Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 5 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2012 | , , ,

அலசல் தொடர்: ஐந்து. 

மனித குலத்தை பிறப்பிலேயே பாகுபடுத்திப்பார்க்கும் மனுநீதி, “சனாதனதர்மம்” என்பதன் அடிப்படையில் தொகுக்கப்பட்டதாகும். இந்த சனாதன தர்மம் என்பதன் அடிப்படை ETERNAL என்கிற என்றும் அழியாத தன்மையாம். எது என்றும் அழியாது என்றால் பிறப்பும் அழியாது இறப்பும் அழியாது. இதற்கு ஆரம்பமும் கிடையாது முடிவும் கிடையாது. (தலை சுத்துது) இது பற்றி நிறைய வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. அதற்குள் செல்ல விரும்பவில்லை. ஆனாலும் சனாதன தர்மம் என்பது பரப்பி வைத்திருக்கிற - நியாயப்படுத்தி வைத்திருக்கிற பாகுபாடுகளை மட்டுமே நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இத்தகைய மனிதகுலப் பாகுபாடுகளை பரப்பும் வேதங்களை நம்பும் மனிதர்களுக்கு இடையே விழிப்புணர்வைக் கொண்டுவரவே முயற்சிக்கிறோம். 

ஏற்கனவே கூறியபடி இந்த சனாதன தர்மம் என்பதற்கு அழிவு கிடையாது. ஒருபிறப்பில் செய்யும் காரியங்களின் வினைக்கேற்ப மறு பிறவி ஏற்படும் என்பதால் ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. இது ஒரு நான்-ஸ்டாப் நிகழ்ச்சி. காரியங்கள் என்பதை இந்த வேதங்கள் “கர்மா” என்று குறிப்பிடுகின்றன. அவரவர் செய்யும் கர்மாவுக்குத் தகுந்தபடி அவர்களுக்கு அடுத்த பிறவி ஏற்படும். தண்டனையும் கிடைக்கும் இதுவே சனாதன தர்மம். இதை நான் புரிந்து கொண்டது ஒரு வேடிக்கை நிறைந்த வினோதமான காலகட்டத்தில். 

காஞ்சிபுரத்திலே இருக்கின்ற சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சாமி அவர்கள் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் நடைமுறை சமயத்தில் ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரம் அவர் பத்திரிக்கைகளில் கூறியது. “ என் கர்மாவின் பயனை அனுபவித்து வருகிறேன்” என்பதாகும்.  அதாவது முற்பிறவியில் அவர் செய்த கர்மத்தின் வினைப் பயனாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்று அவர் கருத்து வெளியிட்டு ஒப்புக்கொண்டார். 

நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால் இந்தப் பிறவியில் அவர் செய்ததாக கூறப்படும் ஒரு கொலைக்காகத்தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை அப்படித்தான் கூறுகிறது. சென்ற பிறவியில் அவர் இன்ன பாவம் செய்தார் அதனால்தான் அவரை கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அப்படித் தாக்கல் செய்திருந்தால் அந்த வழக்கு இந்தப் பிறவியில் அல்ல எந்தப்பிறவியிலும் செல்லாது. ஆகவே கர்மா என்பதும், அது பிறவி பிறவியாக தொடரும் என்பதும் ஒரு கவைக்குதவாத ஏமாற்றுக் கருத்து. 

இது தொடர்பாக நான் கேட்கவிரும்பும் இன்னொரு கேள்வி. அப்படி ஒருவேளை இந்த கொலைக்குற்றம் கர்மாவின் பயன் என்று ஒரு பெரிய மடத்தின் அதிபதி உறுதியாக நம்பும் பட்சத்தில் அந்த வழக்கையும் தண்டனையையும் வாய்மூடி ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே. ஏன் எதிர் வழக்காடவேண்டும்? ஏன் ஜாமீனில் வெளிவர முயலவேண்டும்? ஏன் வழக்கை நடத்தும் புதுவை நீதிமன்ற நீதிபதிக்கு கையூட்டு தந்து வழக்கில் இருந்து தப்பிக்க முயலவேண்டும்? அப்படியானால் இந்த சனாதன தர்மம் என்பதும் –கர்மா வினைப்பயன் என்பதும் ச்சும்மா .... ஒரு டூப்பு என்று ஒரு மடாதிபதியே ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம்?

இதேபோல் ஒரு வழக்குத்தான் நித்யானந்தா சாமி என்கிற இன்னொரு புகழ்பெற்ற மடத்தின் தலைவர் மீது நடைபெற்று வரும் பாலியல் உறவு சம்பந்தமான வழக்கு. இவரும் கர்மாவின் வினைப்பயனைப்பற்றி உலகம் முழுதும் பேசி வருபவர். இந்த வழக்கின் உண்மை பொய் பற்றி பேச நான் வரவில்லை. வழக்கில் சாமியார் வசமாக மாட்டிக்கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். விதியே என்றும் கர்மவினை – பிரம்மன் எழுத்து என்றும் தாங்கிக் கொண்டு  இருக்க வேண்டியதுதானே. ஏன் கோடி கோடியாய் செலவழித்து வழக்கில் இருந்து தப்பிக்க மதுரைவரை சென்று ஆதீன மாஜிக் செய்கிறார்? 

ஆகவே இவற்றை போதிக்கும் குருமார்களிடையே கூட தாங்கள் போதிக்கும் மனு நீதியின் அடிப்படையில் அமைந்த சனாதன தர்ம கருத்துக்களின் மீது விசுவாசம் இல்லை. சும்மா ஹம்பக் வேலைகள் செய்து ஏமாந்தவர்களையும், ஏழை தாழ்த்தப்பட்டவர்களையும் பின்னணியில் தம்பூராவை டொய்ங் டொய்ங் என்று ஒலித்து இன்னும் ஏமாற்றுகிறார்கள். 

இப்போது இந்த பார்ப்பன முகாமிலிருந்து புதிதாக ஒரு புருடா வந்து இருக்கிறது. அதாவது தற்போதைய இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கும், இந்தியா ரூபாயின் மதிப்பின் வீழ்ச்சிக்கும் காரணம் அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார அணுகுமுறை/ நடவடிக்கை இல்லையாம்; உலகப் பொருளாதார வீழ்ச்சி இல்லையாம்; பங்கு வர்த்தக சரிவு இல்லையாம். இந்திய ரூபாயில் புதிதாக புகுத்தப்பட்ட அடையாளக்குறியின் “வாஸ்து " சரியில்லையாம். அந்த அடையாளத்தின் குறியில் தொண்டையில் ஒரு வெட்டுப்பட்டதைப்போல குறி இருப்பதால் பொருளாதாரம் வீழ்ந்து விட்டதாம். இதைகூறி இருப்பவர் ராஜ குமார் ஜான்ஜாரி என்கிற பச்சை பிராமணர். இனி நாட்டில் திட்ட கமிஷன் வேண்டாம்- திட்டக்குழு வேண்டாம்- நிதி அமைச்சர் வேண்டாம்- நிதிநிலை அறிக்கை வேண்டாம். இரண்டு பூணூல் போட்டவர்களைக் கூட்டி வந்து பூஜை, புனஸ்காரம் செய்தால் போதுமானது.பொருளாதாரம் கிடுகிடு வென்று வளர்ந்துவிடும்.

இந்தப் போக்கற்றவர்கள் இப்படி குற்றம் சாட்டக் காரணம் இந்த புதிய ரூபாயின் அடையாளக் குறியை உருவாக்கித் தந்ததவர் உதய குமார் என்கிற ஒரு தாழ்த்தப்பட்டவர். ஒரு சூத்திரன் கண்டு பிடித்தது சபை ஏறினால் இருக்கும் அனைத்து பிராமணத் தலைகளும் வெடித்து சிதறி விடுமல்லவா? அதுதான் காரணம். வேண்டுமானால் ஒரு சவாலாக இந்த புதிய ரூபாயின் அடையாளக்குறியின் தொண்டையில் இடது வலதாக போடப்பட்டிருக்கும் குறியை மாற்றிவிட்டு ஸ்ரீரங்கத்து நாமம் போல மூன்று பட்டைகளை  போட்டால் இந்தியப்பொருளாதாரம் எகிறிவிடுமா? அல்லது ரிசர்வ் வங்கியில் சென்று இந்தியா ரூபாய்க்கு தீட்டு கழிக்கலாமா? ஹோமம்/யாகம்  நடத்தலாமா? 

மனு நீதியின் அத்தியாயம் நான்கு CHAPTER IV  2,3,61,80, 81. கூறுகின்றன. 

2. A Brahmin must seek a means of subsistence which either causes no, or at least little pain to others, and live by that except in times of distress.

3. For the purpose of gaining bare subsistence, let him accumulate property by following those irreproachable occupations which are prescribed for his caste, without unduly fatiguing his body

61. Let him not dwell in a country where the rulers are Shudras, nor in one which is surrounded by unrighteous men, nor in one which has become subject to heretics, nor in one swarming with men of the lowest castes. 

80-81. Let him not give to a Shudra advice, nor the remnants of his meal, nor food offered to the gods; nor let him explain the sacred law to such a man, nor impose upon him a penance. For he who explains the sacred law to a Shudra or dictates to him a penance, will sink together with that man into the [dreadful] hell called Asamvrita. 

ஒரு பிராமணன் தனது அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்காக தேவைப்பட்டாலே தவிர யாரையும் துன்புறுத்தக்கூடாது. அதாவது தனக்கு கஷ்டம் வந்தால்தான் அடுத்தவரை துன்புறுத்தி தனது கஷ்டத்தை நீக்கிக் கொள்ளலாம். “ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” என்பதெல்லாம் பிராமணர் முன் ஜுஜுபி.  

தனது வாழ்வின் அத்தியாவசியங்களைத் தேடிக்கொள்ளவும் , சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவும் ஒரு பிராமணன் தனது உடம்புக்கு கஷ்டமும், அயர்வும் தராத தொழில்களைத்தான் தேடிக்கொள்ளவேண்டும். ( unduly fatiguing his body) .

எங்கேயாவது யாராவது ஒரு மூட்டை தூக்கும், வயலில் உழுது பயிரிடும், தெருக்கூட்டும், ரிக்க்ஷா இழுக்கும், கொத்தனார் வேலை பார்க்கும், சித்தாள் வேலைபார்க்கும் பிராமணரை பார்த்து இருக்கிறீர்களா? கடைத் தெருக்களில் காய்கறிகடை, பழக்கடை நடத்தும் பிராமணர்களைப் பார்த்து இருக்கிறீர்களா? கரிக்கோலமாக மெக்கானிக், வெல்டர், பெட்ரோல் பங்குகளில் வெயிலில் நின்று சேவகம் புரிவோரைப் பார்த்து இருக்கிறீர்களா? படைக்கப்பட்ட அனைத்து பிராமணர்களும் அறிவுக் கொழுந்துகளாக இருப்பதில்லை. அவர்களிலும் ஐந்தாம் வகுப்பில் கூட தேறாதவர்கள் உண்டு. அவர்களெல்லாம் கோயில்களில் மணி அடித்துக்கொண்டோ, சமையலறை வேலை செய்து கொண்டோதான் இருப்பார்கள். அவர்கள் சொகுசான வேலைகளில்தான் அமர்கிறார்கள் அல்லது அமர வைக்கப்படுகிறார்கள். உடல் உழைப்பு மூலம் பொருள் ஈட்டுவது அவர்களின் சாத்திரத்திலேயே தடுக்கப்பட்டு இருக்கிறது. “தின்றவன் திங்க திருப்பாலக்குடியான் தெண்டம் கொடுத்தான்” என்று ஒரு சொல்லடை உண்டு. அதுபோல் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவன் உழைக்க வேண்டும். பிராமணர்கள் சப்புக்கொட்டி சாப்பிடவேண்டும் என்பது மனுநீதி. காரணம் நெய்யிலே பிறந்து நெய்யிலே வளரும் நேசர்கள் இவர்கள். பஞ்சணைகளுக்கு இவர்கள் பெயரில்தான் பட்டா இருக்கிறது. 

சூத்திரர்கள் ஆளும் நாட்டிலும் , தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் செல்வாக்கும், படைபலமும் பெற்றவர்களாக இருக்கும் நாடுகளிலும் பிராமணர்கள் வசிக்கவே கூடாது என்கிறது மனுநீதி. (மனு நீதியை நம்பும் கொள்கை உடையவர்களின் செல்வாக்கிலே இருக்கும் தேசிய அரசியல் கட்சியினர் தாழ்த்தப்பட்டோர் கட்சியின் தலைவி மாயாவதியுடன் மட்டும் தேர்தல் கூட்டு வைக்கலாமா?)

ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுக்கு அறிவுரை, ஆலோசனை, கல்வி தரக்கூடாது. சூத்திரன் கையால் சாப்பிடக்கூடாது; சூத்திரக் கடவுள்களுக்குப் படைக்கப்பட்டவைகளை புசிக்கக்கூடாது, ஒரு சூத்திரனுக்கு பாவ பரிகாரங்கள் செய்யக்கூடாது. சாஸ்திரங்களை போதிக்ககூடாது; அப்படி மீறி போதித்தால் – பரிகாரம் செய்தால் அப்படி பாவம் செய்தவனோடு அந்த பரிகாரம் செய்யும் பிராமணனும் “அசம்விருதா” என்கிற கொடிய நரகத்தில் ஒன்றாக மூழ்கடிக்கப்படுவான் என்கிறது மனு நீதி. 

ஆனால் மடாதிபதி கொலை செய்யலாமா? திரைப்பட நடிகைகளோடு கொட்டமடிக்கலாமா? ஆசிரமம் வைத்து நடத்தி கன்னிகளை கற்பழிக்கலாமா? குழந்தைவரம் தருவதாக அர்த்தசாம பூசைக்கு ஏற்பாடு செய்யலாமா? யோகா சொல்லித்தருவதாக கூறி அகா சுகா –அகடம் பகடம் செய்யலாமா?  நீதிபதிகளை விலைக்கு வாங்கலாமா? தங்கபஸ்பம் செய்து தருவதாக கூறி கொள்ளை அடிக்கலாமா? மாட்டுக்கறி சமைத்து மது விருந்தும் நடத்தலாமா? தங்க நகைகளை வைத்து தங்கடம் நீக்கும் பூஜை செய்கிறேன் என்று தட்டிப்பறிக்கலாமா? ஒரு கர்ம வினைப்பயனும் ஒன்றும் செய்யாதா?. ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கும் எனக்கும் உல்லாசமா? எல்லாம் கப்சா – கட்டுக்கதை.
இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
-இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

சேக்கனா M. நிஜாம் said...

அருமையான ஆக்கம் !

வாழ்த்துகள் “சமூக நீதியின் முரசு” மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு,

சாதிப் பட்டங்கள் !

படித்துப் பெற்ற சான்றிதழ்களைப் போல ஐயர், முதலியார், கவுண்டர், படையாச்சி, உடையார், செட்டியார், யாதவ், செங்குந்தர், நாயுடு, மூப்பனார், தேவர் இது போன்ற பட்டங்களை ( ?! ) படிக்காத பாமரர்கள் மட்டுமல்லாமல், படித்து பெரிய பதவிகளில் உள்ளோரும் பெயருக்கு பின்னால் இட்டுக் கொள்கின்றனர்

என்ன கொடுமை இது.....!?

ஏற்றத்தாழ்வற்ற உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் ஆண்டான் அடிமை, சுரண்டுவோர், சுரண்டப் படுவோர் என்னும் பாகுபாடுகளில்லாத மனிதநேய, மனிதனை மனிதனாக மதிக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றால் ஒரே வழி “இஸ்லாம்”

sabeer.abushahruk said...

கண்ண கட்டுது காக்கா இவிங்களோட கண்ணாமூச்சி வித்தை. இந்த அத்தியாயத்தின் இறுதியில் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எத்தனை நியாயமானது!

அவர்களில் ஒரு சாராருக்கு சார்பாகத்தானே கேட்கிறீர்கள், இது ஏன் அவர்களுக்கு விளங்குவதில்லை. ஒன்று சேர்ந்து பொங்கி எழுந்தால் ஓய்த்து விட முடியாதா இந்த புழுகு மூட்டை கொள்கைகளை?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஒரு பிராமணன் தனது அடிப்படைத்தேவைகளைப் பெறுவதற்காக தேவைப்பட்டாலே தவிர யாரையும் துன்புறுத்தக்கூடாது. அதாவது தனக்கு கஷ்டம வந்தால்தான் அடுத்தவரை துன்புறுத்தி தனது கஷ்டத்தை நீக்கிக் கொள்ளலாம். “ ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை” என்பதெல்லாம் பிராமணர் முன் ஜுஜுபி.

தனது வாழ்வின் அத்தியாவசியங்களைத்தேடிக்கொள்ளவும் , சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவும் ஒரு பிராமணன் தனது உடம்புக்கு கஷ்டமும், அயர்வும் தராத தொழில்களைத்தான் தேடிக்கொள்ளவேண்டும். ( unduly fatiguing his body) .//

நல்லாத்தானே இருக்கு பாலிஸி... !

Noor Mohamed said...

//எங்கேயாவது யாராவது ஒரு மூட்டை தூக்கும், வயலில் உழுது பயிரிடும், தெருக்கூட்டும், ரிக்க்ஷா இழுக்கும், கொத்தனார் வேலை பார்க்கும், சித்தாள் வேலைபார்க்கும் பிராமணரை பார்த்து இருக்கிறீர்களா? கடைத் தெருக்களில் காய்கறிகடை, பழக்கடை நடத்தும் பிராமணர்களைப் பார்த்து இருக்கிறீர்களா? கரிக்கோலமாக மெக்கானிக், வெல்டர், பெட்ரோல் பங்குகளில் வெயிலில் நின்று சேவகம் புரிவோரைப் பார்த்து இருக்கிறீர்களா?//

இல்லவே இல்லை. இதைத்தான் அன்றே பெரியார் தொண்டர்கள் கோஷமிட்டனர்.

=கண்டதுண்டோ கண்டதுண்டோ
கல்லுடைக்கும் பார்ப்பானை கண்டதுண்டோ

=பார்த்ததுண்டோ பார்த்ததுண்டோ
பறையரையும் பார்ப்பானை பார்த்ததுண்டோ

அன்று அக்ரகாரத்தில் ஒடுக்கப்பட்டோர் நடந்து செல்ல அனுமதியில்லை.

தண்ணீர் பந்தலில் தாழ்த்தப்பட்டோருக்கு மூங்கில் குழாய் வழியாகத்தான் தண்ணீர் ஊற்றப்பட்டது.

இவற்றைஎல்லாம் தமிழகத்தில் உடைத்தெறிந்தவர் தந்தை பெரியார்.

ஆனால்! இங்கோ, பரங்கியனுக்கு பாதவரிடிகளாக வாழ்ந்த்த பார்ப்பானை தோலிருத்துக் காட்டுகிறார் எங்கள் இபுராஹீம் அன்சாரி காக்கா.

crown said...

இது தொடர்பாக நான் கேட்கவிரும்பும் இன்னொரு கேள்வி. அப்படி ஒருவேளை இந்த கொலைக்குற்றம் கர்மாவின் பயன் என்று ஒரு பெரிய மடத்தின் அதிபதி உறுதியாக நம்பும் பட்சத்தில் அந்த வழக்கையும் தண்டனையையும் வாய்மூடி ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே. ஏன் எதிர் வழக்காடவேண்டும்? ஏன் ஜாமீனில் வெளிவர முயலவேண்டும்? ஏன் வழக்கை நடத்தும் புதுவை நீதிமன்ற நீதிபதிக்கு கையூட்டு தந்து வழக்கில் இருந்து தப்பிக்க முயலவேண்டும்? அப்படியானால் இந்த சனாதன தர்மம் என்பதும் –கர்மா வினைப்பயன் என்பதும் ச்சும்மா .... ஒரு டூப்பு என்று ஒரு மடாதிபதியே ஒப்புக் கொள்வதாகத்தானே அர்த்தம்?
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அதானே! சரியா கேட்டேள் போங்கோ! சரியான கிடுக்குபிடி போட்டுன்டார் !பெரியவாள்னா கொக்கா இல்லையா என்டா அம்பி! இந்த பாய் இப்படி நம்மள பின்னுறாரே! நம்மாத்துகாரங்களோட சினேகிதனோ என்னமோ? எல்லாம் கலிகாலம்டா! எல்லாம் லோகத்துல சரியில்லை!(காக்கா! நலமா? புது இடம் எப்படி?உடல் நிலை பேணிவரவும்).

crown said...

இதேபோல் ஒரு வழக்குத்தான் நித்யானந்தா சாமி என்கிற இன்னொரு புகழ்பெற்ற மடத்தின் தலைவர் மீது நடைபெற்று வரும் பாலியல் உறவு சம்பந்தமான வழக்கு. இவரும் கர்மாவின் வினைப்பயனைப்பற்றி உலகம் முழுதும் பேசி வருபவர். இந்த வழக்கின் உண்மை பொய் பற்றி பேச நான் வரவில்லை. வழக்கில் சாமியார் வசமாக மாட்டிக்கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார். விதியே என்றும் கர்மவினை – பிரம்மன் எழுத்து என்றும் தாங்கிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே. ஏன் கோடி கோடியாய் செலவழித்து வழக்கில் இருந்து தப்பிக்க மதுரைவரை சென்று ஆதீன மாஜிக் செய்கிறார்?
--------------------------------------------------------
அதானே ? இந்த மடாதி(மட அதிபதி)க்கு தெரியாதா என்ன? நான் கேள்விப்பட்டேன் இதுபோல் பிராமணன் அல்லாத மடாதிபதிகளுக்கு தேவாரம்,திரு?வாசகம் படிப்பதால் பகுத்தறிவுவாதி?ன்னு சொல்லும் திராவிடர்கழகங்கள் உதவுவதாக கேள்வி! பெரியாவள் தான் பதில் தரணும்.

crown said...

ஆனால் மடாதிபதி கொலை செய்யலாமா? திரைப்பட நடிகைகளோடு கொட்டமடிக்கலாமா? ஆசிரமம் வைத்து நடத்தி கன்னிகளை கற்பழிக்கலாமா? குழந்தைவரம் தருவதாக அர்த்தசாம பூசைக்கு ஏற்பாடு செய்யலாமா? யோகா சொல்லித்தருவதாக கூறி அகா சுகா –அகடம் பகடம் செய்யலாமா? நீதிபதிகளை விலைக்கு வாங்கலாமா? தங்கபஸ்பம் செய்து தருவதாக கூறி கொள்ளை அடிக்கலாமா? மாட்டுக்கறி சமைத்து மது விருந்தும் நடத்தலாமா? தங்க நகைகளை வைத்து தங்கடம் நீக்கும் பூஜை செய்கிறேன் என்று தட்டிப்பறிக்கலாமா? ஒரு கர்ம வினைப்பயனும் ஒன்றும் செய்யாதா?. ஊருக்குத்தாண்டி உபதேசம் உனக்கும் எனக்கும் உல்லாசமா? எல்லாம் கப்சா – கட்டுக்கதை.
-------------------------------------------------------
அவனவன் சமூக நீதின்னு எழுதி . பாம்பை கண்டால் விட்டு விடு. பிராமணை அடி என்றெல்லாம் சொல்லி விட்டு அவன் வீட்டில் பெண் எடுத்திருக்கானுவோ!ஆனால் உங்களைப்போல் சான்றோர்களின் சாட்டை தீமைக்கு எதிராகவே இருந்திருக்கு. இதில் மு.கருனானிதி போன்றவர்கள் உலக ஆதாயம் தேடிக்கொண்டார்கள் நீங்கள் சமுதாயத்துக்கு எழுதுகிறீர்கள் அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

பிராமனீயத்தில் உள்ள அவலங்களை ஆதாரத்துடன் விளக்குவதன் மூலம் ஒரு நல்ல விளிப்புணர்வு உங்களால் தர முடிகிறது.

இருப்பினும் பிராமனர்கள் எல்லாம் இதே எண்ணத்துடன் தான் இயங்குகிறார்களா?...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

// இந்திய ரூபாயில் புதிதாக புகுத்தப்பட்ட அடையாளக்குறியின் “வாஸ்து " சரியில்லையாம். அந்த அடையாளத்தின் குறியில் தொண்டையில் ஒரு வெட்டுப்பட்டதைப்போல குறி இருப்பதால் பொருளாதாரம் வீழ்ந்து விட்டதாம். //

அருமையான கண்டுபிடிப்பு. சீக்கிரம் நல்ல பரிகாரம் செய்து பண மதிப்பை கொண்டு வாங்களேன் பார்ப்போம்.

இங்கேயும் "மாட்டுக்கறி" சமாச்சாரம் உண்டா!

அதிரை சித்திக் said...

போன ஜென்மத்தின் கர்மாவின் பலனை அனுபவித்து வருகிறேன்

ஜெயேந்திரர்.சொன்னது >>>>>>>>

எனக்கு ஒரு ஜோக் ஞாபகத்திற்கு வருகிறது .

ஒரு உணவகத்தில் அறிவிப்பு வைத்திருந்தார்கள் ..

நீங்கள் சாப்பிடும் உணவிற்கு பணம் செலுத்த தேவை இல்லை .

உங்கள் பேரனிடம் வசூல் செய்து கொள்கிறோம் .

ஆஹா நல்ல சான்ஸ் என்று ..

ஒருவர் அந்த உணவகத்தில் நன்றாக சாப்பிட்டு விட்டு

கிளம்பும் போது சர்வர் சாப்பிட்டதை விட மூன்று மடங்கு ஜாஸ்தியான தொகை

பில் கொடுத்துள்ளான் .ஏன் என்னிடம் பணம் கேட்கிறாய் ..என் பேரனிடம் வாங்கி

கொள் என்றானாம் .இது உன் பில் அல்ல

.உன் தாத்தா ..சாப்பிட்ட பில் என்றானாம் ..அது போல ..

சும்மாவே போய் அவாள கைது பண்ணலாம் ஏன்னு கேட்ட

போன ஜென்மத்து போக்கிரிதனத்துக்குதான் ..கைது செய்கிறோம்

இப்ப செய்ததுக்கு அடுத்த சென்மத்தில் என்று சொல்ல வேண்டியது தான்

வழக்கு பதிவு செய்யலாம் .என்று சொல்ல வேண்டியது தான் ..

Shameed said...

பிராமினியத்தின் ஒரு சில கொள்கை நம்மிடம் புரை ஓடிப்போய் கிடக்கின்றதே அதற்கும் சுளீர் சாட்டை அடி கொடுங்களேன்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பிற்குரிய இபுராஹிம் அன்சாரி காகா நலமா இருக்கிறீர்களா?
தாங்களை லாவண்யா திருமண மண்டபத்தில் பார்த்ததற்கு பிறகு தங்களின் திறமையான சாட்டை சுழற்சியை கண்டு வியந்து போனேன்.

அவாளின் உடம்பை சாரி காதை கிழிக்குமலவுக்கு சுழற்ட்டுங்கள் உங்களின் சிறப்பான சிந்தனை சாட்டையை

// ஜாகிர் காகா சொன்னது;
இருப்பினும் பிராமனர்கள் எல்லாம் இதே எண்ணத்துடன் தான் இயங்குகிறார்களா?...//

காக்கா அவைங்க முன்பு கோமளம் கட்டும் எண்ணத்தில் இருந்தைங்க
இப்ப கோர்ட் சூர்ட் போடும் எண்ணத்திற்கு மாறிட்டாங்க

Muhammad abubacker ( LMS ) said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம்.
தம்பி எல் எம் எஸ். எங்கே காணாமல் ரெம்ப தேட்டமாகிவிட்டது. பிறகுதான் தெரிந்தது புது லோகோ உருவாக்கப் போய்விட்டீர்கள் என்று.
வஸ்ஸலாம்.

Ebrahim Ansari said...

அலைக்கும் முஸ்ஸலாம் தம்பி கிரவுன்

//(காக்கா! நலமா? புது இடம் எப்படி?உடல் நிலை பேணிவரவும்).// உணவுக்காக மிகவும் கஷ்டம். நம்பி சாப்பிட முடியவில்லை. இன்று தேடிப்போய் ஒரு சோமாலியா கடையில் பகல் உணவு.

ஆனால் ஒரு பெரிய மன நிம்மதியுடன் இன்று ஜூம் ஆவும், அசரும் தொழுதது மறக்க முடியாது. புதிதாக இஸ்லாத்துக்கு வந்திருக்கும் அங்கோலா மக்களுடன் ஒரு செனகல் நாட்டு இமாம் பயானுடன் என்றும் நினைவிருக்கும் ஜூம்-ஆ.

அவர்களுடனே அசர் வரை தங்கி இருந்து உரையாடி பல அனுபவங்கள் - விவரங்கள். இன்ஷா அல்லாஹ் பகிர்வேன்.

வரும் புதன் முதல் வழக்கம் போல் துபாயிலிருந்து உரையாடலாம். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

// நம்மாத்துகாரங்களோட சினேகிதனோ என்னமோ?//

பார்க்காமல் பழகாமல் எழுதமுடியுமா?
பலநாள் தாங்கிய எரிச்சல்களை அ.நி. போன்ற தளம் கிடைத்ததால் அனைவருடனும் பகிர்கிறேன்.

Ebrahim Ansari said...

அம்பி சாவன்னா இப்போதான் எல்லாம் கொஞ்சம் ஓஞ்சு போய் இருக்கொன்னோ. புதுசா ஏதோ கிளப்புரே??? துஷ்டன்.

KALAM SHAICK ABDUL KADER said...

அங்கோலாவிலிருந்தாலும் அவசரமின்றி அலங்கோலமில்லாமல் நன்னா இருக்கு பேஷ் பேஷ்!! வாங்கோன்னா, நன்னா ஆத்துல வந்து ஜலம் குடிச்சுண்டு எழுதுங்கோன்னா, ஆனா பிராமணாள் எல்லாரும் ஒரே மாதிரியில்லேன்னா. எல்லா சாதிக்காரன்கலேயும் நல்லவா கெட்டவா இருக்கான்னா. என் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்தி சிகரத்தில் உட்கார வைக்கவும் உதவியவர் எங்கள் நிறுவனத்தின் தலைமை கணக்கர் ஒரு பிரமாணாள் அண்ணா; அவருடன் நெருங்கிப் பழகினதினாலே அவருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய சந்தேகங்களை உபன்யாசம் செய்றேன்னா. “தீவிரவாத” எண்ணம் கொண்ட என் உறவினர் சொன்னார், “ ஒரு பிரமாணாள் கீழே வேலை செய்யப்போறீங்க உங்களைக் கீழே தள்ளிவிடுவார்” என்று. ஆனால் அவாள் என் மீது கொண்ட பற்றும் நான் அவரிடம் “இது தான் இஸ்லாம்” என்ற ரீதியில் நடந்து கொண்ட விதத்திலும் என் உறவினனின் “தீவிரவாத” எண்ணம் பொய்க்க வைத்து மேன்மேலும் என்னைச் சிகரத்தில் அமர்த்திய பிரமாணாள்; இப்போ இஸ்லாத்தை நேசிக்கவும் வாசிக்கவும் பழகிவிட்ட பண்பாளர்!

அன்பு, அமைதி, அனைவரையும் அரவணைத்துச் செல்லுதல் என்ற அழகிய நடைமுறைகளை நம்மோடு நம்மைச் சுற்றி இருப்போரிடம் பழகிப் பாருங்கள் எல்லாரும் நம் அன்பெனும் காந்த சக்தியால் ஈர்க்கப்படுவர்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஆரிய மாயை, பார்ப்பன ஆதிக்கம், பூநூலின் ராஜ்ஜியம் என்றெல்லாம் ஊருக்கு சொல்லிக்கொள்ளும்(கொல்லும்) தனக்குத்தானே தானயத்தலைவர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் என்னும் ஒரு வங்கத்து பூநூலுக்கு மகுடி வாசிப்பது ஏன்? என இன்னொரு தமிழக கோமாளிப்பூநூல் சுப்ரமணியம் சுவாமி கேட்கிறது........"

இந்தியாவில் பெரும்பாண்மை சமுதாயமான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி, தீண்டத்தகாத சூத்தர பெருங்குடி மக்களுக்கு இது பற்றி உண்மையான விழிப்புணர்வு வராத வரை நம் நாட்டின் "பார்ப்பனர்"களின் காட்டில் தங்க, வைர, வைடூரிய மழைகள் தொடர் மழையாய் அடைமழையாய் பெய்து கொண்டு தான் இருக்கும்.......

இபுறாஹிம் அன்சாரி காக்காவின் ஆக்கம் ஒரு நல்ல விடியலுக்காக காத்திருப்போரின் ஏக்கம்.

Ebrahim Ansari said...

கவியன்பன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

அவர்களிலும் நமது நாகரத்தினம் சார் போல் " பச்சை மண்ணு" உண்டு என்பதை மறுக்கவில்லை. தனிப்பட்டவர்களைப்ப்றிய விமர்சனம் அல்ல. ஒரு மதத்தின் சட்டங்களில் ஏற்படுத்தி வைத்திருக்கிற அவலங்களை பகிர்வதே நோக்கம்.நிறைய நல்லவர்கள் எல்லோரிடத்திலும் உண்டு. நமது நோக்கம் பிரமநீயத்தை சாடவே. பிராமணர்களை அல்ல.

crown said...

கவியன்பன் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

அவர்களிலும் நமது நாகரத்தினம் சார் போல் " பச்சை மண்ணு" உண்டு என்பதை மறுக்கவில்லை. தனிப்பட்டவர்களைப்ப்றிய விமர்சனம் அல்ல. ஒரு மதத்தின் சட்டங்களில் ஏற்படுத்தி வைத்திருக்கிற அவலங்களை பகிர்வதே நோக்கம்.நிறைய நல்லவர்கள் எல்லோரிடத்திலும் உண்டு. நமது நோக்கம் பிரமநீயத்தை சாடவே. பிராமணர்களை அல்ல.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் இதை வழிமொழிகிறேன். எங்கள் தகப்பனாருக்கு தெரிந்த எத்தனையோ பிராமின்கள் நல்லவர்களை பார்த்திருக்கிறேன். இதில் குறிப்பிட்டு சொல்லனும்னா குஞ்சித பாதம் என்னும் வக்கீல் நல்ல தொரு சிறந்த மனிதபிராமின்

இப்னு அப்துல் ரஜாக் said...

பிராமணியத்தை ஏற்று நடப்பவர்களே பிராமணர்கள்.இதில் பிராமணியம் கூடாது,பிராமணர்கள் சிலர் அப்படி இல்லை என சிலரின் கமென்ட் சரியில்லை.நூற்றுக்கு - 99% பிராமணர்கள் அபிஷ்டுதான்,தான் வாழ பிறரை கெடுப்பவந்தான்.நான் பிராமன் பள்ளியில்,ஹாஸ்டலில் படித்து வந்தவன்.அவாளின் பகுதியில் தங்கி - (பல காலம்)இருந்தவன்..அவர்களின் வண்ட வாளம் - உலகம் அறிந்தது.இதற்காக தலித்துக்களையும் நாம் பாராட்ட முடியாது.அவர்கள்தான் - பிராமணர்களின் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

crown said...

அர அல சொன்னது…

பிராமணியத்தை ஏற்று நடப்பவர்களே பிராமணர்கள்.இதில் பிராமணியம் கூடாது,பிராமணர்கள் சிலர் அப்படி இல்லை என சிலரின் கமென்ட் சரியில்லை.நூற்றுக்கு - 99% பிராமணர்கள் அபிஷ்டுதான்,தான் வாழ பிறரை கெடுப்பவந்தான்.நான் பிராமன் பள்ளியில்,ஹாஸ்டலில் படித்து வந்தவன்.அவாளின் பகுதியில் தங்கி - (பல காலம்)இருந்தவன்..அவர்களின் வண்ட வாளம் - உலகம் அறிந்தது.இதற்காக தலித்துக்களையும் நாம் பாராட்ட முடியாது.அவர்கள்தான் - பிராமணர்களின் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அனுபவபாடம் இதை நான் ஆமோதிக்கிறேன்.

Yasir said...

அல்லாஹ்-தான் இவர்களின் அறிவுக்கண்ணை திறக்கவேண்டும்....

மூன்று மாதங்களுக்கு முன் இங்கு துபாயில் நமக்கு தெரிந்த பொறியாளர் ”ஐய்யர்” இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக என்றுக்கொண்டு -அல்லாஹூ அக்பர்- தன் மனைவியையும் மாற்ற முயற்ச்சி செய்துக்கொண்டு இருக்கின்றார்...

Ebrahim Ansari said...

//தலித்துக்களையும் நாம் பாராட்ட முடியாது.அவர்கள்தான் - பிராமணர்களின் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.//
தம்பி அர. அல. உண்மைதான்.
தலித்துகள் எடுப்பார் கைப்பிள்ளையாக பழக்கப்பட்டு விட்டார்கள்.
அவகளிடையே மாற்றங்களைளை போதித்து இஸ்லாத்தின் வழியில் கொண்டுவர உழைக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையை விளக்கும் சமுதாயம் இந்த ரீதியில் பெறும் உழைப்பைத்தரவேண்டும். ஆபிரிக்க நாடுகளில் இந்த உழைப்பு நடக்கிறது. வெற்றி கிடைக்கிறது.

தலித்துகளும் நாமும் கை கோர்த்தால் பெறும் சக்தியாக விளங்க முடியும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு