பெண்ணைப்பெற்றவன் அங்கே காய
அவளுடன் பிறந்தவனோ அகதியாய் எங்கோ தேய
அவளை ஆளாக்கி பேராக்கி ஒரு நல்ல ஆணுக்கு துணையாக்க
அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது கேட்டு ஓயாது
அவள் பள்ளி செல்வாள் நன்கு பாடம் படிப்பாள்
ஐங்காலத்தொழுகையை முறையே நிறைவேற்றுவாள்
வீட்டு வேலைகளை செவ்வனே செய்து முடிப்பாள்
திறமைகள் பல கற்று தெருவில் பெருமையுடன் பேசப்படுவாள்
வீட்டுக்கு வந்த விருந்தினரை உவகையுடன் உபசரிப்பாள்
கற்புக்கரசியாக இருந்து மார்க்க கண்ணியம் காப்பாள்
இவளை திருமணம் முடிக்க இருப்பவன்
கொடுத்து வைத்தவன் என்றும் பலரால் பேசப்படுவாள்
இவன் கொடுத்து வைத்தவன் அல்ல மாறாக(பணம்)வாங்கி
வைத்தவன் பெண் வீட்டாரிடமிருந்து அவர்கள் விருப்பமின்றி
திறமைகள் பல பெற்றிருந்தும் திறமையற்ற எவனுக்கோ
வாழ்க்கைத்துணைவியாக்கப்படுவாள் பிள்ளைகள் பல
ஈன்றெடுத்தும் அற்ப காரணத்திற்காக பிறகு வாழாவெட்டியாக்கப்படுவாள்
அரைகுறை அறிவுள்ள குடும்பத்தினரால் நன்கு பிரித்து மேயப்படுவாள்
திருமண வாழ்க்கை என்பது மூன்று வேளை மனைவி வீட்டில் உணவு உண்டு வர மட்டுமல்ல
இல்லை படுத்துறங்கி உடல் அயர்வை போக்கி கொள்ள மட்டுமல்ல
பிள்ளைகள் பெற்றுக்கொடுத்து அத்துடன் ஓய்ந்து போவதற்கல்ல
வாழ்க்கை என்னும் வியாபாரத்தில் லாப, நட்டங்களை ஏற்கும் நிரந்தர முதலீடு போன்றது திருமண வாழ்க்கை.
இன்பமுடன் இருக்கும் பொழுது அவள் வேப்பங்காயைக்கொடுத்தாலும் இன்முகத்துடன் சுவையாக ஏற்றுக்கொண்டு உட்கொண்ட நீ
உள்ளத்துன்பம் உன்னைச்சூழ்ந்திருக்கும் வேளையில் அவள் இனிய தேனைக்கொண்டு வந்து ஆசையுடன் கொடுத்தாலும் அதை கசப்பாக்கி உட்கொள்ள மறுப்பது/வெறுப்பது ஏனோ?
பயன்படுத்திய பின் தூக்கி எறிய அவள் ஒன்றும் ப்ளாஸ்டிக் குவளை அல்ல
இறுதி வரை நம்முடன் இணைபிரியாமல் வர இருக்கும்
உடல் உறுப்பு போன்றவள் உயிரோடு ஒன்றிணைந்தவள்
இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே பயணிப்பவள்
ஏதேதோ காரணத்திற்காக யாரோ சொல்கிறார்களே என்று அவளை எடுத்தெறிந்து விடாதே.
நம் மார்க்கம் அழகுடன் சொல்வது போல் அவள் ஒரு பலகீனமான முதுகெழும்பு போன்றவள்
நீ அவள் மேல் கடினம் காட்டினால் அவள் வளைய மாட்டாள்
மாறாக ஒடிந்து விடுவாள் உள்ளம் நொறுங்கி விடுவாள்
உன்னை விட்டுப்பிரிந்துவிடுவாள் உறக்கத்தை கலைத்திடுவாள்.
விவாகரத்து என்பது உரிய காரணத்திற்காக வேறு வழியின்றி எடுக்கப்படும் ஒரு இறுதி முடிவே அன்றி எளிதில் மறு வாழ்க்கையை தொடர முதல் தொடக்கமாக இருக்க வேண்டா.
ஊரில் ஒரு புறம் கலியாண வைபவங்கள் கலைகட்டினாலும் மறுபுறம் சிறு, சிறு அற்ப காரணங்களுக்காக விவாகரத்துக்கள் பெருகி வருவது ஆரோக்கியமானதன்று மற்றும் அழித்தொழிக்கப்படவேண்டிய ஒன்று.
இக்கட்டுரை மூலம் ஆண்கள் வர்க்கம் மட்டுமே தவறுகள் செய்வதாக எண்ணிவிட வேண்டாம். பெண் வர்க்கமும் பல தவறுகள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ திருமண வாழ்வில் செய்து வருவதும் உண்மைதான்.
உங்கள் நல்ல கருத்துக்களை இங்கு பின்னூட்டம் மூலம் நம் அனைவரின் பார்வைக்காகவும் பதியும் படி அன்புடன் அ.நி. சார்பாக கேட்டுக்கொள்கிறேன். குறை, நிறைகள் இருப்பின் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம் அந்த வல்லோனின் கருணையை நாடி...
-- மு.செ.மு. நெய்னா முஹம்மது
8 Responses So Far:
அஸ்ஸலமு அழைக்கும்
MSM மின் மற்றுமொரு சமுதாய சிந்தனை ஆக்கம்
அதற்கு அசத்தலாக அதிரை நிருபரின் போட்டோ
MSM(n) எப்போதுமே ஊரிலுள்ள உணர்வுகளை அப்படியே உரைத்திட செய்யக்கூடிய அதிரைப்பட்டினத்தின் நடப்புகளின் நாளேடாகாத்தான் இருக்கும்... தொடரட்டும் MSM(n)எழுத்தின் சீற்றம் !
பெண்ணைப்பெற்றவன் அங்கே காய
அவளுடன் பிறந்தவனோ அகதியாய் எங்கோ தேய
அவளை ஆளாக்கி பேராக்கி ஒரு நல்ல ஆணுக்கு துணையாக்க
அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது கேட்டு ஓயாது.
-----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.பெண் மணமாலை சூட,அவளுக்கு ,மணமகன் தேட, அதன் சிரமங்களைப் பாட ஆத்தி சூடிபோல் அமைத்த நைனாவின் கைவண்ணம் திண்ணம்.
-------------------------------------------------------------------
அவள் பள்ளி செல்வாள் நன்கு பாடம் படிப்பாள்
ஐங்காலத்தொழுகையை முறையே நிறைவேற்றுவாள்
வீட்டு வேலைகளை செவ்வனே செய்து முடிப்பாள்
திறமைகள் பல கற்று தெருவில் பெருமையுடன் பேசப்படுவாள்
வீட்டுக்கு வந்த விருந்தினரை உவகையுடன் உபசரிப்பாள்
கற்புக்கரசியாக இருந்து மார்க்க கண்ணியம் காப்பாள்
இவளை திருமணம் முடிக்க இருப்பவன்
கொடுத்து வைத்தவன் என்றும் பலரால் பேசப்படுவாள்.
---------------------------------------------------------
பல சிறப்பு பெற்ற சகோதரியின் மண வாழ்கையோ விழலுக்கு இறைத்த நீராகத்தான் மாறிவிடுகிறது. அல்லாஹ்தான் நம் சமுதாயத்தை காப்பாதனும். பல திறன் பிடித்த பெண்ணுக்கு பாரட்டு பத்திரம் தரவேண்டாம்,பரிசு பொருள் தரவேண்டாம்,அவளை ஒரு பொருளாக நினைக்காமல் பொருட்டாக நினைத்து அவளுக்கு மன அமைதி பெரும் படி,அதிகம் வரும் படி இல்லாவிட்டாலும் உருப்படியான மண மகன் தந்து அந்த சீரான சீரை பெற்று சிறப்பு பெருக.
நண்பர்,சகோதரர் நைனாவின் வேண்டுகோள் கவனிக்கபட வேண்டும். வழக்கம் போல் நல்லதொரு சிந்தனை ஆக்கம் .சந்தோசமும்,எப்படியெல்லாம் எழுதுறாங்கன்னு பொறாமையாவும் இருக்கு.வாழ்க,வளமுடன்.
படிக்கும்போது...எழுத்துக்கள் மனதோடு ஒட்டி எதோ நம் குடும்பத்தில் சம்பவம் நடப்பது போன்ற உணர்வை கொண்டுவருவது சகோ.மு.செ.மு அவர்களின் பாணி....அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள் நண்பரே...
அன்பு-பாசம்-பாராட்டு-புரிந்துகொள்ளுதல்-நண்பராக அவர்/அவள் பிரச்சனைகளில் அறிவுரை கூறல்-தவறு செய்யும் போது அன்பாக கடிந்து கொள்ளுதல்-மனஸ்தாபம் ஏற்ப்பட்டால் ஈகோ பார்க்காமல் முதலில் பேசுதல்-அன்பளிப்பு செய்தல் -அரவணைத்தல்-அன்பான வார்தைகளை பேசுதல்-ஆலோசனை செய்தல்...செய்து பாருங்கள் இவைகளை நீங்கள் விரல் அசைத்தாலும் அவர்களும் அசைவார்கள் அந்த அளவிற்க்கு நெருக்கம் ஏற்படும்...விவகாரத்து விரண்டோடும்
சகோதரர் MSM நெய்னா அவர்களின் பதிவுகளை பாடித்தாளே, ஊருக்கு சென்ற உணர்வு.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
CMN சலீம் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றில் "முஸ்லீம்களின் விவாகரத்து வழக்குகள் சென்னை நீதி மன்றங்களில் அதிகரித்து வருவதாக சொன்னார்." கவலையளிக்கு செய்தி.
நம் சமுதாயத்திற்கு தேவை முழுமையான மார்க்க அறிவு தேவை.
நல்லதொரு ஆக்கம்.
க்ரவுனும் யாசிரும் கடைசியா வந்திருந்தா நாமலும் கருத்துச்சொல்ல ஏதாவது மிச்சமிருந்திருக்கும்.
அ.நி.தான் ஏதாவது டோக்கன் ஸிஸ்டம் வைத்து வரிசையிலே வரவைக்கனும். நாங்கள் முதல்ல வந்துடுவோம்ல?
//பெண்ணைப்பெற்றவன் அங்கே காய
அவளுடன் பிறந்தவனோ அகதியாய் எங்கோ தேய// MSM
//அவளை ஒரு பொருளாக நினைக்காமல் பொருட்டாக நினைத்து//-crown
//அன்பான வார்தைகளை பேசுதல்-ஆலோசனை செய்தல்...செய்து பாருங்கள் இவைகளை நீங்கள் விரல் அசைத்தாலும் அவர்களும் அசைவார்கள்// yasir
கலக்குறாங்கப்பா!!!
/க்ரவுனும் யாசிரும் கடைசியா வந்திருந்தா நாமலும் கருத்துச்சொல்ல ஏதாவது மிச்சமிருந்திருக்கும்//நீங்கள் போட்ட எச்சத்தில் இருந்து கத்துக்கிட்டதுதான் கவிகாக்கா...உங்கள் கவித்திறமையை எப்படியாவது சுடணும்..அப்பொழுதுதான் “உள்துறையின்” உள்ளத்தை மேலும் கவரமுடியும்..டெய்லி, சபீர் காக்காபோல் உங்களுக்கு ஒரு வரியாவது எழுத தெரியவில்லை என்று தொல்லை
Post a Comment