Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் - தொழில் முனைவோர் ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2012 | ,


அதிரை சகோதரர்களின் புதிய தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் முதலில் தாஜ்மஹால் பேக்கரி பற்றிய தகவல்கள் பதிந்திருந்தோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதாற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.

வெளிநாட்டு பொருளீட்டல் மட்டும் தான் நம் வாழ்வாதாரம் என்ற நிலையை மாற்றியமைத்துவரும் இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும். 


சென்னையில் அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் என்ற ஒரு ஸ்தாபனம் கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர்களில் ஒருவர் H. சேக் இஸ்மாயில், வெளிநாடுகளில் வேலை செய்தவர், கடைசியா துபாயில் இருந்த வேலையை விட்டுவிட்டு சென்னையில் இவ்வாறான ஸ்தாபனத்தை நண்பர் மற்றும் சகோதரருடன் இணைந்து நடத்திவருகிறார்.

சென்னை வாழ் அதிரைவாசிகள் இது போன்ற உள்ளூர்க்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும்.

அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் சிறப்பம்சங்கள்.
  • தரமான மளிகை சாமான்கள்,
  • வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்
  • சோப்பு, ஷாம்பு மற்றும் அனைத்து வகையான காஸ்மெடிக்ஸ் பொருட்கள்
  • தரமான பேரிச்சம்பழம், பாதம், பிஸ்தா வகைகள்
  • உயர்தர கடல்பாசி, ஏலக்காய், முந்திரி, கிராம்பு, பட்டை வகைகள்
  • வகைப்படுத்தப்பட்ட அரிசி வகைகள்,
  • சுத்தமான எண்ணை வகைகள்
  • நாட்டு மருந்து வகைகள்.

மேலும் பலச்சரக்கு சாமான்கள் வீடுகளுக்கு பயனுள்ள, சமையல் பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறது. 

அனைத்து பொருட்களும் மொத்தமாகவும் சில்லைறையாகவும் வாங்கி செல்லலாம். 

இலவசமாக டோர் டெலிவரி சென்னை மண்ணடியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதி இல்லங்களுக்கும் செய்கிறார்கள்.

கூடுதலாக அதிரையில் கல்யாண வீடுகளுக்கு, அல்லது அவர்களின் மாதாந்திர கொள்முதல்களுக்கான மளிகை சாமான்கள் ஆர்டர் செய்தால் அதனை அதிரையில் உங்கள் வீடுகளுக்கே டோர் டெலிவரியும் செய்துவருகிறார்கள்.



மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

சேக் இஸ்மாயில்
அதிரை டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்ஸ்,
ஓலக்கடை மார்கெட், அங்கப்பன் நாயக்கன் தெரு, மண்ணடி, சென்னை – 1.
அலைபேசி எண்கள்: +91 7708622087, 9791540536

சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்பேம் இன்ஷா அல்லாஹ் !

அதிரைநிருபர் குழு

19 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ்!!!

மள்ளிகைக்கடை சாமான்கள் என்பது வருடத்தின் அனைத்து நாட்களிலும் சைவம், அசைவம் சாப்பிடுபவர்களால் எவ்வித சீசன் (பருவ நிலை) இல்லாமல் அனைத்து மக்களாலும் விடுமுறையின்றி பயன்படுத்தப்படக்கூடிய அத்தியாவசியப்பொருட்களாகும். இதில் நல்ல பராமரிப்புடன், கடன்கள் அதிகம் வெளியில் சென்று விடாமலும், காலாவதியான பொருட்கள் மற்றும் எலிகளின் மூலம் சேதாரம் வராமல் கவனத்துடன் பார்த்து வந்தால் இன்ஷா அல்லாஹ் நாம் இதில் வெற்றியடைந்து நல்ல லாபம் ஈட்டலாம். (ஒருபுறம் கடை வேலைகளிலும் மறுபுறம் பாஸ்போர்ட்,விசா ஸ்டாம்பிங் வேலைகளிலும் கவனம் செலுத்தும் பொழுது தான் இதில் நம் மக்கள் தன் லாப இலக்கை அடைய முடிவதில்லை). நம் ஊர்லேயே முன்னூத்தம்பது மளிகைக்கடைக்கு மேல் இருப்பதாக சொல்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ந‌ண்ப‌ர் சேக் இஸ்மாயிலின் இந்த‌ புதிய‌ ஸ்தாப‌ன‌ம் வெற்றிய‌டை என் து'ஆவும் வாழ்த்துக்க‌ளும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

மாஷா அல்லாஹ்!!!அல்லாஹ் மேலும் அருள் செய்வானாக

தலைத்தனையன் said...

Alhamdulillah. Good effort. May Allah bestow his success to these brothers in both the worlds.

MOHAMED THAMEEM

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்ஹம்துலில்லாஹ் !

நாம் வாழ்த்துகள் தெரிவிக்காமல் இருந்தால் எப்படி !

எல்லாம் வல்ல அல்லாஹ் மேலும் நல்லருள் புரிவானாக !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஆரம்ப காலங்களில் அதான் கலியாண முடிச்ச புதுசுலெ நண்பர் ஷேக் இஸ்மாயில் அவர்கள் சென்னை மண்ணடியில் எஸ்.டி.டி. பூத் (காண்பரஸ் காலிங்) வைத்து நல்லபடி நடத்தி வந்தும் பிறகு இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சம்பழ (ஃபேன்சி டேட்ஸ்) பேக்கட் விற்பனையும் நல்ல முறையில் சென்னையில் செய்து வந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. நாம் நம் தாய் நாட்டில் வியாபாரம் தொடங்கி அதில் காலூன்றி ஒரு ஸ்திர நிலையை அடைய வீட்டில் நம் பெற்றோர்கள், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும், உற்சாகப்படுத்தும் மனோபாவமும் மிக, மிக அவசியம். உற்சாகமே நல்ல ஊட்ட டானிக்".

சிலரிடம் போதிய பண வசதி இருக்கும். ஆனால் வீட்டினரிடம் சில்லரைக்காசுக்கு கூட உற்சாகப்படுத்தும் மனப்பான்மை இருக்காது. சிலரிடம் போதிய பண வசதி இருக்காது. ஆனால் அவர் வீட்டினரிடம் உற்சாகம் குவியலாய் கொட்டிக்கிடக்கும் இப்படி "கண்ணான வாப்பா, இப்புடீ வெளிநாடு, வெளிநாடுண்டு காலமெல்லாம் ஓடிக்கிட்டே இருக்கியேம்மா. ஊர்லெ எதாச்சும் வியாபாரம்/தொழில் ஆரம்பிக்கக்கூடாதா? ஒன்னையே ஊர்லேயே கடைசி வரைக்கும் வச்சிப்பாக்க ஆசையா இருக்குதும்மா" என்று வீட்டுப்பெரியவர்கள் வாயார வாழ்த்துவார்கள். ஆனால் பாவம், குடும்ப சுமை/சூழ்நிலை, போதிய பண வசதியின்மையால் நம் மக்களில் பலர் வெளிநாட்டிற்கு வெருண்டோடி விடுகின்றனர் (என்னையும் சேர்த்துத்தான்)......

ஒரு தடவை வெளிநாட்டுக்காக பொட்டியே தூக்கிட்டோம். அவ்வளவு தான், பிறகு ஊரில் ஒரு பொட்டிக்கடை வைப்பதற்கு கூட ரொம்ப சிரமமான காரியமாகிவிடுகிறது.

அல்லாஹ் தான் நம் நல்ல பல ஆசாபாசங்களையும், ஹாஜத்துக்களையும் நிறைவேத்தனும்....ஆமீன்...

sabeer.abushahruk said...

மாஷா அல்லாஹ்!!!அல்லாஹ் மேலும் அருள் செய்வானாக

zubair said...

ஜுபைர் துபையிலிருந்து

அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹ் இந்த வியாபாரத்தில் இவருக்கும் இவரைப்போன்று ஊரில் சொந்த தொழில் செய்யும் இவருடைய சகோதரர்க்கும் அபிவிருத்திருத்தியைக் கொடுப்பானாக ஆமீன்.

வஸ்ஸலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நண்பர் சேக் இஸ்மாயிலின் வர்த்தகம் சிறக்க வாழ்த்தும் துஆவும்.

சேக் இஸ்மாயில் அலைபேசி எண்ணில் ஒரு இலக்கம் 0 விடுபட்டுள்ளது. சரியான எண் 7708622087
( கடை விளம்பர பலகையில் சரியாக உள்ளது)

அதிரைநிருபர் பதிப்பகம் said...

சகோதரர் MHJ:

ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

திருத்தம் பதிவுக்குள் !

Yasir said...

நல்லாயிருங்க அல்லாஹ்வுடைய உதவியால்

STAR GROUP said...

மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

Ebrahim Ansari said...

WISHING AND PRAYING FOR ALL THE BEST.

crown said...

aSSalaamualaikkum.மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!

Anonymous said...

மாஷா அல்லாஹ்! வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் said...

நண்பன் சேக் இஸ்மாயிலின் உள்நாட்டிலேயே தொழில் தொடங்கி நல்லபடியான செய்தும் இருக்கார், இந்த வாய்ப்பு/சப்போர்ட் சில பேருக்கு மட்டுமே கிட்டும், வல்ல இறைவன் தொழிலில் பரக்கத தருவானாகவும்.. ஆமீன்..

சேக்கனா M. நிஜாம் said...

மாஷா அல்லாஹ் !

வாழ்த்துகள்...!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அல்லாஹ் மேலும் அருள் செய்வானாக..

KALAM SHAICK ABDUL KADER said...

//வெளிநாட்டு பொருளீட்டல் மட்டும் தான் நம் வாழ்வாதாரம் என்ற நிலையை மாற்றியமைத்துவரும் இன்றைய இளைய சமுதாயத்தினரை நாம் நிச்சயம் வரவேற்பதிலும் ஊக்கப்படுத்துவதிலும் முன் நிற்க வேண்டும். //

வாழ்க! வளர்க!!
வாழ்த்துவோம்

இப்படிப்பட்ட நன்முயற்சியால் நம் எதிர்கால சமுதாயம் கந்தக பூமியில் வெந்து மடிவதை விட்டும் சுதந்திர இந்தியாவில் சுயமாய்ப் பிழைக்கத் துணிவுடன் செயல்பட முன்னுதாரணம்; அஃதே இக்கட்டுரையின் காரணம்!

GEXP Financial Expert said...

உங்களை போன்று சுயா தொழில் செய்ய வாலிபர்கள் முன் வர வேண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

மளிகை கடை துவங்க வேண்டும் யாராவது நண்பர்கள் உதவி செய்யுங்கள்.

mail - karthikeyanb2a@gmail.com
call - 9940583789

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு