அதிரை சகோதரர்களின் தொழில் முனைவோர் என்ற வரிசையில் அதிரைநிருபரில் தொடர் பதிவுகளாக பதிந்து வருகிறோம் அதில் கடந்த பதிவில் அதிரை டிபார்மண்டல் ஸ்டோர்ஸ் பற்றிய தகவல்கள் பதிந்திருந்தோம், இவ்வாறான பதிவுகள் சுயதொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதாற்கே அன்றி தனிப்பட்ட விளம்பரமாக அல்ல.
அதிரையில் டிசைன்ஸ் என்ற பல்பொருள் அலங்கார மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்து வரும் நிறுவனம் கடந்த ஒரு வருடமாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. நண்பர்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்த நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவர் LMS அபூபக்கர், வெளிநாடுகளில் வேலை செய்தவர், கடைசியாக ஜப்பானில் வேலை செய்துவிட்டு தாயகம் திரும்பியதும், பிறகு அதிரையில் டிசைன்ஸ் என்ற ஸ்தாபனத்தை நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
அதிரைவாசிகள் இது போன்ற உள்ளூர்காரர்களின் சுயதொழில் முயற்சியினை ஊக்கப்படுத்த வேண்டும். வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சென்னை என்ற அலைச்சலான தேடல்களை சுருக்கிக் கொண்டு அனைத்தும் அதிரையிலேயே கிடைக்கிறது என்பதை அறிய வேண்டும்.
டிசைன்ஸ் ஸ்தாபனத்தின் சிறப்பு அம்சங்கள்:
- தரமான ஃபேசன் ஜுவல்லரி
- டிசைனர் சுடிதார் வகைகள்
- அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா மற்றும் ஸ்கார்ஃப்
- இறக்குமதி செய்யப்பட்ட காஸ்மெடிக்ஸ்
- தரமான லெதர்ஹேண்ட் பேக்குகள்.
- இறக்குமதி செய்யப்பட்ட பெண்களுகான லெதர் கலனிகள்
- பிறந்த குழந்தைகளுக்கான அவசியப் பொருட்கள் - JUST BORN BABY GIFT ITEMS.
- இறக்குமதி செய்யப்பட்ட சாக்லெட் வகைகள், tang powder, oats வகைகள்.
- அனைத்து விதமான உயர் தரமான பரிசுப்பொருட்கள்.
மற்றும் பல பயனுள்ள வீட்டு பெருட்கள் இங்கு கிடைக்கும், சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.
மேலும் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
LMS அபூபக்கர்,
No.50, மெயின் ரோடு
(இந்தியன் வங்கி அருகில், டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில்)
அதிராம்பட்டினம் - 614701
அலைபேசி எண்கள்: +91 9944116240 / +91 9566115550
மின்னஞ்சல்: dezignz.adirai@gmail.com
சுய தொழில் செய்து தாய்நாட்டில் சம்பாதிக்க முனையும் இவர்களைப் போன்ற சகோதரர்களை ஊக்கப்படுத்துவதில் முன்னிருப்போம். இன்ஷா அல்லாஹ் !
அதிரைநிருபர் குழு
20 Responses So Far:
வாழ்த்துகளும் துஆக்களும்.
நம்மூர்க்காரர்கள் கடை வைத்தால் அதை எவ்வளவு நேர்த்தியாக வைத்திருப்பார்கள் என்பதற்கு எல் எம் எஸ்சின் டிசைன்ஸ் ஓர் உதாரணம்.
தவிர, ஒரு மின்வெட்டு நேரத்தில் அவர் கடைக்குச் சென்ற நான், மின்வெட்டுக்கு மாறாக பிரகாசமாகவே இருக்கக் கண்டேன். காரணம்,
எல் எம் ஏஸ்
தன் முகத்தில்
புன்னகை
ஏற்றி வைத்திருந்தார்!
டிஸைன்ஸில்
விற்பனைக்குக்கிடைக்காத
ஒரே நகை
அந்தப் புன்நகைதான்.
கவிக் காக்கா,
உங்களுக்கு சத்தியமார்க்கம் நோன்பு கஞ்சி வேனும்னா இதை டிரைப் பன்னுங்க = இங்கே சுட்டவும்... :)
அல்லது
அதிரைநிருபர் (ஸ்பெஷல்) நோன்பு கஞ்சி வேனும்னா இதை டிரைப் பன்னுங்க = இங்கே சுட்டவும்... :)
கஞ்சியை கனொளியை மீள் பதிவு போட்டுடுவோமா ?
அஸ்ஸலாமு அலைக்கும்.
வாழ்த்துக்கள் எல் எம் எஸ் அபுபக்கர்.
இந்த முறை இன்ஷா அல்லாஹ் உங்கள் கடைக்கு வருகிறேன். சபீர் அவர்கள் குறிப்பிட்ட உங்கள் புன்னகையின் அளவை சர்வே செய்யவாவது.
பக்கரின் நிறுவனத்தில் வர்த்தகம் பன் மடங்காய் வளர்ந்து சிறக்க வாழ்த்தும் துஆவும்.
சமீபத்தில் ஊர்போயிருந்தபோது சகோதரர் LMS அபூபக்கர் கடைக்கு போயிருந்தேன். சில புத்தகங்களும், பெண்களுக்கான ஃபேஷன் ஜுவல்லரியும் வாங்கி வந்தேன்.
வெளிநாடுகளில் உள்ள கடைபோல் மிகவும் நேர்த்தியாக அதிரையிலேயே வைத்திருப்பது சந்தோசம்.
பக்கர் கடைக்கு தனியாக சென்றால் மகிழ்வோடு பேசிவிட்டு வந்திடுவேன்...
அதுவே..!
இபுறாஹிமோடு சென்றால் பக்கருக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி... (என்னவாக இருக்குமெ !?)
எனக்கும் இம்முறை அபூபக்கர் அவர்களின் அழகு மிளிரும் அவரின் புன்னகை ஒளிரும் “டிசைன்ஸ்”க்குச் சென்று அவரைக் காணவும் பேசவும் வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக நமதூர் பெண்கள் பட்டுக்கோட்டைக்குச் சென்று அலைந்து வாங்கும் எல்லா விதமான அலங்காரப்பொருட்கள் வீட்டு உபயோகப்பொருட்களுடன் ஒரு “மினி சூப்பர் மார்கெட்”டாக அமைத்துள்ள இக்கடையில் தான் இனிமேல் வாங்குவார்கள். அவர்க்குத் துணையாக ஓர் ஊழியர் இல்லாமல் இருக்கும் ஒரு குறையை நேரிலும் சுட்டிக்காட்டினேன்; வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிது என்று சொன்னார்கள்.
அபூபக்கரின் வணிக முயற்சியில் அல்லாஹ் மென்மேலும் “பர்கத்” செய்வானாக(ஆமீன்)
அதிரை நிருபரில், ஆய்ஷா பல் மருத்துவமனை முதல் இந்த அபூபக்கரின் டிசைன்ஸ் வரை (இன்னும் இன்ஷா அல்லாஹ் பற்பல) நம்மவர்களின் நமதூரில் செய்யும் வணிகத்தை ஊக்கப்படுத்தல் உண்மையில் நல்லெண்ணம் கொண்ட நன்முயற்சி என்பதில் கிஞ்சிற்றும் ஐயம் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்; எனவே, தொடர்க இவ்வூக்கப்பணிகளை! இதனால் நம்மவரின் வாழ்வின் முன்னேற்றத்தில் நாமும் பங்கெடுப்போம்;பெண்களின் வீணான அலைச்சலுக்கும் பொருளாதாரம் மற்றும் ஒழுக்கச் சீரழிவுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.
ஆகவே. இம்மாதிரியான ஆக்கங்கள் எனும் ஊக்கங்கள் ஒருவகையில் “இக்லாஸ்” எனும் உளத்தூய்மையுடன் செய்யும் நல்ல அமல்கள்தான்!
அதுவும் அமலால் நிறையும் ரமலானில்!
வாழ்த்துகள்!! அல்லாஹ் தொழிலில் பரக்கத் செய்வானாகவும் ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய அ.நி வாசகர் அனைவருக்கும் என் இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் .எட்டி இருந்தால்தான் அதன் அருமை தெரியும் என்பார்கள்.அதனை நிதர்சனமாக என் மச்சான் தாஜுதீன் அவர்களின் புகைப்பட கிளிக்
திறமையால் என் கடையின் படத்தைப் பார்த்து பிரமித்து போனேன்.
முழு விவரங்களையும் தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டி அசரவைத்த நெறியாளர் மச்சான் அபு இபுராஹிம் அவர்களுக்கு நன்றிகள் பல.
//சபீர் காக்கா சொன்னது:
டிஸைன்ஸில்
விற்பனைக்குக்கிடைக்காத
ஒரே நகை
அந்தப் புன்நகைதான்.//
face cover ரோடு அந்த (புன்) நகையையும் சேர்த்து தாங்கள் மட்டும் வாங்கி சென்றதாக நான் உணர்கிறேன்.வாழ்த்துக்கள்.
இபுராஹிம் அன்சாரி காக்கா சொன்னது:
இந்த முறை இன்ஷா அல்லாஹ் உங்கள் கடைக்கு வருகிறேன். சபீர் அவர்கள் குறிப்பிட்ட உங்கள் புன்னகையின் அளவை சர்வே செய்யவாவது.
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக புன்னகை என்ற அளவு கோளோடு வருவீர்கள் என்று எதிர் பார்க்கின்றேன்.
எம்.ஹெச்.ஜெ சொன்னது:
பக்கரின் நிறுவனத்தில் வர்த்தகம் பன் மடங்காய் வளர்ந்து சிறக்க வாழ்த்தும் துஆவும்.
ரமலான் மாதத்தில் கேட்கப்படும் துஆ அல்லாஹ் விடத்தில் மறுப்பில்லாமல் ஒப்புக் கொள்ளப் படும் என்று ஆதரவு வைக்கின்றேன்.ஜஜாக்கல்லாஹ்.
ஜாகிர் காக்கா சொன்னது:
வெளிநாடுகளில் உள்ள கடைபோல் மிகவும் நேர்த்தியாக அதிரையிலேயே வைத்திருப்பது சந்தோசம்.
கடை வைப்பவர்கள் சிலவு கொஞ்சம் செய்தால் அதிரையை அமெரிக்காவை போல் மாற்றி விடலாம் காக்கா.
அபு இபுராஹிம் சொன்னது:
இபுறாஹிமோடு சென்றால் பக்கருக்கோ இரட்டிப்பு மகிழ்ச்சி... (என்னவாக இருக்குமெ !?)
பின்னே இருக்காதா?இபுராஹிம் அப்பாவாச்சே!
அபுல் கலாம் காக்கா சொன்னது:
அவர்க்குத் துணையாக ஓர் ஊழியர் இல்லாமல் இருக்கும் ஒரு குறையை நேரிலும் சுட்டிக்காட்டினேன்; வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிது என்று சொன்னார்கள்.
காக்கா உங்களின் சுட்டிக்காட்டலுக்கு இணங்க அல்லாஹ்வின் உதவியால் ஊழிய பெண்மணி சேர்ந்து பத்து தினங்களாகி விட்டது.
கருத்து சொன்ன மற்றும் எங்கள் ஸ்தாபனத்தின் விளம்பரத்தை பார்த்த. பார்க்க இருக்கின்ற அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடை மிக அசத்தலாக உள்ளது, அல்லாஹ் தங்கள் வணிகத்தில் பரக்கத்தையும், வெற்றியையும் தருவானாக. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வரும்போது தங்கள் கடைக்கு வருகிறோம்... வஸ்ஸலாம்.
எண்ணங்கள் சிறந்தால் வாழ்வு சிறக்கும் என்பார்கள்...சகோ.அபூபக்கர் அவர்களின் முகத்தப்பார்த்தாலே தெரிகிறது அவர் புன்னகையை ஒவ்வொரு பொருள் வாங்கும்போது இலவசமாக கொடுப்பவர்போல....அல்லாஹ் உங்கள் வியாபாரத்தில் பரக்கத் செய்யட்டும்..இன்ஷா அல்லாஹ் ஊர் வரும்போது சந்திப்போம்
ஜஸாக்கல்லாஹ் கைரன் யா அபாபக்கர்!
பெண்கள் வாங்கும் பொருட்களின் வணிகமாதலால் பொருத்தமாகப் பெண் ஊழியரை பணிக்கு அமர்த்தியதும் உங்களின் திறமைப் பளிச்சிடுகின்றது.
எங்கள் வீட்டுக்கருகில் உள்ள தெருவில் இருப்பதும் எங்கட்கு ஒரு சிறப்பு; உங்கள் கடையின் தரமான பொருட்கள்- குறைவான விலை பற்றி எங்கள் வீட்டிலும் சொல்லக் கேட்டு மிக்க மகிழ்ச்சி; இப்படிப் பெண்களின் பரப்புரை ஒன்றே உங்களின் வணிகம் பன்மடங்காகப் பெருக வாய்ப்பாகும், இன்ஷா அல்லாஹ்! உங்களைப் பார்த்து எனக்கும் ஆசை வந்து விட்டது; பரம்பரை பரம்பரையாக வணிகக் குடும்பமாகிய நாங்கள் (அதுவும் வணிக இயல் படித்த அடியேன்) இதுபோனற ஒரு கடையை வைத்துக் கொண்டுத் தாயகத்தில் பிழைக் கலாமே என்று மனம் சொல்ல வைத்து விட்டது!
“லேடீஸ் சாய்ஸ்” என்ற பெயரினை நான் சிபாரிசு செய்கின்றேன், நீங்கள் இன்னுமொரு கிளை திறந்தால்.
அல்லாஹ் உங்கள் தொழிலில் பரக்கத் செய்வானாக...
அஸ்ஸலாமு அலைக்கும். என்ன அபுபக்கர் கடை டக்கரா இருக்குபா?ஆனால் உனக்கு போன் செய்தால் இரண்டாவது லைன் மக்கர் பண்ணுதுபா! சரிசெய்யவும்.அல்ஹம்துலில்லாஹ் மேலும் வளம் பெற அல்லாஹ்வை வேண்டுகிறேன் . ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தர்த்திரிப்பாய் அடுக்கப்பட்ட பொருட்களே நண்பன் பக்கரின் கடை மிளிர உதவுகிறது. இன்னும் மிளிரவும், வர்த்தகத்தில் (கட்சி வண்ணமில்லா) கொடிக்கட்டிப்பறக்கவும் து'ஆச்செய்கிறேன்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும்(பட்டான்வாசிகளின் இருப்பிடம்) பாக்கிஸ்தானின் ஒரு குடும்பத்தின் சிறு வயது பெண் பிள்ளைகளின் கழுத்திலும், காதிலும் நம்ம பக்கர் கடையின் (பேஷன் ஜுவல்லரி) காதணிகளும், கழுத்தணிகளும் சந்தோசமாய் ஜொலித்துக்கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்ற முறை நான் ஊர் வந்திருந்த பொழுது நிறுவனத்தின் என் சக உழியர் கேட்டுக்கொண்டதின் பேரில் நான் பக்கர் கடையிலிருந்து வாங்கிச்சென்று அந்த நணபருக்கு அன்பளிப்பு செய்தேன்.
இயன்றால் கடையின் உட்பகுதியிலோ அல்லது தனி இடத்திலோ பெண்களுக்கான உடை நேர்த்தியாக தைக்கும் தையல் கடை வைத்தால் கூடுதல் வணிகமாக இருக்கும் என்பது என் கருத்து. முயற்சி செய்யவும். சகோ. ஷமீமிடம் இது பற்றி கலந்தாலோசிக்கலாம்.
பக்கர் உன் சுயதொழில் அசாத்தியத்தை பார்த்து வியந்தேன் அதற்கான முதல் சல்யூட், உன் உழைப்பு சுய தொழில் முனைவோருக்கு ஒரு முன்னோடியாக இருக்கட்டும், எல்லாம் வல்ல இறைவன் தொழிலில் பரக்கத்தை தருவானாகவும், ஆமீன்
வாழ்த்துகளும் துஆக்களும்.
அல்லாஹ் உங்கள் தொழிலில் பரக்கத் செய்வானாக...
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரைக்கும் அமெரிக்காவுக்கும்.இடையில் முத்துப் பேட்டை என்ற ஊரை பயன் படுத்தி பல வருடங்களுக்கு பிறகு கதைத்த நண்பன் தஸ்தகீருக்கு மனமார்ந்த நன்றி.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரர்கள் .சபாத் அஹமது, அஹமது ஆரிப்,யாசிர் ,தாஜுதீன்,நெய்னா முஹம்மது,அப்துல் மாலிக்,அர அல ஆகியோருக்கு மன தூய்மையோடு நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்.உங்களின் துஆக்களை அல்லாஹ் கபுல் செய்து எங்கள் வியாபாரத்தை பன் மடங்காக பெருக்கி தருவானாக! ஆமீன்.
உங்களுடைய வருகையையும்.சொந்த பந்தங்கள் வருகையையும் எதிர் பார்க்கின்றேன்.
எம்.எஸ்.எம் சொன்னது:இயன்றால் கடையின் உட்பகுதியிலோ அல்லது தனி இடத்திலோ பெண்களுக்கான உடை நேர்த்தியாக தைக்கும் தையல் கடை வைத்தால் கூடுதல் வணிகமாக இருக்கும் என்பது என் கருத்து. முயற்சி செய்யவும். சகோ. ஷமீமிடம் இது பற்றி கலந்தாலோசிக்கலாம்.
நல்ல ஆலோசனை வாழ்த்துக்கள் நெய்னா.
கலாம் காக்கா சொன்னது:
“லேடீஸ் சாய்ஸ்” என்ற பெயரினை நான் சிபாரிசு செய்கின்றேன், நீங்கள் இன்னுமொரு கிளை திறந்தால்.
இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நாடினால் உங்களுடைய சிபாரிசு முதன்மை படுத்தப்படும் காக்கா.
Post a Comment