Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உயர் கல்வியின் கூடுதல் தகவல்கள் - அதிரை மீரா 11

தாஜுதீன் (THAJUDEEN ) | December 20, 2010 | , ,

சகோதரர் அதிரை முஜீப் அவர்களின் முஜீப்.காம் வலைப்பூவில் வெளியான கல்வி தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட இக்கட்டுரையை இங்கு உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம். நன்றி சகோதரர் அதிரை முஜீப், அதிரை மீரா - அதிரைநிருபர் குழு.

கல்வி தொடர்பாக நாம் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம்!. அதில் அதிரையை சேர்ந்த சகோதரர் எஞ்சினியர் மீரா ( B.E Mechanical ) அவர்கள் கருத்துப் பகுதியில் சில விபரங்க்களை பதிந்துள்ளார். இது கருத்துப் பகுதியோடு நிற்கும் தகவல் அல்ல!. மாறாக பயன் உள்ள தகவல் என்பதால், தனி பதிவாகவே வெளியிடுகின்றோம்!. இதுபோன்று மற்ற சகோதரர்களும் எங்கு என்ன படிக்கலாம் என்று அறியத்தந்தால் நலம்!. சகோதரர் மீரா அவர்களுக்கு அதிரை முஜீப்.காம். இணையத்தின் சார்பாக நன்றி!.

அ) TNPSC ( DSP, Dep Collector .etc) போன்ற தமிழ்நாடு அரசு பணிக்கான குருப் 1 தேர்வை, பொது பிரிவிற்க்கு 30வயது வரையும், முஸ்லிம்கள் 35 வயது வரையும் எழுத முடியும். எனவே முப்பதை தாண்டியவர்கள் கவலை பட தேவையில்லை.

ஆ) UPSC ( IAS, IPS, IFS etc. ) தேர்வை பொது பிரிவிற்க்கு 30வயதுவரையும், OBC (Backward) 33 வயது வரையும் தேர்வு எழுத முடியும். (இந்திய அளவில் முஸ்லிம்கள் OBC யில் வருவார்களா என்று தெரியவில்லை).

இ) UPSC தேர்வில் முதல் 100 இடங்களில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கே கலெக்டர் உள்ளிட்ட கேட்ட பதவிகள் கிடைக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சரியான திட்டமிடல் இருந்தால் தான் (UPSC exam ) Preliminary தேர்வை வெற்றி பெற முடியும். அதற்கு பிறகு மெயின் தேர்வு, நேர்கானல் என்று பல கட்டங்களையும் தாண்ட முடியும். தற்போது தமிழ் மொழியிலும் தேர்வுகளை எழுத முடியும். ஆனால் நம் தமிழ் மொழியில் பயற்சிக்கு உரிய படங்கள் அதிகமாக இல்லை என்பது மிகப்பெரும் குறை. ஒரு சிலர் தமிழ் மொழியில் எழுதியும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் எண்ணிக்கை மிக குறைவு. நம் மாணவர்களை தயார் படுத்தும் அதே வேலை சமுதாய ஆசிரியர்களும் இதை பற்றி அறிந்திருப்பது அவசியம். மாணவர்களோடு அதிகமாக தொடர்பில் இருப்பவர்கள் அவர்கள் அல்லவா?. எனவே அதற்காண முயற்ச்சியிலும் நாம் ஈடுபடுவோம்.

V A O போன்ற பணி குறைந்த பட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு. 10, 12 வகுப்பு மட்டும் படித்தவர்கள் குறைந்தது இந்த கடைநிலை பதவிக்காவது முயற்சி செய்யலாம்.

IIT (B.TECH, M.TECH)
மத்திய அரசு சார்ந்த ஐ.ஐ.டி (Indian Institute of Technology) போன்ற உயர் கல்வி அனைத்திலும் - இதுபோல் நம் பிள்ளைகளை தயர்படுத்த வேண்டும்.

உதாரணமாக I.I.T (JEE-Joint Entrance Exam), தேர்வுக்கு ஆந்திரா போன்ற மாநிலங்களில் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் போதே தயர்படுத்துகின்றார்கள். அதனால் தான் தென் இந்தியா அளவில் ஆந்திராவை சேர்ந்த மாணவர்களே I.I.T யில் அதிகம் படிக்கின்றார். (http://timesofindia.indiatimes.com/india/Andhra-bags-7-of-top-10-IIT-ranks/articleshow/5978951.cms)

எனக்கு தெரிந்து இஞ்சினியர் படிக்கும் நம் சமுதாய மாணவர்களுக்கு கூட, அவர்கள் சார்ந்த ஐ ஐ டி (I.I.T) பற்றி போதுமான அறிவு இல்லை என்பது வேதனைக்குரிய விடயம்.

IIM ( MBA )
அதுபோலவே B.Com, BBA படிக்கும் மாணவர்களும் உயர் படிப்பான M.B.A வழங்கும் உலக அளவில் புகழ் பெற்ற I.I.M (Indian Institute of Management) பற்றி அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள.

இந்திய அளவில் புகழ் பெற்ற BIM (Bharathidasan Institute of Management) என்று பாரதிதாசன் யுனிவர்சிட்டி சார்பு கல்வி நிறுவனத்தை பற்றியும் அறியவில்லை. இங்கு படித்தவர்களுக்கு 100 சதவித வேலை உண்டு சம்பளம் குறைந்தது மாதம் லட்சத்திற்கு மேல்!. இந்தியாவிலேயே, மிகப்பெரிய நிறுவனங்களில் பலவற்றில் IIM, BIM படித்தவர்கள் பல நல்ல பதவிகளில் உள்ளார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம் Khadir Mohideen College பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் தான் இருக்கின்றது. நம் கல்லுரியில் படித்த எத்தனை பேருக்கு BIM பற்றி தெரியும் என்று தெரியவில்லை!. கல்வி விழிப்புனர்வில் நம் பயணம் நீண்டது.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மிக நீண்ட பயணம் செல்லவேண்டியுள்ளது. நம் பிள்ளைகளுக்கு, சிறுவயது முதல் இதில் ஆர்வமூட்ட வேண்டும். நம் விழிப்புனர்வு பிரச்சாரத்தை பள்ளிபடிப்பு ( 8 to 12 Std) மாணவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நீண்ட கால திட்டம் தான் பயன் அளிக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்பது எல்லாம் பயன் அளிக்காது.

இந்த உயர்கல்வி ( Civil Service, I.I.T, I.I.M, BIM ) அவசியத்தை மணவர்களிடம் சேர்ப்பதற்கு, நம் சமுதாய ஆசிரியரின் ஒத்துழைப்பும், பெற்றோர்களிடம் ஒத்துழைப்பும் அவசியம். அவர்களுக்கு தெரிந்த வழியில், தெரிந்த மொழியில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.

-- அதிரை மீரா

11 Responses So Far:

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
நல்லதை சொல்லிகிறீங்க
அதை நல்லாவே
சொல்லிகிறீங்க

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அரிய தகவல்கள் இத இதத்தான் எதிர்பார்க்கிறோம் நம்வர்களிடம், வழிகாட்டிட ரோடும் போட ஆரம்பித்தாகிவிட்டது இனிமேல் மாணவர்களை நாம்தான் அழைத்துச் சென்று அவர்களுக்கு நல்ல வெற்றிப் பயனமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியைக் கொண்டு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்...

நன்றி மீரா... தொடருங்கள் !

அதிரை முஜீப் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தப்பதிவை வெளியிட்ட அதிரை நிருபர் குழுவிற்கு மிக்க நன்றி!. இதுபோன்ற பதிவைனை மற்ற இனையதிலும் வெளியிட்டால்தான் செய்திகள் மக்களிடமும்,மானவர்களிடமும் சென்றடைய செய்யமுடியும்!. சகோதரர் மீரா அவர்கள் கல்வி தொடர்பான பல நல்ல அனுபவம் உள்ளவர்.இந்திய அளவிலும்,தமிழ் நாட்டளவிலும், குறிப்பாக நாமக்கல், ஈரோடு பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் தொடர்பான நல்ல அனுபவம் உள்ளவர். எனவே அவரை நம்மூரில் உள்ள கல்வி சிந்தனையாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்திகொள்ளவும்.வெளிநாட்டில் நாம் பார்த்த பட்ட அனுபவங்களினால் தான் நம் சமுதாய மக்களும் நல்ல படிப்பை பெற்று அவர்களினால் நம் சமுதாய முன்னேற்றத்திற்கும் உதவி செய்ய வைக்க முடியும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இதற்கு நாம் உடனடியாக களத்தில் இறங்க வேண்டிய நிலையில் உள்ளோம்!.

பெரும்பாலான அதிரைவாசிகள் வெளிநாட்டில் உள்ளதால், நமதூரில் மீரா கூறியுள்ளதுபோல் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் இருந்து பயிற்சி அளிக்க, அதிரை பைதுல்மாலையும், அங்குள்ள இடவசதியையும் நாம் இதற்கு பயன் படுத்திக்கொள்ளலாம்!.

Yasir said...

மீரா காக்காவிடம் பேசினாலே எதாவது பயனுள்ள விசயங்களை மட்டுமே பேசுவார்கள்...அதை போல் அவர்கள் இங்கு தொகுத்து அளித்து விசயங்கள்...மிகப்பயனுள்ளதாக உள்ளது....கோடு போட்டால் ரோடு போடும் அளவிற்கு நமது மாணக்கர்களிடையே திறமை உள்ளது...வழிகாட்டுதல் வேண்டும்....தொடர்ந்து இது மாதிர் விசயங்களை அறிய தாருங்கள் சகோ.மீரா மற்றும் சகோ.முஜிப்

sabeer.abushahruk said...

நம்மூரின் கல்வி மேம்பாடு தொடர்பாக சகோ. அதிரை முஜீப் மற்றும் தம்பி மீரா இருவரின் அக்கறையையும் ஆர்வத்தையும் கடந்த வெள்ளியன்று நடந்த AEM கூட்டத்தில் நேரில் கண்டேன். தற்போது அ.நி. யிலும் பதிந்து ஏணையோரையும் அலர்ட் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

Yasir said...

சம்பந்தம் இல்லாமே பேசுறானே என்று நினைக்கபிடாது...அதிரை நிருபரின் font மாற்றம் ...அ.நி க்கு மெருகு கூட்டி உள்ளது..நன்றி அ.நி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Yasir சொன்னது…
சம்பந்தம் இல்லாமே பேசுறானே என்று நினைக்கபிடாது...அதிரை நிருபரின் font மாற்றம் ...அ.நி க்கு மெருகு கூட்டி உள்ளது..நன்றி அ.நி//

அதெப்படி தம்பி சம்பந்தமே இல்லைன்னு சொல்லிட்டீங்க... ! உருகிட்டோமே உங்க வார்த்தையில ! :)

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
//அதெப்படி தம்பி சம்பந்தமே இல்லைன்னு சொல்லிட்டீங்க... ! உருகிட்டோமே உங்க வார்த்தையில//

அஸ்ஸலாமு அழைக்கும்
சரி சம்பந்தத்துடன் பேசுகிறேன் அதிரை நிருபரின் font மாற்றம் ...அ.நி க்கு மெருகு கூட்டி உள்ளது..நன்றி அ.நி

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/// அஸ்ஸலாமு அழைக்கும்
சரி சம்பந்தத்துடன் பேசுகிறேன் அதிரை நிருபரின் font மாற்றம் ...அ.நி க்கு மெருகு கூட்டி உள்ளது..நன்றி அ.நி //

அலைக்குமுஸ்ஸலாம், சாஹுல் காக்கா: உங்களின் மற்றும் யாசிரின் மெருகு ஏற்றிய வரிகளால் வருடியிருக்கிறீர்கள் இன்னும் சிறக்கும் நன்மையை நாடியே நல்ல விஷயங்களோடும் இன்ஷா அல்லாஹ்...

Meerashah Rafia said...

அந்த மீராவின் தகவல் இந்த மீராஷவிற்கு, படித்த காலத்தில் உங்களைமாதிரி வழிகாட்ட ஆள் இருந்திருந்தால்!!!.......................

(யாருப்பா அது என் வண்டவாளத்தை தெரிஞ்சிகிட்டு வாயைமூடி சிரிக்கிறது?)

எது எப்படியோ, இந்த தலைமுறைக்கு தலைசிறந்த தகவல் கொடுத்தமைக்கு நன்றி..

மு செ.மு.மீரஷாஹ் ரஃபியா

Mohamed Meera said...

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்........

இந்த பதிவானது தனி கட்டுரையாக வருவதற்காக எழுதப்பட்டது இல்லை- பின்னோட்ட கருத்தாக ( ) பதிய பட்டது தான் - தனிபதிவாக கட்டுரையாக பதிவாதற்கு இந்த ' உயர் கல்வி ' ' உயர் அதிகார வேலை வாய்ப்பு' சம்பந்தபட்ட பல விசயங்களை சேர்த்து இன்னும் மெருகு கூட்டி எழுதியிருக்க முடியும் - இனிவரும் காலங்களில் பல தரப்பட்ட பயனுள்ள செய்திகளுடம்- தொடர்பை பேணுவோம் - இறைவன் நாடினால்

இதை தனிபதிவாக வெளியிட்ட சகோதர இணையதளங்களுக்கும், கருத்துக்களை பதிந்த சகோதரர்களுக்கும் நன்றி

- அதிரை மீரா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு