Saturday, January 11, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இப்படியும் யோசி... மானிடா ! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 04, 2012 | , , , ,


நடை தளரக் கூடாதெனத்
தடி கொணர்வர்
முதுமை கால மனிதர்!

வராதென நினைத்த பிணி
வந்துவிட்ட போதினிலே
குடையாய் பயன் பட்ட அது
தடியாய் தடம் மாறும் அப்போது!

இப்படியும் யோசி... மானிடா!
விரும்பாததொன்றை பெறுவதும்
விரும்பியது கிடைக்காமாலிருப்பதும்
வழக்கமான வாடிக்கை!

வாராதது கண்டு வாடாது
வறுமை என வெறுக்காது
தடைகளால் பின் வாங்காது
தொடர். வெற்றியுண்டு!

போட்டது தானே முளைக்கும்
பேராசைப்பட்டது பொய்க்கும்
கிடைத்ததைத் கொண்டு திருப்திபடு
கிடைக்காத ஒன்றெதெற்கு நல்லார்க்கு?

முற்கால காதலுக்கு கடிதம் மட்டும்
இக்கால காதலோ கடும் கொட்டம்
அகம் காண உனக்கு
நிசக்கண்ணே போதும்!
வாய்த்ததை நிறைவாக்கி
வாழ்வில் வசந்தம் அடை!

இப்படியும் யோசி...மனிதா!
உள்ளாரிடம்
இல்லாக் குணம்
இருக்கிறதே உன்னிடம்!

தென் னை போல் உள்ளத்தால் உயர்
கிழக் கன்  மீன் போல் கொழுப்பின்றி உண்
வட மாய் மாறி  ஊட்டிடும் நார்த்தங்காய்க் குணம்
மேற் கோளிட ஏற்ற மார்க்கம் இஸ்லாம்!

பல முயற்சியில்
கிடைக்கும் வெற்றிக்கு
குறுக்கு வழியில் மட்டும்
முயல்வது முறையல்ல!

இம்மையின் இச்சையொன்றை மட்டும்  வைத்து
இல்லாத எதையும் இட்டு கட்டுவது
இன்றில்லாவிட்டாலும் நிச்சயம் நாளை
இவ்வுலக முடிவின் பின் இறைவனின் தண்டனையுண்டு...

இப்படியும் யோசி.... மனிதா!
உண்மை உரைத்து
வாய்மை வெல்லும்
மறுமை நினை-அதன்
மகிழ்வே தனி!

நீரின் எல்லை வரைதான் குளத்தின் கரை
உயிரின் முடிவு வரைதான்  வாழ்க்கை
உன்னை படைத்தவனை என்றும் நினை
அவனே உனக்கு என்றும் துணை.

உயிர் உள்ளவரை தான் மனிதன்
அது எடுபட்டால் மையித்
அது நிகழ்ந்துவிட்டால்
உயிர் உன்னிடமல்ல...உடல் மண்ணிடம்!

இப்படியும் யோசி... மனிதா:
உள்ளவரை உதவு
இல்லாதவரை அணை
இவர்கள் உள்ளவரை வாழும்
இவ்வையகம்!!!

M.H.ஜஹபர் சாதிக்

24 Responses So Far:

Ebrahim Ansari said...

வாவ்! நன்றாகவே யோசித்து இருக்கிறீர்கள் ஜகபர் சாதிக்.
கவிஞர்களின் வெற்றி வாரிசுகளையும் உருவாக்குவது அந்த வகையில் கவிஞர்.சபீர் அவர்கள் வெற்றிபெற்றவர். நல்ல உதாரணங்களைப் பின்பற்றுவதும் ஒரு வெற்றிதான். அந்த வகையில் ஜகபர் சாதிக்கும் ஒரு வெற்றியாளர். உங்களைப் படிக்கும் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்வே. பாராட்டுக்கள்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

ஜஹபரின் கவிதையை முதல் முறையாக படிக்கிறேண் மெய்சிலிற்க்க மயிர்கூச்சரிய கணிணிமுன் அமர்ந்திருக்கிறேன் நம்மூரில் கவிஞ்ஞர் எண்ணிக்கை கூடுகிறதே மாசாஅல்லாஹ்
பெண்
************
பாட்டிக்கு ஊதங்குழல் அடுப்பு
பட்டம் படித்த அம்மாவுக்கு
புகையில்லா அடுப்பு
கணிணி படித்த எனக்கு
மிண்சார அடுப்பு
என் மகளுக்கு ஏதோ ஒரு கண்டுபிடிப்பில்
அடுப்பு என்பது மட்டும் நிச்சயம்

அதிரை சித்திக் said...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது அந்தக்காலம்
வலை தளங்கள் வைத்து தமிழ் வளர்ப்பது இந்த காலம்
நல்ல உள்ளம் கொண்ட ஜாபரின் கவி
புவி உள்ள வரை புகழ் பாடும் ....,

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாம்&நன்றி
முத்தான முதல் மூவர்களின் சத்தான கருத்துகள்!

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சலாம்&நன்றி
//முத்தான முதல் மூவர்களின் சத்தான கருத்துகள்! //


சத்தான கவிதைக்கு இன்னும் முத்தான கருத்துக்கள் கிடைக்கும்

Yasir said...

இப்படியுமா யோசிக்க முடியும் நல்லாயிருக்கு...சகோ.ஜஹபர் சாதிக்

ZAKIR HUSSAIN said...

இப்படியெல்லாம் ஆழமான விசயங்களை எழுத முடியும் என்று ஏன் நீங்கள் என்னிடம் சொல்லவில்லை.

நிறைய எழுதுங்கள். எழுத்தும் எனக்கு வடிகால்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே:

ஏட்டிக்குப் போட்டியாக எழுதுவீர்கள என்று பார்த்தால் போட்டி போடவே எழுதியதுபோல் சிறப்பாக வந்திருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், தூண்டிலை விடச் சிறப்பாக அமைந்திருக்கிறது. சும்மா சொல்லவில்லை. காரணம் இருக்கிறது.அதாவது; இந்த கவிதையில் ப்பாஸிட்டிவி த்தாட் (possitive thought)இருப்பதால் கரு வலுப்பெறுகிறது.

தமிழ் தழைத்தோங்கி நடையும் ஜொலிக்கிறது.

அதிகமாக எழுதுங்கள், வாழ்த்துகள்.

sabeer.abushahruk said...

//நடை தளரக் கூடாதெனத்
தடி கொணர்வர்
முதுமை கால மனிதர்!//

இது நல்ல ஓப்பனிங்க் பேட்ஸ்மேன் கொண்டு துவங்கப்பட்டதுபோல் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

//உள்ளாரிடம்
இல்லாக் குணம்
இருக்கிறதே உன்னிடம்!//

இது செம கவுன்ட்டர் (counter)

//தென் னை போல் உள்ளத்தால் உயர்
கிழக் கன் மீன் போல் கொழுப்பின்றி உண்
வட மாய் மாறி ஊட்டிடும் நார்த்தங்காய்க் குணம்
மேற் கோளிட ஏற்ற மார்க்கம் இஸ்லாம்!//

இதில் திசைகளை உள்ளடக்கச் சற்றே தடுமாறி யிருக்கிறீர்கள். கவித்தொணியும் குறைந்தாலும் நல்ல முயற்சி

//இல்லாதவரை அணை//

இது முத்தாய்ப்பு.

எம் ஹெச் ஜே, வாழ்க...வளர்க!!!



மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

வடமாய் மாறி(உணவு)ஊட்டிடும் நார்தங்காய் குணம்;;; உடல் தோல் சுருங்கி கட்டிலிலே கிடந்தாலும் தன் மகளின் பேத்திக்கு உணவூட்டும் மூதாட்டியை பற்றிய கருத்தய் நான்கண்டேன் சபீர் அவர்களே என்னதடுமாற்றம் கண்டீர்

crown said...

//தென் னை போல் உள்ளத்தால் உயர்
கிழக் கன் மீன் போல் கொழுப்பின்றி உண்
வட மாய் மாறி ஊட்டிடும் நார்த்தங்காய்க் குணம்
மேற் கோளிட ஏற்ற மார்க்கம் இஸ்லாம்!//

இதில் திசைகளை உள்ளடக்கச் சற்றே தடுமாறி யிருக்கிறீர்கள். கவித்தொணியும் குறைந்தாலும் நல்ல முயற்சி.
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்காவின் கூற்று சரி ! நல்ல கவிதை இங்கே அடுக்கிய வரிகள் அடுத்து, அடுத்து இல்லை என்பது பெரிய தவறு இல்லை என்றுதான் சொல்லி வாழ்தியுள்ளார்கள். 1)தெற்கு,2)வடக்கு.3)கிழக்கு ,4)மேற்கு
---------------------------------
தென்னைபோல் உயர் உள்ளல்
கிழங்கன் மீன் போல் கொழுபற்ற பிற ஊன் உண்!
(இப்படி எழுதிப்பார்தேன் கவிஜாபர் அவர்களே நல்லா இருக்கா தவறு இருப்பின் மன்னிக்கவும். நான் நல்ல கவிஞன் அல்லன் , நல்ல ரசிகனே)!

KALAM SHAICK ABDUL KADER said...

//நீரின் எல்லை வரைதான் குளத்தின் கரை
உயிரின் முடிவு வரைதான் வாழ்க்கை
உன்னை படைத்தவனை என்றும் நினை
அவனே உனக்கு என்றும் துணை.//

வாவ்.. ஆஹா

கரைகண்ட நீங்கள் கவிஞராய் மாறி
வரைந்திட்ட பாடலுக்கு வாழ்த்து

sabeer.abushahruk said...

//என்னதடுமாற்றம் கண்டீர்//

சகோ.சபீர்,
நெற்றிக்கண்ணைத் திறக்குமுன் என் விமரிசனத்தைச் சற்றே ஊன்றிப் படியுங்கள்.

எம் ஹெச் ஜேயின் கீழ்கண்ட நான்கு வரிகளில் ஒன்றுக்கொன்று ஏதாவது தொடர்பிருக்கிறதா?
//தென் னை போல் உள்ளத்தால் உயர்
கிழக் கன் மீன் போல் கொழுப்பின்றி உண்
வட மாய் மாறி ஊட்டிடும் நார்த்தங்காய்க் குணம்
மேற் கோளிட ஏற்ற மார்க்கம் இஸ்லாம்!//

பிறகேன் இந்த நான்கு வரிகளும் ஒரே ப்பாராவில் எழுதப்பட்டுள்ளன. திசைகளை ஒன்றினைக்கும் கட்டாயம்தானே?

கவிதை கட்டுகளற்றது சகோதரா. எதுகை மோனை மற்றும் எழுத்துக்கோர்வைக்காக கருவிலிருந்து விலகிப்போவதை நான் ஏற்க மாட்டேன். எனவேதான் அப்படி கருத்திட்டேன்.தவிர, கிரவுன் சொல்வதுபோல அவசியமில்லாத அடுக்கு தேவையுமில்லை அப்படி அடுக்குவதில் கவித்தொணி குறைவதும் தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறது.

எம் ஹெச் ஜேக்கும் ஒரு கவிஞன் இருப்பதைக் கண்டறிந்து தூண்டியவனே நான்தான். அதே சமயம் துவக்கத்திலிருந்து ஜிவ்வென்று கிளம்பி க்யூட்டாக முடியும் கவிதை இடையில் தடுமாறுவதைச் சுட்டிக் காட்டுவது ஆரோக்கியமான கருத்துத்தான்.

மேலும், இது என் தனிப்பட்ட கருத்துத்தான்.

தவிர,

பெண்
************
பாட்டிக்கு ஊதங்குழல் அடுப்பு
பட்டம் படித்த அம்மாவுக்கு
புகையில்லா அடுப்பு
கணிணி படித்த எனக்கு
மிண்சார அடுப்பு
என் மகளுக்கு ஏதோ ஒரு கண்டுபிடிப்பில்
அடுப்பு என்பது மட்டும் நிச்சயம்

இது நீங்கள் எழுத முனைந்ததெனில்...கை குடுங்க...எழுத்துப்பிழைகள் களைந்தால்...க்யூட்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இ.அ காக்கா: உங்களின் பாராட்டுகளை பெற்றதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

சபீர் மச்சான்: மகிழ்ச்சி, என் கவி வளர்ச்சிக்கும் இந்த மொத்த கவிக்கும் அந்த சபீர் காக்காவே முழு காரணம்.

சித்தீக் காக்கா: சந்தோசம். உங்களின் வற்றாத தமிழூற்றுக்கு இவனின் தமிழ் ஒரு சொட்டே.

ஹமீது காக்கா: நல் வரவு.

சகோ.யாசிர்: இன்னும் யோசிக்க முடியும். ஆனால் போட்டி மனப்பான்மை விரைந்து எழுத தூண்டியது.

ஜாஹிர் ஹுசைன் காக்கா: எதோ இந்த அளவு ஆழமான சிலதை எழுத உங்களின் பாடமும் எனக்கு வடிகாலே.

கவிஞர் சபீர் காக்கா: இங்கே நான் உங்கள் குழந்தை, அம்மா சோறூட்ட பிள்ளை நன்றி சொல்லும் பழக்கம் இல்லை.சொல்லும் எதையும் படிப்பினையாக்கிக் கொள்கிறேன்.

சகோ.க்ரவ்ன்: நல்ல ரசிகனும் நல்ல கவிஞனுமாகிய உங்கள் 2 வரியும் அருமைத் தமிழே. ஆனால் என்னைப் போல் இருந்தால் இதை விளங்க கோனார் தேவைப்படுமே!

அபுல் கலாம் காக்கா:இந்த சிறுசு பெருங்கவிஞனாரிடம் வாழ்த்துப் பெறுவது பெரும் பேறு!

மற்றும் இதை அங்கீகரித்த நெறியாளர் அவர்களுக்கும், கண்ணுற்ற அனைவருக்கும் மிக்க நன்றி.

அதிரை என்.ஷஃபாத் said...

கவிதைச் சாரலும் அதனை ஒட்டிய கருத்து மோதலும் அருமை!!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்.எம். ஹெச் .ஜப்பானில் எடுத்துக்கொண்ட சுறு சுறுப்பு.லண்டனில் செயல் படுகிறதா.அதான் உடனுக்கு உடன் .மாற்றி யோசித்த மறு மலர்ச்சி.

\\இம்மையின் இச்சையொன்றை மட்டும் வைத்து
இல்லாத எதையும் இட்டு கட்டுவது
இன்றில்லாவிட்டாலும் நிச்சயம் நாளை
இவ்வுலக முடிவின் பின் இறைவனின் தண்டனையுண்டு.\\\

தன் சுய நலனுக்காக ஆலிமை இட்டுக்கட்டி இல்லாத செய்தியை பரப்பிய,பரப்புகின்ற சகோதரர்கள் படித்து படிப்பினை பெறட்டும்.
இல்லையென்றால் இறைவனின் தண்டனைக்கு காத்திருக்கட்டும்.

// இப்படியும் யோசி.... மனிதா!
உண்மை உரைத்து
வாய்மை வெல்லும்
மறுமை நினை-அதன்
மகிழ்வே தனி! //

மனிதன் மாற்றி யோசித்ததன் விளைவுதான்.

பொய்யை உரைத்து
மனித மனதை வெல்லலாம் .
இறைமறையை மறந்து
இம்மை ஆடம்பரத்தை நினைத்து.
களியாட்டம் போடலாம் என்ற நிலைக்கு வந்துட்டான்.
இதையும் மாற்றி யோசி மனிதா!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

////என்னதடுமாற்றம் கண்டீர்//

சபீர் காக்கா உங்கள் கேள்வியை பார்த்து நான் தடுமாறி போனேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

MHJ, கடந்த முன்று நாட்களாக வீட்டில் நெட்டு அவுட், அதான் உடன் கருத்திட முடியவில்லை.

யோசிக்க வைக்கிறது அனைத்து வரிகளும்.

///பல முயற்சியில்
கிடைக்கும் வெற்றிக்கு
குறுக்கு வழியில் மட்டும்
முயல்வது முறையல்ல!///

எனக்கு பிடித்த வரிகள், இன்றைய அதிரை சூழலுக்கு ஏற்ற வரிகள்.. எல்லோருக்கு பொருந்தும்...

Unknown said...

புரியும்படி அழகாக இருக்கு கவிதை. ஜகபர் சாதிக்

JAFAR said...

நச்சுன்னு நல்ல கருத்துடைய வாசகங்கள்
வாழ்த்துக்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாமுடன்,
மேலும் கருத்திட்ட சகோதரர்கள் ஜாபர்,சம்சுதீன்,தாஜுதீன்,ஷஃபாத்,பக்கர் ஆகியவர்களுக்கும் மற்றும் வாசித்தவர்களுக்கும் மிக்க நன்றி.
ஜஷாக்கல்லாஹ் ஹைர்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாற்றியோசிக்கச் சொன்னது அவரு
மாற்றியோசித்தது இவரு
மாற்றியோசித்துக் கொண்டிருப்பது(ம்) ஒரு MSM(s) !

தமீம் said...

மிக அருமையான கவிதை

Unknown said...

MHJ யின் ஆழ்ந்த பொருள் கொண்ட அருமையான கவிதை !!!
நிறைய எழுதுப்பா....இன்னும் நிறைய ......!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.