Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாண்பு மிக்க நோன்பு ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 19, 2012 | , , , , ,

மனிதகுலம் ஈடேற
இஸ்லாம்...
இந்த
மார்க்கத்திற்கே மகுடம்
ரமலான்!

இறையருள்
ததும்பி வழியும் மாதம்...
இது
இளையவர் முதியவர்
யாவரும் விரும்பும் மாதம்!

அமல்களால்
பகலெனத் துலங்கும் இரவுகள்...
இதில்
வணங்கியும் துதித்தும்
வல்லோனைப் போற்றும் மாதம்!

மனிதற்கு மனிதர்
முகமன் இயல்பு,
மாதத்திற்கே முகமன்
மாந்தர் யாவரும்
மகிழ்வோடு முழங்கும் மாதம்!

ஷைத்தான் கட்டப்பட்டு
மெய்தான் மிளிரும் மாதம்...
இதில்
மனங்கள் கட்டுப்பட்டு
வணங்கும் வாழ்த்தும் நாளும்!

புசிப்பதைத் தவிர்த்து
பசியினை விரும்பும் மாதம்...
இது
தாகம் தகிப்பினும்
தணிக்கத் துணியா மாதம்!

இறைமறை ஓதி
நபி வழி பேணி
இறையச்சம் மீறிடும் மாதம்...
இது
இரட்டிப்பு நன்மை
இலவசமாய் அருளும்
இரக்கம் மிக்க மாதம்!

வாயையும் வயிற்றையும்
கட்டுவதோடு...
இது
பொய்யையும் புரட்டையும்
விரட்டிடும் மாதம்!

கணக்கிட்டுக்  கொடுக்கும்
தர்மம்
தனக்கென்று சிறக்கும் மாதம்..,
இது
ஏழை எளியவர்
மேன்மை பெற்றிட
ஈகையை போதிக்கும் மாதம்!

இறைமறை இறங்கிய
இரவினைக் கொண்ட மாதம்...
இது
ஆயிரம் இரவுக்குச்
சமமென முழங்கிய மாதம்!

பசிதாகம் பொறுத்து
பாவங்கள் ஒழிந்த மாதம்...
இது
பொறுமைக்குப் பரிசாகப்
பெருநாளைத் தந்திடும் மாதம்!

பாவங்கள் மன்னிக்கவும்
நண்மைகள் எண்ணிக்கவும்
அடிமனம் நேசிக்கும் மாதம்...
இதை
அனைவரும் வரவேற்போம் வாரும்!

Sabeer AbuShahruk

18 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மாண்பு நிறைந்த மாதத்தின் மகிமையை கவி மூலம் மிகச் சிறப்பாய் சொன்னது பிரமாதம்.

சேக்கனா M. நிஜாம் said...

ரமலானை வரவேற்று அதற்குரிய சிறப்பை விளக்கும் அழகிய கவிதை !

Yasir said...

கவிக்காக்கா மாண்பு மிக்க நோன்பின் மகத்துவத்தை உங்களின் கம்பீரமான கவிநடையில் காண்பதில் பெருமைக்கொள்கின்றோம்..அல்லாஹ் நாம் அனைவரும் இந்த மாதத்தின் பயன்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள தவ்ஃபீக் செய்வானக ஆமீன்

Unknown said...

ரமழானின் இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ள எளிய வழிமுறைகள். ஷெய்க் உஸ்தாத் மன்சூர்
http://adiraipost.blogspot.in/2012/07/blog-post_1160.html

Ebrahim Ansari said...

நோன்பின் பலன்களை ஆரம்பித்து வைக்கும் கவிதை.

கவிஞர் தம்பி சபீர் அவர்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் இன்னும் அளிப்பானாக. ஆமீன்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பசித்தோரின் நிலையரிய
பன்பட்ட மாதம்
இருப்போ இல்லார்க்கு வாரியிரைக்கும் மாதம்

சபீருக்கு சபீரின் சலாம்

crown said...

மனிதகுலம் ஈடேற
இஸ்லாம்...
இந்த
மார்க்கத்திற்கே மகுடம்
ரமலான்!
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆமாம் நன்மையை சேமிக்கும் "மா"குடம்மும் ரமலாந்தான்.

crown said...

இறையருள்
ததும்பி வழியும் மாதம்...
இது
இளையவர் முதியவர்
யாவரும் விரும்பும் மாதம்!
----------------------------------------
ஆமாம் பிற மாதங்களைவிட சிறப்பான பிரமாதமான நன்மைகள் அதிகம் அள்ளித்தரும் மாதம்.

crown said...

ஷைத்தான் கட்டப்பட்டு
மெய்தான் மிளிரும் மாதம்...
இதில்
மனங்கள் கட்டுப்பட்டு
வணங்கும் வாழ்த்தும் நாளும்!
---------------------------------------------
ஆமாம் இந்த மாதத்தில்தான் அல்லாஹ் திருக்குஆனை இறங்க வைத்தான், அதன் மூலம் சைத்தானை நாம் அறிந்து கொள்ள வைத்தான், நீங்கள் சொல்லுவதும் மைதான். இதை கவனம் கொண்டு செய்தால் நன்மைதான்.

crown said...

பாவங்கள் மன்னிக்கவும்
நண்மைகள் எண்ணிக்கவும்
அடிமனம் நேசிக்கும் மாதம்...
இதை
அனைவரும் வரவேற்போம் வாரும்!
------------------------------------------------------
இன்சாஅல்லாஹ் வரவேற்கிறோம். எல்லா நன்மைகளும் எல்லாருக்கும் கிடைக்க அல்லாஹ் துணை நிற்பானாக ஆமின்.

sabeer.abushahruk said...

எம் ஹெச் ஜே:

லண்டனில் நோன்பு துவங்கியாச்சா? அங்கெல்லாம் நோன்பில் நாட்கள் நீளமா?

வயித்து நோன்பு இல்லேல்ல?:)

sabeer.abushahruk said...

தம்பிகள் நிஜாம் / ஹிதாயத்துல்லாஹ்:

நோன்பு உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.



யாசிர்,

முதல் பிறையில் தராவீஹும் சுவிஸ்ட்டார் பவனில் டின்னெருமென நானும் அபு இபுறாஹீமும் அமர்க்கலமாக ரெடியாகிவிட்டோம் ரமலானை வரவேற்க.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

துஆ வுக்கு நன்றி. தங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துகளும் துஆவும்.

சபீர் பாய்,
வ அலைக்குமுஸ்ஸலாம்! நலம்தானே தாங்களும் தங்களின் சித்திக்கும்?

sabeer.abushahruk said...

மாதங்களுக்கெல்லாம் மகுடத்தை சிலாகித்து வாசித்த எங்கள் மகுடத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

கலிஃபோர்னியாவில் என்னிக்கு நோன்பாம்?

ரமதான் கறீம்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

//இறையருள்
ததும்பி வழியும் மாதம்...
இது
இளையவர் முதியவர்
யாவரும் விரும்பும் மாதம்!//

இங்கு ஊரில் இளையவரும் முதிவரும் ஆவலுடன் முதல் நோன்பை எதிர்ப்பார்த்திருக்கிறோம். நான் 7 வருடங்களுக்கு பிறகு நோன்பில் ஊரில் இருக்கிறேன் :):)

crown said...

மாதங்களுக்கெல்லாம் மகுடத்தை சிலாகித்து வாசித்த எங்கள் மகுடத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

கலிஃபோர்னியாவில் என்னிக்கு நோன்பாம்?

ரமதான் கறீம்!
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி! கவிவேந்தே! ரமலான் கறீம். இன்சாஅல்லாஹ் இன்று அதிகாலை(வெள்ளி)முதல் சஹர்!சைத்தானை நோக்கிய முதல் சமர் இந்த வருடத்திற்கு. சமர்பனம்,அர்பனம் எல்லாம் அல்லாஹுக்கு.தூசெய்யுங்கள் நம் ஆகிரத்துக்கு!

KALAM SHAICK ABDUL KADER said...

//ஷைத்தான் கட்டப்பட்டு
மெய்தான் மிளிரும் மாதம்...
இதில்
மனங்கள் கட்டுப்பட்டு
வணங்கும் வாழ்த்தும் நாளும்!//

மெய்தான் உரைத்தீர்; மெய்ஞானம் தந்தீர் கவிவேந்தர் சபீர்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு