Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தள்ளுவண்டி பஜ்ஜியும் ரயில் டிக்கெட்டும் 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 18, 2012 | , , , , ,


இய‌ற்கை வ‌லை பின்னிய‌ ர‌யில் நிலைய‌த்திலிருந்து ஒன்ற‌ரை கி.மிட்ட‌ரில் க‌ட‌ற்க‌ரை. இப்போதுள்ள‌ சூழலில் த‌மிழ்நாட்டை விற்றால்தான் அங்குள்ள சேற்றை அக‌ற்ற‌முடியும் அவ்வ‌ள‌வு அழ‌கான‌ க‌ட‌ற்கரையை ப‌ராமாரிப்பின்றி தேமே என்று வைத்திருக்கிறார்க‌ள்.இப்போது ர‌யில‌டியின் வேறு ப‌குதியிலிருந்து ந‌ல்ல‌ முறையில் தார் ரோடு போட்டு க‌ட‌ற்க‌ரைக்கு வாக‌ன‌ முறையில் எளிதாக‌ போகும்ப‌டி செய்திருக்கிறார்க‌ள்.க‌ட‌ற்க‌ரையை ஒட்டிய‌ ப‌குதியில் வாழ்ப‌வ‌ர்க‌ளின் வீட்டுக்கூரையில் அடிக்கும் உப்பின் ம‌ண‌ம் ஏதோ ஒன்றை உண‌ர்த்தும்..


'ராத்திரி வேளையில‌ அங்கிட்டு போவ‌திய்ய‌.. ந‌ரி வ‌ரும் ' என்று ப‌ய‌முறுத்துவார்க‌ள்..

'த‌னியா யாராவ‌து மாட்டினா ந‌ரி ந‌ம்க‌ண்ணில் ம‌ண்ண‌ தூவிவிட்டு ஊளையிடும் ' என‌ ஏக‌த்துக்கும் பீதியை உண்டாக்கும் த‌க‌வ‌ல் அளிப்பார்க‌ள்..

அந்திசாயும்முன் அங்குள்ள‌ உப்ப‌ள‌த்தில் கிரிக்கெட் விளையாடுவார்க‌ள் நானும் விளையாடியிருக்கிறேன் எவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மான‌ இய‌ற்கை ஏழையாயிருந்தாலும் ஊரிலேயே இருக்க‌னும் என்ற‌ கூற்று எங்க‌ ஊருக்கு பொருந்தும்.

மாலை நான்க‌ரை ம‌ணிக்கு மாய‌வ‌ர‌ம் காரைக்குடி மார்க்க‌ ர‌யில் போன‌பிற‌கு நாற்ப‌து வ‌ய‌தை தாண்டிய‌வ‌ர்க‌ள்,ந‌டுத்த‌ர‌ வ‌ய‌தின‌ர் சில‌ச‌ம‌ய‌ம் ர‌யில‌டியில் உட்கார்ந்து இய‌ற்கை காற்றை சுவாசிப்பார்க‌ள்.லாலுபிர‌சாத் யாத‌வ் ர‌யில்வே ம‌ந்திரியாக‌ இருந்த‌போது எங்க‌ ஊர் ர‌யில‌டிக்கு உட்காரும் ப‌டிக்கு க்ரானைட் க‌ல்லாக‌ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌து.

'செய்ய‌து பீடி வெலய‌ ஏத்திட்டாம்மா ' என்ற‌ப‌டி வ‌ந்து அம‌ரும் அறுப‌தைத் தொட்டிருக்கும் ஒருவ‌ர்.ர‌யில‌டியில் எதிர் ப‌குதியிலிருக்கும் காடுக‌ளில் முள்ளை வெட்டித் த‌லையில் வைத்துக்கொண்டு போகும் க‌டற்க‌ரையோர‌த்தில் குடிசை போட்டு வாழும் பெண்க‌ள் அவ‌ர்க‌ளின் வீட்டுத் தேவைக்கும்,சில‌ச‌ம‌ய‌ங்க‌ளில் அந்த‌ விற‌குக‌ளை விற்றும் வாழ்க்கையை ந‌க‌ர்த்துப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்.காலையில் போகிற‌வ‌ர்க‌ள் அந்திசாயும் நேர‌த்தில் அந்த‌ ர‌யில‌டி வ‌ழியாக‌ திரும்புவார்க‌ள்..

ஸ்டேஷ‌ன் மாஸ்ட‌ர்க‌ளை அடிக்க‌டி மாற்றுவார்க‌ள் ஒருமுறை குஜ‌ராத்தைச் சேர்ந்த‌வ‌ர் ஸ்டேஷ‌ன் மாஸ்ட‌ராக‌ வ‌ந்திருந்தார் த‌மிழை க‌ஷ்ட‌ப்ப‌ட்டு ப‌ழ‌கியிருந்ததாக‌ சொல்வார். சாதார‌ண‌ த‌மிழ் புரியலாம் ஆனால் எங்க‌ள் ஊரின் பேச்சு வ‌ழ‌க்கு புரிய‌ அந்த‌ ஊரிலேயே பிற‌ந்த‌ இருக்க‌னும் ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் திண‌றிய‌தாக‌ சொன்னார்..அங்குள்ள‌வ‌ர்க‌ள்தான் உத‌வியிருக்கிறார்க‌ள்.டிக்கெட் எடுக்க‌ வ‌ரும் ப‌ல‌ர் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு இல‌வ‌ச‌ம் என்றே வ‌ருவார்க‌ளாம்.டிக்கெட் க‌வுண்ட‌ரில்,

'த‌ம்பி மூணு டிக்க‌ட் குடுங்க் திருத்திர‌பூண்டிக்கு '

ஆனால் ஐந்து பேர் இருப்ப‌ர்.

'அம்மா உங்க‌ பைய‌னுக்கும் டிக்கெட் எடுக்க‌னும்மா?'

'ஆ... இது சின்ன‌ப்புள்ள‌...'

12 வ‌ய‌தை தாண்டிய‌பிற‌கும் சின்ன‌ப்புள்ளை.. இப்ப‌டியான‌ சுவ‌ராஸ்ய‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள் அங்கே ந‌ட‌க்கும் முன்பெல்லாம் க‌ம்ப‌ன் எக்ஸ்ப்ர‌ஸ் காரைக்குடி சென்னை மார்க்க‌ ர‌யில் எங்க‌ள் ஊருக்கு இர‌வு எட்டு ம‌ணிக்கு வ‌ரும் முதியோர்க‌ளுக்கும்,நோயாளிக‌ளுக்கும் பேருத‌வியாக‌ இருந்த‌து..பிராட்கேஜ்ஜாக‌ மாத்த‌ப்போகிறோம் என்று அந்த‌ எக்ஸ்ப்ர‌ஸ்ஸையே நிறுத்திவிட்டார்க‌ள்..இந்தியாவிலேயே மீட்ட‌ர்கேஜ் இருக்கும் ஒரே ப‌குதி எங்க‌ள் ப‌குதி ம‌ட்டும்தான்.க‌ர‌டியாய் க‌த்தியாச்சு, உண்ணாவிர‌த‌ம் இருக்க‌வெல்லாம் யோகா தெரிந்திருக்க‌னும் அத‌ற்க்கெல்லாம் யாரும் த‌யாரில்லை..

ர‌யில‌டியிலிருந்து க‌ட‌ற்க‌ரைக்கு ந‌ட‌க்க‌ முய‌ற்சித்தோம் நானும் என் ந‌ண்ப‌ர்க‌ளும்.எவ்வ‌ள‌வு ப‌ர‌ந்த‌ வான்வெளி ம‌னித‌ர்க‌ளின் அக‌ங்கார‌ம்,போட்டி,ஏற்ற‌த்தாழ்வு போன்ற‌வ‌ற்றை ம‌ண்டியிட‌வைக்கும் அள‌வுக்கு இருக்கிற‌து இய‌ற்கை.ஊரிலிருந்தால் கைலிதான் க‌ட்டியிருப்போம்..ப‌டிப்பு,வேலை இது ரெண்டுக்கு ம‌ட்டும்தான் பேன்ட்..மெட்ராஸ்க்கே கைலியோடு போன‌ அனுப‌வ‌ம் உண்டு என‌க்கு..எங்க‌ளூரில் வேட்டி என்றுதான் அழைக்க‌ப்ப‌டும்.வெள்ளை,க‌ல‌ர் என்று ப‌ல‌ ர‌க‌ங்க‌ளில் இருக்கும் வ‌ஸ்து வேட்டி..வேஷ்டி என்ப‌து ம‌ருவி வேட்டியாகியிருந்த‌து அந்த‌ வேட்டியை முட்டி தெரிய‌ க‌ட்டினால் அத‌ற்க்குப் பேர் க‌ச்சை..இப்ப‌டியாக‌ இந்த‌ வேட்டியை விவ‌ரிக்க‌வே ஒரு ப‌குதி தேவைப்ப‌டும்..

ந‌ட‌ந்தோம் ம‌ண‌லில் சாய‌ங்கால‌ம் என்ப‌த‌னால் ம‌ண்ணிலிருந்த‌ சூடு அற‌வே விட்டுப்போயிருந்த‌து அப்ப‌டி போக‌யில் அங்கே ஒரு ப‌ழைய‌ க‌ட்ட‌ட‌ம் எதிர்ப‌டும் சின்ன‌துதான் முன்பொரு கால‌த்தில் அது க‌ஸ்ட‌ம்ஸ் ஆபிஸ்'ன்னு ர‌யில‌டியில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெரிய‌வ‌ர் சொல்ல‌ கேட்டிருக்கிறேன்.க‌ல‌ங்க‌ரை விள‌க்குகூட‌ இருந்திருக்கிற‌து பெரிய‌ அளவில் என்று சொல்ல‌முடியாவிட்டாலும் சொல்லும்ப‌டியான‌ க‌ட‌ல்சார்ந்த‌ வாணிப‌ம் ந‌ட‌ந்திருக்கிற‌து..

தி ஹிந்து ஆங்கில‌ பேப்ப‌ரில்கூட‌ வெத‌ர் ரிப்போர்ட்டில் த‌மிழ்நாட்டு வ‌ரிசையில் எங்க‌ள் ஊரைத்தான் முத‌லில் கொடுத்திருப்பார்க‌ள்..மீட்ட‌ரால‌ஜி என‌ப்ப‌டும் வானிலை மைய‌ம் உண்டு எங்க‌ளூரில் நான் ஒரு த‌ட‌வை வெளியில் நின்ற‌வாறு பார்த்திருக்கிறேன்..ம‌ழையைப் ப‌ற்றியோ அல்ல‌து புய‌ல் எச்ச‌ரிக்கையைப் ப‌ற்றியோ இதுவ‌ரை நான் அறிந்து ஊருக்கு ம‌த்தியில் வ‌ந்து அறிவித்த மாதிரி த‌வ‌லில்லை..இம்மாதிரி வானிலை ச‌ம்ப‌ந்த‌மான‌ விஷ‌ய‌ங்க‌ளில் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌தாக‌வே இருந்திருக்கிற‌து எங்க‌ள் ஊர்..கார‌ண‌ம் க‌ட‌ல்..

அந்த‌ ப‌ழைய‌ க‌ஸ்ட‌ம்ஸ் க‌ட்ட‌ட‌த்திற்க்கு போக‌ விருப்ப‌மில்லை விவ‌ரிக்க‌முடியாத‌ அள‌வுக்கு அழுக்காய் இருந்த‌து..உள்ளே உடைந்த‌ சாராய‌ பாட்டில்க‌ளும் கிட‌ந்த‌து..ந‌ட‌ந்தோம் சாய‌ங்கால‌ காற்று எங்க‌ளை த‌ள்ளிய‌து..க‌ண்ணுக்கு எட்டிய‌ தூர‌ம்வ‌ரை இய‌ற்கை. ந‌ட‌க்கையில் சில‌ சிப்பிக்க‌ள் காலில் த‌ட்டுப்ப‌டும் சில‌வை மூடிய‌வாறே கிட‌க்கும்..அதை ரெண்டாக‌ப் பிரித்தால் அடிக்கும் க‌விச்சு(அ)நாற்ற‌ம் சொல்ல‌முடியாத‌து..அந்த‌மாதிரி விஷ‌ய‌ங்க‌ளில் நான் ஈடுப‌டுவ‌து கிடையாது க‌ச‌க்கும் என்ப‌தால் பாக‌ற்காயை சாப்பாட்டிலிருந்து பாய்காட் ப‌ன்ற‌வ‌ன் நான்..இப்ப‌டியாக‌ ந‌ட‌ந்துக்கொண்டே இருப்போம்..க‌ட‌ல் அலையின் ச‌த்த‌ம்கூட‌ கேட்க‌வில்லை,இன்னும் போக‌னும் என்கிற‌ வேளையில் ம‌ணியை பார்த்தால் ஐந்து ம‌ணி முடிவுக்கு வ‌ந்து ஆறு ம‌ணியை நெருங்கிக் கொண்டிருக்கும்..குழுவில் ஒருத்த‌ன் முன‌ங்குவான்,

'டேய் ஒரு வேல‌ இருக்குடா ம‌ற‌ந்தேப் போய்டேன் ' என்பான் உள்ள‌ங்கையை நெற்றியில் த‌ட்டிய‌வாறு..ஒருத்த‌னுக்கு ந‌ம்ப‌ர் ஒன் வ‌ந்தா ம‌ற்ற‌வ‌னுக்கும் வ‌ர்ற‌ மாதிரி ஆளாளுக்கு ஏதாவ‌து ஒரு கார‌ண‌த்தை சொல்லி வ‌ந்த‌ த‌ட‌த்திலேயே திரும்பிவிடும் ச‌ம‌ர்த்த‌ர்க‌ள் எல்லாவ‌ற்றுக்கும் ந‌ரி மேட்ட‌ர்தான் கார‌ண‌ம் என்று பிற்பாடுதான் தெரிந்த‌து.மெஜாரிட்டி திரும்பிப் போக‌னும் என்று இருந்த‌தால் நான் சொன்ன‌து எடுப‌ட‌வில்லை.வேண்டுமானால் நீ ம்ட்டும் போ என்ற‌து குரூப்பின் பார்வைக‌ள்..

சாதார‌ண‌மாக‌ ஊரின் ந‌டுப்ப‌குதியில் ஆறு ம‌ணிக்கு மேல் வ‌ந்துவிடும் இருட்டு,க‌ட‌ற்க‌ரைப் போன்ற‌ இட‌ங்க‌ளில் கொஞ்ச‌ம் லேட்டாக‌த்தான் இருட்டும்..ர‌யில‌டியில் இருந்த‌வ‌ர்க‌ள் திரும்பிவிட்டிருந்த‌ன‌ர்.ந‌ட‌ந்த‌ அச‌தியில் ரெண்டு நிமிஷ‌ம் உட்கார்ந்தோம்...குரூப்பை திசைமாற்றிய‌வ‌ன் ம‌ட்டும் முத‌லில் கிள‌ம்ப‌ பிற‌கு நாங்க‌ளும் கிள‌ம்பியாச்சு..நானும் இன்னொருத்த‌னும் ஒரே தெருவில் வ‌சிப்ப‌வ‌ர்க‌ள்,அத‌னால‌ மூணாவ‌து ஒருவ‌ன் க‌ழ‌ன்டுக்கொள்ள‌ இப்போது ரெண்டு பேராகியிருந்தோம்..

ர‌யில‌டியிலிருந்து நேராக‌ மெயின்ரோடு அங்கே ப‌ஸ்ஸ்டாண்ட் ப‌க்க‌த்தில் பேரூராட்சி ஆபிஸை ஒட்டிய‌வாறு மாலை வேளைக‌ளில் த‌ள்ளுவ‌ண்டிக‌ளில் வைத்து ச‌மூசா, ப‌ஜ்ஜி, மு.ப‌ஜ்ஜி, வெ.ப‌ஜ்ஜி, உளுந்துவ‌டை போடுவார்க‌ள்..சாய‌ங்கால‌ வேளை அதாவ‌து நான்கு ம‌ணியிலிருந்து ஏழு ம‌ணிக்குள் என‌க்கு ப‌சியெடுக்கும்,அந்த‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நானும் இன்னொருத்த‌னும் அங்கே இருப்போம் அன்றைய‌ தேதியில் அந்த‌ ப‌ஜ்ஜிக்கும்,ச‌மூசாவிற்க்கும் நான் அடிமை. சின்ன‌ ப்ளேட்டில் ஒரு ப‌ஜ்ஜி, ஒரு ச‌மூசா அதிலேயே ச‌ட்னியையும் உற்றி த‌ருவார்க‌ள். ப‌ஜ்ஜியை ச‌ட்னியில் ஊற‌வைத்து சாப்பிடும்போது அமிர்த‌ம்.ஏதோ ஒன்றை வென்றுவிட்ட‌ திருப்தி..ரொம்ப‌ அருமையாக‌ இருக்கும்.எங்க‌ ஊர்க்கார‌ர் யாராவ‌து உங்க‌ளிட‌ம் அக‌ப்ப‌ட்டால் கேட்டுப் பாருங்க‌ள். பால்கார‌ர்க‌ள், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புப‌வ‌ர்க‌ள் என‌ ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ வ‌கையின‌ரை அங்கே நான் க‌ண்டிருக்கிறேன்.சில‌ர் நின்று சாப்பிட‌விரும்பாம‌ல் பார்ச‌ல் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்க‌ள், ஏனென்றால் மாலை வேளையில் அந்த‌ மெயின்ரோடு கொஞ்ச‌ம் பிஸியாக‌ இருக்கும்.. சில‌ர் நாலுபேர் பார்க்க‌ ஏன் சாப்பிடுவானேன் என்ற‌ எண்ண‌த்தில் பார்ச‌ல் வாங்கி செல்வ‌துண்டு.. ந‌ம‌க்கு அதெல்லாம் கிடையாது ஆனால் நாக‌ரீக‌ம் இருக்கும் அதில் துளிய‌ள‌வும் ச‌ந்தேக‌ம் கிடையாது என்னைப் பொருத்த‌வ‌ரை அடுத்த‌வ‌ர்க்காக‌ வாழும் ர‌க‌ம் கிடையாது..

எங்க‌ளூரில் ஆறு ம‌ணியை உண‌ர்த்தும் வ‌கையில் 'ச‌ங்கு' ச‌த்த‌ம் பேரூராட்சி ஆபிஸ் மாடியிலிருந்து வ‌ரும்.. ச‌மீப‌மாக‌ அதை நிறுத்தி விட்ட‌தாக‌ கேள்வி. இப்ப‌டி ப‌ல‌ அடையாள‌ங்க‌ள் ம‌றைந்துவிட்ட‌ன‌ ம‌ணிப் பார்க்க‌த் தெரியாத‌வ‌ர்க‌ள் என‌ ப‌ல‌ த‌ர‌ப்பின‌ரும் ச‌ங்கு ச‌ந்த‌ம் வ‌ந்த‌தும் ஆறு ம‌ணியாச்சு என‌ முடிவுக்கு வ‌ந்து விடுவார்க‌ள், அதிலும் டிச‌ம்ப‌ர் போன்ற‌ வாய் த‌ந்தி அடிக்கும் கால‌ங்க‌ளில் சாதார‌ண‌மாக‌வே நாலு டூ ஏழுக்குள் கூட்ட‌ம் நிர‌ம்ப‌ இருக்கும் அந்த‌ த‌ள்ளுவ‌ண்டி க‌டைக‌ளில், ப‌ல‌ நேர‌த்தில் ஏமாற்ற‌த்துட‌ன் திரும்பி இருக்கிறோம்.. இப்போதுதான் துன்ப‌ம் வ‌ந்தால்கூட‌ ட்ரிட்' வை என்ற‌ ச‌ம்பிராத‌ய‌ம் அம‌லில் இருக்கிற‌து அப்போது இருந்திருந்தால் க‌ண்டிப்பாய் போற‌ இட‌ம் ப‌ஜ்ஜி ச‌ட்னி க‌டைதான்.. அதேபோல் ஆட்டுக்கால் சூப்பும் ப‌டு பிர‌பல‌ம் அத‌ற்கும் ஒரு க‌டை உள்ள‌து. அதை பின்னாடி ச‌ம‌ய‌ம் கிடைக்கும்போல் நோக்க‌லாம் (ம‌லையாள‌ம்...!!)
மெய்யாலுமே இது ஒரு மீள்பதிவு தானுங்க...
அஹ்மது இர்ஷாத்
http://bluehillstree.blogspot.com

10 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மீள் பதிவானாலும் மெய்யாலுமே இது அழகு அதிரையின் அசைவுகள்! இன்றில்லா விட்டாலும் என்றும் அசை போட இனிப்பவை!

Yasir said...

உங்க பாஷையில் சொல்லலும்னா “செம”.........ஒன்ஸ் மோர் பதிவு என்றாலும் துபாய் 45 டிகிரி வெயிலுக்கு ஐஸ் மோர் குடித்த டேஸ்ட்...கடற்க்கரைப் பக்கம் மட்டுமே போய்க்கொண்டு இருக்காமல் இங்கேயும் கொஞ்சம் அப்ப அப்ப வந்து பார்த்துகிடுங்க..இர்ஷாத் பாய்

ZAKIR HUSSAIN said...

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத அதிரை விசயமும்- அஹ்மது இர்ஷாத்தின் எழுத்தும்.

ZAKIR HUSSAIN said...

கமென்ட்ஸ் எழுதி அனுப்பினால்' ரொட்டியை செயல்படுத்தவில்ல" என்று வருகிறது.[ cookies not enabled" ]

Redirected ஐ "திருப்பிவிடுகிறது" என இருக்கும்போது நான் மட்டும் ரொட்டி மேட்டர் சொன்னால் "ஏன் என்மேல காண்டு?'

Ebrahim Ansari said...

//ப‌ல‌ அடையாள‌ங்க‌ள் ம‌றைந்துவிட்ட‌ன‌//

உண்மைதான். சில வேண்டாத அடையாளங்கள் தோன்றிவிட்டன. அவற்றுள் ஒன்று இர்ஷாத் அவர்கள் கூறுவதுபோல்

//துன்ப‌ம் வ‌ந்தால்கூட‌ ட்ரிட்' வை என்ற‌ ச‌ம்பிராத‌ய‌ம் அம‌லில் இருக்கிற‌து//

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி மறுபடியும் நம்மையும் கூட அழைத்து போய் வந்து இருக்கிறார். நல்ல சுவாரசியமாக எழுதுவது கலை! அது இவருக்கு நிறையவே வாய்த்திருக்கு.கடற்கரையில் காற்று வாங்கிய சுகம் இன்னும்....சங்குக்கும் சங்கு ஊதிடாங்களா? நல்ல தொரு அனுபவம்.

sabeer.abushahruk said...

ஊரைப்பற்றியென்றால் எத்தனை தடவை வேண்டுமானாலும் மீள்பதிவு செய்யலாம். அதுவும் அத்திபூத்தாற்போல் வந்து பதியும் தம்பி இர்ஷாத்தின் எழுத்து நடைக்கு மனசு அடிமைதான்.

//அந்த‌ ப‌ழைய‌ க‌ஸ்ட‌ம்ஸ் க‌ட்ட‌ட‌த்திற்க்கு போக‌ விருப்ப‌மில்லை விவ‌ரிக்க‌முடியாத‌ அள‌வுக்கு அழுக்காய் இருந்த‌து..உள்ளே உடைந்த‌ சாராய‌ பாட்டில்க‌ளும் கிட‌ந்த‌து.//.

நல்லவேளை போகல...கீழே படியுங்கள் இர்ஷாத்.


கஸ்ட்டம்ஸ் கட்டிடத்தில் மோகினிப்பிசாசு


காலப்போக்கில்
களிமண் திரண்டு
கரையை நிறைத்ததால்
கடல் வணிகம் குன்றிப்போக
காலாவதியாகிப்போன
கஸ்டம்ஸ் கட்டிடங்களுக்கும்

காரைக்குடி சென்னை
கம்பன் எக்ஸ்பிரஸ்
கைவிடப்பட்டதால்
காற்று வாங்கும் ரயிலடிக்கும்
இடையே

பல ஆண்டுகளாக
பசுமை மாறாமல்
பரந்து நிற்கின்ற
பாதாம் மரத்தடியில்
பள்ளிப் பருவத்தில்
பரீட்ச்சைக்குப் படிக்கச்
செல்வதுண்டு

குட்டிக்ககுரா பவுடரும்
கொலுசுச் சப்தமுமாக
உலவும்
மோகினிப் பிசாசுக்குப்
பயந்து
கட்டிடத்துள்
செல்வதில்லை எனினும்

இயற்கையின்
ஓர் உபாதைக்கு
கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள்
ஒதுங்குகயில்
ஆர்வம் எட்டிப்பார்க்க

தூசு படிந்த தரையில்
சற்றே சுத்தமான மூலையில்
சப்பையான காலிக் குப்பியும்
காளிமார்க் சோடா போத்தலும்
நீர்த்துப்போன பீடித்துண்டுகளும்

கசங்கிய காகிதப் பொட்டலத்துள்
நசுங்கிய காய்ந்த தாமரை இலையும்

உதிரியாய்
பல பூவிதழ்களும்
சணலில் தொடுத்த காம்புகளும்
தரையில்
பிடரியளவு
ஒட்டிய எண்ணெய்ப் பிசுக்கும்
ஒரு சரிகை இழையும்
சில ஜிகுனா துகள்களும்
கண்டு

மோகினிப் பிசாசுவின்
பழக்க வழக்கங்கள் குறித்து
தெளிவில்லாமலிருந்தது

சமீபத்தில் ஊர்சென்றிருந்தபோது
கஸ்டம்ஸ் கட்டிடம்
இடிக்கப்பட்டுவிட்டதால்
அதே
பழக்க வழக்கங்களுடைய
மோகினிப் பிசாசு
இருப்பதற்கான அடையாளங்களை
உப்பளக் கொட்டகையின்
பம்ப் செட்டுக்கருகில்
காண முடிந்தது.

சேக்கனா M. நிஜாம் said...

அழகிய காட்சியும்...! அழகிய எழுத்து நடையும்....!!

வாழ்த்துகள் சகோ. இர்ஷாத்

அப்துல்மாலிக் said...

செட்டு சேர்ந்துட்டா சூப்பும், கவாபும் குடிக்காம பொழுது முழுமையடையாது...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி இர்ஷாத்,

////அதேபோல் ஆட்டுக்கால் சூப்பும் ப‌டு பிர‌பல‌ம் அத‌ற்கும் ஒரு க‌டை உள்ள‌து. அதை பின்னாடி ச‌ம‌ய‌ம் கிடைக்கும்போல் நோக்க‌லாம் ////

மாட்டுவால் சூப்பும் இப்போ ஊரில் ரொம்ப ஃபேமஸ்... அதை பத்தியும் கொஞ்சம் நோக்குங்க... :)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு