பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்
பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்
குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*
திண்ணமுடன் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்
பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்
குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*
திண்ணமுடன் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்
--
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
15 Responses So Far:
மாதம் இதன் மகிமை பிரமாதம்
ரமலான் இதில் நன்மைகள் மடங்காய் பொழியும் ரஹ்மான்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
வாங்க கவியன்பன். உட்காருங்க. நல்லா இருக்கீங்களா? நாங்கள் அல்லாஹ் உதவியால் நல்லா இருக்கோம்.
இன்று மூன்றாவது நோன்பு சகர் முடித்து- உங்கள் கவிதையையும் படிக்கும் பாக்கியம் தந்து இருக்கிறீர்கள். மாஷா அல்லாஹ்.
தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
வஸ்ஸலாம்.
//*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*//
ஒவ்வொரு வரியிலும் குதூகலம் !
ரமலானின் மகிமை கலாம் காக்கா அதனை தன் கவி வழியில் தந்திருப்பதோ அருமை
//உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்//
இதை உணர்ந்து எழுதவும், அறிந்து படிக்கவும் ஒரு தனி உணர்வும் அறிவும் இருக்க வேண்டும்.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் சகோதரர்களே! மூன்றாம் நோனபின் “இஃப்தார்” நேரத்தில் உங்களுடன் “நோன்புக் கஞ்சி” கலயத்துடன் - பின்னூட்டக் கலக்கலுடன் உடன் அமர பேறு பெற்றேn; அல்ஹம்துலில்லாஹ் !
மீண்டும் என் கவிதை “இலக்கியத் தரமிக்க” இத்தளத்தில் பதியப்படுமா? என்ற என் ஏக்கம் நீங்கியது கண்டு பேரானந்தம்! கவிவேந்தரும்; கனடா கவிஞரும் உலா வரும் இத்தளத்தில் இச்சிறியோனுக்கும் வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றியை “ஜஸாக்கல்லாஹ் கைரன்” எனும் துஆவுடன் உளப்பூர்வமாய்த் தெரிவிக்கிறேன்!
உண்மையில் சகோ. ஜாஹிர் கூறுவதும் முற்றிலும் உண்மையே; ////உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்//
என்ற இவ்வரிகளின் பொருள் காண முடியாமல் எனக்கு இவ்விருத்தப்பா எழுத பாடம் நடத்தியப் புலவர் -நியூஜெர்சியில் வாழும்- இலந்தை இராமசாமி்யார் என்பார் என்னிடம் விளக்கம் கேட்டார்கள். ஹிதாயத் எனும் நேர்வழி பெற்ற நம்மவர்க்கு விளங்கும் அகமிய உண்மைகள் சிலருக்கு விளங்காமல் போகும்! “அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் ஐந்து கடமைகளும் உயிர் எனும் ஆன்மாவுக்கு உணவாகி நாளை மறுமையில் அவ்வான்மா “சக்தி” பெற்றதாக அமையும்” என்ற ஓர் உண்மையைப் படித்திருந்தேன்; அக்கருத்தை இவ்விடம் பொருத்தமாக- விருத்தப்பாவில் பொருத்தி விட்டேன்; மேலும் அவ்வரிகளின் அமைப்பும் “புதுக்கவிதை நடை” என்பதும்; அவ்வண்ணம் புதுகவிதை நடையினை மரபுக்கவிதைக்குள் புகுத்திட வேண்டும் என்பதும் என் பேரவா; அதனையே ஈண்டு யாத்திட்டேன்; அன்புச் சகோதரர்- “உள்ளங்களை ஊடுருவிப் பார்க்கும்” ஆற்றல் மிக்க “உளவியலார்”- ஜாஹிர் அவர்களும் இப்பாடலின் முத்தாய்ப்பான விடயத்தை முத்துக் குளித்து விட்டார்கள்; சபாஷ்!
கவியன்பன்,
இங்கு பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் ஏற்புரை எழுத முனைவது சற்றே அவசரக்குடுக்கைத்தனம்.
காரணம், உலகின் பல பகுதியிலும் உள்ள வாசகர்கள் அவரவரகளின் ஓய்வு நேரத்திற்கேற்பவே இங்கு வாசிக்க வருவர். எனவே, பொறுமை ப்ளீஸ்
(என் பின்னூட்டம் தாமதமானதை சமாளிக்கவே இவ்வளவு பில்ட் அப் என்றெல்லாம் ச்செக் வைக்கக் கூடாது :))\
ரமளானை வரவேற்றும் வாழ்த்தியும் நிற்கும் மனிதனின் எண்ணமும் எழுத்தும்கூட நிச்சயமாக அமல்தான்.
அதிலும் குறிப்பாக, சிரத்தையெடுத்து ரமலாளின் சிறப்புகளை அருமையான கவிதையில்/செய்யுளில் வார்த்தது தங்களுக்கு கூடுதல் நன்மைகளை அல்லாஹ்விடம் பெற்றுத்தரும்.
ஜஸாகல்லாஹ் க்ஹைர்.
அதிரை நிருபர் மட்டுமன்றி அதிரையின் எல்லாத் தளங்களிலும் தங்களின் கவிதைகள் பதியப்பட்டு சிறப்புற வாழ்த்துகள்.
அன்புக் கவிநண்பா கலாம்,
>>>>>பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்>>>>>>
பசித்திரு தனித்திரு விழுத்திரு என்ற
புகழ்பெற்ற வரிகளைக் கொண்டு
அழகாகத் தொடங்கி இருப்பது சிறப்பாக இருக்கிறது
>>>>>>>>>>
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
>>>>>>>>>
இவையெல்லாம் கவிதைக்கான மகுட வரிகள்.
அன்புடன் புகாரி
அமலால் நிறையும் ரமலான் தன்னை
அழகாய் நினைவில் பதிவ தற்காய்
இனிதாய்க் கவிதை யாத்த தற்கே
இனிக்கும் நன்றி கூறு கின்றோம்...
வஸ்ஸலாம்.
அஹ்மது ஆரிஃப்.
22 ஜூலை, 2012 12:55 pm
ரமலான் பற்றிய கவிதை ..
அற்புதம் ..நல்ல சொற்களை தேந்தெடுத்து
கையாண்டுள்ளீர்கள் ..மனமும் வசீகரமும் கொண்ட
நல்ல பூக்களை தேர்ந்தெடுத்து ..கோர்த்த பூமாலை போல
தங்களின் பா மாலை நல்ல வசீகர மாக உள்ளது
//இங்கு பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் ஏற்புரை எழுத முனைவது சற்றே அவசரக்குடுக்கைத்தனம்.//
பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம்; மறுமொழிக்கு உடன் மடல் இடல் கடன் என்ற பழக்கம் முகநூலில் முகம்புதைத்த காலம் மற்றும் என் சொந்த வலைத்தளத்தில் புகுந்த காலம் முதலாய் “பழக்க தோசம்” என்றானது; எனவே உங்களைச் “செக்” வைக்கவோ “செக்” பண்ணவோ கிஞ்சிற்றும் அடியேனுக்கு விருப்பமில்லை; மூத்த சகோ. இ.அ.காக்கா அவர்களைப் போலவே நானும் காய்களின்றி அவுட் ஆகிவிட்டேன்!
இனி, இன்ஷா அல்லாஹ் அ.நி. வழக்கப்படி என் கவிதையின் முடிவாக “ஏற்புரை வழங்கி விட்டால் சரிதானே” ஏற்பீராக!
கவியன்பன்,
பின்னூட்டத்திற்குப் பின்னூட்டம். கேள்விகளுக்கு பதில் என்னும் தங்களின் நிலைப்பாடும் சிறப்புதான்.
ஆயினும்,
நிறைவாக ஓர் ஏற்புரையும் எழில்தான்.
//நிறைவாக ஓர் ஏற்புரையும் எழில்தான்.//
ஆம் அவ்வண்ணம் செய்வதென்றே என் எண்ணம் சொல்லியது; அதுவும், அறிஞர் ஆரிஃப். எழுத்தாளர் சித்தீக் போன்றோரின் கருத்துரைகள் இடம் பெற்றுள்ள இவ்விடத்தில் ஏற்புரையை இறுதியில் இடுவேன்;உளவியலார் - உங்கள் உற்ற நண்பர் ஜாஹிர் அவர்களைப் போல் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு ஏற்புரை இடுதல் சாலச் சிறந்த பண்பு.
ஏற்புரையை ஏற்பீராக! அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ.ஜெஹபர் சாதிக்:
உங்கள் துஆ கபூல் ஆகட்டும்.
மூத்த சகோ. இப்றாஹிம் அன்சாரி காக்கா:
என் கவிதைகளை விரும்பிப் படிப்பதும் உங்களின் உள்ளத்தில் அரும்பி நிற்கும் அன்பின் வெளிப்பாடென்று அடியேன் நன்கு அறிவேன்.
நெறிமுறைகளைச் சரியாகப் பயன்படுத்தி ஊடகத்துறையில் உண்மை,நேர்மை, துணிவுடைமை என்ற கொள்கையில் சற்றும் பிறழாத நெறியாளர் சகோ.அபூ இப்றாஹிம் (நெய்னாதம்பி):
குதூகலம் எனக்குத் தான் குன்றின் மேலிட்ட விளக்காக என் படைப்புகளை உங்கள் தளத்தில் ஏற்றி வைத்ததனால்.. ஜஸாக்கல்லாஹ் கைரன்.
கவிவேந்தர் சபீர்:
கவிதையின் “கரு”வையே உங்களின் கருத்துரையாகப் பின்னூட்டமிடும் அருமையான முறையை உங்களிடம் கைவந்த கலையாக வெகுநாட்களாய் அவதானிக்கிறேன் (எனது “ஈரம்” கவிதம் தொடங்கி இந்தக் கவிதை வரை)
ஆழமாய்ப் படிக்கும் உங்கள் ஆழ்மனத்தின் ஊற்றாகவே உங்களின் கருத்துரைகளை ஏற்கிறேன்.
கனடா கவிஞர் “அன்புடன்” புகாரி:
நீங்கள் உச்சத்தில் இருக்கும் கவிப்பேரரசால் மெச்சப்பட்டு உச்சத்தில் இருக்கும் பெருங்கவிஞர்; அதனாற்றான் எங்குக் கவிநயம் சொட்டும் என்று ஆய்வறிந்து அறிக்கையாகச் சொல்லி விட்டீர்கள். என் கவிதைத் தொகுப்பை pdf உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விட்டேன்; கிடைத்ததா? உடன் உங்களின் வாழ்த்துரையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
அறிஞர் அஹ்மத் ஆரிஃப்:
புலவரின் மூத்த புதல்வர் வழுத்தும்
நலமிகு வாழ்த்தில் நயந்து
”தமிழூற்று” அதிரை சித்திக்:
என் பாமாலை வாசம் என் மீது உங்களின் பாசம் உண்டாக்கியதென்றால் அஃது என் வாக்கியம் பெறும் பாக்கியம்!
ஏற்புரை வரை நோன்பு நேரத்தில் பொறுமையுடன் உறங்காமல் விழித்திருந்த உங்களனைவர்க்கும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கட்டுமாக(ஆமீன்)
“சுகர்ஃப்ரீ சுவிங்கம் ப்ளீஸ்”
To Bro.Zahir:
முன்னுரையில் பின்னூட்டத்தில் உங்களைப் புகழ்ந்து சொன்ன வரிகள் என் ஏற்புரையாகவும் ஏற்பீராக!
Post a Comment