Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இன்று 06-12-2010 17

ZAKIR HUSSAIN | December 05, 2010 | , ,

தேசந்தந்தை காந்தி பிறந்த நாளை விட மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்தியா நினைத்து பார்க்கிறது. இரண்டு மதத்தவரும் இப்போது போடும் வழக்கை தொடர்ந்துகொண்டே இன்று வரை இழுத்தடித்து இருந்தால் இந்திய மண்ணில் இத்தனை உயிர்கள் அனாவிசயமாக போயிருக்காது. எப்போது நாகரீகம் எனும் ஒரு சர்க்யூட்டில் பிறச்சினையோ அப்போதெல்லாம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது...இதை இன்று வரை உலகவரலாறு எடுத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.

ஒரு Flash Back

சென்னையின் கக்கூஸ் நாத்தமில்லாத இரவு நேரம் சென்னைக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரசில் திருவாரூர் ஸ்டேசனில் ரயில் நிக்க நான் ஆழ்ந்த நித்திரையில் என் எக்கோலாக் சூட்கேசில் [நியு-காலேஜ் மாணவர்களின் ஸ்டேடஷ் சிம்பள்] தலைவைத்து பெர்த்தில் தூங்கி கொண்டிருக்க... 'லத்தியால் நான் தலைவைத்து தூங்கிகொண்டிருந் பெட்டியில் அடித்து எழுப்பிவிட்டு "வெடிகுண்டு இருக்கானு இந்த ட்ரயினை செக் பண்ரோம்" என அந்த போலீஸ் சொல்ல நானும் இன்ஸ்டேன்ட்டா..' ஆமாய்யா வெடிகுண்டு உள்ள பொட்டியை தலைக்கு வச்சிதான் தூங்குவானுக'... இந்த போலீஸ்தான்ஸ்காட்லாண்ட் யார்ட்????......

ஞாயமான கேள்வி

எதற்க்கெடுத்தாலும் "துவாச்செய்யுங்க அத்தா..துவாச்செய்ங்க..." என சொல்பவர்கள் , எதிரில் நின்று கேட்கும் மனிதர் துவா எதற்க்கு செய்ய வேண்டும் என தெரியாமலேயே போய் விடுகிறார். துவா செய்ய சொன்னவரும் 'அன்றைக்கு சொன்னேனே துவா செஞ்சீங்களா?' என கேட்காமல் ரெக்கார்டெட் மெஸ்ஸேஜ் மாதிரி மற்றவரிடமும் அதை ஒப்பிக்க சென்று விடுகிறார்.

நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"

ஒரு சின்ன கதை:

ஒரு நல்ல அரசன் ஆளும் இடத்தில் ஒரு துறவி ஊர்க்கோடியில் இருந்தார். அங்கு எல்லா மக்களும் போய் அந்த துறவியிடம் அறிவுரை பெற்று வந்திருக்கின்றனர். அந்த மன்னனுக்கு ஒரு ஆச்சர்யம் துறவி..அதுவும் பிச்சைக்காரன் கோலத்தில் இருப்பவனிடம் ஏன் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக போகிறார்கள்?. ஆர்வத்தால் ஆட்களிடம் சொல்லி துறவியை அழைத்துவந்து 'ஏன் உங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ? " என கேட்க ..”நாளை சொல்கிறேன்” என துறவி சொல்லி இருக்கிறார். அந்த இரவு அரண்மனையில் தங்க அனுமதியை அரசன் தர...

' நீங்கள் எந்த விதமான அறையில் தங்க ஆசை?..---. அரசன்.

'உன் அறையை விட விசாலமான வசதியான அறையில்...' ---- துறவி

'என்னமாதிரியான சாப்பாடு'---அரசன்

'உன் சாப்பாட்டை விட ஆடம்பரமான சாப்பாடு'துறவி

அரசனுக்கு ஒரே குழப்பம் "எப்படி உங்களைப்போய் துறவி என சொல்கிறார்கள் மக்கள்? இப்படி பேராசை பிடித்து அலைகிறீர்கள்...அரசன்.

நாளை தெரிந்துகொள்வாய் அரசே...--- துறவி

மறுநாள் காலையில் துறவி புறப்பட்டு தனது இடத்துக்குபோக வேண்டும், போகும்போதும் அரசனுடைய குதிரையை விட நல்ல குதிரை , அரசனின் உடையை விட நல்ல உடை இப்படி துறவி கேட்க , எல்லாம் தரப்பட்டது. அரசனும் வழியனுப்ப அவருடன் செல்ல ஊர்க்கோடியில் அந்த துறவி தனக்கு கிடைத்த குதிரை, நல்ல உடை அனைத்தையும் திருப்பி அரசனிடமே கொடுத்துவிட்டு
தனது கிழிந்த உடையுடனும் வெறுங்காளுடனும் நடக்க.....

அரசன் 'இன்று தெரியும் என்று சொன்னீர்களே...'

'என்னால் நேற்று கிடைத்த அத்தனை சுகத்தையும் , வசதியையும் ஒறே நொடியில் தூக்கி எறிந்து விட்டு வாழ முடியும் அரசே உனக்கு அந்த மனப்பக்குவம் இருக்கிறதா?...துறவியின் கேள்வியில் அரசன் அசந்து விட்டான்.

வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம்
கொண்டாட எதுவும் இல்லை. இந்த தாமரை இலை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன தெரியுமா?...தண்ணீரில் இருந்தாளும் தண்ணீர் ஒட்டாத அந்த சூழல்...நம்மை சுற்றி எல்லாம் இருந்தாலும் எதுவும் நமக்கு சார்ந்ததல்ல. பல பிரச்சினைகளுக்கு காரணம் ' அது என்னுடையது” என்ற வாதம்தான்.

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.

- ZAKIR HUSSAIN

17 Responses So Far:

Yasir said...

படிப்பவர்களுக்கு..பல் தெரிய சிரிக்க வைக்கும் எழுத்துநடை..சிந்தனைக்கு சில துளிகள்...அனைத்து கலந்த கலவை நீங்கள் கொடுத்திருக்கும் இந்த ஆக்கம்....ஆனால் உங்களிடம் இன்னும் எதிர் பார்க்கிறோம் காக்கா...இப்படி டப்புண்டு இம்பிட்டிகொண்டு சொல்லிட்டு முடிச்சிட்டீங்ளே...நேரமின்மையோ??

ஜலீல் நெய்னா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஜாஹிர்
சிந்திக்க தூன்டிய வரிகள்,அருமையான எழுத்து நடை,
திரும்பத் திரும்ப படிக்க ஆவா,

கடைசி வரியில் ஒன்று விடுபட்டு விட்டது
என்று நினைக்கிறேன்.

"கொடுத்து மகிழ்ந்தது"

sabeer.abushahruk said...

அ.நி.: 'இன்று' ஏற்கனவே வந்துவிட்டது. எனவே, தலைப்பை 'இன்று2' என மாற்றியமைப்பதின்மூலம் 'இன்று3' 'இன்று4' என்று எழுதியே தீரவேண்டிய கட்டாயத்திற்கு எழுதியவரை நாம் உட்படுத்துவது சாலச் சிறந்தது.

யாசிர் சொன்னதுபோல இத்துனூன்டுல முடிஞ்சமாதிரி இருக்கு. இதே மூட்ல இன்னும் சில நிகழ்வுகளையும் சேர்த்திருக்கலாம். 

கட்டுரையில் துவங்கி தத்துவத்தில் முடித்திருக்கிறாய். தத்துவம்தான் என்பதை ஜலீலின் அழகான //"கொடுத்து மகிழ்ந்தது"// பின்னூட்டக் குறிப்பு உறுதிப் படுத்துகிறது. 

எந்த ஜலீல்னு விளங்குதா?

அருமையான நடை. 

துஆச்செய்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் கட்டுரயில் முன்பை விட தற்போது நல்ல முதிர்ச்சி தெரிகின்றது (அப்போ முந்தய கட்டுரயில் அது இல்லையா என்று யாரும் சிண்டு முடியவேண்டாம்)முன்பெல்லாம் ஒரே டாபிக் பற்றி விபரமாக சொல்லும் நீங்கள் தற்போது 5 கறி விருந்து போல் பல விசயங்களை டச் செய்து விடுகின்றீர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வார்த்தகளைத் தேடுகிறேன் அசத்தல் காக்காவின் ஆக்கத்திற்கு கருத்திட ! இருப்பினும்...

/// sabeer சொன்னது…
அ.நி.: 'இன்று' ஏற்கனவே வந்துவிட்டது. எனவே, தலைப்பை 'இன்று2' என மாற்றியமைப்பதின்மூலம் 'இன்று3' 'இன்று4' என்று எழுதியே தீரவேண்டிய கட்டாயத்திற்கு எழுதியவரை நாம் உட்படுத்துவது சாலச் சிறந்தது.///

இதனையே நானும் வழிமொழிகிறேன்... ஆகவே ஜாஹிர் காக்கா தொடருமென்று போட்டிருக்கலாம் (ஏக்கம் தான்) !

ஜலீல் நெய்னா said...

சாவனா மச்சான் அஸ்ஸலாமு அலைக்கும்

ஏன்? இந்த பிரியானி,நெய்சோறு,ஐந்து கறிச்சோறு

விடவே மாட்டியா?

Riyaz Ahamed said...

சலாம்
உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.
அசத்திட்டே
ஜாகிர்

Shameed said...

jaleelsa சொன்னது…

//சாவனா மச்சான் அஸ்ஸலாமு அலைக்கும்

ஏன்? இந்த பிரியானி,நெய்சோறு,ஐந்து கறிச்சோறு

விடவே மாட்டியா?//

வலைக்கும் முஸ்ஸலாம்

சாப்பாட்டில் இதையெல்லாம் குறைத்து கொண்டேன்
உதாரணங்களில் இதை கூடுதலாகிகொண்டேன்.(அப்படி இருந்தும் கொழுப்பு குறையவில்லையோ என்று மச்சான் புலம்புவது காதில் விழுகின்றது)

Shameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்

// நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"//

துவா என்பது கோரிக்கையை சொல்லி கேட்பதுதான் துவா
சும்மா துவா கேளுங்க என்று சொல்லிவிட்டாரே என்று சொல்லி நல்லா இருப்பவரை நல்லா இருக்கணும்னு துவா கேட்டா அது நல்லா இருக்காது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// நீதி: "துவா செய்ய காரணம் 10 வரிக்கு மிகாமல் விளக்கவும்"//

துவா கேட்கச் சொன்னவரையே துவா கேட்க வைப்பது

ஆகவே !

நிலை உயர்ந்திட விரைந்"துவா" !
புறம் பேசி எடுத்திடாதே வ"துவா" !
உறவுகளின் உள்ளம் நுழைந்"துவா" !
நட்புகளை வசப்படுத்தி கைகோர்த்"துவா" !
அதிரைநிருபரின் அமைதியின் ஆளுமையில் மிதந்"துவா" !

மிச்சம் கவிக் காக்கா, கிரவுன் துவா கேட்டால் அதன் பங்கு அசத்தல் காக்காவுக்கும் பங்குண்டு !

அன்புடன் மலிக்கா said...

உடுத்தி கிழித்ததும் , உண்டு செரித்ததையும் தவிர எதுவும் நமக்கு சொந்தமில்லை.//

உண்மையிலும் உண்மை.

நல்லதொரு பதிவு.இன்று.......

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல தொரு ஆக்கம்.எனக்கும் தோன்றியது சட்டுன்னு
முடிச்சிட்டதா(ஜால்ரா).வாழ்கையின் மகத்துவத்தை தத்துவத்துடன் சொன்ன
பக்குவமான எழுத்து.துவா, இது நான் கேட்க சொன்னது பொதுவா,அதுவும் மிக
மெதுவா(அழுத்தல)அதற்காக என்னை யாரும் பதுவா செய்திடாதிங்க. சபிர்காக்கா
மற்றும் அனைவருக்கும் நன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தோன்றியது சட்டுன்னு
முடிச்சிட்டதா(ஜால்ரா)//

அதென்ன !? மெ"துவா" பொ"துவா" சா"துவா" இருப்பதாக நினைப்பு - இ"துவா ? எதுக்கு இந்த ஜால்ரா ?? இதத்தான் சொலிடுறியா(டா)ப்பா !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.சபிர்காக்கா
மற்றும் அனைவருக்கும் நன்றி.

ZAKIR HUSSAIN said...

சகோதரர் யாசிர்....நேரமின்மையும் காரணம்தான். சபீர் சொன்ன 'நம்பரிங்' குட் ஐடிடா. கடைத்தெரு பிடிப்போம் [ கடை பிடிப்போம்னு எத்தனை நாளைக்குத்தான் எழுதுவது ?]

Riyaz..உடன் கருத்து தெரிவித்ததால் மறவாமல் பரிசு வாங்கி செல்லவும். [ ஏனெனில் முன்பு நான் எழுதிய ஆர்டிகிள் வந்து, நீ கருத்து எழுதும்போது..."காந்தியை சுட்டுனானுங்களானு' கேட்ட மாதிரி இருந்துச்சு]

ஜலீல்..நீங்கள் சொன்னது சரிதான்.."கொடுத்து மகிழ்ந்ததும்" சேர்த்திருக்களாம். [ சபீர்..நம் ஜலீலை எப்படி தெரியாமல் போகும்]

சாகுல் ..உங்களின் observation எப்போதும் வித்யாசமானது

சகோதரிஅன்புடன் மலிக்கா, Bro.Crown, சகோதரர் அபு இப்ராஹிம் ....உங்களின் தமிழுக்கு நான் எழுதியிருப்பதெல்லாம் ஜுஜூபி

தாஜுதீன் (THAJUDEEN ) said...

சகோதரர் ஜாஹிர், வழக்கம் போல் அருமையான ஆக்கம். இது போல் எழுதுவதற்கு முன் ஏதாவது அளவுகோல் வைத்து எழுதுவீர்கள். அதெப்பாடி உங்களின் தனித்தன்மை கொஞ்சம் கூட மற்றம் இல்லாமல் அப்படியே ஒவ்வொரு பதிவிலும் தெரிகிறது.

//வாழ்க்கையில் நமக்கு சார்ந்திருப்பது தவிர்க்க முடியாதது ஆனால் சொந்தம் கொண்டாட எதுவும் இல்லை.//

இறுதியாக தாமரையுடன் சொல்லப்பட்ட உதாரணம் அருமை.

இவ்வுலகில் இருக்கும் எதுவும் நமக்கு நிறந்தரமில்லை என்றி சிந்தனை ஒவ்வொருத்தரிடம் வந்துவிட்டால், அநேக பிரச்சினைகளுக்கு என்றோ தீர்வு வந்திருக்கும்.

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…
Riyaz..உடன் கருத்து தெரிவித்ததால் மறவாமல் பரிசு வாங்கி செல்லவும். [ ஏனெனில் முன்பு நான் எழுதிய ஆர்டிகிள் வந்து, நீ கருத்து எழுதும்போது..."காந்தியை சுட்டுனானுங்களானு' கேட்ட மாதிரி இருந்துச்சு]


அஸ்ஸலாமு அழைக்கும்

நான் சொல்லவந்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.நேற்று இங்கு நெட் கட் ஆகிவிட்டது இல்லையேல் இருவரும் ஒரே செய்தியை சொல்லி இருப்போம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு