Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வித்தியாசமானவர்கள்- பகுதி 2 18

ZAKIR HUSSAIN | December 25, 2010 | ,

சிலர் எவ்வளவு தூரம் போனாலும் சாப்பிடாமல் வீடு வரும் ரொம்போ நல்லவேன்....... இவர்கள் தஞ்சாவூருக்கு போனால் கூட ஒரு சர்பத் வாங்கி கேட்க்கும் பெண்களுக்கு 'அதெல்லாம் வேணாம்.. ஊருக்குபோயி குடிக்சுக்களாம்" என பொடோ சட்டத்தில் பிடிக்கப்போர மாதிரி பெண்களை பயம்காட்டி வைத்திருப்பார்கள். இல்லாவிட்டால்... "பஸ் வந்துடுச்சி" என்று ஏதோ வாழ்க்கையின் கடைசி பஸ் வந்தமாதிரி அரட்டிஎடுப்பார்கள்.

இது பெரும்பாலும் நடக்கும் விசயம் , பசித்தாலும் சாப்பிடாமல் ஃபிளைட் டுக்கு போக பெட்டி , பேக் எல்லாவற்றையும் தூக்கிகொண்டு போவார்கள். '[ஃபிளைட்டுக்குள் சாப்பாடு தருவாங்கப்பா” என்ற தத்துவம்வேறு] விமானம் புறப்படுமுன் நடத்தும் பாடம் எல்லாம் முடிந்து , ஏதோ பிரசவத்துக்கு மனைவியை O.T க்கு அனுப்பிய கணவன் மாதிரி அங்கும் இங்கும் நடந்து க்ரூ சாப்பாடு தட்டை நமக்கு வைக்குமுன் , சாப்பாடு மறந்து , பசி போயிருக்கும். இந்த பதைபதைப்பில் சுகர்லெவெல் குறைந்து மூலை ஹ்ய்பர்னேசன்.... [ஏறக்குறைய கம்ப்யூட்டரின் சேஃப் மோடு மாதிரி வேலை செய்யும்போது சின்ன வயதில் பழகியவர்கள் எல்லாம் இன்னும் பொல்யூட்டட் ஆகாமல் நம்மிடம் நல்லபடியாக பழகிய மாதிரி ஒரு "பொய்படம்" காண்பிக்கும்...இதை நம்பி ஊருக்குபோய் 'எப்டிப்பா இருக்கே' என அன்புடன் கேட்டால் அவன் ஏதொ வெளிநாட்டு டூரிஸ்ட்டிடம் சென்னை டாக்ஸிக்காரன் பேசுகிறமாதிரி பேசும்போது 'ஜக்கி" யாகி மண்டையை குடைவோம்...தேவை என்ன தெரியுமா..கோளாறு அவனிடம் இல்லை, உங்கள் பேன்க்ரியாஸிசில் இருக்கிறது.
சில டென்சன் பார்ட்டிகளின் அளப்பறை எந்த விதமான மெட்ரிக் அளவிலும் அளக்கமுடியாது. இந்த சமயத்தில் இதை நான் செய்தே ஆக வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.இது ஏதோ லைசன்ஸ் புதிப்பிக்க தவறினால் அரசாங்கம் அபராதம் விதிக்கும் எனபது மாதிரி இரவில் பால் பழம் சாப்பிடாமல் என்னால் படுக்கமுடியாது என மற்றவர்களின் நிம்மதியை இன்ஸ்டால்மென்ட்டில் கெடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த மாதிரி சமயங்களில் எப்படி பட்ட புத்தராக இருந்தாலும் தெலுங்கு பட வில்லனை விட மோசமாக கோபம் வரும். இவர்களின் வாழ்க்கையில் பார்ததெதெல்லாம் "தன்/என்" இரண்டு விசயங்கள்தான். கால ஒட்டத்தில் இளையசமுதாயம் வளர்ந்து வரும்போது இவர்களை கரி அயன்பாக்ஸ் மாதிரி ஒதுக்கி வைத்திவிடுவார்கள்.
இன்னும் சிலர் கல்யாண விடுகளில் பெண்கள் இருக்கும் இடத்தில் தான் இருப்பதை தெரியப்படுத்த ஹீரோ வேசம் எல்லாம் போடுபவர்கள் [ அன்றைக்கு மட்டும் இவனுகளுக்கு தொண்டை கட்டாமல் தெளிவாக அதிக டெசிபலில் கத்துவார்கள்] 'ஏன்னா அவருக்கு எல்லாம் தெர்யும்ல'. அந்த சமயத்தில் யாரவது இவர்களை திருமண விருந்துக்கு காய்கறி, நெய் டின் எல்லாம் வைத்திருக்கும் சின்ன ரூமுக்கு அழைத்துப்போய் இனிமே இப்படி கத்தி பேசாதெ என நொங்கினால் அது தேசியசேவையாக கருதப்படும்.
இதில் சப் டிவிஷனாக சில பேர் இருக்கிறார்கள். இதை நான் கல்லூரியில் படிக்கும்போது இவர்களிடம் பார்த்திருக்கிறேன். துபாயில் பார்ப்பது சாதாரண வேலையாக இருக்கும் ஏதோ துபாய் அரசர் வெளியூர் போகும்போது இவரிடம் சொல்லி "துபாயை நல்லாபாத்துக்க' என ஏதோ மாடியில் வடாம் காயப்போட்டதை காக்கை சாப்பிடாமல் பார்த்துகொள்ள சொன்ன மாதிரி நம் ஊர் பெண்களிடம் பில்ட் அப் கொடுப்பார்கள். இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கிறது. சென்னையில் இவர்களை கூட்டிக்கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ், ஏர்லைன் டிக்கட்டிங் போகும் போது இவர்கள் பம்முவது யாருக்கும் அடுக்காது. இங்லீஸில் ஏதாவது எதிரில் உள்ள ஏர்லைன் ஊழியை கேட்டால் ஏதோ அவள் ஈட்டியை எடுத்து வந்து குத்தப்போவது போல் பயப்படுவார்கள். அப்போது மட்டும் பிப்ரவரி 31 ந்தேதி OK போடட்டுமா என்றால். என்று No Problemசொல்லிவிடுவார்கள். வெளியில் வந்து ஆட்டோ எடுத்ததிலிருந்து உட்லேண்ட்ஸிலோ ஊடுப்பியிலோ சாப்பிடும் வரை தான் துபாயில் அரசருக்கு அடுத்த ஆள் என்ற மறு ஒலிபரப்பு தொடரும்.
இதை படிக்கும்போது சிலருக்கு அசரீரியாக ' "உன்னைத்தானே...ஹேய்...உன்னைத்தானே ஹேய்..' என்ற பாட்டு காதுக்குள் ஒலித்தால் அதிரை நிருபரிடம் Defamation writ போட்டுக்கொள்ள கடவது.
- ZAKIR HUSSAIN

18 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா அசத்தல் (ஜாகிர்) காக்கா, வேலைப் பளு அழுத்தத்தினூடே (வருடக் கடைசின்னு சொல்லி படுத்துறாய்ங்க) உறைந்த பனியை உசுப்பேத்த்தி விட்ட மாதிரி சிலிர்க்க வைக்கும் உங்களின் எழுத்து நடையே எங்கள் மனங்களை வென்றது என்னவோ உண்மை !

இப்படித்தான் அடிக்கடி குளுக்கோஸ் ஏற்றி வையுங்கள் (எனக்குதான் சொல்கிறேன்) !

Yasir said...

வித்தியாசனமானவர்களை பற்றி வித்தியாசமாக நகைச்சுவையுடன் எழுதி கலக்கீவிட்டீர்கள்//அப்போது மட்டும் பிப்ரவரி 31 ந்தேதி OK போடட்டுமா என்றால். என்று No Problemசொல்லிவிடுவார்கள்// உச்சக் கட்ட நகைச்சுவை

Yasir said...

எனக்கு ஒரு நண்பன் இருந்தான் காக்கா “ வெளில போன சாப்பிட மாட்டேன் பேர்வழி “ என்று...கடைசியில் பார்த்தால் நண்பர்களுடன் சேர்ந்து போனால்தான் சாப்பிட மாட்டானாம்...தனியா போன ஒரு வேட்டு வேட்டு வான் போல...அவனை உளவு பார்த்ததில் தெரியவந்தது...யேல்லாம் காகித மேட்டர் காக்கா

sabeer.abushahruk said...

அசத்தல் மன்னா
அசத்துரே நன்னா.

வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை தோய்த்து நகர்கிறது கட்டுரை. அங்கவை சங்கவைப் போல வித்தியாசமாத்தன்யா இருக்கு. பழகி பார்த்திருப்பியோ?

இந்த ஃபிளைட் ஏத்தி இறக்கி ஊருக்கு ரிசீவிங் சென்டிங் விட்ற வேலைக்காக நியு காலேஜ்ல சேர்ந்திருந்தோமே அப்ப, என் மாமா ஒருவர் தம் வாப்பா மவுத்தாப் போன பிறகு சவுதியிலிருந்து வந்திருந்தார். அவ்வருடத்தின் ரெண்டாவது ஸிலபசுக்கான பதினேலாவது சேவையாக அவுகளை இறக்கி ஹாஸ்டல் அழைத்து வந்தோம். அதுவரை அண்ணா சாலையையும் சினிமா சுவரொட்டிகளையும் ரசித்துகொண்டு வந்தவர் (சவுதிலே அதெல்லாம் கருப்பு சாயம் பூசிதான் வரும்) ஹாஸ்டல் ரூம் வந்ததும் என்னை கட்டிப்பிடிச்சி குய்யோ முறையோனு வாப்பா போய்ட்டாகளேனு அழ, அதற்குப் பிறகு பசங்க என்னை பார்க்கும்போதெல்லாம் அழப்போற மாதிரி மூஞ்சை வச்சி அந்த ஸெமெஸ்டர் வரை ஒப்பேத்தி என்னை ஓய்ச்சது நெனப்பு வருது. 

மற்றவை சாதா சிரிப்புன்னா கீழே உள்ளது ஸ்பெஷல் சாதா.


//கால ஒட்டத்தில் இளையசமுதாயம் வளர்ந்து வரும்போது இவர்களை கரி அயன்பாக்ஸ் மாதிரி ஒதுக்கி வைத்திவிடுவார்கள்.//

Ahamed irshad said...

அருமையான கட்டுரை ஜாஹிர் காக்கா... குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஏகத்துக்கும் சிரிப்பு கொப்பளிக்குது வரிகளில்...இதே மாதிரியான 'வித்தியாசமானவர்கள்-3 பகுதியை தொடருங்களேன்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
புளிப்பிற்கு பின் ஒரு இனிப்பு ஒவ்வரு வார்த்தையும் தேனில் துவைத்து எடுத்தது போல் உள்ளது

sabeer.abushahruk said...

இன்னொரு வித்தியாசமானது நினைவுக்கு வருது: இதை பரீட்ச்சை பிட்டு மாதிரி பாவித்து இது தொடர்புடன் பகுதி மூனு எழுது. நல்லா வந்தா சன் பிக்ச்சர்ஸ் காரனுக்கு விற்கிற வேலைலாம் வானா.

இந்த மொபைல் ஃபோனை பாதுகாக்கிறேன்னு பல வித்தியாசமானவர்கள் படுத்துற பாடு சொல்லி மாலாது. ரேடியம் ரேஞ்சுக்கு ஜொளிக்கும் பச்சைக்கலர் ப்ளாச்டிக் கவர் போட்டிருந்தவரைப் பார்த்து, "என்ன ஃபோனுக்கு பாபாஷூட் போட்டு வச்சிருக்கிய" நு கேட்டார் யாசிர்ட மச்சான்.

ஊர்ல பச்சை வெல்வெட்டுல ச்சட்டக் பொத்தான்லாம் தச்ச கவர் நான் பார்த்திருக்கேன். தர்கா பார்ட்டிகள் ஊதுபத்தி கொளுத்தி பரவசப் படுமளவுக்கு அடங்கி இருந்தது அந்த ஃபோன். 

சிலர் ஃபோனை இடுப்பு பெல்ட்டில் ரிவால்வார் ரேஞ்சுக்கு டப்பால வச்சிருப்பாங்க. இன்னும் சிலர் ஃபோன் அடிக்க ஆரம்பிச்சதும் அதை எடுக்கிறதுக்குள்ளே கதகளி ஆடும் ஆளவுக்கான இடத்தில் பதுக்கி இருப்பார்கள்.


உங்கூர்ல இம்மாதிரி நிறைய இருப்பாகளே??

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஜாஹிர் காக்கா, அசத்தலான சிரிப்பு கிரயோஜினிக் ரக்கேட் ஒவ்வொரு வரியிலும்.

கல்யாண விட்டு ஹீரோ வேஷம், சரியான ஊசி.

ஜாஹிர் காக்கா, இந்த கட்டுரை படித்துவிட்டு ரொம்ப நேரம் சிரிக்கவேண்டும். நேரம்தான் இல்லை.

ஜாகிர் ஹீசைன் said...

//வெளியில் வந்து ஆட்டோ எடுத்ததிலிருந்து உட்லேண்ட்ஸிலோ ஊடுப்பியிலோ சாப்பிடும் வரை தான் துபாயில் அரசருக்கு அடுத்த ஆள் என்ற மறு ஒலிபரப்பு தொடரும்.//

ஜாஹிர் காக்கா.... தாங்களின் எதார்த்தமான எழுத்தும் நகைச்சுவையான உதாரணங்களும் சிந்திக்கக்கூடிய நம் சமுதாயம் உணரக்கூடிய விஷயம்.

இதற்கெல்லாம் காரணம் பெருமை, கட்டுப்பாடற்ற வாழ்கை
நம் சமுதாயத்தில் இந்த இரண்டும் இல்லாமலிருந்தால் மாஷாஅல்லாஹ் நம் மக்கள் நல்ல மக்களாக வாழ்வதற்கு வழியுன்டு

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன் காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற் பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்கவிட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி 3485

sabeer.abushahruk said...

துபை தமிழ் பஜாரில் நேரில் கண்டது: ஒரு பிரபலமாகாத சினிமாப் பாட்டின் ரிங் டோன் அடிக்க ஒருவர் கிணற்றில் தண்ணீர் கேந்தும் லாவகத்தோடு இடுப்புக்கருகில் ஒரு நூலைப் பிடித்த இழுத்தார். மூன்றாவது இழுவைடில் நூலின் முடிவில் ஒரு அழகான சுருக்குப்பை மேலே வந்தது. அதை எடுத்து சுருக்கை அகட்டி கவிழ்த்தார். கையில் ஃபோன் விழுந்தது. எடுத்து ஹலோ ரெண்டு மூனு முறை சொல்லிட்டு வச்சிட்டான்னு நண்பரிடம் சொன்னார்.

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராஹிம் ..உங்கள் கமென்ட்ஸ் வழக்கம் போல் முதன் முதலில்.

யாசிர் நீங்கள் சொன்ன மாதிரி ஆள் என்னுடனும் வேலை பார்த்தார். இரவில் போர்வையை போர்த்திக்கொண்டு ஆப்பிள் சாப்பிடுவார். [ ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டால் ' நான் மற்றவருக்கு வாங்கவில்லை' என பொது நலம் ததும்ப சொல்வார். ] இதில் கடுப்பான ஒரு நண்பர் [ பயங்கர பாடி பில்டர்] போர்வைக்குள் வைத்தே அடித்துவிட்டார். அடித்தது யார் என்று கண்டுபிடிக்க ஒரு மாதம் ஆனது.

ஜாகிர் என் எழுத்து உங்களுக்கு பிடித்தது கண்டு சந்தோசம்.
சாகுல்...இன்றைக்கு ரொம்ப சிம்ப்லாக எழுதியிருக்காப்லே
அஹமது இர்சாத்....நீங்கள் சொன்ன படி பகுதி-3 தொடரலாம்.

தாஜுதீன்...ரசித்ததற்க்கு நன்றி.ரொம்ப பிசியா?

சபீர் நீ சொன்ன நிகழ்வுகள் எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது. நாம் படிக்கும்போது உள்ள நகைச்சுவைகளை ஒரு பகுதியாக எழுதலாம்.[பிறகு

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஜாஹிர் காக்கா,

இன்று பகல் pedestrian green சிக்னலுக்காக ரோட்டில் காத்திருந்த வேலையில், வித்யாசமானவர்கள் சங்க பொதுச்செயலாலர் ஒருவர் red சிக்னல் இருக்கும் போது போன் பேசிக்கொண்டு நடந்து தன் வீரத்தைக்காட்டியதோடு அல்லாமல் ஒரு நக்கலான ஒரு பார்வையும் பார்த்துவிட்டு போனார் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியது போல. என்னருகில் இருந்த ஒருவர் இதைப் பார்த்து கடுப்புடன் (நம்ம ஜாஹிர் காக்கா, ஷாஹூல் காக்கா மாதிரி ஆள் போல) "ஆம்புலனஸுக்கு மிஸ்ட் கால் கொடுத்துக்கிட்டு போறான்" என்றுதுமே அந்த நடுரோட்டில் சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஜாஹிர் காக்காவின் கட்டுரையை படித்தவுடன் இந்த நிகழ்வு நடந்ததால் இங்கு பகிர்ந்துக்கொள்கிறேன்.

Shameed said...

//பசித்தாலும் சாப்பிடாமல் ஃபிளைட் டுக்கு போக பெட்டி , பேக் எல்லாவற்றையும் தூக்கிகொண்டு போவார்கள்.//

அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று கொஞ்சம் வெளி வேலை காரணமாக அதிகம் இட முடியவில்லை,

ஒருவர் 5 மணி நேரத்திற்கு தேவையான உணவை (ஒட்டகம் நீர் சேமிப்போதுபோல்)வைத்துக் கட்டுகட்டு என்று கட்டியவரிடம் மட்றவர் கொஞ்சமா சாபிடுங்கள் விமானத்திலும் சாபிடவேனும் என்று சொல்லி உள்ளார் அதற்கு சாப்பிடுபவர் இங்கு விலை குறைவு தம்பி விமானத்தில் சாப்பிட்டால் பில் கூடுதலா வந்துரும் என்றாராம் இப்படியும் சில பல வித்தியாசமானவர்கள்

Unknown said...

ஜாகிர் காக்காவின் எழுத்து நடை மிக சுவராசியமாக இருந்தது ..அதுவும் கரி அய்ன்பாக்ஸ் ரொம்ப நக்கலான யதார்த்தம் ....

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இங்கே எழுதுரவங்கள்ள சகோ.ஜாஹிர் வித்தியாசமானவர்.சொல்ல வந்த விசயத்தில் நையாண்டி ஓட்ட வீரனாட்டம் ஓடும். நகைச்சுவை எழுந்து நடனம் ஆடும்,ஒரு அனுபஸ்தன் ,அறிவாளியின் உருப்படியான உபதேசம் வந்துவிழும்.செல்லமா குட்டும்போதே நகைச்சுவை சொல்லிக்கிட்டே குட்டுறது இவரின் பானி. கொட்டினாலும் தேன் தரும் தேனி.வித்தியாசமானவர்,மிகவும் கவனமுடன் கவனிக்கப்படக்கூடியவர். நம்மவர்கள் மாறனும் ,முன்னேறனும் என்பதில் அக்கரையும் ,உரிமையும் செல்ல கோபமும் இவரின் எழுத்தில் கொப்பளிக்கும். நல்ல எண்ணம். சிந்தைனை ஆக்கம். வாழ்க பல்லாண்டு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

CROWN: அதெல்லாம் இருக்கட்டும் நீ எப்போயிலிருந்து மாறினே ! வழக்கமா வருகிற வேகம் சுனக்கமா இருக்கே ? என்னதான்(டா)ப்பா சொல்லிடப்பா !

ZAKIR HUSSAIN said...

நன்றி bro. Harmy & Crown

Bro crown உங்கள் கமென்ட்ஸ் வழி என்னை சரியாக அவதானித்ததாக நினைக்கிறேன்

Riyaz Ahamed said...

சலாம்
வழக்கம் போல் என்னோட கமென்ட்ஸ் கடைசியாக இருக்கலாம் ரசனைக்கு வித்தியாசமான உதாரணம் எங்கிருந்து எப்படி தான் வருதோ அதான் ஜகிரோ

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு