தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரைப்பட்டினமும் ஒன்று நமது சமுதாயம் சார்ந்த காலஞ்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி நமதூருக்கு பெருமை தேடித்தந்தவர்கள். இந்நிறுவனங்களில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடு மற்றும் மேலை நாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் மேலும் வலுவூட்டும் விதமாக சில தனியார் ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை திறம்பட செய்து ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கின்றன என்றால் மிகையாகாது.
சரி விசயத்துக்கு வருவோம், நமது குழந்தைகள் பள்ளிக் கூடங்களுக்கு கல்வி கற்பதற்காக சென்று வர பயன்படுத்துவது வாகனங்களையே குறிப்பாக ஆட்டோ, ஆம்னி வேன், குட்டி யானை போன்றவற்றில் நிற்கும் நிலையிலும், டிரைவர் சீட்டின் மிக அருகிலும், பின்புற சீட்டில் உட்கார்ந்தும் மற்றும் நிற்கும் நிலையிலும், தலை, கைகளை கரம் சிரம் புரம் நீட்டிக்கொண்டு பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்து வருகின்றனர். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே இவை உள்ளன.
இதில் அதிக எடையுடன் கூடிய அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக மாணவ, மாணவிகள் தங்கள் உடல் எடையில், 5 சதவீத அளவிற்கு தான் எடையை சுமக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளி மாணவ, மாணவிகள் 15 சதவீதத்திற்கும் அதிகமான எடை கொண்ட புத்தக மூட்டையை சுமக்கின்றனர்.
அதிக எடை கொண்ட புத்தக பைகளை சுமந்து செல்வதனால் கழுத்து வலி, கை, கால் வலி, முதுகு வலி போன்ற உடல் உபாதைகள் மேலும் எலும்பு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இதனால் முதுகு கூன் விழுவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
ஒரு ஆட்டோவில் அரசின் விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட என்பதை காற்றில் பறக்க விட்டுவிட்ட இவர்கள், ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு முன்னுதாரனமாக கடந்த கால தின நாளிதழில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் நாம் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.
பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு !
இதுபோன்ற பாதுகாப்பாற்ற வாகனங்களில் தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதி வேகத்தை தவிர்த்து, கூடுதலான குழந்தைகளை ஏற்ற வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களில் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம்.
தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமை என்பதை கருத்தில்கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் அச்சங்கள் நீங்கி அவர்களிடம் நற்பெயரை பெற்று பள்ளியின் தரம் மேலும் உயர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் ( இன்ஷா அல்லாஹ் ! )
விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....
13 Responses So Far:
விபத்துகள் தடுக்கப்பட விழிப்புணர்வு சொல்லும் நிஜாம் அவர்கள் கோரிக்கையை பள்ளி நிர்வாகம் அவசியம் ஏற்க வேண்டும்.
புத்தக மூட்டையின் புலம்பல்
புத்தகம் யாவும் சுமப்பதால்
வித்தக மென்று சொல்வதா?
ஓடி ஆடும் பருவமே
நாடி நரம்பும் சுருங்குமே
கணினி யுகத்தில் இப்படிப்
பணிய வைத்தல் பாவமே
சட்ட மன்றம் இன்னமும்
சட்டை செய்யா திருப்பதேன்?
பாரா ளுமன்றம் இன்னமும்
பாரா முகமாய் இருப்பதேன்?
முதுகு வலியும் முடமும்
புதிய வலியாய் புறப்படும்
ஓட்டை முதுகெ லும்பினால்
நாட்டின் முதுகெ லும்புகள்
மூட்டைச் சுமக்கும் முயற்சியில்
நாட்டைச் சுமக்கப் பயிற்சியா?
போலி யோவின் மருந்துமே
போலி யாகி வருந்துமே
கேள்விக் குறியாம் முதுகிலே
கேள்விக் குறியாம் வாழ்விலே
நோட்டுச் சுமைகள் கூடவே
வீட்டுப் பாடம் சேரவே
களைத்துப் போகச் செய்வதால்
விளையும் பயிரும் முடங்குமே
--
ஒரு சாலை போக்குவரத்துக் காவலரின் நேர்த்தி உங்கள் கட்டுரையில். அவரைப் பின்பற்றினால் விபத்துகள் குறையும்; உங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் ஆபத்து நீங்கும்.
வாழ்த்துகள் தம்பி.
As of Mr. Nijam’s script, all vehicle must have a limit as of theirs capacity. When they carry above this limit, kids feel harmful. Panchayat board can take an action this regard considering on kid’s better health.
Abdul Razik
Dubai
Health, Safety and Environment( HSE )rules and regulations are not strictly followed here:
1) As found in this article, over-loaded vehicles and driver's negligence by talking in mobile phone while driving is against SAFETY RULES.
2) School going children are wearing uniform dress, but they are not wearing foot-wear.
3) People are not keeping aside the wastage or not dropping into waste-bin kept separately; but they are spilling out the wastage on the road.
4) No fire-alarms are found in many places where they are to be installed.
To Bro சேக்கனா M. நிஜாம்
மிகவும் உபயோகமான பதிவு. இதை படித்து நடந்தால் வருங்காலத்தில் பல விபத்துகளை தடுக்கலாம்.
விழிப்புணர்வு வித்தகரின் உச்சக்கட்ட விழிப்புணர்வு பதிவு இவ்வாக்கம்...
ஆட்டோவின் மீட்டரில்கூட ரெண்டுகுழந்தைகளை மாட்டிக்கொண்டு செல்கிறார்கள் இந்த படுபாவிகள்....குழந்தைகளுக்கு உணவுடன் “கலிமா”மாவும் சொல்லிக்கொடுத்து அனுப்பவேண்டிய நிலையை இந்த பணப்பிசாசுகள் உண்டாக்கி இருக்கின்றார்கள்...உடனடியாக நடவடிக்கை எடுத்து திருத்தபடவேண்டியது இது..பள்ளியும் குழந்தைகளின் உயிரின்மீது அக்கறைக்கொண்டு அவசரமாக தீர்வு காணவேண்டும்...பணம் கூடுதலா இருந்தாலும் பெற்றோர்களே பிள்ளைகளை பாதுகாப்பாக அனுப்பவேண்டிய வழிகளை பாருங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.மிஸ்டர் விழிப்புணர்வின் மற்றுமொரு எச்சரிக்கை!வாழ்துக்கள். தலைப்பிலேயே தெரிகிறதே வா"கனங்கள்" இது நம் குழந்தைக்கு கனங்களாகவும், நாமே அதை அழைப்பதும் தான் காரணம். பெற்றவர்களே வா என அழைத்து இந்த கனத்தை பிஞ்சுகளின் மேல் வைக்கிறோம். சிந்தித்து செயல்படுத்தினால் பிஞ்சுக்கள் நிந்திப்பதிலிருந்து தப்பிக்கும்.
ஓர் இனிய செய்தி:
இமாம் ஷாஃபி(ரஹ்)மெட்ரிகுலேஷன் ஸ்கூலிலிருந்து ஓர் அறிவிப்புச் செய்துள்ளார்கள்: “ இப்பள்ளிக்குச் சொந்தமாக மேலும் வாகனங்கள் வாங்கவிருப்பதால் பெற்றொர்கள் இனிமேல் தங்கள் குழந்தைகளைத் தனியார் வாகனங்களில் அனுப்ப வேண்டா” என்று. இதனால் இரண்டு நன்மைகள்:
1) இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ளது போன்று இனி ஆட்டோ மற்றும் தனியார் வேன்களில் மந்தை மந்தைகளாய் அடைத்துக் கொண்டு போகும் அவல நிலைக்கும் அதனால் ஏற்படும் விபத்துகட்கும் முற்றுப் புள்ளி.
2) பாதுகாப்பான முறையில் பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்வதால் பெற்றோர்களின் பயம் குறையும்.
உண்மையில் விழிப்புணர்வு வித்தகரின் ஆக்கங்களில் இவ்வாக்கம்தான் உச்சகட்ட விழிப்புணர்வில் மிக மிக அவசியமான- அவசரமான நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். “விழிப்புணர்வு பக்கங்கள்” நூலின் விழியாக அச்சிட்டிருக்க வேண்டிய அருமையான ஆக்கம்!
தம்பி நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்.
அடுத்து ஒரு முக்கிய பிரச்னையை சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
நமது இயல்பே ஏதாவது விபத்து நடந்த பிறகு - அதற்கு ஒரு பரிகாரம் தேடுவது. எதுவும் ஏற்படும் முன்பே அப்படி ஏற்படாமல் தடுக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. கடந்த வருடம் வேதாரண்யம் அருகே இப்படி குழந்தைகளை ஓவர்லோடு ஏறிப்போன மினி பஸ் குளத்தில் விழுந்து பல இளம் மொட்டுக்கள் உயிர் நீத்தன. அதன்பின்தான் அப்படி ஏற்றுவது தடுக்கப்பட்டது. சிலரது பேராசைக்காக- அளவுக்கு மீறி பிள்ளைகளை அடைத்து- விபத்தை விலை கொடுத்து வாங்குவதை தடுக்க அனைவரும் முயலவேண்டும். முக்கியமாக பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் இதில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.
சேகனா .M .நிஜாம் ...
ஒவ்வொரு படைப்புகளும் ஜாம்..ஜாம்..என்று
இருக்கிறது ..பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின்
அவலநிலையை நன்கு சித்தரித்து காட்டியுள்ளீர்கள் ..
சுமக்கும் புத்தகங்களின் எடை அளவு ..இதனால் ஏற்படும்
சுகவீனம் என்பது முதல் ஆட்டோ .ஆம்னி வேன் டிரைவர்களின்
பணத்தாசை வரை அப்பட்டமான உண்மை ..விழிப்புணர்வு -2
புத்தகத்திற்கு ஏற்ற ஆக்கம் ..இனி வரும் புத்தகத்திற்கு ..
விளம்பர உதவி ஆர்வலர் அன்பளிப்பு பெற்று இலவச ..
பதிப்பு வெளியிடுங்கள் ..எனக்கு புத்தகம் அனுப்பி விட்டிர்களா.?
விழிப்புணர்வு வித்தகரின் உச்சக்கட்ட விழிப்புணர்வு பதிவு
அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர் நிஜாமின் இப்பதிவை .ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் படிக்க வேண்டும்.
பிள்ளைகள் பள்ளிகூடத்திற்கு போய்விட்டால் சரிதான் என்று பெற்றோர்களும் காடையை கூண்டில் அடைப்பது போல் குழந்தைகளை வாகனங்களில் திணிக்கிறார்கள்.
பிள்ளைகளை பாதுகாப்பதில் பெற்றோர்களுக்குத்தான் அக்கறை வேண்டும்,
Post a Comment