சிரியாவில் நடப்பது என்ன? - Part 2 ::: வெற்றியை நோக்கி

அல்லாஹ்வின் திருப்பெயரால்… 

கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நம் அதிரைநிருபர் தளத்தில் சிரியாவில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தோம். இது தமிழக அளவில் நம் சகோதரர்களிடையே நல்ல தாக்கதை ஏற்படுத்தி ஜும்மா மேடைகளிலும் சிரியாவில் நடைந்து வரும் நிகழ்வு பற்றி பேசப்பட்டு, கேட்டவர்கள் அனைவரும் து ஆ செய்தார்கள். 

நம்முடைய உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்து சொன்ன பிரதேசங்களில் சிரியாவும் ஒன்று. அதனால் தான் இஸ்லாமிய வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்களிப்பை செய்த பிரதேசங்களில் சிரியாவும் ஒன்று என்பது அழிக்கப்படாத வரலாறு. 

கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சிரியாவை ஆண்டு வரும் அலாவி என்ற வழிகேட்டு கூட்டம், குர்ஆன் சுன்னாவை தன் வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்து வரும் அந்நாட்டு மக்களை அடக்கியாண்டு வருகிறார்கள். ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் உலமாக்களை கொலை செய்தும் வந்துள்ளார்கள், கடந்த வருடம் அரபுலகில் ஏற்பட்ட புரட்சியின் தொடர்ச்சியால் சிரியா மக்கள் அமைதி வழியில் பேராட்டத்தில் குதித்தனர், போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட்டுத்தள்ளி தன்னுடைய சர்வாதிகாரத்தை நிலை நிறுத்தி வருகிறார்கள். இந்த கொடுமையை சகித்துக்கொள்ளவியலாத, அந்நாட்டு மக்களும், இரானுவத்திலிருந்து விலகிய ஆயிரக்கணக்கான குர்ஆன் சுன்னா பேணும் சகோதரர்கள் ஒன்றிணைந்து ஆயுதம் எடுத்து போராடி வருகிறார்கள். 

அன்மையில் துருக்கி எல்லைபுறத்தில் உள்ள சிரியா அகதிகள் முகாமுக்கு சென்று வந்த சேக் முஹம்மது அல் ஆரிபி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றும் இந்த உரையின் ஆங்கில பொழிப்பெயர்புடன் உள்ள காணொளியை காணுங்கள். இந்த உலமாவின் கேள்விகள் நம்முடைய மனதை நிச்சயம் உறுத்தும்.

சிரியா ஆட்சியாளன் ஷியாக்களிடமும், ஹிஜ்புல்லாவிடமும், ஈரானிடமும், ரஷியாவிடமும், சீனாவிடமும் உதவி கேட்கிறான். சிரியா மக்கள் உதவி கேட்பது அல்லாஹ்விடம் மட்டுமே. 

வழக்கம்போல் அரபுநாடுகள் வாயடைத்து தங்களுடைய ஈமானை உலக முஸ்லீம்களுக்கு அப்பட்டமாக காட்டிவருகிறது என்பது வேதனையே. புனித ரமளான் மாதத்திலும் சிரியாவில் அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து மக்களை கொன்று குவித்து வருகிறான் பஷார் அல் அசத். தற்போது தாக்குதல் அதிகம் நடைபெரும் இடங்கள் டமாஸ்கஸ் புற நகரங்கள், வர்த்தக நகரமான அலெப்பே,  அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்  மக்கள் அதிகம் வசிக்கும் ஹொம்ஸ் போன்ற பகுதிகளில் குண்டு மழையாலும், பீரேங்கி தாக்குதல்களினாலும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.

சென்ற மாதம் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஜமல்கா என்ற இடத்தில் அஹ்லுஸ்ஸுன்னா ஷஹீத் ஒருவரின் ஜனாஸாவை அடக்க செய்ய எடுத்துச்சொல்லப்பட்ட போது அசர் அல் பசர் இராணுவம் வைத்த குண்டுவெடிப்பில் 100க்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த காணொளியை இதோ. இளகிய மனம் படைத்தவர்கள் இதை காணவேண்டாம்.

இந்த கொடுமையை வாய் திறந்து கேட்க இவ்வுலகில் எந்த ஒரு நாடுமில்லை என்றாலும், அல்லாஹ்வின் துனையுடன் அந்நாட்டு அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் ஆயுதமேந்தி போராடுகிறார்கள். இராணுவத்தில் உள்ள அஹ்லுஸ்ஸுன்னா கொள்கையுடம் வீரார்கள் FREE SYRIYAN ARMY என்ற பெயரில் சிரியா பஸர் அசாத் இராணுவத்தை எதிர்த்து போரிட்டு பல இடங்களை கைப்பற்றிய வண்ணம் உள்ளார்கள். அன்மைகால நிகழ்வுகளாக 3 முக்கிய எல்லை பகுதியை  FREE SYRIAN ARMY பசர் இரணுவத்திடமிருந்து கைப்பற்றியுள்ளார்கள், பசர் அசதுக்கு நெருக்கமான 4 முக்கிய பிரமுகர்களை கொன்றதன் மூலம் பசர் அசத்தின் கோபம் உச்சக்கட்டத்தை எட்டி கடுமையான தாக்குதலை இப்புனித ரமளானில் அஹ்லுஸ்ஸுன்னா மக்களின் மீது தொடுத்து கொன்று குவித்து வருகிறான், இது வரை கடந்த 1 வருடத்தில் மட்டும் 15,000 அஹ்லுஸ்ஸுன்னா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

பசர் அசாதுக்கு சவாலாக இருக்கும்  FREE SYRIAN ARMYயின் செயல்பாடுகள் தாக்குதல் பற்றிய செய்தி தொகுப்புகளை பின் வரும் காணொளிகளில் பார்க்கலாம்.
guardian 
 
Aljazeera
 
 Channel 4 
 
சிரியாவில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது. 

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள். 

அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். எவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ஆனால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது. 

மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை. 

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக… 

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. 

யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக.. 

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக… 

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக... 

 புனித ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லீமும் செய்ய வேண்டியது:

நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் உதவி…. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம். 

 தொகுப்பு: அதிரைநிருபர் குழு

9 கருத்துகள்

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக..
யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக.

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

யா அல்லாஹ்! என் வீட்டில், என் தெருவில், என் ஊரில், அக்கம்பக்கத்து ஊரில், பட்டுக்கோட்டை வட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், தமிழகத்தின் தலைநகரில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில், உலகில் இஸ்லாமல்லாத நாடுகளில், உலகில் இஸ்லாமிய நாடுகளில், குறிப்பாக சிரியாவில், மியான்மரில், பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வரும் முஸ்லிம் பெரியவர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், வாலிபர்கள், சிறுவர்கள் என அனைத்து முஸ்லிம்களையும் யா அல்லாஹ்! நீ இந்த சங்கை மிகு ரமழானின் பொருட்டால் உலகில் உலகால் ஏற்படக்கூடிய அனைத்து பலாய் முஸீபத்துக்களிலிருந்தும் அவர்களை எல்லோரையும் பாதுகாப்பாயாக! அவர்கள் மீதான அடக்குமுறைகளை தகர்த்தெறிவாயாக! அவர்களுக்கு பெரும் சேதங்கள் ஏற்படும் முன் எளிய வெற்றியை ஈன்றுத்தருவாயாக! ஆமீன்........

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாருக்கு உன்னுடைய தூய மார்க்கத்தினை உணர்த்து வாயாக !

உன் கருணை கொண்டு அவனுக்கு நேர்வழி கிடைக்க அருள்புரிவாயாக !

Yasir சொன்னது…

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக..
யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக.

sabeer.abushahruk சொன்னது…

//யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக..//

ஆமீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…
யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக..
யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..
யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…
யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக.
aameen aameem yarabbal aalameen

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

அனைத்து துஆக்களுக்கும் எனது ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் சுபுஹானக இன்னீகுந்தும்
மினலாலிமீன்

aa சொன்னது…

நமது தமிழக இஹ்வானி இயக்கங்களாலும் மார்க்க அறிவற்ற மடையர்களாலும் ஹீரோவாகக் கொண்டாடப்படும் ஈரானையும், அஹ்மதி நஜாத் உள்ளிட்ட அதன் அக்கிரமக்கார ஆட்சியாளர்களையும் பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.ஈரான் சிரியாவின் அலவிகளுக்கு முழு ஆதரவு கொடுப்பது மட்டுமின்றி, பஸ்ஸாருல் அஸ்ஸாதிற்கும் அவனுடைய கொலைவெறி செயல்களுக்கும் பக்கபலமாக நின்று செயல்பட்டு வருகிறது.

அஹ்லுஸ் ஸுன்னாவாகிய நம்மை பொறுத்தமட்டில் இஸ்ரேலும் ஈரானும் ஒரே தூரத்தில் தான். ஈரான் எந்த வகையிலும் இஸ்ரேலைக் காட்டிலும் சிறந்தது அல்ல. ஈரானையும் அஹ்மத் நிஜாதையும் கதாநாயகர்களாக காட்டும் வழிகெட்ட இஹ்வானி இயக்கங்களுக்கு சிரியா விவகாரத்தில் நல்ல படிப்பினை உள்ளது.