அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச் சொந்தங்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில் 'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.
முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட" முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமான சகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள் (15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.
விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!
மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.
இவண்
அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team
________________________________________________________
நன்றியுடன் : இம்மாநாட்டிற்கான இலட்சினை உருவாக்கிட அதிரைநிருபர் குழுவுடன் இணைந்து எல்லா வகையான ஆலோசனைகளையும் உறுதுணையுடன் பதிவு வடிவம் கொடுத்திட்ட எங்கள் அன்பின் ஜமீல் காக்கா மற்றும் அதிரை அஹ்மது காக்கா, சபீர் காக்கா, ஷர்ஃபுத்தீன் காக்கா இவர்களை நினைவில் கொள்கிறோம்.
16 Responses So Far:
மப்ரூக் ! வாழ்த்துக்கள் !
வெற்றிக்கான இலச்சினை !
நேர் நோக்கு பார்வை இட்டுச் செல்லும் மேல் படிப்புக்கு இன்ஷா அல்லாஹ் !
துஆ செய்கிறோம் !
அஸ்ஸலாமு அழைக்கும்
லோகோ சூப்பர் அதுபோல் மாநாடும் சூப்பரா அமைவதற்கு எங்கள் துவா
அல்ஹம்துலில்லாஹ் , இதை தவிர வேறு வார்த்தை இல்லை. இது ஒரு அறிய சந்தர்ப்பம், நாம் எல்லோரும் சரியாக பயன் படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். இது ஒரு ஆரம்பமே இன்ஷா அல்லாஹ் இலட்சியத்தினை வென்றெடுக்கும் வரை ஓய்வில்லை, வேறு சிந்தனையுமில்லை. நம் எல்லோரின் நீண்ட நாள் கனவு , நிறைவேற வல்லோனிடம் கை ஏந்தியவனாக நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
தம்பி நிருபர் தாஜுதீன் , வலைத் தளத்தில் ஒரு கவுன்ட் டௌன் போடுங்களேன்
அன்புடன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இலக்கை நோக்கி இலச்சினை., முத்திரை பதித்தூள்ளீர்.இந்த லோகோ பிற்காலத்தில் வேலைக்கும் ,வாய்புக்கும் லோலோன்னு அலையக்கூடாது என்பதை சுட்டும் விதமாகவும்.இறக்கை முளைத்து பறக்கும் விதமாகவும் அமைன்(த்)த விதம் நாளை இளய சமுதாயத்தின் பட்டம் பறக்க, சிறக்க சிம்பாலிக்கா சொன்னது போல் உள்ளது. வல்ல அல்லாஹ் வெற்றியை தருவானாக ஆமின்.
லோகோ: மாஷா அல்லாஹ்
நன்றாகா உள்ளது
லோகோ, அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்தாலும், லோகோவை அப்படியே வைத்துக்கொண்டு அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளை மட்டும் மாற்றிவிட்டு " அதிரை உயர்கல்வி அமைப்பு- Adirai Higher Educational Mission" அதாவது "AHEM" என நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம்.
ஆலோசனைக்கு உங்களின் ஆதரவையும் மாற்றுக் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்.
அன்பின் முஜீப்: தங்களின் யோசனை ஏற்புடையதே, இருப்பினும் இதனை தொடர் மாநாடு விழிப்புணர்வு சார்ந்தவைகளுக்கு பயண்படுத்திக் கொண்டு மற்றொன்றை தாங்கள் பரிந்துரைக்கும் AEHM / AEM இவற்றிக்கு புதிய இலச்சினை உருவாக்குவதிலும் ஆனந்தமே !
சகோதரர் அபுஇபுராஹீமின் கருத்திற்கு நன்றி. என் ஆலோசனை புதிய ஓரு அமைப்பல்ல!. நாம் உருவாக்கி இருக்கும் AEM என்ற அமைப்பையே கூடுதலாக உயர்-Higher என்ற வார்த்தையை சேர்க்கலாம் என்று ஆலோசனை கூரியுள்ளேன். தற்போது பெரும்பாலான நம் சகோதர சகோதரிகள் ஏதோ ஓரு டிகிரி கல்வி கற்கின்றனர். அவர்கள் மேற்படிப்பில்/ உயர்கல்வியில் தொடராமல் கோட்டை விட்டு விடுகின்றனர். இவர்களைதான் நாம் பொறிவைத்து பிடிக்க வேண்டும்.
அன்பின் முஜீப்: நானும் உடண்படுகிறேன்... இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும்,
லோகோ மிக அருமை, உருவாக்கிய சகோதரர்களுக்கு மிக்க நன்றி.
அல்ஹம்துலில்லாஹ்..கல்வி உயிரூட்டும் மாநாட்டிற்கு உரு(லோகோ) கொடுத்தது நல்லதோர் முயற்சி.
இந்த லோகோவில், என் மனதில் எழுந்த கருத்தை கருத்து சுதந்திரத்தோடு அப்படியே பதிவதில் தவறில்லை என்று எண்ணுகிறேன்.
என் மனதில் தோன்றியவை :
1)கல்வித்துறை என்றால ஒரு வட்டமும், புத்தகமும், ரிப்பனும் என்றில்லாமல் கொஞ்சம் புதுமையை செய்திருக்கலாம்.
2)மூவண்ணம் போதுமானது, இங்கு பத்திற்கும் மேற்பட்ட வண்ணங்கள், முக்கியமாக வட்டவடிவ எழுத்துக்கள் அச்சிடும்போது செலவு அதிகமாககூடும், வண்ண மாற்றங்கள் கூட.
3)ஒவ்வொரு லோகொவிற்கும் ஒரு 'கான்செப்ட் நோட்' இருக்கும்.இங்கு விழிப்புணர்வை மையக்கருத்தாக வைத்து உருவாக்கி இருந்தால் மேலும் மெருகேற்றி இருக்கும்.
நான் இத்துறையில் அதிக பயிற்சி பெற்றவன் என்பதால் விமர்சித்து தள்ளுகிறேன் என்று என்ன வேண்டாம் காக்கா/சச்சா மார்களா. கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வயதில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நான் கற்றதை எத்(ழு)தி வைக்கிறேன். இதைக்கொண்டு இந்த லோகோவை மாற்ற வேண்டாம்..இனி வரும் காலங்களில் நம் சொந்த கம்பனிக்கோ, இயக்கத்துக்கோ லோகோ பண்ணும்போது இப்படிப்பட்ட பார்வை நமக்கு உதவக்கூடும்.
என் கூற்றில் தவறிருந்தால் கூறிவிடுங்கள்.திருத்திக்கொள்கிறேன்..
நான் ரசித்த சில லோகோக்கள், கீழே சொடுக்கவும் :
www.meerashah.in/adirai
MSM(MR)
தம்பி / மருமகன் / காக்கா மகன் / (இதில் எதோ ஒன்று அபுமீராஷா விடம் கேட்டுக் கொள்ளவும்): வெளிப்படையான கருத்து சொல்வதைத்தான் வரவேற்கிறோம் அதோடு தாம் சார்ந்திருக்கும் வரைகலைத் தொடர்பு ஆக்கமாக இந்த இலச்சினை அமைந்திருப்பதால் என் பங்கிற்கு சொல்லவும் விரும்புகிறேன்.
நிற்க! வண்ணங்களில் இரண்டு விதமாக அச்சுக்கு ஏற்றும்போதும் சரி கணினி வரைகலை விளையாட்டிலும் நாம் பயnபடுத்தி வருவோம் அதில் CYMK, RGB இவைகளைக் கொண்டுதான் வண்ண ஜாலங்கள் செய்திவோம்.
இன்று இருக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டு வண்ணம் தனிப்படுத்தல் colour separation செய்து அதன் படி அச்சும் செய்திடலாம் இதில் வண்ண மாற்றத்திற்கு வேலையிருக்காது.
வட்ட வடிவம்தான் முடிவோடு உருவாக்கப்பட்டதல்ல, இங்கே சுற்றம் சேர்ந்து விறிந்த புத்தகம் அதனைத் தாங்கிடும் கேடயம் இப்படித்தான் இதற்கு கரு வைக்கப்பட்டது அதிலும் அனுபவமிக்கவர்களின் தேர்வும் இதுவாக அமைந்து விட்டது.
துள்ளும் இளமை, சிதறும் வண்ணங்களும் வரைகலையில் இணைந்து விட்டால் கொண்டாட்டம்தான்... வா சிருசு கைகோர்க்கலாம்... மேலேச் சொன்னா எதாவது உறவை வாப்பாவிடம் கேட்டுக் கொண்டு சாதிக்கலாம் :)
என்றும் பாசத்துடன்
@அபுஇபுறாஹிம்
காக்கா /சாச்சா /மாமா (உங்களை இதில் எதை சொல்லி கூப்பிடுவதென்று எனக்கும் தெரியவில்லை, வாப்பாவிடம் கேட்டிருக்கிறேன்.விரைவில் விடை கிடைக்ககூடும்).
ஆம் நவீன தொழில்நுட்பத்தில் வண்ணப்பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதுண்டு. ஆனாலும் அந்த வட்ட எழுத்துக்களுக்கு பல வண்ணம் பூசாமல் இருப்பதே இன்றைய சூழலில் நேர்த்தியான லோகோ (corporate logo) என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.
உதாரணம்: இங்கே சொடுக்கவும் www.meerashah.in/adirai. இதில் உள்ள எழுத்துக்கள் எதிலுமே பல வண்ணம் பூசி இருக்காது.
அவைகளில் எனக்கு பிடித்தது முதல் லோகோ(பாய்மரக்கப்பல், கப்பல்-வழிக்காட்டியாய், பாய்- புத்தகமாய், புத்தகத்தில் பல வண்ணம்-பல்வேறு துறைசார்ந்த கல்வியை குறிக்கின்றது..கற்பனையில் அதில் ஒரு வட்டமிட்டு AEAC விரிவாக்கம்).
ஆஹா...இறைவன் குடுத்த கற்பனைத்திரன் கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருக்கிறது.. இதோடு நிறுத்திக்கொள்கிறேன்..ஹ்ம்ம்... இப்புடித்தான் கான்சப்ட் நோட்டுன்னு நம்ம நாட்டுல யாரோ செஞ்ச லோகோக்குலாம் கதை எழுதி பல கிளைண்ட கவுத்திருக்கேன்..சரி சரி..
அதிரைக்காக உருவாக்கிய லோகோவை பற்றி ஆராய்ந்து நிறை குறைகளை விவாதிப்பதை விட, இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் லோகோ, வெப் பற்றி அப்பாலிக்கா ஒரு கட்டுரை எழுதுகிறேன்..
MSM(MR)
congratulations
http://adiraiekspress.blogspot.com/
'கல்வி விழிப்புணர்வு மாநாடு' நடைபெற துவா செய்கிறோம்.
Post a Comment