எத்தனை நல்லவர்களை கண்டிருக்கும் இந்த புளியமரம்
எத்தனை கெட்டவர்களை கண்டிருக்கும்
எத்தனை அட்டு பஞ்சாயத்துக்களை கண்டிருக்கும்
எத்தனை நல்ல பஞ்சாயத்துகளையும் கண்டிருக்கும்
எத்தனை பெயர் ஓடி ஆடி விளையாண்ட இடம்
எத்தனை மையதுக்களை துக்கி வந்தவர்கள் (தொழாமல் )களைப்பாறிய இடம்
எத்தனை பிச்சைகாரர்கள் இலவசமாக தங்கி சென்ற இடம்
எத்தனை பெயர் இந்த புளியமரத்தை நம்பி வீட்டில் கோபித்துக்கொண்டு வந்து படுத்து இருப்பார்கள்
எத்தனை அனாச்சார கந்தூரிகளை கண்ட இடம்
எத்தனை ஐந்து வேலை தொழுகையை கண்ட இடம்
எத்தனை பெயர் நோன்பில் ஹிஸ்பு ஓதி விட்டு கிடைக்கும் நார்சாவை உண்ட இடம்
எத்தனை பெயர் மின்சாரத்துறையை திட்டிக்கொண்டு இங்கு வந்து ஓய்வு எடுத்து இருப்பார்கள்
எத்தனை பெரிய அரசியல் வாதிகள் அருமையான காற்று என சர்டிபிகட் கொடுத்த இடம்
ஹமீது
Dammam, Kingdom Of Saudi Arabia
கடற்கரைத்தெரு புளியமரம் | 39 |
உமர் தமிழ் தட்டசுப் பலகை
|
|
உமர் தமிழ் தட்டசுப் பலகை
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
39 Responses So Far:
ஆஹா... அதானே எங்கே புளிய மரத்து ஆசானைக் காணோமேன்னு ஒரே நென்ன்ப்புள்ள இருந்தேனா அதுக்குத்தான் இந்த எத்தனை எத்தனைகள் ! அத்தனையும் எத்தனை முறையேனும் சொல்லிக் கொண்டே இருக்கலாமே... இன்னும் எத்தனை(யோ) விடுபட்டதையும் :)
இங்கேதான் எனது சின்ன மாமா அவர்கள் "தனிக் கைப்பை" hand bag தவற விட்டார்கள் அதில் ஒரு நாள் முன்னால் அவர்களுக்கு கிடைத்திருந்த பாஸ்போர்ட்டும் இருந்திருந்தது..
இங்கேதான் அடுத்த நாள் அதே இடத்தில் அந்த கைப்பை வலுவிழந்து அதே நேரத்தில் அவசியமான உள்ளடக்கத்துடன் கண்டெடுக்கவும் பட்டது !
இங்கேதான் என்னோட நெருங்கிய நண்பர்களை தேடி வந்து அவர்கள் விட்டிற்கு வழிகேட்டதும் அதன் ஓரத்தில் சைக்கிளை நிறித்தி விட்டு இருந்தவர்கள் கைகாட்டிய வழியில் சென்று கொண்டே இருந்தேன் அவர்கள் சொன்ன இடம் கண்டுபிடிக்க முடியாமல் சந்து சந்தாக மாறி கடைசியாக தரகர் தெரு முனைக்கு வந்ததும் மறக்க முடியுமா !!
இப்படியா சுண்டி இழுக்கிறது நெனப்பு உசுப்பி உட்டியலே சாஹுல் காக்கா இதுக்கு மலேசியாவுல ரூம் போட்டியலோ ?
அஸ்ஸலாமுஅலைக்கும்.குழந்தையின் பாதச்சுவடு,மொட்டு விட்ட செடி,வசந்தத்திற்கும் வாடைக்கும் நடு கால நேரத்தில் வரும் பொண்வண்டு.சிறகுமுளைத்த பட்டுபுழு,முதன் முதலில் அரும்ப ஆரம்பித்த மீசை,முதல் மழையில் மண்ணின் வாசனை,மழலைதந்தைமுகம் பார்த்து சிரித்த நாள்,இதுபொல கருத்து நாயகன்,கட்டுரையில் கட்டிபோடும் எழுத்தாளன் இப்ப கவிஞாக கவிதை... நல்ல ஒரு ஆரம்பம். தான் சுவாசித்த ,வசித்த, நேசித்த இடத்திலிருந்து ஆரம்பம்.வாழ்துக்கள்.இந்த சிறியனின் வாழ்தும்,இனி வரும் ஜாம்பவான்கள் வாழ்தும் எதிர்பார்த்து.... அன்புடன் உங்கள் கிரவுன்.
crown சொன்னது…
இனி வரும் ஜாம்பவான்கள் வாழ்தும் எதிர்பார்த்து.... அன்புடன் உங்கள் கிரவுன் //
என்னா கிரவ்ன்(னு) பம்முறே ? சீக்கிரம் நல்லா மாதிரியா கல்லா கட்டிட்டு வா ! மரத்தடியில் உட்கார்ந்து இருக்கேன்... இப்புடியெல்லாம் சொல்லிட்டு ஓடப்படாது சரியா!!!.. வா வா சீக்கிரம் டிசம்பர் இங்கே மட்டும் என்னா வாழுதாம் அத முடி இத முடி கடைசியில ஒன்னுமே முடி யலை ஒரு புடி யோடதான் இருக்காய்ங்க (அலுவலகத்தில் தாண்(டா)ப்பா) இங்கேயும் !
இந்த
புளிய மரம்...
புகைப்பவர்களின் போதிமரம்!
பொது ஏழைகளின் புகழிடம்!
பிச்சைக்காரர்களின் புக்ககம்!
புது வரவுகளுக்கு நிழலகம்!
இதனடியில் நிற்பதுவும்
இதன் மடியில் நித்திரையும்
வென்றெடுத்த கனவுகளும்
அன்றாட அத்தியாவசம்!
மரக் கிளைகளில்
தொட்டு விளயாடியதும்
மர இலைகளுக்குள்
கண்டு விளையாடியதும்!
தாவியக் கிளைகளெல்லாம்
தேய்ந்து தேய்ந்து
வழுக்குப் பாறையென
வழவழத்து வழுக்க
விட்டுவந்த ரேகையெல்லாம்
வெட்டிப்போட்ட தென்ன நியாயம்?
புளியங்கொழுந்துண்டு
புடுங்கிக்கிட்டு தவித்ததுவும்
பளியாத்தோப்பெல்லாம்
பிச்சிக்கிட்டு போனதுவும்!
புளியம் பிஞ்சு பறித்து
எக்கலில் செறுகி
பெருசுகள் பிடிக்கவர
சிட்டென பறந்ததுவும்!
வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?
(யார்ப்பா அது சொரிஞ்சி விட்டது? ஜாகிரா? ஷாகுலா?)
செக்கடிகுளம், புளியமரம், வரிசையிலே அடுத்து? (ஆஹா அ.நி. கலை கட்டுது)
//வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?///
அதானே அதெப்படி !
வெட்டி விட்டுட்டங்கான்னா ?
நினைவலைகள் அடிக்காமலா இருக்கும் !?
சரியான போதிமரம் !
கடலோரக் காக்கா'ஸ் இங்கே மல்லாக்க படுத்து நிறைய மாத்தி மாத்தி யோசிச்சிருப்பிங்களே ! அதன் கிளைகள் இங்கே விரியுமா ?
அபுஇபுறாஹிம் சொன்னது…
//வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?///
அதானே அதெப்படி !
வெட்டி விட்டுட்டங்கான்னா ?
நினைவலைகள் அடிக்காமலா இருக்கும் !?
சரியான போதிமரம் !
கடலோரக் காக்கா'ஸ் இங்கே மல்லாக்க படுத்து நிறைய மாத்தி மாத்தி யோசிச்சிருப்பிங்களே ! அதன் கிளைகள் இங்கே விரியுமா ?
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அந்த கிளைகளில் இருந்த கிளிகளானோம், எம்மை பிள்ளையாய் பெற்றவர்கள் வாழ்ந்து இடத்தினில் நிழல் வாங்கி வளர்தோம். போதி மரம் தான் நட்பை போதித்த மனதை பாதித்த போதிமரம்.புளிய மரம் இனிப்பான அனுபவம். நாள் சென்றாலும் சீச்சீ இந்த புளியம் பழம் புளிக்கும் என்று சொல்ல முடியாத இனிய பழம் தந்த வள்ளல் மரம்.அந்த மரம் எமக்கும் சாமரம் வீசி காற்று தந்திருக்கு அந்த் காற்றை சுவாசித்ததால் இன்றும் வெட்டிவிட முடியாத நினைவுகள்.
இந்த எழுத்துக்கு சொந்தக்காரர் நமது சாகுல் ...நான் தான் எல்லோரும் படிக்கட்டுமே என பதிந்தேன். அந்த போட்டோவை எடுத்தது 2005 என நினைக்கிறேன்.அதில் சாகுல் நிற்பதும் தெரியும், அதே மாதிரி போட்டோ 1986ல் எடுத்ததும் இருக்கிறது , அதே புளியமரம்தான்[ அதிலும் சாகுல் இருக்கிறார்...அனியாயத்துக்கு ஒல்லியாக]
//வெட்டிவிட்டால்...
நிழல் மறையலாம்
நினைவுகள் மறையுமா?//
நிச்சயம் மறையாது...வாழ்க்க்கையின் முக்கிய முடிவுகளும் இங்குதான் எடுக்கப்பட்டது.
கலக்கல் ஷாகுல் காக்கா......தாமதமானாலும் அமர்களமாய்
ரெண்டு சரவெடி ......
//கடலோரக் காக்கா'ஸ் இங்கே மல்லாக்க படுத்து நிறைய மாத்தி மாத்தி யோசிச்சிருப்பிங்களே ! அதன் கிளைகள் இங்கே விரியுமா ?//
காலம்
றெக்கை கட்டி பறக்க
நாங்களோ
கச்சல் கட்டி பறந்தோம்!
மரத்தடி கட்டெரும்புகளை
பெயர்வைத்துக் கூப்பிடுமளவுக்கு பரிச்சயம் எமக்கு.
வீட்டில் மாட்டினி ஷோ "ரிவால்வார் ரீட்டா" படம் பார்க்க காசு தராததால்... வீட்டில் கோபித்துக்கொண்டு சாப்பிட மறுத்து
ஒளிய மரமானது
இந்த
புளிய மரம்.
வேறு எங்கு ஒளிந்தாலும் உம்மா அனுப்பும் வெளிநாட்டு தூதுவர் (பெரும்பாலும் என் நியூ யார்க் மச்சான் ஜலாலாத்தான் இருக்கும்) கன்டு பிடித்துவிடுவார்.
கால ஓட்டத்தில்
போதை பார்ட்டிகளின்
புனித மரமானது
இந்த
புளிய மரம்.
(ஆபு இபுறாகீம்/crown, வேலை பார்க்க வுடுங்க)
புளியமரத்தை ( சிறிய,பெரிய ) மறக்க முடியுமா...எத்தனையோ நினைவுகள் அதை சுற்றி....
இங்கே கருத்து அதிகம் சொல்வதற்க்கு சான்ஸே இல்லாமல் செய்து விட்டார்கள் கவிக்காக்காவும் /கருத்து சொன்னவர்கள்களும்...பின்(ணி)னூட்டங்கள்..கவிக்காக்கா...உங்களுடைய பின்னூட்ட கவிதை சூப்பர்
//அது என்ன 'ஷஜரத்துல் ஜக்கூம்'? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், பார்ப்போம்!//
சூரா அல்துக்ஹான், 44 - 43 யின்படி "நரகவாசிகளுக்கான உணவு தரும் மரம்" எனக்கொள்ளலாம். ஆனால், உவமாணத்தில் உடன்பாடில்லை காக்கா.
இந்த புளியமரம் பூமியை போல .....
நல்லவருக்கும் இடமுண்டு
தீயவருக்கும் இடமுண்டு
//இந்த எழுத்துக்கு சொந்தக்காரர் நமது சாகுல் ...நான் தான் எல்லோரும் படிக்கட்டுமே என பதிந்தேன். அந்த போட்டோவை எடுத்தது 2005 என நினைக்கிறேன்.அதில் சாகுல் நிற்பதும் தெரியும், அதே மாதிரி போட்டோ 1986ல் எடுத்ததும் இருக்கிறது , அதே புளியமரம்தான்[ அதிலும் சாகுல் இருக்கிறார்...அனியாயத்துக்கு ஒல்லியாக]//
அஸ்ஸலாமு அழைக்கும்
புளிய மரம் அருகில் நிற்பது நானா? நீங்கள் சொல்லித்தான் தெரிகின்றது!!!
கவிக்காக்கா சொன்ன அர்த்தமெனில்...அஹமது காக்காவின் கருத்தில் எனக்கும் உடன்பாடு இல்லை...நீங்கள் நிழலுக்கு ஒதுங்கி இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டீர்கள்
அஸ்ஸலாமுஅலைக்கும். சாச்சாவின் உவமானம் எனக்கும் உடன் பாடுஇல்லை,
மழைக்கு பள்ளியில் ஒதுங்கியவனெல்லாம் எப்படி மேதையில்லையோ,
அதுபோல் இந்த புளிய மர நிழலில் ஒதுங்கியவர்களேல்லாம் ஊதாரியோ,தீயவர்களோ இல்லை.இல்லை.... யானைக்கும் அடி சருக்கும்.அனால் இங்கே நிழலுக்கு ஒதுங்கி
நல்லவரிகளுக்கெல்லாம் இதயத்தில் அந்த நம்பிக்கையான கை கொடுத்த அடி.பெரிய வலி.
//அது என்ன 'ஷஜரத்துல் ஜக்கூம்'? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், பார்ப்போம்!//
The food of the inhabitants of Hell will be made of zachum tree oil (a cursed tress growing in Hell's lowest depths)
வட்டமிட்ட சிமிண்ட் பூசிய மேடையின் புளிய மரத்தடி நிழல் COOLஆகத்தானே இருக்கும் !
அஸ்ஸலமு அழைக்கும்
நிழலுக்கு ஒதுங்கா விட்டாலும் அது உற்பத்தி செய்து கொடுத்த காற்றை உயிர் வாழ்வதற்கு பலமுறை சுவாசித்து இருப்போம்
ஜாஹிர் காக்கா: பினாங்கு பக்கமெல்லாம் போயிட்டு வந்த மாதிரி தெரியுது ! முன்னோர்களின் நெனப்பு எதாவது வந்துச்சா ? சொல்லுங்களேன் வழக்கமாக உங்கள் பாணியில ! - புளிய மரத்தடியில காத்து வாங்கிட்டு இருகேன் சீக்கிரம் வாங்க !
அஸ்ஸலாமு அழைக்கும்..,
மிக எழிமையாக/சுருக்கமாக புளியமரத்தை வடிவமைத்துள்ளீர், பாராட்டுகள் சகோ. ஹமீது
எத்தனை எத்தனை என்று அத்தனை பேர் மனதிலும் பழமையை நியாபகப்படுத்தி பெருமிதமும் கொள்ளச்செய்தமைக்கு வாழ்த்துக்கள்
\\எத்தனை மையதுக்களை துக்கி வந்தவர்கள் (தொழாமல் )களைப்பாறிய இடம்//
அருமை மிக தெளிவான வரி
('நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புகாரி 47.Volume :1 Book:2)
\\எத்தனை அனாச்சார கந்தூரிகளை கண்ட இடம்//
நல்லதொரு விழிப்புணர்வு
இர்fபான்
சாகுல் காக்கா..என்ன வஹாபாக்கா கடையில் புரோட்டா சாப்பிட்ட்டு வர்ரப்ல தெரியுது....
Yasir சொன்னது…
//சாகுல் காக்கா..என்ன வஹாபாக்கா கடையில் புரோட்டா சாப்பிட்ட்டு வர்ரப்ல தெரியுது//
அஸ்ஸலாமு அழைக்கும்
அதே ஏந்தம்பி நினைப்பு காட்டுறியோ !!
அந்த புளியன்காயை
புளியமரத்து சிமெண்டு தரைலே ஒரச்சி சாபிட்டதுன்டா
அஸ்ஸலாமு அழைக்கும்
நாம் நினைக்கும் அர்த்தத்தில் அஹ்மத் காகா சொல்லி இருக்க மாட்டார்கள் அதற்கு வேறு ஏதாவது நல்ல உவமானம் இருக்கும் என நினைகின்றேன்
அஹ்மத் காகா தான் பதில் தரனும்
ஒவ்வொரு தெருவுக்கும் முகவரியாக மேடோ, படி மேடையோ, படிக் கரையோ ! மதில்களோ இருக்கும் அவைகளுக்கு அந்தச் சூழலில் இருப்பவர்களால் அனுபவக் குவியலை பகிர்வதில் மகிழ்வே... இவ்ளோ நாளா இந்தப் புளிய மரத்தடியில் இருந்தால் குளு குளுன்னு காற்று வரும் சொன்னாங்களே அதப் பத்தி கேட்ட யாருமே பதில் சொல்லாம... இருக்கீங்களே !
குளு குளுன்னு சொல்லுங்களேன்... - இந்தச் சிமிண்ட் தின்னைச் சுகமான சூடு இருக்கே... திசைகளை மறக்கடிக்கும் !
வஅலைக்க முஸ்ஸலாம் சாகுல் காக்கா...தரையிலே உரசி சாப்பிட்டதுண்டு கொடிமரம் ஏத்தும் போது புளிய இலை இனிக்கும் - அவ்வலியாக்கள் கொடிமர உச்சியில் அமர்ந்து சந்தோசத்தால் அதன் கிளையை ஆட்டுவார்கள் என்றெல்லாம் கட்டப்பட்ட கட்டுகதைகளை நீங்களும் கேட்டதுண்டா ? அங்கு அடங்கி இருக்கும் அவ்வலியாக்கள் பல் துளக்கியபின் ஊண்டி வைத்த குச்சிதான் பெரிய புளிய மரமானதாக சொல்லும் செய்தி உங்கள் காது களுக்கும் வந்ததுண்டா ?
இதுல வருச கடைசின்னு சொல்லிகிட்டு inventory countingன்னு சொல்லிகிட்டு ஒரு பக்கம் (நாங்கதான்) புலம்பினாலும், இங்கே comments countingதான் எகிறிகிட்டு இருக்கு !
Yasir சொன்னது…
//பல் துளக்கியபின் ஊண்டி வைத்த குச்சிதான் பெரிய புளிய மரமானதாக சொல்லும் செய்தி உங்கள் காது களுக்கும் வந்ததுண்டா ?//
அஸ்ஸலாமு அழைக்கும்
முருங்கை மரம் வாவை மரம் கிளுவை மரம் இன்னும் சிலவைதான் குச்சி உடைத்து வைத்தால் முளைக்கும்,
புளியமரம் குச்சி உடைத்து வைத்தால் முளைக்காது!!
பல் துளக்கியபின் ஊண்டி வைத்த குச்சிதான் பெரிய புளிய மரமானதாக சொல்லும் செய்தி
புருடாக்களில் தலைசிறந்த புருடா என்பது விளங்கும்!!!
//புளியமரம் குச்சி உடைத்து வைத்தால் முளைக்காது!!// அதுக்கு என்ன விளக்கம் தந்தார்கள் தெரியுமா ?? அவ்லியாக்கள் ஊண்டினால் பிளாஸ்டிக் பிரஸ் கூட பலாப்பழம் காய்க்கும் மரமாகும் என்று ; )
//இதுல வருச கடைசின்னு சொல்லிகிட்டு inventory countingன்னு சொல்லிகிட்டு ஒரு பக்கம் (நாங்கதான்) புலம்பினாலும், இங்கே comments countingதான் எகிறிகிட்டு இருக்கு !// எங்கல போல சேல்ஸ் மார்கெட்டிங்-ல உள்ளவங்களுக்கு...dec கடைசி வாரம் கொண்டாட்டம்தான்...வருஷ கடைசி என்று inventory counting, account closing என்று வேலையும் இருக்காது சேல்ஸ்சும் இருக்காது...சும்மா வந்து அ.நி -ல் கருத்து எழுதுவதற்க்கு காசு கொடுப்பானுங்க...அபு இபுராஹிம் காக்கா நீங்க நம்ம பக்கத்து வீடு...இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கொண்டு வந்து நம்ம பாஸ்-ட்டே காட்டிடாதிங்க
Yasir சொன்னது…
//அதுக்கு என்ன விளக்கம் தந்தார்கள் தெரியுமா ?? அவ்லியாக்கள் ஊண்டினால் பிளாஸ்டிக் பிரஸ் கூட பலாப்பழம் காய்க்கும் மரமாகும் என்று //
அஸ்ஸலாமு அழைக்கும்
அதை ஊண்டியதாக சொன்னவர்கள் ஊன்றி சிந்திக்கவில்லை ஊன்றி சிந்திக்காமல் சொல்கின்றார்கள் ,
அவரை போட்டால் துவரையா முளைக்குமா? என்று ஒரு சொல் வழக்கு உண்டு அது நினைவுக்கு வருகின்றது
//புளியங்கொழுந்துண்டு
புடுங்கிக்கிட்டு தவித்ததுவும்
பளியாத்தோப்பெல்லாம்
பிச்சிக்கிட்டு போனதுவும்/
அஸ்ஸலாமு அழைக்கும்
ஆக புரிந்தது புரிந்தது
சகோ. ஜாகிர்,
கோபப்படாதீர்கள் நிதானமாக இருங்கள். வயதில் மூத்தவர்கள் நம்மை அடித்தாலும் பொருமை காப்பதுதான் தன்மையானது. அஹ்மது காக்கா நிழலுக்குக்கூட ஒதுங்க விரும்பியதில்லை என்று சொல்லிவிட்டுத்தான் அப்படி ஒரு கம்மென்ட் சொன்னார்கள். விரும்பாதவற்றைப் பற்றி நல்லதாக எப்படி அவர்களோ வேறு யாருமோ கருத்துச்சொல்லமுடியும்?
அந்த நம் அழகு மரம் எந்தத்தெருவில் இருந்தாலும் அவர்கள் கருத்து மரத்தைப் பற்றிதான் இருக்குமே தவிர தெருவைப்பற்றி இருக்காது. இதில் தெருப் பாகுபாடு வேண்டாமே சகோ.
தவிர, அஹ்மது காக்காவுக்கு மட்டும்தான் அது ஷஜரதுல் ஜக்கூம். மற்றவர்களுக்கு? பின்னூட்டங்களைப் படியுங்களேன். உங்கள் அனைவரின் சார்பாகவும் நான் உடனடியாக உவமானம் சரி இல்லை என்று பதிந்துவிட்டேன். அது போதும் சகோ. (அதெல்லாம் இருக்கட்டும். நீங்க எந்த ஜாகிர்? டம்மாம் ஜகிர? ஃபோனே எடுக்காம பக்கத்திலேயே இருக்கும் என் மச்சானா?)
To; Bro ஜாகிர் ஹீசைன்
"பொது" என்று வந்தால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். கருத்தில் உடன்படவில்லை என அழகாக சொல்ல தமிழில் வார்த்தை இருக்கிறது.புளியமரம் கடற்கரைத்தெருவில் இருக்கும் ஒரு மரம் அதை விமர்சித்தால் கடற்கரைத்தெருவாசிகளை விமர்சித்ததாக சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.
அப்படி பார்த்தால் இந்த ஆர்டிக்கிள் எழுதிய சாகுல் கூட "எத்தனை கெட்டவர்களை கண்டிருக்கும் எத்தனை அட்டு பஞ்சாயத்துக்களை கண்டிருக்கும்'எத்தனை அனாச்சார கந்தூரிகளை கண்ட இடம்" என எழுதியிருப்பதும் தவறு என சொல்லக்கூடும்.
சாகுல் மட்டுமல்ல அவரின் முன்ணோர்கள் கூட கடற்கரைத்தெருவில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். சகோதரர் அஹ்மது சொன்னது பொதுவான இடங்களை நம் ஊர் ஸ்டைலில் "ஊர் பலாய் பேசும் இடம்' என்று சொல்லி இருக்களாம்.
நமது அடையாளங்கள் இதுபோன்ற மரத்திலும் , குளத்திலும் இல்லை. இதுவெல்லாம் வாழ்க்கையின் சில அம்சங்கள் அதைத்தவிர வேறு முக்கியத்துவஙகள் எல்லாம் நாமாக ஏற்படுத்தியவை.
உண்மையில் இந்த புளியமரத்துக்கு காது கேட்டால் ரொம்ப வருத்தப்படும்.
மனம் வருந்திய சகோதரர்கள் மன்னிக்கவும்! குறிப்பிட்ட ஆக்கத்தில் இருந்த நெகட்டிவ் உணர்வும், அதே வேளை நான் படித்துக்கொண்டிருந்த நூலின் சர்ச்சைக்குரிய அந்த வாசகமும் 'கோயின்சைடு' ஆகி, அப்படி ஒரு ஆட்சேபனையான வாசகத்தை எழுத வைத்துவிட்டது. மரத்தைத்தான் சொன்னேனே தவிர, மனிதர்களை அல்ல. ஃபஸாது மேடைகள் எங்கிருந்தாலும் - அது நடுத்தெருவின் செக்கடி மேடாக இருந்தாலும் சரியே - கண்டிக்கத் தக்கவைதான். ரம்மியமான கடல் காற்றையும், குளிர்ந்த குளக் காற்றையும் 'மிஸ்யூஸ்' பண்ணிப் பாழடித்துக்கொண்டிருக்கும் பாவிகள்தான் என் மனக்கண் முன் நின்றார்கள். நீங்களல்ல.
அதிரை அஹ்மது சொன்னது…
//ரம்மியமான கடல் காற்றையும், குளிர்ந்த குளக் காற்றையும் 'மிஸ்யூஸ்' பண்ணிப் பாழடித்துக்கொண்டிருக்கும் பாவிகள்தான் என் மனக்கண் முன் நின்றார்கள். நீங்களல்ல.//
அஸ்ஸலாமு அழைக்கும்
அஹ்மத் காக்காவின் பதிலால் அனைவரது (Adirai)மணமும் குளிர்ந்த்துவிட்டது
அஹ்மது காக்கா,
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே.
நீங்கள் அடித்தாலும்கூட அதில் ஒரு காரணம் இருக்கும் என எண்ணும் உங்கள் நல்லெண்ணங்களின் விசுவாசிகள்தான் நாங்களும். எமது சகோதரர்களின் கோபம் சற்றே உணர்ச்சிகரமானது. அதை நாங்களே சமாதானப் படுத்திவிட்டோம். நீங்கள் தங்களது உடல் நலம் பேனிக்கொள்ளுங்கள். கல்வி மாநாடு உங்கள் உழைப்பிற்காக காத்திருக்கிறது
இளையோர் மூத்தோர் என யாராக இருந்தாலும் நல்ல பண்போடு கலந்துரையாடும் இந்த வலைப்பூவில் எனக்கும் வாய்ப்புகள் தந்து வரும் அ.நி. நிர்வாகிகளுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
கவிக் காக்கா, அசத்தல்(ஜாஹிர்) காக்கா மற்றும் புளிய மரத்தடி (புகழ்) சாஹுல் காக்கா (புதுசா சொல்லிட்டேன்னு பின்னால் ஓட்டக் கூடாது) COOLஊற்றி PINன் ஊட்டம் எல்லாமே குளுவுது காக்கா'ஸ்...
ஜாஹிர் ஹுசைன் காக்கா ! எந்தத் தெருவிலும் நடுவில் நின்றால் அது நடுத் தெருவாகத்தான் தெரியுது போல ! சரி சரி.. வாங்க அதிரை அஹ்மத்(மாமா) அவர்களின் பின்னூட்டம் அதிரைமனங்களை குளிர வைத்தது மெய்.
எப்போதான் இரயில் ஓடும் கேட்டுச் சொல்லுங்களேன் யாராவது !
Post a Comment