Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் - 4 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 16, 2012 | , , ,

தந்தை மகள் உறவு....

இயற்கையாகவே, பெண்பிள்ளை தந்தையின் செல்லம்......! வண்ண வண்ண உடை உடுத்தி அழகு பார்ப்பது பெண் குழந்தைக்குத்தான். இது மிக சொற்ப கால உறவுதான்  என்பதால், மகள் மீது அதிகமான அன்பு செலுத்த காரணமாக இருக்கலாம். பத்து வயதிற்கு அப்பால் தந்தை மகள் மீது செலுத்தும் அன்பு மரியாதை கலந்ததாக இருக்கும்...!

“உம்மா கொஞ்சம் தண்ணி கொண்டு வா மா” என்று வாஞ்சையாக வேலை ஏவுவது, போன்ற மாற்றங்களை காணலாம். 

அதற்கு  அப்பால் பிரியம் குறைந்து கவலையாக  தொற்றிக்கொள்ளும். மகள் பெரியவளாகி விட்டால். நல்ல மன வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கவலை மேலோங்கும். ஆனால், மகளுக்கோ... என்றும் தனது தந்தை எது கேட்டாலும் வாங்கி தருவார் என்ற எண்ணம் மேலோங்கி காணப்படும்.

"எங்க வீட்டுக்கு வந்தா என்ன வாங்கி வருவீங்க.... உங்க வீட்டுக்கு வந்தா என்ன தருவீங்க" என்ற சாமார்த்திய   உணர்வு மகளிடம் மேலோங்கி நிற்கும். வயோதிகத்தில் பெண் பிள்ளைகளின் உதவி தேவை படும் என்ற ஒரே நம்பிக்கை பெற்றோருக்கு, மற்றபடி செலவுதான் பெண் பிள்ளைகள் விஷயத்தில்.
  • வசதியான தந்தை - என்றும் உரிமை கோரும் பெண் பிள்ளை.
  • வசதியற்ற தந்தை - கணவனின் நிலை பொருத்து தன்னிலை மாற்றிக்கொள்ளும் மகள்.
  • தந்தை என்ற நிலைபாடு, வசதியான நிலைபாடு நல்ல தகுதியான நிலை இருந்தால் மட்டுமே நலம்.
  • சொத்து இருந்தால் உயிருள்ளவரை உரிமை கொண்டாடுவார்கள்.
பெண் பிள்ளைகள் தந்தை உறவு என்றென்றும் சீராக இருக்க வேண்டும் என்றால் சீதனங்கள் அளவோடு கொடுத்து,அவ்வப்போது பரிசாக வெகுமதி உள்ள நகை, பிள்ளைகள் பிறந்தால், பெற்ற பிள்ளைகளுக்கு பரிசு.மகள் வீட்டில் இல்லாத  நவீன சாதனைகள் வாங்கி கொடுத்தல். வீட்டு மராமத்து வேலைகளுக்கு ஏற்பாடு செய்தல்போன்றவைகளால். என் தந்தை போல் வருமா என்ற நிலை உருவாகும் !

பெண்பிள்ளை பெற்ற தந்தை நல்ல பொருள் ஈட்டல் பணம் சேர்த்து நல்ல முதலீடு செய்தல் அவசியம்.என்றும் பலன் தரும் தந்தை என்று  தன்னை பெண்ணின் தந்தை நிலை நிறுத்தி கொள்ளல் வேண்டும்.  மகளுக்கு தந்தை என்றும் காய்க்கும்  மரமாக இருக்க வேண்டும். கனியாக மட்டும் இருந்தால், கனியின் சாரை சுவைத்து விட்டு

காய்ந்த விதையை போட்டு விடுவார்கள், விதையை புதைத்தால்  மீண்டும் முளைக்கும் என்ற எண்ணம்பிறருக்கு எண்ணம்  தோன்றும் காய்க்கும்  மரமாக இருப்போம்..

பெண் பிள்ளைகளின் தந்தை பாசம் என்றும் எதிர் பார்க்கும் பாசப் பிறப்பு..

தொடரும்..
அதிரை சித்தீக்

8 Responses So Far:

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அருமை நன்பரே கலக்குறீங்க பலரின் அனுபவங்கள் இதில் இருக்கிறது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாப்பா-மகள் உறவின் உண்மை அருமை!

மன்னிக்கவும்.

//"எங்க வீட்டுக்கு வந்தா என்ன வாங்கி வருவீங்க....//

இப்படியும் தன் பிள்ளை, மூன்றாம் மனிதரைப் போல் பேசுமா?

sabeer.abushahruk said...

////"எங்க வீட்டுக்கு வந்தா என்ன வாங்கி வருவீங்க....//

இப்படியும் தன் பிள்ளை, மூன்றாம் மனிதரைப் போல் பேசுமா?///
எம் ஹெச் ஜே, இதேபோல்தான் எனக்கும் தோன்றியது!!!

//மகளுக்கு தந்தை என்றும் காய்க்கும் மரமாக இருக்க வேண்டும். கனியாக மட்டும் இருந்தால், கனியின் சாரை சுவைத்து விட்டு

காய்ந்த விதையை போட்டு விடுவார்கள்,//

ரொம்ப ப்ராக்ட்டிக்கலாவும் பயமாவும் இருக்கு சித்திக் பாய்.

Shameed said...

எனது மூன்றாம் கண்ணில் சிக்கிய தெருவில் ஒரு அழகான வண்ணத்தில் வீடு ஒன்று கண்டேன்.... !
அதை நீங்களும் காணவேண்டும்
(வீடு ஆண்மகனுக்கா / பெண்மக்களுக்கா என்று மட்டும் கேட்டுவிடாதீர்கள்)

அதிரை சித்திக் said...

எங்க வீட்டுக்கு வந்தா என்ன வாங்கி வருவீர்கள் ...
உங்க வீட்டுக்கு வந்தா என்ன தருவீர்கள் ..என்ற
சாமாத்தியம் உள்ளது என்பது ..வயதான வாப்பாக்களிடம்
கேட்டு பாருங்கள் ..தந்தையின் அன்பு மட்டும் கிடைத்த
பெண் பிள்ளைக்கு ..கணவனின் இன்பம் ..மக்களின்
உரிமை கலந்த அன்பு ..வாப்பா மூன்றாம் இடத்திற்கு
தள்ளப்படுவது இயற்க்கை தானே ..!

Ebrahim Ansari said...

நண்பர் சித்தீக் அவர்களே! ஒரு சிலர் இதில் கண்ட கருத்துக்கள் உண்மையில் நடக்குமா என்று ஐயப்படுவார்கள். அவரவர் அந்த அந்த ஸ்டேஜ் வரும்போது அறிந்து கொள்வார்கள் உணர்ந்து கொள்வார்கள். அதே நேரம் வாப்பாவை உயிருக்கு உயிராக வைத்து போஷிக்கும் மகள்களைப் பற்றியும் இரு வரிகள் எழுதி இருக்கலாம். எனக்குத்தெரிந்த சில உண்மைகள்.

என்ன வாங்கி வருவீர்கள் ? என்ன தருவீர்கள்? இவற்றின் இடையே வரும் பெற்றோருக்கு தேங்காய் மாங்காய் என்று பைகள் நிறைய கொடுத்து அனுப்பும் மகள்களும் உண்டு. மாப்பிள்ளையிடம் சொல்லி வாப்பாவுக்கு நல்ல வைத்தியம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று வெளிநாட்டில் இருந்து பொருள் உதவி செய்யும் மகள்களும் உண்டு. வாப்பாவுக்கு பிடிக்குமே என்று வாழை மீன் ஆணத்தையும், வாழைப்பூ சுண்டியதையும் டிபன் பாக்சில் கொடுத்தனுப்பும் மகள்களும் உண்டு. தெருவில் மட்டி மட்டி என்று சப்தம் கேட்டால் வாப்பாவுக்கு பிடிக்குமே என்று வாங்கி பொறி அரிசி போட்டு ஆக்கி பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் அனுப்பிய ஒரு மகளை நேற்றுக் கண்டேன்.
தோட்டத்தில் விளைந்த நார்த்தங்காய் வாப்பவுக்கு பித்தத்துக்கு நல்லது என்று பறித்து அனுப்பிய ஒரு நண்பரின் மகளை அடிக்கடி பார்க்கிறேன்.

தந்தை மகள் பாசம், கொடுக்கல், வாங்கல் என்பது பல இடங்களில் உண்மையில் ஒருவழிப்பாதைதான். ஆனால் சில இடங்களில் இருவழிப்பாதையும் இருக்கின்றன.

தொடர் சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்.

அதிரை சித்திக் said...

தொடரின் துவக்கத்தில் எழுதிய
வரிகளை ஞாபக படுத்துகிறேன்
உறவுகள் பற்றி நான் எழுதுவது
ஒரு வரி தான் அதிரை சொந்தங்களாகிய
நீங்கள் ஆயிரம் வரிகள் எழுத வேண்டும் ..
இத்தொடரின் நோக்கம் அறிந்து விளக்கம்
அளித்த அன்சாரி காக்காஅவர்களுக்கு நன்றி
நீங்கள் கூறிய கருத்து பொன்னேட்டில் பதிக்க
தக்கது

Yasir said...

சித்திக் காக்கா...சீர் குழைந்து போய் இருக்கும் “உறவுமுறை” களை சிந்தித்து எழுதுவது மிக சிரமமான வேலை அதனை சிறப்பாக செய்யும் உங்களுக்கு துவாக்கள்...

அன்சாரி மாமா..நீங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் ஒவ்வொன்றும் மனதை மிகவும் “டச் “ செய்து விட்டது...நானும் நிறையக்கண்டு இருக்கின்றேன்...உடல நலம் பேணிக்கொள்ளுங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.