Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வேகமா... ஸ்பீடா.... ! 28

அதிரைநிருபர் பதிப்பகம் | July 04, 2012 | , ,


வேகமா? விவேகமா? என்றால் விவேகம்தான் சிறந்தது. ஆனால் வேகமாக செல்லும் விந்தையான கருவிகளை கண்டுபிடிப்பது விவேகம்தானே. அன்றைய வயதானவர்களின் நடை வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுத்து நடக்க முடியாது  என்பதை நாம் விவேகமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சுறுசுறுப்பாக காரியங்களை செய்பவர்களை “ஆளு வேகமான ஆளா தெரியுதே” என்று பாராட்டுவோம். வாயு வேகம், மனோ வேகம் என்றும் சொல்வார்கள். காற்றைப்போல் வேகமாக செல்வது வாயு வேகம். மனோ வேகம் என்பது இன்று தமாமிலோ, துபாயிலோ இருக்கும் மனம் திடீரென்று அதிரைக்கு சுட!சுட! இறால் வைத்த வாடா திங்கப் போய்விடும். மனம் ஒரு குரங்கு என்பார்கள்.அது மரத்துக்கு மரம் தாவுவதால். மனது அவ்வளவு வேகமாக தாவும். இதற்கு ஸ்பீட் பிரேக்கோ ஸ்பீட் லிமிட்டோ கிடையாது. 

ஒலியின் வேகம் அதிகமா ஒளியின் வேகம் அதிகமா என்றால் ஒளியின் வேகம்தான் அதிகம் . ஒரே நேரத்தில் மேகங்கள் மோதிக்கொள்ளும்போது   மின்னலும் இடியும் ஏற்படுகின்றன. ஆனால் பூமியில் இருக்கும் நமக்கு முதலில் (மின்னல்) வெளிச்சம் தான் வந்தடைகின்றது. இடி சத்தம் சற்று நேரம் கழித்தே கேட்கிறது. ஆகவே ஒளியின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகம் என்பதை உணரலாம். 


ஊரில் இருக்கும்போது சில வீட்டுத் தாளிப்பு மீன் ஆனத்திற்கு வெந்தயத்தைப் போட்டதும் வரும் வாசனை வேகமாகப் பரவிவரும். அதேபோல் களரி சாப்பாடு தயாராகும் வீடுகளில் இஞ்சி, பூண்டு, அதோடு ரம்பை இலையும் போட்டால் வரும் வாசத்தின் வேகமும் தெருவையே கமகமக்க வைக்கும்  

ஒளியின் வேகம்தான் (வெளிச்சம்) அதிகபட்ச வேகம் இந்த உலகில் அதைவிட வேகமாக எதுவாலும் பயணிக்க முடியாது என்பது பல காலமாக அறிவியல் சமூகம் நம்பி வந்தது ஆனால் தற்போது அதான் நிலை மாறி  உள்ளது, ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் (கிலோ மீட்டர் அல்ல) தூரம் கடந்து செல்லும். 

தற்போது உள்ள போர் விமானங்கள் ஒலி(சத்தம்)யை விட அதிக வேகமாக கடக்கும் வகையில் உருவாக்கி விட்டார்கள் அதாவது காற்றில் ஒலியின் வேகம் வினாடிக்கு 343 மீட்டர் ஆகும் இந்த வேகத்தை தாண்டி போர் விமானங்கள் பறக்கும் பயணிகள் விமானம் அதாவது நாம் பயணிக்க கூடிய விமானம் ரன்வேயில் ஓடி டேக் ஆப் ஆவதன் வேகம் 250 கிலோ மீட்டரில்    இருந்து 300 கிலோ மீட்டார் வேகம் வரை இருக்கும் 

நியூட்ரினோஸ் என்று சொல்லப்படுகிற ஒரு அணு துகல் ஒளியை விட சற்று (வினாடியில் 1,86,௦௦௦ மைலைவிட) சற்று அதிமான வேகத்தில் பயணிப்பதாக தற்போது கண்டு பிடித்துள்ளனர் உலகில் தற்போது மிக வேகமா இயங்க கூடிய ஒன்று இதுதான் அறிவியலில் ஒரு சில கண்டுபிடிப்புகள் அந்த நேரத்தில் (அந்த காலகட்டத்தில்) மட்டும் தான் உண்மையாய் இருக்கும் அதன் பிறகு வேறு மாதிரியான கண்டுபிடிப்புகள் வந்து முந்தைய கண்டு பிடிப்புக்களை பொய்யாக்கிவிடும் இது அறிவியல் நிதர்சனம்  

வினாடிக்கு 640 கி.மீ. என்ற வேகத்தில் செல்லும் ஒரு ராக்கெட் 6 ஆண்டு 7 மாதத்தில் சுமார் 790 கோடி கி.மீ. தூர பயணத்துக்கு பிறகு தான் புதன் கிரகத்தை சென்று அடைய கூடிய சாத்திய கூறுகள் இருப்பதாக கூறுகின்றார்கள் 

இது அனைத்தையும் மிஞ்சக் கூடிய வேகத்தில் ஒரு அற்புத உண்மை நிகழ்வு ஒன்று சுமார் 1433 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் நடந்துள்ளது  அந்த வேகம் பற்றி உலக முஸ்லிம்கள் அனைவரும் பெருமைப்படும்படியான வேகம் அதுவே உலகின் உச்சகட்ட வேகம் எனலாம் அதன் ஹதிஸை கிழே பார்ப்போம்   

‎349 "நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. 

(அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். 

அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். 

பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். 

முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். 

அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். 

அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். 

ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். 

அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.

வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.

இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். 

அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். '

இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். 

வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். 

பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். 

அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். 

முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். 

இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார். 

'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள். 

பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள். 

பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.

பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள். 

இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(தொடர்ந்து) "அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். 

(அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். 

ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். 

நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். 

நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 

'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். 

நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். 

நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். 

இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். 

பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். 

அதைப் பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. 

பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். 

சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். 

ஹதீஸ் எண்: 349, சஹீஹுல் புஹாரி : Volume :1 Book :8

ஆராய்ந்து நேர்வழியில் சிந்திப்பவர்களுக்கு படிப்பினைகளும் பலன்களும் ஏராளம்.

-Sஹமீது
புகைப்படம் : Z.அஃப்சல் ஹுசைன்

28 Responses So Far:

அதிரை சித்திக் said...

விஞ்ஞானத்தையும் ..இசலாமிய ஞானத்தையும்

அழகுற கலந்தளித்த சகோ சாகுல்ஹமீது அவர்களுக்கு

வாழ்த்துக்கள் ..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

வேகத்திற்கு இவ்வளவு விளக்கம் இருக்கா? இந்த பதிவை ரொம்ப வேகமா படித்துவிட்டேன்.. காக்கா...

நபி (ஸல்) அவர்கள் அதிவேக புராக் வாகனத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பயனித்த மிஹ்ராஜ் என்ற அற்புத நிகழ்வில் ஐந்து வேலை தொழுகைகளை அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய சம்பவத்தை எடுத்துச்சொல்லும் இந்த அழகான நபிமொழியை தந்து நற்சிந்தனையூட்டியமைக்கு மிக்க நன்றி காக்கா...

அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக...

Shameed said...

அதிரை சித்திக் சொன்னது…

//விஞ்ஞானத்தையும் ..இசலாமிய ஞானத்தையும்

அழகுற கலந்தளித்த சகோ சாகுல்ஹமீது அவர்களுக்கு

வாழ்த்துக்கள் .. //

தாஜுதீன் சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஹமீத் காக்கா,

//வேகத்திற்கு இவ்வளவு விளக்கம் இருக்கா? இந்த பதிவை ரொம்ப வேகமா படித்துவிட்டேன்.. காக்கா...

நபி (ஸல்) அவர்கள் அதிவேக புராக் வாகனத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் பயனித்த மிஹ்ராஜ் என்ற அற்புத நிகழ்வில் ஐந்து வேலை தொழுகைகளை அல்லாஹ் நம்மீது கடமையாக்கிய சம்பவத்தை எடுத்துச்சொல்லும் இந்த அழகான நபிமொழியை தந்து நற்சிந்தனையூட்டியமைக்கு மிக்க நன்றி காக்கா...

அல்லாஹ் நம் எல்லோரையும் நேர்வழி படுத்துவானாக... //

வலைக்கும் முஸ்ஸலாம்

இந்த நடு சாமத்திலும் இத்தனை ஸ்பீடா வந்து பின்னுட்டம் போட்டதற்கு நன்றி

அதிரை சித்திக் said...

நான் வசிக்கும் பகுதி நடுபகல் ...

நள்ளிரவிலும் படிக்க தூண்டு படைப்புதான் ....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"எடக்கெட இந்தமாதிரி இஸ்லாம் மார்க்கத்தை சிந்திக்கத்தூண்டும் கட்டுரைகளை ஆதாரத்துடன் விளக்கினால் தான் உலக அலுவல்களிலும் அதன் ஆசாபாசங்களிலும் அசந்து கிடக்கும் மனசுக்கு நல்ல இஞ்சி, ஏலக்காய் தட்டி போட்ட பால் டீ குடிச்ச மாதிரி ஈக்கிம்"

சாகுல் காக்கா இந்த மாதிரி அடிக்கடி சொல்லுங்க.........

sabeer.abushahruk said...

வேகமாக வாசிக்க வைத்த விவேகமான கட்டுரை.

ஊருக்கு எப்ப?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஆராய்ந்து நேர்வழியில் சிந்திப்பவர்களுக்கு படிப்பினைகளும் பலன்களும் ஏராளம்.//

ஆம் !

சரியான ஸ்பீடுதான் !

இப்னு அப்துல் ரஜாக் said...

மெய் சிலிர்க்கும் ஹதீஸ்,thanks bro s hameed

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்று மானும் ஈமானும்.
இன்று விஞ்ஞானமும் மெய்ஞானமும்(வரலாறு)

இறைவனின் செயல்கள் மகத்தானது, அதுபோல அவன் நமக்கு தந்த அறிவும் பெருங்கொடை சுபுஹானல்லாஹ்!

Yasir said...

மிஃராஜ் பற்றிய பல சந்தேகங்களை கொண்ட...சந்தேக பிராணிகளுக்கு ஒளியின் வேகம் நல்ல சான்று..Neutrino வேகம் பின்னர் மறுக்கப்பட்டாலும் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்பை காத்து கொள்ளவே பொய்யாக மறுக்கப்பட்டது..சுப்ஹானல்லாஹ்......
e=mc2 சாகுல் காக்கா=செம்மஸ்பீடு10

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


//வேகமாக வாசிக்க வைத்த விவேகமான கட்டுரை.

ஊருக்கு எப்ப? //

வேகமா வரத்தான் ஆசை ஆனால் எங்களின் அரபி கார் ஓட்டுவதில் தான் வேகமே தவிர மற்ற வேளைகளில் படு ஸ்லோவ்

எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகலாம் ஊர் வர

Shameed said...

m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…


//ஆராய்ந்து நேர்வழியில் சிந்திப்பவர்களுக்கு படிப்பினைகளும் பலன்களும் ஏராளம்.//

//ஆம் !

சரியான ஸ்பீடுதான் ! //

நடுவில்தனே நான் முன்னும் பின்னும் நீங்கள் அல்லவா !

Shameed said...

அர அல சொன்னது…


//மெய் சிலிர்க்கும் ஹதீஸ்,thanks bro s hameed //

உண்மையில் இந்த ஹதீஸ்ஸை நான் வாசித்த போது மெய் சிலிர்த்தது

Shameed said...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…


//அன்று மானும் ஈமானும்.
இன்று விஞ்ஞானமும் மெய்ஞானமும்(வரலாறு)

இறைவனின் செயல்கள் மகத்தானது, அதுபோல அவன் நமக்கு தந்த அறிவும் பெருங்கொடை சுபுஹானல்லாஹ்! //

ஆம் நாம் இறைவனுக்கு நிறைய நன்றி செலுத்த வேண்டும்

Shameed said...

Yasir சொன்னது…


//மிஃராஜ் பற்றிய பல சந்தேகங்களை கொண்ட...சந்தேக பிராணிகளுக்கு ஒளியின் வேகம் நல்ல சான்று..Neutrino வேகம் பின்னர் மறுக்கப்பட்டாலும் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்பை காத்து கொள்ளவே பொய்யாக மறுக்கப்பட்டது..சுப்ஹானல்லாஹ்......
e=mc2 சாகுல் காக்கா=செம்மஸ்பீடு10 //

எல்லாம் சரி நண்பன் ரபீக் வாய் வழி கருத்துடன் இருக்கானே எப்ப எழுத்துவழி கருத்துக்கு வாருவான் அவனை கொஞ்சம் ஸ்பீட் அப் பண்ண வேண்டியதுதானே

crown said...

உலகில் தற்போது மிக வேகமா இயங்க கூடிய ஒன்று இதுதான் அறிவியலில் ஒரு சில கண்டுபிடிப்புகள் அந்த நேரத்தில் (அந்த காலகட்டத்தில்) மட்டும் தான் உண்மையாய் இருக்கும் அதன் பிறகு வேறு மாதிரியான கண்டுபிடிப்புகள் வந்து முந்தைய கண்டு பிடிப்புக்களை பொய்யாக்கிவிடும் இது அறிவியல் நிதர்சனம் .
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இது மொத்த கட்டுரைக்கும் கிரிடம். ஆனால் எக்காலத்திற்கும் பொருந்துவது இஸ்லாம் ,எக்காலத்திலும் மாறாதது அல்குரான். அல்ஹம்துலில்லாஹ் வழக்கம்போல் மெய்ஞானம் சொல்லும் விஞ்ஞானம். அதில் பல உதாரணம் எல்லாம் சொல்லி விளக்கியவிதம். பளிச்.வாழ்த்துக்கள்.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோதரர் ஷாஹுல் ஹமீது அவர்களின் இறைத்தூதரின் வின்வெளிப்பயன- அருமை

சென்ற வாரம் இச்சம்பவம் குறித்து அல்கோபார் இஸ்லாமிய தாவா சென்டரில் மவ்லவி முஹம்மது அஸ்ஹர் ஜீலானி அவர்களின் விளக்கவுரை விரிவாக இருந்தது. அதிலிருந்து.....

அல்லாஹ்வின் அற்புத அத்தாட்சிகளுள் அவனது அருமைத் தூதரின் விண்ணுலகப் பயனமும் ஒன்று ஆகும், அதனை முடித்தபின் அவர்கள் பைத்துல் முகத்திஸ்ஸும் சென்று வந்தார்கள். இதனை நம்புவது ஈமானின் ஒரு பகுதிகளின்றும் உள்ளதாகும்.
இதனை அதன் பின் மக்காவாசிகளிடத்தில் நபி(ஸல்)
அவர்கள் எடுத்துரைக்க முன்வந்தார்கள். அபுஜஹலிடம் அவர்கள் அதனைக்கூறும்போது அவன் இதனை அனைத்து மக்களிடமும் நீர் கூற தயாரா? என்று கேட்டான். அதற்கு நபியவர்கள் சரியென கூறியதும் அவன் அனைவரையும் கூட்டி இதோ முஹம்மத் கூறக்கூடிய கட்டுக்கதையை கேளுங்கள் என்று கூறினான். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தான் கண்டதை கூறியதும் அவர்களில் சிலர் கிண்டல் செய்து பேசினார்கள். இவர் ஒரு இரவில் இவ்வளவும் செய்து திரும்பி விட்டாரா? என்று நம்ப மறுத்தனர். அச்சமயத்தில் அவர்கள் பைத்துல் முஹத்திஸ் குறித்து விளக்கம் கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் வாழ் நாளில் என்றுமே அப்படி ஒரு இக்கட்டான சூழல் தமக்கு ஏற்பட்டதில்லை என அறிவித்துள்ளார்கள். அல்லாஹ்விடம் வேண்டி துஆ செய்ததும் அவர்கள் கண்முன் பைத்துல் முகத்திஸ் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டு அவர்கள் அதன் இருப்பிட அடையாளங்களை விபரமாக எடுத்துக்கூறினார்கள்.

அக்காலக் கட்டத்தில் முன் அங்கு சென்று வந்த ஒரு
சிலர் அதனை உறுதிப்படுத்தினர்.
அச்சமயம் வெளியில் சென்றுவிட்டு திரும்பிய அபுபக்கர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி அபுஜஹ்ல் கிண்டலாக கூறினான். இதனை நபியவர்கள் தம் வாயிலிருந்து கூறினார்களா என்று அபுபக்கர்(ரலி) அவர்கள் அவனிடம் திருப்பிக்கேட்க அவனும் ஆம் என்றதும் அப்படியென்றால் இறைத்தூதர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று தனது ஈமானை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். அபுஜஹ்ல் மூக்கறுபட்டான்.
சுப்ஹானல்லாஹ்..

இசம்பவத்திற்குப்பின்னர் ஒரு சிலர் இதனை நம்ப மறுத்ததால் இஸ்லாத்தைவிட்டும் வெளியேறியதாக கூறப்படுகிறது.

படிப்பினைகள் பல
அல்லாஹ்வின் அளப்பறிய ஆற்றலுக்குமுன் உலக
அறிவியல் வல்லுனர்களின் கண்டுபிடிப்புகள் , சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை....

ZAKIR HUSSAIN said...

Dear Tuan Haji Shahul,

முதலில் இதுபோன்ற ஆய்வுக்கட்டுரை விசயங்களை இப்படி அழகாக புரியவைப்பதற்கு பாராட்டுகள்.

ஏர்லைன் சமாச்சாரங்களில் டேக்-ஆஃப் ஸ்பீடு 160 - 180 என நான் படித்ததாக ஞாபகம். சில பைலட்கள் 181 ஐ T/O mark [ take off mark] என சொல்வார்கள்.

டேக் ஆஃஃப் ஸ்பேஸ் 2500ft ..லேன்டிங் 7200ft

இருப்பினும் டேக் ஆஃப் லேன்டிங் விசயங்களில் காற்றின் வீச்சு [wind force ] மிக முக்கியம். இவை அனைத்தும் 747 - 400 க்கு பொருந்துவதால் மற்றவை அனைத்தும் குறைவாகத்தான் இருக்கும்.

சிலர் மேன்வல் படி ஓட்ட முற்படுவதால் சிலர் வீட்டுக்கூரைகளையும் , வயலிலும் இறக்கிவிட்டு பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள்.

ஒரு சிறந்த அனுபவமுள்ள கேப்டன் பக்கத்தில் இருந்து கற்றுக்கொள்பவர்களே [ குரு பக்தியுடன் ] ஒரு சிறந்த விமானியாக முடியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அக்காலக் கட்டத்தில் முன் அங்கு சென்று வந்த ஒரு
சிலர் அதனை உறுதிப்படுத்தினர்.
அச்சமயம் வெளியில் சென்றுவிட்டு திரும்பிய அபுபக்கர்(ரலி) அவர்களிடம் இதுபற்றி அபுஜஹ்ல் கிண்டலாக கூறினான். இதனை நபியவர்கள் தம் வாயிலிருந்து கூறினார்களா என்று அபுபக்கர்(ரலி) அவர்கள் அவனிடம் திருப்பிக்கேட்க அவனும் ஆம் என்றதும் அப்படியென்றால் இறைத்தூதர் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று தனது ஈமானை உறுதிப்படுத்திக்கொண்டார்கள். அபுஜஹ்ல் மூக்கறுபட்டான்.
சுப்ஹானல்லாஹ்..//

சகோதரர் அஹமது தாஹா, அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் நபிகளாரை உண்மைபடுத்திய முதல் ஆண் ஸஹாபி. இதே ஹதீஸ் அதிரையில் சென்ற வார ALM பள்ளி ஜும்மாவில் பேசப்பட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Shameed said...

a.ahamed thaha,alkohoar. ksa, சொன்னது…
//சென்ற வாரம் இச்சம்பவம் குறித்து அல்கோபார் இஸ்லாமிய தாவா சென்டரில் மவ்லவி முஹம்மது அஸ்ஹர் ஜீலானி அவர்களின் விளக்கவுரை விரிவாக இருந்தது. //

வலைக்கும் முஸ்ஸலாம்
சகோ / நண்பர் / பள்ளி தோழர் தாஹா அவர்களின் விளக்கம் அருமை

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//முதலில் இதுபோன்ற ஆய்வுக்கட்டுரை விசயங்களை இப்படி அழகாக புரியவைப்பதற்கு பாராட்டுகள். //

புரிய வைப்பதில் முக்கியமா விஷயம் என்னவென்றால் ஒரு விஷயத்தை புரிய வைக்க எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் நாம் மற்றும் அதை படிக்க கூடியவர்கள் தினமும் பார்க்கும் அல்லது அதை பற்றி அறிந்த பொருளில் இருந்து உதாரணங்கள் காட்டினால் பட்டென படிப்பவருக்கு புரிந்துவிடும்

KALAM SHAICK ABDUL KADER said...

//எப்படியும் இன்னும் ஒரு வாரம் ஆகலாம் ஊர் வர//
வேகமாய் வந்தால் விவேகமாய் எழுதும் உங்கள் முகம் காண முடியும் என்ற ஆவலில் இத்திருமுகம்(மடல்) வழியே அன்புக் கட்டளயாக இப்பின்னூட்டம் இடுகின்றேன். இன்ஷா அல்லாஹ் 14/07/2012 சனிக்கிழமை காலையில் அபுதபி பயணம். (இத்துணை வேகமாய் விடுப்புக் கழிந்து விட்டதே )

தொடர்புக்கு அலைபேசி: 0091 7200332169

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

//வேகமாய் வந்தால் விவேகமாய் எழுதும் உங்கள் முகம் காண முடியும் என்ற ஆவலில் இத்திருமுகம்(மடல்) வழியே அன்புக் கட்டளயாக இப்பின்னூட்டம் இடுகின்றேன். இன்ஷா அல்லாஹ் 14/07/2012 சனிக்கிழமை காலையில் அபுதபி பயணம். (இத்துணை வேகமாய் விடுப்புக் கழிந்து விட்டதே )//

நானும் வேகவேகமாய் முயற்சிகள் செய்கின்றேன்
முடிந்தால் வேகமாய் வந்து முகம் காட்டி முகம் பார்க்கின்றேன்

Unknown said...

நிறைவான பதிவு ! காரணம் மெய்ஞானமும் ,விஞ்ஞானமும் கலந்தது .

ஷாகுல் காக்கா நீங்கள் அறிவியலில் ஆர்வமுள்ளவராக நாங்கள் காண்பதால் உங்களிடம் ஒரு கோரிக்கை .

இன்று ஜூலை 7 ஆம் தேதியில் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய அதிசயம் ''HIGGS BOSON '' பற்றிய இன்றைய கண்டுப்பிடிப்பு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அறிவான விஷயம் .காரணம் '' BIG BANG '' தியிரியைப்பற்றி குரானிலும் சொல்லப்பட்டுள்ளதாக படித்த நியாபகம் (தவறு இருப்பின் திருத்தவும் ).

99 .99 % of ''HIGGS BOSON '' கண்டுப்பிடிததாக சொல்லுகிறார்கள் .இன்னும் 1 % கண்டுப்பிடிக்க வேண்டியுள்ளது .மேலும் நம் கண்ணுக்கு எட்டிய பிரபஞ்சம் என்பது வெறும் 4 % மட்டுமே பாக்கி 96 % என்கிறார்கள் .

ஆகவே நீங்கள் எங்களுக்காக சிறு முயற்சி எடுத்து மேலுள்ளவைகளை எங்களுக்கு புரிகிறமாதிரி எளிய நடையில் தருமாறு அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்ளுகிறேன் .

இது தொடர்பான லிங்க்

http://www.cnn.com/2012/07/04/tech/physics-higgs-particle/index.htmlடர்பான

Unknown said...

[[இன்று ஜூலை 7 ஆம் தேதியில் ]]
ஜூலை 4 ஆம் தேதி என்று வாசிக்கவும்

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் சாவன்னா,
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்.
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கெல்லாம் இனிது.

ஏதோ அப்பபோ அறிவியல் பேசும் சாவன்னா ஆன்மிகத்தையும் சேர்த்துத் தரும் போது எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
Jazakkallah Hairan.
N.A.Shahul Hameed

Shameed said...

harmys .abdul rahman சொன்னது…

//இன்று ஜூலை 7 ஆம் தேதியில் விஞ்ஞானத்தில் மிகப்பெரிய அதிசயம் ''HIGGS BOSON '' பற்றிய இன்றைய கண்டுப்பிடிப்பு மிகவும் கவனிக்கப்பட வேண்டிய அறிவான விஷயம் .காரணம் '' BIG BANG '' தியிரியைப்பற்றி குரானிலும் சொல்லப்பட்டுள்ளதாக படித்த நியாபகம் (தவறு இருப்பின் திருத்தவும் ).
//

மேற்கண்ட செய்தியை நானும் படித்தேன் இது மிகப்பெரிய தியறியாய் இருக்கின்றது முயற்சித்தால் முடியாதது இல்லை ,தற்போது நான் ஊர் செல்லும் தருவாயில் இருப்பதால் தற்போதைக்கு இது இயலாத காரியம் .இன்ஷா அல்லாஹ் ஊர் போய் வந்து முயற்சி செய்கின்றேன்

Ebrahim Ansari said...

அன்பு மருமகன் சாகுல்,

வெகுதூரத்துக்கு வேகமாக வந்துவிட வேண்டிய நிலையால் விவேகத்துடன் எழுதப்பட்ட உனது ஆக்கத்தை வேகமாக நான் படிக்க இயலவில்லை.

பாராட்டுக்கள். உனது வழக்கமான வெங்காய வெடிகளோடு ஆரம்பித்தாலும் அனைவரும் பாராட்டும்படியான நல்ல ஆக்கத்தை தந்து இருக்கிறாய். வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு