'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?
பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் தான் மிஞ்சும்
அவர்களின் ஆரோக்கிய இழப்பின் காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:
1.மோசமான பணி சூழல்
2.மோசமான வாழ்க்கை சூழல்
3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை
4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு
5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்
6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்
7.குடும்பத்தினரின் பிரிவு
8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள்
9.உணவும், உறக்கமும் முறை/நேரம் தவறும்
10.உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
11.ஓய்வில்லாத பணி!
12.ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
13.கடுமையான வெப்பம்
14.பெனடாலும் தைலங்களும் உற்றத்தோழர்கள் ஆகியனவாகும்.
சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.
கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.
தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.
இக்கட்டுரையின் துவக்கத்தில்/தலைப்பில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம். போதும் வாலிபமே கரைந்துக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஏன் இங்கே இவர்களின் பிடியில் நம் திறமையையும், உடல் ஆரோகியத்தையும் இழப்பது போதும் நம் முன்னோர்களின் செய்த இந்த செயல் நமக்கெதுக்கு நம் இந்தியாவில் நிரைய காலியிடங்கள் நிரம்பி வழிய வளைகுடா மற்றும் இதர அயல்நாடு தேவைதான இளைங்ஞர்களே சிந்திப்பீர்
என்ன கொடுமை?உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறதுஎங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும் என் அன்புச் சகோதரிகளே...!! தாய்மார்களே....! இதைப் படித்து விட்டு நீங்கள் கண்ணீர் விடுவதை விட...
உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால்... அந்தச் சகோதரர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்!
நம் முஸ்லிம் சமுதாய நெஞ்சங்களே நம் இந்தியாவில் காலி பணியுடங்கள் நிறைய இருக்கின்றன அதில் சில
சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது.
• அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.
• விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.
• வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17.
• தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
• குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம்.
• விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.
• பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
• இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
நிரந்தரப் பதிவு:
• தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
• பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாவிற்காக காத்திருந்தது போதும் விழித்தெழு இஸ்லாமிய இளைய சமூகமே !
-அதிரை தென்றல் (Irfan Cmp)
5 Responses So Far:
//பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும்.//
ஒரு சிறு குறிப்பு: பணத்தை சம்பாதித்துவிட்டு மட்டுமல்ல சம்பாத்திததை எல்லோருக்கும் வாரி இறைத்துவிட்டு வெறும் கையுடன் வந்தாலும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் கை விட்டுப் போய்விடும்.
//கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.//
கை நிறைய பணத்தை எவ்வளவு பேர் கொண்டு வருகிறார்கள். கடமைகளைக் கழித்துவிட்டு எதிகாலத்துக்கு என்ன செய்வோம் என்று ஏங்கி வருபவர்களும் அதிகம்.
சுமை தாங்கிகளாக இருந்த பலர் இன்று சுமைகளாக கருதப்படுவது நிதர்சனம்.
அருமையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆக்கம். பயன்படுத்த வேண்டிய இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பாராட்டுக்கள் தம்பி இர்பான்.
// நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது.//
இது அடிக்கடி நடந்து கொண்டிருக்கிருப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம் !
இ.அ. காக்கா அவர்களின் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன் !
நல்ல விழிப்புணர்வு... ஆனால் யார்தான் கேட்பது
நாங்கள் படிக்கும்போது கிடைக்காத ஒரு வரப்பிரசாதம் இப்போதுள்ள இளைஞர்களுக்கு கிடைத்திருக்கு, புரிந்து உணர்ந்து விழித்துக்கொண்டு பயன்படுத்தினால் மிக்க நல்லது...
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு !
வாழ்த்துகள் சகோ. இர்பான்
சமுகக்கவலையுள்ள தொகுப்பு...வாழ்த்துகள் சகோ.இர்பாஃன்..தொடருங்கள்
Post a Comment