மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.
கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.
இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.
இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.
கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.
- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.
- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி
- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.
- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.
எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இம்மருத்துவ குறிப்பு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நமக்கு கிடைத்திருந்தாலும், நல்ல பயனுல்ல தகவல் என்பதால் இங்கு அனைவரின் பார்வைக்கு தருகிறோம். இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட அஸ்கர் (மாதவலாயம்) அவர்களுக்கு மிக்க நன்றி.
தகவல்: அதிரை அஹ்மது
18 Responses So Far:
நல்ல பயனுள்ள தகவல் !
ஆக ! இஞ்சி திண்ட மானிடனாக இருந்திடனும் :)
நமக்கு எல்லாம் இஞ்சி பூண்டு வாசனை இல்லாமல் உணவு இறங்காது ( அட நான் வெஜ் தாங்க சொல்றேன்,ஆனால் அளவாகதான் சாப்பிடுவோம் ) இஞ்சை பற்றி இஞ்ச் இஞ்ச் சான தகவல்...நன்றி அஸ்கர் மற்றும் அதை இங்கு பதிந்த சகோ.அஹமது காக்கா அவர்களுக்கு
அஸ்ஸலாமு அழைக்கும்
நமது ஊர் சாப்பாட்டில் இஞ்சி கணவன் என்றால் பூண்டு மனைவி.
ஹாலோ அ.நி..இஞ்சியின் பயன் பெரிது தான் அதற்க்காக படத்தையும்மா பெரிதா போடனும் படத்தை கொஞ்சம் சிறிதாக்கி போட முடியுமா ? மடிகணினியில் பார்க்கும் போது முகத்துக்கு முன்னாடி முழு இஞ்சியும் வந்து நிற்கிறது
// ஹாலோ அ.நி..இஞ்சியின் பயன் பெரிது தான் அதற்க்காக படத்தையும்மா பெரிதா போடனும் படத்தை கொஞ்சம் சிறிதாக்கி போட முடியுமா ? மடிகணினியில் பார்க்கும் போது முகத்துக்கு முன்னாடி முழு இஞ்சியும் வந்து நிற்கிறது //
நல்லதாப் போச்சு இஞ்சி திண்ட வங்க முன்னால நிக்கிறமாதிரியிருக்குன்னு சொல்லலையே ! :)
நேரில் என்றால் அஹ்மது காக்காவுக்கு ஒரு இஞ்சி டீ போட்டுத் தந்திருப்பேன். நல்ல தகவல்
நன்றி அ.நி..அதப்படி இவ்வளவு சீக்கிரமா மாத்திபுட்டீங்க...சொல்லவே இல்லை...சைனாவின் சூப்பர் ஃபாஸ்ட் இரயில் உங்களிடம் கையேந்தனும்
// மடிகணினியில் பார்க்கும் போது முகத்துக்கு முன்னாடி முழு இஞ்சியும் வந்து நிற்கிறது // கம்பெனியில ஒன்னுமே தெரியாத மேலாளர் வந்து முன்னாலே நின்றால் இருக்குமே அப்படித்தான் இருக்கும்னு தெரிந்துதானே சொன்னீங்க இப்படி ! அதானலதான் !
// சைனாவின் சூப்பர் ஃபாஸ்ட் இரயில் உங்களிடம் கையேந்தனும் // அவய்ங்களுமே கையேந்துவாங்க !?
அஸ்ஸலாமு அழைக்கும்
இஞ்சை கூட இன்ச் by இன்ச்சா வாட்ச் பண்றாங்கப்ப நம்ப ஆளுக,
இஞ்சி அடிக்கடி சாப்பிட்டால், வயிறு வெந்து விடும்
என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் இது உண்மையா?
இஞ்சி பிரியர்கள் மண்ணிக்கவும்!
ஆமா ஜலீல் காக்கா..அளவிற்க்கு மிஞ்சினால் ...இஞ்சி கூட நஞ்சாகிவிடும்...டெய்லி இஞ்சி குடினி குடிப்பவரை பார்த்தால்..தாளிச்சாவில் போட்ட கறி போல கொலகொலத்து போய் இருப்பார்...அளவோடு எதையும் எடுத்து கொள்வது அனைவருக்கும் நலம்
//இஞ்சி அடிக்கடி சாப்பிட்டால், வயிறு வெந்து விடும்
என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன் இது உண்மையா?//
அளவுக்கு மீறினால் இஞ்சி மட்டுமல்ல எல்லாமே நஞ்சு தானே
அஸ்ஸலாமு அழைக்கும்
எல்லாமே நச்சு நச்சுனு தான் இருக்கு
தம்பி சபீர்,
எனக்கு இஞ்சி டீன்னா ரொம்ம்ம்ம்ம்ம்பப் பிடிக்கும். ஊருக்கு எப்ப வருவீங்க?
அன்பு அஹ்மது காக்கா,
எங்களுக்குப் பிடித்ததாக படைத்துத் தந்துகொண்டிருக்கும் உங்களுக்குப் பிடித்ததை தர நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஊர் வந்தால் நிச்சயம் உங்களைத் தொடர்பு கொள்வேன். இங்கு பிள்ளைகள் பள்ளி சென்று கொண்டிருப்பதால் விடுமுறையிலோ வேறு தேவைகளின்போதோதானே ஊர் வர முடிகிறது.
உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள்.
துஆவுக்கு நன்றி! இதோ, இப்போதுதான் இஞ்சிச் சாயா குடித்துவிட்டு அமர்ந்துள்ளேன்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு நினைவிருக்கட்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இஞ்சி என்னும் காரப்பொருளை இனிமையாக சொன்னவிதமும்,அதன் பின் வந்த கருத்துகளும் மிக.மிக அருமை.இஞ்சியின் மருத்துவகுணம் பிரமிக்க வைத்தது.இஞ்சிடீ குடிக்க அழைப்பதும்,பார்மாலிட்டீ பாக்காம நான் வரன்னு சொல்வதும்,அது ரியாலிட்டீயாக இருந்ததும்,எழுத்தில் இதெல்லாம் கொண்டு வந்த சாட்சா ராயல்டீயாக இஞ்சிடீ கேப்பதும்,ஒருவாட்டியாவது சபிர்காக்காவீட்ல ஓசிட்டீ குடிக்கனும்னு நிபைப்பை அதிகமாக்கிவிட்டது,வாசகர்களும் அலட்டிக்காம எப்படியெல்லாம் எழுதுறாங்க! இந்த கலை நமக்கு ஏன் வரல?
மிகவும் பயனுள்ள தகவல்!மிக்க நன்றி அஹமது பெரியவாப்பா!!!
Post a Comment