Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மனு நீதி மனித குலத்துக்கு நீதியா? அலசல் தொடர் - 7 14

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2012 | , , ,

அலசல் தொடர் : ஏழு. 

மனு நீதியின் (CHAPTER : 5 : 147 TO 169 ) அத்தியாயம் ஐந்து வசனங்கள் 147  லிருந்து 169 வரை பெண்களுக்கான சட்டங்களை வரையறுக்கின்றன.   

பெண்கள் ஆண்களுக்கு பிறப்பிலும், சமூக வாழ்விலும் சமமானவர்கள் அல்ல.

பெண்களுக்கு வேதம் ஓத உரிமை இல்லை. கல்வி கற்க உரிமை இல்லை. கணவனுக்கு மனைவி வீட்டினுள்  இருந்து செய்யும் பணிவிடையே குருகுலக்கல்விக்கு சமமாகும்.  அத்தகைய பண்புள்ள பெண்ணுக்கு  மட்டுமே சொர்க்கத்தில் கணவனுடன் கைகோர்த்துப்போக “ போர்டிங் பாஸ் “ கிடைக்கும். 

எந்த வர்ணத்தை சேர்ந்த பெண்களானாலும்  கணவனே குருவுக்கு சமம். உபநயனம் என்பது திருமணமே. கணவனை கடவுளின் நிலையில் வைத்துக் கொண்டாடவேண்டும். அந்தக் கணவன் ஒரு பெண்ணின் கண்ணெதிரே வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தாலும் கணவனின் கடவுள் ஸ்தானத்துக்கு குறை வரக்கூடாது. பெண்கள் இவற்றை சகிக்கவும் ஏற்கவும் வேண்டும். கல்லானாலும் கணவன் FULL  ஆனாலும் புருஷன். ஆகாத கணவனை , ஒத்துவராத கணவனை , கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கு இல்லை. 

கணவனை விட்டு வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் பலர் காணும் நிலையில் நிறுத்தப்பட்டு  கடித்துக் குதறும் வெறி  நாய்களுக்கு இரையாக்கப்படவேண்டும். ஆண்களுக்கு வெறும் சாதி கீழிறக்கம் மட்டுமே. 

கணவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இல்லை. தான் பிறந்த வர்ணத்தில் தந்தை கை காட்டும் - ஜாதகம் பொருந்தும்     சக்கரைக்கோ சப்பாணிக்கோ  கழுத்தை நீட்டவேண்டும். (சுயம்வரம் என்பது அரசகுமாரிகளுக்கு). CHOICES ARE LIMITED. 

மனைவியை  இழந்த கணவன் மறுமணம் செய்யலாம். ஆனால் கணவனை இழந்த மனைவி, பால்ய விவாகம் செய்யப்பட மனைவி  – அவள் கன்னி கழியாதவளாக இருந்தாலும் மறுமணம் செய்யக்கூடாது. கன்னி கழியாதவளாக இருந்தால் மட்டும் இறந்து போன கணவனின் சகோதரனுக்கு மட்டும் மணம் முடிக்கலாம். அப்படி யாரும் இல்லாவிட்டால் ஜென்மத்துக்கும் கிடந்தது சாகவேண்டியதுதான்.  

கணவனின் நினைவுகளில் ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி எடுத்துரைக்க முடியாத நிலையினிலே தான் மீதிக் காலத்தை கடத்தவேண்டும். கணவன் உயிருடன் இருந்த காலத்தில் அவனுக்கு பிடிக்காத எதையும் அவன் இறந்த பின்னும் செய்யக்கூடாது. கணவன் மறைந்த பின் தன்னடக்கம் உள்ளவளாகவும், அந்தரங்க ஆசைகளை திரையும் சிறையும் இட்டு மறைத்துக்கொள்பவளாகவும், கற்புக்கரசியாகவும் விளங்கி, விக்கி விக்கி சாகவேண்டும். தப்பித் தவறி எங்கேயாவது மனத்தளவில் சலனப்பட்டாலும் அவளுக்கு சொர்க்கத்தில் இட ஒதுக்கீடு இல்லை. 

பெண்களுக்கு குடும்பச் சொத்தில் பங்கு மற்றும்  உரிமை கிடையாது. கணவன் இறந்துவிட்டால்- சொத்துரிமையும் இல்லாததால்  கோயிலில் “உண்டக்கட்டி”யும் அன்னதானமும்  வாங்கித்தான் சாப்பிடவேண்டும். 

பெண்கள் தனிப்பட்ட சுதந்திரம் படைத்தவர்கள் அல்ல. இளமையில் தந்தைக்கும், மணமானபின் கணவருக்கும், முதுமையின் மகனுக்கும் கட்டுப்பட்டவர்கள். சுதந்திரமாக தனியே நடமாட பெண்ணுக்கு உரிமை இல்லை. தந்தை, கணவன், மகன் ஆகிய மூவரின் உத்தரவும் இல்லாமல் வீட்டின் உள்ளேயோ, வெளியேயோ நடமாடக்கூடாது. 

பெண் குடும்ப பந்தத்தால் கட்டப்பட்டவள்; கட்டுப்பட்டவள். அதை மீறக்கூடாது. பெண்கள் பாத்திரம் பண்டங்கள் கழுவுவது உட்பட்ட வீடுவேலைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் மற்ற விஷயங்களில் தலையிடக்கூடாது. அடுப்படியில் கிடந்து உப்புமாதான் கிளறவேண்டும் . குடும்ப விஷயமாக எதையும் கிளறக்கூடாது. சிந்திக்கக்கூடாது.

ஒரு தாழ்ந்த சாதி ஆணுக்கு மணமுடிக்கப்பட்டவள் , எந்த உயார்சாதி ஆணுடனும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தால் அவள் இந்த உலகத்தில் சபிக்கப்பட்ட பெண் ஆவாள். அத்துடன் அவள் உயர்சாதிக்கு பரபுர்வா (parapurva) என்ற இரண்டாம் திருமணம் ஆனவளாகவும் கருதப்படுவாள். 

இப்போது வருகிறது பாருங்கள் ஒரு இடி. 

ஒரு உயர்சாதிப் பெண் அதே சாதியில் உள்ள ஆண்மகனை மணந்தவள் தன் கணவனின் சாவுக்கு முன்பாகவே புனித நெருப்பு சீதை மூட்டி, சடங்குகள் செய்து தனது உயிரை கணவனின் சாவுக்கு முன்பாகவே அந்த அக்னிஹோத்ரா சிதையில் விழுந்து உயிர் விடலாம். அப்படி அவள் உயிர் விடும் பட்சத்தில் எல்லாப் பிறவிகளிலும் அதே கணவனுக்கு அவள் மீண்டும் மீண்டும்  மணம் முடிக்கப்படுவாள். 

மேலே கண்டுள்ள கருத்துக்களின் சாராம்சம் மனு நீதியின் வார்த்தைகளில் இதோ! 

 147. By a girl, by a young woman, or even by an aged one, nothing must be done independently, even in her own house. 
148. In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a woman must never be independent. 

149. She must not seek to separate herself from her father, husband, or sons; by leaving them she would make both her own and her husband's families contemptible. 

150. She must always be cheerful, clever in the management of her household affairs, careful in cleaning her utensils, and economical in expenditure. 

151. Him to whom her father may give her, or her brother with the father's permission, she shall obey as long as he lives, and when he is dead, she must not insult his memory. 

154. Though destitute of virtue, or seeking pleasure elsewhere, or devoid of good qualities, yet a husband must be constantly worshipped as a god by a faithful wife. 

156. A faithful wife, who desires to dwell after death with her husband, must never do anything that might displease him who took her hand, whether he be alive or dead. 

158. Until death let her be patient of hardships, self-controlled, and chaste, and strive to fulfill that most excellent duty which is prescribed for wives who have one husband only. 

159-160. Many thousands of Brahmins who were chaste from their youth have gone to heaven without continuing their race. A virtuous wife who after the death of her husband constantly remains chaste reaches heaven, though she have no son, just like those chaste men. 

161. But a woman who from a desire to have offspring violates her duty towards her deceased husband brings on herself disgrace in this world and loses her place with her husband in heaven. 

162. Offspring begotten by another man is here not considered lawful, nor does offspring begotten on another man's wife belong to the begetter, nor is a second husband anywhere prescribed for virtuous women. 

163. She who cohabits with a man of higher caste, forsaking her own husband who belongs to a lower one, will become contemptible in this world and is called a remarried woman (parapurva). 

 167-168. A twice-born man, versed in the sacred law, shall burn a wife of equal caste who conducts herself thus and dies before him with the sacred fires used for the Agnihotra and with the sacrificial implements. Having thus, at the funeral, given the sacred fires to his wife who dies before him, he may marry again and again kindle the fires. 

169. Living according to the preceding rules, he must never neglect the five great sacrifices and, having taken a wife, he must dwell in his own house during the second period of his life. 

மேல்கண்ட மனுவின் சட்டங்களைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே இஸ்லாம் தரும் திருக்குர் - ஆனின்  கீழ்கண்ட வசனங்களை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை. நமது பெண்மணிகள் எவ்வளவு பேறு பெற்றவர்கள்  என்று இறைவனுக்கு நன்றி செலுத்தாமல் இருக்க முடியவில்லை.  

ஆணாயினும் சரி , பெண்ணாயினும்  சரி, நீங்கள் ஒருவர்  மற்றவரிலிருந்து தோன்றிய ஒரே இனத்தவரே.    3:195

ஆண்களுக்கு பெண்கள் மீது இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள் மீது உரிமை உண்டு 2:228.

பெண்களுக்கு தொல்லை கொடுப்பதற்காக திருமண பந்தத்தில் வைக்காதீர்கள். 2: 231

விவாகரத்து ஏற்பட்டபின் பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை நீங்கள் தடை செய்யாதீர்கள். 2:232

உங்களுடைய துணையை உங்களின் அமைதிக்கான காரணமாக ஆக்கினான். 7:189


என்கிற அத்தாட்சிகள் – இறைவனின் வாக்குகள் இஸ்லாத்தின் சட்டங்கள். 

-ஒரு முஸ்லிம் பெண், ஒரு ஆணுக்கு இருக்கும் விவாகரத்து செய்யும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் பெற்றவள். 
- ஒரு முஸ்லிம் பெண், வாரிசு உரிமை, குடும்ப சொத்தில் பங்கு ஆகியவை பெற தகுதிடையவள் ஆவாள். தனியாக வியாபார நிறுவனங்களை  உருவாக்கவும், நிர்வாகிக்கவும் , வேலைகளுக்குச் செல்லவும் உரிமை பெற்றவள். 
- ஒரு முஸ்லிம் பெண் ,தனது கணவனாக வரப்போகிறவனை சாட்சிகளின் முன்னாள் ஏற்றுக்கொண்டு சம்மதித்தால் மட்டுமே மணம் செய்து வைக்கப்படுகிறாள். 
-  ஒரு முஸ்லிம் பெண், வரதட்சணை பணம் கணவனுக்குக் கொடுத்து மணமுடிப்பது தடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக கணவனாக வருகிறவன் பெண்ணுக்குத்தான் செல்வங்களை கொடுக்கவேண்டும் .
- ஒரு விதவையான முஸ்லிம் பெண், மறுமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறாள். கணவனோடு அவளையும் அவளது அந்தரங்க ஆசைகளையும் கொன்றுவிட்டு செத்துவிடு என்று சொல்லவில்லை. 
- ஒரு முஸ்லிம் பெண் சமுதாயத்தில்  மேலான மரியாதைகளோடு நடத்தப்படுகிறாள். எந்த முஸ்லிம் பெண்ணும் உயிரோடு தீயில் எரிக்கப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் நற் காரியங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. 

இத்தகைய காரணங்களை படித்து, அறிந்து உணர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய , ஆப்ரிக்க கண்டங்களைச் சேர்ந்த அளப்பறிய பெண்கள், ஆண்களைவிட பெரும் கூட்டங்களாக இஸ்லாத்தை தழுவி இணைந்து வருகிறார்கள் என்பதே இன்றைய வரலாறு கூறும் நற்செய்தியாகும். நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் நாடுகளில் கல்வி மூலம் இஸ்லாம் பற்றிய இந்த விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. இந்தியா போன்ற கல்வியில் பின் தங்கியுள்ள நாடுகளில் உள்ள மக்களிடம் இந்த உணர்வுகளைக் கொண்டு செல்ல மிகவும் உழைக்க வேண்டி இருக்கிறது. அவைகளை அவசரமாகத் தொடங்க வேண்டும். 

சாட்டையை இன்னும் வைத்துவிடவில்லை
இன்னும் சுழலும் இந்த சாட்டை ...
இபுராஹீம் அன்சாரி

14 Responses So Far:

sabeer.abushahruk said...

அவா இவா கதை முழுக்க ஒரே "உவேக்"

இவா தம் கோட்பாடுகளின் அசிங்கஙக்ளை மறைக்க அவர்கள் பின்பற்றும் மொத்த வேதங்களுக்கும் திரை போட்டு மறைத்து ஏமாற்றுகிறார்கள்.

நாமோ நம் பெண்களின் அழகைத் திரை போட்டு மறைத்து வைத்து அவர்களுக்கான உரிமைகளை வெளிச்சம்போட்டு காட்டும் குர் ஆனோடு வாழ்கிறோம்.

காக்கா, தங்களின் இந்த ஆய்விற்கான உழைப்பிற்கு அல்லாஹ் கூலி தரட்டும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

எங்கள் மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி காக்கா,

பெண்களுக்கான உரிமைகள் பற்றி ஒரு சில இறைவசனங்களை மட்டுமே சுட்டிக்காட்டியே சரியான சாட்டையடி கொடுத்துள்ளீர்கள் காக்கா.ஜஸக்கல்லாஹ் ஹைரன்....

//-ஒரு முஸ்லிம் பெண், ஒரு ஆணுக்கு இருக்கும் விவாகரத்து செய்யும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் பெற்றவள்.
- ஒரு முஸ்லிம் பெண், வாரிசு உரிமை, குடும்ப சொத்தில் பங்கு ஆகியவை பெற தகுதிடையவள் ஆவாள். தனியாக வியாபார நிறுவனங்களை உருவாக்கவும், நிர்வாகிக்கவும் , வேலைகளுக்குச் செல்லவும் உரிமை பெற்றவள்.
- ஒரு முஸ்லிம் பெண் ,தனது கணவனாக வரப்போகிறவனை சாட்சிகளின் முன்னாள் ஏற்றுக்கொண்டு சம்மதித்தால் மட்டுமே மணம் செய்து வைக்கப்படுகிறாள்.
- ஒரு முஸ்லிம் பெண், வரதட்சணை பணம் கணவனுக்குக் கொடுத்து மணமுடிப்பது தடுக்கப்பட்டு இருக்கிறது. மாறாக கணவனாக வருகிறவன் பெண்ணுக்குத்தான் செல்வங்களை கொடுக்கவேண்டும் .
- ஒரு விதவையான முஸ்லிம் பெண், மறுமணம் செய்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறாள். கணவனோடு அவளையும் அவளது அந்தரங்க ஆசைகளையும் கொன்றுவிட்டு செத்துவிடு என்று சொல்லவில்லை.
- ஒரு முஸ்லிம் பெண் சமுதாயத்தில் மேலான மரியாதைகளோடு நடத்தப்படுகிறாள். எந்த முஸ்லிம் பெண்ணும் உயிரோடு தீயில் எரிக்கப்படுவதில்லை. கணவனை இழந்த பெண்கள் நற் காரியங்களில் இருந்து ஒதுக்கிவைக்கப்படுவதில்லை. //

மெய்சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் காக்கா...

நிச்சயமாக நீங்கள் குறிப்பிட்டது போல், மேல் சொன்ன காரணங்களை எடுத்துக்காட்டி இந்தியா போன்ற கல்வியில் பின் தங்கியுள்ள நாடுகளில் உள்ள மக்களிடம் இந்த உணர்வுகளைக் கொண்டு செல்ல மிகவும் உழைக்க வேண்டி இருக்கிறது. அவைகளை அவசரமாகத் தொடங்க வேண்டும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அப்படின்னா ஆண்களை மட்டும் உயர் சாதின்னு சொல்லிவிட்டு பெண்களை தாழ்ந்த, அடிமை சாதின்னு சொல்லிடலாமே.

உயர்வான இறைமறையின் பெண்ணுக்குரிய இறை வசனங்களை இங்கு இட்டது இத்தொடருக்கு ஹை லைட்.

ZAKIR HUSSAIN said...

பெண்களுக்கான இஸ்லாமிய சட்டங்களை விமர்சிக்கும் / கேள்வி கேட்கும் ஹிந்து சகோதரர்கள் இதை படித்து விட்டு கேள்வி கேட்டால் நல்லது.

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ் எவ்வளவு வித்தியாசங்கள், பிறவியிலேயே முஸ்லிமாக பிறந்த நாமே நிறைய தெரிந்துக்கொள்ளவேண்டிருக்கு, அருமையான விளக்கம் காக்கா..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாட்டை சுழல்வது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் உரைக்கத்தான், முஸ்லிமாக பிறந்து கடைசி மூச்சு இருக்கும் வரை அங்கேயே நிலைத்திருப்பதில் நாம் கொடுத்து வைத்தவர்கள் தாம் அல்ஹம்துலில்லாஹ் !

Yasir said...

மாஞ்சா கயிறு தடவிய சாட்டை அவர்களின் தோலைக்கிழித்து உண்மையான இரத்தத்தின் தன்மையைக்காட்டி இருக்கின்றது.....பெண் அடிமைத்தனம் இஸ்லாத்தில் அறவே இல்லை என்பதற்க்கு எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் குர் ஆனின் ஆதாரங்கள் மெய் சிலிர்க்கவைக்கின்றன...அல்லாஹ் உங்கள் உடல் நலத்தையும் அறிவயையும் விசாலமாக்கி மேலும் இத்தொடர் மெருகுகூட்டி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த துவா செய்கின்றோம்

sabeer.abushahruk said...

//நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் நாடுகளில் கல்வி மூலம் இஸ்லாம் பற்றிய இந்த விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. இந்தியா போன்ற கல்வியில் பின் தங்கியுள்ள நாடுகளில் உள்ள மக்களிடம் இந்த உணர்வுகளைக் கொண்டு செல்ல மிகவும் உழைக்க வேண்டி இருக்கிறது. அவைகளை அவசரமாகத் தொடங்க வேண்டும். //

Well said, kaakkaa. Literacy can only bring changes.

KALAM SHAICK ABDUL KADER said...

பெண்கட்கு உரிமைகளும்;கல்வியில் விழிப்புணர்வும் மார்க்கம் தந்திருந்தாலும் “பாதுகாப்பான” முறையில் மேற்கல்வி கற்க போதுமானக் கல்விக்கூடங்கள்- “மகளிர்க்கல்லூரிகள்” உருவாக்க வேண்டியதும் சமுதாயப் புரவலர்களின் அவசியமான- அவசரமான சமுதாயக் கடமை.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். மான கேட்டவர்களின் சட்டையை உரித்து சொன்னாலும் அவாளுக்கு கூச்சமோ, வெட்க உணர்வோ வரப்போவதில்லை . ஆனாலும் அவாளின் கையில் மாட்டின்ட நம்மடவர்களின் , தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்க பட்டவாளின் நிலை நிமிர இப்படி உங்களைப்போல் அறிஞர் பெருமக்கள் உரித்து காட்டுவது அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், என்பது போல் இம்மியாவது நகர்ந்து வரும் கால சமுதாயம் பெயன் பெற அடிகோலும். உங்கள் அறிவை கிரகித்து கொள்ளவே என் போன்றோருக்கு கால அவகாசம் தேவை இதில் உங்களை வாழ்துகிறேன் என எழுவது அதிகபிரசங்கிதனம்.இருந்தாலும் போற்றுகிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாம் வழங்கியுள்ள பெண் உரிமை பற்றியும்,அவாளின் உரிமை பறிப்பு பற்றியும் அலசியுள்ளது அருமை.இப்போது இப்ராஹீம் அன்சாரி காக்காவின் கையில் இருப்பது சாட்டையல்ல.கூர்மையான போர் வாள்.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

அன்புள்ள தம்பி சபீர்/ மருமகனார் யாசிர் ,

எப்போதும் எனக்காக செய்யும் து ஆக்களுக்கு மிக்க நன்றி.

தம்பி அமீர் தாஜுதீன், அப்துல் மாலிக், ஜாபர் சாதிக், அசத்தல் தம்பி, நெறியாளர் தம்பி, அமெரிக்காவிலிருந்து அமெரிக்கையான சகோதரரர்கள் கிரவுன், அர.அல அனைவருக்கும் தங்களின் தொடர்ந்த ஊக்கம் மற்றும் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

அன்பர் கவியன்பன் அவர்களுக்கும் நன்றி.

(என்ன இந்த தடவை பி. எஸ். சங்க்மாவுக்கு வாக்குப் பதிவு ஆனதுபோல் இருக்கிறது பின்னூட்டத்தின் எண்ணிக்கை?- ஓ நோன்பு நேரமா? )

இபுராஹீம் அன்சாரி

sabeer.abushahruk said...

யாசிர்,

காக்கா இப்படி கஷ்டப்பட்டு யாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எழுதுறாங்களோ அவர்கள், கணபதி ஐயர் தரும் பேக்கரிக்கு ஆசைப்பட்டு "பட் அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று ஆகிவிட்டால் அவர்கள் தம் பெண்டிரை எப்படி மேம்படுத்துவர்?

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

மீன் பாடி வண்டியில் ஏற்றி மூத்திரச்சந்தில் வைத்து அந்த ரெம்ப நல்லவனை அடிக்க வேண்டியதுதான்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு