உலகத்தின் பெண்சுதந்திரம்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்?
கண்ணும் , மனதும் கூசும்
பள்ளியிலே ஆரம்பிக்கிறது
பெண் குழந்தைகளின்
சுதந்திரம், அருவருப்பான
பாடலுக்கு ஒரு ஆட்டம்
கேட்டால் பள்ளி இறுதி
கொண்டாட்டம்!
மாநிலத்தில் அழகி போட்டி!
உலகளவில் ஒரு அழகி போட்டி!
பெண்ணின் அங்கங்களை அளந்து
ஒரு பூனை நடை!
ஒரு எலி நடை!
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ - தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!
உலக சந்தையின் பணம் (பிணம்) திண்ணும்
கழுகுகளுக்கு கிடைத்ததோ
ஒரு அழகி(அருவருப்பு)போட்டி!
அரைகுறை உடையுடன் நடக்க வைத்து
பண முதலைகளின் பொருள்களை விற்க
பெண்களை சந்தைப்படுத்தி
உலக அழகி (சுதந்திர) அடிமை பட்டம்!
கார் விளம்பரமா?
ஆண்கள் பயன்படுத்தும்
பொருள்களின் விளம்பரமா?
இழுத்து வா பெண்ணை
அரைகுறை ஆடையுடன்
நிற்க வை! ஆணுடன்!
கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் - பிரண்ட்
கேர்ள் - பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்!
சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!
வக்கிரம் படைத்தவர்களுக்கு
பெண் என்றால் எல்லாவற்றையும்
துறந்து அலைய வேண்டும்!
வேஷ்டியோடு அலையும்
ஊரில் பேண்ட் போட்டுக்கொண்டு
நடந்தால் ஆச்சர்யம்!
தலைவிரி கோலத்துடன்
செய்தி வாசிக்கும் பெண்!
ஐந்துவயது பெண் குழந்தையின்
ஆடையுடன் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகள் நடத்தும் பெண்!
இறுக்கமான ஆடை அணிந்து
ஹாய், பாய் - காலேஜ் பெண்!
பெண்ணையே திருமணம்
செய்து கொள்ளும் பெண்!
யாரோடும் வாழ்வேன் - யாரும்
என் சுதந்திரத்தில் தலையிடாதே
நவீன நரகல் பெண்கள்!
இப்படிப்பட்ட கண்ணியமற்ற
சுதந்திரம்(?) பெண்களுக்கு வேண்டுமாம்!
உலகத்தில் உள்ள வக்கிரம்
படைத்தவர்கள் கதறுகிறார்கள்!!!
நாங்கள் கொடுத்த சுதந்திரம்
ஏன் இஸ்லாத்தில் இல்லை?
எரிச்சலில் - அவதூறு
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம் இல்லையாம்!
இஸ்லாம் வழங்கிய
சுதந்திரத்தை பார்த்து
எங்கள் பெண்கள் போல்
நீங்களும் வந்தால்தான்
நாங்கள் பார்க்கமுடியும்!
இப்படி புர்க்காவோடு வந்தால்
எப்படி? - பற்றி எறிகிறது
அவர்களின் வயிறு!
அந்த கலக்கத்தில்
கீழ்ப்பாக்கத்தில்
இருப்பதற்கு தகுதி படைத்த
உலக அறிவிலிகள் கதறுகிறார்கள்!
இஸ்லாத்தில் பெண் சுதந்திரம்
இல்லை என்று!
1432 வருடத்திற்கு முன்பே
இஸ்லாம் வழங்கிய சுதந்திரம்!
வாழ்வதற்கே சுதந்திரம்
பிற மதங்களில் இல்லை!
ஆனால் இஸ்லாத்தில்
வாழ, பேச, படிக்க
வியாபாரம் செய்ய
சொத்துக்களை தன்
பெயரில் வைத்துக்கொள்ள
சுதந்திரம்!
பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!
திருமணத்தில் மஹர் என்ற உரிமை!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இஸ்லாம் பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
உலகில் பெண்ணுக்கு
மனிதன் வழங்கிய சுதந்திரம்
கண்ணியமற்ற அலங்கோலம்!
உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!
நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 33:59)
தமது பார்வைகளத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் : 24:31)
... தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் : 24:31)
- அலாவுதீன். S.
19 Responses So Far:
//பிடித்த மணமகனை
தேர்வு செய்ய சுதந்திரம்!
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!//
இதைவிட என்ன சுதந்திரம் வேண்டும் ?....எல்லாம் இதிலே அடங்கிவிட்டது
அஸ்ஸலாமு அழைக்கும்
சகோதரர் அலாவுதீன் மீண்டும் ஒரு அசத்தலான ஆக்கம்.
அன்பு சகோதரர் அலாவுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
இஸ்லாத்தில் பெண்கள் என்ற கட்டுரைக்கு கருத்து எழுத எண்னிய தாங்கள் கட்டுரையாகவே எழுதிவிட்டீர்கள். அருமையான ஆக்கம், இறைமார்க்கத்தில் மட்டும்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம், முழு உரிமைகள்.
பெண்ணுரிமைப்(/) பற்றி பொய்ப்பிரச்சாரம் செய்துவரும் பொறப்போக்குகள், உண்மை அறிந்துக்கொள்ள உண்மை முஸ்லீம் பெண்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளட்டும் அவர்களுக்கு இஸ்லாம் கொடுத்திருக்கும் உரிமையை, நம் பெண் மக்களின் பதில்கள் போலி பெண்ணுரிமைவாதிகளின் முகத்தில் காரி துப்புவது போல் இருக்கும்.
நல்ல சிந்தனையை அடிக்கடி தூண்டிவரும் அலாவுதீன் காக்கா அவர்களுக்கு மிக்க நன்றி..
நல்ல முழக்கம். வீரு கொண்டு வந்திருக்கும் வாசகங்கள் வாசிக்கையில் நம் மார்க்கத்தின் மேன்மை கண்டு வியக்கவும் பெருமிதம் கொள்ளவும் தூண்டுகிறது.
அலாவுதீன்,
கடன் தொடர் முடிவுகளைக் காணோமே?
சகோதரர் ஷாஹுல் அவர்களின் பின்னூட்டத்தில் சிறிய எழுத்துப்பிழையும், அப்பிழையை சரி செய்வதற்காக அதன் பின் சகோதரர் மீராசா அவர்களின் பதில் பின்னூட்டமும் எற்றுக்கொள்ளக்கூடியதே. ஆங்கில வாக்கியங்களை தமிழில் எழுதுவதால் இவ்வாறான தவறுகள் வருவது இயல்பே.
இக்கட்டுரையின் தரம் கருதி அவ்விரு பின்னூட்டங்களும் நீக்கப்படுகிறது. சகோதரர்கள் இருவரும் புரிந்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
தொடர்ந்து இணைந்திருங்கள்.
இரவில்தானே இந்தியவுக்குச் சுதந்திரம் கிடைத்தது... அதான் தூங்கிட்டேன் இந்த பெண் சுந்தந்திரம் நேற்று இரவு பதிவுக்கு வரும்போது ! :)
அலாவுதீன் காக்காவின் அற்புத விளக்கங்களில் இதுவும் ஒரு மைல் கல் ! அருமை !
//உலகை படைத்த அல்லாஹ்
வழங்கிய பெண் சுதந்திரம்
கண்ணியமிக்க அந்தஸ்து!//
இதை புரிந்து கொண்டாலே எங்கே எழும் பெண்ணடிமை ?
ஆங்கிலம் கலந்த தமிழ் ஊடுருவல் எப்படி சில சிக்கல்களைத் தரும்னு நிறைய கண்டிருக்கேன் அனுபவித்தும் இருக்கேன் அதனை அப்படியே ஆங்கிலத்தில் சொன்னால்தான் சொல்ல வந்த விஷயம் நேரடியாகப் பொருள் கொள்ளப்படும்.. (யாரும் என் தலையில் குட்ட வேண்டாம், இது எனக்கும் கிரவுன்(னு)க்கும் தெரிந்த விடயமே) இவைகளை எல்லாம் கிரவுன் அறிவான் !
சும்மா சொல்லக்கூடாது, தம்பி அலாவுதீனுடை எழுத்துக்களை கல்வெட்டுகளில் பதிந்து பாதுகாக்கப் படவேண்டியவை. பிரமாதம்..அலாவுதீனுய ஊற்றில் அள்ள அள்ள் ஊறிகொன்டே இருக்கும்போல் தெரிகிறது.
பெண்ணடிமை என்று எதைத்தான் சொல்கிறார்கள்...
அவர்கள் சொல்வதெல்லாம் பெண்களுக்கே உரிய கௌரவத்தை கொடுக்கும் இந்த
முழுஆடையைதான்.இவர்கள் பெண்சுதந்திரம் என்பது அந்த அரைகுறை(டூ பீஸ்) ஆடையைதான்.
இஸ்லாத்தில் கூறப்பட்டு இருக்கும் கடைபிடிக்கபட்டு வரும் பெண் உரிமைகளை அறிந்தால் மேற்கத்திய மேதாவிகள்..இஸ்லாத்தை பற்றி பிதற்ற மாட்டார்கள்..சபாஷ் அலாவுதீன் காக்கா...உண்மையை உரக்க கூறி இருக்கீறிர்கள்...
கடன் தொடர் தொடர வேண்டும்....
கருத்திட்ட சகோதரர்கள் : harmys , சாகுல் ஹமீது, தாஜுதீன், சபீர், அபுஇபுறாஹிம், Jaleelsa, யாசிர் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களின் கருத்திற்கு நன்றி!
sabeer சொன்னது… கடன் தொடர் முடிவுகளைக் காணோமே? Yasir சொன்னது… கடன் தொடர் தொடர வேண்டும்....
*******************************************************************************************
சகோ. சபீர், யாசிர் : நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரும் அதையும் பதிந்து கடன் தொடர் 23.12.2010 ல் வெளியிடலாம் என்று இருந்தேன். யாரிடம் இருந்தும் பதில் வரவில்லை. (தாங்கள் இருவர் மட்டுமே பதில் தந்து இருக்கிறீர்கள்).மேலும் வேலைகளின் காரணமாக சென்றவாரம் தொடரை அனுப்ப முடியவில்லை. இன்ஷாஅல்லாஹ் இந்த வாரம் தொடர் பதிய முயற்சி செய்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ. அலாவுதீன் அருமையாகவும், பொறுமையாகவும் நம் மார்க்கத்தின் தத்துவங்களை தன் கவிதை மூலமும், (கடன் வாங்கலாம்)கட்டுரை மூலமும் தெள்ளத்தெளிவாக அதிரை நிருபர் என்னும் மக்கள் களத்தின் மூலம் எழுதி வருகிறீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் அதை படிக்கும் அனைவருக்கும் பரக்கத் செய்வானாக..ஆமீன்..ரஹ்மத் செய்வானாக..ஆமீன்..
வேலைப்பளு காரணமாக இங்கு அன்றாடம் வெளிவரும் நம்மக்களின் அருமையான கட்டுரைகளுக்கு உடனுக்குடன் கருத்தை பதிய இயலவில்லை. தயவு செய்து யாரும் கோவிச்சிக்கிடாதியெ.....வரட்டா....இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அலாவுதீன் காக்கா, 31-12-2010 வரை தேதி தந்திருக்கிறீர்கள் அதோடு வேலை நேரத்தை கடன் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்களா அதான் வெயிட்டிங்... கண்டிப்பாக எனது பதில் தனி மின் அஞ்சலில் வரும் இன்ஷா அல்லாஹ்...
அஸ்ஸலாம் அலைக்கும் மிக நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை............இறுதியில் வரும் மூன்று அதீஸ்கள் பயன் தரும்படி இருக்கிறது ஜசகல்லாஹ் .
இந்த காணொளியை காணுங்கள் நேரம் இருந்தால்
http://www.youtube.com/watch?v=PeLGFTRAacI&feature=related
உலகத்தின் பெண்சுதந்திரம்
உலகமும், இந்தியாவும்
கண்ட பெண் சுதந்திரம்
என்ன சுதந்திரமாம்?
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காந்தி ஜெய பிரகாஸ் நாரயாணன் மனைவியுடன் ஆடை இல்லாமல் மன கட்டுபாட்டிற்கு????? ஒருங்கிருந்து படுத்துறங்கியதுதான் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என பெயரலவிற்கு சொல்லிக்கொண்ட சுதந்திரம்.
காவிகள் கூம்பி கும்பிட்டு வணங்கிடும் தேவிகளின் தரிசனம், கரிசனம் ஆடையற்ற சுதந்திரம்.
---------------------------------------------------------------------
பெண்களின் உடலை மதிப்பிட்டு
மதிப்பெண் அளித்து தேர்ந்தெடுக்க
வக்கிரம் கொண்ட ஆண்கள்
புடை சூழ - தாராளமாக
வந்த பெண்ணிற்கு
உலக அழகி (அருவருப்பு)பட்டம்!
-----------------------------------------------------------------
நாளை அழுகப்போகும் உடலுக்கு அழகிப் பட்டம்,மதிகெட்ட பெண்களுக்கு மதிப்பெண்கள்.
கல்லூரியா? ஆணுடன்
பெண்ணையும்
கலந்து படிக்க வை!
பாய் - பிரண்ட்
கேர்ள் - பிரண்ட்
இரண்டும் இல்லையென்றால்
நீ ஒரு பைத்தியம்
இந்த உலகில்.
------------------------------------------------------------------
கல்வி கேட்டால் பள்ளியறையில் கலவி சொல்லும் இக்கால சீர்கெட்ட சுதந்திரம்.இதற்கு வேதம் பேசும் மேதாவிகளின் பாட தந்திரம்.ஆண்டாள் பாசுரம் பாடும் ஆகம க(ல)ல்வி எது சுதந்திரம் சீச்சீ......தூ..............
--------------------------------------------------------------------
சிவப்பு விளக்கு
என்ற ஒரு தெரு!
அரசே அங்கீகாரம்
கொடுத்து நடத்தும்
அசிங்கங்கள்!
அசிங்கத்திற்கே
மரியாதை கொடுக்கும்
உலகத்தின் அரசாங்கங்கள்!
-------------------------------------------------------------------
சிவப்பு விளக்குக்கு சிவப்பு கம்பளம் பச்சை அசிங்கம் அதின் அங்கம் அரசாங்கம். அங்கம் காட்டும் அடிபெண்ணுக்கு அரசுவே தரும் சம்பளம் .விபச்சாரதிற்கு அரசு செய்யும் பிரச்சாரம் இதில் ஏதுடா கலாச்சாரம்.அபச்சாரம் ,முறிந்தது பண்பாட்டின் அச்சாரம்.சோரம் போவதற்கு பெயரா சுதந்திரம்???? மூத்திரத்திற்கு பெயர் பன்னீரா??????
எது சுதந்திரம்? உரிமையின் விலை சுதந்திரம்.அடிமை தளை உடைத்தல் சுதந்திரம்.தனக்கு உகந்தது நல்லது தேர்தெடுப்பது சுதந்திரம், அந்த திரம் தந்திரமல்ல.இஸ்லாம் தந்த மந்திரம் அந்த திரம்,சமுதாயதாய வாழ்கை எந்திரம்.அந்த திரம் சமூக அமைப்பின் உரம். அது ஆணுக்கும் ,பெண்ணுக்கும் அவர் அவர் கொண்ட உரிமைக்கு வழங்கப்பட்ட பாட்டா..இது போல சுந்திரத்தை மிக அருமையாக ,ஆக்ரோஷமாக, அனுபவபூர்வமாக,அறிவு பூர்வமாக சகோ.அலாவுதீன் விளக்கிய விதம் அருமை.வாழ்துக்கள்(தாமதத்துக்கு மன்னிக்கவும்).
கிரவ்ன்(னு): உன்னோட கருத்து ஒரு கருத்துக் குவியலே போடனும்டாப்பா ! கவிதைக்கு காவியம் எழுதும் உன் அழகே தனிதான் !
Post a Comment