அதிகாலை எழுந்து
அல்லாஹ்வைத் தொழுது...
அம்மா தேநீர் என்ற
அமிர்தம் பருகி...
அல்குர்'ஆன் கற்க
ஆர்வமுடன் விரைந்து...
ஆற அமர பயின்று
அற்புதமாய் துவங்கும்...
அந்தகால பிள்ளைகளின்
அன்றாட வாழ்க்கை!
அடித்த அலாரம்
அடித்து அனைத்து...
தலையணை எடுத்து
தலைக்குமேல் போர்த்தி...
அரைகுறைத் தூக்கத்தால்
அழுது வடிந்து...
தட்டி எழுப்பும் தாயை
திட்டித் தீர்த்து..
பதினாறு பல்கூட
தேய்க்கமுடியா நேரத்தில்
முப்பத்தி ரெண்டும்
ஒப்பேத்தித் தேய்த்து...
பாதி பால்...
பகுதி உணவு...
சட்டென நினைத்து
விட்டதை தொழுது...
பறக்கப் பறக்கப்
பள்ளிக்கு ஓடும்
இக்கால இளசுகள்!
பரிசுத்த உடையும்
பதவிசான நடையும்...
பாடப் புத்தகத்தில்
பாதுகாத்த மயிலிறகும்...
சின்னச்சின்ன சிணுங்கல்களும்
சித்திரக்கதை புத்தகமும்...
அணில்மாமா முயல்
அம்புலிமாமா கோகுலம்
அத்தனையும் வாசித்து...
மாலையெலாம் விளையாடி
மஃரிபுக்கு பின் வீடோடி...
அம்மாவை அரவணைத்து
அழகாய் உறங்கும்...
அக்காலப் பிள்ளை!
இடுப்பின் எல்லையை
கடக்கும் உடையும்...
எடுத்தெரிந்த நடையும்
எகத்தாலப் பேச்சும்...
கணினி கண்ணிக்குள்
கால்சிக்கி முடங்கியும்...
அலறும் ஐப்போடால்
ஊமையான உலகமும்...
குறுஞ்செய்தி குடைந்தே
குட்டையாய்ப்போன
கட்டை விரலும்...
ஆன்லைன் கேம்களால்
அயர்ந்துபோன மூளையும்...
சொங்கி சோப்லாங்கியாய்
சூம்பிப்போன உடலுமென...
சிதைந்து போயிருக்கு
இக்கால இளசுகள்!
எப்படி இருக்கணும்
எக்காலமும் இளசுகள்?
முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!
-- சபீர்
24 Responses So Far:
கவிக் காக்காவின் கவிதை !
விழித் தெழுந்து
விழி துடைத்து
தொழச் சென்றதை
சொல்லும் வரிகள்
வீதி உலா
மீண்டும் காணத்
தூண்டிடும்
நினைவலைகள்
நறுக்கென்று
வைத்த நச்
"iPAD"க்கும்
குறுஞ்ச் செய்திக்கும்
வைத்திருக்கும் குட்டுடன்..
அறிவுரை கேட்டு நடந்திடத்தான்
இளசுகள் மட்டுமல்ல பெரிசுகளும் சேர்ந்துதான் !
//மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!//
அதிரை கவி சபீர்; : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இளசுகளின் நிலையை வரைந்ததற்கு வாழ்த்துக்கள்.
இளசுகள் இப்படி என்றால் வயதான இளசுகளும் சில இப்படித்தான் இருக்கின்றன.
*******************************************************
முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!
*******************************************************
நம் சமுதாய இளசுகளுகளும், பெரிசுகளும் நீ கூறியபடி நல்லடியார்களாக வாழ்வதற்கு நாம் அனைவரும் வல்ல அல்லாஹ்விடம் துவாச் செய்வோம். இன்ஷாஅல்லாஹ்.
இனி பாடப்புத்தகத்தில் பாதுகாக்க மயிலிறகு வேண்டாம் உங்களின் கவிதைவரிகள் போதுமே.
முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்.
எக்காலத்தவருக்கும் பொருத்தமான வரிகள்.
எப்படி இருக்கணும்
எக்காலமும் இளசுகள்?
முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும். அனுபவம் அப்படியே கண் முன் கொண்டு வந்த சபீருக்கு சல்யூட்.
//முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்!// இந்த.ஒவ்வொரு வரிகளையும் கோஹினூர் வைரத்தால் செதுக்கி...பிளாட்டினம் தகட்டில் பதித்து...முக்கால தலைமுறையினறும் படித்து பயன் பெரும் வகையில் பதப்படுத்த வேண்டும்..கவிகாக்கா உங்கள் சமுதாய சிந்தனை உள்ள இக்கவிதை வாழ்த்த வார்ததைகள் இல்லை...HATS OFF TO YOU
அஸ்ஸலாமு அழைக்கும்
கவிதையில்அழகா பொய்சொல்லலாம்
கவிதையில் அழகா வர்ணிக்கலாம்
கவிதையில் அழகா இயற்கையை சொல்லலாம்
ஆனால் நீங்களோ அழகாக வாழ சொல்கின்றீர்கள்
இது மட்ருமொரு "மாற்று யோசி"
"சொங்கி சோப்லாங்கியாய்"
அஸ்ஸலாமு அழைக்கும்
எந்த அகராதியில் இந்த வார்த்தை கிடைத்தது
//அடித்த அலாரம்
அடித்து அனைத்து...
தலையணை எடுத்து
தலைக்குமேல் போர்த்தி...//
இது நான் தம்பி க்ரவுனுக்காக எழுதியதல்ல. யாராவது எழுப்பி விடுங்களேன் ப்ளீஸ்.
ஆஹா ஆஹா...ஆக்கங்களுக்கு பின்னூட்டம் எழுதும் அ.நி. வாசக வட்டம் மற்றும் பங்களிப்பாளர்களின் எழுத்தில் ஆக்கத்தின் பொருளுக்கேற்ப அழகோ, அன்போ, கோபமோ, சோகமோ, பயபக்தியோ வெளிப்படுவது எத்தகைய ஆரோக்யமான சபையில் நிற்கிறோம் என்பதை உணர வைக்கிறது.
இம்முறை ஏற்புரையை சற்று மாற்றி indirect speach-ல் try பண்ணுவோம்:
அபு இபுராஹீம்,
//இளசுகள் இப்படி என்றால் வயதான இளசுகளும் சில இப்படித்தான் இருக்கின்றன.// என்று அலாவுதீன் என்னை சொல்லவில்லையென நினைக்கிறேன். வேறு யாரை சொல்லி இருப்பான்னு தெரியலயே...
அலாவுதீன்,
அபு ஆதில் யார்னே எனக்குத் தெரியாது. ஆனா, அவரின் //இனி பாடப்புத்தகத்தில் பாதுகாக்க மயிலிறகு வேண்டாம் உங்களின் கவிதைவரிகள் போதுமே//
என்று, நான் இதை எழுதும்போது இருந்த, இன்னும் சொல்லப்போனால் அதைவிட மென்மையான உணர்வோடு ரசித்திருப்பதை என்னவென்று சொல்வது! ஒரே அதிர்வில் எண்ணுபவர்களோட கூட்டு சேர்வதே அலாதி இன்பம்.
சகோ. அபு ஆதில்,
அபு இபுறாகீமை உங்களுக்குத் தெரியுமா? அவரிடம் சொல்லுங்கள்...
//வீதி உலா
மீண்டும் காணத்
தூண்டிடும்
நினைவலைகள்//... இப்படி வரிகளை வரவழைக்க முடியுமெனில், எப்படி வேண்டுமானாலும் எழுதத்தயாரென்று.
யாசிர்,
கவிதை எழுதுவது எப்படின்னு கேட்ட ஒரு ஆள் எப்படி இப்படி எழுதியது என்று கேளுங்களேன்:
//கவிதையில்
அழகா பொய்சொல்லலாம்
அழகா வர்ணிக்கலாம்
அழகா இயற்கையை சொல்லலாம்
நீங்களோ...
அழகாக-
வாழ சொல்கின்றீர்கள்!//
ஷாகுல்,
//// இந்த.ஒவ்வொரு வரிகளையும் கோஹினூர் வைரத்தால் செதுக்கி...பிளாட்டினம் தகட்டில் பதித்து//
என்கின்ற எல்லாவற்றையும்விட விலை மதிப்பற்றது அவரோட நட்பு என்று சம்மந்தபட்டவரிடம் தூது சொல்லிவிடுங்கள்(நீங்கதான் சொல்லனும். ஏனெனில், அவர் அனுப்பிய நாலு புறாவையும் நான் ஒருத்தனே திண்ணு தீர்த்துட்டேன். தூதுக்கு வேறு புறா இல்லை)
அப்டியே மீராஷா தெரியும்ல? அவரிடமும் "நிறைய சொல்ல நினைப்பது உங்கள் பின்னூட்டத்தில் விளங்குகிறது" என்றும் சொல்லிவிடவும்.
கவிக் காக்கா: இப்படி அங்கே ஏறி இங்கே ஏறின்னு சவாரி செய்வீங்கன்னு தெரிஞ்சா என்னோட முதுகிலேயே ஏற்றிக் கொண்டு வீதி வலம் வருவேனே..
அபு ஆதில் அவர்களே பதில் தரட்டும் அலாரம் வச்சுட்டேன் (காக்கா)
அலாரம் எல்லோர்ருக்குமானது .....
அதிகாலை எழுந்து
அல்லாஹ்வைத் தொழுது...
அம்மா தேநீர் என்ற
அமிர்தம் பருகி...
அல்குர்'ஆன் கற்க
ஆர்வமுடன் விரைந்து...
ஆற அமர பயின்று
அற்புதமாய் துவங்கும்...
அந்தகால பிள்ளைகளின்
அன்றாட வாழ்க்கை!
அடித்த அலாரம்
அடித்து அனைத்து...
தலையணை எடுத்து
தலைக்குமேல் போர்த்தி...
அரைகுறைத் தூக்கத்தால்
அழுது வடிந்து...
தட்டி எழுப்பும் தாயை
திட்டித் தீர்த்து..
பதினாறு பல்கூட
தேய்க்கமுடியா நேரத்தில்
முப்பத்தி ரெண்டும்
ஒப்பேத்தித் தேய்த்து...
பாதி பால்...
பகுதி உணவு...
சட்டென நினைத்து
விட்டதை தொழுது...
பறக்கப் பறக்கப்
பள்ளிக்கு ஓடும்
இக்கால இளசுகள்!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.பழயன கழிதல்,புதியன புகுதல் சரிதான்!. அதே வியாக்கியானம் சொல்லிக்கொண்டிருந்தால் ஏட்டுச்சுரய்காய் கறிக்குதவாது போல் தான் அது நச"யாகிப்போய்விடும்.என்பதை அழகாக ஒப்பிடு செய்து எழுத கவி"கோ சபீர் காக்காவின் எழுதுகோலும், கனினியின் தட்டச்சுகோலும், கோலோச்சும்,அரசாட்சி செய்யும்.
மாய ஜாலமா?, மண்டை சுரப்பியில் கவிசுரப்பியா?
இப்படி எப்படி எழுத முடிகிறது? இப்படியே நான் கேட்டு,கேட்டே ஓஞ்சு போய்டேன்.
பரிசுத்த உடையும்
பதவிசான நடையும்...
பாடப் புத்தகத்தில்
பாதுகாத்த மயிலிறகும்...
சின்னச்சின்ன சிணுங்கல்களும்
சித்திரக்கதை புத்தகமும்...
அணில்மாமா முயல்
அம்புலிமாமா கோகுலம்
அத்தனையும் வாசித்து...
மாலையெலாம் விளையாடி
மஃரிபுக்கு பின் வீடோடி...
அம்மாவை அரவணைத்து
அழகாய் உறங்கும்...
அக்காலப் பிள்ளை!
இடுப்பின் எல்லையை
கடக்கும் உடையும்...
எடுத்தெரிந்த நடையும்
எகத்தாலப் பேச்சும்...
கணினி கண்ணிக்குள்
கால்சிக்கி முடங்கியும்...
அலறும் ஐப்போடால்
ஊமையான உலகமும்...
குறுஞ்செய்தி குடைந்தே
குட்டையாய்ப்போன
கட்டை விரலும்...
ஆன்லைன் கேம்களால்
அயர்ந்துபோன மூளையும்...
சொங்கி சோப்லாங்கியாய்
சூம்பிப்போன உடலுமென...
சிதைந்து போயிருக்கு
இக்கால இளசுகள்!
-----------------------------------------------------------------
எதார்த வார்தை, தோளில் கை போட்டு காலமெல்லாம் கடக்கும் பால்ய சினேகிதன்,
கூடி வரும் சொந்தம், இன்பம் துன்பத்தை பங்குபோடும் சுற்றம். நூலகம் சென்று படித்து வந்த சுகமும்,
கட்டுகோப்பான நடவடிக்கையும் ,இருட்டில் மறையாத சுத்தமான் ஒழுக்கம்,
பெரியோருக்கு மரியாதையும்,சமுதாயத்தின் மேல் அக்கரை கலந்த பயமும்,
கற்று தேர்ந்த இன்னாளில் கானாமல் போனதுடன் தம்மையும்,தன் தனித்துவத்தையும் தொலைத்த இக்கால இளைஞர் கூட்டம்.தனிமை விரும்பியாகவும் ,மனிதருக்குள் அன்னியப்பட்டு,அறிவியல் கருவிகளுக்குள் பின்னிக்கொன்ட அடிமைகள். இதை கவிதையில் மிக அழகா ,சுலபமா,
மிக லாவகமா, ஏதோ விசில் அடிப்பது போல ,சுடக்கு போடுவது போல,மிக மெலிதாக ஊசி போடுவது போல,சொல்லிகிட்டே போகலாம்......
எப்படி இருக்கணும்
எக்காலமும் இளசுகள்?
முக்கால முணர்ந்து
முன்னோர்சொல் கேட்டு...
மூத்தவர்தமை மதித்து
முடிந்தவரை பயின்று...
மூச்சிறைக்க விளையாடி
முழுநிலவாய் ஒளிர்ந்து
முழுமூச்சாய் முயன்று
முஹம்மது நபி(ஸல்) போதித்த
முறைப்படி வாழ்ந்து
முன்னுக்கு வரவேண்டும்
முழுதாக வாழ வேண்டும்.
-------------------------------------------------------------------
ஹைலைட், நச் யோசனை,செல்லமாக காது திருகல்,சின்ன குட்டு,
லேசா பல்லை கடித்தல்.வந்துபோகும் கோபப்பார்வை,பேசாமல் மொனமாய் சில நேரம்,
இன்ப அவஸ்தை நல்ல அறிவுரை.இப்படி தான் இந்த பதம் சொல்லபட்டவிதம்.
மூத்தோர்சொல் வார்தையும்,முது நெல்லிகாயும் முன்னே கசக்கும்,பின்னே இனிக்கும்.
நெல்லி காய் எப்ப இனிக்கும்? தண்ணிரீர் அருந்தியபின்.பெரியவர் வாக்கு அனுபவபட்டு தெரிவது.
அதுபோல்தான் சபீர்காக்காவின் கவிதை அருவியிலிருந்து வரும் வார்தை நீரும்,உபதேசங்களும். அன்புடன் அருமை தம்பி.கிரவுன்.
கிரவுன்(னு) டிசம்பர் வந்தாலும் வந்துச்சு... கீத்து பிரிக்கிறது என்னமோ குறைஞ்சிடுச்சு(டா)ப்பா.. அப்பாடா ! இப்போதாதான் கவிக் காக்காவுக்கு நிம்மதி கூறை பிரித்ததும் வெளிச்சம் உள்ளே செல்லும் திட்டுமுட்டா இருப்பது குறையும்(தானே) !
அபு இபுறாகீம்,
தலைவர் கிளம்பிட்டார், வந்து கொண்டிருக்கிறார், இன்னும் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவார், கடைசியில் வந்தேவிட்டார். அப்பாடா!
க்ரவுன்:
//மிக லாவகமா, ஏதோ விசில் அடிப்பது போல ,சுடக்கு போடுவது போல,மிக மெலிதாக ஊசி போடுவது போல,சொல்லிகிட்டே போகலாம்......//
ரொம்ப ரசனையா இருக்கு.
அப்டியே www.thinnai.comல பல் பிடுங்கிய மேட்டரை கொஞ்சம் மாற்றி எழுதியுள்ளேன். சிரிப்பு கியாரன்டி.
//அலாரம் எல்லோர்ருக்குமானது .....//
thanks harmys!
அதிகாலை எழுந்து
அல்லாஹ்வைத் தொழுது...
அம்மா தேநீர் என்ற
அமிர்தம் பருகி...
அல்குர்'ஆன் கற்க
ஆர்வமுடன் விரைந்து...
ஆற அமர பயின்று
அற்புதமாய் துவங்கும்...
அந்தகால பிள்ளைகளின்
அன்றாட வாழ்க்கை!
இது அமையவேண்டும் என்ரால் நம்மஊரிள் உள்ள அனைது பள்ளீகூடங்கலும் காலை,10மணீக்கு ஆரம்பித்தால் இது சாத்தியமாகும்
//நம்மஊரிள் உள்ள அனைது பள்ளீகூடங்கலும் காலை,10மணீக்கு ஆரம்பித்தால் இது சாத்தியமாகும்//
வாசித்தமைக்கு நன்றி சகோ.
அதிகாலை என்று நான் குறித்திருப்பது 5 லிருந்து 6 மணிக்குள்.
சரியெனில், இப்போதுள்ள பள்ளி துவக்க நேரத்திற்குள் அத்தனை நல்லொழுக்கங்களும் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது.
சகோ சபீர் ,
அபு இபுறாஹிம் என்னையும் தெரிந்து கொண்டு என் முகவரியும் சொல்லி இருப்பார் என நினைக்கின்றேன்.
அபு இபுறாஹிம் தரும் பின்னூட்டம் படைப்பாளிகளுக்கு மட்டுமல்ல கருத்து சொல்ல வருபவர்களுக்கும் ஒரு உற்ச்சாகத்தையும் உத்வேகத்தையும் தருகிறதல்லவா. அவரது முயற்ச்சிக்கும், ஆர்வத்திற்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் கவிதைகளோ
ஆழ் கடல் முத்துக்கள்!
நீ உண்டமிச்சம்
எனக்கெனவும்...
உன் உறக்கத்தின் நடுவே
என் ஓய்வு எனவும்...
உன்
மனம் மகிழ்விப்பதுவே
என் கொள்கை யெனவும்...
நீ
வளர்கிறாய் மகனே!
என்னை மொளனமாய் அழ வைத்த வரிகள்.
அலாரம் அடித்துக்கொண்டே இருக்க்கிறது....
வீதி உலா வரப்போவதை
வரவேற்க
நினைவலைகளோடு
காத்திருக்கிறோம்.
//அபு ஆதில் சொன்னது…
சகோ சபீர் ,
அபு இபுறாஹிம் என்னையும் தெரிந்து கொண்டு என் முகவரியும் சொல்லி இருப்பார் என நினைக்கின்றேன்.//
கவிக் காக்கா: நாமதான் கடந்த வியாழன் சந்திப்பிலேயே கண்டு கொண்டேமே அ(னா) ஆ(வன்னா) யாருன்னு !!!
Post a Comment