Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி தாகம் 1: TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம் 20

அதிரைநிருபர் | December 24, 2010 | , ,

TNPSC Group 1 பற்றி கூடுதல் விளக்கம்.

நம் சமுதாயத்தை சேர்ந்த மிகச்சிலரே TNPSC Group1 மூலமாக DSP, துனை கலெக்டர் போன்ற பதவிகளை பெற்றவர்கள். பின்பு பணிமூப்பு அடிப்படையில், புரோமோசன் பெற்று மாவட்ட ஆட்சித் தலைவாராகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளாராகவும் ஆனவர்களும் உண்டு.

TNPSC Group1 தேர்வுமுறை UPSC-Civil Service Exam போல இருந்தாலும் சில வேறுபாடுகள் உண்டு. மேலும் தமிழ்நாடு அளவில் நமக்கு இடஒதுக்கீடு இருப்பதால், இந்த தேர்வில் அதிகம் கவணம் செலுத்துவது பயன் அளிக்கும்.

Preliminary Exam. (Prelim)
இந்த Prelim Exam போட்டியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நடத்தப்படுகின்றது, அதாவது வடிகட்டும் தேர்வு. இதில் TNPSC group1 பொருத்தமட்டில் ஒரு பரிட்சைதான். அதிலும் 'பொது அறிவு (GK)' பற்றிய வினாக்களே இடம் பெறும். இதற்க்கு 300 MARKS உண்டு. (For Syllabus and more details Visit www.tnpsc.gov.in)

TNPSC Group1 தேர்வின் முக்கியத்துவம்.
இந்த வருடம் கிட்டதட்ட 93000 பேர் TNPSC Group1 Prelim பரிட்சை எழுதியதாக சொல்கின்றார்கள். ஆனால் நிறப்ப வேண்டிய காலி இடம் 61 மட்டுமே! (DSP. Dep Collector உட்பட) அதாவது பரிட்சை எழுதிய நபர்களில் 0.065% சதவித பேருக்கு மட்டுமே வேலைகிடைக்க வய்ப்பு உள்ளது. சராசரியாக 1 வேலைக்கு 1524 பேர் போட்டி போடுகின்றார்கள் (Ratio 1:1524). இதிலிருந்து இந்த அதிகார வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம். எனவே அதிகாரமில்லா வேலையாகவோ அல்லது பதவியாகவோ இருந்தால் இத்தனை பேர் போட்டி போடுவார்களா?. இப்போது தெரிந்திருக்குமே!  இப்பதவி எவ்வளவு முக்கியம் என்று!. ஆனால் நம் சமுதாயமோ போட்டி என்றால், உடனே ஒதுங்கும் முதல் சமுதாயமாக இதுநாள்வரை இருந்ததினால், இதனால் நாம் இழந்தது ஒன்றல்ல!. முன்பு முஸ்லிம்களாகிய நம்வசம் இருந்த 800 வருட ஆட்சியை இழந்தோம்!. தற்போது இதுபோன்ற தேர்வினை ஒதுக்கியதால் தற்போது அதிகாரத்தையும் இழந்து நிற்கின்றோம்!.

ஒரு காலத்தில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்ற நிலை மாறி, தமிழ்நாடு முழுவதும் இந்த அதிகாரம் பொருந்திய வேலைக்கு போட்டா போட்டி நிலவுகின்றது. நம் சமுதாயம் மட்டும், பணம் சம்பதிப்பது மட்டுமே நோக்கமாக வெளிநாட்டுக்கு போக பஸ்போர்ட் எடுப்பதில் குறியாக உள்ளது. இப்போது ஓரளவு விழிப்புணர்வு உள்ளதால் இனிவரும் காலங்களில் இந்த 93,000 பேர்களில் நிச்சயமாக நம் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இருப்பார்கள், நமது ஊரை (அதிரை) சேர்ந்தவர்களும் இருபார்கள் என்றால் நமக்கு அது மிக்க சந்தோசமே!.

இவர்களில் இருந்து Prelim பரிட்சை எழுதியவர்கள் காலியாக உள்ள மொத்த இடங்களின் அடிப்படையில் 1:10 என்ற விகிதாசார அடிப்படையில் பொதுவாக அடுத்த கட்ட மெயின் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். Prelim தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலோ என்னவோ, இப்போது TNPSC 1:20 என்ற எண்ணிக்கையில் மெயின் தேர்வுக்கு தெரிவு செய்துள்ளார்கள். அதாவது மொத்த காலி இடங்கள் 61 என்றால் 1220 பேர் மெயின் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெறுவார்கள். இப்போது approximately 1300 பேர் மெயின் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் 1:20 ratio க்கு கூடுதலாக வருதே என்று எல்லாம் கேட்க கூடாது. ஒரே மதிப்பெண் பலர் எடுக்கும் போது இந்த எண்ணிக்கை வித்தியாசம் வரும்.

Main Exam & Interview (முக்கிய தேர்வு)
Group1 - MAIN EXAM - (For Syllabus and more details Visit www.tnpsc.gov.in ) இதில் இரண்டு பரிட்சை உண்டு. ஒவ்வொறு Paper ம் 300 மதிப்பெண். (600 Marks) இந்த தேர்வு மிக முக்கியமானதாகும். இதிலும் இதன் பின்பு நேர்கானலிலும்( Interview) 80 மதிப்பெண் எடுக்கும் 600+80 மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு உங்களுக்கு ரேங்க் வழங்கப்படும். இது மாதியான தேர்வுகளை எழுதும் போது நேர பற்றக்குறை பெரும் பிரச்சனை. நமதூர் கல்லுரி (KMC) பேராசிரியர்களில் சிலர் மெயின் தேர்வுவரை வந்தவர்கள் உண்டு, அவர்களின் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வுக்கு தயாராகும் சகோதரர்களுக்கு சில ஆலோசனைகள்.

1. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கைதான் உங்களின் முதல் ஆயுதம்.

2. திட்டமிடல்.

3. கடின உழைப்பு(படிப்பு),

4. குழுபடிப்பு பயன் அளிக்கும் (நாம் சேரும் நபரை பொறுத்தது).

5.பரிட்சைக்கு உரிய Syllabus (பாடம்) நன்றாக தெரிந்து கொண்டு முழுமையாக படிப்பது.

6. TNPSC group1 பரிட்சையில் வெற்றிபெற்றவர்களின் ஆலோசனை.

7. ஆங்கில அறிவு (லிட்டரேச்சர் அளவு எல்லாம் தேவையில்லை)

8. முழு தயாரிப்புகளுக்கு (Preparation) பிறகு, பழைய TNPSC Group1 & UPSC Civil Service தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி தாள்களை Refer பண்ணுவது முக்கிய பலன் அளிக்கும்.

தேர்வில் நேர பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சனையை தவிர்த்துக் கொள்ள இது மாதிரியான தயாரிப்புகள் உதவும். பல நபர்களுக்கு எல்லா கேள்விகளும் பதில் தெரிந்திருந்தாலும் நேரபற்றாக்குறையால் பதில் அளிக்க முடியாமல் போய்விடுகின்றது.

Prelim தேர்வில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் (2011) முக்கிய தேர்வு (Main Exam ) நடைபெறவுள்ளது. நாம் இனி கலந்துக்கொள்ள முடியாது. இந்த Prelim தேர்வில் கலந்துக்கொண்டு மெயின் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நம் (அதிரை) சகோதர்கள் யாராவது இருப்பார்கள் என்று நம்புவோம்.

இப்போதிலிருந்தே நாம் அடுத்த ‘தமிழ்நாடு அரசின்’ அறிவிப்புக்கு காத்திருக்கவேண்டும். தமிழ்நாடு அரசின் காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகலாம். அதோடு TNSPSC group1 தயார்படுத்தலிலும் இப்போதே ஈடுபடவேண்டும். கல்லுரிகளில் முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் அல்லாமல். வேலையில் உள்ள (உள்நாடு,வெளிநாடு) தகுதியுள்ள சகோதரர்கள் முயற்சியில் ஈடுபடலாமே. முஸ்லிம்களுக்கு 35 வயதுவரை சலுகை உண்டு!.

முயற்சித்தால் வெற்றி (இன்ஸா அல்லாஹ்!)
 "நம் சமுதாயம் விழித்துக் கொள்ள வேண்டிய" தருணம் இது, நான் படித்து தெரிந்து கொண்டதைதான் சொல்லியுள்ளேன். நான் தொகுத்து தந்துள்ளதை விட நீங்கள் அதிகமாக அறிந்தவர்களாக இருக்கலாம். அல்லது நான் பதிந்த கருத்தில் பிழை இருக்கலாம். இருந்தால் சுட்டிகாட்டவும். நம் சமுதாயத்தின் பயன் தான் முக்கியம்.

சகோ. முகமது அலி IPS, பேராசிரியர் ஆபிதீன், CMN சலீம் போன்ற பலர் இந்த விசயத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளார்கள். ஆர்வம் உள்ளவர்கள் அவர்களின் ஆலோசனை பயன் படுத்திக்கொள்ளலாம்.

வரும் ஜனவரியில் நம் ஊரில் நடைபெறவுள்ள கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு வாயிலாக உண்மையான ஒரு எழுச்சி எற்படவேண்டும். இன்ஸாஅல்லாஹ்! ஏற்படும் என்று நம்புவோம்.

-- அதிரை மீரா

20 Responses So Far:

sabeer.abushahruk said...

அருமையான வழிகாட்டல், அழகான எழுத்து நடை, ஆக்கபூர்வமான குறிப்புகள், ஆராய்ச்சி மட்டத்தில் உழைப்பு, அளவற்ற ஈடுபாடு என இந்த ஆக்கத்தில் அதிரை மீரா; அசத்தியிருக்கிறார் ஜோரா!

சகோ.மீரா மற்றும் முஜீபுக்கும் நன்றி.

ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சிந்தணைகளை சிரத்தையோடு ஒன்று திரட்டி "கல்வி விழிப்புணர்வு என்கிற" மாபெரும் கட்டத்திற்கு கோர்த்தெடுத்து கொண்டு செல்லும் அதிரை நிருபர் இனி ஒரு வலைப்பூ மட்டுமல்ல என்பதை நிர்வாகத்தினர் நினைவில் கொள்ளட்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய அவசியத் தேவையறிந்து ஆக்கங்கள் தேடித் தந்திடும் எங்களது நட்பு மீரா மற்றும் முஜீப்DOTcom நன்றிகள்.

அவசியம் மாணவர்கள் யாவரும் இதனை வாசித்து பயன்களின் பலன்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், இணைய மற்றும் தனிஅச்சு printer வைத்திருப்பவர்கள் இதனை நகல் எடுத்து ஊரில் இருக்கும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு அறியத் தரவேண்டும் அதோடில்லாமல் பெற்றோர்களும் எளிய நம் மொழியில் இருக்கும் இதனை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எங்கள் கவிக் காக்காவின் நினைவூட்டல் என்றும் எம் மனதில் நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ் !

அதிரை முஜீப் said...

இப்பதிவை இங்கு வெளியிட்ட அதிரை நிருபர் தளத்திற்கு அதிரைமுஜீப்.காமின் நன்றியும் வாழ்த்துக்களும்!. இதுபோன்று நம்மூரில் உள்ள மற்ற இணையத்திலும் இதைப்பதிந்து சமுதாய மாணவ மாணவிகளுக்கு உதவவேண்டும்!. செய்வார்களா?. இதை ஓரு கூட்டு முயற்சியாக செய்யாதவரை விழலுக்கு இறைத்த நீராகுமோ! என்ற மன வேதனையும் உண்டு.

புளியமரத்தின் பதிவிற்கு 39 கமென்ட் பதிந்த வாசகர்கள், இந்த சமுதாய நலனையும், சமுதாய மாணவர்களையும் புளிந்தெடுக்கும் இதுபோன்ற ஆக்கத்திற்கு குறைவான அளவே கருத்து பதிவதும் ஆரோக்கியமானதல்ல!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல வழிகாட்டல் பகிர்வு. சகோதரர் மீரா மற்றும் சகோதரர் முஜீப் இருவருக்கும் மிக்க நன்றி. நம் மக்களிடம் அரசு வேலைகளில் உள்ள நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்தியே ஆகவேண்டும். இன்ஷா அல்லாஹ், கல்வி விழிப்புணர்வு மாநாடு ஒரு அடித்தளமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கலாம்.


// அதிரை முஜீப் சொன்னது… சமுதாய மாணவர்களையும் புளிந்தெடுக்கும் இதுபோன்ற ஆக்கத்திற்கு குறைவான அளவே கருத்து பதிவதும் ஆரோக்கியமானதல்ல!//

அன்பு சகோதரர் தங்களின் ஆதங்கத்தில் நானும் உடன்படுகிறேன். நம் மக்களிடம் கல்வி தொடர்பாக ஆர்வம் நிறைய உள்ளது என்பதை முந்தைய பதிவுகளில் காணமுடிந்தது. நிச்சயம் நல்ல கருத்துக்கள் பகிர்ந்துக்கொள்வார்கள், அத்துடன் அனைவரின் ஒத்துழைப்பும் நிச்சயம் கிட்டும்.

ZAKIR HUSSAIN said...

பேனா , போர்வாள் என முன்பு ஒரு அரசியல்வாதி சொன்னது நினைவில் இருக்கிறது. இப்போது வேண்டும் என்றால் கீ போர்டும் மவுசும் என மாற்றிக்கொள்ளலாம். அதிரை நிருபர் வலைப்பூவின் பங்கை எதிர்காலத்தில் நமது ஊரில் படித்து முன்னேற்றமடையப்போகும் IAS , IPS பட்டதாரிகள் சொல்லட்டும்.

சகோதரர் முஜீப் , சகோதரர் தாஜுதீன் இவர்கள் எல்லாம் நம் ஊரை வழிநடத்த தகுதியானவர்கள். துரதிஸ்டவசமாக நல்லவர்களாக இருக்கிறார்கள்

sabeer.abushahruk said...

// அதிரை முஜீப் சொன்னது… சமுதாய மாணவர்களையும் புளிந்தெடுக்கும் இதுபோன்ற ஆக்கத்திற்கு குறைவான அளவே கருத்து பதிவதும் ஆரோக்கியமானதல்ல!//

முஜீப்,

ஊர்கூடி இழுத்தால் வர
இதுத் திருவிழாத் தேரோ
கந்தூரிக் கர்மமோ அல்ல.

ஒரிரு கைகளேயாயினும்
எம் போன்ற
உறுதியானோர் இழுத்தால்
ஒட்டுமொத்த சமூகமும்
நம்
உடன் வரும் சோதரா!

இழுக்க நம்மோடு
முன் வராதார்கூட
நகர்தல் சாத்தியப்படுகயில்
பின்னின்று ஊட்டம் தருவர்
பின்னடைவு வெண்டாமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பின் முஜீப்: படி படி இதப் படி அதப் படின்னு சொன்னா இம்சைன்னு நினைத்த காலம் மலையேறி விட்டது என்னவோ உண்மை இன்று நாம் எடுத்துச் சொல்வதை காது கொடுத்து கேட்க மணவச் செல்வங்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

என்ன இதனை எல்லோராலும் சொல்லிட முடியவில்லை அதற்கு பலக் காரணங்களைச் சொல்லிடலாம், முக்கியமாக நமக்கு இப்படியொரு வாய்ப்புகள் யாரும் உருவாக்கித் தந்திடவில்லையே, அல்லது எடுத்துச் சொல்லித் தந்திடவில்லையே என்ற ஆதங்கம் உறுத்தலாம், அலல்து இப்படி நம்மால் தேடி எடுத்து மற்றவர்களுக்கு சொல்ல முடியுமா என்ற தயக்கம் இருக்கலாம் ஒருவேலை நாம் சொன்னால் இவர்கள் கேட்டிடுவார்களா என்ற பின்னிழுப்பாக கூட இருக்கலாம்.

இருப்பினும் ஒன்று மட்டும் நிஜம் இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா, மற்றும் ஊரில் வாழ் அதிரைப்பட்டினத்தார் யாராகா இருந்தாலும் ஏன் அகர வரிசையில் உலகின் எல்லா மூலையில் இருக்கும் நம் மக்கள் மேல்கல்வின் அவசியமும் அதோடு அரசு ஆளுமையில் வேலைகள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் இந்த சிறு உணர்வுப் பொறிதான் கொழுந்து விட்டு வெளிச்சம் கொடுத்திடும், களம் காண்போம், அயர்ந்திட வேண்டாம் அல்லாஹ் வெற்றியைத் தந்திடுவான், பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்....

Yasir said...

அருமையான விளக்கங்கள்,சமுதாயக்கவலை,சிந்தனை உள்ள ஆக்கம், சகோ.மீரா, சகோ.முஜிப் ..பின்னூட்டம் அதிகம் இல்லை என்ற கவலை வேண்டாம்...பின்னால் இருந்து முன் அழகையும், வலுவையும் கொடுக்கும் முதுகெலும்பு போல உங்கள் பின்னால் நாங்கள் நிற்க்கிறோம்...சமுதாய பணிக்கு நாங்கள் என்றுமே தயார்தான்

Unknown said...

அரசில் அதிகாரம் பெற வேண்டும் .....யாரவது ஒருவர் முயற்சிசெய்து அதிகாரத்துக்கு
வந்து அந்த பவரை நம்மூருக்கு trend டை செட் பண்ணும் விதமாக அமையனும் ...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சான்றோர் சபையில் என்னை போன்றோர் கருத்து சொல்லல, இது இரண்டொரு நாளில் வந்துட்டேன். இது சம்பந்தமா 2 மாதத்துக்கு முன்னேயே ஒரு ஆக்கம் அ. நி அனுப்பினேன்.கல்வி சம்மந்தபட்ட நேரத்தில் பதிய சொல்லி அவங்களும் கடும் பணியின் அழுதத்தின் காரணமாய் பதியாமல் இருந்திருக்கலாம்.மீண்டும் ஒருமுறை சொல்ல விரும்புவது சான்றோர் சபையில் சாமானியர்களான என்னை போன்றோர் கருத்து பதியாததால் நல்ல பணி தடை பாடாது என்று நம்புகிறவனாக தற்போது தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு) அன்றும் இதேதான் சொன்னேன் இன்றும் இதேதான் சொல்கிறேன்... படிப்பு படிப்பு மேல்படி என்றுமே தூக்கல்தான் தம்பி ! இதுகெல்லாம் சாமானியன் சான்றோர் பேச்சுன்னு சொல்லிட்டு ஓரமா இருந்திடப் படாது, இங்கே சீக்கிரவம் வா பட்டதையும், கற்றதையும், அடுத்தவர் போற்றலையும் பெருமையுடன் சொல்வோம்...

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நீங்கள் எல்லாம் வெள்ளி கிழமை விடுமுறையில் உள்ளீர்கள்
எங்களுக்கு வியாழன் வெள்ளிதான் பிஸி
நாளை பின்னுட்டம் இடுகிறேன்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// ZAKIR HUSSAIN சொன்னது… அதிரை நிருபர் வலைப்பூவின் பங்கை எதிர்காலத்தில் நமது ஊரில் படித்து முன்னேற்றமடையப்போகும் IAS , IPS பட்டதாரிகள் சொல்லட்டும்.//

நல்ல சிந்தனையுடன் எழுதியிருக்கிறீர்கள் ஜாஹிர் காக்கா. நிச்சயம் அதிரையின் கல்வி முன்னேற்றத்தில் அதிரைநிருபரின் பங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கு என்பதை உறுதியாக நம்புகிறோம்.

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

கல்வி என்ற ஒரே கண்ணோட்டத்தில் இஸ்லாமிய சிந்தனையுடன் ஒன்றினைந்தால் நிச்சயம் நல்லவர்கள் அதிரைப் போன்ற ஊர்களை நிர்வகிப்பார்கள். காலம் மாறும். இன்ஷா அல்லாஹ்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Yasir சொன்னது… சமுதாய பணிக்கு நாங்கள் என்றுமே தயார்தான்//

அன்பு சகோதரர் யாசிர் கருத்துடன் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இன்றைய இந்த முயற்சி நமக்கும் நம் சமுதாயத்திற்கும் நல்ல ஒரு பலனை கொடுக்கும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது,
இப்பணி சிறக்க பலர் உடலாலும் உள்ளத்தாலும் உழைத்துக்கொண்டு உள்ளார்கள்.

Mohamed Meera said...

( நமதூரின்) கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் உள்ள நம் அனைவரின் எண்ணங்களும் விரைவில் ஈடேறும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பொதுவாகவே சமுதாயத்தில் படித்த நல்ல வேலையில் உள்ள சகோதரர்களில் அதிகமான பேர் (எல்லோரும் அல்ல) , தம் குடும்பத்தை தாண்டி சிந்திப்பதில்லை என்ற எண்ணம் பரவலாக உண்டு, அந்த எண்னம் வெகு விரைவில் பொய்யாகும் என்று நம்புவோம்.

நம் சமுதாய இணையதளங்கள் (adirainirubar, adiraimujeeb) அதற்கான வேலையே செவ்வனே செய்து வருகின்றன வாழ்த்துகள், பணிகள் தொடரட்டும் .

தம்பி தாஜூதீன், தம்பி யாசிர் - போன்றவர்கள். இந்த டி. என்.பி.ஸ்.சி குருப் 1 தேர்வுக்கு தயாராகலமே - ( TN அரசாங்கத்தின் அடுத்த அறிவிப்பு வரும் போது- உங்கள் வயது 35 வயதுக்குள் இருந்தால்).

கேட்டு, படித்து, சொல்வதைவிட, அனுபவரீதியாக சொல்லுவது சமுதாயத்திற்கு பயன் அளிக்கும் அல்லவா.

முயன்றால் முடியாது உண்டோ?

கருத்துக்களை பதிந்த சகோதரர்களுக்கும் நன்றி

இறைவன் நாடினால் சந்திப்போம்.

- அதிரை மீரா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தம்பி தாஜூதீன், தம்பி யாசிர் - போன்றவர்கள். இந்த டி. என்.பி.ஸ்.சி குருப் 1 தேர்வுக்கு தயாராகலமே - ( TN அரசாங்கத்தின் அடுத்த அறிவிப்பு வரும் போது- உங்கள் வயது 35 வயதுக்குள் இருந்தால்). //

சகோதரர் மீரா, தங்களின் ஆர்வமூட்டலுக்கு மிக்க நன்றி. என்னுடைய விருப்பம் கல்லூரி விரிவுரையாளராக வேண்டும் என்பதே. விரைவில் அதற்கான முயற்சியில் இறங்க உள்ளேன். அட்லீஸ்ட் குறைந்தபட்சம் கவுரவ விரிவுரையாளராக வேண்டும் என்பது கடைசி விருப்பம் இன்ஷா அல்லாஹ்.

நம்மூர்வாசிகள் ஆசிரியர் பணியில் நிறைய பேர் சேர வேண்டும். நம்மூர் இளையோருக்கு நல்ல வழிகாட்டிகள் கிடைப்பார்கள் என்பது என் நம்பிக்கை.

அபு ஆதில் said...

படி படி இதப் படி அதப் படி அதிரைநிருபரையும் சேர்த்து படியுங்கள் மாணவச்செல்வங்களே.
பயனுள்ள தகவல்களை வழங்கிய சகோ.முஜீப் & மீரா அவர்களுக்கு நன்றி.

Yasir said...

//தம்பி தாஜூதீன், தம்பி யாசிர் - போன்றவர்கள். இந்த டி. என்.பி.ஸ்.சி குருப் 1 தேர்வுக்கு தயாராகலமே// ஆமா காக்கா அதைபற்றி உங்களை போனில் அழைத்து டிஸ்கஸ் பண்ணுறேன்..உங்கள் ஆலோசனை வேண்டும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு