazlur Rahman B.D.S

May Allah Bless you for all your effort, to make you as a successful dentist.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம்மூரில் கண்டிப்பாக வைக்கப்பட வேண்டிய மருத்துவமனை பல் மருத்துவமனை. நமதூரில் "ஆயிஷா பல் மருத்துவமனை" உதயம் கேட்டு ரொம்ப சந்தோசம். பொறுத்துக்கொள்ள முடியாத வேதனைகளுள் பல் வேதனை முதண்மையானது.

இரவில் பல் துலக்காமல் உறங்குவதே பல் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் முக்கியகாரண‌மாகும்.

இரவில் சிறுவர்கள் இனிப்பு, மிட்டாய் உண்டு அப்படியே உறங்கி விடுவது, பெரியவர்கள் விருந்து/இரவு சாப்பாட்டிற்குப்பிறகு சுவீட் சாப்பிட்டு விட்டு அப்படியே உறங்கிவிடுவதால் பல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர்.

"சென்சோடின்" போன்ற தரமான, விலையுயர்ந்த பற்பசைகளை பயன்படுத்துவதனாலும் பல் சம்மந்தமாக அடிக்கடி வரும் பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வு காண இயலும்.

பணத்தைப்பார்க்காமல் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் பிரஸ்ஸை மாற்றிக்கொள்வதும் பற்களுக்கு கிருமிகள் செல்லாமல்
தடுக்கிறது.

"ஒரு பல்லுலெ வேதனை வந்தாலும் ஒடம்பு பூராவும் காய்ச்சல் மாதிரி சூடாகி சுறுசுறுப்பு இழந்து விடுவோம்".

அர‌பு நாடுக‌ளில் பெரும்பான்மையான‌ நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ணிபுரிப‌வ‌ர்க‌ளுக்கு ப‌ல் வேதனை வந்து அதை பிடுங்கினால் நிறுவ‌ன‌ம் பொறுப்பேற்கும். சொத்தைப்ப‌ல்லை சுத்த‌ம் செய்து அடைத்தால் நிறுவ‌ன‌ம் பொறுப்பேற்காது. இது என்னா ச‌ட்ட‌ம் என்று தெரிய‌வில்லை? (இப்ப‌டி செய்வ‌து அழ‌கு சாத‌ன‌ங்க‌ளின் ப‌ட்டிய‌லில் அட‌ங்கி விடுமோ? என்ன‌வோ? தெரிய‌வில்லை)

டாக்ட‌ர் ப‌ஜ்லுர் ர‌ஹ்மானுக்கு வாழ்த்துக்க‌ளும், துஆவும் சென்ற‌டைய‌ட்டுமாக‌.......ம‌ருத்துவ‌ரின் க‌னிவான‌ பேச்சே பாதி நோயை குண‌ப்ப‌டுத்தி விடும்.......

என‌வே குறைந்த‌து தின‌மும் காலை, இரவு இர‌ண்டு முறையாவ‌து பெரியவர் முதல் சிறியவர் வரை ந‌ம் வீட்டின‌ர்க‌ளை ப‌ல் துல‌க்க‌ ப‌ழ‌க்கி ப‌ற்க‌ளை பாதுகாப்போம்.......

Ebrahim Ansari said...

டாக்டர் M.H. FAZLUR RAHMAN B.D.S அவர்களை வரவேற்போம்.

நமது ஊர் மக்கள் கொத்தமல்லி முதல் கோழி முட்டை வரை பட்டுக்கோட்டையில் வாங்கினால் நல்லதாக இருக்கும் என்கிற மனப்பான்மை படைத்தவர்கள்.

நமது ஊரில் இப்படி சிறப்பு மருத்துவர்கள் வருவதையும் அவர்களது சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளும் பக்குவம் பெறவேண்டும்.

இதேபோல் நம்மைப் பிடித்துள்ள தஞ்சை மோகமும் தீரவேண்டும். அதற்கு ஏற்றபடி பல சிறப்பு மருத்துவர்கள் குறிப்பாக ஜைனகாலஜிஸ்ட், தோல்நோய்சிகிச்சை, கண்மருத்துவர் , குழந்தை மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை ஆகியவற்றிற்கும் சிறப்பு மருத்துவர்கள் அவர்களின் மருத்துவமனைகள் அமைய வேண்டும். நமது மக்கள் அவர்களுக்கு தங்களைப் பிடித்துள்ள பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் பீடைகளை மறந்து ஆதரவும் தரவேண்டும். இந்த நோக்கத்தில் அமைந்த ஷிபா மருத்துவமனை வெறும் காட்சிப்பொருளாகவே ஆகிவிட்ட நிலையில் தனிப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் அதிரையில் தங்களின் மருத்துவமனைகளை அமைப்பதை வரவேற்போம்- ஆதரிப்போம்.

சிறந்த அறிமுக கட்டுரை தந்துள்ள தம்பி அபூ இபுராஹீம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

Noor Mohamed said...

எனது மச்சான் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S பிறந்தது முதல் இன்றுவரை நான் நன்கு அறிவேன். மற்றவர்களைப்போல் படித்து முடித்து வெளிநாடு சென்று வேலை தேடாமல், அதிரையில் சேவை மக்களுக்கு தேவை என்ற சமுதாய நோக்குடன் பணிபுரியும் Dr.M.H.பஜ்லுர் ரஹ்மான் B.D.S நலமுடன் தன் பணியை அதிரையில் தங்கு தடையின்றி தொடர என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துகள்.

சேக்கனா M. நிஜாம் said...

டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்துகள்

தொலைதூரத்திற்கு சென்று சிகிச்சையை மேற்கொள்ளும் உள்ளூர்வாசிகள் இவ்வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரையில் கிடைக்கப் பெறும் அனைத்து வளங்களையும் முழுமையாக பயன் படுத்துவோம். அதிரையை வளர்ப்போம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நம் ஊரில் மதிப்பிற்குரிய ஹனீஃப் டாக்டரின் மகன் ஆரிஃப் அவர்களும் முன்பு தன் பல் மருத்துவமனையை தன் தகப்பனாரின் மருத்துவமனைக்கு எதிரிலேயே ஆரம்பித்து பிறகு அது செயலற்று போனது வருத்தமே.

நம் நாட்டில் பிறந்த மண்ணில் மருத்துவமனை ஆரம்பிக்கும் ஒவ்வொரு மருத்துவருக்கும் மக்கள் பேராதரவு இருக்கிறதோ? இல்லையோ? மத்திய, மாநில அரசுகள் நல்ல பல சலுகைகளை அவர்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதை நல்ல முறையில் தன் பக்குவமான சிகிச்சை மூலம் அவர்கள் பயன்படுத்திக்கொண்டால் அவரவர் பிறந்த மண் தானாக வளர்ந்து ஜொலிக்க ஆரம்பித்து விடும்.

வளர்ந்த, வளரும் நகரங்களில் மட்டும் தான் மருத்துவமனை அமைத்து அபரிமிதமான வருமானத்திற்காக மக்களுக்கு சிகிச்சை அளிப்போம் என்ற நிலை இருந்து வந்தால் கிராமத்து மற்றும் வளர்ச்சி குறைந்த‌
ஊர்களின் மக்களெல்லாம் என்ன தீண்டத்தகாதவர்களா?

மக்களின் ஆதரவு இருக்குமோ? இருக்காதோ? என்ற அச்சமில்லாமல் நமதூர் போன்ற வளர்ச்சி குறைந்த ஊர்களில் மருத்துவமனை அமைத்து ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ வேண்டும் என்ற‌ அர்ப்ப‌ணிப்பு ம‌னப்பான்மை எல்லா ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் எளிதில் வ‌ந்து விடுவ‌தில்லை.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முக்கியமான இன்னொன்றையும் இங்கு குறிப்பிட மறந்து விட்டேன். பல் மருத்துவத்திற்கு தேவையான எல்லா உபகரணங்களையும், கருவிகளையும் சகோ. டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் அவர்கள் தன் மருத்துவமனைக்கு உள்ளேயே அல்லது அருகிலேயே வைத்துக்கொள்வது நல்லது.

உதாரணத்திற்கு, பல்லை எக்ஸ்ரே எடுக்க பட்டுக்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டும் அல்லது மருந்துகள் வாங்க அங்கே தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தால் மக்கள் அங்கேயே மருத்துவரையும் பார்த்து சிகிச்சைப்பெற்றுக்கொள்ளலாம் என்ற மனப்பான்மை வந்து விடும். அதற்கு பற்றாக்குறையான வசதிவாய்ப்புகள், உபகரணங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதே என் கருத்து.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

டாக்டருக்கு படித்த நம்மூர் சகோதரர்கள் வெளிநாடுகளில் பணி செய்யும் இக்கால கட்டத்தில், டாக்டர் பஜ்ஜுலுர் ரஹ்மான் ஊரிலிருந்து பணியாற்ற முன்வந்திருப்பதை நாம் எல்லோரும் பாராட்டியே ஆகவேண்டும்.

இதை படிக்கும் நாம் எல்லோரும் நம் வீட்டில் உள்ளவர்களை நம்மூர் பல்மருத்துவரிடமே மருத்துவம் பார்க்க பரிந்துரைக்க வேண்டும்.

அன்மையில் பட்டுக்கோட்டையில் ஒரு வருடமாக கிளினிக் வைத்திருக்கும் ஒரு மருத்துவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவர் திருத்துரைபூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை வந்ததற்கான நோக்கம் அதிரைபட்டினம் நோயாளிகளுக்காக என்று சொன்னார். இது போன்று நிறைய மருத்துவர்கள் அதிரை போன்ற மக்களை நம்பியே தஞ்சையிலும் பட்டுக்கோட்டையிலும் கிளினிக் வைத்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஊருக்கு சேவை செய்யவேண்டும் என்ற விருப்பத்துடன் ஊரில் பல் மருத்துவமனையை தொடங்கியுள்ள டாக்டர் பஜ்ஜுலுர் ரஹ்மான் தன் சேவையை சிறப்பாக செய்ய அல்லாஹ்விடன் நாம் எல்லோரும் துஆ செய்வோம்.

Anonymous said...

டாக்டர் M.H.பஜ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்.

நமதூருக்கு சிறந்த பல் மருத்துவமனை ஒன்று கண்டிப்பாக வேண்டும். அப்படியை ஒரு நல்ல மருத்துவமனை வைத்தாலும் யாரும் அங்கை செல்வதில்லை. பட்டுக்கோட்டைக்கும்,மற்ற ஊர்களுக்கும் சென்று பார்த்துவிட்டு வருவார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேற்படி டாக்டரை விட பட்டுக்கோட்டையில் கட்டணம் குறைவாக இருக்குதாம்.மருத்துவ சாதனங்களின் சுகாதார மற்றும் தரம் சம்பந்தப்பட்டவை காரணமாக இருக்கலாம். இது பற்றியும் டாக்டரே பொதுமக்களுக்கு எடுத்து கூறுவது நல்லது.

Meerashah Rafia said...

வாழ்த்துக்கள்..

அதிரை சித்திக் said...

அதிரை ஆயிஷா மருத்துவமனை மூலம்

அதிரை மக்கள் புன்னகை பூக்கட்டும் ...

ரொம்ப சந்தோசமாக இருக்கிறது இளம் அதிரையர்

நல்ல பல துறைகளில் காலூண்டுவது வரவேற்க தக்கது ..

வாழ்த்துக்கள் டாக்டர் பஜ்லு ரஹ்மான் .....

தலைத்தனையன் said...

Assalamu Alaikkum.

If Dr. Fadhlurrahmaan BDS needs any sophisticated machines or devices, he can approach Baithul maal for financial assistance. He should have every kind of apparatus for his needs to avoid spilling our natives all around our neghibour cities.

MOHAMED THAMEEM

இப்னு அப்துல் ரஜாக் said...

ஊர் மேல் அக்கறை கொண்டுள்ள டாக்டர் அவர்கள்,இறைவன் அருளால் 'பல்'லாண்டுகள் வாழட்டும்

அப்துல்மாலிக் said...

உள்ளூரில் சேவைசெய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தை ஊக்குவிப்பதும் குழிதோண்டி புதைப்பதும் நம்மூர் மக்கள் கையில்தான் உள்ளது, நிச்சயம் இதை பிரபலப்படுத்தவேண்டும், உள்ளூர் மட்டுமல்லாது அருகிலுள்ள கிராமங்கள், சுற்றியுள்ள ஊர்களையும் சேர்த்தே. நிச்சயம் வெற்றியடையும் இன்ஷா அல்லாஹ்...

sabeer.abushahruk said...

வ்ரவேற்பும் வாழ்த்துகளும்

shahul said...

tnx dr rehman all the best

KALAM SHAICK ABDUL KADER said...

பல் மருத்துவர் ஃபஜ்லுர்ரஹ்மான் அவர்கள் என் மகனார்( என் சாச்சா அவர்களின் பெயரர்- என் சாச்சா மகனார் -என் சகோதரர் முஹம்மத் ஹூசைன் அவர்களிய்ன் புதல்வர்)செய்துள்ள இம்முயற்சி வெற்றியடைய துஆச் செய்கின்றேன். இவரின் புன்னகைக் கூறும் இவரின் “பல்”மருத்துவத்தின் மகிமை; இவரின் அமைதி கூறும் பல்வலி போக்கும் சிகிச்சை!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.