Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அது ஒரு பொற்காலம் 1977 - தொடர்கிறது... 22

அதிரைநிருபர் பதிப்பகம் | September 21, 2012 | , , ,

1977 மலரும் நினைவுகள் - பகுதி - 3
*******************************************

அதிரையில் அடுத்த வீட்டுப் பழக்கம் போல் சாதாரண சக மனிதர்கள் சில நேரங்களில் மனதில் அச்சாக பதிந்து விடுவார்கள். அன்றைய காலத்தில் அதிரையின் ஆர்ப்பரிக்கும் ‘நடுத்தெரு’ வாசிகளுக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கும் அதில் சில நினைவலைகளை அசைத்து விடுகிறேன்.



அறியப்பட்டவர்களில் – "அம்மாக் கள்ளன்"

இரவில் மட்டுமே வீடுவீடாக சென்று யாசகம் கேட்பார், வீட்டு வாசல் முன் வந்து “அம்மா” என்று அபரிவிதமான சப்தமிட்டு அழைப்பார். அந்த பழகிய சத்தம் கேட்டது வீட்டுக்காரர்களுக்கும் விளங்கிவிடும் அம்மாக்கள்ளன் வந்திருக்கிறார் என்றும். காசோ அல்லது இரவுச் சாப்பாடோ அவருக்கு கொடுக்கப்படும். இரவில் சோறு கொடுத்தால் "பசியாற (அப்பம், இடியாப்பம்) இருந்தா கொடுமா" என்று அடுத்து கேட்பார்.

அதெல்லாம் இல்லை என்று சொன்னால் “உன் மாப்பிள்ளைக்கு மட்டும் கொடுக்கிரியே” என்று அலங்காய்ப்பார்.

சோறு கொடுத்து ‘ஆணம்’ கொடுக்காவிட்டல் “ஆணம் கொடு” என்று அதட்டலாக கேட்பார்.

‘அப்படியொன்னும் இல்லை’ என்று சொன்னால்.

அடுத்து “கொக்கு ஆணம் மணக்குது சொட்டுக்கோனு கொடுத்தால் கொரஞ்சா போகும்” என்பார்.

இது அவரின் வழக்கமான தொடர் உரையாடகளில் ஒரு சில.

இவற்றையெல்லாம் விட எதுவுமே கொடுக்காத வீட்டில் வாசலில் உள்ள பல்பை கழட்டிக் கொண்டு போய்விடுவார்.

நல்ல உயரமாக இருப்பார், தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார், அன்றைய காலங்களில் எங்களைப்போல் சிறுவர்கள் வீடுகளில் அடம்பிடித்தால் “அம்மாகள்ளனிடம் பிடித்து கொடுத்துடுவேன்” என்று எங்கள் அன்றையச் சூழல் உம்மாக்கள் பயமுறுத்துவர்கள்.

அறியப்பட்டவர்களில் அடுத்து - "காக்கரு"

இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வடநாட்டை சேர்ந்தவர் ஏறக்குறைய நாற்பது வயது இருந்திருக்கலாம். அவரிடம் சென்று பெயர் கேட்டால் “காக்கரு” என்பார். வேறு ஏதேனும் கேட்டாலும் “காக்கரு” என்பார். அதுவே அவரை ‘காக்கரு’ என்று நாங்களே பெயர் வைத்து அழைத்து வந்தோம்.

கிழிந்த பாவாடை கிழிந்த சட்டை கையில் ஒரு டப்பா இதுதான் அவரின் தோற்றம். உண்மையில் அவரிடம் சிறுவர்களாகிய நாங்கள் அவரின் பெயரை கேட்கும்பொழுது எங்கள் பாசை அவருக்கு புரிந்திருக்காது. அவர் சொலவதும் எங்களுக்கு புரியாமல்தான் அவரின் பெயர் ‘காக்கரு’ ஆனது.

பின்னர்தான் எங்களுக்கு (ஹிந்தியில் தார் பூசாமல் அமைதியான பின்னர்) அவர் சொன்னது என்னவென்று தெரிய வந்தது. “ கியா கரோ?” (என்ன செய்ய?), ‘இந்த ஊரில் வந்து மாட்டிக் கொண்டேனே என்ன செய்ய?’ என்று அவர் கேட்டதைத்தான் நாங்கள் புரிந்த விதத்தில் தவறாய் “காக்கரு பைத்தியம்” என்று வழக்கானது.

அந்த நாட்களில் சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, சபுராளிங்கதான் அதிகம், துபாய் சவுதி வந்த பின்னர்தான் ஹிந்தி என்னும் மொழி இரயிலடியில் தார் பூசப்பட்டு இருந்தது நமக்கெல்லாம் தெரிந்தது. 


அறியப்பட்டவர்களில் மற்றொருவர் – “உசேன் பாய்"

இவர் நல்ல கடின உழைப்பாளி தெருவில் இருக்கும்  அனைத்து வீட்டு கல்யாணங்களிலும் இவரைப் பார்க்கலாம். பள்ளிவாசலில் இருந்து வாடகைச் சட்டி பாத்திரம் கொண்டு வந்து கல்யாண வீட்டில் சேர்ப்பதும் விருந்து முடிந்ததும் அனைத்து பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதும் அங்கிருக்கும் சமையல்காரகளுக்கு பாகுபாடின்றி உதவுவது என்று மிகக்கடுமையாக உழைப்பார்.

ஒரு நாள் இவரைப் போட்டு சிலர் கூடி அடித்து கொண்டு இருந்தார்கள், என்னவென்று விசாரித்தால் இவர் உண்மையிலேயே ஊர் மக்கள் எதிர்பார்த்த்து போன்று பெயருக்கேற்ற மார்க்கத்தில் இல்லாதவர் என்று. ஆதலால் அவரை அங்கிருந்து அனுப்பிவைத்து விட்டார்கள்.

ஒழுக்க நெறிபோற்றும் தெள்ளத்தெளிவான மார்க்கத்திலே பிறந்து எத்தனையோ சகோதரர்கள் பிறமத பெயர்களை அழைக்கும் பெயர்களாக்கிக் கொண்டு மேலை நாட்டு மோகம் கொண்டு உலகவாழ்க்கையை சுவைக்க துடிக்கிறார்கள் ஏன் இன்னும் அதனை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகப்பானாக!

ஏறக்குறைய ஏழு வருடங்கள் “உசேன் பாயாக” (அதிரையில் கடின  உழைப்பில்) தனது பிழைப்புக்காக பெயரை மாற்றிக் கொண்டவரிடம் “ஷஹாதத் கலிமா” சொல்லிக் கொடுக்காமல் ஊரைவிட்டே வெளியேற்றினோம் இன்று அவர் எப்படி இருக்கிறாரோ !? அல்லாஹ் அறிவான்.

மறக்க முடியுமா செக்கடி பள்ளி ஜாம்பவான்களையும் !? அவர்களை கண்டால் சிறுவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் பயம் கலந்த மரியாதை (இன்றைய இளய வயதுடையோரின் ஆவேசம் சில நேரங்களில் அவர்களின் கண்களை மறைக்கிறது பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அங்கே இருட்டாகாவே இருந்து விடுகிறது.

எது எப்படியிருந்தாலும் எங்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மதிப்பிற்குரிய மனிதர்கள்.

  1 பார்லாக்கா
  2 மோமியாக்கா
  3 காலாவை – அபூபக்கர் காக்கா
  4 சென்டியராக்கா
  5 அப்பாஸ் ஹாஜியார்
  6 ஒய்சாக்கா

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி அவர்களுக்கு நற்பதவியை கொடுப்பானாக.

மீண்டும் சந்திப்போம்

மு.செ.மு.சபீர் அஹமது

22 Responses So Far:

Abu fahim said...

மறக்க முடியுமா செக்கடி பள்ளி ஜாம்பவான்களை? அன்ரைய ஜாம்பவான்களின் வளிகாட்டள் இன்றைய இளய வயதுடையோருக்கு இல்லையே" என்பது இன்றைய இளய வயதுடையோரின் உள்லாகுமுரல் எது எப்படியிருந்தாலும் அனைவரலும் பெரிதும் மதிக்கப்பட்ட மதிப்பிற்குரிய மனிதர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மறக்கத்தான் முடியுமா !?

மதிப்பிற்குரிய அப்பாஸ் ஹாஜியார் அவர்களை !

கணீர் குரல், கம்பீரமான நடை, இளையவர்களை சுண்டியிழுக்கும் சூச்சுமம், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது, எந்தப் பிரச்சினை தலையெடுத்தாலும் அங்கே தெரியும் அவர்களின் ஆளுமை !

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மெய்தீன் ஜும்மா பள்ளியில் கூட்டம் அதிகமானால்
செக்கடிப்பள்ளி செல்லத்தான் அந்த ஏர்பாடு(மெய்தீன்பள்ளி=செக்கடிபள்ளி புதிய பாலம்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


இனிய, பழைய நினைவுகளை தட்டிச் செல்லும் சுவையான நல்ல தொடராய் மணக்கிறது.
வாழ்த்துக்கள் மச்சான்!

மறக்கத்தான் முடியுமா!?
மதிப்பிற்குரிய அப்பாஸ் ஹாஜியார் அவர்களை!

கட்டான உடல்வாகு, கணீர் குரல், கம்பீரமான நடை, இளையவர்களை சுண்டியிழுக்கும் சூச்சுமம், அவர்களுக்கு பக்கபலமாக இருப்பது, எந்தப் பிரச்சினை தலையெடுத்தாலும் அங்கே தெரியும் அவர்களின் ஆளுமை!
அன்னாருக்கும் தலைமைக்குத்தகுதியாய் இருந்த மற்ற பெருந்தகையாளர்களின் மறுமை வாழ்வு நல்லதாய் இருக்க துஆ செய்வோம். நாயன் அவர்களுக்கு இருந்த கடமை, கண்ணியம், கட்டுப்படுதல் போன்ற நற்குணங்களை நமக்கும் தருவானாக ஆமீன்.

Anonymous said...

மு.செ.மு.சபீர் காக்கா அதிரையின் அந்த காலத்தில் உள்ள பொற்காலத்தை பற்றி மிக நன்றாக எழுதியுள்ளார்கள். இதில் குறிப்பிட்டுள்ள ஆறு காக்காவும் இப்பொழுது இல்லை. இனி இந்த மாதிரியான காக்காமார்கள் வரவும் மாட்டார்கள் இவர்களை போல் யாரும் கணின்ற குரலிலும் பேச முடியாது. செக்கடி பள்ளிக்கும்,மொய்தீன் ஜும்ஆ பள்ளிக்கும் பாலம் போட்டால் நன்றாகத்தான் இருக்கும். உங்களுடைய பழைய பொற்காலம் தொடரட்டும் இன்னும் நிறைய பொற்காலம் உங்களுடைய அனுபவத்தில் இருக்கும்.

பார்லாக்கா என்னுடைய அப்பா அவர்கள் செக்கடி பள்ளியில் தங்குவார்கள் அவர்கள் சாப்பாட்டிற்கு மட்டும் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.மற்ற நேரங்களில் செக்கடி பள்ளியில் தான் இருப்பார்கள்.வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு செக்கடி பள்ளியில் கொண்டைக்கடலை நாற்சா பொருவார்கள் இன்னும் மறக்க முடியாது.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

மோமியாக்கா ; இயர்பெயர் முஹம்மது மெய்தீன்(காக்கா) இவர்கலது செயல்பாடு தென்னைமர பாலையில் (டைடானி கப்பல்)தோனி செய்து உல்லே எண்ணை விளக்கு ஏற்றி செக்கடிகுலத்தில் விடுவது இரவில் அற்புதமாக இருக்கும்
பார்லாக்கா ; இயர்பெயர் முஹைதீன் அப்துல் காதர்(அவர்கள்) கொழும்பில் வேலை செய்யும்பொழுது இவர்களை போல் ஒருவர் அங்கு இருந்தாராம் அவர்பெயர் பார்லோ அந்த பெயர் இவர்களோடு ஒட்டிக்கொன்டது. இவர்கள்செயல்பாடு செக்கடி பள்ளி நிர்வகிப்பது நார்சா நோம்புகஞ்ஞி ஊற்றுவது
ஒய்சாக்கா ; இயர்பெயர் உவைஸ் நெய்னா (அவர்கள்)இவர்கள் ஓர் அரசியல் விமர்சகர் இந்திய அரசியல் உலக அரசியல் சரலமாக பேசுவார்கள் இந்திரா காந்தி மொராஜி தேசாய் போன்றவர்களுக்கு இலவச அரசியல் ஆலோசனைகளை செக்கடி மோட்டிலிருந்தே அல்லிவிடுவார்கள்

sabeer.abushahruk said...

ஆஹா...கேட்குமோதே மனசு பின்னோக்கிப் பயணிக்கிறது.

ZAKIR HUSSAIN said...

முன்பு கடைத்தெருவில் "முண்டாங்கனி' என்றொரு வயதானவர் இருப்பார். குடை ரிப்பேர் செய்து கொண்டு எப்படியாகப்பட்ட பெரியமனிதரையும் "டேய் இங்கே வாடா" என்றுதான் அழைப்பார்.

இன்னொரு மனிதர் , குதிரை வண்டி ஒட்டும் 'அரைக்கிடா" எனும் வயதான பெரியவர். [ கொஞ்சம் XL Size ல் உள்ளவர்]

ZAKIR HUSSAIN said...

அதிராம்பட்டினத்தின் பழைய படங்கள் இருந்தால் இங்கு அனுப்பி பதியலாம்.

ஊரில் சிலரிடம் பழைய படம் இருக்கும் அதை இப்போது உள்ள டிஜிட்டல் கேமராவில் ரீசூட் செய்தும் அனுப்பி வைக்களாம் . [ பொதுவான இடங்களில் எடுத்த படம்தான். பெர்சனல் படங்கள் வேண்டாம்]

Shameed said...

தரகர் தெரு பள்ளி பழைய புகைப்படம் அருமை. இந்த பள்ளியில் வீசும் ஜில் காற்றிற்கு ஏசி காற்றெல்லாம் ஜுஜுபி

Ebrahim Ansari said...

மர்ஹூம் ஒய்சாக்கா அவர்கள் அடிக்கும் டைமிங்க் ஜோக் மிகவும் பிரசித்தம்.
ஒரு முறை அதிரை கனரா பேங்கில் - முன்பு பழைய போஸ்டாபீஸ் எதிரே இருந்தது- " என்னப்பா பேங்க்கிலே பி எஸ் சி ஜூவலாஜி படிச்சவநேஎல்லாம் வேலைக்கு வைக்கிறான். பேங்குக்கு கழுதையும் குதிரையுமா செக் மாத்த வருது?" என்று கேட்டது இன்றும் நினைவில் உண்டு. அரசியல் மேடைகளில் நகைச்சுவையுடன் பேசுவார்கள்.

மேலும் அதே செக்கடித்தெரு வட்டாரத்தில் "மாமாங்கம் " என்று ஒரு அப்பா தாடி, கண்ணாடி எல்லாம் போட்டு சுற்றுவார். பசங்க அவரை கூப்பிட்டு மாமாங்கம் தாடியை இறக்குங்க கண்ணாடியை கழட்டுங்க என்று கலாய்ப்பார்கள். அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார்கள்.

இன்னும் மல்லி பட்டினம் சாகுல் ஹமீது, கிணற்றில் வாளிகள் விழுந்தால் எடுத்துத்தரும் அகமது தம்பி, அஜ்வாத் சகோதரர்கள் இப்படி பல பர்சனாளிட்டிகள் கொண்டிருந்தது அதிரை.

ஆஸ்பத்திரி தெருவில் ஷைகு அப்துல் காதிர் காக்கா என்று ஒருவர் இருந்தார். இவரை டைரி என்று அழைப்பார்கள். பலருடைய பிறந்த தேதி அல்லது வருடம் கூறுவார். பழைய நோட்டீசுகள் இவரிடம் இருக்கும். ஒரு முறை அதிரையில் 1960 ல் நாகூர் ஹனிபாவும் , கலைஞர் கருணாநிதியும் கலந்துகொண்ட தி மு க பொதுக்கூட்ட நோட்டீசை என்னிடம் காண்பித்து இருக்கிறார். முஸ்லிம் லீக் மீது பற்றுடையவர். 1967 தேர்தலில் காயிதே மில்லத் கூட்டம் பட்டப்பகலில் ராஜ ராஜேஸ்வரி டூரிங்க் சினிமா கொட்டகையில் நடந்தது. அதற்கு ஷெர்வானி உடை அணிந்து வந்தார் ஷைகு அப்துல் காதிர் காக்கா. பிரைக்கொடி பிடிப்போம் மரை வழி நடப்போம் என்று முழங்குவார்.

Ebrahim Ansari said...

தவறுக்கு வருந்துகிறேன். பிறைக் கொடி- மறை வழி என்று படிக்க வேண்டுகிறேன்.

அதிரை சித்திக் said...

என்றுமே பள்ளி வாசல் மீது நாட்டம் கொண்ட
உனது அப்பா...!எனது தகப்பனார் பெயர்
விடு பட்டு போனது ..வருத்தமே
து ஆகள் அவர்களுக்கும்
சேர வேண்டும் .. உனது அப்பா
நோன்பு திறக்க முன் திக்ரு
செய்வது ..எனது தந்தை
அறிந்தும் அறியாமலும்
செய்யும் அமல்கள் மறக்க முடியாத ஒன்று
செக்கடி பள்ளி இழந்த நல மாந்தர்களில்
முக்கிய நபர்கள் இன்னுமெத்தனையோ பேர்கள்
உண்டு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சித்தீக் காக்கா, தங்களின் தகப்பனார் அவர்களை எப்படி மறக்க முடியும் !

என்றும் அதே கனிவான பார்வை எங்கள்மீது விழுமே !

சத்தம் உயர்த்தாத பேச்சு, எங்கள் முதுகில் தடவிக் கொடுத்துக் கொண்டே பேசும் தன்மை !

எல்லாம் வல்ல அல்லாஹ் எத்தனையோ நல்லுள்ளம் கொண்ட மறைந்த பெரியவர்களின் மறுமை வாழ்வை செழுமையாக்கி வைப்பானாக !

KALAM SHAICK ABDUL KADER said...

//தரகர் தெரு பள்ளி பழைய புகைப்படம் அருமை. இந்த பள்ளியில் வீசும் ஜில் காற்றிற்கு ஏசி காற்றெல்லாம் ஜுஜுபி//

உண்மையிலும் உண்மை; இன்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அப்பள்ளியில் “ஜில்”எனும் காற்று வீசிக் கொண்டிருக்கின்றதை அனுபவிக்கலாம்!

“டைரி’அவர்களும் உவைஸ் மாமா அவர்களும் என் உறவினர்கள். உண்மையில் பழைய நினைவுகளினாலும் நம் முன்னோர்களின் நினவுகளினாலும் இவ்வாக்கத்தின் வழியாக ஓர் ஆதம திருப்தியை வழங்கிவரும் இக்கட்டுரையாசிரியர்க்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்” எனும் துஆவுடன் நன்றி.

Shameed said...

//உண்மையிலும் உண்மை; இன்றும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அப்பள்ளியில் “ஜில்”எனும் காற்று வீசிக் கொண்டிருக்கின்றதை அனுபவிக்கலாம்!//

அதற்க்கு காரணம் இந்த பள்ளிக்கு காற்று வரும் திசைகளில் மூன்று குளங்கள் உள்ளது 1 வெட்டிக்குளம் 2 சேலா குளம் 3 பள்ளிவாசலை ஒட்டி இருக்கும் கின்னியங்குளம் (பெயர் அர்த்தம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும் )இந்த குளத்திற்கு நைய குளம் என்றும் பெயர் உண்டு இந்த மூன்று குளத்த்தையும் தழுவிக்கொண்டு காற்று வருவதால் அந்த காற்று குளுமையாக வருகின்றது

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அதிரை சித்தீக்கின் ஆதங்கங்களை மனவருத்தத்தோடு ஏற்க்கிரேன் உன் தந்தையும் என் அப்பாவும் எனக்கும் உனக்கும் மட்டுமல்லாது அனைவர்களது நர்பேருக்கும் துஆச்செய்பவர்களாயிற்றே அவர்கள் ஹாக்கில் நாமெல்லாம் துஆச்செய்வோம்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

என்னை மன்னிக்க அல்லாஹ் போதுமானவன் அதிரை சித்தீக்(ஆருயிர் நன்பன்)வாப்பாவை பற்றி சொல்லாமல் விட்டது தவருதான் அவர்களை ஆலிம்சா என்றுதான் அனைவர் களாலும் அழைக்கப்படுவார்கள்(இயர் பெயர் இபுராஹிம்) செக்கடி பள்ளிக்கு வரும் யாசகர்கள் அவர்கள் யாசகம் கேட்டு முடியும் வரை காத்திருந்து யாசகரை தம் வீட்டுக்கு அழைத்து சென்று விருந்தலிப்பார்கள்(பகலில்) மாதத்தில் 20 நாட்களாவது நடைபெரும் இரவில் வந்தால் ஹோட்டலில் யாசகருக்கு ரோட்டி உருதி

KALAM SHAICK ABDUL KADER said...

தரகர் தெரு மற்றும் கடற்கரைத் தெரு குளங்களையும் அங்குக் குளித்தது, பாத்திரங்கள் கழுவியது, துணி/பாய் கழுவியது எல்லாம் என் உம்மா (மர்ஹூமா)உம்மல் ஹபீபா அவர்கள் என்னிடம் சொல்லிய அக்கால நினைவுகளை எல்லாம் (என் உம்மா அவர்கள் பிறந்து வளர்ந்த தெரு; கடற்கரைத்தெரு)இன்று நீங்கள் பின்னூட்டம் மூலம் பின்னோக்கிச் சென்று மனக்கண்ணில் என் உம்மா அவர்களைக் காண வைத்து விட்டீர்கள். பள்ளிப்பருவத்தில் அதிகம் காற்று வாங்கச் சென்ற இடங்களில் கடற்கரைத்தெரு புளிய மரத்தடியும், கம்பனைத் தொலைத்துவிட்டு கைம்பொண்ணாய் இன்று நிற்கும் இரயிலடியும், வெட்டிக்குளத்தடியும் என்பதும் மீண்டும் நினைவுகளின் நாடாக்கள் சுழன்றுச் சொல்கின்றன.

அப்துல்மாலிக் said...

நம்மூர் ஏதாவதொரு வகையில் பிரபலமானவங்களை பற்றி இங்கே பதிவது மிக்க சந்தோஷம், தொடரட்டும்...

Yasir said...

வித்தியாசமாகவும்,சுவராஸ்யத்துடனும் எழுதப்பட்ட ஆக்கம்,வாழ்த்துக்கள் மு.செ.மு.சஃபீர் அஹமது

zahir hussain s/o Marhoom S.A.Jabbar said...

தரகர் தெரு முஹைதீன் பள்ளியின் புகைப்படம் என்னை சிறு வயதிற்கே கொண்டு சென்று விட்டது! பள்ளிக்கூடம் முடிந்து நய்யாகுலம் என்று அழைக்கப்பட்ட அந்த குலத்தில் குளிக்காமல் வீடு சென்றதில்லை! பள்ளியின் திண்ணையில் படுத்து, உட்கார்ந்து தேவையில்லாதவைகளை பேசி இன்னும் என்னென்னமோ.....? சொல்லிக்கொண்டே போகலாம்!

கொடுத்துவைத்த அந்த இளமைப்பருவமும், அப்போதைய நண்பர்களும், முஹைதீன் பள்ளியின் திண்ணையில் உட்கார்ந்து காற்று வாங்கிய அனுபவமும்,,,,, அடடா...! என்றுமே மறக்க முடியாத பழைய நினைவுகளை கண் முண்ணே நிறுத்திய மு.செ.மு. சபீர் அஹமதுவிற்கு எனது நன்றி!


ஜாகிர் ஹுசைன்
(தா/பெ.மர்ஹூம்.எஸ்.எ.ஜப்பார்),
துபாய்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு