குப்பை தொட்டி !

1. பெயர்: குப்பைத்தொட்டி

2. மாற்றுப்பெயர்: சுகாதார “குப்பைத்தொட்டி”

3. வயது: எப்ப வேனும்ண்டாலும் “துரு”ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

4. நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

5. வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

6. எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் பஞ்சாயத்போர்டு ஊழியர்கள்

7. வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

8. சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

9. வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் இவ்வூரில் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து கூடுதல் சேவையை மக்களுக்கு அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கிய பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் எங்களை கொசு கடியிலிருந்து பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி “பிளிச்சிங்” பவுடரை இட வேண்டுகிறோம்.

10. கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’


இவ்வாக்கம் விழிப்புணர்வு பெறுவதற்காக மட்டும்

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....

10 கருத்துகள்

Ebrahim Ansari சொன்னது…

சேக்கனா எம். நிஜாமா? சும்மாவா?

ZAKIR HUSSAIN சொன்னது…

சேக்கனா எம். நிஜாம்...உண்மையிலேயே நீங்கள் ரொம்ப கிரியேட்டிவ். இதுபோன்ற கிரியேட்டிவிட்டியைத்தான் நான் எழுதுபவர்கள் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன்.

sabeer.abushahruk சொன்னது…

குப்பை கொட்டி குப்பை கொட்டி, குப்பை திகட்டி, வெளியே கொட்டி குப்பைத் தொட்டியே ஆகிப்போனதொரு மெகா குப்பையாய்.

குப்பைக்கு குட்பை சொல்லும் நாள் என்று வரும்.

நல்ல சுட்டிக்காட்டல் தம்பி.

Ahamed irshad சொன்னது…

:))

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

//குப்பைக்கு குட்பை சொல்லும் நாள் என்று வரும்.//

1) பொதுமக்கள் தானாக- தன்னுணர்வால் அக்கறையுடன் சிந்தாமல் சிதறாமல் “குப்பைத் தொட்டி”க்குள் மட்டும் கொட்டினால்..
2) “பிளாஸ்டிக் பை” ஒழிப்பில் காட்டும் தீவிரம் குப்பைகளே இல்லாத ஊராக இருக்க வேண்டும் என்ற முழுவீச்சான ஈடுபாடு இருந்தால்..
3) “தான் மட்டும்’ என்ற தன்னலம் போக்கி ஊர் மக்கள் சுகாதாரமாக வாழ வேண்டுமானால் தன்னிலிருந்தே தூய்மையைக் கடைபிடித்தால்...
4) “போ(ஸ்டர்)ட்டா போட்டி”இன்றி பேரூராட்சித் தலைவர்க்கு சுகாதாரக் கேட்டினை ஒழிக்கும் முயற்சியில் உளத்தூய்மையுடன் ஒன்றுபட்டு ஒத்துழைத்தால்..

இன்ஷா அல்லாஹ் பேரூராட்சித் தலைவர் அவர்களின் “கனவு அதிரை” -”சின்னச் சிங்கை” உருவாகலாம்!

தூங்கும் மக்களை தூங்காமலிருந்துத் தட்டி எழுப்பும் “விழிப்புணர்வு வித்தகர்” மேலும் ஒரு பதிப்பாக “விழிப்புணர்வு பக்கங்கள்” பாகம் இரண்டு வெளியிட இது போன்று இன்னும் இன்னும் நிரம்ப எழுத வேண்டும்; அல்லாஹ்வின் அருளும் நம்மவர்களின் ஊக்கமு அவரை அவ்வண்ணம் எழுதத் தூண்டும்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

நல்ல ஆக்கம் சகோ. சேக்கன்னா நிஜாம் அவர்களே.

அன்று ஒரு நாள் வாவன்னா சார் சொன்னதை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.

"மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குரிமையையும், வீட்டுக்குப்பைகளையும் போடக்கூடாத இடத்தில் போட்டு விட்டு செல்கின்றனர்"

தெரு குப்பை தொட்டிகள் வழிந்து நிரம்பும் முன் பஞ்சாயத்து போர்டிலிருந்து வந்து அள்ளிச்சென்றால் உண்ட சோற்றை வெளியில் வாந்தி எடுப்பது போல் குப்பை தொட்டியும் தன்னிடம் கொட்டிய குப்பைகளை வெளியில் வாந்தி எடுக்காது.......

அப்துல்மாலிக் சொன்னது…

:) :)

Unknown சொன்னது…

அன்புச் சகோ சேக்கனா,

ஓர் ஊரின் தரத்தைக் காண வேண்டுமானால்,
அந்த ஊர்க் குப்பைகளைப் பார்த்தால் போதும்.

உங்கள் மனதின் தூய்மையைச் சொல்லும்
இந்தக் கட்டுரைக்குப் பாராட்டுக்கள்

அன்புடன் புகாரி

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

தொடர்ந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தி வரும் அனைத்து சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு என் நன்றி !

Yasir சொன்னது…

நல்ல கற்பனை வளம் ....குப்பைக்கொண்டுபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்...வாழ்த்துக்கள் நண்பரே