Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தடம்...! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | July 02, 2012 | , , , ,

ஆறாவது நாளானது அன்று
சூரியன் மறைந்து,
தொடர் மழை...
பள்ளியும் விடுமுறை
நான்காம் வகுப்பு
நண்பர்களோடு கும்மாளத்திலும்
வருத்தமொன்று தொற்றிட்டு
விடுமுறையே ஆனாலும் சூரியனின்றி
விளையாட்டும் ரத்தானது
நாளை விடியலில் சூரியோதயம்
நிச்சயம் எனும் நம்பிக்கையோடு கலைந்தோம் .

*****

அன்றிரவும் மழை
உறக்கமும் தொடர்ந்தது
விடியலில் அம்மா எழுப்புகிறாள் !
மறுத்து முரண்டு புறண்ட !
என்னை நெருங்கி
என் காதில் சொன்ன சங்கதி
என்றோ நான் கேட்ட
கேள்விக்கான பதில்
துள்ளி எழுந்து
எட்டு கதவுகள் கொண்ட
நீண்ட வீட்டை
புயலன கடந்து
கொல்லைபுரத்தை அடைந்தேன்...

******

ஆசையான கேள்விக்கு பதில்
மறுபடியும் எப்ப நிகழும்
எனத்  தெரியாது
அந்த கணங்களை மெல்ல
என் மனதில் பதிகிறேன்
மெதுவாக கொல்லைபுற
தரையில் காலடி பதிக்கிறேன்
சில்லென காற்று கன்னத்தை தழுவியது
வானம் பார்க்கிறேன் பிறந்த குழந்தையின்
உள்ளத்தினைப்போலே தெளிவாய்
எதிரே பெரியம்மா வீட்டின் மாடியில்
புகைகூடு புகைத்தது
அருகில் உள்ள மாமி வீட்டின்
கன்றுகுட்டி சப்தமிட்டுக் கொண்டிருந்தது
எங்கள் வீட்டு  வேலைக்காரி
அடுக்களையில்
சிரட்டையை வெடித்துக்கொண்டிருந்தாள்

******

மீண்டும் ஒரு அடி நகர்ந்தேன்...
விலாக்கொல்லையில் முருங்கை
மரம் குறுக்கிட்டது
உலுப்பினேன்
நேற்றுப்பெய்த மழையில்
பிடித்து வைத்த நீரையும்
உதிரும் பூக்களையும்  என்
முகத்தில் தெளித்திற்று...

*****

மீண்டும் ஒரு அடி நகர்ந்தேன்
புட்டு புட்டு என கொல்லை சந்தில்
புட்டுக்காரி கத்தினாள்
மீண்டும் அதை நோக்கி நெருங்குகிறேன்
அதன் பக்க வாட்டில் இருக்கும்
நண்பனின் வீட்டில் நண்பனின் தாத்தா
புகைத்த சுருட்டின் புகை மிதந்தது
நெருங்கிவிட்டேன்  அதை
அது
'என் முகத்தை மிகத் தெளிவாக
வானத்தின் பின்னணியில்
அழகாய்  காட்டிற்று '

என்றோ கேட்ட கேள்வி
இன்றைய தலைமுறைக்கு
கனவிலும் எட்டாத அந்த கேள்வி

'எப்போது நம் வீட்டின்
கிணறு தண்ணீரால்
நிரம்பி வழியும் ?'

இனி என்றும் கிடைக்காத பதில்
அன்று கிடைத்த பதில்
'எழுந்திரு தொடர் மழையில்
நம் வீட்டு கிணறு நிரம்பி வழிகிறது '

------------

இன்றுள்ள புதிய தலைமுறைக்கு
இந்த 'இதம் ' கிடைக்காத
காரணம் யாதோ ?

-Harmys

26 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனிமை!

இனி கனவில் தான் நினைக்க வேண்டும் இந்த இனிமையை!

இன்றுள்ள தலைமுறையல்ல!
நாளைய தலைமுறைக்கும் இதமாக சொல்லி விடு!
அப்துல் ரஹ்மான்!

அதிரை சித்திக் said...

வறண்ட பூமியை ....

வளமான பூக்கு இழுத்து செல்லும் கவிதை

ஐம்பது வயதை ஐந்தாக குறைத்தகவிதை

எனக்கு கிணற்று தண்ணியை கையால் தொட்ட

ஞாபகம் ..வாய்காலில் மீன் பிடித்து கிணற்றுக்குள்

விட்ட ஞாபகம் ..வீட்டு கொள்ளையில்

கிணற்றடி ..என்ற பகுதி ..சொல் காணாமல்

போய் ரொம்ப நாளாயிற்று .....

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மெல்ல நிமிர்ந்து கவிதையை படிக்க தொடங்கியதும் அதனூடே கலந்து அதன் அடிபற்றி தொடர்ந்து கொல்லைபுறம் சென்று... அங்கே பார்த்தால் என்னுள் ஊறிக்கொன்டிருந்த கிணறு கண்டதும். இவ்வளவு நாளாய் நாம் தினறி கொண்டிருக்கும் விசயத்தை கவிதையாக கிளறிவிட்ட அப்துற்றஹ்மானின் கவிதையில் ஈரம் சொட்டுகிறது! இது கவிதையாக இல்லாமல் நிசமாகிவிடக்கூடாதா? என ஏங்க வைக்கும்படி உள்ளது. கிணற்று வெள்ளத்தை எது அடித்துப்போகும் எனும் சொல்வழக்கும் மாறி மாரி மும்மாரிப்பொழிந்தாலும் நிரம்ப அங்கே கிணறு இல்லை இக்காலத்தில்.கிணறுவெட்ட பூதம் கிளம்பும் எனும் பழமொழியும் மாறிவிட்டு இப்போது நவீன பூதத்தால் கிணறு தொலைத்து நிற்கிறோம்.அருமையான சிந்தனை ஏக்கத்தை தூண்டிவிட்டது என்னவோ உண்மை.

Ebrahim Ansari said...

//விலாக்கொல்லையில் முருங்கை
மரம் குறுக்கிட்டது
உலுப்பினேன்
நேற்றுப்பெய்த மழையில்
பிடித்து வைத்த நீரையும்
உதிரும் பூக்களையும் என்
முகத்தில் தெளித்திற்று...// ஆஹா என்ன சுகம்? சுவை? சொற்கள் கூட சுவையும் சுகமும் தரும் என்பதற்கு தம்பி அப்துல் ரகுமானின் இந்த வரிகளே உதாரணம்.

மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

Brother அப்துல் ரஹ்மான், மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.


அதிரை சித்திக் அவர்களின்
அபூபக்கர் ரலி அவர்கள் பற்றிய கவிதை

http://penaamunai.blogspot.com/2012/07/3.html

KALAM SHAICK ABDUL KADER said...

//வானம் பார்க்கிறேன் பிறந்த குழந்தையின்
உள்ளத்தினைப்போலே தெளிவாய்//

வாவ்.. வாயைப் பிளக்க வைத்து
மூக்கில் கையை வைத்து
வானத்தைப் பார்க்க வைத்த
வர்ணஜாலமில்லா வைரவரிகள்...!!

மழையைப் பற்றி அடியேன்
28 ஜூன் 2012 அன்று என் வலைப்பூந் தோட்டத்தில் பதியமிட்ட கவிதையை இங்குப் பின்னூட்டமாக இடுகின்றேன்:


வியாழன், 28 ஜூன், 2012
துளி! துளி!! மழைத்துளி!!!

தூறும் மழைதான் துயரம் துடைக்கும்
மீறும் பிழையால் மிதமும் உடைக்கும்


இடைமழை வரம்தரும் இயல்பில் நல்லதாம்
அடைமழை நகரம் அழிப்பதில் தொல்லைதாம்


முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே


சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்
பாறை மேலே படரும் சந்தம்


உயிர்களும் மழையை உயிராய் எண்ணும்
பயிர்களும் மழையை பசியா(ற) உண்ணும்


வானம் அழுது வடித்து வழியும்
ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்


நிலத்தை மழைத்துளி நெகிழ்ந்து நிறைக்கும்
நலத்தை விதைத்திட நிலமும் சிரிக்கும்


மண்ணில் மழைத்துளி மலரும் வாசனை
எண்ணி மகிழ்வதால் இனிமை வீசுமே


பஞ்சமும் நாட்டில் பரந்துள பசியும்
அஞ்சியோர் வாழ்வில் அல்லலும் மசியும்


ஆற்றின் ஓட்டம் அழகுற நண்பன்
சேற்றில் நாட்டும் செயலில் வம்பன்


கடலின் நீரால் கருவாய்ப் பிறந்தான்
திடலின் சேறால் திருவாய்ச் சிறந்தான்


பிறந்த கடலில் பின்னர் மீட்சி
சிறந்த வாழ்வியல் செப்பும் சுழற்சி


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம், அலை பேசி: 00917200332169

sabeer.abushahruk said...

அழகு சொட்டுக்றது
முருங்கை மரத்தின்
பூக்களையும் மழைத்துளிகளையும்போல

வெளிச்சம் வியாபிக்கிறது
முழுநிலவின்
தெளிந்த ஒளியைப்போல

மணம் நிறைகிறது
அப்துர்ரஹ்மான் வீட்டு
விலாக்கொள்ளை கிணற்றைப்போல

மழைய
மொழியா
எது அழகு?
அ.ர வின் கிணற்றை நிறைத்த மழை அழகு.
அர்கலி பதிந்த அ.ர.வின் மொழி அழகு!

sabeer.abushahruk said...

அலைவரிசையிடம் ஒரு கேள்வி:

விலாக்கொள்ளை - "விலா" விளக்குக.
மழை நிரப்பும் வரை காத்திருந்தால் அதற்குப்பெயர் கிணறா?

கவியன்பனின் பின்னூட்டத்தில் ரெட்டைத் துளிகளாய்ப் பொழிவதும் மழைதானே?!!!

crown said...

முகிலும் முகிலும் மோதிடும் வேளையில்
திகிலும் மிகைத்திடும் திகில்தான் சூழுமே

சூறைக் காற்றுச் சுழலும் சொந்தம்
பாறை மேலே படரும் சந்தம்
---------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அட!அட!அடக்க முடியாத கவிமழையா? இது கவிகலாம்(காக்கா) மழையா?
இடைவிடாத அடமழயா?செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப மழைவந்து பாயிது நம் தளத்திலே!அற்புதம், பொற்பதம்.

அப்துல்மாலிக் said...

//புதிய தலைமுறைக்கு
இந்த 'இதம் ' கிடைக்காத
காரணம் யாதோ ?//
”கிணறு” என்ற ஒன்று வீட்டின் கொல்லைப்புறத்துலே இருந்தால்தானே, அட யாருப்பா அது கொல்லைப்புறமே இல்லைனு சொல்றது 

ZAKIR HUSSAIN said...

//வானம் அழுது வடித்து வழியும்
ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்//


"ஈனம் பொழுதில்" அப்டீனா என்ன?


இப்போதுதான் சகோதரர் கவியன்பனிடம் தொலைபேசியில் பேசினேன் ...ஒரே ஹாரன் சத்தம் ..கவியன்பன் சொன்னது ' நான் நம் ஊர் மார்கெட் ஏரியாவில் நிற்கிறேன் என்று..எனக்கு என்னவோ கார் எஞ்சினுக்குள் உள்ளிருந்து பேசுவது மாதிரி ஒரே ஹாரன் சத்தம். இந்தியாவில் ஹாரன் இல்லாவிட்டால் கார்கள் / ஆட்டோ எல்லாம் செயலிழந்து விடும்தானே?

Yasir said...

தென்மேற்க்கு பருவமழை 31% பொய்த்துவிட்டதாக சொல்கிறார்கள்...ஆனா அப்துல் ரஹ்மானின் கவிமழை தேவைக்கும் அதிகமாக இங்கே பொழிந்து நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலின் மல்லாக்கபடுக்க வைத்து இருக்கின்றது

//நேற்றுப்பெய்த மழையில்
பிடித்து வைத்த நீரையும்
உதிரும் பூக்களையும் என்
முகத்தில் தெளித்திற்று.../// என் நினைவலைகளை பிய்த்த்து கொண்டு கொட்டிவிட்டது

Yasir said...

///இந்தியாவில் ஹாரன் இல்லாவிட்டால் கார்கள் / ஆட்டோ எல்லாம் செயலிழந்து விடும்தானே?/// நம்மூரில் ரோட்டி போவோர் வருவோருக்கு “காது” ”கண்” செயல் இழந்து போனதால்தான் ஹாரனை ஆக்டிவாக வைக்கவேண்டி உள்லது...எருமைமாடு கூட கார்,பைக் வந்தால் ஒதுங்கிபோகும்..ஆனாம் நம்மாள்க்க ஹி ஹி ஹி ஹி

ZAKIR HUSSAIN said...

To Bro Harmy,

இப்படி வெளிநாடு வந்து நாம் தொலைத்த நினைவுகளை மறுபடியும் இணையம் வழி ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள்.

இளமையோடு ஒன்றிப்போன அத்தனை நிகழ்வுகளும் மறுபடியும் இப்போது எழுதிப்பார்க்கத்தான் முடிகிறது.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அப்துல்ரஹ்மனின் கவிதை பார்த்து பள்ளிப்பருவதில் துள்ளிகுதித்தடிய நியாபகங்கள் நானும் அதிரை சித்தீக்கும் கவலை மரந்து விலையாடிய விலையாட்டுக்கள் பட்டியலிடுகிரேன் மலரும் நினைஉகலில் மூழ்கிடுங்கள் 1வட்டக்கோடு 2.லாக்கு 3.பேந்தா(தும்கதடூக்குனது) 4.சபீட்டு 5.இச்சாஇனியா 6.கிலிதட்டு 7.கில்லிபிராந்து நன்பர்க்லே நியாபகம்வருதா நியபகம்வருதா

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர் சபீர்:
//கவியன்பனின் பின்னூட்டத்தில் ரெட்டைத் துளிகளாய்ப் பொழிவதும் மழைதானே?!!! //

என் கவிமழை, சீரான மழை (நான்கு சீர்களாலான ஈரடி (ரெட்டைத்துளி) மழை; மெல்ல வருடிச் செல்லும் தென்றலுடன் கூடியது மென்மை கவிஞர் அப்துற்றஹமான் உடையது (என் பெயரனுக்கும் இவரின் பெயரென்பதில் மட்டற்ற மகிழ்ச்சி)கண்களில் கவிஞர் அப்துற்றஹ்மானின் கவிமைழையும், செவிகளில் பெயரர் அப்துற்றஹ்மானின் மழலை மழையையும் ஒன்றாய் அனுபவித்துக் கொண்டு இப்பின்னூட்டம் இடுவதில் ஓர் அலாதியான இன்பம்!

அன்புச் சகோ. ஜாகிர். வியந்தேன்; விழித்தேன்;உங்களின் அழைப்பு மணியோசை நண்பகல் நேரத்தில் நண்பனின் தேடல் குரலில்; உண்மையில் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று ஊர் வந்த நாள் முதலாய் எண்ணினேன்;உங்கள் நட்பின் நிலைபேசியது உங்களின் அலைபேசியின் உரையாடல். நான் சொல்ல எண்ணியது: “நரகம் போன்ற நெருப்பாய் அதிரை வெயில் கொதிக்கின்றது” என்று கூறி கோபித்துக் கொண்டு போய்விட்டார் ஜாகிர் நான் வரும் வரை காத்திராமல்- உற்ற நண்பர் சபீரையும் தவிக்க வைத்து விட்டு; ஆனால், இன்று மிதமாகத் தானே வெயிலடிக்கின்றது.

“ஈனம் பொழுதில் இடிந்து ஒழியும்”
பொருள்: ஈனம் எனும் துன்பம்-சோகம் நொடிப்பொழுதில் இடிந்தொழியும்- மழைதான் அளவாய்ப் பொழியும் அவ்வேளையில்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தடம் அருமையான ஒத்'தடம்' !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

முகில் மூலம் முயல் வரைந்து
வான் வெளியில் மேயவிட்டு
கதிரவனை உறங்க வைத்து
அடுப்பங்கரை கருப்பை ஆகாயத்திலேற்றி
திடுக்கிட வைக்கும் இடியோசை எழுப்பி
வான்பிழந்து பல்லிளிக்கும் மின்னலைத்தந்து
வண்ணப்புடவையை வான‌வில்லாய் வளைத்து
குருவிகளை உடல் குலுங்க சிலிர்க்க வைத்து
நல்லோர் தீயோர் என பாகுபாடு ஏதுமின்றி
எல்லோருக்கும் வசந்தமாய் வானிலிருந்து
வந்திறங்கும் மழையே! இறைவனின் கொடையே!

ஊசி போட பயந்து ஓடி ஒளியும் சிறு பிள்ளை போல்
ஆழ்துளை குழாய் கண்டு அதளபாதாளத்தில் ஓடி ஒளிந்து
கொண்டது நம்மூர் நிலத்தடி நீர் மட்டம்.

வீட்டுக்கிணறுகள் தூர்க்கப்பட்டு அதன் வாளியும், கயிறு இறக்க பயன் படும் சக்கரமும் பழைய இரும்பு வியாபாரியிடம் கொடுத்து கடலை வாங்கி உண்டு வெகுநாட்களாகி இருக்கும் நம்மில் பெரும்பாலானோருக்கு.......அப்படித்தானே?????

அப்துல் ரஹ்மான் உன் கவிதைகளை படிக்கையில் வெகு எளிதில் நம் சிறு பிள்ளை விளையாட்டுப்பருவத்திற்கே சென்று விடுகிறேன்.......தொடரட்டும் உன் இத்தொண்டு......

Yasir said...

//நட்பின் நிலைபேசியது உங்களின் அலைபேசியின் // உளி வைத்து என் உள்ளத்தை செதுக்கியது இவ்வரிகள்...கலக்கல் கலாம் காக்கா

Shameed said...

இதமான திர்லிங் கவிதை எழுத்து நடை அழகு

ஒருமுறை தம்பி யாசிர் வீட்டு கொள்ளை கிணறு நிறைய வேண்டும் என்று ஊற்றுக்கண் திறக்காலாம் என்று கிணற்றுக்குள் இறங்கி கிணற்றை சுத்தம் செய்து கிணற்றுக்குள் கிடந்த செங்கர்க்களை எல்லாம் தண்ணீர் அல்லும் வாலியில் அள்ளி வைத்து மேலே நின்ற நண்பரை தூக்க சொன்னதும் அவர் அவசரமாக தூக்கியதில் பாதி கிணறு தாண்டிய செங்கற்கள் கிணற்றுக்குள் இருந்தா எங்கள் தலையில் கொட்டியது இன்றும் அதை மறக்க முடியாது.

இப்போதெல்லாம் கிணறுகளில் குப்பை நிறைந்து வழிகின்றது

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நண்பர் அப்துல் ரஹ்மான்,

//'எப்போது நம் வீட்டின்
கிணறு தண்ணீரால்
நிரம்பி வழியும் ?'//

சான்ஸே இல்லை... கிணறா? அப்படின்னா என்ன? என்ற சகோதரர் மாலிக்கின் கேள்வியை நானும் கேட்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் மஸ்ஜித் அருகிலிருக்கும் குளத்தில் சிறுவர்கள் குளித்துக்கொண்டிருப்பதை காணமுடிந்தது... கோடை காலத்தில் குளத்தில் தண்ணீரா என்று போறாமையுடன் ஏங்க வைத்து MSM நெய்னா அவர்களின் பதிவுகளே ஞாபகத்திற்கு வந்தது.

KALAM SHAICK ABDUL KADER said...

//இடைவிடாத அடமழயா?//
கவிதையாய் வாழ்வதாய்ப் புகழப் பெற்ற கவிஞர் “க்ரவுன்” நீங்கள் விடாத அடைமழை என்று நான் உங்களை அன்புடன் அழைக்கும் வண்ணம் வார்த்தைகளின் வானவில்லாய் , சிலேடைகளின் சிற்பியாய் இருக்கின்றீர்கள்!
என் கவிதைகள் விட்டு விட்டுப் பெய்யும் தூறல்.

Unknown said...

அஸ்ஸலமு அலைகும்
ஆம் எங்கள் வீட்டிலும் கினறு இருந்தது. ( என்னா உங்கள் வீட்டில் கினறா என்று தெரிந்தவர்கள் கேட்கக் கூடாது நான் சொல்வது எங்கள் பழைய வீட்டை) ஆனால் என்வயதில் நான் ஒருநாளும் அது நிறைந்து பார்க்கவில்லை.

//'எப்போது நம் வீட்டின்
கிணறு தண்ணீரால்
நிரம்பி வழியும் ?'//

சான்ஸே இல்லை... கிணறா? அப்படின்னா என்ன?

என்ற சகோதரர் தாஜிதீன் காக்காவின் வழிமொழிதல் கேள்விக்கு, நமது ஊரில் இன்றும் மழைகாலதில் நிறைகின்ற கினறு(கள்) உள்ளது. என்பது கூடுதல் தகவல்.

Unknown said...

(இனி கனவில் தான் நினைக்க வேண்டும் இந்த இனிமையை!)

(ஐம்பது வயதை ஐந்தாக குறைத்தகவிதை)

(இது கவிதையாக இல்லாமல் நிசமாகிவிடக்கூடாதா? என ஏங்க வைக்கும்படி உள்ளது)

(ஆஹா என்ன சுகம்? சுவை? சொற்கள் கூட சுவையும் சுகமும் தரும் )

(Brother அப்துல் ரஹ்மான், மாஷா அல்லாஹ் ! பாராட்டுக்கள்.)


(வாவ்.. வாயைப் பிளக்க வைத்து
மூக்கில் கையை வைத்து
வானத்தைப் பார்க்க வைத்த
வர்ணஜாலமில்லா வைரவரிகள்...!!

கண்களில் கவிஞர் அப்துற்றஹ்மானின் கவிமைழையும், செவிகளில் பெயரர் அப்துற்றஹ்மானின் மழலை மழையையும் ஒன்றாய் அனுபவித்துக் கொண்டு இப்பின்னூட்டம் இடுவதில் ஓர் அலாதியான இன்பம்!)


(மழைய
மொழியா
எது அழகு?
அ.ர வின் கிணற்றை நிறைத்த மழை அழகு.
அர்கலி பதிந்த அ.ர.வின் மொழி அழகு!)

(”கிணறு” என்ற ஒன்று வீட்டின் கொல்லைப்புறத்துலே இருந்தால்தானே, அட யாருப்பா அது கொல்லைப்புறமே இல்லைனு சொல்றது)

(என் நினைவலைகளை பிய்த்த்து கொண்டு கொட்டிவிட்டது)

(இளமையோடு ஒன்றிப்போன அத்தனை நிகழ்வுகளும் மறுபடியும் இப்போது எழுதிப்பார்க்கத்தான் முடிகிறது)

(அப்துல்ரஹ்மனின் கவிதை பார்த்து பள்ளிப்பருவதில் துள்ளிகுதித்தடிய நியாபகங்கள்)

(தடம் அருமையான ஒத்'தடம்' !)

(ஊசி போட பயந்து ஓடி ஒளியும் சிறு பிள்ளை போல்
ஆழ்துளை குழாய் கண்டு அதளபாதாளத்தில் ஓடி ஒளிந்து
கொண்டது நம்மூர் நிலத்தடி நீர் மட்டம்.)


(இதமான திர்லிங் கவிதை எழுத்து நடை அழகு )

(சான்ஸே இல்லை... கிணறா? அப்படின்னா என்ன? என்ற சகோதரர் மாலிக்கின் கேள்வியை நானும் கேட்கிறேன்)

(தாஜிதீன் காக்காவின் வழிமொழிதல் கேள்விக்கு, நமது ஊரில் இன்றும் மழைகாலதில் நிறைகின்ற கினறு(கள்) உள்ளது. என்பது கூடுதல் தகவல்.)


------------------------------------

நேரம் ஒதுக்கி ,படித்து ,கருத்திட்ட அனைவருக்கும் சலாமும் ,நன்றியும் .

பின் குறிப்பு : இந்த மாதிரி ''தடம்'' நிறைய வரணும் .இது கவிதை இல்லையென்றாலும் ஏதோ ஒன்று !.எடிடராக்கா நீங்கதான் வயதானவர்களிடமும் வாங்கி பதிவிடவும் .ஏதாவது நமக்கு தெரியாதது தெரியும் .

----------------------------------------------

//நண்பனின் வீட்டில் நண்பனின் தாத்தா
புகைத்த சுருட்டின் புகை மிதந்தது//

யார் இந்த அப்பா ?

தாஜுதீன் ,அபு இபுராஹிம் காக்கா ,Msm நெய்னா ,சபீர் காக்கா(திருப்பூர் ) ,அமேசான் அபூபக்கர் ,ஜகாபர் ,சித்திக் சாச்சா ,
தெரிந்தால் சொல்லுங்கள் .

Yasir said...

//எங்கள் தலையில் கொட்டியது இன்றும் அதை மறக்க முடியாது// ஓ அப்படியா சாரி காக்கா....இன்னும் எங்கள் வீட்டில் கிணறு உள்ளது....மழை காலங்களில் நீர் மட்டம் தரையள்வு கூட வந்துவிடும்...இங்க உள்ள கிணறு பார்க்கும் ஆர்வத்தை பார்த்தா...நுழைவுசீட்டு போட்டு ஒரு சின்ன பிசினஸ் ஸ்டார்ட் பண்ணிவிடலாம் என்று நினைக்கின்றேன்...கிணறு பார்க்க அணுகவும்.....பம்பாய் நானா அப்துல் ரெஜாக் கடற்கரைத்தெரு
சகோ.தாஜூதீன் நீங்கள் முதல் கஸ்டமரா “பிஸ்மி” சொல்லி ஆரம்பிங்க

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு