Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறுப்பும் ஊடக மரபன்றோ ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 20, 2012 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நிலாவை காட்டி உணவு ஊட்டியது அந்தக் காலம் ஆனால் இன்றோ வெள்ளி நிலா என்ற பத்திரிகை மாட்டிறச்சியை சமைத்து ஊட்டி விடுவதற்கு ஒரு அதிரை இணைய தளமென்ற பெயரில் ஒரு செய்தி பதிந்து அதிரைநிருபர் வலைத்தளம் மீது அப்பட்டமான அவதூறு சொல்லியிருப்பதை வன்மையாக மறுக்கிறோம்.

மறுப்பென்பது இறுமாப்பாகிவிடாது ! நெஞ்சுறுதி கொண்ட எவறும் இதைத்தான் செய்வர்…


இதுதான் எங்கள் நிலை !

அதிரைநிருபர்.in வலைத்தளம் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கு எதிரானது போன்ற மாயைகூட்டி அதிரை சகோதரர் நிஸார் அஹமது அவர்களால் வெள்ளிநிலா என்ற மாத இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு விளக்கமளிப்பது எம்முடைய கடமை. அதனால் தான் மாட்டுகறிவிவகாரத்தில் நாம் தலையிடுகிறோம்.

துவக்க நாள் முதல் அதிரை சார்ந்த அன்றாட செய்திகள் அனைத்தையும் அதிரைநிருபர் வலைத்தளத்தில் காண்பது மிக அரிது என்பதை இணைய வாசகர்கள் அறிவர். இருப்பினும், பெரும்பாலான வாசகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று அதிரை சார்பு செய்திகளை பதிவதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருந்தும் பல்வேறு மட்டுறுத்தலுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் இடையே அவ்வப்போது முக்கிய செய்திகளையும் பதிந்து வருகிறோம்.

மாட்டுக்கறி அறுப்பது / விற்பது தொடர்பான சர்ச்சை இப்போது உதித்ததல்ல இது கடந்த சில மாதத்திற்கு மேலாக ஆரம்பமானது, அரசியல் காரணங்களால் / அல்லது வேறு காரணங்களால் மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் சகோதரருக்கும் போரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும் உள்ள பிரச்சினைகள் என்றே எங்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை மட்டுறுத்திக் கொண்டு அதிலிருந்து ஒதுங்கியே இருந்தோம்.

இதன் தொடர்ச்சியாக நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் அமைதியான சூழலில் இருக்கும் நம் அதிரைச் சகோதரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் எழுந்ததன் விளைவே இவ்விசயத்தில் கவனம் செலுத்த உந்தப்பட்டோம். போரூராட்சி நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் தக்வா பள்ளி மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக சம்பத்தப்பட்ட மட்டு இறைச்சி விற்கும் சகோதரர் சாகுல் ஹமீத் அவர்களை அதிரை சார்புடைய வலைத்தளங்களுக்கு (அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட்) செய்திகள் சேகரித்து தரும் சகோதரர்கள் அனைவரும் சந்திக்க சென்றார்கள். 

அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் போரூராட்சி அதிகாரிகளின் அனுகுமுறை மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார், அப்போது இப்பிராச்சினைக்கு பல காரணிகளில் அதில்முன்னிருத்திய காரணம் பாசீச தீய சக்திகளின் சூழ்ச்சியின் விளைவால் காட்டப்பட்ட ஆதாரம். இதனை இப்படியே விட்டு மவுனம் காத்தால் பாசீச தீயசக்திகளின் ஆளுமை தலைதூக்கும் அதனை தவிர்க்கும் விதமாகவே சகோதரர் சாஹுல் அவர்களின் வாய்மொழியாக அளித்த பேட்டியை காணொளியாக பதிவெடுத்து அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட் வெளியிட்டோம். அதில் தனிமனித தாக்குதலோ, அவதூறு பேச்சே இல்லை, அந்த காணொளி செய்தியை சகோதர வலைத்தளங்களும் அவரவர் நெறிமுறைகளுக்கு உட்பட்டே எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாமல் வெளியிட்டார்கள்!

மாட்டுக்கறி தொடர்பாக தமுமுகவினர் ஒட்டிய கண்டன போஸ்டருக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் நிலைபாட்டையும் அதிரை வலைத்தளங்களுக்கு செய்திகள் சேகரித்து பதிந்துவரும் சகோதரர் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி பேட்டியினை சகோதர வலைத்தளமான அதிரை எக்ஸ்பிரஸில் பதிந்துள்ளார், அதை அதிரை.இன் மற்றும் அதிரை போஸ்ட் தளத்தினர் வெளியிட்டனர். அதே காணொளி பேட்டியினை அதிரைநிருபர் வலைத்தளத்திலும் பதிவதற்கென்று பகிர்ந்தளிக்கவில்லை அவ்வாறு அனுப்பித் தந்திருந்தால் கட்டாயம் பேருராட்சி மன்றத் தலைவரின் தன்நிலை விளக்கத்தையும் பதிவுக்குள் கொண்டு வந்திருப்போம். அவ்வாறு ஏதும் வேண்டுகோள் வரவில்லை.

பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களின் பேட்டி காணொளியில் த.மு.மு.க.வினர் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கியிருந்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற கேள்விக் கனைகளும் எதிர்ப்பார்ப்பும் அதிரை மக்கள் மத்தியில் எழுந்தது.

குற்றச்சாட்டுகளுக்கு தமுமுக சகோதரர்களின் விளக்கங்களை அதிரையின் அனைத்து தளங்களிலும் (அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட்) போடுவதாகவே செய்தி சேகரிக்க சென்றவர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. போரூராட்சி தலைவரின் பேட்டியை வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸ் தளம், இப்படி மாறி மாறி பேட்டி வெளியிட்டுக்கொண்டிருந்தால் சரிபட்டுவராது என்ற முடிவுடன் தமுமுக நிர்வாகிகளின் காணொளி பேட்டியை அவர்கள் வெளியிடவில்லை. இதே முடிவில் அதிரை.இன் இருந்திருக்கலாம். ஆனால் அதிரை போஸ்ட் தளம் இந்த காணொளியை வெளியிட்டது. ஒன்று மட்டும் நிச்சயம் தமுமுக நிர்வாகிகளின் பேட்டி அதிரைநிருபர் வலைத்தளத்தின் சார்பாக மட்டும் எடுக்கப்பட்டதல்ல என்பதை  ஞாபகமூட்டுகிறோம்.

அனைத்து வலைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் ஒன்றிணைந்து செய்தி சேகரித்து அனைத்து தளங்களிலும் வர இயலாத சூழலிலும், தமுமுக பேட்டியை பேட்டியை தொடர்ந்து வந்த பின்னூட்டங்களும் மின்னஞ்சல்களும் நம்மை இவ்விசயத்தில் மீண்டும் கவனம் செலுத்த தடை செய்தது. நம் சகோதரர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை ஊதி பெரிதாக்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில்  மாட்டுகறி பிரச்சினை செய்திகளை இனி அதிரைநிருபரில் பதிவதில்லை என்று முடிவு செய்து மவுனம் கத்துவந்தோம்.

பின்னர் பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் வடிவேலு என்பவரை எடுத்த பேட்டியை அதிரை போஸ்ட் தளத்தில் வெளியிட்டார்கள், அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிடவில்லை. அதிரைநிருபரில் பதியுமாறு எந்த ஒரு வேண்டுகோளும் அஸ்லம், அதிரை போஸ்ட், நிஸார் ஆகியோரிடமிருந்தோ வரவில்லை, 

இந்நிலையில் மக்கள் உரிமையில் அஸ்லம் பற்றி செய்தி வெளியானதை தொடர்ந்து அஸ்லம் மீண்டும் ஒரு பேட்டி சேக்கன்னா M நிஜாம் அவர்களிடம் கொடுக்கிறார். (இவ்வாறான பேட்டிகள் பற்றிய விசயத்தில் இவர்கள் மாறி மாறி பேட்டி கொடுப்பார்கள் ஆதலால் தமுமுக பேட்டியை போடவில்லை என்று விளக்கம் கொடுத்த நம் சகோதர வலைத்தளம்) மக்கள் உரிமைக்கு மறுப்பு பேட்டியை வெளியிட்டு தங்களின் நிலையை நிலைநாட்டிக் கொண்டார்கள். இந்த பேட்டியை அதிரை போஸ்ட் மற்றும் அதிரை.இன் தளங்கள் வெளியிட்டார்கள்.

பிறகு தமுமுக நிர்வாகிகள் அவர்களாகவே அஸ்லம் அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் ஒரு பேட்டியை வெளியிட்டார்கள்,, இந்த பேட்டியை அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் தளங்களில் வெளியானது. 

முதல் பேட்டி பட்டுக்கோட்டை பாசீச சக்திகளின் சூழ்ச்சிக்கு நாம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்றே ஒரே காரணத்திற்காக, சகோதரர் ஷாஹுல் ஹமீத் அவர்களின் பேட்டியை அனைத்து வளைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் சேர்ந்து சேகரித்து வெளியிட்டோம், பின்னர் அஸ்லம் அவர்களின் பேட்டிக்கு மறுப்பு பேட்டியை வளைத்தள செய்தி சேகரிப்பாளர்களும் சேர்ந்து சேகரித்தோம், ஆனால் வெளியிட்ட தளங்கள் அதிரைநிருபர் மற்றும் அதிரை போஸ்ட்.

அதிரையில் வலுவான ஊடகம் தேவை என்ற நன்னோக்கில் அதிரைநிருபர், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் ஆகிய தளத்தின் செய்தி சேகரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்படலாம் என்ற முயற்சி, சகோதரர்களின் ஒத்துழைப்பின்மையால் மாட்டுக்கறி விசயத்தில் அதன் சுயரூபம் வெளியானது. மாட்டுகறி நிகழ்வு அதிரையின் ஒட்டுமொத்த ஊடக பலத்தை நிலைநாட்ட கிடைத்த வாய்ப்பு தடுமாற்றத்துடன் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு(ம்) இதே அரசியல் விளையாட்டு சூழ்ச்சிகள்கூட காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் அதிரை செய்திகளை அதிரை தளங்களான அதிரைநிருபர், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் தளங்கள் ஒன்றிணைந்து செயல்பட, நியாமான ஊர் ஒற்றுமைக்கு பங்கமில்லாதா உண்மை செய்திகளை உலகுக்கு கொண்டுவர வாய்ப்பு கிடைத்தால் அதற்கு அதிரைநிருபர் என்றும் ஒத்துழைப்பு தரும்.

வெள்ளிநிலாவுக்கு:

தமுமுக பேட்டியை வெள்ளிநிலா பங்களிப்பாளரின் வலைத்தளங்களான அதிரை போஸ்டிலும் அந்த பேட்டி வெளிவந்துள்ளது. “மாட்டுக் கறி பிரச்சினை என்ன?” என்ற வெள்ளிநிலா கட்டுரையில் ஏன் அதிரைநிருபரை மட்டும் குறிப்பிட வேண்டும்?

அதிரை வலைத்தளங்களில் தரத்திலும் முன்னிருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் ஏராளமான படைப்பாளிகளை வெளிக் கொணர்ந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வெள்ளிநிலாவுக்கு அதிரைநிருபர் தளத்தின் மேல் மட்டும் ஏனோ கசப்பும் / கோபமும் !

அதிரைநிருபர் தளம் எந்த ஒரு கட்சிக்கோ / இயக்கத்துக்கோ கொடிதூக்கும் துதிபாடும் தளமல்ல.

சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஊரில் உள்ளார்கள், இவர்களை வைத்து முட்டி மோதும் வேடிக்கை விளையாட்டுக்களை  தவிர்த்து சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்டவர்களின் நெருங்கிய நண்பர்களோ, ஜமாத்தினரோ முன்னின்று செய்யாமல், ஒருவர் மாற்றி மற்றவர் உசுப்பேத்தியே வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இயக்க / கட்சி / சங்க தலைவர்கள் இணையதளங்களில் போட்டி போட்டு பேட்டி கொடுத்து ஒருவருக்கு ஒருவர் சாடிக்கொண்டிருப்பதால், பகைமையே நீடிக்கும், அங்கே மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப்பட்ட காகிதமாகவே தள்ளாடும். இதே நிலை தொடராமல் அடியோடு வேரறுக்கு வேண்டும்.

இஸ்லாமிய சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு பணமும், இயக்க / அரசு பதவியும் இருந்தால் எதை வேண்டுமாலும் செய்யலாம் என்ற நிலை அதிரையில் தலைதூக்கி, நம் எல்லோருக்கும் அது ஒரு அச்சுறுத்தலாகி விடுமோ என்ற ஐயத்தாலும், அரசியல் காழ்ப்புணர்வால் சில சமூகவிரோத கும்பல்களை தூண்டிவிட்டு, நயவஞ்கத்தனமாக நாடகமாடி குளிர்காய நினைத்தவர்களின் சூழ்ச்சியை வெளிக்கொணரவே இந்த பதிவை பதிவதற்கு துணிந்தோமே தவிர. நம் சகோதரர்கள் யாரையும் உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல என்பதை மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

நிறைவாக, வருத்தத்துடன் : நல்லவர்களாக புன்முறுவலுடன் புறம் காட்டும் சகோதரர்கள் அகமொன்று வைத்துக் கொண்டு இரட்டை நிலைபாட்டுட்டன் முறுக்களாக செயல்படுவதை கண்கூடாக பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது – அவர்களின் இச்செயல்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டுகிறோம் இன்ஷா அல்லாஹ் !

நெறியாளர்

9 Responses So Far:

Unknown said...

AdiraiNirubar.in மறுப்பு
http://adiraipost.blogspot.in/2012/07/adirainirubarin.html

sabeer.abushahruk said...

தன்னிலை விளக்கம் மிகத்தெளிவாக உள்ளது.

ரமலான் துவங்கிவிட்டதால் அனைவரும் அவதூறுகலிலிருந்து மீண்டு அமல்களின்பால் திரும்புங்களேன்.

Meerashah Rafia said...

என்னைப்பொருத்தவரையில் இது வெள்ளி நிலா வை நடத்துனர்/நெறியாளர் மீதுதான் தவறு..

நினைத்தால் பதியவும், நீக்கவும் செய்ய ஏதுவாக உள்ள வலைத்தளங்கள் நடத்துனர்களே ஒவ்வொரு பின்னூட்டத்தையும் பதிவையும் ஆராய்ந்து வெளியிடுகின்றார்கள்.. அப்படி இருக்க பத்திரிகை நடத்தும் இவர் யாரோ சொன்னதை அப்படியே எடுத்து போடுவதும்,இடியாப்ப சிக்கல் அளவிற்கு உள்ள பிரச்சினைக்குரிய விசயத்தில் மீண்டும் நிலா குளிர்காய நினைப்பது சரியல்ல.

இசுலாமியர்கள் ஊடகத்துறையில் வருவது நல்லதுதான்.ஆனால் மக்கள் உரிமை அன்று வெளியிட்டதும், இன்று வெள்ளி நிலா வெளியிடுவதும் சிறுபிள்ளைத்தனமானது.. இப்படிப்பட்ட இசுலாமிய ஊடகங்கள் இருப்பதற்கு பதில் இல்லாமலே போகலாம்..

ஒரு முஹ்மினை இன்னொரு முஹ்மின் காட்டிக்கொடுத்தால் இரட்டிப்பு நன்மை என்று ஹதீஸ் ஏதும் இருக்கின்றதாவென்று தெரியவில்லை..இப்போதெல்லாம் இதில்தானே முந்திக்கொல்கின்றார்கள்!!

சில இடங்களில் அதிரை எக்ஸ்ப்ரஸ், அதிரை போஸ்ட் போன்றவற்றை சிறிது சாடப்பட்டிருக்கின்றதாக தெரிகின்றது..
பிறரை சுட்டிக்காட்டி வெள்ளிநிலாவிற்கு வெளிச்சம்போட்டு காட்டவேண்டாம் என நினைக்கின்றேன்.இதனால் ஒன்றுகூடும் வலை நிபுணர்கள் பிறிந்திடவேண்டாம்..

ஊடகத்தை எங்கனம் நடத்தவேண்டுமென்று தேய் பிறையை வளர்பிரையாக்க வழி காட்டுங்கள்.

Yasir said...

வளர்பிறை இன்னும் வளர வேண்டும்...இன்னும் பேம்பர்ஸைக்கட்டிக்கிட்டு எவ்வளவு நாளைக்குதான் திரியிரது

அதிரை சித்திக் said...

மாட்டுக்கு கொம்பு சீவி விட்டாச்சு ...
அதிரை ஊடகம் மல்லுக்கு நிற்கிறது ...
குலத்து மேட்டில் பேசி தீர்க்க விஷயம் ..
இனி என்ன சொன்னாலும் .இந்த விசயத்திற்கு..
அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாது ...
மாட்டிறைச்சி பிரச்னை ....
கடை காரருக்கு வாழ்வாதார பிரச்சனை ...
சேர்மனுக்கு கௌரவ பிரச்னை ....
தா மு மு க விற்கு கட்சி தொண்டருக்கு ..
கை கொடுக்கிறது ..யார் வெல்வது...
வென்றால் ..யாருக்கும் கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும்
அல்லாஹ் எல்லோருக்கும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்

KALAM SHAICK ABDUL KADER said...

//அதிரை செய்திகளை அதிரை தளங்களான அதிரைநிருபர், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் தளங்கள் ஒன்றிணைந்து செயல்பட, நியாமான ஊர் ஒற்றுமைக்கு பங்கமில்லாதா உண்மை செய்திகளை உலகுக்கு கொண்டுவர வாய்ப்பு கிடைத்தால் அதற்கு அதிரைநிருபர் என்றும் ஒத்துழைப்பு தரும்.//

உண்மையான ஆதங்கம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சகோதரர் நிஜார் அவர்கள் தனிப்பட்ட முறையில் நிருபரோடு தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உண்மையை புரிந்து கொண்டு தவறு இருப்பவர்கள் வருத்தம் தெரிவித்து , இனி மாடு அரசியலுக்கும் அசை போடவும் வராமல் அறுக்க மட்டுமே இருக்கட்டும்.

இறைவன் அனுமதித்ததை புசிப்போம். எதிரியிடமும் மென்மையை கையாள்வோம்.

Ebrahim Ansari said...

பொதுவாக ஊடகத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் படித்தவர்கள்; விபரங்கள் புரிந்தவர்கள். இப்படி படித்த விபரம் தெரிந்தவர்களின் மத்தியிலும் காழ்ப்புனர்ச்சிகளும், காலை வாரும் யுக்திகளும் காணப்படுவது நிலவும் பிரச்னையின் வேதனை தரும் அம்சமாகும். ஒரு நல்ல நோக்கத்துக்காக இலாப நோக்கமின்றி செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நமது நண்பர்கள் ஊரில் இருக்கும் ஒற்றுமை இன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க இணைந்து முயலவேண்டும்.

படித்த- விவரம் புரிந்தவர்களும் ஈகோ பிரச்னையால் பிளவுபட நேர்ந்தால் நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பையும் இழந்து நிற்க நேரிடும்.

அப்படி உள்ள நிலைகளில் இருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

கவிஞர். சபீர் அவர்கள் கூறுவது போல் இந்த ரமலான் மாதத்தில் வேறுபாடுகளை வேரறுக்க இணைவோம்.

அப்துல்மாலிக் said...

//அதிரை எக்ஸ்பிரஸ், அதிரைநிருபர் அதிரைபோஸ்ட்) போடுவதாகவே செய்தி சேகரிக்க சென்றவர்களால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.//

இதன் வழியே ஒருமித்த கருத்தாக எடுத்து த்த்தமது தளங்களில் வெளியிடலாமே, இப்படி ஏற்படு ஒற்றுமையே ஊரின் ஊடகத்தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு