Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொறாமை !!! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 21, 2012 | , ,


தாம் அடையாத ஒன்றை பிறர் அடையும்போது ஏற்படுகின்ற வெளிப்பாடு “பொறாமை” என்னும் சிந்தனையாக ஒருவரின் மனதில் ஆழமாக உருவாகின்றது. தான் ஏதே பல நூற்றாண்டுகள் இத்துனியாவில் வாழப் போகின்றோம் என்ற எண்ணத்தில் புதுசா புதுசா இதுபோன்ற தீய சிந்தனையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்கின்றனர். இது அவர்களை அழிவின் பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை போலும்.....

அதிரையில் வசிக்கும் ஒருவர், மலேசியாவில் வசிக்கும் ஒருவரைப் பார்த்து பொறாமைக் கொள்வதில்லை.....மாறாக ஒருவர் மற்றவரோடு தொடர்பில் உள்ளவர், அருகில் வசிப்பவர், உறவினர்கள், தொழில் சார்ந்தவர்கள் போன்றவர்களாகவே இருப்பர்.

1. ஒருவர், பிறரிடம் உள்ள “வளர்ச்சி”யைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.

2. பிறர், எளிமையான ஒருவரிடம் உள்ள “நிம்மதி”யான வாழ்வைக் கண்டு பொறாமைக்கொள்பவரும்.

3. நான் தான் “நம்பர்  1” னாக இருக்க வேண்டும், பிறர் நம்பர் 1” னாக வர எனக்கு பிடிக்காது என மனக்கணக்கு போடுபவர்களும்.

4. தன்னால் முடியாத ஒன்றை அவன் சாதித்து விட்டான். அவனை எப்படியாவது “வீழ்த்திக்” காட்டுகிறேன் பார் என சபதம் எடுப்பவர்களும்.

5. எனக்கு “அந்த பொருள்” கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அண்டை வீட்டுக்காரனுக்கு அறவே கிடைக்க கூடாது என்ற சிந்தனைக் கொண்டோரும்.

6. “ஆ” அவளிடம் பார்.....அழகிய புடவைகள், நகைகள் இருக்கின்றன என பெருமூச்சு இடுபவர்களும்.

7. அவனுக்குப் பார், சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்.

8. அவரின் மிகப்பெரிய வீட்டைப்பார். அழகிய தோற்றம், அதில் விலை உயர்ந்த சாதனங்கள், புதிய மாடல் கார் போன்றவற்றை எண்ணி வேதனைப்படும் “ஜெலஸ்”களும்.

9. என் கண் காணப் பிறந்த அந்தப் பொடியனைப்பார். தன் இளம் வயதில் என்னை வீட பெரிய “ஆளா”யிட்டான் என கர்வங்கொள்ளும் பெரிசுகளும்.

10. நான் தான் அந்த “தலைமை”ப் பதவிக்கு தகுதியானவன். ஆதலால் இப்போட்டிக்கு பிறர் வரக்கூடாது என்ற பேராசையில் "ஜிக் ஜாக்"காக செயல்படுவோரும்.

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

“பல்லு” இருக்கிறவன் தட்டில் வைக்கும் “பக்கோடா”வை முழுவதும் சாப்பிடுகிறான் என்றால் அவனுக்கு மென்று தின்பதற்கு இலகுவாக “ஈ” என்று இளித்துக்கொண்டு இருக்கும் அழகிய, வலிமையான பற்கள் இருக்கின்றன. அதுக்கு நாம் ஏன் பொறாமைக்கொள்ள வேண்டும் !?

நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருத் தனித் தன்மையை “அல்லாஹ்” நமக்கு வழங்கியுள்ளான். அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. 

( நபியே ! ) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். ( திருக்குர்ஆன் 20:131 ) 

“நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது ” ( நூல்: அபூதாவூத் ) 

“தான்” என்ற அகந்தை நம்மிடம் அறவே அறுபட்டு, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெருக்கிக்கொள்ள உங்களிடம் உள்ள “பொறாமை” என்னும் உணர்வு சற்று விலகிக் காணப்படவேண்டும். இதற்கு உங்களை பொறாமைக் கொள்ளத் தூண்டுபவர்களின் நற்சிந்தனைகள், நற்செயல்கள், அவர்களின் வெற்றி, அவர்களின் ஒழுக்கம், அவர்களின் தானம், அவர்களின் தொழில், அவர்களின் ஈமான் போன்றவற்றை மனதார குறிப்பாக போலித்தனம் இல்லாமல் பாராட்டி மகிழுங்கள். நீங்கள் கண்டிப்பாக அவரின் மனதில் நிலையாக இடம் பெறுவதோடு மட்டுமல்லாமல் அவரும் உங்களிடம் வசப்பட்டு விடுவார்.

பொறாமைக்காரர்களின் “பொறாமை” எனும் கொடிய தீங்கிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! என்று “துஆ” செய்தவனாக.!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

9 Responses So Far:

Ebrahim Ansari said...

தேவையான நேரத்தில் தேவையான கருத்து முத்துக்கள். அதன் பெயர்தான் ஷேக்கனா நிஜாம். பாராட்டுக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பொறாமைக்காரர்களின் “பொறாமை” எனும் கொடிய தீங்கிலிருந்து எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! என்று “துஆ” செய்தவனாக.! - இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொறாமையின் 'டாப்' 10
பொறுமையான பதிவு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் நிஜாம், ஜஸக்கல்லாஹ்...

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) -- குர்ஆன் 113:5

KALAM SHAICK ABDUL KADER said...

//அவனுக்குப் பார், சொகுசான வேலை, கைநிறைய சம்பளம் எனக்கு ஒன்றும் அமைய வில்லையே ! என்ற வெறுப்பை வெளிப்படுத்துபவர்களும்.//

உண்மையிலும் உண்மை “விழிப்புணர்வு வித்தகர்” சேக்கனா நிஜாம் சொல்வது சொக்கத் தங்க நிஜம்!

Anonymous said...

போட்டி பொறாமை இருக்கும் வரையில் யாருக்கும் மனநிறைவு உண்டாவதில்லை,அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானா.

sabeer.abushahruk said...

இந்த ஆமை - பொறாமை மனத்துள் புகாமல் காத்தல் நலம்.

நன்றி தம்பி நிஜாம்

Unknown said...

அவசியமான கட்டுரை தந்தமைக்காக
சகோதரர் சேக்கனாவுக்குப் பாராட்டுகள்!

பொறாமை இரு வகையான தாக்கங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிறது

1. வளர்ச்சி
2. அழிவு

இந்த இரண்டும் நேர் எதிராக இருப்பதுதான் பொறாமையின் சிறப்பு.

ஒருவன் பொறாமை கொள்ளும்போது
தான் அவன்போல் வளரவேண்டும் என்று ஏங்குகிறான்.
அந்த ஏக்கம் அவனை வளரச் செய்கிறது
வளர்ந்து நிற்பவனிடமிருந்து கற்றுக்கொள்ளப் பார்க்கிறான்
வளர்ந்து நிற்பவனை ஓர் இலக்காக வைத்துக்கொண்டு
அவன்போல அல்லது அவனையும் மிஞ்சி
தானும் வளரவேண்டும் என்று நினைக்கிறான்.
இது அவனுக்கும் சமுதாயத்திற்கும் நல்லதைச் செய்கிறது.
ஆகவே இவனது பொறமை நல்ல பொறாமை!

இன்னொருவன் பொறாமை கொள்ளும்போது
அவன் மட்டும் அனுபவிக்கிறானே என்று கொதிக்கிறான்
அப்படி கொதிக்கும்போது தான் வளர்வதை விட்டுவிட்டு
வளர்ந்து நிற்பவன் அழிய வேண்டும் என்று நினைக்கிறான்.
அதற்கான அத்தனை தீங்கையும் செய்யத் துணிகிறான்
எந்தத் தீங்கும் செய்யமுடியாத பட்சத்தில்
வயித்தெரிச்சல் பட்டாவது கண்வைத்து அழிக்கிறான்
அவனும் வாழாமல் வளர்ந்தவனையும் வாழவிடாமல்
மிகப்பெரும் அழிவினை தனக்கும் வளர்ந்தவனுக்கும்
வளரும் சமுதாயத்திற்கும் செய்கிறான்

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

முயல் ஆமையை வென்றதை
மூன்றாம் வகுப்பில் படித்தும்
முயலாமையால் உறக்கத்தில் இருந்து
முன்னேறியவர் மீது வெறுப்புடன்
“பொறாமமை”க் கொள்வோரின்
கண்பட்டதால் பட்ட வேதனை
கண்டு துடித்த வேளையில்
நிஜாம் கட்டுரை
நிஜம் என உரைத்தது!

என்னைப் பார்த்து ஊரில் “சும்மா” சுற்றிக் கொண்டிருக்கும் என் முன்னாள் வகுப்புத்தோழன் சொன்னான்,”யு.ஏ.இ. நிர்ந்தர சிடிசன் ஆயிட்டாயா?”என்று.என்ன ஒரு “பொறாமை”! எத்துணை காழ்ப்புணர்ச்சி!!
ச்சீ ச்சீ இவனெல்லாம் அந்தப் பொறாமை எனும் தீயினால் மேலும் அழிவான் தானே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு