Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வின் (கவி) ஓவியம்... 11

அதிரைநிருபர் பதிப்பகம் | May 18, 2011 | , ,


கருணாநிதி:

பட மெடுத்தீர்! தமிழ்த்திரு
நாட்டைத் தீண்டி விட்டீர்!
மின்சாரத்தைத் துண்டித்தீர்! மக்கள்
உம்மைத் தண்டித்து விட்டனர்!
மின்சாரம் இல்லாமலேயே ஷாக்
ட்ரீட்மென்ட் தந்து விட்டனர்!

ஜெயலலிதா:


மதுரைக்கே வேட்டு வைத்த
கண்ணகிக்கு வேட்டு வைத்தீர்!
கற்பில் நிலைத்து நின்றவளுக்கே
இக் கதிதான் உண்டு என்றால்
பொறுப்பில் உள்ளோர் கதி
யாதா குமோ யாரறிவார்?

விஜயகாந்த்:


கொட்டு முரசே! தனிக்காட்டு ராஜ்யம்
நமதென்று கொட்டு முரசே!
பாட்டில் அடிக்காமல் எழுத முடியாது!
பாட்டில் அடிக்காமல் பேச முடியாது!
பாலாறு, தேனாறு ஓடுதோ இல்லையோ,
கோளாறு செய்யும் மது ஆறு ஓடும்!

வைக்கோ :

அம்மாவால் சைக்கோ ஆகுமுன்,

வைக்கோ, இடம் மாற நினைத்தீர்!
நல்ல வேளை தப்பித்தீர்; மாறினால்
உமது நிலைமை என்னவாகும்?
மறு தளர்ச்சி வேண்டாம்; மீண்டும்
புது மறுமலர்ச்சி மலரட்டும்!

தா. பாண்டியன்:


சொந்த அரிவாள் அதனால்
கதிர் அறுக்க முடிய வில்லை!
சொந்த அறிவாலும் அறுவடை
நடத்தத் துணிவில்லை; உமது
கூரிய அறிவாள் செங்கோல்
என்றுதான் நிமிர்ந்து நிற்கும்!

ராமதாஸ்:

அரசியலில் மகா மருத்துவர் நீர்!
உமது ட்ரீட்மென்ட் என்ன ஆச்சு?
எக்ஸ்ரே, ஸ்கேனிங் எல்லாம்
மிகவும் பழுதாகிப் போயினவோ?
புதிதாக வாங்கி வைக்க,
அய்யாவுக்கு ஐடியா உண்டா!

தங்கபாலு:

வெளியேறி யவரோ கராத்தேக்காரர்!
சகாக்களுடன் செய்தீர் கராத்தே!
என்ன சொன்னாலும் உமக்கு வராதே!
பொற்கைப் பாண்டியனின் கை,
ஜோஷ்யக் கையாய்ப் போனதேனோ?
விதி ரேகை சொல்லுமா விளக்கம்?


உமர்தம்பிஅண்ணன்

நன்றி : Zakir Hussain

11 Responses So Far:

Shameed said...

ஆளுக்கு ஆறு வரி போட்டு வாரிய விதம் அருமையாக இருந்தது

ZAKIR HUSSAIN said...

இந்த தேர்தலில் நடந்த மாற்றங்களுக்கு காரணம் வாவன்னா சார் மாதிரி எதிர்காலத்தை எடுத்துச்சொல்லும் நல் உள்ளங்கள் அரசியல்வாதிகள் பக்கத்தில் இல்லை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
கருனா நிதி:மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டதால் சாய்வு நாற்காலியில் சாய வேண்டியதாகிவிட்டது. முதல்வர் நாற்காலி இனி எட்டா கனி காரணம் அவர் மகள் கனி மொழி கயமைக்கு துணைபோனதால் வந்த சனி இனி விலகாது.
-------------------------------------------------------------------
ஜெயலலிதா:முன்னாள் முதல்வன் மேல் உள்ள வெறுப்பின் நெருப்பில் குளிர்காய கிட்டியது இந்த பதவி! இதை தந்த மக்களுக்கு செய்யனும் நல் உதவி. பழய குருடி கதவை திறடின்னு இருந்தா இனிமேல் என்றுமே திறக்காது இந்த வாய்ப்பு. ஆரிய கூரிய வாள் வைத்திருக்கும் ஆவாள் இத பிராமனவாள் .அதை கழட்டி வைக்காவிட்டாள் இனி காலம் இவர் வாளை வெட்டும்.உணர்வாளா?
-----------------------------------------------------------------
விஜயகாந்த்:திரை ஸ்டென்டில் கால் வைத்து விளையாடும் வித்தகன். அரசியலில் கால் வைத்தபின் தேவையில்ல அரசியல் ஸ்டென்டு பண்ணினால், டென்டு போட்டு நிரந்ததரமாய் அரசியலில் உட்கார முடியாது. அன்றாடங்காட்சிகளை நினைத்து உதவனும். அன்றாடம் காட்சியதை குடித்து கிடந்தால், தமிழ் நாட்டு குடிமகன் வைப்பான் வேட்டு, இனி கிட்டாது ஓட்டு.

crown said...

வைக்கோ :காகித புலி! அரசியலில் எலி! புலிகளுக்கு ஆதரவு தரும் முக்கிய புள்ளி. அரசியல் வாழ்வில் வாழ்ந்து கொண்டே அரசியல் சன்யாசம் போனவித்தியாசமானவர். நம்பினார் கைவிடப்படார் என சகோதரியை நம்பினார் "படார்"'ன்னு இவரின் உறவு கதைவை சாத்தினார் சகோதரி.இப்ப எத்த திண்ணா பித்து தெளியும் என்று தேடுகிறார் இருட்டுக்குள் சூரிய சகவாசம். இனி அரசியலில் இவருக்கு வன வாசம்.
---------------------------------------------------------------
தா. பாண்டியன்:இவர் அரசியலில் பாண்டி ஆடினார். பல இடம் மாறி ஓடினார். பாண்டி ஆடியதால் போண்டி"யானவர். அரசியல் பாண்டி ஆட்டத்தில் இவர் கால் தான் அதிகம் வாரப்பட்டிருக்கு,அறிவியலில் சரியா வளராத கதிர். முதிர் ஆனாலும் இன்னும் தளராத இவர் முயற்சி பாரட்டபடத்தான் வேண்டும்.

crown said...

ராமதாஸ்:படித்தது மருத்துவம் தெரியாதது நாகரிகத்தின் மகத்துவம். காடுவெட்டியே அரசியலுக்கு வந்தவர். காடுவெட்டி குருவினாலா தனக்கே குழிவெட்டியவர்.மரம் வெட்டி எனபதால்தான் இவரை இவர்கட்சினர் மற(ர)த்தமிழன்னு சொல்றாங்களோ? அடுத்த எந்த கூடாரம்? இப்பவே கணக்கு போட ஆரம்பம்.
--------------------------------------------------------------
கே.வி.தங்கபாலு:முன்னாள் விசாவியாபாரி. இப்ப அரசியல் விசா ரிஜெக்டட். அதிகம் உதை வாங்கிய பெயரை பெற்றவர். இவரின் உருவ பொம்மையை எரித்ததில் கின்னஸ் சாதனை புரிந்தனர் இவர் சார்ந்த கட்சியினர். வழுக்கை அனுபவம் என கொண்டால் இவர் வழுக்கை வழுக்கிய அனுபவம் தான் அதிகம். கை கூடி வரும் என காத்திருந்தது கை நழுவியதால் இவர் பெயரின் விலாசம் கூட கேவி,கேவி அழுகிறது. எந்த கை வரும் இவர் கண்ணீரைத்துடைக்க?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வரலாறு பாடம் - இன்று
வரலாற்று பாடங்களின் பக்கங்களை புரட்டிப் பார்க்கிறது !

அவரரவர்களின் வரலாறு
சொல்வதோ ஆயிரம் பாடம் !

வரலாற்றில் இன்றை தலைப்புச் செய்திகள் :

மு,க, : படமெடுத்து மின்சாரம் தாக்கியது !

ஜெ.ஜெ.: வரலாற்று (மதுரை மேட்டர்) கண்ணகிக்கும் இவரின் புன்னகைக்கும் ஆயிரம் குதர்க்கங்கள் !

வி.க. : boட்டில் இல்லா வீட்டில் குடியிருப்பதில்லை !

வை.கோ: இவரின் இருக்கைகள் கூட்டிக் கேட்டார் இல்லை என்றதால் 'So'வை(கேட்டுவிட்டு)go என்று சொன்னதால் எங்கே போவார் இனிமேல் !?

த.ப.: "ரி"க்கும் "றி"க்கும் வரலாறு சொல்லிய பாடம் !

ர.தா.: காடுகளை நம்பித்தான் வந்தார், பசுமையே அவருக்கு சுமையானது!

கே.த: கைரேகை பார்த்தே கைவிட்டார் அனைத்தையும் !

!!!!!

வரலாறு கவியோவியமென்றால்

கிரவ்னுரையோ கலக்கல் !

sabeer.abushahruk said...

சூப்பர்ப்,
வாவண்ணா சாரின் கைவண்ணம் கலக்கல்!

கிரவுன், காரியதரிசி அப்பாய்ன்ட் பண்ணி பொறுக்கிக் கோர்க்குமளவுக்கு கொட்டிக் கிடக்கின்றன உம் பூக்கள். (டயம் கிடைத்தால் நானே கோர்ப்பேன்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

Excellent :)

எனக்கு பிடித்த வரிகள்,

//சொந்த அரிவாள் அதனால்
கதிர் அறுக்க முடிய வில்லை!
சொந்த அறிவாலும் அறுவடை
நடத்தத் துணிவில்லை; உமது
கூரிய அறிவாள் செங்கோல்
என்றுதான் நிமிர்ந்து நிற்கும்!//

நல்ல தமிழ் மட்டும் பேசும் மனிதர் தா.பாண்டியன்.

வரிக்கு வரி அரசியல்வாதிகளை வாரிய விதம் மிக அருமை.

எங்கள் வாவன்னா மாமா அவர்களுக்கு மிக்க நன்றி.

நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். ஜாஹிர் காக்கா உங்களுக்கும் மிக்க நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//கே.வி.தங்கபாலு:முன்னாள் விசாவியாபாரி. இப்ப அரசியல் விசா ரிஜெக்டட். அதிகம் உதை வாங்கிய பெயரை பெற்றவர். இவரின் உருவ பொம்மையை எரித்ததில் கின்னஸ் சாதனை புரிந்தனர் இவர் சார்ந்த கட்சியினர். வழுக்கை அனுபவம் என கொண்டால் இவர் வழுக்கை வழுக்கிய அனுபவம் தான் அதிகம். கை கூடி வரும் என காத்திருந்தது கை நழுவியதால் இவர் பெயரின் விலாசம் கூட கேவி,கேவி அழுகிறது. எந்த கை வரும் இவர் கண்ணீரைத்துடைக்க? //

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் தஸ்தகீர், தங்களின் கிரவுனுரையை படித்ததுமே குபீர் சிரிப்பு.

தங்கபாலுவை இன்னும் காங்கிரஸ் அல்லக்"கை"யாக வைத்திருப்பது தான் வேடிக்"கை".

Yasir said...

வாவன்னா சாரின் ”வாவ்” வாரல்கள்...சிம்பிளி சூப்பர்...கலக்கீட்டிங்க சார்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு