அசை போடுதே ஆசை !


உலகில் அறிஞர் முதல் அரை கிறுக்கன் வரை இளமைப் பருவத்தை தாண்டிதான் வந்திருக்க முடியும். இளமையில் மனதில் தோன்றும் ஆசைகளில் பெரும்பாலும் வித்தியாசமானவைகளே ! அவைகளில் சில நிறைவேறலாம் அல்லது நிறைவேற்றப்படாமலே போயிருக்கலாம். சில ஆசைகள் அறிவுப்பூர்வமானதாக இருக்கலாம். மேலும் சிலதோ அறிவுக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனாலும் விரும்பும் ஆசைகள் நம்மை மீறி மனத்திரையில் பளிச்சிடும் தன்மை வாய்ந்தவை. 

இதோ ஒரு கிராமத்து நாகரீகத்தில் "வெள்ளந்தியாக" ஒரு கன்னிப்பெண் பாடுவதாக கவிஞர் வைரமுத்து இடும் ஆசைகளின் பட்டியல் மிகவும் புகழ்பெற்றதாக ஒரு காலத்தில் பட்டி தொட்டிகளில் ஒலித்த ஆசைகளாகும். 

"சேத்து வயலாடி நாத்து நட ஆசை 
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை 
வானவில்லை கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை
வெண்ணிலவைத்தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றி வர ஆசை "

என்றெல்லாம் குழந்தைத்தனமான ஆசைகள் .

இதே போல ஆசைகள் எல்லாக் கவிஞர்களுக்கும் உள்ளன. அப்படிப்பட்ட ஆசைகளில் குழந்தைத்தனம், சமூக அக்கறை, எதிர்கால நலநாட்டங்கள், நிறைவேறாத ஆசைகளின் ஏக்கங்கள், தோல்விகள் ஆகியன பிரதிபலிக்கும்.

இந்த ஆசைகள் தான் வளரும் சூழ்நிலைகளை அடிப்படியாக வைத்து பலருக்கும் ஏற்படும் இப்படி ஒரு பட்டியலை ஒவ்வொரு தனிமனிதரிடமும் கேட்டுப்பாருங்கள். ஒவ்வொருவரிடமும் தனியாக பட்டியலே இருக்கும். (அந்த பட்டியலை பின்னுட்டமாக இங்கு எதிர் பார்த்தவனாக காத்திருக்கின்றேன்) - (MSM நெய்னாவிடம் கூடுதலா இருக்கும்) இளமைக்காலத்திலும் - வளரும் பருவத்திலும்தான் வித்தியாசமான ஆசைகள் தோன்றும்.

இளமை தடைகளை தாண்டி வளர்ந்து விட்ட பிறகு கூடியவரை ஆசைகள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே விதமாகவே இருக்கும். மகளுக்கு வீடு கட்ட ஆசை(!!), மகனுக்கு தோப்பு வங்க ஆசை(??), மகனை பொறி(யி)யல் (!!) கல்லூரியில் படிக்க வைத்து அமெரிக்காவுக்கு / ஐரோப்பாவுக்கோ வேலைக்கு அனுப்பி சூப்பர்மார்கெட்டில் வண்டி தள்ளினாலும் பரவாயில்லை ரகங்களாக அனுப்ப வேண்டும். மகளுக்கு என்பது பவுனில் நகை தேடி கொடுக்க வேண்டும். 

மாமனாரை அப்பலோவில் (!!) வைத்து வைத்தியம் பார்க்கவேண்டும், பெற்ற அப்பாவுக்கு ராஜு டாக்டரிடம் ஊசி போடவேண்டும், ஷிபா ஆஸ்பத்திரிக்கு அருகில் மனைக்கட்டு வாங்கிப் போடவேண்டும் என்பதுபோல் பலரின் ஆசைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். 

ஆனால், இளமையில் தோன்றும் ஆசைகள் அப்படியல்ல. அவைகள் கவித்துவம் நிறைந்த ஆசைகள் கவிமிகு(!!) ஆசைகள். சின்ன சின்ன ஆசைகள் பெரிய பெரிய சிறகடிக்கும் ஆசைகள். மனதை சிதறடிக்கும் ஆசைகள் !!

என்ன(டா!) இவ்வளவு பீடிகை போடுகிறாயே! உன் பட்டியல் என்ன என்பதை சட்டுபுட்டுன்னு சொல்லு என்று  நீங்கள் அனைவரும் கேட்பதுபோல் எனக்கு ஒரு பிரமையாக தெரிகிறது. 

இதோ என் இளமைக்கால ஆசைகளின் பட்டியலை இங்கே பதிந்து இருக்கிறேன். நான் வளர்ந்த விதம், சூழ்நிலை, ஆகியவைகளின் அடிப்படியில் எனது இளமைக்கால ஆசைகளை உங்களனைவரின் ரசனைக்கு வாசனையாக இருக்கும் என்று "நம்பி" அதற்கு தகுந்தார்போல் எனது மூன்றாம் கண்ணால் சிமிட்டிய புகைப்படங்களை இடையிடையே சொருகி வைத்திருக்கிறேன்...

1 கோடைக்காலத்தில் வெட்டிக்குளத்தின் காய்ந்து சேற்றின் உள்ளே ஈரம்    இருக்கும் மேலே காய்ந்து இருக்கும் அதன் மீது நடக்கும் போது ஒரு மெதுமெது இருக்கும் அது பிடிக்கும் 

2 ராஜாமடம் ஏரியில் நீர் வழிந்தோடிய இடத்தில் பாசி பிடித்த தரையில் வழுக்கிக்கொண்டு குளிக்கப்பிடிக்கும்

3 கோடை மழை பொழியும் போது வரும் மண்வாசனை பிடிக்கும் 


4 நடு-இரவில் பாட்டுக்கோட்டையில் இருந்து அதிராம் பட்டினம்பைக்கில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வரும்போது அடிக்கின்ற குளிர் காற்றும் அதன் கூட வரும் வாசனையும் பிடிக்கும்...

5 பசியாக இருக்கும் போது எங்கிருந்தோ வரும் தாளிப்பு வாசனை வருமே அது பிடிக்கும் 

6 ஆற்று நீரில் எதிர் நீச்சல் போட்டு கூட்டமாக குளிக்க பிடிக்கும் 

7 நண்பர்கள் கூட்டமாக ராஜமடம் பாலத்தில் இரவில் கோழி சுட (!!) போவது பிடிக்கும் 


8 குருவி கொத்திய கொய்யாபழமும் காக்கை கொத்திய பப்பாளி பழமும் பிடிக்கும் 

9 காய்ச்சல் குருவியின் கலர் பிடிக்கும் உள்ளான் குருவியின் சுவை பிடிக்கும் 

10 உப்பளத்தின் சேற்றில் வழுக்கி விழாமல் இருக்க கால் பெருவிரலை ஊண்டி நடக்க பிடிக்கும் 

11 அப்பாவின் கைபிடி கம்பில் இருக்கும் அந்த வளவு பிடிக்கும் 

12 கிழக்கே மழை பெய்தால் மேற்கே குடை பிடிக்கும் அந்த வானவில்லை பிடிக்கும் 


13 குளத்தில் குளிக்கும்போது மீன்கள் கால்களை கொத்தும் சுகம் பிடிக்கும் 

14 மொட்டை மாடியில் இருந்து இரவு நேர விண்மீன்களை பார்ப்பது பிடிக்கும் 

15 கடற்கரை மணலில் கால் பதிய நடப்பது பிடிக்கும் 

16 இரவில் மெழுகுவர்த்தியின் ஒளி பிடிக்கும்


17 நிலவு நேரத்தில் படகு பயணம் பிடிக்கும் 

18 அதிர்ந்து சிரிக்கும்போது வரும் கண்ணீர் துளியை பிடிக்கும் 

19 ரயில் பயணத்தில் சடக் சடக் தடக் தடக் சத்தம் பிடிக்கும் 

20 இரவு நேரங்களில் வெட்டிக்குள படித்துறையில் உட்க்கார்ந்து அண்ணன் N.A.ஷாகுல் ஹமீது கூட அறிவியல் தர்க்கம் செய்வது பிடிக்கும்.


21 இவை அனைத்தையும் எமக்கு அளித்த இறைவனை மிக மிக பிடிக்கும் 

-Sஹமீது

20 கருத்துகள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

அசை போட கிடைத்த 'ஆசை' !

1.மழைக் காலத்தில் காவிரியாற்றில் செக்கடிக்கு வந்து சேரும் நீரின் அளவு உயர்ந்திருப்பதை அதிகாலையில் காணப் பிடிக்கும்.

2.மாலையில் கல்லூரிச் சாலையில் நடந்து விட்டு பிலால் நகர் பள்ளியில் மஃரிப் தொழ பிடிக்கும்.

3.ரயில்வே வரை சென்று கம்பன் வராவிட்டாலும் காற்று வாங்கி காலம் கழிப்பது ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்.

4.வடக்கே வான் கறுத்து வசந்தமாய் ''சோ'' வெனப் பெய்யும் வான் மழையும் நல்லா பிடிக்கும்.

5.கதிரவன் கட்சி நமக்கு சாதகமாக இருக்குமெனெ நம்பி அதற்கு சேவை செய்வது மிகவும் பிடிக்கும்.

6.கல்லூரியில் படிக்க கைலி கட்டி சென்றதும் ரொம்பப் பிடிக்கும்.

7.பள்ளி விடுமுறையில் கடை போட்டு காசு பார்க்க மிகவும் பிடிக்கும்.

8.வாப்பாவின் தபால் காண 10 மணிக்கு போஸ்ட்டாபீஸ் போவது பிடிக்கும்.

9.மரைக்கா பள்ளியில் ஹம்ஜா அப்பா, சேக்காதி அப்பாவுடன் பனை ஓலையில் பாய் புதுப்பிக்க நல்லா பிடிக்கும்.

10.படிக்க, கட்டடிக்க அடிக்கடி கரண்டு கட்டாவது ரொம்ப பிடிக்கும்.

Ebrahim Ansari சொன்னது…

வெள்ளிக்கிழமைகளில் இப்படி ஒரு ரிலாக்ஸான- இளமை நினைவுகளைக் கிளறிவிடும் ஆக்கங்கள் படிக்கப் பிடிக்கும்.

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

“புகைப்படக் கலை வல்லுனரி”ன் சின்ன சின்ன ஆசைகள்..........
படங்களில் அழகிய காட்சியாக..................வாழ்த்துகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

நீங்கள் சொன்ன எல்லாமும் பிடிக்கும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அப்பாவின் அழகிய சிரிப்பு புடிக்கும், அங்கே கானும் ஆளுமையின் கோபமும் பிடிக்கும்.

கால்கள் எட்டாத ஸ்கூட்டரை ஓட்ட பிடிக்கும், பின்னால் பெரியப்பா உட்கார்ந்திருக்க பிடிக்கும் !

'இபு'வின் கோபம் பிடிக்கும், அதனை தொடரும் ஐஸ்கீரிம் உருக்கத்தின் புன்னகையும் பிடிக்கும் !

தம்பி மகனுக்கு ஜூஸ் பிடிக்கும், அதற்காக என்னிடம் அவன் வைக்கும் ஐஸ்'ஸும் பிடிக்கும் !

இந்த பதிவும் பிடிக்கும், என் சின்ன சின்ன ஆசைகளுக்குள் அடங்கிடாத ஆசைகளின் பட்டியலில் இருப்பதனாலே !

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

சாகுல் காக்காவின் மலரும் நினைவுகள் எம்மை இங்கு மல்லாக்கப்படுக்க வைத்து இருண்ட இரவில் வானத்து நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ண வைத்து விடுகிறது.

ம‌ல‌ரும் நினைவுக‌ளில் சில க‌டும் க‌ச‌ப்பைத்த‌ரும் வேப்ப‌ங்காய் கூட‌ இன்று நினைக்கையில் ப‌ழுத்த‌ நாவ‌ப்ப‌ழ‌ம் போல் இனிக்காம‌ல் எவ‌ர்க்கும் இருக்க‌ப்போவ‌தில்லை.

ஒரு கால‌த்து நோன்பு நேர‌ அதிரையை ரொம்ப‌ப்பிடிக்கும்.

ச‌க‌ சிறு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஊர்சுற்றித்திரிந்த‌ அந்த‌ நாட்க‌ளை ரொம்ப‌ பிடிக்கும்.

குளிர்ந்த‌ ஹ‌வுதிற்குள் பாசிக‌ளிட‌ம் பேசி ம‌கிழும் மீன்க‌ளை க‌ண்டு கொண்டே 'ஒளு'ச்செய்ய‌ ரொம்ப‌ பிடிக்கும்.

சொந்தக்கார வெளிநாட்டு ச‌புராளிக‌ள் கொண்டு வ‌ந்து த‌ந்த‌ அன்ப‌ளிப்புக‌ள் ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ள்ளிக‌ளில் சாபுக்கு உட‌ல் ந‌ல‌க்குறைவு அல்ல‌து வேறு ஏதேனும் கார‌ண‌த்தால் மைக்கில் பாங்கு சொல்ல‌வும், க‌ர‌ண்ட் இல்லாத‌ நேர‌ம் ந‌க‌ரா அடிக்க‌வும் ரொம்ப‌ பிடிக்கும்.

ந‌ம்மூரின் வ‌ட‌கிழ‌க்கில் இருண்ட‌ வான‌ம் வ‌ர‌ இருக்கும் பெரு ம‌ழையை முன்பே சொல்லும். அத‌னால் வ‌ர‌ இருக்கும் ம‌திய‌ வேளை ப‌ள்ளி விடுமுறையை (அஞ்சி பிரியடு) ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ஞ்ச‌ராய்ப்போன‌ கால் ப‌ந்தை கிழித்தெடுத்து அதில் சொந்த‌மாய் செய்த‌ அட்ட‌பில்லில் கொக்கு ம‌டியான் அடிக்க‌ப்பிடிக்கும்.

புது துணி எடுத்து தெரு டைல‌ர் க‌டையில் தைக்க‌க்குடுத்து அது கிடைக்கும் நாள் வ‌ரை காத்துக்கிட‌க்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

தெரு வெல‌க்காரி ஆச்சியின் அனைத்து ப‌ண்ட‌ங்க‌ளையும் வீட்டு ப‌க‌ல் சாப்பாட்டையும் ம‌ற‌ந்து மேய‌ ரொம்ப‌ பிடிக்கும்.

வெளிநாட்டிலிருந்து வ‌ந்திற‌ங்கும் தெருவின் சொந்த‌ ப‌ந்த‌ வாலிப‌ர்க‌ள் போல் ஸ்டைல் ப‌ண்ண‌ ரொம்ப‌ பிடிக்கும்.

வீட்டில் வ‌ண்ண‌ கோழிக்குஞ்சுக‌ள் வாங்கி வ‌ந்து வ‌ள‌ர்த்து அதிலிருந்து முட்டையைப்பெற‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ள்ளி ஆண்டு விடுமுறையில் தெரு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து குறைந்த‌ முத‌லில் (ஐந்து அல்ல‌து ப‌த்து ரூபாய்) கூட்டாண்மை வியாபாரமாய் க‌ட‌லை மிட்டாய், தேன் மிட்டாய், ச‌ர்ப‌த், மோர் க‌டை வைக்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

சைக்கிள் ஓட்ட‌வே தெரியாத‌ நேர‌த்தில் முத‌லில் கொர‌ங்கு பெட‌லில் ஓட்டிப்ப‌ழ‌க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ந‌ம‌து தெரு குள‌ங்க‌ளில் நேர‌ம‌றியாது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் குளித்து கும்மாள‌ மிட‌ ரொம்ப‌ பிடிக்கும்.

நீச்ச‌ல் தெரியாத‌ நேர‌த்தில் த‌ன் வேட்டியையே முட்டைக்க‌ட்டி அதில் மித‌க்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ஓட்டு வீட்டில் அனும‌தியின்று உட்புகும் அந்த‌ சூரிய‌க்க‌திர்க‌ள் ரொம்ப‌ பிடிக்கும்.

ம‌ழைக்கால‌ தும்பி பிடித்து அத‌ன் வாலில் க‌யிறு க‌ட்டி ப‌ற‌க்க‌ விட‌ ரொம்ப‌ பிடிக்கும்.

தேர்த‌ல் நேர‌த்தில் க‌ட்சிக்கொடிக‌ளை வீட்டின் கொல்லையில் வந்து க‌ட்டி ம‌ன்ற‌ம் அமைத்து ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் அம‌ர்ந்து ம‌கிழ‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளும், க‌ட்சி, இய‌க்க‌ப்பாகுபாடுக‌ளும் குறைவாய் இருந்த‌ அந்த‌ கால‌த்தை ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ண‌ங்காசுக‌ள் குறைவாய் இருந்தாலும் சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள் ஒன்றோடொன்று ஒட்டி உற‌வாடிய‌ அந்த‌ கால‌த்தை ரொம்ப‌ பிடிக்கும்.

பெரும், பெரும் நோய்நொடிக‌ள் இல்லாது வரும் வெறும் காய்ச்ச‌ல், த‌லைவ‌லி, சளி, இருமல், கால் க‌டுப்பு, கைக்க‌டுப்பு நோய்க‌ளுக்கு உள்ளூர் டாக்ட‌ர்க‌ளிட‌ம் சென்று இறைவன் நாட்டத்தில் ஒரே ஊசியில் குண‌மான‌ அந்த‌ நாட்க‌ளை ரொம்ப‌ பிடிக்கும்.

ஊரில் பெண்களும், ஆண்க‌ளும் பெரும் பிர‌ச்சினைக‌ள் இன்றி ஒழுக்க‌த்துட‌ன் வாழ்ந்து வ‌ந்த‌ அந்த‌ கால‌ம் ரொம்ப‌ பிடிக்கும்.

ந‌ம்மை ப‌டைத்து அன்று முத‌ல் இன்று வ‌ரை ப‌ரிபாலித்துவரும் அந்த‌ அல்லாஹ்வை ரொம்ப‌, ரொம்ப‌ பிடிக்கும்.

இப்ப‌டியே சொல்லிக்கொண்டே போக‌ ரொம்ப‌ பிடிக்கும்.

உங்க‌ள் க‌ளைப்பை கார‌ண‌மாக்கி இத்துட‌ன் நிறுத்திக்கொள்கிறேன்.....

அல்லாஹ் ந‌ம் அனைவ‌ர்க‌ளுக்கும் எஞ்சிய‌ வாழ்நாட்க‌ளில் ஆரோக்கிய‌மான‌ வாழ்வுட‌ன், ப‌ல‌மான‌ ஈமானையும் த‌ந்த‌ருள்வானாக‌வும்.....ஆமீன்....


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

ஹமீத் காக்கா,

உங்கள் வர்ணனையும் புகைப்படங்களும் அருமை..

//3 கோடை மழை பொழியும் போது வரும் மண்வாசனை பிடிக்கும் //

இந்த வாய்ப்பு சென்ற வாரம் ஊரிலிருக்கும் போது கிடைத்தது.

//2 ராஜாமடம் ஏரியில் நீர் வழிந்தோடிய இடத்தில் பாசி பிடித்த தரையில் வழுக்கிக்கொண்டு குளிக்கப்பிடிக்கும்//

ஏரியில் கொஞ்சம் தண்ணீர் ஓடுதாம், எனக்கு இதுவரை சான்ஸ் கிடைக்கவில்லை.

//18 அதிர்ந்து சிரிக்கும்போது வரும் கண்ணீர் துளியை பிடிக்கும் ///

சற்றுமுன் என் இளைய மகனிடம் கண்டேன்..

வித்யாசமான அலசல்...

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

//M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது… 5.கதிரவன் கட்சி நமக்கு சாதகமாக இருக்குமெனெ நம்பி அதற்கு சேவை செய்வது மிகவும் பிடிக்கும்.//

இன்னமும் கதிரவன் கட்சி நமக்கு நல்லது செய்யுமென்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கா?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

//இன்னமும் கதிரவன் கட்சி நமக்கு நல்லது செய்யுமென்ற நம்பிக்கை இருக்கா? //

சுத்தமா இல்லைங்கோ!

2 கட்சிகளும் வறுமைக்கும் கீழே சீட்டுகளை தர, அதைபோய் நம் இரு கட்சிகளும் (பாரம்பரியம்+அரசியலும் தேவை என்று சமீபத்தில் முடிவெடுத்த கட்சி) வாங்கி விட்டு அந்த ஒத்தெ டிஜிட் சீட்டுக்கு நியாயப் படுத்தி பேசி,வாக்குகளை வாங்கிக் கொடுத்து பதவி ஏற்றிவிட்டு சொன்ன வாக்குறுதிகளை பெற துணிந்து களம் காணாமல் வாயெ சப்பிக்கொண்டு இருப்பதை தான் இன்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

ZAKIR HUSSAIN சொன்னது…

இதற்கு கமென்ட்ஸை சின்னதாக எழுதினால் தமிழ்கூறும் நல்லுலகம் என்னை நிந்திக்கும்...எனக்கும் இது போல் எத்தனையோ விசயங்கள் பிடிக்கும். சில விசயங்கள் கால ஓட்டத்தில் மாயமாய் போய்விட்டது. இப்போது சைக்கிள் ஒட்டினால் ஏன் 'நாக்கு தள்ளுது" என்பது எந்த மருத்துவராலும் சரி படுத்த முடியவில்லை.

ரயில் தண்டவாளங்களில் விழாமல் நடக்க பிடிக்கும்.

மழை ஓய்ந்த இரவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தபானத்தின் "இரவின் மடியில்" கேட்க பிடிக்கும்.

காலை நேரத்து ஏரிக்குளியலுக்கு பிறகு வரும் வழியில் பதனி வாங்கி குடிக்க பிடிக்கும்

ஆனந்த விகடனும் ஜூனியர் விகடனும் வாங்கி அவசரமாய் திறந்து படிக்க பிடித்த காலம் பிடிக்கும்.

சென்னையிலிருந்து ரயிலில் ஊர் வரும்போது திருவாரூரிலேயே விழித்து திருத்துறைப்பூண்டியிலிருந்து அதிராம்பட்டினம் வரை வாசலில் நின்று கொண்டு வரப்பிடிக்கும்.

அவுட்டருக்காக நிற்கும் ரயிலில் நிலக்கடலையின் தோல் உதிர்த்து ஊதி சாப்பிடும் வயதானவர்களின் செயல் பிடிக்கும்.

என் வாழ்க்கையில் ஒன்றிப்போன தரகர்தெரு / கடல்கரைத்தெரு பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வாங்கும் காற்று பிடிக்கும்.

வெயில் கால வேப்பம்பூவின் வாசம் பிடிக்கும்.

மழையில் நனைந்து நடக்க பிடிக்கும்.

புதுக்கல்லூரி மெஸ்ஸில் ஞாயிற்றுக்கிழமை லன்ச் பிடிக்கும். பழைய உட்லேன்ட்ஸின் சைவம் பிடிக்கும்.


புதுக்கல்லூரி மெஸ்ஸில் ஞாயிற்றுக்கிழமை லன்ச் பிடிக்கும். பழைய உட்லேன்ட்ஸின் சைவம் பிடிக்கும்.

கடற்கரையில் உட்கார்ந்து சூரிய உதயம் பார்க்க பிடிக்கும்

இன்னும் எழுத நிறைய ஆசை...

Unknown சொன்னது…

ஷாகுல் காக்கா மனதை அள்ளிய ஆசைகள் ...

//நடு-இரவில் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம் பட்டினம்பைக்கில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வரும்போது அடிக்கின்ற குளிர் காற்றும் அதன் கூட வரும் வாசனையும் பிடிக்கும்...'''

அதுவும் பனிக்காலத்தில் ,நிலவின் ஒளியில் ,மேகத்தின் கொஞ்சலில் சொல்லிக்கொண்டே போகலாம் .

''30 கிலோ மீட்டர் வேகத்தில் ''

நீங்கள் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ..நானோ வண்டியை நிறுத்தியே இருக்கிறேன் நண்பர்களின் எரிச்சலோடு :)

எனக்கும் சிலமுறை இந்த அனுபவம் நடந்ததுண்டு .அதை தான் அதிரை நிருபரில் கி.மு .1825 வருடம் மார்கழி இரவில் என்று கற்பனையோடு எழுதினேன் .எதார்த்தமாக நான் எழுத அதில் "வேற தொனியில் " எழுதியதாக புரிந்து சில வரிகளை நீக்கினார்கள்(முழுதும் இப்போ என் தளத்தில்).

அடுத்தது நெய்னாவின் ஆசைகளோடு நானும் இருந்திருக்கிறேன் அதனால் எனக்கும் பொருந்தும் (எங்களின் வீடுகள் நேர் எதிரே ).....

ந‌ம்மூரின் வ‌ட‌கிழ‌க்கில் இருண்ட‌ வான‌ம் வ‌ர‌ இருக்கும் பெரு ம‌ழையை முன்பே சொல்லும். அத‌னால் வ‌ர‌ இருக்கும் ம‌திய‌ வேளை ப‌ள்ளி விடுமுறையை (அஞ்சி பிரியடு) ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ஞ்ச‌ராய்ப்போன‌ கால் ப‌ந்தை கிழித்தெடுத்து அதில் சொந்த‌மாய் செய்த‌ அட்ட‌பில்லில் கொக்கு ம‌டியான் அடிக்க‌ப்பிடிக்கும்.

புது துணி எடுத்து தெரு டைல‌ர் க‌டையில் தைக்க‌க்குடுத்து அது கிடைக்கும் நாள் வ‌ரை காத்துக்கிட‌க்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

தெரு வெல‌க்காரி ஆச்சியின் அனைத்து ப‌ண்ட‌ங்க‌ளையும் வீட்டு ப‌க‌ல் சாப்பாட்டையும் ம‌ற‌ந்து மேய‌ ரொம்ப‌ பிடிக்கும்.

வெளிநாட்டிலிருந்து வ‌ந்திற‌ங்கும் தெருவின் சொந்த‌ ப‌ந்த‌ வாலிப‌ர்க‌ள் போல் ஸ்டைல் ப‌ண்ண‌ ரொம்ப‌ பிடிக்கும்.

வீட்டில் வ‌ண்ண‌ கோழிக்குஞ்சுக‌ள் வாங்கி வ‌ந்து வ‌ள‌ர்த்து அதிலிருந்து முட்டையைப்பெற‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ள்ளி ஆண்டு விடுமுறையில் தெரு ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் சேர்ந்து குறைந்த‌ முத‌லில் (ஐந்து அல்ல‌து ப‌த்து ரூபாய்) கூட்டாண்மை வியாபாரமாய் க‌ட‌லை மிட்டாய், தேன் மிட்டாய், ச‌ர்ப‌த், மோர் க‌டை வைக்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

சைக்கிள் ஓட்ட‌வே தெரியாத‌ நேர‌த்தில் முத‌லில் கொர‌ங்கு பெட‌லில் ஓட்டிப்ப‌ழ‌க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ந‌ம‌து தெரு குள‌ங்க‌ளில் நேர‌ம‌றியாது ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் குளித்து கும்மாள‌ மிட‌ ரொம்ப‌ பிடிக்கும்.

நீச்ச‌ல் தெரியாத‌ நேர‌த்தில் த‌ன் வேட்டியையே முட்டைக்க‌ட்டி அதில் மித‌க்க‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ஓட்டு வீட்டில் அனும‌தியின்று உட்புகும் அந்த‌ சூரிய‌க்க‌திர்க‌ள் ரொம்ப‌ பிடிக்கும்.

ம‌ழைக்கால‌ தும்பி பிடித்து அத‌ன் வாலில் க‌யிறு க‌ட்டி ப‌ற‌க்க‌ விட‌ ரொம்ப‌ பிடிக்கும்.

தேர்த‌ல் நேர‌த்தில் க‌ட்சிக்கொடிக‌ளை வீட்டின் கொல்லையில் வந்து க‌ட்டி ம‌ன்ற‌ம் அமைத்து ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் அம‌ர்ந்து ம‌கிழ‌ ரொம்ப‌ பிடிக்கும்.

ச‌ண்டை ச‌ச்ச‌ர‌வுக‌ளும், க‌ட்சி, இய‌க்க‌ப்பாகுபாடுக‌ளும் குறைவாய் இருந்த‌ அந்த‌ கால‌த்தை ரொம்ப‌ பிடிக்கும்.

ப‌ண‌ங்காசுக‌ள் குறைவாய் இருந்தாலும் சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள் ஒன்றோடொன்று ஒட்டி உற‌வாடிய‌ அந்த‌ கால‌த்தை ரொம்ப‌ பிடிக்கும்.

Shameed சொன்னது…

ஆசைகளை அசை போட்ட அனைவருக்கும் நன்றி

Yasir சொன்னது…

எனக்கும் இது எல்லாமே பிடிக்கும் இத எழுதிய சாவன்னா காக்காவை ரொம்ப ரொம்ப்ப பிடிக்கும்

வியாபார விசயமாக நைஜீரியா பயணம் செல்வதால் அதிகமாக எழுதமுடியவில்லை ....இன்ஷா அல்லாஹ் அடுத்த வெள்ளிக்கிழமை சந்திப்போம்

sabeer.abushahruk சொன்னது…

அது இருக்கு ஒரு நீண்ட பட்டியல். நேரம் வாய்க்கும்போது பகிர்ந்துகொள்வோம்.

ஹமீதுவின் எழுத்தில் மெறுகு கூடியிருப்பதை உறுதி செய்கிறது இப்பதிவு.

மொட்டை மாடியும்
மல்லாந்த கிடப்பில்
வட்ட நிலாவும்
கற்றை ஒளியும்
சிதறிய நட்சத்திரங்களின்
கண் சிமிட்டலும்
காணப் பிடிக்கும்

sabeer.abushahruk சொன்னது…

விட்டுவிட்டுப் பெய்தாலும்
தூறல் பிடிக்கும்
சொட்டுச் சொட்டாய் வாய்த்தாலும்
சாரல் பிடிக்கும்

நண்பர்கள் உடனிருந்தால்
நன்பகலே யானாலும்
நட்டநடு வீதியில்
நடக்கப் பிடிக்கும்

சுத்தமான நகைச்சுவைக்கு
சத்தமாகச் சிரிக்கப் பிடிக்கும்

sabeer.abushahruk சொன்னது…

புன்னகைக்கும் முகம் பிடிக்கும்
புத்தகத்தின் அகம் பிடிக்கும்

நோன்பு திறந்த வாய்க்கு
நன்னாரி சர்பத் பிடிக்கும்
லுகருக்கு ஒளூச்செய்ய
ஹவுலுத் தண்ணீர் ரொம்ப பிடிக்கும்

சகருக்குத் தயிர் பிடிக்கும்
மஹருக்கு மணப்பவர் பிடிக்கும்
லுஹருக்குத் தொழுத பின்னர்
நித்திரைக்கு திண்ணை பிடிக்கும்

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

ஆசை


பற்றற்றத் துறவியும்
பற்றறுக்கப் பிறக்கும்
ஈரெழுத்து மந்திரம்
ஈர்த்திடும் தந்திரம்

தன்னம்பிக்கை மரத்தின்
தகர்க்கவியலாத ஆணிவேர்

வாழ்க்கை வணிகத்தின்
வட்டியில்லா முதலீடு

தாம்பத்திய இசையில்
தார்மீகச் சுருதி

அளவுக்கு மிஞ்சினால்
அஃதே நஞ்சாகும்
அளவோடிருந்தால்
ஆசையுன்னிடம் தஞ்சமாகும்

கடவுள் பக்திக்கும் ஆசை
காதலைச் சொல்லிடும் ஆசை
படிப்பின் பிடிப்பிலும் ஆசை
பணத்தின் தேடலும் ஆசை

ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்

Shameed சொன்னது…

//சகருக்குத் தயிர் பிடிக்கும்
மஹருக்கு மணப்பவர் பிடிக்கும்
லுஹருக்குத் தொழுத பின்னர்
நித்திரைக்கு திண்ணை பிடிக்கும் //

//ஆசையின்றி அகிலமும் அசையாது
ஆசைப்படுதல் ஆக்கத்தின் விசையாகும்//

ஆசை ஆசையாய் இருக்கின்றது
இரு கவிகளும் கலக்குவது

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும். பெரும் ஜாம்பவான்களெல்லாம் தமக்குப்பிடித்தை எழுதியப்பின் என்ன எழுத முடியும்? அவர்களுக்கு பிடித்ததை பிடித்தமாய் எழுதியிருக்க எனக்கு எழுதவே "கிலி"பிடிக்கிறது. காமிரா கவிஞரின் ரசனை பிடித்திருக்கு.கவிசக்கரவர்த்தி சபீர் காக்காவின் வரியில் தமிழ் பிடித்திருக்கு."நண்பர்கள் உடனிருந்தால்
நன்பகலே யானாலும்
நட்டநடு வீதியில்
நடக்கப் பிடிக்கும்" (எனக்கும் தான்).
---------
லுகருக்கு ஒளூச்செய்ய
ஹவுலுத் தண்ணீர் ரொம்ப பிடிக்கும்.

சகருக்குத் தயிர் பிடிக்கும்
மஹருக்கு மணப்பவர் பிடிக்கும்
லுஹருக்குத் தொழுத பின்னர்
நித்திரைக்கு திண்ணை பிடிக்கும் .
அட!,அட,அட வரிகளில் இந்தனை குளிர்சியா?
இதுக்கு பகராக கவிதை எழுத முடியுமா?
நித்திரைக்கு திண்ணை பிடிக்கும் சரி நீங்கள் திண்ணையில் எழுதினால் ரசிப்பதிலேயே
நித்திரை தொலைத்து ரசிக்கும் படி முத்திரை பதிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.