Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பல்வலி என்பது யாதெனில்...! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , , ,

சம்பவம் பெரிது... சுருங்கச் சொல்ல முயல்கிறேன்.

ஷார்ஜா:

எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது வடிந்து போகும்வரை நிவாரணம் என்ற பெயரில் ஒரு துரும்பைகூட எடுத்துப்போடாத ஷேக்குகளையும் கொண்ட ஒரு பிஸியான நகரம்.

கண்டநேர காட்பரீஸும், எப்பப்பார்த்தாலும் எக்லேர்ஸும், வேண்டி விரும்பி கேன்டியும் என நான் என் சொந்த பற்களுக்கு செய்த இனிப்பான சித்ரவதைக்கெல்லாம் பலி வாங்கும் விதமாக ஒரு இரவு 12 மணிக்கு மேல் வாய்க்குள்ளே ட்ரில்லிங்க் மெஷினை 3000 ரொட்டேஷன் பெர் மினிட்ல சுத்துற மாதிரி என் பல்லே எனக்கு வலித்தது.

பல்வலி என்பது யாதெனில், அது ஒரு பக்கா வலி; எத்தனை இருக்க்க்கிப்பிடித்தாலும் சற்றேனும் இறங்கா வலி; உடனே நிருத்தாவிடில் உலகயே வெருக்க வைக்கும் உச்சகட்ட வலி.

எனவே, அந்நேரம் திறந்திருந்த மருந்தகத்தை அனுகியபோது அவன், "வலி இருந்தால் பல் மருத்துவமனையில் எந்த அங்க்கிளிடம் போனாலும் ஆன்ட்டி பையாட்டிக்தான் தருவான். அதனால நான் தரும் ஆன்ட்டி பையாட்டிக்கும் வலி நிவாரணியும் 5 நாட்கள் சாப்பிட்டுட்டுப் போனால் உடனே வலிக்கிற பல்லைப் பிடிங்கிடலாம்" என்றான்.

ஆள் பார்க்க வறுமை காரணமாக BDS பாதில விட்டமாதிரி தெரிந்ததாலும், வேறு b, c, d என்று எந்த ஆப்ஷனும் தராததாலும் என் கடைவாய்ப்பல் அவசர அவசரமாக "a" "சரி" என்ற பொத்தானையே அழுத்தியது. அடுத்த 10 நிமிடத்தில் தூங்கிப்போனேன்.

5 நாட்களில் 3 snikkers, ரெண்டு kitkat தவிர வேறு சாக்லேட்டா...மூச். 6வது நாள் பல் மருத்துவமனையில், "அவன் கொடுத்த ஆன்ட்டி பையாட்டிக்கெல்லாம் செல்லாது. நாங்க கொடுத்தாதான் நாங்க புடுங்குவோம் (ஹிந்தில இவ்வளவு கலீஜா ஒலிக்காது)" அப்டினு சொல்லி, ஃபார்மஸி காரன் சொன்னதையே காப்பி பேஸ்ட் செய்தான்.

மேற்கொண்டு 5 நாட்களும் குறைந்த ஸுகர் கன்ஸம்ஷனில் கழிய ப்ராஜெக்ட்டின் (பல்லு புடுங்கிறதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட்டாய்யா) 11வது நாள்:

பாதிக்கப்பட்ட பல்லின் இப்புறமும் அப்புறமுமான முரசினுள்ளே ஆஆஆசி...ஸாரி ஊசி குத்தி (வலில உளறிட்டேன்) கொஞ்ச நேரம் குந்த வச்சாங்க.

டி வியில் ஏதோ மலையாளச் சேனலில் விளம்பரத்தில், "இந்த பேரீச்சம்பழ சிரப் குடித்தால் உங்கள் இர்ரெகுலர் பீரியட் பிரச்னைகளையெல்லாம் சீராக்கும்" என்று பினாத்தினார்காள். இவர்களை விட்டால் நமக்கும் சேர்த்து ரெகுலேட் செய்வதாகக்கூடச் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது.

பிறகு என்னை அழைத்து ஆயுதங்களோடு கொஞ்சங்கூட அன்பில்லாமல் முதலில் பிக்பாக்கெட்காரன் பர்ஸை உருவுகிறமாதிரி இதமா முயன்றான். பல் வரல. வராததற்குக் காரணம் அந்தப்பல்லுக்கும் எனக்குமான பால்ய காலந்தொட்ட ஸ்நேகமானு எனக்குத் தெரியாது.

அடுத்து, கயிறு இழுக்கும் போட்டியில் ஜெயிக்க முயன்றான், ம்ஹூம். பனங்கெழங்கு பிடிங்கினான், ம்ஹூம், குடக்கல்லாய் ஆட்டி அசைத்தான்,ம்ஹூம், கொத்துத்தலைமுடியாய் இழுத்தான், ம்ஹூம், பட்டம் விடும் நூலென வெட்டி வெட்டி இழுத்தான், ம்ஹூம், கடைசி முயற்ச்சியாய் சங்கிலியால் கட்டி 50 டன் க்ரேன் கொண்டு இழுத்தான், ம்ஹூம் பல் வரவே இல்லை. மேலே ஒவ்வொரு கமாவுக்கும் இடையில் "ஆ, ம்மா, அல்லா, வலி உயிர் போகுதே" நு சேர்த்து வாசிக்கவும்.

பிறகு, கையில் ஒரு டெஸ்ட் இஞ்ஜெக்க்ஷன் போட்டு மீண்டும் டி வி முன்னால் உட்கார வச்சாங்க. டெஸ்ட்ல 10 நிமிஷத்தில பாஸாயிட்டேன் (ஹய்யா). பாஸானதும் இப்ப ஹெவி டோஸ் வலி நிவாரணி கொடுத்து கோட்டை கழட்டி வச்சிட்டு சட்டையின் கையை மடிச்சு விட்டுட்டு பயமுருத்தறமாதிரி மீண்டும் புடுங்க முயன்றான். அந்தப்பல்லுக்கு உள்ளங்கால்வரை வளர்ச்சியோ என்னவோ, அசைந்து கொடுத்ததே தவிர வராம டாக்டருக்கு பெப்பே காட்டியது.

இப்ப டாக்டர் என்னை ஒரு ஜந்துவைப்போல பார்த்துவிட்டு, "புடுங்கும் முயற்சியில் முரசு புண்ணாகிவிட்டது. இன்னொரு கோர்ஸ் amoxillin எடுத்துட்டு 5 நாள் கழிச்சி வா" வென ஹிந்தினான்.

"நாளன்னிக்கு ஊருக்கு போறேனே"ன்னு நானும் ஹிந்தினேன். அப்ப ஊர்லேயே புடுங்கிக்கோன்ட்டான்.

ஊர்:

மிக பரிச்சயமான பல் டாக்டர், என் நண்பரும்கூட, அவரிடம் மொத்த கதையும் சொல்லி முடிக்க அவரும் sharjah வசனங்களை வழிமொழிந்துவிட்டு, மீண்டும் ஆன்ட்டி பயாட்டிக் கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு எக்ஸ்ரேயும் எடுத்து பார்ட்துவிட்டு "பல் நல்லாருக்கு...(கவனிக்கவும்..எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) எடுக்க வேணாம். மருந்து சாப்பிட்டா போதும்" என்றார்.

சாப்பிட்டும் வலி போகல.

இப்ப தஞ்சாவூர்ல உள்ள எம் டி எஸ்ஸிடம் காட்ட நண்பர் சொன்னதால்...

தஞ்சாவூர்:

கதையெல்லாம் கேட்டுட்டு எற்கனவே எடுத்த (கவனி... அதே எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) என்னிடமும் காட்டி பல் உடைந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு பேச்சு பேச்சாகவே இருக்கும்போதே பூ கொய்வதுபோல பல்லை கொய்து கையில் தந்துவிட்டார்.

எனவே, நான் கற்ற நீதி: வியாதிக்கு ஏற்ற சரியான மருத்துவரை தேடிப் போவது சரி.

ஆதாரம்: என் கையில் போட்ட டெஸ்ட் ஊசி வெட்டிவிட்ட இடம்போல இப்பவும் தழும்பா இருப்பதை அடுத்த விடுமுறை நாளில் நீங்கள் நண்பர்களோடு வந்து கண்டு களிக்கலாம்.

- எஞ்சிய பற்களுடன் சபீர்

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பல்(லு) பிடுங்கின மேட்டரு ! பல்ல் போனதால் வந்த சொக்கவைக்குக் வலிநிவாரனி... பற்கள் தெரிய சிரிச்சுட்டேன் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

> கால்,பல் பிரச்னைகுரிய உங்கள் சொல் மட்டும் இனிமை.இனி எப் பிரச்னையும் வராமல் இருக்கட்டும்.
> ஆதாரங்களை நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு நேரலை மூலம் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்துவீர்களா?.

இப்னு அப்துல் ரஜாக் said...

பல்(ல)வலியைக்கூட இப்படி நாசு பட உங்களால எப்பிடி விவரிக்கமுடியுது?பலே

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ. கவிக்காக்காவின் எழுத்துக்களில் என்றுமே படிக்க ஆர்வமும், சேட்டையும் அதிகமாகவே இருக்கும். நல்ல இணை(கை)தந்த கலை.

ஒரு கால‌த்தில் ந‌ம்ம‌ ஊரில் ப‌ல் துல‌க்குவ‌தில் பெரிய‌வ‌ர்க‌ள் முத‌ல் சிறிய‌வ‌ர்க‌ள் வ‌ரை அதிக‌ க‌வ‌னமும், அக்க‌றையும் செலுத்துவ‌தில்லை. தேங்காச்சம்புலெ (தேங்காய் நார்) பேஸ்ட் வச்சி பல் தேய்ப்பது, செங்கக்கல்லை உடைத்து பொடி செய்து பல்லுக்கு தேய்ப்பது, கொஞ்சம் முன்னேறி பயேரியா பல் பொடி, கோல்கேட் பல்போடி என்பது பரவலாக இருந்த காலம் அது. அதனால் ப‌ல் வ‌லி, பூச்சிப்ப‌ல் என்று ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ஆட்ப‌ட்டோம்.

எவர் குறைந்தது காலை மற்றும் படுக்கும் முன் பல் துலக்கி விட்டு படுக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனரோ அவர்கள் ப‌ற்க‌ளை க‌டைசி வ‌ரை பாதுகாக்கலாம். இடையிடையே ஏற்ப‌டும் ப‌ல்வ‌லியும் வ‌ராது. முக்கிய‌மாக‌ ஒவ்வொரு மாத‌மும் க‌ண்டிப்பாக‌ பிர‌ஸை மாற்றிக்கொள்வ‌து இன்னும் கூடுத‌ல் ப‌ல‌ன் கொடுக்கும்.

ஒரு த‌ட‌வை ப‌ல்வ‌லி என்று ப‌ட்டுக்கோடையில் உள்ள‌ பிர‌ப‌ல‌ ப‌ல் டாக்ட‌ரிட‌ம் சென்றேன். அவ‌ர் புதிய‌ முறை ரூட்டிங் கேன‌ல் என்ற ஒன்று வ‌ந்துள்ள‌தாக‌வும் அது ஒரு செய‌ற்கை வேர் வைக்கும் முறை என்று சொல்லி க‌ட‌வாப்ப‌ல்லில் போர் போடுவ‌து போல் போட‌ ஆர‌ம்பித்து விட்டார். கொஞ்ச‌ம் விட்டால் அத‌ற்குள் நீர்மூழ்கி மோட்டாரை பொறுத்தினாலும் பொருத்தி விடுவாரோ என்று க‌ருதி வ‌லி வேத‌னை தாங்க‌ முடியாம‌ல் த‌ய‌வு செய்து ப‌ல்லை பிடுங்கி விடுங்க‌ள் என்று கேட்டுக்கொண்ட‌ பிற‌கு அதை பிடுங்கி விட்டார்.

என்ன‌தான் ஆயிர‌ம் செய‌ற்கை க‌ண்டுபிடிப்புக‌ள் வ‌ந்தாலும் இறைவ‌ன் ந‌ம‌க்க‌ளித்த‌ இய‌ற்கையை (நிய‌ம‌த்) யாராலும் வென்று விட‌ முடியுமா? நிய‌ம‌த்க‌ள் ந‌ம் உட‌லில் நாம் ப‌ல‌ பெற்றிருக்கும் வ‌ரை அத‌ன் முக்கிய‌த்துவ‌ம் தெரிவ‌தில்லை. அது ந‌ம்மிட‌மிருந்து பிடுங்க‌ப்ப‌ட்ட‌ பின் தான் அத‌ன் அருமை, பெருமைக‌ள் தெரிய‌வ‌ரும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரை என்.ஷஃபாத் said...

புதுக்குறள்

பல்வலி என்பது யாதெனின் பிரிதோர்
பெரும்வலி இலையென் பதுமெய்!!

sabeer.abushahruk said...

என்ன நடக்கிறது இங்கே?

என் அபிமான எழுத்தாளர்களான 'ஒருவனின் அடிமை', 'எம் எஸ் எம்'மெல்லாம் பாராட்டுகிற அளவுக்கா இருக்கு இந்த கட்டுரை?

ZAKIR HUSSAIN said...

நீ விவரித்த விசயத்தை B.D.S படிக்கும் மாணவர்களுக்கு ஒரு Case Study ஆக தரலாம். தொடர்ந்து பென்டு கழட்டப்படும் Weekly assessment exam லிருந்து தொலைத்து விட்ட சந்தோசத்தை மாணவர்கள் நிச்சயம் பெருவர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சபீர் காக்கா,

இந்த பதிவை படிவிட்டு சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு...

//கயிறு இழுக்கும் போட்டியில் ஜெயிக்க முயன்றான், ம்ஹூம். பனங்கெழங்கு பிடிங்கினான், ம்ஹூம், குடக்கல்லாய் ஆட்டி அசைத்தான்,ம்ஹூம், கொத்துத்தலைமுடியாய் இழுத்தான், ம்ஹூம், பட்டம் விடும் நூலென வெட்டி வெட்டி இழுத்தான், ம்ஹூம், கடைசி முயற்ச்சியாய் சங்கிலியால் கட்டி 50 டன் க்ரேன் கொண்டு இழுத்தான், ம்ஹூம் பல் வரவே இல்லை. மேலே ஒவ்வொரு கமாவுக்கும் இடையில் "ஆ, ம்மா, அல்லா, வலி உயிர் போகுதே" நு சேர்த்து வாசிக்கவும்//

யம்மாடியோவ் பல்லை எடுக்கிறதுக்கு இவ்வளவா கஷ்டப்படுவாங்க?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். முன்பே ஒருமுறை படித்தது என்றாலும் படிக்கும் போது வாயெல்லாம் பல் தெரியத்தான் படிக்க முடிகிறது. நான் என் வியாபாரஸ்தலத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் போது சிரித்தவண்ணம் படித்தேன். நமதூரைச்சேர்ந்த ஒரு இளைஞன் கேட்டார். என்னா காக்கா தனியா சிரிக்கிறேய? நான் இந்த கட்டுரைய காட்டினேன் ரொம்பத்தான் குறும்பு என்றார் அவர்."பல்"சுவை விருந்து படைத்தது உங்கள் எழுத்துப்பாணி வாழ்துக்கள்.இந்த கணினிதான் என்னை கருத்து சொல்ல விடாமல் ஒரே பாடாய் படுத்திவிட்டது. இப்பத்தான் என்னால் கருத்து ஆக்க முடிந்தது. இதற்குள் பலரிடமிருந்து கருத்துக்கள் வந்து "பல்"கி பெருகிவிட்டது.பல் மருத்துவம் பயில்கிறவர்கள் ரிலாஸாக இதை "பல்"கலைக்கழகத்தில் ஒரு பாடமாக அமைக்கலாம் என்று சொன்ன உங்கள் பால்ய நண்பர் ஜஹீர் காக்கா சொன்னதை ஆமோதிக்கிறேன்.இனி நீங்கள் ஏதூம் நோய் இல்லாமல் "பல்"லாண்டு வாழ வாழ்துகிறேன்.

Yasir said...

உங்களுக்கு பல்வலி....அதனை தொகுத்து தந்து எங்களுக்கெல்லாம் வயிற்றுவலியை அல்லவா உண்டாக்கீவிட்டீர்கள் வலியை கூட ”களி”யாக சொல்லும் உங்கள் திறமை ஆச்சரியப்பட வைக்கிறது காக்கா.....எப்புடி இப்படியெல்லாம் முடியுது

அதிரை முஜீப் said...

//ஆதாரம்: என் கையில் போட்ட டெஸ்ட் ஊசி வெட்டிவிட்ட இடம்போல இப்பவும் தழும்பா இருப்பதை அடுத்த விடுமுறை நாளில் நீங்கள் நண்பர்களோடு வந்து கண்டு களிக்கலாம்.//

கேட்குறேண்டு கோவிச்சுக்க கூடாது!.

பல்ல பிடுங்குனதற்கு ஆதாரமாக, பல் இருந்து(!), அதை பிடுங்கிய இடத்தை தானே காட்ட வேண்டும்!. அது என்ன, கையில தழும்பு இருப்பதை ஆதாரமாக காட்டுறது!. இதுலே ஏதோ சூழ்ச்சி இருக்கு!.

இப்பதான் எனக்கு தோணுது!. ஷார்ஜாவிலும், பட்டுகோட்டையிலும் ஒருவேளை பல்லை புடுங்குவதற்கு பதில் கையை புடுங்க முயற்ச்சித்திருப்பார்களோ?.

அதெல்லாம் போகட்டும் தலை!. மீதம் உள்ள பல்லில் வலி வராம பாத்துக்கங்க!. பொதுவா பல் போனா சொல் போச்சுன்னு சொல்வாங்க!. நாம எங்கே சொல்லிக்கிட்டு இருக்குறோம்?. எழுதிக்கிட்டுத்தானே இருக்கிறோம் என்றெல்லாம் பதில் தரக்கூடாதாக்கும்!.

அப்பறம், குறிப்பா நானும் ஷார்ஜாவிலே இருப்பதினாலே, அந்த பல் டாக்டரின் பெயரையும், கிளினிக் பெயரையும் தந்தீங்கன்னா, என் பல்லுக்கும் நல்லது!. ஏண்டா அந்தப்பக்கமா பல் வச்சுக்கூட படுக்க மாட்டேன்ல!.

sabeer.abushahruk said...

முஜீப் டாட் காமின் உரிமையாளர் கவனத்திற்கு:

சம்பவம் நடந்த இடம்: ஜீக்கோ சிக்னலில் உள்ள ரவி கிளினிக் எனும் ஆயாளுகளோட ஓஸ்பத்திரியானு!

பட்டுக்கோட்டையில யாரிடம் 'இலிச்சேன்' நு சொல்லமாட்டேன். ஏன்னா அவர் என் நண்பரும்கூட!

பதில் தயாரித்து தந்தமைக்கு நன்றி:

நாம எங்கே சொல்லிக்கிட்டு இருக்குறோம்?. எழுதிக்கிட்டுத்தானே இருக்கிறோம்

தஞ்சாவூர் டாக்டர் பேரு ஏதோ ரா ரான்னு வரும் ( சரஸுக்கு ரா ராவல்ல)

அதிரை முஜீப் said...

நிங்கலோட ஒபிசிண்டே தொட்டடுத்த கிளினிக்கில் பல்லை காட்டியது நிங்கலோட தெட்டானு!. மனசுலாயா!.

பின்னே, என்ட சாரே, ஞான் ஆத்தியம் பறைஞ்சது போலே, இனி ஒரிக்கிலும் ஜீக்கோண்ட சைடில் என்ட பல் வைத்து ஓரங்கிள்ளே!. பட்சே, அ வழி தன்னே ஞான் ராவிலும் பின்னே வைகியிலும் என்ட ஜோலி கழிஞ்சு திருச்சி போகும்!. இனி ஒருகிலும் அ பாகம் என்ட பல்ல மாத்திரமல்ல, என்ட கண்ணையும் ஞான் திறக்கில்ல!.

இ ஓஸ்பத்திரியோட பேரே பரஞ்சி என்ட பல்லையும், பர்சையும் ரட்சித்த சாருக்கு ஞான் நன்னி பறையுனு.

Shameed said...

பல்லால் பாட்ட கஷ்டத்தை சந்தோசமா சொன்ன விதம் அழகு ,

பல் புடுங்க இவ்வளவு கஷ்டமும் சிரமமும் இருக்கும் போது நம்ம பசங்க ஈசியா பல்லை ஓடசிபுடுவேன்னு சொல்வது எந்த விதத்தில் நியாயம்னு தெரியலே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரை முஜீப் சொன்னது…
நிங்கலோட ஒபிசிண்டே தொட்டடுத்த ///

இப்போதான் புரியுது மலையாளத்தில் எழுதினால்தான் முஜீபை பார்க்க முடியுமென்று.... !

அட மல்ஸ் படிக்கிறாங்கன்னு கண்டு கொண்டேன் !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Shameed சொன்னது… பல் புடுங்க இவ்வளவு கஷ்டமும் சிரமமும் இருக்கும் போது நம்ம பசங்க ஈசியா பல்லை ஓடசிபுடுவேன்னு சொல்வது எந்த விதத்தில் நியாயம்னு தெரியலே//

கவி காக்கா Note this point, இவ்வளவு கஷ்டப்பட்டுடியலே.. முதல்ல குட்டி டாக்டர் ஷாருக்குகிட்ட சொல்லி டெஸ்ட் டிரையல் பார்த்துட்டு அந்த டாக்டர்மாருவகிட்ட போயிருக்கலாம்.

ZAKIR HUSSAIN said...

//என்ட ஜோலி கழிஞ்சு திருச்சி போகும்!//

துபாயில் கூட "திருச்சி" இருக்கா?..

அதிரை முஜீப் said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//என்ட ஜோலி கழிஞ்சு திருச்சி போகும்!//

துபாயில் கூட "திருச்சி" இருக்கா?..

சகோதரர் ஜாகிர் அவர்களுக்கு சலாம்!.

துபாயில்(மலையாளத்தில்) திருச்சி மாத்திரமல்ல, ஈரோடு போயி திருச்சி வரவும் கூடுதல் சாத்தியமுண்டு.

அபு ஆதில் said...

"அந்தப்பல்லுக்கு உள்ளங்கால்வரை வளர்ச்சியோ என்னவோ",இருந்துட்டு போகட்டுமேனு வந்திருந்தால் எங்களுக்கெல்லாம் இப்படியொரு நகைச்சுவையான ஆக்கம் கிடைத்திருக்காதுதானே.
டெஸட் ஸஃபாரி கவிதை இன்னும் வரல..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு