அஸ்ஸலாமு அலைக்கும்....
என்னா சங்கதி மொம்மாதுல்லா ஹாக்கா? ஆளேயேக்காணோமே கொஞ்ச நாளா? கடுமையான வேலையாக்கும்? எப்படி ஈக்கிறியெ? ஊட்டுக்கு போன்லாம் பேசிறியலா? ஊர்லெ எல்லாரும் எப்புடி ஈக்கிறாஹெ? நான் விசாரிச்சி சலாம் சொன்னதா எல்லாருக்கும் சொல்லுங்கெ..
அல்ஹம்துலில்லாஹ். நல்லா இருக்கிறேன்டா.. ஆமாடாத்தம்பி கம்பெனியிலே வருசக்கடைசியினாலெயும், நெறைய பேர் லீவுலெ ஊருக்கு போயிக்கிறதுனாலேயும் வேலை கூடிப்போச்சு. அதான் அடிக்கடி இந்த பக்கம் வர முடியலெ... வெள்ளிக்கெழெமெ கூட ஓட்டி, ஹீட்டிண்டு வேலெக்கி போஹனுமா ஈக்கிது. அதெ யான் கேக்குறா...
என்னா செய்யச்சொல்றா? நம்மளுவொ தான் அரைகொறைய படிச்சிட்டு வந்து இங்கெ வந்து கஷ்டப்படனுமா ஈக்கிது. அப்பொவெல்லாம் குடும்பத்துலெ ஓரளவு படிக்கிறதுக்கு வசதி, வாய்ப்பு இருந்தும் நம்மூர்லெ காலேஜ் வசதி இருந்தும் அதை சரிவர பயன்படுத்திக்கிட்டு மேலும் படிக்காமப்போனது இன்னெக்கி எவ்ளோ கஷ்டமா ஈக்கிது பாத்தியா?
நம்மளெ விடெ வசதி வாய்ப்புகள் கொறைச்சி இருந்தும் அன்னெக்கி சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்ட குடும்பத்துலெ பொறந்த செல பேர் கவனமா, கொஞ்சம் செரமம் எடுத்துப்படிச்சதுனாலெ இன்னெக்கி கவெர்மெண்ட் உத்தியோகத்துலெயும், வாத்தியார்மாராவும் நம்ம நாட்டுலேயே, ஊருலேயே வேலை செஞ்சிக்கிட்டு நல்லா சம்பாதிச்சிக்கிட்டுத்தான் இருக்கிறாஹெ...
அன்னெக்கி அதிகமாக படிக்கச்சொன்னது நமக்கு ஏதோ மார்க்கக்குத்தம் போலயும், தேச விரோத செயல் மாதிரியும் தெரிஞ்சிச்சி. இன்னெக்கி அந்த நல்ல வாய்ப்பெ எழந்துப்புட்டு வருத்தப்படனுமா ஈக்கிது... முன்னாடி எல்லாம் அரபு நாட்டுலெ இருக்குறெ நம்ம சொந்தக்காரஒல்டெ பாஸ்போர்ட்டு காப்பியெக்கொடுத்துட்டா நம்ம வாழ்க்கை கரையேறிடும்ன்டு நெனெச்சிக்கிட்டு காலம் ஓடுனிச்சி..
ஆனால் இந்தக்காலத்துலெ முறையா, உரிய பாடத்தெ தேர்ந்தெடுக்காம ஏனோதானோன்டு படிக்காமெ ஊக்கமா, தொலைநோக்கு சிந்தனையோட படிச்சி முடிச்சிட்டு வெளியிலெ வந்தா தான் நாமெ விரும்புன வேலையும் கொடெக்கும், கை நெறைய சம்பாத்தியமும் கெடெக்கும். பொறவு நம்மனாலெ சமூக சேவைகள் என்று எதாவது செய்ய முடியும். நா சொல்றது வெளங்குதா?
என்னடாட்த்தம்பீ அஞ்சு வயசுலேர்ந்து படிப்பு ஆரம்பிக்கிது. கொறைஞ்சது இருவது வயசுவரைக்கும் கொஞ்சம் ஊக்கமா, கவனமா, நடைமுறை, எதிர்கால இலக்குகளை யோசிச்சி படிச்சோம்ன்டா பொறவு உசுரு இருக்குறொ காலம் வரைக்கும் நாமளும் சந்தோசமாக ஈக்கலாம் நம்மளெ சுத்தி உள்ளவங்களையும் சந்தோசப்படுத்தலாம். நம்மளெ மாதிரி சரிவர படிக்காமெ வந்தா அரபு நாட்டுளெ அரைகொறை இருட்டுளெ கண்ணுதெரியாதவன் துளாவுறெ மாதிரி வருங்கால சந்ததியெலுவோ வாழ்க்கையும் ஆஹிடக்கூடாது மா....அல்லாஹாப்பாத்துவான்...
நம்ம சரியா படிக்காம வந்துப்புட்டு அவன் இவ்ளோ சம்பாதிக்கிறான்.. இவன் குடும்பத்தோட குதூகலமா சுத்துறான்டு நாமெ மத்தவங்களெ பாத்து பொறாமைப்பட்றது தப்பு இல்லையா? அவனுவோ இந்த நெலெமைக்கி வர்ரதுக்கு எவ்ளோ கஷ்டப்பட்டு ஈப்பானுவோ? யோசிக்க வானாமா?
அதுனாலெ தான்டா தம்பீ படிச்சி, படிச்சி சொல்றேன் நம்ம ஊட்டு புள்ளெயெலுவோ நல்லா படிச்சி பெரிய அதிகாரியாவோ, டாக்டராவோ, வக்கீலாவோ, போலீஸ் ஆபீசராவோ, கலெக்டராவோ வந்தா அவங்க குடும்பத்துக்கும் பெருமை, ஊருக்கும் பெருமை நம்ம சமுதாயத்திற்கே பெருமை இல்லையா? அல்லாஹ் தான் நம்ம ஆசையலுவொளே நெறெவேத்தனும். ஆமீன்..
இன்னொரு விசயம் கேள்விப்பட்டியா? நம்மூர்லெ வர்ர ஜனவரி மாசம் 14, 15ம் தேதியிலெ அதிரைப்பட்டினம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையும், அதிரைநிருபர் வலைத்தளமும், அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIம்) இணெஞ்சி கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்போறாங்களாம். அதுனாலெ நம்ம ஊட்லெ, அக்கம்பக்கத்து ஊட்லெ, நம்ம குடும்பத்துலெ, தெருவுலெ படிக்கிற எல்லாப்புள்ளையெலுவொலேயும் மறக்காமெ இதுலெ கலந்துக்கிடெ சொல்லனும். சரியா? இதுக்கு ஒன்னும் காசு,பணம் செலவாகிடாது. பல அறிஞர்களின், படித்தவர்களின் நல்ல பல உபதேசங்கள் கெடெக்கும் அவொளுவொளுக்கு. அதெ வச்சி யாராவது இலக்கு வச்சி படிச்சி நாளெக்கி பெரிய ஆளா வரமாட்டாங்களா? என்னா?
அதுனாலெ கடைசியா ஒன்னு அழுத்தமா சொல்றேன் கேட்டுக்கோ.. எங்கெ எல்லாம் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்குதோ அங்கே எல்லாம் ஆர்வமா கலந்துக்கிற்றெ மனப்பக்குவத்தெ நம்ம புள்ளெயெலுவொலுக்கு மொதல்லெ மனசுலெ வெதெக்கனும். நம்மனாலெ முடிஞ்ச ரூட்டெ காமிச்சி கொடுத்துடுவோம் பிறகு அவங்க தன் தெறமையிலெ இன்ஷா அல்லாஹ் முன்னுக்கு வந்துருவாங்க...
நம்ம வாழ்கெ தான் அரைகொறை வெளிச்சத்துலெ ஓட்டிக்கிட்டு ஈக்கிது. அவனுவொ வாழ்கையாவது பிரகாசமாக முழு வெளிச்சத்துலெ ஓடட்டும். நல்லா படிக்கிறத்தெத்தான் முழு வெளிச்சம்ன்டு சொல்ல வந்தேன்.
நல்லா படிச்சிருந்தா நாமெலும் இங்கே குடும்பத்தோட மத்தவங்க மாதிரி சந்தோசமா இருக்கலாமுல்லையா? அதுக்கு தான் நசீபு இல்லாமெ போயிடிச்சி. நம்ம ஊட்டு புள்ளெயெலுவோ இதுமாதிரி எதிர்காலத்துலெ வருத்தப்படக்கூடாது. அவங்க நல்லா படிச்சி சந்தோசமா குடும்பத்தோட வாழனும். அதுக்காக நம்மானாலெ ஏன்டெ முயற்சியும், துவாவும் செய்வோம்.
கூதல் நடுக்குது. தொழுவ நேரமாச்சி சரி வரட்டா...
நமதூரில் விரைவில் நடைபெற இருக்கின்ற கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டிற்காக சிறப்புக்கட்டுரையாக இதை உங்கள் அனைவரின் பார்வைக்காக பதிகின்றேன். இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு நம் எண்ணம் போல் சிறப்புடன் நடந்தேறிடவும், வெற்றி பெறவும் வல்ல இறைவனைப் பிரார்த்தித்தவனாக விடைபெறுகிறேன்.
--மு.செ.மு. நெய்னா முஹம்மது
17 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர் MSM நெய்னா, ஊர் வழக்க மொழியில் சூப்பரா புரியும்படி நல்ல உரயாடல் உபதேசம்.
கல்வி விழிப்புணர்வு மாநாடுக்கு ஆர்வமூட்டும் நோக்கில் எழுதியதுக்கு மிக்க நன்றி.
தங்களின் இந்த ஆக்கதில் உள்ளது போல் இன்ஷா அல்லாஹ் ஊரிலும் பேசப்படும் என்று நம்புகிறோம்.
நல்ல பொறுப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கிறது. தற்கால நிலைமை குறித்த கவலையும், எதிர்காலம் குறித்து ஏக்கமும் தொணிக்க கட்டுரையை அமைத்திருக்கும் எம் எஸ் எம்முக்கு நன்றி.
Asusual wonderful article from MSM naina mohammed with adirai slang tamil...thanks for writing this in a right time.....Allah will fulfil all our wishes
அஸ்ஸலாமு அலைக்கும்,
சீரியசான விசயத்தை மிக எளிமையாக சிந்திக்கும் விதமாக வழங்கிய msm முக்கு வாழ்த்துக்கள்.
நல்லா சொன்னீக..
அதெல்லாம் முடியாது பிறந்த உடனே பாஸ்போட்டு எடுத்தாச்சு, அதுக்காகவாவது வெளிநாட்டுல வேலை செஞ்சே ஆவேன்னு மனசுல உயில் எழுதி வச்சிருப்பாங்க சில பசங்க. சரி பரவாயில்லை.
சில பசங்க, "நம்ம நாட்டுல வருஷம் பூரா சம்பாதிக்கிறத வெளிநாட்டுல கொஞ்ச மாசத்துல சம்பாதிக்கலாம்"னு..
ஒருவகையில் அது உண்மையும்கூட. சரி பரவாயில்லை.
அதுக்காக கோழிய பிடிக்க கைலிய களஞ்சிபோடுட்டு ஓடறது கொதரத்தால ஈக்கிது.
படிச்சிபுட்டு வெளிநாடு வந்தால் அதுக்குன்னே தனி மரியாதையும் , மனசலவுளையும் பொருளவுளையும் கொஞ்சநஞ்ச சந்தோசமாவது மிஞ்சும் .
பொறந்த நாட்ட பிரிந்திருஞ்சாளும் , பெத்த தாயையும், பொண்டாட்டி புள்ளைகளையும் பக்கத்துல வச்சி ஜோரா வாழறதுக்கு படிப்பு இருந்துச்சுனா இதெல்லாம் அனுபவிக்க வாய்ப்பு அதிகம்.இல்லாட்டி ஆப்புதான் அதிகம்..
சரி , கல்வி விழிப்புணர்வு மாநாடு நடக்குதாம் கொஞ்சம் அதை எட்டிப்பாருங்கள், உங்கள் எதிர்காலம் தெரியும் பசங்களா ..
காகமார்களா நீங்களும் ஒரு எட்டு வச்சி நம்ம பசங்கள கொஞ்சம் ஏனில ஏத்தி உடுங்க ..நல்லா இருப்பீக..
MSM(MR)
நெய்நாவின் கட்டுரைகள் எனக்கு ரொம்பவே பிடிக்கும், தவறாமல் படிப்பதுண்டு. எலாவற்றுக்கும் பின்னூட்டம் எழுதும் பழக்கம் இல்லை. ஆனால் மனதுக்குள்ளே மகிழ்வதுண்டு. இதை படித்தவுடன் எழுத வேண்டும் எனத் தோன்றியது..
நிதர்சனமான பதிவு நமதூர் மக்களின் உண்மை நிலைமையினை , தெள்ளத் தெளிவாக நமதூர் பாஷையிலே சொல்லியிருப்பது பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்து எழுதிட என் வாழ்த்துக்களும் துஆக்களும்.
ஆமா நீங்க யாருங்க உங்க முகம் எனக்குத் தெரியலையே புகைப்படத்தை போடுங்க ப்ளீஸ் அப்பதானே ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
ஆமா நாம எல்லோரும்தான் ஒரு குடும்பம் ஆயிட்டோமே. ஒருவருக் கொருவர் முகம் தெரியாமல் இருக்கலாமா அதனாலே அவரவர் தங்கள் புகைப்படத்துடன் வரவேண்டும் என்பது என் அவா. சரிதானே.
முதலில் ஒரு சொட்டு MSM(n)க்கு ! - அதிரை வழக்க்கு வார்த்தைகள் என்னிடம் மடை திறந்த ஆறாக கொட்டிட இருப்பு இல்லை எல்லாமே MSM(n)மிடம் மட்டுமே இருக்கிறது, கல்வி விழ்ப்புணர்வு ஆக்கம் அதிரையின் அகம் சொல்லும் அற்புதம் !
எங்கள் ஷர்ஃபுதீன் காக்கா: பதிப்பாளர்களின் புகைப்படங்களை வெளிக் கொணர ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த ஓர் எண்ணம் உள்ளது அதனை விரைவில் செயல் வடிவம் கொடுத்து தங்களையும் மகிழ்விக்க முயற்சிகள் அதிரைநிருபர் எடுத்திடும் என நம்பிக்கை வைப்போம் இன்ஷா அல்லாஹ் !
காத்திருங்கள் அதிரைநிருபரின் புதுமை, புத்துணர்வு, நற்சிந்தனை, எல்லாம் எப்படி எண்ணங்களின் வண்ணங்களாக வளம் வர இருக்கிறது என்பதை சொல்லித் தெரியத்தான் வேனுமா!
என்றும் நேசமுடன்
அபுஇபுறாஹிம்
அஸ்ஸலாமு அலைக்கும். சகோ. நைனா சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.தூள்கிழப்புங்க.தான் நல்லேண்ணம் கொண்டிருந்தால் தான் நல்லதை சொல்ல முடியும், செய்ய முடியும்,செயல் படுத்த முடியும்.அப்படி தான் நல்லதை நினைப்பதை கதா பாத்திரந்தின் மூலம் வெளிப்படுத்தும் பாங்கு, சூப்பர் சல்யூட் உங்களுக்கு. தான் பட்ட கஸ்டம் வரும் சமுதாயம் படக்கூடாதுன்னு அந்த பாத்திரம் பேசுவது, நீங்கள் பாத்திரம் அறிந்து சமுதாயத்துக்கு இட்ட தானம் இது. வாழ்க நல் சிந்தைனை ,வளர்க சமுதாய நோக்கம். வழக்கமாய் அலட்டல் இல்லாத அதே வேளை பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.
//அதுனாலெ தான்டா தம்பீ படிச்சி, படிச்சி சொல்றேன் நம்ம ஊட்டு புள்ளெயெலுவோ நல்லா படிச்சி பெரிய அதிகாரியாவோ, டாக்டராவோ, வக்கீலாவோ, போலீஸ் ஆபீசராவோ, கலெக்டராவோ வந்தா அவங்க குடும்பத்துக்கும் பெருமை, ஊருக்கும் பெருமை நம்ம சமுதாயத்திற்கே பெருமை இல்லையா? அல்லாஹ் தான் நம்ம ஆசையலுவொளே நெறெவேத்தனும். ஆமீன்//
இதற்கு பெரும் தடை யார் தெரியுமா?...நம்வீட்டில் பாசம் அன்பு என்று பிள்ளைகளின் எதிர்கால சிந்தனையை முடக்கும் பெரியவர்கள்தான். கொஞ்சம் அரும்பு மீசை வந்துவிட்டாலே மாப்பிள்ளை கேட்கும் முறை....அவன் எதிர்காலத்தில் என்ன செய்வான் என்றால் 'துபாய்க்கோ..அமெரிக்காவுக்கோ ஏத்திவுடுரோம்' என்று என்று அதன் விளைவுகளைப்பற்றி துளி அறிவு கூட இல்லாத படிக்காத , வயதான , பக்கத்தில் இருக்கும் பட்டுக்கோட்டைக்கு போக கூட துணை தேவைப்படும் பெண்களின் 'வெத்திலை வாக்கை' வேத வாக்காக தவறாக எடுத்துக்கொள்ளும் முறை மாற வேண்டும்.
இல்லாவிட்டால் அதிராம்பட்டினத்தில் இத்தனை இளைஞர்கள் இருந்தும் அத்தனைபேரின் வாழ்க்கையும் வெளிநாட்டை நம்பும் "சாபம்" மாறவேண்டும்.
இந்த கட்டுரையின் உண்மை புரியவில்லை என்றால் ஒரு மு.செ.மு. நெய்னா முஹம்மது மட்டுமல்ல 100 மு.செ.மு. நெய்னா முஹம்மது எழுதினால் கூட அதிராம்பட்டினத்தை திருந்த முடியாது.
அமெரிக்காவுக்கோ ஏத்திவுடுரோம்.......
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ ஜாஹிர் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க.அமெரிக்காவ்ல என்ன குப்ப கொட்றாங்கன்ன்னு. ஹஹ்ஹஹஹ்ஹஹ்........ என் ஒரு ஆளவச்சே எல்லாத்தையும் சரியா கணிச்சிட்டியல.....
அசலாமு அலைக்கும் நெய்னா ......
உன்னுடைய பழைய ஆக்கங்களை வீட்டில் படித்து காண்பித்தேன் ..ஒரே கல கல ....
ஆனால் இந்த ஆக்கம் ரொம்பவே உணர்ந்து அனுபவபூர்வமாய்
எழுதி இருக்கிறாய் ..அவசியமான படைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்.அட்மின் பிளீஸ் என் மெயில் பார்கவும்.இப்பதான் நியூ இயர் பற்றி சிலவரி கவிதை அனுப்பினேன்.
தம்பி கிரவ்ன்(னு): காக்கா(வின்) மின் அஞ்சல் பெட்டி திறந்தும் கண்டும் விட்டார் உன் கவிக் கோர்வை மடலை :) காத்திரு(டா)ப்பா ! ஒரு வேண்டுகோள் (காக்காவின்) தனி மின் அஞ்சல் உன்னிடமிருப்பது அறிவேன் ஆகவே தனித்தூதோ அல்லது மின் அஞ்சலோ இட்டுவை அங்கேயே கேட்டு(ம்)வை எப்போது / ஏன் என்று காக்காவின் அலைபேசி ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் மின் அஞ்சல் பெட்டியை திறந்து காட்டிக் கொண்டே இருக்கும் இரவின் உறக்க நேரத்தை தவிர்த்து !
தம்பி கொண்டான் படைக்கு அஞ்சான் சொல்ல வைக்கும் தம்பியப்பா நீ ! ஆக கேடயம் உன்னிடமே - என் தம்பி என்றும் என்னை புரிந்தேதான் இருப்பான் சொல்லித் தெரிவதில்லை நம்மைப் பற்றிதான் :)
To Bro Crown,
Don't worry. you are alright. Always happy while you are working. The time will lead you to greater achievements in your life.
Allah is Always with you.
அஸ்ஸலாமு அலைக்கும். இங்கு கருத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும், து'ஆவும். சகோ. ஷரபுத்தீன் நூஹூ அவர்கள் பற்றியும் நான் தெரிந்த கொள்ள விரும்புகிறேன். தாங்கள் அ.மு.க. குடும்பத்தைச்சார்ந்தவர்களா? தற்சமயம் ஜித்தாவில் பணி செய்து வருபவர்களா? தெரிந்து கொள்ளலாமா? நான் சொல்வது சரி எனில் தாங்களுக்கு என்னைத்தெரியும். மதீனாவில் தாங்கள் இருக்கும் சமயம் நானும் வேலை செய்திருக்கிறேன். கொஞ்சம் யோசிச்சி பாத்து பதில் குடுங்கெ ஹாக்கா.....குடும்ப பெயரை அடையாளத்திற்காக இங்கு பயன்படுத்தியிருக்கிறேன். யாரும் எதுவும் நெனெச்சிக்கிடாதியெ....இன்ஷா அல்லாஹ் பொறவு பாப்போம். வரட்டா...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
to Bro .Naina Mohd,
சரபுதீன் நூஹு..அவர் கொஞ்சம் பிசியாக இருப்பதால் என்னிடம் சொல்லி எழுதச்சொன்னார். [ செக்ரட்டரி?] சரபுதீன் வாப்பா ஜனாப்: நூஹு கடை என்று எல்லோராலும் அறியப்பட்ட நமது ஊரில் மார்க்கெட்டில் மளிகை கடை வைத்து இருந்தார்கள். சின்ன வயதிலிருந்து என்னுடன் படித்த என் நல்ல நண்பன். காதிர்முஹைதீன் மேல் நிலைப்பள்ளி...புதுக்கல்லூரி இப்படி படிப்பில் என்னுடன் கைகோர்த்து நடந்தவன். நெசவுக்காரத்தெரு. [ பெருசா, சிருசா, மீடியம் , லார்ஜ் எல்லாம் நான் சரியாக கவனிக்கவில்லை] இப்போது அமெரிக்காவில் இருக்காப்லெ.
சரபுதீன் இதற்க்குறிய செச்ரடேரியல் சார்ஜை நீ அமெரிக்கன் டாலராக கூட எனக்கு அனுப்பலாம்.
Zakir Hussain
கல்வி கண் திறந்திட கவனத்துடன் கடமையாற்றும் அதிரை நிருபர் குழுமத்தாருக்கு சிங்கப்பூர் வாழ் அதிரைவாசிகளின் வாழ்த்துக்களும் துஆவும்...
Post a Comment