Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எக்ஸ்க்யூஸ்மி.... ! 43

ZAKIR HUSSAIN | June 10, 2012 | , ,

ஏதாவது அலுவலகத்தில் நாம் காத்திருக்கும்போது, காருக்கு பெட்ரோல் போடும்போது அது நிறையும் வரை, மார்க்கெட்டில் வீட்டுக்கு தேவையானது வாங்கி வந்த பிறகு "நான் சொன்னது இது இல்லே" என்று அதிமுக்கியத்துவம் கொடுத்து மனைவி சொன்ன பிறகு எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி நாம் சொல்லும் பதிலுக்கு பிறகு இருக்கும் அமைதிகளில் சில கேள்விகள் தோன்றும்..அவைகளின் தொகுப்பே இது. சிலர் இன்னும் சில கேள்விகள் இருக்கிறது என்று இன்னும் எழுதலாம். இவ்வளவு பேசற நீ பதில் சொல்லேன் என்று என்னிடம் கேட்கலாம், சாரி இந்த வாரம் எனக்கு கேள்வி கேட்கிற டூட்டி மட்டும்தான்.

1. எச்சில் மூலம் காச நோய் பரவும் என்று கண்டுபிடித்து குறைந்தது 70 வருடமாவது இருக்க வேண்டும். இன்னும் ஏன் 'படிக்கன் - எச்சில் துப்பும் பாத்திரம்" இதை நம் ஊரில் இன்னும் பயன்படுத்துகிறார்கள்?

2.  வெளிநாட்டுக்கு போக வீட்டில் உள்ள பிள்ளைகளுக்காக 3 லட்சம் 5 லட்சம் என்று ஏற்பாடு செய்து தரும் நம் வீட்டு பெண்கள், ஏன் உள்ளூரில் ஒரு மளிகைக்கடை வைக்கபோகிறேன் என்று கேட்டால் மட்டும் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்?

3.    டாய்லெட் பயன்படுத்துவது 100 ஆண்டுகளை தாண்டி இருந்தும் ஏன் சில இடங்களில் [ சில பள்ளிவாசளில் கூட ] டாய்லெட்டுக்கு பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள்? ...அதை சரியாக பயன் படுத்த கற்றுக்கொள்ள  100 ஆண்டுகள் போதாதா?

4.   நம் ஊரில் உள்ள இளைஞர்கள் நன்றாக படித்து நிறைய வளைத்தளம் எல்லாம் வெற்றிகரமாக நடத்தி அதில் 'கந்தூரி கூடாது, வரதட்சணை ஒரு சமுதாயக்கேடு" என்று மாஞ்சி , மாஞ்சி எழுதுகிறார்கள் [ நானும் தான் ] ..அதை எல்லாம் "சம்பந்தபட்டவைங்க' படிப்பாப்லெயா?...எனக்கு நம்பிக்கையில்லே..உங்களுக்கு இருக்கா?

5. இந்த கம்பன் எக்ஸ்பிரஸ் மேட்டருக்கு இன்னும் உயிர் இருக்கா? இல்லை அதுவும் லெமுரியா கண்டம் மாதிரி சரித்திரப்புத்தகத்தில் எழுதப்பட்டு மறந்து போகுமா?

6.   சிலரின் வலைத்தளம் ஏன் ஆரம்பித்த சமயத்தில் இருந்த சுறுசுறுப்பு பிறகு காணாமல் போனது ?

7. ஊரில் உள்ளவர்களுக்கு சில உயர்தர சென்ட் கொடுக்கும்போது அதன் விலையை சொல்லி கொடுப்பது நல்லதா/ கெட்டதா?...ஏனெனில் அவர்கள் பயன்படுத்தும் அளவு அப்படி.

8.      டீன் ஏஜ் பசங்க கையில் 3ஜி , 4 ஜி போனை கொடுத்து விட்டு அவன் நல்ல விசயங்களை மட்டும்தான் பார்ப்பான் எனும் நம்பிக்கை.....எப்படி?

9. கடைசி வரை உழைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு  மட்டும் எந்த சுரப்பியில் ரோசம் சுரக்கிறது?

10. சன் டி வி செய்திகளில் வரும் தல செய்தியாளர்கள் எப்படி இந்த கொழுத்தும் வெயிலில் இவ்வளவு விலாவாரியாக செய்தியை விவரிக்கிறேன் என இப்படி 'ஆத்து ஆத்து'னு ஆத்துராய்ங்க?

11.  ஊரில் டிரைவர்கள் எப்படி ரைட் சிக்னல் போட்டால் பின்னால் வரும் காருக்கு வழி விடுவதாக கண்டுபிடித்து கடைபிடிக்கிறார்கள்? [ குறிப்பு: இது தவறு என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் சமீபத்தில் சென்னை போக்குவரத்து போலீஸ் கமிஷனர் 'மிகப்பெரிய தவறு' என்று பேட்டியளித்தார்.---- டூ லேட் பிரதர்.]
 
12.   அரசு மருத்துவமனைகளின் சேவைத்தரமும் , நம்பிக்கையும் ஏன் சிதைந்தது?.

13.   சேம்பிளுக்கு வெட்டித்தரும் மாம்பழத்தின் ருசி ஏன் காசு கொடுத்து வாங்கியபோது காணாமல் போகிறது? --யாராவது இது 'ஹைக்கூ மாதிரி இருக்குனு எழுதினா ஒரு டைகர்பாம்  பாட்டில் இலவசம்'-

14.   விமானம் தரையிறங்கி ஒடுபாதையில் ஒடி நிற்குமுன் எழுந்து நின்று பெட்டிகளை கேபினிலிருந்து எடுக்கும் பழக்கம் இந்தியர்களிடம் ஏன் அதிகம் காணப்படுகிறது?

15.   கைத்தொலைபேசியில் அழைத்து "எங்கே இருக்கிறே? ' எனும் கேள்வி எத்தனை பேருக்கு எவ்வளவு விதமான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

…..இதை தந்திபோல் பாவித்து உடன் பதில்போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். [ஹாஸ்டலில் இருக்கும்போது பணம் கேட்டு வீட்டுக்கு எழுதும் வாசகம்...யாரும் மறந்து விடக்கூடாதல்லவா?]

-ZAKIR HUSSAIN

Note:  படமெல்லாம் பெருசு பெருசா இருக்கும்போதே தெரிந்திருக்குமே "பதிவு சொதப்பல்" னு

43 Responses So Far:

Unknown said...

விமானம் தரையிறங்கி ஒடுபாதையில் ஒடி நிற்குமுன் எழுந்து நின்று பெட்டிகளை கேபினிலிருந்து எடுக்கும் பழக்கம் இந்தியர்களிடம் ஏன் அதிகம் காணப்படுகிறது?
=========================================================

ஜாகிர் காக்கா நீங்கள் நன்றாக கவனித்தீர்களேயானால் ஒன்று மிக தெளிவாகத்தெரியும் ..

அது ...

1 வருடமோ அல்லது 2 வருடமோ வெளிநாட்டில் உழைத்து நாடு திரும்பும்போது விமானத்தில் நடக்கும் நிகழ்வைத்தான் நீங்கள் கட்டுரையில் சொன்னீர்கள் .

விடுப்பு முடிந்து மறுபடியும் விமானத்தில் சென்று வெளிநாட்டில் விமானம் தரை இறங்கியும் ,மனதில் அழுத்தமாக பதிந்த
சொந்த நாட்டின் ஈர்ப்பு எனும் விசை அப்படியே அழுத்தும் எந்த அளவுக்கென்றால் விமான பனி பெண்ணோ அல்லது விமானியோ வந்து நம்மை எழுப்பி விடும் அளவிற்கு ..அது எல்லோராலும் வெறுக்கப்படும் வலி .
அந்த கணங்களை சபீர் காக்கா வின் கவிதைகள் சொல்லும் என நம்பலாம் .(கல்யாண வேலை எல்லாம் முடிந்துவிட்டதே காக்கா)

சேக்கனா M. நிஜாம் said...

கேள்விகள் எல்லாம் நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்க + சிந்தனையைத் தூண்ட வைக்கும் !

வாழ்த்துகள் சகோ. ஜாகிர் ( புத்தகம் ரெடியா ஈக்கிது ! அனுப்பி வைக்கவா ? )

Excuseme ! ஏன் கேள்விகளளேல்லாம் இப்படியும் இருக்கக்கூடாது ?

1. காஸ் தட்டுப்பாடு நீங்குமா ?

2. “அதிரைப்பட்டினம்” புதிய பேருந்து நிலையம் வருமா ?

3. அரசு மருத்துவ மனை 24 மணி நேர கூடுதல் டாக்டருடன் சேவை தொடருமா ?

4. பாதாள சாக்கடைத் திட்டம் வருமா ?

5. கூட்டுக் குடி நீர் திட்டம் செயல்படுத்த படுமா ?

6. புதிய “தீ” அணைப்பு அலுவலகம் வருமா ?

7. தடையில்லா மின்சாரம் கிடைக்குமா ?

8. அகல ரயில் பாதைத் திட்டம் வருமா ?

9. சமூக குற்றங்கள் ஒழியுமா ?

10. கல்வி, சுகாதார விழிப்புணர்வு பெறுவோமா ?

11. தெருவில் சைக்கிள்காரன் (வட்டி) நடமாட்டம் குறையுமா ?

12. லஞ்சம் ஒழியுமா ?

13. ரேஷன் கடை முறைகேடுகள் ஒழியுமா ?

14. முதியோர் நலன், வேலைவாய்ப்புகள் பெருகுமா ?

15. இலவச மருத்துவ முகாம் நடைபெறுமா ?

16. கணினி முன்பதிவுக் கூடம் திறக்கப்படுமா ?

17. மீன், ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி விலைகள் குறையுமா ?

18. சமுதாய அமைப்புகளின் ஒற்றுமை வளருமா ?

19. குடும்பக் கொல்லியை ஊரைவிட்டு துரத்ததான் முடியுமா ?

20. கட்அவுட் கலாச்சாரங்கள் குறையுமா ?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கே.எ.: 1க்கு...
"புது மாப்பிள்ளை வாய் கொப்பளித்து துப்ப'த்தான்" அதனை அப்புறம் யாரும் குடிப்பாங்களோ ?

கே.எ.: 2க்கு...
"அங்கே வருமானம் உறுதி... இங்கு வரும் மானம் வருமா வராதா என்ற பயமாக இருக்கலாம்"

கே.எ.: 3க்கு...
"அங்கே toletபோர்டு போட்டிருந்ததே என்று குடியிருக்கச் சென்றுவிடுவார்களோ என்ற பீதி தான்"

கே.எ.: 4க்கு...
"படித்திருந்தால் அவ்வாறு செய்து கொண்டிருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு கூட படிக்கமுடியாமல் மார்க் கம்மியாக வாங்கிட்டாய்ங்க அவய்ங்க"

கே.எ.: 5க்கு...
"கம்பனை வைத்து இன்று வன்பானாக போனவர்கள் சரித்திரம் திருத்தப்படும்"

கே.எ.: 6க்கு...
"மேக மூட்டம் அதிகம் இருப்பதால் மந்த நிலையே இந்த நிலைக்கு காரணம்..."

கே.எ.: 7க்கு...
"மணம் காட்டிட கெட்ட மனம்"

கே.எ.: 8க்கு...
"அப்படித்தான் நம்பி கையில் கொடுக்கிறார்கள்..."

கே.எ.: 9க்கு...
"ஏதாவது குளக்கரை மேட்டில், அல்லது முச்சந்தியில்"

கே.எ.: 10க்கு...
"அது சன்-நேரச் செய்திகள்"

கே.எ.: 11க்கு...
"வாகனத்தில் முந்துவதை வாழ்கையில் முந்துங்கள்"ன்னு ஒரு போர்டு படித்தேன் வாழ்கையில் முந்துங்கன்னா எப்படி !?

கே.எ.: 12க்கு...
"போரட்டமே அவர்களின் வாழ்கையானதால்"

கே.எ.: 13க்கு...
"நல்ல வேளை சாம்பிளுக்கு கூட சாப்பிட்டு பார்த்ததில்லை"

கே.எ.: 14க்கு...
அங்கே கவேயரில் வரும் சாமானுக்கு காத்துக் கிடக்க அவசரம்

கே.எ.: 15க்கு...
"போனுக்கு பக்கத்தில் இருப்பதைக் கூட இப்படியா கேப்பாங்க?"

வித்தியாசமான அசத்தல் (!!) காக்கா...

இந்த பதிலை மின்னஞ்சல் போல் பாவித்து, SMSசெய்யவும் (இக்கால வாசக ஞாபகப் படுத்திகலாமேன்னு)...

Yasir said...

காக்கா.....இன்னும் 100 வருஷம் கழிச்சு உங்கள் பேரனோட பேரனோட பேரன் அதிரை நிருபரில் எழுதமாட்டார்.....தாத்தா எழுதியதை அப்படியே காப்பி செய்து ஒரு சில சின்ன மாற்றத்துடன் பேஸ்ட் செய்துவிடுவார்...இந்த கேள்விகளுக்கு பதிலே கிடையாது.....அந்த அளவிற்க்கு நம்முடைய குரோமோசோமில் பதிந்துவிட்ட செயல்கள் இவைகள்

நல்ல கலக்கலான ஆக்கம்..

Yasir said...

//எந்த சுரப்பியில் ரோசம் சுரக்கிறது?// இத எப்படியாவது கண்டுபிடிச்சு ரிமுவ் செய்ய வேண்டும் காக்கா

///மாம்பழத்தின் ருசி ஏன் காசு கொடுத்து வாங்கியபோது காணாமல் போகிறது// நேத்து சார்ஜா மார்க்கெட்டில் இதான் நடந்தது.....வீட்டம்மா ஆமா உங்களுக்கு எதையும் ஒழுங்க பார்த்து வாங்க தெரியாதே என்று சொல்ல....என்னத்த சொல்ல காக்கா அவன் வெட்டிக்கொடுத்த பீஸு நல்லதான் இனிச்சுது..நல்லபெயர் வாங்கிவிடலாம் என்று பார்த்தா .....விடமாட்டாங்கல (இனி ஒவ்வொரு பழத்தையும் வெட்டி சுவைபார்த்துதான் வாங்கவேண்டும் என்று ஜாஹிர் காக்காவின் ஆக்கதின் மேல் சத்தியம் செய்து கொண்டேன்)

Shameed said...

1. எச்சில் மூலம் காச நோய் பரவும் என்று கண்டுபிடித்து குறைந்தது 70 வருடமாவது இருக்க வேண்டும். இன்னும் ஏன் 'படிக்கன் - எச்சில் துப்பும் பாத்திரம்" இதை நம் ஊரில் இன்னும் பயன்படுத்துகிறார்கள்?

பதில் - - நிலத்தில் துப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடும் என்பதால்

2. வெளிநாட்டுக்கு போக வீட்டில் உள்ள பிள்ளைகளுக்காக 3 லட்சம் 5 லட்சம் என்று ஏற்பாடு செய்து தரும் நம் வீட்டு பெண்கள், ஏன் உள்ளூரில் ஒரு மளிகைக்கடை வைக்கபோகிறேன் என்று கேட்டால் மட்டும் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்?

பதில் - சனியன் தொலைத்தால் சரி என்ற கொள்கையாக இருக்கலாம்

3. டாய்லெட் பயன்படுத்துவது 100 ஆண்டுகளை தாண்டி இருந்தும் ஏன் சில இடங்களில் [ சில பள்ளிவாசளில் கூட ] டாய்லெட்டுக்கு பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள்? ...அதை சரியாக பயன் படுத்த கற்றுக்கொள்ள 100 ஆண்டுகள் போதாதா?

பதில் - நேரம் கெட்ட நேரத்தில் டாய்லெட் போபவருக்கு பூட்டு போட முடியாது என்பதால் தான் டாய்லெட்டுக்கு பூட்டு போடுகிறார்கள்

4. நம் ஊரில் உள்ள இளைஞர்கள் நன்றாக படித்து நிறைய வளைத்தளம் எல்லாம் வெற்றிகரமாக நடத்தி அதில் 'கந்தூரி கூடாது, வரதட்சணை ஒரு சமுதாயக்கேடு" என்று மாஞ்சி , மாஞ்சி எழுதுகிறார்கள் [ நானும் தான் ] ..அதை எல்லாம் "சம்பந்தபட்டவைங்க' படிப்பாப்லெயா?...எனக்கு நம்பிக்கையில்லே..உங்களுக்கு இருக்கா?

பதில் - படிப்பாங்க ஆனால் மண்டைலே ஏறமாட்டேன்குது

5. இந்த கம்பன் எக்ஸ்பிரஸ் மேட்டருக்கு இன்னும் உயிர் இருக்கா? இல்லை அதுவும் லெமுரியா கண்டம் மாதிரி சரித்திரப்புத்தகத்தில் எழுதப்பட்டு மறந்து போகுமா?

பதில் - இன்னும் கொஞ்சம் பொறுத்திருங்கள் பிராடு கேஜ் எல்லாம் ஓல்டு மாடலாகி புல்லெட் ட்ரெயின் மற்றும் மாக்னடிக் ட்ரெயின் விட முயற்சி செய்வோம்!

6. சிலரின் வலைத்தளம் ஏன் ஆரம்பித்த சமயத்தில் இருந்த சுறுசுறுப்பு பிறகு காணாமல் போனது ?

பதில் - அது நம் நாட்டின் தேசிய குணம்

7. ஊரில் உள்ளவர்களுக்கு சில உயர்தர சென்ட் கொடுக்கும்போது அதன் விலையை சொல்லி கொடுப்பது நல்லதா/ கெட்டதா?...ஏனெனில் அவர்கள் பயன்படுத்தும் அளவு அப்படி.

பதில் - அப்படி விலையை சொல்லவில்லை என்றால் சென்டை ஏட கூடமான இடத்தில் எல்லாம் அடித்து வைப்பார்கள் என்பதால் விலையை சொல்லி கொடுப்பது நல்லது

8. டீன் ஏஜ் பசங்க கையில் 3ஜி , 4 ஜி போனை கொடுத்து விட்டு அவன் நல்ல விசயங்களை மட்டும்தான் பார்ப்பான் எனும் நம்பிக்கை.....எப்படி?

பதில் - நம்ம ஊரு புள்ளைங்க என்ன தப்பு செய்தாலும் அது பெற்றவங்களுக்கு தப்பாவே படாது

9. கடைசி வரை உழைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் எந்த சுரப்பியில் ரோசம் சுரக்கிறது?

பதில்- மாமியார் மாமனார் சுரப்பியில் மட்டும்தான் ரோசம் சுரக்கும்

10. சன் டி வி செய்திகளில் வரும் தல செய்தியாளர்கள் எப்படி இந்த கொழுத்தும் வெயிலில் இவ்வளவு விலாவாரியாக செய்தியை விவரிக்கிறேன் என இப்படி 'ஆத்து ஆத்து'னு ஆத்துராய்ங்க?

பதில் - அவங்க டக்கு புக்குன்னு செய்திய சொல்லிபுட்டு வீட்டுக்கு போனா அங்கே ஆத்தி புடுவாங்க போலோ

11. ஊரில் டிரைவர்கள் எப்படி ரைட் சிக்னல் போட்டால் பின்னால் வரும் காருக்கு வழி விடுவதாக கண்டுபிடித்து கடைபிடிக்கிறார்கள்? [ குறிப்பு: இது தவறு என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் சமீபத்தில் சென்னை போக்குவரத்து போலீஸ் கமிஷனர் 'மிகப்பெரிய தவறு' என்று பேட்டியளித்தார்.---- டூ லேட் பிரதர்.]

பதில் - இது ஊர் ஹோட்டல்களில் ஃ ப்ரைடு எக்கை ஆஃப் பாயில் என்பது போல தான் (போலீஸ் கமிஷனருக்கு இன்னும் முட்டை மேட்டரும் விளங்கவில்லையாம்)

12. அரசு மருத்துவமனைகளின் சேவைத்தரமும் , நம்பிக்கையும் ஏன் சிதைந்தது?.

பதில் - காசு பணத்தின் மீது நம்பிக்கை கூடியதால்

13. சேம்பிளுக்கு வெட்டித்தரும் மாம்பழத்தின் ருசி ஏன் காசு கொடுத்து வாங்கியபோது காணாமல் போகிறது? --யாராவது இது 'ஹைக்கூ மாதிரி இருக்குனு எழுதினா ஒரு டைகர்பாம் பாட்டில் இலவசம்'-

பதில் - தொழில் நுணுக்கத்தை நுணுக்கமாக பயன் படுத்துவதால் (டைகர்பாம் பாட்டில் எனக்குதானே )

14. விமானம் தரையிறங்கி ஒடுபாதையில் ஒடி நிற்குமுன் எழுந்து நின்று பெட்டிகளை கேபினிலிருந்து எடுக்கும் பழக்கம் இந்தியர்களிடம் ஏன் அதிகம் காணப்படுகிறது?

பதில் - அது விமான வேகத்தின் பாதிப்பு உடம்பில் ஒட்டிக்கொள்வதால் இருக்கும்

15. கைத்தொலைபேசியில் அழைத்து "எங்கே இருக்கிறே? ' எனும் கேள்வி எத்தனை பேருக்கு எவ்வளவு விதமான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

பதில் -என்ன பேசணும்னு தெரியமலையோ போன் செய்து பிளேடை மாட்டுவதர்க்குத்தான் அந்த பீடிகை

குறிப்பு இந்த வாரம் எனக்கு பதில் சொல்லும் வாரம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மூளைக்கு நல்ல வேலை!

1. படிக்கன்........அது பாரம்பரிய கலாச்சாரமாம் (இஸ்லாமிய கலாச்சாரத்தை சொன்னால் இது நாகரீக காலமாம்)

2.வெளிநாடு,மளிகைகடை......அற்ப சுகத்துக்கே பேராவல்

3.டாய்லெட்......பூட்டி தொறக்குற பொக்கிசமாகத் தான் இன்னும் பாவித்துக் கொண்டிருக்கார்கள்.

4.கந்தூரி,வரதட்சனை........மார்க்கம் அறிந்தும் அறியாதது போல் நடிக்கும் மக்குகள்.

5.கம்பன்....இதுலெ மட்டும் நம்பிக்கை இழக்கக் கூடாது,ஒற்றுமை நிச்சயம் ஒரு நாள் உயிர் கொடுக்கும்.

6.சில வலைத்தலம்.......அப்பப்ப முளைக்கும் கட்சி, இயக்கம், அமைப்பு போல தான் இவர்களும் இருக்கார்கள். காற்றடிக்கும் போது மட்டுமே விழித்திருப்பவர்கள்.

7.சென்ட்..... அவர்கள் குளிக்க மாட்டர்களா?

8.டீன் ஏஜ்......நம்பிக்கை மட்டும் தான்.

9.சுரப்பி...... வயிற்றைதவிர அத்தனை சுரப்பியும் சுருங்கியவராயிற்றே.

10.சன்.... இப்படி ஆத்துனா தானே அந்த டயம் வரை ஒப்பேத்த முடியும்.

11.ராங் சிக்னல்..... தவறை வளரவிட்டால் தானே மானம் மறந்து பணம் பார்க்க முடியும்.

12.அரசு மருத்துவமனை.... போராட்டங்களும்,மனிதமற்ற செயல்களும்.

13.சேம்பிள் பீஸ்..... இனிப்பு எண்ணத்தில் இருக்குது . அவர் இனிக்கும் என்கிறார் இனிக்குது.

14.விமானம் தரையிரங்குதல்......நம்மவர்கள் இதில் மட்டும் 'பெர்பெக்ட்' எனக் கொள்ளலாம்.

15. என்கெ இருக்கிறா? ஓனருக்கு அடுத்த ஸ்தானத்தில் உள்ளவர்கள் இப்படி கேட்டால் சும்மா சுர்ர்ருன்னு ஏறும்.

sabeer.abushahruk said...

1) ஃப்ளஷ் பண்ணும் வசதியுடன் கூடிய படிக்கன் கண்டுபிடிக்காத இயலாமை நமக்குத்தான் இழுக்கு.

2) ஏறத்தாழ 250 மளிகைக்கடைகளைத் தாங்குமாய்யா நம்மூரு? நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டைலு!

3) டாய்லெட்டுக்குள்ளே போய் சரவெடி வெடிக்கும் பார்ட்டிகளிடமிருந்து க்ளோஸெட்ட காப்பாத்ததான். வெடிச்சு சிதறிடாதா?

4. ச்சாய்ஸ்ல விட்டுட்டாய்ங்கய்யா. அவுலியாட்ட போட்டுக்கிடுத்துடாதே.

5. கனவே கலையாதிரு!

6. சில வலைதளங்களுக்குள் போய்விட்டால் கோவாலு துணை இல்லேனா வெளியே வரவே பயம்மா இருக்கும்ப்பா.

7. காசுகொடுத்து வாங்கிய யாராவது அப்படி ஸ்ப்ரேய பார்த்திருக்கியா?  இப்ப வெளங்குதா?

8. இவிஙலா தேடி போயில ஆப்புள உட்கார்ராங்க

9. எஸ் ஐ எஸ்  (சும்மா  இரிஙப்பு சுரப்பி)

10. துட்டு மச்சி துட்டு

11.  உன்னைய யாரு இதயெல்லாம் நோட் பண்ணச்சொன்னது. வந்தமா வாழ்ந்தமான்னு இல்லாம?

Shameed said...

கேட்ட கேள்விக்கெல்லாம் நல்ல பதில் எழுதி உள்ளோம் என்ற நம்பிக்கையில் ரிசெல்டுக்கு காத்திருக்கோம் ரிசெல்டு எப்போ வரும் முதல் மார்க்கு எடுப்பவருக்கு பச்சை பெல்ட் கிளிசாப் தைலம் இப்படி ஏதாவது எடக்கு மடக்கான ஊக்க பரிசு உண்டா?

அதிரை சித்திக் said...

நான்கொஞ்சம் எதிர் மறையாய் சிந்தித்து

பார்த்தேன் கேள்வி கேட்ட ஜாகிர் மதிப்பெண் வழங்கி இருந்தால்

அவர் ஸ்தானத்தில் இருந்து சமமா மார்க் போட்டு பார்த்தேன்

பதிலில் குசும்பு இருந்தாலும் சமீத் (sameed ) ஜாபர் 100 க்கு 100

நெய்னா தம்பி கேள்வியை திரும்ப பார்க்காமலே பட்டென்ற பதில்

100 க்கு 110 ..சகோ நிஜாம் ,ஏன்சார் இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியா

கேள்வி கேட்டா என்ன ..டெஸ்ட் இன்னும் கொஞ்சம் கூடுதலா

வைக்கணும் என சக ஆசிரியராய் ..தெரிந்தது .. ..,மற்ற மாணவர்கள்

தெரிந்த கேள்விக்கு மட்டும் பதில் எழுதி ..விடை தாள் வெற்றிடமாக

இருந்தது ..சாரி கொஞ்சம் ஜாஸ்தியா எழதி விட்டேனா ..சும்மா

உடான்ஸ் ...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சலாமுடன்,
எக்ஸ்க்யூஸ் மீ சித்தீக் காக்கா நல்லா இருக்கியலா?
அது சரி உங்க குசும்பு அல்லது உயர்தர பதில் எங்கே?

அதிரை சித்திக் said...

சலாமுடன்,
எக்ஸ்க்யூஸ் மீ சித்தீக் காக்கா நல்லா இருக்கியலா?
அது சரி உங்க குசும்பு அல்லது உயர்தர பதில் எங்கே? >>>>>>

பதில் எழுத தெரிஞ்சா ..பரவாயில்லையே ..மக்கு ஸ்டுடன்ட் ..நான்

அதனாலே தான் சாரையே ஓவர் டேக் பண்ணிட்டேன் ..சும்மா

உடான்ஸ் ..ஜாபர் ..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

என்ன சித்தீக் காக்கா இப்புடி சொல்லிபுட்டியோ..........
தமிழூற்று தானாக தமிழ்த் தேனாக பதிலாய் சொட்டனுமே!
உங்க விடை காண சின்ன ஆசை.

Ahamed irshad said...

நம்பர் 6 ல் மீயும் வருவதால்..

கூடிய விரைவில் ஒட்டடை அடிச்சு தூசி களைந்து ஏசி அடிக்கப்படும்...

Ahamed irshad said...

இம்பூட்டு கேள்வி வேணாம்...நான் ஒரு சிம்பிள் கேள்வி கேட்கிறேன்..

ஆசைகளை துறக்கனும்னுதானே புத்தன் நினைச்சான்... அதுவே ஒரு ஆசையில்லையா?

இதுக்கு சட்டுபுட்டுன்னு பதில சொல்லுங்க...

Ahamed irshad said...

இந்த கம்பன் எக்ஸ்பிரஸ் மேட்டருக்கு இன்னும் உயிர் இருக்கா? //

இப்ப அது ‘மேட்டராவே’ போயிருச்சா.... ‘கம்’பன் என்பதால் வரவேமாட்டேங்குதுன்னு நினைக்கிறேன்... சேஞ்ச் த நேம்... பாஸிபிள்?

Ahamed irshad said...

கடைசி வரை உழைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு //

அடம்பிடிப்பதும் ஒரு வகையில் உழைப்புதான் யுவர் ஆனர்... ஒரிஜினல் உழைப்புக்கு வியர்வைன்னா இதுக்கே ரத்தமே வரும்ங்க...

முப்பது நிமிஷத்துக்கு மேனேஜர்க்கிட்ட ‘அடம் பிடிச்சு’ உழைக்கவும்....

Ahamed irshad said...

ஏன் உள்ளூரில் ஒரு மளிகைக்கடை வைக்கபோகிறேன் என்று கேட்டால் மட்டும் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்?///

ஹமாம் சோப்புலேயும் மேட் இன் துபாய்’ன்னு இருக்கோனும்... அப்பத்தான் பளபளப்பு மினுமினுப்பு வரும்... நான் சோப்ப சொன்னேன்....

crown said...

1).எச்சில் மூலம் காச நோய் பரவும் என்று கண்டுபிடித்து குறைந்தது 70 வருடமாவது இருக்க வேண்டும். இன்னும் ஏன் 'படிக்கன் - எச்சில் துப்பும் பாத்திரம்" இதை நம் ஊரில் இன்னும் பயன்படுத்துகிறார்கள்?
---------------------------------------------------------------------
அஸ்ஸாலமுஅலைக்கும். அட ! நல்ல இருக்கே கொஞ்சம் ரிலாக்ஸா கேள்விகேட்டுடீங்கனு பார்த்தா இப்படி மாட்டி விட்டுடீங்கள! சரி எனக்கு தெரிந்த பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.(சிக்குறேன்).
காச நோய் சரி காசே தேயும் நோய் அது காசு உண்ணும் நோய். மெலும் காசு சம்பாதிக்கும் நோயில் பாயில் படுத்த மூத்தவர்களின் ஆரோக்கியமும் இன்றும் பேனப்படாததால் இன்றும் இந்த அறியாமை நோய் தொடர்ந்து கொண்டிருக்கிறது.பாவம் பெரியவங்க ஏந்திருக்கும் இந்த முதுமையெனும் பாத்திரம் படிக்கனா? இல்லை படித்திலேன் என்பதா?(ஆசிரியர் ஜாஹிர் அவர்களுக்கு இவ்வளவு குழப்பமான பதில் யாரவது எழுதி இருங்காங்களா???)

crown said...

2. வெளிநாட்டுக்கு போக வீட்டில் உள்ள பிள்ளைகளுக்காக 3 லட்சம் 5 லட்சம் என்று ஏற்பாடு செய்து தரும் நம் வீட்டு பெண்கள், ஏன் உள்ளூரில் ஒரு மளிகைக்கடை வைக்கபோகிறேன் என்று கேட்டால் மட்டும் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்?
---------------------------------------------------------
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் இதற்கு பெற்றொரின் கனிப்பே காரணம். தன்னைப்போல் பொருப்பில்லாமல் போய்விட்டால்? மேலும் இதற்கு பெற்றொரை மட்டுமே குறை சொல்லி பயன் இல்லை! காரணம்(சமூகம் என்றாலும்)சம்பந்தபட்ட நபர் தன் வீட்டில் உள்ளவர்களிடமே நல்ல அபிப்பிராயத்தை சம்பாதிப்பதில்லை. சரியா நேரத்தில் தூங்கி எழுந்திருக்காதது, வீட்டிற்கு தேவையான வேலைகளை பொறுப்பாக செய்வதில்லை எனும் பல காரணம் சொந்த வீட்டிலேயே நல்லதொரு மதிப்பீடு பெறாமல் இருப்பதுதான் காரணம்.

crown said...

3. டாய்லெட் பயன்படுத்துவது 100 ஆண்டுகளை தாண்டி இருந்தும் ஏன் சில இடங்களில் [ சில பள்ளிவாசளில் கூட ] டாய்லெட்டுக்கு பூட்டு போட்டு வைத்திருக்கிறார்கள்? ...அதை சரியாக பயன் படுத்த கற்றுக்கொள்ள 100 ஆண்டுகள் போதாதா?
---------------------------------------------------------
பொறுப்பற்ற சமூகம் இன்னும் உள்ளது. மேலும் சிறுவர்கள் உபயோககிக்க தெரியாதவாறு உபயோகித்து அசுத்தம் செய்துவிடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையாக இருக்கலாம். (முன்னெச்சரிக்கை முத்தனாவாக மோதினார் இருப்பார்கள்)

crown said...

4. நம் ஊரில் உள்ள இளைஞர்கள் நன்றாக படித்து நிறைய வளைத்தளம் எல்லாம் வெற்றிகரமாக நடத்தி அதில் 'கந்தூரி கூடாது, வரதட்சணை ஒரு சமுதாயக்கேடு" என்று மாஞ்சி , மாஞ்சி எழுதுகிறார்கள் [ நானும் தான் ] ..அதை எல்லாம் "சம்பந்தபட்டவைங்க' படிப்பாப்லெயா?...எனக்கு நம்பிக்கையில்லே..உங்களுக்கு இருக்கா?
---------------------------------------------------------------
எனக்கு உண்டு. சொல்லாமலே, எழுதாமலே விட்டு விடுவதை விட தொடர்ந்து நம் கடமையை செய்தால் ஒருனாள் மாற்றம் வரும் இன்ஷா அல்லாஹ்.

crown said...

6. சிலரின் வலைத்தளம் ஏன் ஆரம்பித்த சமயத்தில் இருந்த சுறுசுறுப்பு பிறகு காணாமல் போனது ?
-------------------------------------------------------------------
வளைத்தளம் வந்த பின் வாப்பா வாங்கிதரும் புது சிலேட்டு பலகை போல் இஸ்டம்போல் எழுத தோனும். பிறகு அது கொஞ்சம் ,கொஞ்சமாக பழசாகும் போது அந்த ஆர்வம் இருக்காது. அதுபோலவும் மேலும் பொதுவான வளைத்தளம் இருப்பதால் அதில் நம் சிந்தனையை???? வெளிப்படுத்தலாம் என்பதுமே காரணம்.

crown said...

5. கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை என்பதால் விட்டு விட்டுவிட்டேன்

crown said...

7. ஊரில் உள்ளவர்களுக்கு சில உயர்தர சென்ட் கொடுக்கும்போது அதன் விலையை சொல்லி கொடுப்பது நல்லதா/ கெட்டதா?...ஏனெனில் அவர்கள் பயன்படுத்தும் அளவு அப்படி.

----------------------------------------------------------------
வேறு ஏதாவது பொருள் கொடுக்கலாம். உயர்ரக செண்ட் கொடுத்து என்னபயன் அவங்க அடிக்கிற அடில மண்ணெல்லாம் சென்ட் வாசனை கூடி நம் வீடு அதிக (சென்ட் எவ்வளவு? குழி எவ்வளவு?)விலைக்கா விற்க போகிறது??? காசு ஸ்பிரேயாக வீனாவதை விட கொடுக்காமல் தவிர்ப்பது நலம்.

crown said...

8. டீன் ஏஜ் பசங்க கையில் 3ஜி , 4 ஜி போனை கொடுத்து விட்டு அவன் நல்ல விசயங்களை மட்டும்தான் பார்ப்பான் எனும் நம்பிக்கை.....எப்படி?
---------------------------------------------------------------
அதானே? அப்புறம் குடும்பமானம் போயிருசி(ஜி),அவன் வாழ்கை சீரழிஞ்சி(ஜி) போயிடுச்சி(ஜி)ன்னு புலம்பல் தேவையா?

crown said...

9. கடைசி வரை உழைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு மட்டும் எந்த சுரப்பியில் ரோசம் சுரக்கிறது?
--------------------------------------------------------------
ரோசமா? பாசத்தை காட்டி போடும் வேசமா? கூர்ந்து கவனிங்க ! நண்பர்கள் கேட்டால் நட்பை லஞ்சமாக்கி போடும் அறிதாரம் இல்லா வேடம். அதற்கு கண்ணீரை வரவழைக்கும் திரைக்கதைகூட செதுக்கி வைத்து நடிப்பு ரசம் பொழிவர்.

crown said...

10,11,12 ஊரில்,சமூகத்தில், வெளி ஊரில் எல்லாம் கேட்க வேண்டிய பொது கேள்வி அதிரைகாரன் என்பதால் தவிர்த்துவிடுகிறேன்.(அவ்வளவு சமூக பொறுப்பா நம்மவங்களுக்கு? இருக்கிற வேலையையே பார்க்க நேரமில்லை!!!).

crown said...

13. சேம்பிளுக்கு வெட்டித்தரும் மாம்பழத்தின் ருசி ஏன் காசு கொடுத்து வாங்கியபோது காணாமல் போகிறது? --யாராவது இது 'ஹைக்கூ மாதிரி இருக்குனு எழுதினா ஒரு டைகர்பாம் பாட்டில் இலவசம்'-
---------------------------------------------------------------------
(ஓசி,இலவசம், மாதிரி எல்லாம் இனிக்கத்தான் செய்யும்)காசு கொடுத்து வாங்கியப்பின் எல்லாம் நம் தலையெழுத்து , நசீபுன்னு வச்சிக்க வேண்டியது தான்.

crown said...

14. விமானம் தரையிறங்கி ஒடுபாதையில் ஒடி நிற்குமுன் எழுந்து நின்று பெட்டிகளை கேபினிலிருந்து எடுக்கும் பழக்கம் இந்தியர்களிடம் ஏன் அதிகம் காணப்படுகிறது?
----------------------------------------------------------------
கடைசி நேரத்தில் யாராவது விமானத்தை கடத்திடுவாங்கன்னு பயமா இருக்குமா?

crown said...

15. கைத்தொலைபேசியில் அழைத்து "எங்கே இருக்கிறே? ' எனும் கேள்வி எத்தனை பேருக்கு எவ்வளவு விதமான தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
-------------------------------------------------------------------
சரியா கேட்டீங்க! பதில் என்ன?

அப்துல்மாலிக் said...

காக்கா கேள்வி கேக்குறது ஈஸி, பதில் சொல்லிப்பாருங்க இல்லே நீங்க தேடிப்பாருங்க...

நம்பர் 6 ல் நானும் அடங்குவேன்...

நம்மோடவே பொறந்த கேள்விகள் விடை கூகிளில் கூட கிடைக்காது..

ZAKIR HUSSAIN said...

சரி...சும்மா ஏதாவது வித்தியாசமா எழுதனும்னுதான். சமுதாயத்து மேலே "காண்டு"னு யாரும் கண்டு பிடிக்கலே.

Tuan Haji சாகுல் எழுதியதை உண்மையில் ரசித்தேன். Bro அப்புறம் அஹமது இர்சாத் இன்னும் வித்தியாசமா சிந்திக்கிறாப்லெ. Bro எம் ஹெச் ஜே ...ரத்தினசுருக்கம் [ அது என்ன ரத்தினச்சுருக்கம் நு 6 மாசமா எனக்கு யாரும் பதில் போடலை] Bro சேக்கனா நிஜாம் சமுதாய சிந்தனை பதிலிலும். [அதிரையில் தேர்தலில் நின்று ஜெயிக்க தகுதியுள்ளவர்...]

Bro அபு இப்ராஹிம்...ரொம்ப நல்ல ஸ்டூடன்ட்..எல்லாத்துக்கும் நம்பர் விடாம பதில் எழுதியிருக்காப்லெ. சபீர் [ ஏன் கம்ப்ளீட் செய்யலெ....அந்த சுரப்பி கண்டுபிடித்ததை சொல்லி சிரித்தேன்] Bro அதிரை சித்தீக் பதில் எழுதவில்லை...[ பரீட்சை நம்பர் எல்லாம் போட்டிருந்தேனேனு மார்க் வாங்க அடம் பிடிக்கப்டாது? ] Broகிரவுன் ...தமிழிலில் விளையாட இவருக்கா சொல்லிக்கொடுக்கணும்? [ அந்த ஜி விசயம் சூப்பர்]

Broஅப்துல் மாலிக் ...பதில் சொல்லத்தெரியலேனுதானே கேள்வியையே கேட்கிறேன்.

Broதாஜுதீன் ஹால் டிக்கட் வாங்கிட்டுபோன ஆள் கட் அடிச்சுட்டாப்லெ.

.....சரி பொழப்பெ கவனிப்போம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

//அது என்ன ரத்தினச்சுருக்கம் நு 6 மாசமா எனக்கு யாரும் பதில் போடலை]//

அப்ப சரி அப்படின்னா என்ன சொல்லுங்களேன்.

இதுக்கு மேலே விரிவாக எழுத கேள்வியையும் சேர்த்து எழுதி வைக்கனுமோ? அந்த பழக்கம் இல்லைங்கோ!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Broதாஜுதீன் ஹால் டிக்கட் வாங்கிட்டுபோன ஆள் கட் அடிச்சுட்டாப்லெ//

ஜாஹிர் காக்கா,

கட் அடிக்கல காக்கா, ஹமீத் காக்கா பதிலை பிட் அடிக்க டிரை பண்ணுனேன் கம்யூட்டர்ஜீ கவ்தீடிச்சு...

இரண்டு நாளா 1 லட்சம் ரூ பரிசு கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் நம்மூர் டீமுக்காக விளையாட போயிட்டிருக்கேன் காக்கா... அதான் பதில் நிதானம எழுத முடியல. 

ஹமீத் காக்காவின் பதிலே என் பதில்.

Ebrahim Ansari said...

கேள்வியின் நாயகனே!- இந்த
கேள்விக்கு பதில் ஏதய்யா?
இல்லாத பாத்திரத்தில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம்- நாமே
எல்லோரும் காணுகின்றோம்.

உங்கள் எழுத்து ஒரு அபூர்வ ராகங்கள் தம்பி.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்!

அ.நி. க்கு அமீர் போல அதிரை டீமுக்கும் ???? ஆல் தி பெஸ்ட்.

ZAKIR HUSSAIN said...

சாரி பதில் எழுதும்போது சகோதரர் ஹார்மிக்கு பதில் சொல்ல விட்டு விட்டேன். நீங்கள் சொன்ன மெல்லிய உணர்வு வார்த்தைகளுக்கு வசப்படவில்லை. குடும்பத்தை பிரிந்து வாழ்வது கொடுமை.

சகோதரர் இப்ராஹிம் அன்சாரி & தாஜூதீன் ,....பரீட்சைக்கு இவ்வளவு லேட்டாவா வர்ரது. சரி பரவாயில்லை..எல்லோருக்கும் பரிசு கொடுத்து விடலாம் , உங்களுக்கும் தான்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

சகோ தாஜுதீன் பொறுப்புணர்ச்சிக்கு ஒரு அழவே இல்லாமல் போகிவிட்டது....ஆமிரகத்தில் இருந்தால் வேலை பளு என்று நழுவுவது ஊரிலிருந்தும் கூட அதிரை கிரிக்கெட் அணிக்காக பாடுபடுவது.... வாழ்த்துக்கள் காக்கா

நியபகமிறுகட்டும் அந்த ஒரு லட்சம் பரிசுத்தொகை நமது அணியே (AFCC) பெறவேண்டும் இன்ஷா அல்லாஹ்

Yasir said...

//சகோதரர் ஹார்மிக்கு பதில் சொல்ல விட்டு விட்டேன்// என்னையும் உங்க மைண்ட்லேயிருந்து ஃபார்மேட் பண்ணி விட்டீர்களே காக்கா..இது நியாயமா ??

ZAKIR HUSSAIN said...

Dear Bro Yasir.... I am extremely sorry. வேனும்னே மறக்கலெ....இந்த முறை பதில் எழுதும்போது என்னுடைய கேள்விகளும் காப்பி / பேஸ்ட் செய்திருந்ததால் ஒவ்வொருவரையும் மறுபடியும் படிக்கும்போது ஏற்பட்ட தவறு. அடுத்த முறை என் வழக்கமான [காகிதத்தில் பெயர் எழுதிக்கொண்டு ..சின்ன குறிப்பும் எழுதிக்கொண்டு] பதில் தருகிறேன் அல்லது நன்றி சொல்கிறேன். sorry once again.

Yasir said...

காக்கா சும்மா “ கலாய்க்க” தான் கேட்டேன் ..அதுக்காக ஒரு ட்ரக்குல அள்ளி போகுற அளவிற்க்கு நிறைய சாரி சொல்லி என்னை தர்மசங்கடத்திற்க்கு உள்ளாகிவிட்டீகள் ....நீங்க நன்றி சொன்னாலும் சொல்லவிட்டாலும் என் கருத்தை நிச்சயம் படிப்பீர்கள் என்று தெரியும் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு